கேள்வி : அமெரிக்க வங்கிகளில் வாராக்கடன் தொகைக்கு என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்?
என் பதில் :
அமெரிக்க வங்கிகள் எடுக்கும் நடவடிக்கைகள்:
சமரச தீர்வு (Compromise settlement or One-time settlement): கடன் தொகையில் குறிப்பிட்ட கழிவைக் கொடுத்து மீதியைக் கட்டச் சொல்லி கடனாளியுடன் வங்கி சமரச தீர்வு செய்து கொள்ளலாம்.
கடனாளியின் பிணையச் சொத்து விற்பனை (Sale of collateral): பிணையச் சொத்தை விற்று முடிந்த அளவுக்கு கடனை வசூலிப்பார்கள். பெரும்பாலும் நீதிமன்ற வழக்கு (Litigation) மூலமாக செய்யலாம்.
கடன் மறுசீரமைப்பு (Loan restructuring): கடனாளியின் கடன் தொகையைக் குறைத்து அதைக் கட்ட வேண்டிய காலக்கெடுவை நீட்டுவார்கள். அந்தந்த கடனாளியின் வணிகச் செயல்பாடு மற்றும் அதன் மூலம் வரும் பணப் பாய்வைப் (Cashflows) பொறுத்து கடன் மறுசீரமைப்பு அமையும்.
கடனை விற்று விடுதல் (Sale of NPAs): வசூல் செய்யும் நிறுவனங்களுக்கு கடனை வந்த விலைக்கு விற்று விடலாம்.
(கடனாளி பெரிய நிறுவனமாக இருந்தால்) கடனாளி மீது திவால் அறிவிப்பு (Bankruptcy notice) கொடுத்தல்: அந்நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்கச் சொல்லி அதன் சொத்துக்களையும் பொறுப்புகளையும் நீதிமன்றம் நியமிக்கும் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கக் கேட்கலாம். சொத்துக்களை விற்று வரும் பணத்திலிருந்து நிர்வாகிகள் கொடுக்கும் தொகையை வங்கி ஏற்றுக் கொள்ளலாம்.
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக