கேள்வி : சென்னை,கோவை ,திருச்சி ,மதுரை ,சேலம் ,ரியல் எஸ்டேட் வணிகம் எப்படி இருக்கிறது? வரும் ஆண்டுகளில் வளர்ச்சி எப்படி இருக்கும்?
என் பதில் :
சுமாரான சராசரி கதியில் இருக்கிறது.
வெளி மாநில முக்கிய இந்திய நகரங்களுடன் ஒப்பிட்டால் சென்னை ,கோவை ,திருச்சி ,மதுரை ,சேலம் ,சற்று அதிக ஊழல் மலிந்த நாட்டுப் புறம். ( ஊழல் இல்லாத இடம் கிடையாது. பல மாநிலங்களில் ஊழலிலும் ஒரு தர்மம- நியதி இருக்கிறது. இங்கு அது அறவே கிடையாது.) கொடுக்கும் விலைக்கு ஏற்ற மதிப்பு கிடையாது. சுறுசுறுப்பும் குறைவு.
அடிப்படை உற்பத்தி/ மூல கட்டமைப்புத் தொழில் சரியானத் திட்டமிடல் இன்றி ஒரு குருட்டாம் போக்கில் நடை பெறுகிறது. நில மேலாண்மை அரசின் கைக்குள் இல்லை. இந்நிலை விலைகளை செயற்கையான உச்சத்தில் வைத்துள்ளன.
பல மாநிலங்களில் மத்யதர வர்க்கத்தினர் சொந்த வீடுகள்/ ஃளாட்கள் தங்கள் வசதிக்கேற்ப வாங்க முடியும். இங்கு மாநில அரசுகள், காலம் காலமாய் ஓட்டு வங்கி அரசியலில் அடி மட்ட மக்களிடம் மட்டும் இயங்கி மற்ற தளங்களில் அக்கறை காட்டியதில்லை. 1950–60 களில் கட்டமைக்கப் பட்ட நகர நிலங்களே இன்னமும் சுழற்சிப் புழக்கத்தில் சந்தைப் படுத்தப் படுகின்றன.
21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த நகர வளர்ச்சித் திட்டம் பொது மக்கள் பார்வையில் இருக்கிறதா? மும்பை, தில்லி ஒப்பீட்டில் சாமானிய நடுத்தர மக்களுக்குப் பயனுள்ள ( ரூ 4 லட்சம்- ரூ 8 லட்சம் ஆண்டு வருமானமுள்ளவர்) திட்டம் பெரிய அளவில் இங்கு கிடையாது என்பது வருத்தமளிக்கிறது.
மேலும் நிலப் பயன்பாட்டு விகிதம் (FSI) இப்போது தான் 2 என்று வந்துள்ளது. பல நகரங்களில் இதன் புரிதல் பரவ வில்லை. மேலும் வரை முறைகள் ஆக்க பூர்வ முறையில் சீரமைக்கப் பட வேண்டும். சில கட்டுமான நிறுவனங்களுக்கே சாதகமாக விதிகள் இயங்குகின்றன. மத்திய தர வகுப்பினர் தனியாக/ கூட்டுறவுச் சங்கங்களாகவோ மும்பை, தில்லி போல இயல்பாக இங்கு இயங்க முடியாமல் சிவப்பு நாடாவின் ஆளுமை அதிகம்.
தலைமைத் தகுதியுள்ள பொறியியல் / கட்டிடவியல் நிபுணர்கள் கையில் இத்துறை இயங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ரியல் எஸ்டேட் வளர்ச்சி நம்பிக்கை சார்ந்தது. நம்பிக்கை வளர துடிப்புடன் செயல் படும் நிபுணர்கள் நிர்வாகம் தேவை.
நன்றி ..
சிவக்குமார் .V .K
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக