சனி, 10 அக்டோபர், 2020

கேள்வி : ஒருவருக்கு கொடுக்கும் மிக சிறந்த பதிலடி எது?


கேள்வி : ஒருவருக்கு கொடுக்கும் மிக சிறந்த பதிலடி எது?


என் பதில் :.என் இனிய பள்ளிக்கால நண்பர் பாஸ்கரன் பழனிச்சாமி தற்பொழுது கோவையில் இருக்கும் (Aerospace)..இல் பணிபுரிகிறார் அவருடைய மேலாளருக்கும் அவருக்கும் நடந்த சுவையான அன்பு மோதல் ...குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டது .


2006 இல் நான் கோயம்புத்தூரில் ஒரு பிரபலமான இயந்திர பாகங்கள் மற்றும் ஆகாய விமானம் உருவாக்கும் தொழிற்சாலைக்கு உதவும் சிறு பாகங்கள் மற்றும் கருவிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். (ஒரு பாகத்தையோ அல்லது அசெம்பிளியையோ ஆரம்பம் முதல் உருவாக்கி, சோதனை செய்து, ஒன்றாக அசம்பிள் செய்து முடித்து , பேக் செய்து வாடிக்கையாளருக்கு அனுப்புவதுதான் என் பணி)


அங்கு பல்வேறு விதமான இயந்திரங்கள் காணப்படும் அவற்றில் அதிநவீன சிஎன்சி மெஷின் முதல் சாதாரண லேத் மில்லிங் மெஷின் (CNC machine- Lathe & milling machine) வரை அனைத்து விதமான இயந்திரங்கள் காணப்படும். இந்த இயந்திரங்களை கொண்டுதான் சாதாரணமான இரும்பில் இருந்து அனைத்து விதமான பாகங்கள் உருவாக்கப்படும். Raw material to Finished part/Assembly.


அங்கே பல்வேறு உலோகங்களால் ஆன , துல்லியமான அளவுகள் கொண்ட , குண்டக்க மண்டக்க (complicated எனவும் அர்த்தம் கொள்ளலாம்) வடிவத்தில் உள்ள பாகங்கள் என ஒவ்வொன்றும் பல்வேறு இயந்திரங்களால் உருமாற்றம் பெற்று அதன் கடைசி வடிவத்தை அடையும்.


பெரும்பாலும் அனைத்து உதிரி பாகங்கள் அல்லது அசெம்பிளிகளில் அவற்றின் வரிசை எண் & மற்றும் சில தகவல்களை அதன் மேற்பரப்பில் இயந்திரங்களால் பொறிக்கப்படும்.


எந்த ஒரு தட்டையான பரப்பு கொண்ட பாகங்களில் மிக எளிதாக எழுத்துக்களை பொறிப்பதற்கு என்று தனியாக ஒரு சிறிய இயந்திரம் இருந்தது. அந்த இயந்திரத்தை இயங்க வைத்து அந்த பாகத்தின் மேல் எழுத்துக்களைப் பொறித்து முடிக்க ஆகும் செலவு என்பது மிக மிகக் குறைவாக இருக்கும்.


ஆனால் கூம்பு வடிவில் உள்ள பாகத்தில் எழுத்துக்களை பொறிப்பதற்கு ஐந்து அச்சுகளை (5 axis) கொண்டு இயங்கும் சிஎன்சி மெஷின் தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. அப்படி சிஎன்சி மெஷின் இந்த வேலையை செய்வதற்கு ஒருவர் மெனக்கெட்டு கணினி நிரலாக்கம் (CNC programming) செய்து, பின்னர் அந்தப் பாகத்தை மிகக் கச்சிதமாக இயந்திரத்திற்கு உள்ளே பொருத்தி, அதற்கென்று மேலும் நிறைய வேலைகள் செய்து அந்த எழுத்துக்களை பொரிப்பதற்கு ஆகும் மொத்த செலவானது சில மடங்கு அதிகரித்துவிடும்.


ஒரு நாள் இந்த செலவு அதிகமுள்ள சிஎன்சி மெஷின் இல் செய்யும் வேலையை சாதாரண சிறிய மிஷின் கொண்டு செய்து முடிப்பதற்கு நானும் என் நண்பனும் சேர்ந்து புதியதாக முயற்சி செய்து கொண்டிருந்தோம்.


நாங்கள் செய்வதை பார்த்த எங்கள் மேலாளர் "இதில் எல்லாம் செய்யவே முடியாது, வாய்ப்பில்லை ராஜா" என்பது போலவே சிரித்தார் . அவருடன் சேர்ந்து பக்கத்து டிபார்ட்மெண்ட் மேலாளரும் சிரித்தனர்.


சற்று கோபம் வந்தாலுமே நாங்கள் நினைத்த வேலையை முடித்துவிட்டு தான் அன்று வீட்டுக்கு செல்வது என்று முடிவெடுத்து இருந்தோம்.


சிலபல கடினமான முயற்சிகளுக்குப் பிறகு ஒரு வழியாக அந்த வேலையை வெற்றிகரமாக செய்து முடித்தோம்.


மிக்க மகிழ்ச்சி அடைந்தோம், பல்வேறு ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அன்று இரவு அங்கிருந்து சந்தோசமாக கிளம்பினோம். கிளம்பி செல்லும்பொழுது மேலாளர் சிரித்தது எனக்கு நினைவுக்கு வரவே, உடனே என்னுடைய அலைபேசியை எடுத்து அவருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன்.


யார்கிட்ட...

Every NEW IDEA is a joke, until someone achieves it.


வெற்றிகரமாக செய்து முடிக்கும் வரை எந்த ஒரு புதிய முயற்சியும் நகைச்சுவைக்கு உள்ளாக்கப்படும்.


அந்த மேலாளர் ஒரு மும்பை காரர். அடுத்தநாள் வந்து நாங்கள் செய்து முடித்து இருந்ததை பார்த்த என் மேலாளர் மிகவும் மகிழ்ச்சியுடன் என்னை பாராட்டினார். அதோடு நிறுத்தாமல் அந்த மாதத்திற்கான சிறந்த ஊழியர் என பாராட்டி பரிசும் கொடுத்தார். இத நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல...


நாம் ஒரு வேலையை தொடங்கிவிட்டால் அதை முடிக்கும் வரை நம்மை நோக்கி வரும் ஏளனங்கள், தொல்லைகள் போன்றவற்றை எரிபொருளாக எடுத்துக்கொண்டால் வெற்றியை நோக்கி நகர்வதற்கு உதவியாக இருக்கும்.


பதிலடி என்பது செயலில் இருக்க வேண்டும். ஆனால் அந்த பதிலடி என்பது நமக்கு ஏதாவது பயன் தருவது போலவும் மற்றவர்க்கு தீங்கு தராது என்றால் மட்டும் செய்வது நல்லது.


நன்றி.

Sivakumar.V.K👍✈️✈️


(Home Loans,Home Loans To NRIs) 


Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms🥰👍🏡🏡✈️✈️

siva19732001@gmail.com📚✍️✍️

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE

🥰Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.🥰

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக