கேள்வி : நீங்கள் இதுவரையில் கேட்ட மிகவும் அசாதாரணமானப் பாடல் எது?
என் பதில் :.
அசாதாரணம் என்றால், சாதாரணத்தை விட சற்று உயர்ந்தது அல்லது சிறப்பானது என்று தானே பொருள். அப்படியென்றால், இந்தப் பாடல் எனக்கு அசாதாரணமானது தான்.
இந்தப் பாடலை இதுவரை பார்த்ததில்லை என்றால், ஒருமுறை முழுமையாகப் பாருங்கள்.
வேலுண்டு வினையில்லை
இந்தப் பாடலைப் பாடியவர் பெயர் சுசீலா இராமன். Susheela Raman ...
தஞ்சாவூரைச் சேர்ந்த சுசீலாவின் பெற்றோர், 1960-களிலேயே லண்டனுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.
லண்டனில், மேற்கத்திய மற்றும் கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டு இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்.
அவர் வெளியிட்ட இசை ஆல்பங்களில், Salt Rain, Love Trap, Vel போன்ற ஆல்பங்கள் ரசிகர்கள் வரவேற்பை பெற்றன.
'வேல்' ஆல்பத்தில் தமிழ்க் கடவுள் முருக பெருமானைப் பற்றிய பாடல்களை அவர் பாணியில் பாடியுள்ளார். அதில் ஒன்று தான் மேலே காணொளியில் உள்ள 'வேலுண்டு வினையில்லை' பாடல்.
இந்தப் பாடலை முதன் முறையாகப் பார்க்கும் போது அவர் பாடும் விதம், நடனம் ஆடும் விதம் இவற்றையெல்லாம் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது.
சிரிப்பு வந்தது மட்டுமில்லை. இவங்க ஏன் நல்ல பாடல்களை எல்லாம் இப்படி கொலை செய்யவேண்டும் என்றும் தோன்றியது.
ஆனால் என்னவோ தெரியவில்லை… அந்தப் பாடல் என்னை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்து இழுத்தது. அதே பாடலை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும் போல தோன்றியது.
மனது பாரமாக உணர்ந்த நேரத்தில் எல்லாம் அந்தப் பாடல் எனக்கு ஆறுதலாக இருந்திருக்கிறது.
அந்தப் பாடலுக்காக அமைக்கப்பட்ட இசையும் ஒரு காரணம் என கூறலாம்.
ஆங்கிலப் பாடகர்கள் பாடும் பாப் இசைப் பாடலை தான் ரசிக்க வேண்டுமா..ஏன் நம் தாய் மொழியில் ஒரு பாப் இசைப் பாடலை ரசித்தால் தான் என்ன என்று நினைக்க வைத்த பாடல் இது.
சமூக வலை தளங்களில் பலரும் இப்பாடலுக்காக சுசீலா அவர்களை விமர்சனம் செய்து திட்டினர். எனக்கும் முதலில் பிடிக்கவில்லை தான். பிறகு தான் புரிந்தது. பக்தி பாடலை பரவசப் பாடலாகவும் பாடலாம். அதில் தவறில்லை என்று.
அண்மையில் வெளிவந்த 'ஜிப்ஸி' படத்தில் கூட இரண்டு பாடல்கள் பாடி, நடித்தும் இருக்கிறார்.
யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ இந்த அசாதாரணமான பாடலை எனக்குப் பிடித்திருக்கிறது.
https://youtu.be/iSselNEL5dw
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக