கேள்வி : நவம்பர் 1ஆம் தேதி முதல் சிலிண்டர் டெலிவரிக்கான விதிமுறை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் என்ன?
பதில் :.
வீட்டில் சமையல் சிலிண்டர்களை டெலிவரி செய்வதற்கு நவம்பர் 1 முதல் ஓடிபி எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பெரும்பாலான வீடுகளில் உணவு சமைப்பதற்கு தற்போது எரிவாயு சிலிண்டர்களையே பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா முழுமைக்கும் கடந்த 2015-ம் ஆண்டில் 56 சதவீதமாக இருந்த எண்ணிக்கை தற்போது, 85 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதாக ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.
நாடு முழுமைக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் உள்ளிட்ட அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் சமையல் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்து வருகின்றன.இந்நிலையில், நவம்பர் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிலிண்டரை முன்பதிவு செய்த பின்னர், பதிவு செய்யப்பட்ட செல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபி-யை சிலிண்டர் வழங்கும் போது, டெலிவரிபாயிடம் காண்பிக்க வேண்டும். அப்போது தான் சிலிண்டர் கிடைக்கும். மாறாக, ஓடிபியை காண்பிக்கவில்லை எனில் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்காது.
வீட்டு உபயோகத்துக்கான சமையல் சிலிண்டர்கள் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யப்படுகின்றன. இதற்கான முன்பதிவுக்கு எஸ்.எம்.எஸ்., மிஸ்டு கால், மொபைல் ஆப் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் சிலிண்டர் டெலிவரிக்கான விதிமுறை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் டெலிவரி முறையில் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்துவதற்காக இந்தப் புதிய நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளன.
இந்தப் புதிய நடைமுறை முதற்கட்டமாக 100 ஸ்மார்ட் நகரங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது. அதன் பின்னர் உள்ள நிலவரத்தையும் மக்களிடமிருந்து வரும் கருத்துகளையும் பொறுத்து மற்ற நகரங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்துக்கான முன்னோட்டம் ஏற்கெனவே ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்டுவிட்டது. இந்த நடைமுறை மிகவும் சுலபமானதுதான். அதாவது சிலிண்டருக்கு இனி முன்பதிவு செய்யும் போது அவர்களின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை சிலிண்டர் டெலிவரி பெறும் போது காட்டினால் போதும்.
ஒருவேளை உங்களது மொபைல் எண் எரிவாயு விற்பனை நிறுவனத்துடன் பதிவு செய்யப்படவில்லை என்றாலோ அல்லது மொபைல் எண் மாறிவிட்டாலோ நீங்கள் அதை விநியோக சமயத்தில் புதுப்பிக்க முடியும். இதற்காக, டெலிவரி மேனிடம் ஒரு செயலி இருக்கும். டெலிவரி நேரத்தில் அந்த செயலியின் உதவியுடன் உங்களது மொபைல் எண்ணை நீங்கள் புதுப்பிக்கலாம். அந்த மொபைல் ஆப் மூலம் மொபைல் எண் நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்படும். அதன் பின்னர் அதே எண்ணிலிருந்து ஓடிபியை உருவாக்க முடியும். சிலிண்டர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகளைச் சரிசெய்யும் நோக்கத்தில்தான் இந்தப் புதிய நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.
இந்த புதிய நடைமுறை, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் டெலிவரிக்கு ஓடிபி எண் கட்டாயம் ..இனி இது கட்டாயம்!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக