அன்புள்ள திரு சிவகுமார் மாமா அவர்களுக்கு, தங்களுடைய சொந்த விஷயம் சம்பந்தப்பட்ட பதிவுகளை தங்களது சொந்த விஷயங்கள் சம்பந்தப்பட்ட தளத்திலோ அல்லது தனித்தனியாகவோ பதிவிட கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் இத்தளத்தில் சமுதாய சம்பந்தப்பட்ட பதிவுகள் மட்டும் பதிவிடுவது சிறந்தது என கருதுகிறேன்.
நீங்கள் பதிவிடும் அத்தனை பதிவுகளையும் பெரும்பாலும் முழுவதுமாக படிக்கவும் மாட்டார்கள்.பெரும்பாலோர்க்கு படிக்கவும் நேரமும் இருக்காது என கருதுகிறேன்.
தாங்கள் நமது சமுதாய பதிவுகள் இல்லாமல் மற்ற பதிவுகள் பதிவிட்டால் நிறையபேர் என்னிடம் யாருங்க அந்த சிவக்குமார்? சம்பந்தமே இல்லாத பதிவுகளப்போட்டுட்டு வெறுப்பேத்தறாரு.நாங்கள்ளெல்லாம் குரூப்ல இருக்கறதா?இல்ல லெஃப்ட் ஆகிடறதான்னு கேட்கிறாங்க.
தாங்களால் நிறையபேர் லெஃப்ட் ஆகிடற வருத்தமான சூழ்நிலைக்கு ஏன் கொண்டு வர்றீங்க?
இதை என்கிட்ட கேட்கறவங்களுக்கு உங்களபத்தி நான் எப்படிங்க பதில் சொல்லமுடியும்?
புரிஞ்சுக்குவீங்கன்னு நெனைக்கிறேன் மாமா.
அன்பு நண்பருக்கு
உங்களைக் கேள்வி கேட்டவருக்கு நீங்கள் சொல்ல வேண்டிய பதில்...
இது நமது சமுதாயம் சார்ந்த குழு என்பது உண்மையே..ஆனால் சமுதாயம் சார்ந் பதிவுகளை இட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் சமுதாயத்திற்க்கு எதிரான கருத்துக்களைத்தான் பதிவு செய்யக்கூடாது என்பது கொள்கை. இதுநாள் வரையிலும் சிவா மாமா அவர்கள் இது மாதிரி சமுதாயத்திற்க்கு எதிரான கருத்துக்களை அவர் பதிவிடுவதில்லை.
.
ஒரே ஒரு சின்ன விஷயம் மற்ற சமுதாயத்திலிருந்து நாம் இன்னமும் முன்னேறாதிருப்பதற்க்கு காரணம் என்னவென்றால் எத்தனையோ நல்ல விஷயங்களை பகிரும் போது பாராட்டாத நாம் எப்போதாவது வேறு ஏதாவது பகிரப்பட்டால் அதைப் பெரிதாக பேசிக்கொண்டிருப்பதுதான்.. எத்தனையோ நல்ல
நம் சமுதாயம் சார்ந்த விஷயங்களை பகிரும் போது பாராட்டாத நாம் குறை சொல்வதற்க்கு நேரத்தை ஒதுக்குவது இன்னும் நம் சமுதாயத்தை அதள பாதாளத்தில் தள்ளுகிறது..
இங்கு அரசியல் பேசுகிறார்கள்
உடல் ஆரோக்கிய குறிப்புகள் வருகிறது
வேலை வாய்ப்பு தகவல்கள் இடம்பெறுகிறது
தம் உழைப்பால் முன்னேறிய நம் சமுதாய நண்பர்களைப் பற்றிய பதிவுகள் வருகிறது..பல்வேறு துறைகளில் முன்னேறிய நம்
நம் சமுதாய மகளிர் ஆண்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன..
இதையெல்லாம் படித்து தெரிந்துகொள்ளுங்கள்...
பிற சமுதாயத்தவர்கள் (கவுண்டர் வண்ணியர் நாயுடு இன்னும் பல) இவர்களெல்லாம் நமக்கு பின் இருந்தவர்கள்தான் ஆனால் அவர்கள் முன்னேறியததன் காரணம் பிற சமுதாயதத்திலிருந்து கற்ற பாடங்கள்தான்..கொங்கு அமைப்பில் ஒரு முக்கிய மனிதர் சொன்னது என்னவென்றால் நான் தீரன்சின்னமலையை நேசித்து போற்றி விழா எடுப்பதற்க்கு ஊக்கமளித்தது கட்டபொம்மனுக்கு நீங்கள் எடுக்கும் பிரமாண்ட விழாதான் என்று சொல்லி இருக்கிறார் அவர்கள் நம்மை பின்பற்றுகிறார்கள்..
ஆனால் நாம் பிற பதிவுகளைப் போடுவதற்க்கு தடை வருகிறது இன்னமும் நாம் அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாகத்தான் இருந்துகொண்டு வருகிரோமே தவிற நமக்கான முன்னேற்றத்தை இதன் மூலம் தேட தவறுகிறோம் ..
ஆனால் சிவக்குமார் மாமா அவர் போடும் பதிவுகளுக்குப் பின்னால் நம் சமுதாய நண்பர்களின் உயர்வு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவும்..
அன்றாடம் நாம் பார்க்கும் பழகும் நண்பர்கள் பெரிய மனிதர்கள் பல்வேறு துறைகளைச்சார்ந்த நண்பர்கள் ஆகியோருடனா பயணம் நம் வாழ்க்கைக்கும் நம் உயர்வுக்கும் உதவும் என்பதற்க்குதான் தான் செய்யும் வேலைகள் போகும் இடங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பதிவுகளாக இடுகிறாரரே தவிற சுய விளம்பரம் கிடையாது...
இந்த குரூப்பில் இருக்கும் சில பேர் சொல்லி இருக்கிறார்கள் தினமும் காலையில் எழுந்து ஒரு செய்தித்தாள் படிப்பதை போல இருக்கிறது குருப்பில் வரும் தகவல்கள் என்று ....எனவே தேவையான விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் தேவைப்படாத விஷயங்களை விட்டு விடுங்கள்.....
நன்றி....📚✍️✍️Jayaraman.🤭😲
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக