சனி, 24 ஏப்ரல், 2021


கேள்வி : ஒரு புத்தகம் என்ன செய்யும்? ஒரு குழுவில் என்று கேட்டு இருந்தேன் ..

பதில் : ஐஸ்வர்யா என்ற வாசகி அருமையான தகவலை பதிவு செய்துள்ளார் ..நன்றி ...


ஒன்றும் செய்யாது….


//அனைத்து கருத்துக்களையும் தன்னுள் அடக்கி அமைதியாகவே இருக்கும்//


அப்படி பட்ட அமைதியை உங்கள் கையால் எடுத்து களைத்தீர்கள் எனில் அது (புத்தகம்) என்ன செய்யும் என்று சொல்கிறேன்…


உலகத்தை பற்றிய விசாலமான பார்வையை உங்களுள் கொண்டுவரும்..

உங்களைப் பற்றி உங்களை சிந்திக்க வைக்கும்..

நாம் பார்க்கும் அத்தனை ஜீவராசிகளின் மீதும் அன்பு காட்ட வைக்கும்…

மூடநம்பிக்கைகளை சிதைத்து அறிவுபூர்வமான சிந்தனைகளை உருவாக்கும்..

வரலாற்றையும் புராண இதிகாசங்களையும் அசைபோட வைக்கும்..

தேசத்திற்காக உழைக்க வலியுறுத்தும்..

காக்கை ,குருவி ,மழை என இயற்கையை ஆதரிக்க சொல்லும்..

சாதி ,மதத்தின் பின்னால் உள்ள சதி வலையை புரிந்து கொள்ள வைக்கும்..

சமத்துவமற்ற, ஏற்றத்தாழ்வு உள்ள இந்த சமூகத்தின் மீது கோபத்தை தூண்டும்..

உலகினை மாற்றவும் புரட்சி செய்யவும் ஊக்கப்படுத்தும்..

சிலரிடம் கேள்விகளைக் கேட்க வைக்கும் (சந்தேகம்)… பலரிடம் பதில்களைச் சொல்ல வைக்கும் (அறிவுரை)

நல்வழியில் உங்களைப் பயணிக்க வைக்கும்..

அறிவின் அளவை விசாலமாக்கும்.. அறியாமையின் அளவை சுருக்கி விடும்..

உணர்வுகளோடு உறவாட வைக்கும்..அதே உணர்வுகலுக்கு வலியை ஏற்படுத்தும்..

மனிதனாக வாழவும் வைக்கும் ..மிருகமாக மாறவும் வைக்கும்…

அதனுள் உங்களை மூழ்கடித்து கற்பனையில் மிதக்க விடும்..

பல மொழிகளை கற்றுத் தந்து உங்கள் மொழியை மறக்கவும் வைக்கும்.. பல மொழிகளோடு உங்கள் மொழியை ஒப்பிட்டு உயர்வாக பேசவும் வைக்கும்..

உங்கள் அறிவு பசியை அடக்கவும் செய்யும்.. ஆசை பசியை அதிகரிக்கவும் செய்யும்..

சிலநேரம் தாலாட்டு பாடி தூங்க வைக்கும்..

வாழ்க்கை என்ற பாதையில் எதிர்கால பயணத்தைப் பற்றி சிந்திக்க வைக்கும்.. வாழ்ந்து முடிந்த கடந்தகால பாதையை நினைவு படுத்தும்… நிகழ்கால பாதையில் எப்படி நகர்வது என்று புலம்ப வைக்கும்..

பணம் சம்பாதிக்கும் வழியை கற்றுத்தந்து சம்பாதித்த பணத்தில் தன்னையே (புத்தகம்)வாங்க வைக்கும்..

கவிஞனாக மாற்றும்..

கற்பனை திறனை அதிகரிக்கும்..

வெற்றியாளனாக மாற்றும்…

தன்னையே படிக்க வைத்து உங்களை பைத்தியமாகவும் மாற்றும்…

தன்னை பற்றியே சிந்திக்க வைத்து தன்னுடைய காதலன்/காதலியாக உங்களை மாற்றிவிடும்…

உலகத்தில் இருந்து தனித்து இருக்க உன்னிடம் வந்தேன் ஆனால் உலகமே இங்குதான் இருக்கு என புரிந்துகொண்டேன் புத்தகமே!!!

இப்படிக்கு…..

உலகத்தையே தன்னுள் அடக்கி தன்னடக்கமக இருக்கும்..

உன்னுள் மூழ்கி..

என்னை தொலைத்து…

உன்னை நினைத்து…

என்னை மறந்து..

உனக்காக…

உன்னை பற்றி…மற்றவர்களுக்காக..

எழுதும்.. உன் பிரியமுள்ள…

வா(சகி)…..☺️

புத்தகம் மனித குலத்தின் அறிவு சொத்து..

புத்தகத்தை வெறும் தாளில் கோர்க்கப்பட்ட எழுத்துக்கள் என்று மட்டும் பார்க்கக்கூடாது. நம் வாழ்க்கையை புரட்டிப்போடும் நெம்புகோல். ஒவ்வொரு நாளும் வாசிப்பதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும்..

ஒரு கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு ஒரு நூலகம் கட்டுவேன் என்றாராம் -மகாத்மா…

நாம் என்ன செய்வோம்?😅😅😅

இறுதியாக…

ஒரு மனிதன் புத்தகத்தை படித்து தன் வாழ்க்கையில் மேன்மை நிலையை அடைகிறான் எனில் அதற்கான பேர் , புகழ்,சிறப்பு அனைத்தும் அந்த வெற்றியாலனின் உழைப்பை தாண்டி அந்த புத்தகத்தை மட்டும் சேராது…

அந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் சொந்தக்காரரான எழுத்தாளரையே சாரும்…

அந்த எழுத்தாளரின் கர்ப்பனை திறனுக்கே அனைத்து புகழும் சொந்தமாகும்…

ஒவ்வொரு நாளும் ,ஒவ்வொரு வினாடியும் நம்மை புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் திறமை எழுத்தாளர்களுக்கு மட்டுமே உண்டு…

அவர்களுடைய சிந்தனை மற்றும் கற்பனைத் திறனின் குழந்தையே "புத்தகம்"..

நன்றி…ஐஸ்வர்யா வாசகி க்கு ...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக