சனி, 31 அக்டோபர், 2020

கேள்வி : உலகை முற்றிலும் மாற்றிய கண்டுபிடிப்புகள் என்ன?

 கேள்வி : உலகை முற்றிலும் மாற்றிய கண்டுபிடிப்புகள் என்ன?


பதில்:..என் இனிய நண்பர் ..Dr.Andrew Peter Leon-Genetics and Plant Breeding இல் PhD, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (2020 ஆண்டு பட்டம் பெற்றார்)


கடந்த 2019 டிசம்பரில் ஹி ஹியான்குய் என்ற சீன ஆய்வாளர் ஆய்வு அறங்களை மீறியதற்காக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். அவர் செய்த தவறு (மிகப்பெரிய), தான்தோன்றித்தனமாக ஒரு அறிவியல் தொழில்நுட்பத்தை மனிதக் கருவில் சோதித்துப் பார்த்தது! அவரின் ஆய்வின் படி பிறக்கும் குழந்தைகள் எச்.ஐ.வி வைரசுக்கு எதிர்ப்புத்திறன் பெற்றிருக்கும்!


அவர் பயன்படுத்திய தொழில்நுட்பம் தான் நவீன உலகை முற்றிலும் மாற்றக்கூடிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. அதற்கு பெயர் 'Designer Baby technology' என்றழைக்கப்படும் கிறிஸ்பர்-கேஸ் (CRISPR-Cas). உயிரியல் ஆய்வுகளை நீங்கள் தொடர்ந்து பின்பற்றுபவராக இருந்தால் கவனித்திருப்பீர்கள்: 2014-க்கு பிறகு கிறஸ்பர்-கேஸ் தான் மிக அதிகமாகப் பேசப்பட்ட, படுகின்ற தொழில்நுட்பமாக இருக்கும்.


அப்படி என்ன தொழில்நுட்பம் அது?


பாக்டீரியாக்கள் எப்போதும் தங்களிடம் அதிசயிக்கத்தக்க உயிரியல் மற்றும் மரபியல் செயல்பாடுகளைப் பொதிந்து வைத்திருக்கின்றன. இந்த செயல்பாடுகளால்தாம் இவற்றால் மனிதர்கள் கற்பனை செய்து பார்க்கவும் முடியாத அதீத சூழ்நிலைகளிலும் தப்பி வாழ முடிகிறது.


இயற்கையில் பாக்டீரியாக்களின் முக்கிய எதிரிகள் பாக்டீரியோபேஜ் எனும் வைரசுகள். சானிடைசர் வாங்க வழியில்லாததால் அவை வேறு பல நுட்பமான செயல்முறைகளால் பாக்டீரியோபேஜ்களைத் தோற்கடிக்கின்றன. அவற்றில் ஒன்று கிறிஸ்பர்-கேஸ்.


ஒரு பாக்டீரியோபேஜ் முதன்முறையாகத் தாக்கும்போது பாக்டீரியாக்கள் அவற்றின் மரபுத் தொடர்களை படி எடுத்து தங்கள் மரபுக்கூறுகளுடன் சேமித்து வைத்துக்கொள்கின்றன. இதுக்குப் பேர்தான் சுருக்கமாக ‘கிறிஸ்பர்’ (CRISPR:clustered regularly interspaced short palindromic repeats). கேஸ் என்பதற்கு ‘கிறிஸ்பர் சார்ந்த’ என்ற பேர் (Cas-CRISPR associated). இது ஒரு கிறிஸ்பர் சார்ந்த, டி.என்.ஏக்களை துண்டுபோடும் புரதத் தொகுப்பு (restriction enzyme - Molecular scissors).


இப்போதான் ஆட்டம் ஆரம்பம். அதாவது, மறுமுறையாக ஒரு பாக்டீரியோபேஜ் தாக்கினால், முந்தையத் தலைமுறையில் சேமித்த மரபுத்தகவல் இருக்கிறதல்லவா? அந்தத் தகவலை வைத்துக் கொண்டு, இந்த கேஸ் என்சைம் பாக்டீரியோபேஜ்களின் டி.என்.ஏ-வை ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்திவிடும். அதாவது பரம்பரை பரம்பரையாகத் தங்கள் எதிரியை அடையாளம் கண்டு அழிக்கும் ஆற்றல் பெறுகின்றன.


இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா. இந்த கிறிஸ்பர்-கேஸ் 1980 களிலேயே கண்டறியப்பட்டாலும் ஆரம்பத்தில் ஆய்வாளர்களும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தக் கேஸ் புரதத்தொகுப்பைக் கூர்ந்து பார்க்கையில் அது வைரசின் டி.என்.ஏ என்றில்லாமல் எந்த டி.என்.ஏ வையும் துண்டுபோடும் ரவுடி என்பது தெளிவானது. மற்றபடி இதை ஒழுங்குபடுத்தத்தான் பாக்டீரியாக்கள் வைரசின் டி.என்.ஏக்களை சேமித்து வைக்கின்றன. அதாவது, சேமித்து வைக்கப்பட்டுள்ள வைரசின் டி.என்.ஏ-விற்கு பதிலாக நாம் விரும்பும் டி.என்.ஏ பகுதியை இணைத்தால் அந்த இடத்தை அடையாளம் கண்டு கேஸ் 'சம்பவம்' செய்துவிடும்.


கேஸ் என்சைம் - எவனா இருந்தாலும் வெட்டுவேன்!


ரொம்ப எளிதாக விளக்கவேண்டுமானால், காவல்துறையிடம் இருக்கும் டி.என்.ஏ வை அழித்துவிட்டு வேறு ஒருவரின் டி.என்.ஏ வை வைத்து மாட்டி விடுவது போன்றது.


இதைத்தான் 2010 வாக்கில் (2012-ல் அறிவியல் இதழ்களில் பதிவாகின) Jennifer Doudna மற்றும் குழுவினரும், Feng Zhang மற்றும் குழுவினரும் தன்னிச்சையாக ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு காப்புரிமை பெற்றனர். (இந்தக் காப்புரிமை பெறுவதற்காக எழுந்த போட்டியே, இந்த தொழில்நுட்பம் எவ்வளது முக்கியமானது என்பதை உணர்த்தும்!).


இதில் என்ன சிறப்பு?


உயிரினங்களின் இயக்கங்கள் மரபுப்பொருட்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த மரபுப்பொருட்களில் ஏதேனும் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது மிகப்பெரிய மாற்றத்தை விளைவிக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இயற்கையில் இப்படி நடக்கும் மாற்றத்தைத்தான் நாம் சடுதி மாற்றம் (mutations) என்கிறோம் - இதுவே உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கும் முதன்மைக் காரணிகளில் ஒன்றாக இருக்கிறது.


ஆனால், இந்த சடுதி மாற்றத்தை அதிதுல்லியமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் (ஜீன்) நடத்தும்போது நோய் எதிர்ப்புத்திறன் போன்ற உயர் பண்புகளைப் பெற வழியிருக்கிறது. கிறிஸ்பர்-கேஸ் இந்தச் செயல்களை முன் எப்போதும் இல்லாத வகையில் எளிதாகவும் செலவற்றதாகவும் மாற்றிவிட்டது. முக்கியமாக, வேளாண்மைத் துறையில் மரபு-மாற்றியப் பயிர்கள் தீவிர எதிர்ப்பைச் சந்தித்து வரும் காலகட்டத்தில் இத்தொழில்நுட்பம் நம்பிக்கை தருவதாகவும் இன்றியமையாததாகவும் மாறிவிட்டது (நம்புங்கள்-கிறிஸ்பர் இல்லாமல் வருங்கால வேளாண் இரகங்கள் இல்லை!). ஏற்கனவே நாளானாலும் கருத்துப் போகாத காளான் வகைகள் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளன.


எச்சரிக்கை மணி!


எப்போதும் போலவே, பல விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. கிறிஸ்பர் போன்றத் தொழில்நுட்பங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியமானது. காப்புரிமை பெறும் காலகட்டத்திலேயே யு.சி. பெர்க்லி பல்கலைக்கழகத்துக்குக் கொடுக்காமல் தனியார் சார்ந்த பிராடு (Broad Institute) ஆராய்ச்சி நிலையத்துக்குக் காப்புரிமை வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.


Feng Zhang, சீன ஆய்வாளரின் தன்னிச்சையான எச்.ஐ.வி ஆய்வு அறிவிக்கையைத் தொடர்ந்து எச்சரிக்கை மணி ஒலித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பல நாடுகளும் சட்டங்கள் வகுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.


கிறிஸ்பர் குறித்து ஒரு கண்காட்சியில் விளக்கிக்கொண்டிருக்கும் போது, ஒரு மாணவர் 'டிசைனர் பேபி' என்று சொல்கிறீர்களே - எனக்கு ஒரு ஆண்குழந்தை 'Blue Eyes'-உடன் வேண்டும், முடியுமா? என்றார். வேடிக்கையாகத் தோன்றினாலும் வில்லங்கம் புரிகிறதா!


அறிவியலின் கண்டுபிடிப்பு ..நன்றி ..

செவ்வாய், 27 அக்டோபர், 2020

உங்களைக் கேள்வி கேட்டவருக்கு நீங்கள் சொல்ல வேண்டிய பதில்...

 அன்புள்ள திரு சிவகுமார் மாமா அவர்களுக்கு, தங்களுடைய சொந்த விஷயம் சம்பந்தப்பட்ட பதிவுகளை தங்களது சொந்த விஷயங்கள் சம்பந்தப்பட்ட தளத்திலோ அல்லது தனித்தனியாகவோ பதிவிட கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் இத்தளத்தில் சமுதாய சம்பந்தப்பட்ட பதிவுகள் மட்டும் பதிவிடுவது சிறந்தது என கருதுகிறேன்.

நீங்கள் பதிவிடும் அத்தனை பதிவுகளையும் பெரும்பாலும் முழுவதுமாக படிக்கவும் மாட்டார்கள்.பெரும்பாலோர்க்கு படிக்கவும் நேரமும் இருக்காது என கருதுகிறேன்.

தாங்கள் நமது சமுதாய பதிவுகள் இல்லாமல் மற்ற பதிவுகள் பதிவிட்டால் நிறையபேர் என்னிடம் யாருங்க அந்த சிவக்குமார்? சம்பந்தமே இல்லாத பதிவுகளப்போட்டுட்டு வெறுப்பேத்தறாரு.நாங்கள்ளெல்லாம் குரூப்ல இருக்கறதா?இல்ல லெஃப்ட் ஆகிடறதான்னு கேட்கிறாங்க.

தாங்களால் நிறையபேர் லெஃப்ட் ஆகிடற வருத்தமான சூழ்நிலைக்கு ஏன் கொண்டு வர்றீங்க? 

இதை என்கிட்ட கேட்கறவங்களுக்கு உங்களபத்தி நான் எப்படிங்க பதில் சொல்லமுடியும்?

   புரிஞ்சுக்குவீங்கன்னு நெனைக்கிறேன் மாமா.


அன்பு நண்பருக்கு

 உங்களைக் கேள்வி கேட்டவருக்கு நீங்கள் சொல்ல வேண்டிய பதில்...

இது நமது சமுதாயம் சார்ந்த குழு என்பது உண்மையே..ஆனால் சமுதாயம் சார்ந் பதிவுகளை இட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் சமுதாயத்திற்க்கு எதிரான கருத்துக்களைத்தான் பதிவு செய்யக்கூடாது என்பது கொள்கை. இதுநாள் வரையிலும் சிவா மாமா அவர்கள் இது மாதிரி சமுதாயத்திற்க்கு எதிரான கருத்துக்களை அவர் பதிவிடுவதில்லை.

.

ஒரே ஒரு சின்ன விஷயம் மற்ற சமுதாயத்திலிருந்து நாம் இன்னமும் முன்னேறாதிருப்பதற்க்கு காரணம் என்னவென்றால்   எத்தனையோ நல்ல விஷயங்களை பகிரும் போது பாராட்டாத நாம் எப்போதாவது வேறு ஏதாவது பகிரப்பட்டால் அதைப் பெரிதாக பேசிக்கொண்டிருப்பதுதான்.. எத்தனையோ நல்ல

நம் சமுதாயம் சார்ந்த விஷயங்களை  பகிரும் போது பாராட்டாத நாம் குறை சொல்வதற்க்கு நேரத்தை ஒதுக்குவது இன்னும் நம் சமுதாயத்தை அதள பாதாளத்தில் தள்ளுகிறது..

இங்கு அரசியல் பேசுகிறார்கள் 

உடல் ஆரோக்கிய குறிப்புகள் வருகிறது 

வேலை வாய்ப்பு தகவல்கள் இடம்பெறுகிறது

தம் உழைப்பால் முன்னேறிய நம் சமுதாய   நண்பர்களைப் பற்றிய பதிவுகள் வருகிறது..பல்வேறு துறைகளில் முன்னேறிய நம்

நம் சமுதாய மகளிர் ஆண்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன..

இதையெல்லாம் படித்து தெரிந்துகொள்ளுங்கள்...

பிற சமுதாயத்தவர்கள் (கவுண்டர் வண்ணியர் நாயுடு இன்னும் பல) இவர்களெல்லாம் நமக்கு பின் இருந்தவர்கள்தான் ஆனால் அவர்கள் முன்னேறியததன் காரணம் பிற சமுதாயதத்திலிருந்து கற்ற பாடங்கள்தான்..கொங்கு அமைப்பில் ஒரு முக்கிய மனிதர் சொன்னது என்னவென்றால் நான் தீரன்சின்னமலையை நேசித்து போற்றி விழா எடுப்பதற்க்கு ஊக்கமளித்தது கட்டபொம்மனுக்கு நீங்கள் எடுக்கும் பிரமாண்ட விழாதான் என்று சொல்லி இருக்கிறார் அவர்கள் நம்மை பின்பற்றுகிறார்கள்..

ஆனால் நாம் பிற பதிவுகளைப் போடுவதற்க்கு தடை வருகிறது இன்னமும் நாம் அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாகத்தான் இருந்துகொண்டு வருகிரோமே தவிற நமக்கான முன்னேற்றத்தை இதன் மூலம் தேட தவறுகிறோம் ..

ஆனால் சிவக்குமார் மாமா அவர் போடும் பதிவுகளுக்குப் பின்னால் நம் சமுதாய நண்பர்களின் உயர்வு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவும்..

அன்றாடம் நாம் பார்க்கும் பழகும் நண்பர்கள் பெரிய மனிதர்கள் பல்வேறு துறைகளைச்சார்ந்த நண்பர்கள் ஆகியோருடனா பயணம் நம் வாழ்க்கைக்கும் நம் உயர்வுக்கும் உதவும் என்பதற்க்குதான் தான் செய்யும் வேலைகள் போகும் இடங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பதிவுகளாக இடுகிறாரரே தவிற சுய விளம்பரம் கிடையாது...

இந்த குரூப்பில் இருக்கும் சில பேர் சொல்லி இருக்கிறார்கள் தினமும் காலையில் எழுந்து ஒரு செய்தித்தாள் படிப்பதை போல இருக்கிறது குருப்பில் வரும் தகவல்கள் என்று ....எனவே தேவையான விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் தேவைப்படாத விஷயங்களை விட்டு விடுங்கள்.....


நன்றி....📚✍️✍️Jayaraman.🤭😲

அன்பு உறவுகளே... சக உறவினர் ஒருவர் சிவகுமார் சார் குறித்து

அன்பு உறவுகளே...

சக உறவினர் ஒருவர்

சிவகுமார் சார் குறித்து

எழுதிய பதிவு என்னை

அதிர்வுக்குள்ளாக்கியது

நாங்கள் வேறு ஒரு

அமைப்பை நடத்தி

வந்தாலும் மனப்பூர்வமான  இதய

சுத்தியோடு சொல்கிறேன் நம் சமுதாய உணர்வோடு

வலம் வரும் தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமையும் அக்கறையும் கொண்ட

மிகச் சில தலைவர்களில் திரு.

சிவகுமார் சார் அவர்களும் உண்டு.

KVE குழுமத்தில் நம்

சமுதாய மக்களின் நலனுக்காக தானே

ஒவ்வொரு விடயத்தையும் தேடித்

தேடி எழுதி வருகிறார்.

நூலகர் வட்டம் அகழாய்வு பாரம்பரிய

கோவில்கள் நம்மவர்களின் திருமண

விழாக்கள் குழுவினரின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நம் இனத்தின் பூர்விக

வரலாறு பூர்விக பாடல்கள் சடங்கு

சம்பிரதாயங்கள் இவையெல்லாம் சமுதாய விஷயங்கள்

தானே? இது போக

தன்னம்பிக்கை தரும்

செய்திகள் அன்றாடம்

வாழ்வில் எதிர்கொள்ளும் கடன்

முதலீடு காப்பீடு மற்றும்

வீட்டுக்கடன் போன்ற

பதிவுகள் நம் சமுதாய

மக்களுக்கு பயன்படாதா?

நண்பரே எது உங்களுக்கு வேண்டாம்

என்று எனக்கு புரியவில்லை.

எல்லாம் சரியாவே

இருக்கின்றது.

சமுதாய செய்திகளோடு

நாட்டு நடப்புகளையும்

விவாதித்து செய்திகள்

அளிப்பது தவறா?

வேண்டாம் தோழரே

கண்ணியம் மிக்க

ஒருவரை காயப்படுத்த

வேண்டாம்.

திரு சிவகுமார் அவர்களின் ஆத்மார்த்தமான பணியில் நம்மையும்

இணைத்துக் கொண்டு

ஒற்றுமையுடன் ‌நம்

சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக

மட்டுமே பாடுபட

உறுதி ஏற்போம்



அன்புடன்

சௌந்தரபாண்டியன்

வெள்ளி, 23 அக்டோபர், 2020

அந்த தீபாவளி நினைவுகள்...😍❤⛱⛱



அந்த தீபாவளி நினைவுகள்...😍❤⛱⛱

தீவாளி வரப்போகுது....சின்னவயசுல தீபாவளி கொண்டாடிய அந்த பசுமையான நாட்களை நினைத்துப் பார்த்தாலே சுகமாக இருக்கிறது...

ஒரு மாசத்துக்கு முந்தியோ பக்கத்து வீட்டுப் அக்காமார்களும் ,தங்கச்சிமார்களும் எல்லாம் சேலை,தாவணி ,பட்டுப்பாவாடைனு , எடுத்து எல்லாருக்கும் பெருமையா காட்ட ஆரம்பிச்சுடுவாங்க...எனக்கு சட்டை, டவுசருன்னு கேட்டு கேட்டு சலிச்சுப்போய்டும், ஒருவழியா ஒருவாரத்துக்கு முன்னாலே பழனி ரோட்டுல இருக்கிற குறிஞ்சி துணிக்கடையில துணியெடுக்க கூட்டிடுப்போவாங்க..எந்த துணிய எடுத்துப்போட்டாலும் இது உனக்கு ரொம்ப நல்லாருக்கும்ன்னு சொல்லி, சொல்லி ஏதாவது ஒன்னை தலையில கட்டுறதுலேயே குறியாருப்பரு காதர் பாய் அண்ணா ..ஒரு வழியா துணியெடுது வர்ற வழியிலேயோ நம்ம குடும்ப டெய்லர் காந்தி சவுக் மாடர்ன் டெய்லர் அண்ணாகிட்ட துணிய தக்க குடுப்போம்..ரெண்டு நாள்ள வாங்கிக்கோங்கன்னு சொல்லி வாங்கி வைச்சுக்கிட்டு அளவெடுப்ப்பாரு...அவ்வள்வுதான் அப்புறம் அத மறந்துடுவாரு...டெய்லி தளி ரோட்ல வரும்போது போம்போதெல்லாம் நாமதான் ஞாவப்படுத்தணும்..எப்ப கேட்டடலும் தம்பி வெட்டியாச்சு, காலர்மட்டுத்தான் பாக்கி, காஜா போடனும் அப்படி இப்படின்னு, நாளைக்கு சொல்லி நாள கடத்துறதுல கில்லாடி...

நாலு நாளைக்கு முன்னாலேயே தளி ரோட்ல இருக்கிற கோமதி ஏஜென்சிஸ் ல பட்டாசு கடை போட்டுருவாங்க..சுத்தி நின்னு வேடிக்க பாக்குற கூட்டந்தான் அதிகமா இருக்கும். கூடபடிக்கிற சிலபோர் கூடவே இருந்து வியாரமும் செய்வாங்க...கம்பிமத்தாப்பு, அனுகுண்டு, ராக்கெட்டு, ரயிலு, லச்சுமிவெடி, யானை,சரம், சாட்டை, 7சாட் பூஞ்சரம்(புஸ்வானம்), பாம்பு, துப்பாக்கி, தரசக்கரம் இப்படி பல வகையான் வெடி இருக்கும். வெடி கம்பெனி போஸ்டரே பாக்கிறதுக்கு சூப்பரா இருக்கும். நம்ம வீட்டுலே எல்லா வருசமும் தீவாளிக்கு முதனாலுதான் வெடி பர்சேஸ் எல்லாம். எல்லா வெரைட்டிலேயும் கொஞ்சம் கொஞ்சம் பர்சேஸ் பண்னிக்கிட்டு வீட்டுக்கு நடந்து போம்பேது ஒரு சந்தோசம் இருக்குமே...ஆஹா.....

முதனாள் நைட்டுமாடர்ன் டெய்லர் கடையில போய் உக்காந்து போராடி சட்டை துணிமணிய வீட்டுக்கு வாங்கிட்டு வந்தாதான் நிம்மதி...அம்மா வீடு வாசல்லாம் அலச ஆரம்பிச்சுவாங்க...நெறைய பேர் முதநாள் நைட்டே வெடிபோட ஆரம்பிச்சுவாங்க..அதுல நம்க்குவேற சரியா தூக்கம் வராது....காலையிலே நாலு மணிக்கெல்லாம் எழுந்து நல்லென்ணை தேச்சு குளிச்சு புதுச்சட்டைக்கும், டவுசருக்கும் மஞ்ச தடவி வெடப்பா போட்டுக்கிட்டு செய்ற முதகாரியம் வெடி பெட்டிய தூக்குறது தான். பொம்பளைப்புள்ளகல்லாம் பட்டுப்பவாடை, தாவணியில தக தகன்னு ஜொலிப்பக...
⛱⛱⛱

நாமெல்லாம் வெடி வெடிக்கிறேன்னு சொல்லி வீரசாகசங்கள் எல்லாம் பண்ணி அணுகுண்டு, சரவெடி, லட்சுமி வெடி, யானை வெடி, குருவி வெடின்னு வெடிக்க விட்டு தெருவெல்லாம் போட்டி போட்டு குப்பையாக்கினாத்தான் நமக்கெல்லாம் நிம்மதி. யானைவெடியெல்லாம் சும்மா அசால்ட்டா பத்தவச்சுட்டு அப்புறமா தெனாவட்டா தூக்கிப்போடுவாங்க நம்ம குரூப்பு..

பெருசுக காது அதிர்ற அளவுக்கு சத்தமான வெடியெல்லாம் வெடிச்சு பயந்து ஒதுங்கி நிக்கவச்ச சாதனைகளும் நடத்திருக்கு..

பக்கத்து வீட்டு அக்கா ஆசைக்கு ஒண்ணு பத்தவக்க நடுங்கிகிட்டே போகும். கை நடுங்கிகிட்டே திரி பக்கத்திலே போகும்போது "டம்" ன்னு வாயலே வெடிபோட்டு திரும்ப வர வச்சிடுவோம்.. இட்லி, பலகாரம்ன்னு சாப்புட்டுட்டு ஒரு மிதப்பா 10 மணி க்கு கல்பனா தியேட்டர் ல கமல் படம் புன்னகை மன்னன் சினிமாவுக்கு 8.30 மணிக்கே கிளம்பிடுவோம் கையிலே துப்பாக்கி, ரோல், கேப்வெடி எல்லாம் எடுத்துக்கிட்டு.

கியுவிலெ காத்துக்கிடந்து, டிக்கெட் எடுத்து தியெட்டருக்குள்ளேயும் துப்பாக்கி சரமாரியா வெடிக்கும்..தியேட்டரெல்லாம் புதுச்சட்ட ஆசாமிகதான். இடைவேளைக்கு கலர் சேடா, பால் ஐய்சு, சமோசாவுக்கு கூட்டம் அலை மோதும்...

நைட்டெல்லாம் கம்பி மத்தாப்பு, புஸ்வானம், சாட்டை, தீப்பெட்டின்னு, தரசக்கரம், ராக்கெட்டுன்னு கொளுத்தி ஒரே அமர்களந்தான். இது மட்டுமா? வெடிக்காத வெடியெல்லாம் எடுத்து, கரி மருந்த ஒண்ணா ஒரு போப்பரிலே கொட்டி பேப்பரேட கொளுத்தினா ஒரே புகை மண்டலமாயிரும் தெருவு...

இப்படி ஒருவழியா சந்தோசமா எந்த கவலையுமில்ல போனது தாங்க நம்ம சின்னவயசு தீபாவளி...

இது எல்லாத்துக்கும் ஆப்பு வச்சது நடுவீட்டுக்குள்ள இருக்குற டிவி பொட்டிதானுங்க....தியேட்டர்ல்லாம் இல்ல..

கொஞ்சமா பேருக்கு வெடி வெடிச்சு புஸ்சுன்னு போச்சு அந்த பழய சந்தோசம்....

உங்க சின்ன வயசு தீபாவளிய கொஞ்சம் அசைபோட்டு சொல்லுங்க மலரும் நினைவுகளை ...

என்றும் அன்புடன் தீபாவளி வாழ்த்துக்களுடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..👍❤❤❤❤⛱⛱⛱✒✒🏡🏡

 என் அருமை தம்பி  ஜெகநாதன் -க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

கம்பள விருட்சத்தின் துடிப்புமிக்க உறுப்பினர் ..தம்பி அறக்கட்டளையின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து செல்லும் பாங்கு வெகு நேர் தியாக இருக்கும் ..பொறுமை ,..சகிப்புத்தன்மை ..அனைவரையும் அரவணைத்து  வழிகாட்டியாகவும் பணியாற்றுவார் ..இயற்கை விவசாயம் , பால்பண்ணை முகவரும் கூட ....

தம்பி  ஜெகநாதன் -க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் 

உடுமலைப்பேட்டை ..

9944966681...

🦜வணக்கம் 🙏..... குமாரவாடி /பொய்கைபட்டி அரண்மனை வரலாறு.....

🦜வணக்கம் 🙏..... 

குமாரவாடி /பொய்கைபட்டி அரண்மனை வரலாறு..... 

மதுரையை மீட்ட  சில்லவார்குல சகோதரர்கள் நால்வர்...  கருங்குளம் (வீரப்பூர்)கம்பையாநாயக்கர் ... மருங்காபுரி பூச்சய்யாநாயக்கர்.. நத்தம் லிங்கமநாயக்கர்  ... மணப்பாறை  லட்சுமிகாமயநாயக்கர் (லெக்கயநாயக்கர் )...ஆவார்கள்.... இதில் லெக்கயநாயக்கர்க்கு சிற்றரசு  பட்டம் சூட்டி  மதுரை மன்னர்  விஸ்வநாதநாயக்கரால்  பாளையகாரர் ஆக்கி நிலம் பிரித்து கொடுத்து ஆள சொன்னது....   ஆலம்பட்டி புதூருக்கு தெற்கு...  விராலிமலை கோயிலுக்கு மேற்கு....   கருப்பூருக்கு வடக்கு...  அய்யலூர்  ஸ்ரீ வண்டி கருப்புசாமி கோயில் கிழக்கு வரை பத்து மக்களை குடி அமர்த்தி..ஆடு மாடுகள் உற்பத்தி பண்ணி.. நிலம் நேர்த்தி செய்து தானியங்கள் விளைவித்து...   வரிவசூல் செய்து நல்லது செய்து ஆண்டு அனுபவித்து வர உத்தரவு கொடுத்தார்....அதன் பிரகாரம் மணப்பாறையில் முதல் கோட்டையும்... பிறகு வையம்பட்டி அருகில் குமாரவாடியில்  அரண்மனைகட்டி ஜீவித்து..  அங்கே நீண்ட நெடிய சுற்றுசுவர் கொண்டு மத்தியில் அழகான ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில் கட்டி ஆண்டு வந்து உள்ளனர்... விராலிமலை முருகன் கோயில் கல் மண்டபம் கட்டி..  முருகனுக்கு  உண்டான பூஜைக்கு  அனைத்தும்  செய்து உள்ளனர். .  


இன்றும் லெக்கயநாயக்கர் பூச்சய்யநாயக்கர் சிலைகள் உள்ளன... மணப்பாறை மாமுண்டி நல்லாண்டவர் கோயில் பறந்த பரப்பளவு கொண்ட கோவில்...தைபூசம்  பழனி முருகன் பாதையாத்திரை பக்தர்கள்....  சமயபுரம் பக்தர்கள்... தங்கி உணவு அருந்தி  இளப்பாரி  வருகிறார்கள்..இந்த  கோவில் பரம்பரை அரங்காவலர் குமாரவாடி /பொய்கைபட்டி அரண்மனையார் குடும்பம் பார்த்து வருகிறது....அரண்மனை தொடர்பு கொண்ட புதுக்கோட்டை அரண்மனை  தொண்டைமான் குடும்பமும் சினேகம் செய்து...அரண்மனையில் வேட்டை ஆட அனுமதி கொடுத்து உள்ளது.....இந்த மந்தை 14 மந்தையில் சிறந்த  காட்டு சீல் நாயக்கர் மந்தையாகும்... கரைபெந்தல் நாயக்கரும் உள்ளார்.... அரண்மனையில் நடைபெரும் நல்லது கெட்டதும் அணைத்துக்கும் முன்நின்று  செய்து வருகிறார்கள்... 


அரண்மனையார் பெயர்... தெய்வதிரு. குமாரலெக்கையநாயக்கர்.. இவருக்கு மகன்கள் மூவர்.. பட்டத்து அரண்மனையார்..1 உயர்திரு. துரைச்சாமி @KRK.குமாரலெக்கயநாயக்கர்.... 2.KRK. ராஜகோபால் லெக்கயநாயக்கர் நாயக்கர்.. 3.முத்துராமலிங்க லெக்கயநாயக்கர் ஆவார்கள்.... இவர்கள் குடும்பம் சம்பந்தம்..  சுக்காம்பட்டி அரண்மனையார் உயர்திரு. பாலமுகொண்ட முத்தையா  பாலகிருஷ்ண ஆண்டிவேல்சாமி நந்தகுமார் @பாலமுருக முத்து ராமசாமி நாயக்கர் அவர்கள் தொடர்பு கொண்டது ஆகும்...  (தொடரும் ).....


நன்றி ...தகவல் களஞ்சியம் ..அய்யலு கிருஷ்ணசாமி 

செவ்வாய், 20 அக்டோபர், 2020

இந்திய நடிகைகளில் மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்டவர் யார்?

கேள்வி : இந்திய நடிகைகளில் மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்டவர் யார்?

என் பதில் :.


எனக்கு பொம்மை போல இருக்கும் பெண்களைவிட இயல்பா, கொஞ்சம் கெத்தா, புத்திசாலியா இருக்கும் பெண்கள்தான் கவர்ச்சியா தெரிவாங்க. உங்க கருத்து என்னோட மேட்ச் ஆகலன்னா பரவாயில்ல, இப்படியும் ரசிக்குறவங்களுக்கு இந்த லிஸ்ட். இவங்க மூன்று பேரும் வித்தியாசமான ‘அழகி’கள், சாதாரண இந்தியப்பெண்களின் பிரதிபிம்பங்கள்,யோசிக்கும் திறன் படைத்தவர்கள்.


இவங்களுக்கு ஒரு பாணி உண்டு, பட நாயகர்களையும் தாண்டி நிற்கும் நடிப்புத்திறனும் உண்டு. ஒருவர் இயக்குவார், இன்னொருவரின் பேட்டிகள், படத்தேர்வுகள் அபாரம், காது, இமை என உடலில் ஒவ்வொரு பாகமும் நடிக்கும், மூன்றாமவர் எவ்வளவு மொக்கையான படம் என்றாலும் தூக்கி நிறுத்துவார், நளினமாக, பொய்யாக எல்லாம் இருக்க மாட்டார், குபீர் சிரிப்பு, கிண்டல் என் எப்போதும் அதிரடி, சரவெடி (live wire) தான், காஜோல் ஒரு ஏஞ்சல்.https://youtu.be/eJF4DSekiKU


நந்திதா தாஸ்...https://youtu.be/YD3320LD78c


திங்கள், 19 அக்டோபர், 2020

நவம்பர் 1ஆம் தேதி முதல் சிலிண்டர் டெலிவரிக்கான விதிமுறை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் என்ன?

 கேள்வி : நவம்பர் 1ஆம் தேதி முதல் சிலிண்டர் டெலிவரிக்கான விதிமுறை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் என்ன?


 பதில் :.


வீட்டில் சமையல் சிலிண்டர்களை டெலிவரி செய்வதற்கு நவம்பர் 1 முதல் ஓடிபி எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் உள்ள பெரும்பாலான வீடுகளில் உணவு சமைப்பதற்கு தற்போது எரிவாயு சிலிண்டர்களையே பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா முழுமைக்கும் கடந்த 2015-ம் ஆண்டில் 56 சதவீதமாக இருந்த எண்ணிக்கை தற்போது, 85 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதாக ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.


நாடு முழுமைக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் உள்ளிட்ட அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் சமையல் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்து வருகின்றன.இந்நிலையில், நவம்பர் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிலிண்டரை முன்பதிவு செய்த பின்னர், பதிவு செய்யப்பட்ட செல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபி-யை சிலிண்டர் வழங்கும் போது, டெலிவரிபாயிடம் காண்பிக்க வேண்டும். அப்போது தான் சிலிண்டர் கிடைக்கும். மாறாக, ஓடிபியை காண்பிக்கவில்லை எனில் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்காது.


வீட்டு உபயோகத்துக்கான சமையல் சிலிண்டர்கள் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யப்படுகின்றன. இதற்கான முன்பதிவுக்கு எஸ்.எம்.எஸ்., மிஸ்டு கால், மொபைல் ஆப் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் சிலிண்டர் டெலிவரிக்கான விதிமுறை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சிலிண்டர் டெலிவரி முறையில் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்துவதற்காக இந்தப் புதிய நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளன.


இந்தப் புதிய நடைமுறை முதற்கட்டமாக 100 ஸ்மார்ட் நகரங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது. அதன் பின்னர் உள்ள நிலவரத்தையும் மக்களிடமிருந்து வரும் கருத்துகளையும் பொறுத்து மற்ற நகரங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்துக்கான முன்னோட்டம் ஏற்கெனவே ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்டுவிட்டது. இந்த நடைமுறை மிகவும் சுலபமானதுதான். அதாவது சிலிண்டருக்கு இனி முன்பதிவு செய்யும் போது அவர்களின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை சிலிண்டர் டெலிவரி பெறும் போது காட்டினால் போதும்.


ஒருவேளை உங்களது மொபைல் எண் எரிவாயு விற்பனை நிறுவனத்துடன் பதிவு செய்யப்படவில்லை என்றாலோ அல்லது மொபைல் எண் மாறிவிட்டாலோ நீங்கள் அதை விநியோக சமயத்தில் புதுப்பிக்க முடியும். இதற்காக, டெலிவரி மேனிடம் ஒரு செயலி இருக்கும். டெலிவரி நேரத்தில் அந்த செயலியின் உதவியுடன் உங்களது மொபைல் எண்ணை நீங்கள் புதுப்பிக்கலாம். அந்த மொபைல் ஆப் மூலம் மொபைல் எண் நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்படும். அதன் பின்னர் அதே எண்ணிலிருந்து ஓடிபியை உருவாக்க முடியும். சிலிண்டர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகளைச் சரிசெய்யும் நோக்கத்தில்தான் இந்தப் புதிய நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.


இந்த புதிய நடைமுறை, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிலிண்டர் டெலிவரிக்கு ஓடிபி எண் கட்டாயம் ..இனி இது கட்டாயம்!..




சனி, 17 அக்டோபர், 2020

 என் இனிய நண்பர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களை முகநூலில் எட்டு  வருடங்களுக்கு மேல் என் நட்பு வட்டத்தில்  இருப்பவர் ..இவரின் பதிவுகள் ,கட்டுரைகள் ..விழிப்புணர்வு கருத்துக்கள் ..அருமையாக பகிர்பவர் ...கடந்த வியாழன் அன்று கொடுமணல் அகழ்வாராய்ச்சிஇடத்தில் சந்தித்து பேசியது மிக்க மகிழ்ச்சி ...என் இனிய நண்பர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

எங்களின் அருமை தென்கொங்கு நாட்டு கம்பளத்து சொந்தம் பொய்கைப்பட்டி அரண்மனை இளவரசி திருமதி .பாக்கிய லட்சுமி குமாரராஜா அவர்களுக்கு கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமத்தின் சார்பாக என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...


கம்பளவிருட்சம் அறக்கட்டளை -க்கு..தன்னாலான தகந்த ஆலோசனைகள் வழங்கி சிறப்பான நிகழ்வுகள் நடத்த உதவிகள் செய்து தருபவர் ...நன்றி மிக்க மகிழ்ச்சி ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்

9944066681..


பொய்க்கப்பட்டி பாக்கிய லட்சுமி

புதன், 14 அக்டோபர், 2020

 கேள்வி : உங்கள் எதிரியின் வெகுளித்தனத்தை எப்பொழுதாவது உணர்ந்தது உண்டா?


என் பதில் :. என் மதிப்புமிக்க அதிக வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் பெரும்பாலும் பணிபுரிவதால் ..இத்தகைய கேள்விகளை பேசும் பகிர்ந்த கொண்ட சில நிகழ்வுகள் ..என் மதிப்பு மிக்க onsite வாடிக்கையாளர் நித்ய கோபாலன் அவர்களின் அவர்குஏற்பட்ட நிகழ்வுகள் .. 


கார்ப்பரேட் அலுவலகத்தில் நாம் வேலை செய்யும் போது நட்பா? எதிரியா? மறைமுக துரோகியா? என்று கண்டுபிடிப்பது கடினம் ஆகி விடும் அதாவது சில நாட்கள், 1 மாதம் கூட ஆகும் புது ப்ரொஜெக்ட் என்றால்.


வெகுளி எனும் வார்த்தைக்கு இரண்டு பொருள்கள் உண்டு. அதிக கோபம் ஒண்ணு மற்றும் அப்பாவித்தனம்


அதிக கோபம் உள்ள மேலதிகாரிகள் பார்த்திருக்கிறேன். அந்த கோபத்தோடு அழுக்காறு, தற்பெருமை இப்படி பல சேர்ந்து வரும். ஒரு பேக்கேஜ் மாதிரி


கோபம் கொள்ளும் போது கொஞ்ச நாளில் அவர்களே விழுவது மாட்டிக்கொள்வது உறுதி.


வெறுப்பினால் ஏதாவது தேவை இல்லாத நடவடிக்கை எடுப்பார்கள்.


நான் மிக கடினமான ப்ரொஜக்ட்டில் வேலை செய்த போ, எனக்கு கிளைன்ட் நன்றாக வேலை செய்தாய் போன்ற மின் அஞ்சல் அனுப்புவாங்க. இதனை பார்த்து ஆத்திரம் உற்ற மேலதிகாரி வேறு யாரோ இன்னோர் கிளைண்ட் கிட்ட தானே கேட்டு..விஷயம் எப்படியோ மிக உயர் அதிகாரிக்கு தெரிய வந்து அசிங்கமா போய் விட்டது அவங்களுக்கு.


மேலும் நான் அழகான ஸ்கிர்ட் (லாங் முழங்கால் தாண்டி தான் இருக்கும் ) அதனை அணிந்து சென்றேன். அதனை பார்த்து அவர்கள் அசூயை பொறாமை பட்டு திரும்பவும் கோபப்பட்டதை மொத்த குழுவும் கவனித்து விட்டார்கள்.


பசங்கள் இது போன்ற விஷயத்தில் ஷார்ப் என்பதால் "இவர்கள் ஏன் சம்மந்தம் இல்லாமல் மின் அஞ்சல் அனுப்புகிறார் ட்ரெஸ் code பற்றி. நீங்கள் சரியாக தானே அணிந்து உள்ளீர்கள் ..?இதனால் இவர்கள் பொறாமை தான் வெட்ட வெளிச்சம் ஆனது" என்றனர் . இது போன்ற கோபம் கொண்டால் அவர்களே தப்பு செய்து மாட்டி கொள்வார்கள்.



அடுத்தது எதிரி இடத்தில் அப்பாவித்தனம்...ஹ்ம்ம்ம் இது யோசிக்க வேண்டிய விஷயம்,


ஆம் ஞாபகம் வந்தது. அது மிக பெரிய ப்ரொஜெக்ட்..ஆனால் என் பாஸ் அவர்கள் திடீர்னு கொஞ்சம் பிடிக்காமல் நடந்து கொள்ள தொடங்கினார் என்னிடம்.


ஏனெனில் எங்க இருவருக்கு அடுத்த லெவல் VP அவருக்கு என்னை பிடிக்கும். நல்லா வேலை செய்வேன்...presales என்பதால். மற்றும் கிரெடிட் கார்டு வேலைகளில் ஒவ்வோர் ஜாப் எடுத்து கொள்ளும் நேரத்தை நான் குறைத்து கொடுத்துவிட்டேன்.


மற்றும் என் குழுவுக்கு அதற்கு முன் இருந்த பாஸ் micromanage செய்ததால் குழு மிகவும் நொடிந்த நிலைமையில் இருந்தார்கள் போலும். நான் வந்த 2 மாதத்தில் குழு சந்தோஷத்தோடு காணப்பட்டதையும் அவர் அறிவர். ஏனனில் நான் இல்லாத நேரத்தில் ஒவ்வொருத்தரிடம் புது பாஸ் எப்படி என்ற feedback வாங்கி வைத்து இருந்தார்.


இப்போது..இந்த எங்கள் நடு நிலைமையில் உள்ளவர்க்கு இதெல்லாம் பிரச்சனை. அவர் மிகவும் கடுமையாக நடந்து கொள்ளவும் நானே...வேற வேலை பார்க்கும் முடிவில் resignation கொடுத்து விட்டேன்.


வேற வழி இல்லை. இவர் என் பாஸ் அவர்களும் சென்னை region ஹெட். ஆனால் இப்படி நடந்து கொள்கிறார்.


இஷ்டத்துக்கு மின் அஞ்சல் போடுகிறார் HR எல்லோருக்கும் "இவள் இப்போது வந்தாள் இப்போது கிளம்பினாள்" போல அதெல்லாம் பார்த்து VP அவர்களுக்கும் கிண்டல்! HR எல்லோருக்கும் தெரியும் யார் மீது பிரச்சனை என்பதும்....என்னை இருக்க சொன்னனாலும், நான் வேற முடிவு செய்து விட்டு பிறகு வேற நாட்டுக்கு போய் விட்டேன்....!


அந்த 3 மாசம் என் immediate boss செய்த அனைத்துமே அவருடைய அதிகாரிக்கு, எனக்கு மற்றும் எங்கள் region HR எல்லோருக்குமே கொஞ்சம் வெகுளியாக தான் இருந்தது....


"என்னடா இந்த மனுஷர் இப்படி நடந்து கொள்கிறாரே?" என்றும்....இடையில் என் தந்தையும் மறைந்து போக..நானும் பணியை முடித்து கொடுத்துவிட்டு கிளம்ப...அந்த மனுஷருக்கு மன சாட்சி உருத்தி இருக்கலாம்..!!.


ஆனால் கார்ப்பரேட் வாழ்க்கையில் எல்லா மாதிரி முதலாளிகள் நமக்கு வருவாங்க. நம்முடைய அப்போதைய அதிர்ஷ்டம் தான் எல்லாமே. 

நன்றி !!

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com


 கேள்வி :  10 வருட காலத்தில் மனை தங்கம் பங்கு எது சிறந்த முதலீடு?

என் பதில் :..

எந்த வித சந்தேகமும் இல்லாமல் மனை தான்.

வணிக ரீதியாக மனை வாங்கி தொழில் செய்வது

நிறைகள்

ஒரு தொழிலதிபர் என்ற அந்தஸ்து கிடைக்கும்

ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைக்கும்

பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

நிறைய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்

சமயோசிதமாக பேசும் ஆற்றல் வரும்...

சமீபத்தில் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை உற்று கவனித்தீர்களா? நேற்று ஏறியது, இன்று இறங்கியுள்ளது. விலை ஏறினாலும் தங்கம் கிடைத்துவிடும்.

ஆனால் பூமியில் நிலப்பரப்பு என்பது குறைவு. இனி கடலை துத்து நிரப்பி நிலத்தை உருவாக்க முடியாது. (சீனா போன்ற நாடுகள் அதையும் செய்ய தயார்!). இன்னும் சில காலங்களில் வாங்குவதற்கு நிலம் கிடைப்பதே அரிது. மனையில் கட்டிய வீட்டுக்கு கொடுப்பினை எத்தனை பெயருக்கு உள்ளது. இப்போது கிடைப்பது எல்லாம் வெறும் சிமெண்ட் டப்பாக்களான அபார்ட்மெண்ட் தான்.

கொரோனா காலத்தில் பங்கு சந்தை படும் பாட்டை கண்டீர்களா! அதுல பணம் போட்டு எடுக்க நிறைய தில் வேண்டும்.

நன்றி ...

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

செவ்வாய், 13 அக்டோபர், 2020

இன்னைக்கு உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்.. அதுக்கான விழிப்புணர்வு வாசகம் தான் #No_bra_day..

 இன்னைக்கு உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்..

அதுக்கான விழிப்புணர்வு வாசகம் தான் #No_bra_day..

உலகம் முழுக்க ஆம்பளைக எப்படி ஹார்ட் அட்டாக் அதிகமா சாகறானோ,

அதே மாதிரி தான் பொம்பளைக கேன்சர் ல சாகறாங்க..

இதுல உசுரப் பறிக்கற கேன்சர விட,

மார்பக புற்றுநோய்,

கர்ப்ப வாய் புற்றுநோய்ல பாதிக்கப்படுற பெண்கள் தான் ஜாஸ்தி..

அதுக்கு காரணமும் நாம தான்..

ஒரு ஆம்பள வெளி இடத்துக்கு போயிட்டு,

வீட்டுல நொழஞ்சதும் சட்டை, பேண்டு, ஜட்டி, பனியன்னு அத்தனையும் தூக்கி வீசிட்டு, பப்பரக்கான்னு சிங்கிள் லுங்கியோட செட்டிலாயிடுவான்..

வீட்டுல இருக்க, அல்லது வேலைக்குப் போற எந்தப் பொண்ணா இருந்தாலும் நாலு லேயர் தடிமனான கச்சையக் கட்டிட்டே தொங்க முடியாது..

நீ ஒரு பனியன், ஒரே சட்டை போடுற..

அவங்க ப்ரா, ஜாக்கெட், பாவாடை,

பொடவ அல்லது நைட்டி, அதுக்கு மேல சால் னு எத்தனய சுமக்கணும் தெரியுமா..?

இதுல சுடிதார்னா, பிரா மேல ஸ்லிப்பு, டாப்பு, ஷாலுன்னு பல சித்திரவதை இருக்கு..

தனக்கு உண்டான அளவு பேண்டீஸும், பிராவையும், நாப்கினையும் கடையில தைரியமாக் கேட்டு வாங்க முடியாத அளவு அவமானமாத் தான் நாம பொண்ணுங்கள வெச்சிருக்கோம்..

யாராவது பெண் போலீஸ், அல்லது பாரா மிலிட்டரியில இருக்கவங்க உங்க வட்டத்துல இருந்தா,

அவங்க போட வேண்டிய ட்ரெஸ் என்னென்னனு கேளுங்க..

ரத்தக் கண்ணீர் வரும்..

20 மணி நேரம் இறுக்கிப் பிடிக்கும் உடையில் டூட்டி பாத்துட்டு, ஒண்ணுக்குப் போகறதுக்குக் கூட முடியாத வேதனை புரியும்..

மார்பகப் புற்றுநோய் உங்க சொந்த பந்தந்ததில் யாருக்கும் இருந்தா விசாரீங்க..

அப்புறம் நக்கலா எப்பவும் பேச மாட்ட..

மார்பையே அறுத்தெடுத்துக் குடுத்த பொண்ணாட வலி எஎன்னன்னு புரியும்..

கர்ப்பப்பை புற்றுநோய் வரக் காரணம் என்ன தெரியுமா?

நீ உன்னோட ஆணவ உறுப்பை ஒழுங்கா சுத்தம் பண்ணாதது தான்.. 

அதுல உருவாகுற மாவுக் கிருமிகள் பொண்ணைத் தான் கொல்லும்..

சில சகோதரிகள் பதிவுல, #No_bra_day க்கு, சில தறுதலைகள் போட்டிருந்த எச்சைக் கமெண்டுகளுக்கு என் அட்டாக்..📚📚✍️✍️


 ஆசிரியர் பவானி ....

பாறையூர் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ...

குழந்தை செல்வங்களுக்கு  கண்டிப்பும் ..கனிவுடனும் ...சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ..இவர் இருக்கும் பள்ளி தொடக்கப்பள்ளி என்பதால் குறைந்தளவே சேர்க்கை இருந்தது ..இவர் பள்ளியில் பணியை தொடங்கியதும் ..மாணவ மணிகளின் சேர்க்கை அதிகரிக்க செய்யதது மகிழ்ச்சிக்குரியது ஆகும் ..


பள்ளிக்கும் சுற்றி இருக்கும் கிராமங்கள் தூரம் அதிகம் என்பதால் ..பள்ளிக்கு நேரத்திலேயே வருகை தந்து ..தன் சுற்றி இருக்கும் கிராமங்களில் இருக்கும் குழந்தைச்செல்வங்களை தன் இரு சக்கர வாகனத்திலேயே பள்ளிக்கு அழைத்து வந்துவிடுவது இவரின் அன்றாட பணியில் இருப்பது சிறப்புஅம்சம் ..


கடந்த ஆண்டு மகளீர் தினத்தன்று உடுமலை கிளை நூலகம் எண் 2- சார்பில் இவருக்கு ..சிறந்த மகளீருக்கான  சிறப்பு விருதும் வழங்கப்பட்டது ..

இன்று ஆசிரியர் பவானி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..



திங்கள், 12 அக்டோபர், 2020

கேள்வி : மார்வாடிகள், குஜராத்திகள் இனத்தவர்கள் பின்பற்றும் நிதி மேலாண்மை பண்புகளில் நீங்கள் அறிந்தவை எவை?

கேள்வி : மார்வாடிகள், குஜராத்திகள் இனத்தவர்கள் பின்பற்றும் நிதி மேலாண்மை பண்புகளில் நீங்கள் அறிந்தவை எவை?


என் பதில் :.என் இனிய நண்பர் மற்றும் என் மதிப்புமிக்க வாடிக்கையாளர் 

கோவை ரங்கா ..என்னிடம் பகிரந்தகொண்டது ,குஜராத்திகளுடன் வியாபாரம் செய்த என் அனுபவத்தில் பதில் கூறுகிறேன் சிவா .....


வட அமெரிக்காவில் பல மாகாணங்களில் படேல் பிரதர்ஸ் என்று இந்திய மளிகை மற்றும் காய்கறிகள் விற்கும் செயின் அங்காடிகள் உள்ளன. பிரமாண்டமாக இருக்கும். நம் மக்கள் வார இறுதியில் அங்கு தான் கும்மி அடிப்பார்கள்.


வேலைக்கு செல்லும் மகளிருக்கு, சப்பாத்தி செய்வது கொஞ்சம் இம்சை பிடித்த வேலை. இதை புரிந்து கொண்ட படேல் பாய்ஸ், சப்பாத்தி தயாரிக்கும் மெஷின் ஒன்றை தருவித்து, தானியங்கி சப்பாத்தி தயாரித்து ஒரு பையில் 25 சப்பாத்திகள் $7 டாலர் என்று கல்லா கட்டுகிறார்கள். சில சமயம் திருப்பதி மாதிரி வரிசை நீளும்.


தமிழ், ஆந்திரா மக்களுக்கு மிக்ஸர், காராசேவு, ரிப்பன் பக்கோடா எல்லாம் உசுரு. பேரல் பேரலாக தயார் செய்து, குறைந்த விலையில் செம போணி.


இந்தியாவின் எந்த மாநில மக்கள் கடைக்கு வந்தாலும், அவர்கள் ஊரை தொடர்புபடுத்த ஒரு ஐட்டம் இருக்கும். பர்ஸை திறக்காம, ஒரு பயலும் வெளியேற முடியாது.


பொதுவான குண நலன்கள்:


பாந்தினி சில்க்ஸ் புடவையோ, பிள்ளையார் சதுர்த்திக்கு சிலையோ, அந்தந்த கால கட்டத்தில் எது நல்லா போகும்? என்று மக்களின் பல்ஸ் தெரிந்து சரக்கை இறக்குவார்கள்.

எந்த சரக்கும், 25 நாளைக்கு மேல் கிடங்கில் தேங்க விட மாட்டார்கள்.

கடை ஒன்று ஆரம்பித்தால், அந்த குடும்பம் மட்டுமல்ல, மாமா, பெரியப்பா, சித்தப்பா, அங்காளி, பங்காளி என்று ஒரு பஞ்சாயத்து வார்டே, தீயா வேலை செய்யும்.

"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, லா ல லா!"

எல்லாருமே அமெரிக்காவில் குடும்ப விசாவில் வந்து க்ரீன் கார்டு வாங்கியிருப்பார்கள். கடுப்பாகி போன டிரம்ப், ஒரு வருடத்துக்கு நிறுத்தி வைங்கடா அந்த விசாவை! என்று ஆணை பிறப்பித்து இருக்கிறார்.

இந்த கடையில நீங்க கேட்ட பொருள் இல்லைனா, அவங்க சொந்தகாரங்க கடையில் இருக்கும். ஆக, அந்த குடும்பத்தை தாண்டி சல்லி பைசா வெளியே போகாது.

இதை படித்ததும் உங்களுக்கு தமிழகத்தில் உள்ள சில குடும்பங்கள் நியாபகத்துக்கு வரலாம்.

"டிவி இலவசம், கேபிளுக்கு மட்டும் காசு கட்டுங்க, உங்க நடு வீட்டில் மானும் ஆடும், மயிலும் ஆடும்.!".

தமக்கு பிடித்த தலைவர் பெயரோ, தன் முன்னாள் டாவு பெயரை எல்லாம் கம்பெனிக்கு வைக்க மாட்டார்கள்.

தங்கள் தாத்தா பெயரோ அல்லது விதை யாரு முதலில் போட்டாரோ அவரின் தாத்தா பெயரோ தான் அக்கடைக்கு பெயராக இருக்கும். மார்வாடிகளை பொறுத்த வரை, பொருளுக்கு தரம் தான் முக்கியமே தவிர, பெயர் ஒரு பொருட்டல்ல.

"ஹால்டிராம்ஸ் சுவீட்ஸ், கன்ஷிராம் ஸ்னேக்ஸ்"

எந்த வியாபாரமென்றாலும் 30 சதவீதம் லாபம் இருந்தால் தான் தொடுவார்கள்.

சில சமயம், லாபத்தை குறைத்து வைப்பார்கள், ஆனால் ஒரு பொருள் வாங்க சென்ற நீங்கள், நாலு பொருட்கள் வாங்கி வருவீர்கள். தொட்ட கல்லு, பெத்த லாபம்.

தேவையற்ற ரெட் டேப் பிசினஸ் கிடையாது. காரிய கமிட்டி டெல்லில, அடுத்த அம்மாவாசைக்கு கூடி எங்க தலைவர் யார்னு முடிவெடுக்கும்! போன்ற வெண்டைக்காய் பிசினஸ் கிடையாது.

"என் சரக்கை சந்தைப்படுத்த முடியுமா?" என்று ஸ்டொர் மேலாளரை கடையில் சந்தித்தேன். நீண்ட ஒரு விவாததுக்கு தயாராக சென்றேன். ஐந்து நிமிடத்தில் வேலை முடிந்து விட்டது. எனக்கு மூணு வாரம் கழித்து பில் செட்டில் செய்தனர்.

பல நேரங்களில், வெளியாட்களிடம் எல்லாம் கொள்முதல் செய்ய மாட்டார்கள். தங்கள் ஊரில் அவரது மச்சானோ, சகலையோ பருப்பு சாகுபடி செய்வார். அதையே ஒரு பிராண்டாக மாற்றி, அங்கிருந்து கப்பலில் இங்கு வந்து விடும்.

ஒரு தொழில் ஆரம்பிக்குமுன் தீர்க்கமான கள ஆய்வு செய்திருப்பர். கடை லொகேஷன் எங்கே? சுத்தி எத்தனை மைலுக்கு கஸ்டமர்கள் உளர்? போட்டியாளர் யார்? அங்க இல்லாதது என்ன? எல்லா தரவும் துல்லியமாக இருக்கும்.

தொழிலில் ஈட்டிய லாபத்தை மீண்டும் தொழிலேயே முதலீடு செய்வார்கள். பணம் என்பது நதி போல ஓடிக் கொண்டிருக்கும், தேவைப்படும் பொழுது குடத்தில் மொண்டுக்கலாம் என்பது அவர்கள் எண்ணம்.

ஏழு தலைமுறைக்கு ஒரு லட்சம் கோடி சொத்து சேர்த்து வைக்க மாட்டார்கள். ஆனால் அண்டார்டிகாவுக்கு போனால் கூட எஸ்கிமோக்களிடன் எப்படி ஐஸ் விற்க வேண்டும்? என்று தம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து விடுவர்.

என்ன தான், குடும்பத்தில் அப்படி இப்படி சண்டை வந்தாலும், வெளியே விட்டுக் கொடுக்க மாட்டார்கள். 

எல்லாத்தையும் அண்ணன் கணக்குல எழுதிக்குங்க

தமிழகத்தில் அண்ணாச்சி கடைகளும் இதே டெக்னீக் தான் பின்பற்றுகிறார்கள். இந்த பதிலில் மார்வாடி/குஜராத்திகள் என்பதற்கு பதில் அண்ணாச்சிகள் என்று மாத்தி போட்டு படித்துக் கொள்ளுங்கள்.

"ஏல, என்ன எருமை மாதிரி நிக்க? கஸ்டமருக்கு என்ன வேணும்னு கேலுல!"

"பச்சை மார்வாடியா இருந்தா இதை ஷேர் செய்யவும்!" என்று மீம்ஸ் எல்லாம் போட்டு நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். அடுத்த கடையை எங்கு ஆரம்பிக்கலாம்? என்று போய்க் கொண்டே இருப்பார்கள்.

உலகின் சிறந்த சொல் "செயல்" தானே? செஞ்சுருவாங்க.


நன்றி :...

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com



சனி, 10 அக்டோபர், 2020

கேள்வி : ஒருவருக்கு கொடுக்கும் மிக சிறந்த பதிலடி எது?


கேள்வி : ஒருவருக்கு கொடுக்கும் மிக சிறந்த பதிலடி எது?


என் பதில் :.என் இனிய பள்ளிக்கால நண்பர் பாஸ்கரன் பழனிச்சாமி தற்பொழுது கோவையில் இருக்கும் (Aerospace)..இல் பணிபுரிகிறார் அவருடைய மேலாளருக்கும் அவருக்கும் நடந்த சுவையான அன்பு மோதல் ...குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டது .


2006 இல் நான் கோயம்புத்தூரில் ஒரு பிரபலமான இயந்திர பாகங்கள் மற்றும் ஆகாய விமானம் உருவாக்கும் தொழிற்சாலைக்கு உதவும் சிறு பாகங்கள் மற்றும் கருவிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். (ஒரு பாகத்தையோ அல்லது அசெம்பிளியையோ ஆரம்பம் முதல் உருவாக்கி, சோதனை செய்து, ஒன்றாக அசம்பிள் செய்து முடித்து , பேக் செய்து வாடிக்கையாளருக்கு அனுப்புவதுதான் என் பணி)


அங்கு பல்வேறு விதமான இயந்திரங்கள் காணப்படும் அவற்றில் அதிநவீன சிஎன்சி மெஷின் முதல் சாதாரண லேத் மில்லிங் மெஷின் (CNC machine- Lathe & milling machine) வரை அனைத்து விதமான இயந்திரங்கள் காணப்படும். இந்த இயந்திரங்களை கொண்டுதான் சாதாரணமான இரும்பில் இருந்து அனைத்து விதமான பாகங்கள் உருவாக்கப்படும். Raw material to Finished part/Assembly.


அங்கே பல்வேறு உலோகங்களால் ஆன , துல்லியமான அளவுகள் கொண்ட , குண்டக்க மண்டக்க (complicated எனவும் அர்த்தம் கொள்ளலாம்) வடிவத்தில் உள்ள பாகங்கள் என ஒவ்வொன்றும் பல்வேறு இயந்திரங்களால் உருமாற்றம் பெற்று அதன் கடைசி வடிவத்தை அடையும்.


பெரும்பாலும் அனைத்து உதிரி பாகங்கள் அல்லது அசெம்பிளிகளில் அவற்றின் வரிசை எண் & மற்றும் சில தகவல்களை அதன் மேற்பரப்பில் இயந்திரங்களால் பொறிக்கப்படும்.


எந்த ஒரு தட்டையான பரப்பு கொண்ட பாகங்களில் மிக எளிதாக எழுத்துக்களை பொறிப்பதற்கு என்று தனியாக ஒரு சிறிய இயந்திரம் இருந்தது. அந்த இயந்திரத்தை இயங்க வைத்து அந்த பாகத்தின் மேல் எழுத்துக்களைப் பொறித்து முடிக்க ஆகும் செலவு என்பது மிக மிகக் குறைவாக இருக்கும்.


ஆனால் கூம்பு வடிவில் உள்ள பாகத்தில் எழுத்துக்களை பொறிப்பதற்கு ஐந்து அச்சுகளை (5 axis) கொண்டு இயங்கும் சிஎன்சி மெஷின் தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. அப்படி சிஎன்சி மெஷின் இந்த வேலையை செய்வதற்கு ஒருவர் மெனக்கெட்டு கணினி நிரலாக்கம் (CNC programming) செய்து, பின்னர் அந்தப் பாகத்தை மிகக் கச்சிதமாக இயந்திரத்திற்கு உள்ளே பொருத்தி, அதற்கென்று மேலும் நிறைய வேலைகள் செய்து அந்த எழுத்துக்களை பொரிப்பதற்கு ஆகும் மொத்த செலவானது சில மடங்கு அதிகரித்துவிடும்.


ஒரு நாள் இந்த செலவு அதிகமுள்ள சிஎன்சி மெஷின் இல் செய்யும் வேலையை சாதாரண சிறிய மிஷின் கொண்டு செய்து முடிப்பதற்கு நானும் என் நண்பனும் சேர்ந்து புதியதாக முயற்சி செய்து கொண்டிருந்தோம்.


நாங்கள் செய்வதை பார்த்த எங்கள் மேலாளர் "இதில் எல்லாம் செய்யவே முடியாது, வாய்ப்பில்லை ராஜா" என்பது போலவே சிரித்தார் . அவருடன் சேர்ந்து பக்கத்து டிபார்ட்மெண்ட் மேலாளரும் சிரித்தனர்.


சற்று கோபம் வந்தாலுமே நாங்கள் நினைத்த வேலையை முடித்துவிட்டு தான் அன்று வீட்டுக்கு செல்வது என்று முடிவெடுத்து இருந்தோம்.


சிலபல கடினமான முயற்சிகளுக்குப் பிறகு ஒரு வழியாக அந்த வேலையை வெற்றிகரமாக செய்து முடித்தோம்.


மிக்க மகிழ்ச்சி அடைந்தோம், பல்வேறு ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அன்று இரவு அங்கிருந்து சந்தோசமாக கிளம்பினோம். கிளம்பி செல்லும்பொழுது மேலாளர் சிரித்தது எனக்கு நினைவுக்கு வரவே, உடனே என்னுடைய அலைபேசியை எடுத்து அவருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன்.


யார்கிட்ட...

Every NEW IDEA is a joke, until someone achieves it.


வெற்றிகரமாக செய்து முடிக்கும் வரை எந்த ஒரு புதிய முயற்சியும் நகைச்சுவைக்கு உள்ளாக்கப்படும்.


அந்த மேலாளர் ஒரு மும்பை காரர். அடுத்தநாள் வந்து நாங்கள் செய்து முடித்து இருந்ததை பார்த்த என் மேலாளர் மிகவும் மகிழ்ச்சியுடன் என்னை பாராட்டினார். அதோடு நிறுத்தாமல் அந்த மாதத்திற்கான சிறந்த ஊழியர் என பாராட்டி பரிசும் கொடுத்தார். இத நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல...


நாம் ஒரு வேலையை தொடங்கிவிட்டால் அதை முடிக்கும் வரை நம்மை நோக்கி வரும் ஏளனங்கள், தொல்லைகள் போன்றவற்றை எரிபொருளாக எடுத்துக்கொண்டால் வெற்றியை நோக்கி நகர்வதற்கு உதவியாக இருக்கும்.


பதிலடி என்பது செயலில் இருக்க வேண்டும். ஆனால் அந்த பதிலடி என்பது நமக்கு ஏதாவது பயன் தருவது போலவும் மற்றவர்க்கு தீங்கு தராது என்றால் மட்டும் செய்வது நல்லது.


நன்றி.

Sivakumar.V.K👍✈️✈️


(Home Loans,Home Loans To NRIs) 


Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms🥰👍🏡🏡✈️✈️

siva19732001@gmail.com📚✍️✍️

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE

🥰Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.🥰

என் இனிய மருமகள் ரித்திகா விஜயக்குமார்-க்கு(ஜெய்வந்த் காஸ் ஏஜென்சி -உடுமலைப்பேட்டை ) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..

 என் இனிய மருமகள் ரித்திகா விஜயக்குமார்-க்கு(ஜெய்வந்த் காஸ் ஏஜென்சி -உடுமலைப்பேட்டை )  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..

கோவையில் இருக்கும் தன் அத்தையை போன்று குணம் ..மனம் ..மாறாத ..மருமகள் ..தன் அத்தையை போன்றே எடுத்த ஒரு காரியம் என்றாலும் பன்முக தன்மை கொண்டு சிறப்பாக செய்து முடிப்பார்கள் ..

தன் அத்தையை போன்றே படிப்பு விசயத்திலும் எந்த காரணம் கொண்டு


பின்னடைவு அடைவதில்லை ..விளையாட்டிலும் ..சிறப்பாக பங்கேற்று சிறப்பு செய்பவர் ..

தன் அத்தையை போன்றே வெளியிடம் சென்றாலும் ..சரியாக கணித்து துணிக்கடை ..மளிகைக்கடை ..ஆபரணகடை ..மற்ற எந்த ஒரு பொருளையும் வாங்குவது என்றாலும் சரியாக தேவையானதை கணித்து வாங்குவார்கள் ...

தன் அத்தையை போன்றே ..தனக்கு பிடிக்கவில்லையென்றாலும் ..நாசூக்காக அடுத்தவர் மனம் புண்படும்படி  இல்லாமல் ..அழகாக சொல்லிவிடுவார் ..


என் இனிய மருமகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681...




வெள்ளி, 9 அக்டோபர், 2020

கேள்வி : சும்மா நச்சுனு ...நாலு வார்த்தை சொல்லுங்க பார்க்கலாம் ...

 கேள்வி : சும்மா நச்சுனு ...நாலு வார்த்தை சொல்லுங்க  பார்க்கலாம் ...

என் பதில் :..

45 வயசுக்கு மேல் ஜீன்ஸ் போட்டு நடமாடினால் கிழத்துக்கு பார் சோக்கு என்று நக்கல் நய்யாண்டி செய்யும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


ஒரு ஸ்பூன் சர்க்கரை போடும்போது - பார்த்து சுகர் வந்திற போவுது என்பார்கள். வாக்கிங் போக இறங்கினால் - சுகர் வந்திருச்சா என்பார்கள்.


எந்த நேரத்தில் தூங்கி எழுந்தாலும் என்ன இந்த நேரத்தில் தூங்குறே என்பார்கள்?


தூக்கம் வருவது போல இருக்கிறதே என்று சொன்னால் ஒரு நல்ல டாக்டரை பார்த்து செக் பண்ணிக்கோ என்பார்கள்.


அது அவர்களது பார்வை.


வாழ்வது ஒருமுறை. அதில் நம் பங்களிப்பு எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்து முடிக்க வேண்டும்.


இனிமேல் படிச்சி என்ன செய்ய போறே என்பதெல்லாம் உங்களை காணும்போது மட்டும் பேசப்போகிற வார்த்தைகள். நீங்கள் அந்தப்பக்கம் போய்விட்டால் அதை மறந்துவிட்டு இந்த பக்கம் போய்விடுவார்கள்


இலக்கை அடைந்து தான் மரணிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. 

இலக்கை நோக்கிய பயணத்தில் மரணித்தால் வாழ்ந்த பலனை அடைவோம்.


சோம்பி சுருண்டு கிடப்பதை விட நாலு அடி நகர்ந்து செல்வது மேல்..


நன்றி :.....



கேள்வி : புதிய பொருளாதாரத்தில் (New Economy) எந்த மாதிரி வேலைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் ?

 கேள்வி : புதிய பொருளாதாரத்தில் (New Economy) எந்த மாதிரி வேலைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் ?

என் பதில் :.

தற்போது ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகின்றன மார்ச் முதல் இந்த வருடம் முடியும் வரை

நாம் வரலாறு காணாத பிரச்சனைகள் உயிர் சேதங்கள் மன சேதங்கள் ஒரு பக்கம். ஆனால் தற்கொலை சதவிகிதங்கள் மிக அதிகம் ஆகி உள்ளன. இதில் இளம் பருவத்தினர் காதல் தோல்வி, வேலை இல்லை, பரீட்சை இது போல ஒரு பக்கம் என்றால். நடுத்தர மற்றும் முதியோர்களும் வேலை போவது, வேலை இல்லாமல் இருப்பது இதனால் தற்கொலை செய்து கொண்ட பங்கு சந்தை அதிகாரிகள் கூட மிக அதிகம்.


அப்படி இருக்கையில் எந்த செக்டர்ஸ் அதாவது துறைகள் ஓரளவு இருக்கின்றன அதை குறித்து நத்தை வேகத்தில் முன்னேற 2021 இல் எங்கெங்கே வாய்ப்பு பிறகு 2022 பிறகாவது ஓரளவு பழைய மாதிரி மூச்சு விடுமா பொருளாதாரம்...எல்லாம் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்

தினம் தினம் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருட்கள் - அதாவது FMCG தினம் consumer என்று சொல்வோம் அது ஓரளவு பிழைத்த நிலையில் உள்ளது. காரணம் காபி டீ பல் பொடி பேஸ்ட் இல்லாமல் இல்லை. ஷாம்பு சோப்பு சீப்பு எப்படியாது இவை உபயோகித்து ஆக வேண்டும். இதில் சரிந்த சில தேயிலை நிறுவனங்கள் கூட லாபம் ஈட்டின.

அத்தனை விதமான மருந்து சம்மந்தப்பட்ட பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் பயோ டெக் இனிமேல் இன்னும் 10 வருடங்களுக்கு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இதற்கு சான்று சமீபத்திய ரோசரி பயோ டெக் IPO  கேள்வியில் கூட வாங்குங்கள் என்றே நான் அதற்கு பதில் அளித்தேன். அது அதிக லாபங்கள் கொடுத்தது

ஆன்லைன் இல் நாட்டியமே எடுக்கின்றனர். அதாவது இணைய வழி கல்வியும் மீடியா மூலம் சம்பாதிப்பதும் லாபம் தருவதோ இல்லையோ வேறு வழி இல்லை என்பதால் இந்த தொழில் இன்னும் அதிக முன்னேற்றம் கண்டு உள்ளது. நினைத்து பாருங்கள் நாட்டியம் போன்ற கல்வி ஆன்லைன் இல் அல்லது யோக பயிற்சிகள் கூட இப்படி தான் இப்போதெலாம். இன்னும் இந்த துறை வளரும்


ஆர்கானிக் மற்றும் ரசாயனம் இல்லாத எந்த சேவையும் மக்கள் இன்னும் இன்னும் அதிகம் விரும்புகின்றனர். காரணம் கொரோன காரணமாக ஏற்பட்ட அச்சம். ஆகையால் ரசாயனம் இல்லாத உழவு செய்யும் எல்லாமும் அதிகம் லாபம் ஈட்டி உள்ளது


மக்கள் வீட்டில் இருந்து செய்யப்படும் பொருட்களை, வீட்டு அலங்கார பொருட்கள், வீட்டில் இன்னும் நல்லது தரும் இயற்கை பொருட்களை தேடி தேடி வாங்குகின்றனர். காரணம் வீட்டிலேயே இருப்பது ஒன்று. இன்னொன்று இப்படி எல்லாம் உள்ளதே தவற விட்டோமே என்ற எண்ணம். செராமிக் பானைகள், வீட்டு அலங்காரம், கருத்துரி குளோபல் போல இயற்கை பூக்களை வைத்து செய்யும் நறுமணம் இப்படி பல துறைகளில் மக்கள் தேடி வாங்குகின்றனர்

கோதுமை மற்றும் அரிசி, வீட்டு சமையலறை பொருட்கள் எல்லாமே கொரோனா நேரத்தில் நல்ல லாபம் ஈட்டி உள்ளது . உதாரணம் butterfly appliances போல. ஏனென்றால் அதே காரணம். வெளியில் செல்வதில்லை. வீட்டில் இன்னும் இன்னும் தேவைகள் அதிகம். இதே காரணத்தில் தான் AC துறை அதிக லாபம் பெற்று உள்ளது

மேலும் மீடியா சம்மந்தமான துறையில் வாய்ப்புகள் கூடும். இது நியூஸ் போன்ற மீடியா அல்லது இசை, நாட்டியம் போல கலை ஏனெனில் வெளியில் போகாமல் ஏதோ ஒரு மீடியா கேட்டு கொண்டே இருப்பதால். ஆகையால் இந்த துறையில் வேலை வாய்ப்புகள் ஏறும்

மற்றபடி இதற்கு அடுத்தது உலக அரங்கில் சண்டைகள் வர வாய்ப்பு மிக அதிகம். ஆகையால் Defence இல் எல்லா வகையிலும் வேலை / வாங்கும் உபகரணங்கள் அப்படி வாய்ப்புகள் உண்டு.

அடுத்தது pharma புதிய பரிணாமங்களை தொடும். வேலை வாய்ப்பு pharma மற்றும் ஆயுள் காப்பீடு சுகாதார காப்பீடு மருத்துவ காப்பீடு துறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் எதிர்பார்க்கிறேன். 

யோகா மற்றும் ஆயுர்வேதம் சித்த மருத்துவம் போல alternative துறையும் கொரோன பிறகு இன்னும் அதிகம் ஆகும் இடங்கள். ரெய்கி பிரானிக், அக்குபஞ்சர் இன்னும் இவை எல்லாம் படித்தவர்களுக்கு சம்பளம் அதிகம் தான் ஆகும்

வாகன துறை, ஐடி துறை, விவசாயம், ட்ராவல், சிமெண்ட், வீடு மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற அதிக லாபம் ஈட்டும் துறைகள் எல்லாமே 2021 மிட் மேலே தான் படுத்த நிலையில் இருந்து நிமிர வாய்ப்பு என்பது என் கணிப்பு

மெண்டல் ஹெல்த் எனப்படும் மன நோய் உளவியல் துறைகளிலும் வேலைகள் அதிகமான அளவில் இந்த கோவிட் காலத்திற்கு பிறகு உண்டு என்பது என் கணிப்பு


நன்றி :.....

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

புதன், 7 அக்டோபர், 2020

 கேள்வி : நீங்கள் இதுவரையில் கேட்ட மிகவும் அசாதாரணமானப் பாடல் எது?


என் பதில் :.

அசாதாரணம் என்றால், சாதாரணத்தை விட சற்று உயர்ந்தது அல்லது சிறப்பானது என்று தானே பொருள். அப்படியென்றால், இந்தப் பாடல் எனக்கு அசாதாரணமானது தான்.


இந்தப் பாடலை இதுவரை பார்த்ததில்லை என்றால், ஒருமுறை முழுமையாகப் பாருங்கள்.


வேலுண்டு வினையில்லை


இந்தப் பாடலைப் பாடியவர் பெயர் சுசீலா இராமன். Susheela Raman ...


தஞ்சாவூரைச் சேர்ந்த சுசீலாவின் பெற்றோர், 1960-களிலேயே லண்டனுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.


லண்டனில், மேற்கத்திய மற்றும் கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டு இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்.


அவர் வெளியிட்ட இசை ஆல்பங்களில், Salt Rain, Love Trap, Vel போன்ற ஆல்பங்கள் ரசிகர்கள் வரவேற்பை பெற்றன.


'வேல்' ஆல்பத்தில் தமிழ்க் கடவுள் முருக பெருமானைப் பற்றிய பாடல்களை அவர் பாணியில் பாடியுள்ளார். அதில் ஒன்று தான் மேலே காணொளியில் உள்ள 'வேலுண்டு வினையில்லை' பாடல்.


இந்தப் பாடலை முதன் முறையாகப் பார்க்கும் போது அவர் பாடும் விதம், நடனம் ஆடும் விதம் இவற்றையெல்லாம் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது.


சிரிப்பு வந்தது மட்டுமில்லை. இவங்க ஏன் நல்ல பாடல்களை எல்லாம் இப்படி கொலை செய்யவேண்டும் என்றும் தோன்றியது.


ஆனால் என்னவோ தெரியவில்லை… அந்தப் பாடல் என்னை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்து இழுத்தது. அதே பாடலை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும் போல தோன்றியது.


மனது பாரமாக உணர்ந்த நேரத்தில் எல்லாம் அந்தப் பாடல் எனக்கு ஆறுதலாக இருந்திருக்கிறது.


அந்தப் பாடலுக்காக அமைக்கப்பட்ட இசையும் ஒரு காரணம் என கூறலாம்.


ஆங்கிலப் பாடகர்கள் பாடும் பாப் இசைப் பாடலை தான் ரசிக்க வேண்டுமா..ஏன் நம் தாய் மொழியில் ஒரு பாப் இசைப் பாடலை ரசித்தால் தான் என்ன என்று நினைக்க வைத்த பாடல் இது.


சமூக வலை தளங்களில் பலரும் இப்பாடலுக்காக சுசீலா அவர்களை விமர்சனம் செய்து திட்டினர். எனக்கும் முதலில் பிடிக்கவில்லை தான். பிறகு தான் புரிந்தது. பக்தி பாடலை பரவசப் பாடலாகவும் பாடலாம். அதில் தவறில்லை என்று.


அண்மையில் வெளிவந்த 'ஜிப்ஸி' படத்தில் கூட இரண்டு பாடல்கள் பாடி, நடித்தும் இருக்கிறார்.


யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ இந்த அசாதாரணமான பாடலை எனக்குப் பிடித்திருக்கிறது.

https://youtu.be/iSselNEL5dw




கேள்வி : நீங்கள் இதுவரையில் கேட்ட மிகவும் அசாதாரணமானப் பாடல் எது?


என் பதில் :..அசாதாரணம். ஆனால் மிகவும் அழகான பாட்டு ! வசீகரத்தை காட்டும் பாட்டு .


படத்தில் கதாநாயகி எதிர்மறையான கேரக்டர், பழிவாங்கும் உணர்ச்சி , டிராகுலா மாதிரி ரத்தத்தை கூட குடிக்கும் இயல்பு

அப்படிப்பட்டவள் காதல் எப்படி இருக்கும் ? பெண்மை, மேன்மை ,சாந்தம், பாவம் எவ்ளோ நாள் தான் இதையே பாடுவது ! முழு ஆளுமை உடைய பெண் எப்படி இருப்பாள் ? சும்மா தெறிக்க விடணும்.


ஆணோட அறிவோட மோதணும், மோதி ஜெயிக்கணும். நான் சொல்லும் உணர்வு படிப்பில் விளையாட்டில் முதலாவது வந்த பெண்களுக்கு இது நன்றாக புரியும் (toppers in sports or studies )


எப்போதும் பணிஞ்சு போகும் பஞ்சு தான் பெண் என்றில்லை, சும்மா அறிவிலும், மனதிலும், உணர்விலும், உடலிலும் சரிக்கு சரி மோதினால் தான் நன்றாக இருக்கும் !


அதுவே வசீகரம் . ஆன்மா ஒன்று தான். ஆனால் எப்போதும் நிலவு, மென்மை, குளுமைக்கு பதிலா இப்படியும் பெண்கள் இருந்தால் பெரிய பதவிகள், சாதனைகள் படைக்க, சோதனைகள் கடக்க, அழகாக இருக்கும் . இதில் மிகவும் விசித்திர வரிகளை இன்னும் கடுமையாக்கி உள்ளேன்.


இந்த பாட்டின் சிறப்பு அம்சம் பெண்களின் உச்ச உணர்வுகள் அழகாக, ஆபாசம் இல்லாமல் காட்டிய விதம்


பாக் ஸ்ட்ரீட் பாய்ஸ் (Backstreet boys - as long as you love me song ) அதில் வரும் நாற்காலி நடனத்தை போன்று அப்படியே இதில் வரும் நடன அமைப்பு


மிகவும் அழகான வசீகரமான காதல் ஜோடி


என் ஒரு கவிதையில் வரும்


“All beautiful people are not attractive


But all attractive ones are beautiful”


வசீகரமே அழகை, சாப்பிடும் அழகு


நம் வசீகரம் அறிவு மற்றும் ஏதாவது ஓர் ஆற்றல்


வசீகரம் ஏன் என்று தெரியாமல் பிறர் நாம் சொல்வதை செய்ய வைக்கும் ஆளுமை (Leadership)

https://youtu.be/Ry9BwSC6OK0


கேள்வி : என் மாமனாருக்கு என்னை பிடிக்காது. ஒருவருடம் எங்களை பிரித்துவிட்டார் நான் என் சிறிய தவறுகளுக்காக மனம்திருந்தி அவளிடம் அழுதேன் ஆனாலும் அவள் தகப்பன் பேச்சை கேட்டு என்னை விவாகரத்து செய்துவிட்டாள். அதிக மன அழுத்தத்தில் உள்ளேன் .எப்படி விடுபடுவது? வருத்தங்கள். \\தகப்பன் பேச்சை கேட்டு விவாகரத்து செய்துவிட்டாள் ...

 கேள்வி : என் மாமனாருக்கு என்னை பிடிக்காது. ஒருவருடம் எங்களை பிரித்துவிட்டார் நான் என் சிறிய தவறுகளுக்காக மனம்திருந்தி அவளிடம் அழுதேன் ஆனாலும் அவள் தகப்பன் பேச்சை கேட்டு என்னை விவாகரத்து செய்துவிட்டாள். அதிக மன அழுத்தத்தில் உள்ளேன் .எப்படி விடுபடுவது?

வருத்தங்கள். \\தகப்பன் பேச்சை கேட்டு விவாகரத்து செய்துவிட்டாள் ...


என் பதில் :..

தகப்பன் என்று அவரையும் விட்டாள் என்பதிலிருந்து அவள் என்று பிரிந்தவரையும் குறிப்பிடுவதிலிருந்தே சொல்வதிலிருந்தே உங்களுக்கு அவர் தந்தை மற்றும் மகள் இருவர் மீது இன்னும் உள்ள கோபம் புரிகிறது. எந்தப்பெண்ணுக்கும் தந்தை என்றால் உயிர். தந்தைகளுக்கும் பெண் என்றால் உயிர். அவர்களுக்கும் சுயமரியாதை என்ற அவர்களால் போடப்பட்ட கோடு ஒன்று உள்ளது. அது என்றோ கடந்து விட்டது. அவரும் முடிவெடுத்திருக்கிறார் அல்லது முடிவுக்கு உடன்பட்டிருக்கிறார்.


ஒத்துவரவில்லை. போராட்டங்களுக்குப் பின் பிரிந்துவிட்டீர்கள். நம்மூரில் ரத்து அவ்வளவு எளிதில்லை. கோர்ட்டுக்கு அத்தனை முறை போகிற அவஸ்தைக்கு தலையெழுத்து என்று சேர்ந்தே வாழ்ந்துவிட நிறைய வாய்ப்பு இருந்திருக்கும். ஆகவே அதையும் தாண்டிவரும் அளவுக்கு வெறுப்பு அடைந்திருக்கிறீர்கள்…


இயல்பான ஒன்று தானே. எதற்கு மனவருத்தம்.. அதுவும் ஆழ்ந்த மன அழுத்தம்.. . விகாரமாக முகம்காட்டிய கண்ணாடியை உடைத்து குப்பையை அள்ளிப்போட்டாயிற்று. இதில் எதற்கு வருத்தம்… விட்டுக்கொடுத்தல் என்பது இருவருக்கும் இருக்கவேண்டிய பொறுப்பு. உங்களுக்கு ஈகோ இருந்திருக்கலாம். சுயமரியாதைக்கும் ஈகோ விற்கும் மெல்லிய கோடு தான் வித்தியாசம். நீங்கள் காயப்படாமல் விலகியிருக்க மாட்டீர்கள். தவறு உங்கள் பக்கமே என்றாலும் வரம்பு தாண்டும்போது தீ விரலைச் சுடுவதுபோல் உங்கள் வரம்பை எங்கேயோ சீண்டியிருக்கவேண்டும். அதனால் தான் பிரிவுவரை சென்றிருக்கிறீர்கள். உங்கள் துணைவருக்கு உங்களை பிடிக்கும் பட்சத்தில் தக்கவைத்துக்கொள்ள சமமான பொறுப்பு அவருக்கும் உண்டு என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். வெறுமனே பிரிந்திருந்தால் மன்னிப்பு கேட்கலாம் காலில்கூட விழலாம் ஏதோ ஒன்று செய்து சேர முயற்சி செய்யலாம். ரத்து என்கிற கடைசிப்படி தாண்டிவிட்டு பின்னர் படிகளைத் தேடுவதில் அர்த்தம் இல்லை. உங்களுக்கு உள்ளூர துணைவரைப் பிடித்திருந்தாலும் ஒரு முடிவு எடுத்துவிட்டீர்கள். அவரும் நல்லதாப்போச்சு என்று ரத்து வரை சென்றுவிட்டார்.இனி என்ன ஒட்டினாலும் உடைந்த கண்ணாடி உடைந்தது தான். ஏற்கனவே தெரிந்த விகார முகம் திரும்ப ஒட்டினால் அகோரமாகத் தெரியும். சொல்லி சொல்லி காண்பித்து அப்படியே விலகி இருந்திருக்கலாம் என்ற நினைப்பு ஒவ்வொரு சின்ன சலசலப்பிலும் தோன்றி நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்புள்ளது.


நீங்கள் தனியாளா, உங்கள் பெற்றோர் என்ன செய்தார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. யாராகிலும் நீங்கள் ஒன்றுசேர்ந்து வாழவே முயற்சி செய்திருப்பார்கள். குழந்தை உண்டா இல்லையா என்று தெரியவில்லை. இருந்தால் வருத்தத்தில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது. இல்லாவிட்டால் அது என்ன சொல்லிக்கொடுத்ததோ அதை ஒரு பாடமாக வைத்துக்கொண்டு வேறு துணை தேடுங்கள். அல்லது சும்மா இருந்துவிடுங்கள்.


வருத்ததிலிருந்து விலக வயது துணையிருக்கும் பட்சத்தில் இன்னொரு துணை தேடுவதில் ஒரு தவறும் இல்லை. மனமாற்றம் எளிதல்ல என்றாலும் தொடர்பாதிப்பிலிருந்து வெளிவரலாம். வீட்டு ஆசாமிகள் என்ன செய்தார்கள் செய்கிறார்கள் என்று தெரியாமல் எதை என் போன்றவர்கள் சொன்னாலும் ஏற்காதீர்கள். ஆழ்ந்து யோசித்து முடிவெடுங்கள். சிலநாள் குழப்பம் இருக்கும். காயம் ஆறும்வரை காத்திருங்கள். வடு மறையாது. அதற்காக கையை வெட்டிக்கொள்ளாதீர்கள். பாடங்களை மறக்காமல் புதுவாழ்விற்கு தயார் ஆகிவிடுங்கள். உலகம் மிகவும் பெரியது. சில சம்பவங்கள் படிப்பினைகள். கற்று ஏற்றுக்கொண்டாயிற்று. மீண்டும் அதே பள்ளி செல்ல வேண்டியதில்லை.


நன்றி ....வாழ்க்கை ஒருமுறைதான் ..வாழந்துபாருங்கள் ...

செவ்வாய், 6 அக்டோபர், 2020

கேள்வி : பழைய தங்க நகைகளை விற்கும் போது நகைகளாக விற்பது இலாபமா? இல்லை உருக்கி விற்பது இலாபமா?

 கேள்வி : பழைய தங்க நகைகளை விற்கும் போது நகைகளாக விற்பது இலாபமா? இல்லை உருக்கி விற்பது இலாபமா?


என் பதில் :


பழைய தங்க நகைகளை விற்கும் போது நீங்கள் வாங்கிய இடத்தில் ரசீது வைத்து விற்கும்போது ,குறிப்பிட்ட அளவு லாபமாக இருக்க வாய்ப்புள்ளது!!!.


 நகை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் ஹால்மார்க் முத்திரை இடப்பட்ட நகைகளை வாங்குவது சாலச் சிறந்ததாகும்!!!.


நீங்கள் ஹால்மார்க் நகையை வாங்கிய இடத்தில் நீங்கள் விற்கும்போது நீங்கள் ஒரு நியாமான லாபத்தை பெறலாம். ஹால்மார்க் நகை இருந்தால் அப்படியே மாற்றிக் கொள்ளலாம்.


இதில் மற்ற நகை விட உங்களுக்கு இதில் பணம் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கும். இதில் ஹால்மார்க் நகை முத்திரை இடப்படாத நகைகளாக இருந்தால் நீங்கள் உருக்கி டெஸ்டிங் செய்து பாயிண்ட் அடிப்படையில் லாபமாக விற்கலாம்!!!. அதனால் வாங்கும்போதே ஹால்மார்க் நகையை பார்த்து வாங்குங்கள்!!!!.


இதுவே இப்போதும் எப்போதும் உங்களுக்கு நிகர லாபம் தரும்!!!!.


 நன்றி!!. வாழ்க வளமுடன்!!!.

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE

சனி, 3 அக்டோபர், 2020

கேள்வி :இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்..எரிவாயு அடுப்பு எப்படி பராமரிப்பது ?அடுப்படியில் இருக்கும் பிசாசு எப்படி சமாளிப்பது ..?

கேள்வி :இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்..எரிவாயு அடுப்பு எப்படி பராமரிப்பது ?அடுப்படியில் இருக்கும் பிசாசு எப்படி சமாளிப்பது ..?


என் பதில் : ரொம்ப சிம்பிள் ...30 வருடங்கள் பராமரித்து வந்த எரிவாயு அடுப்பு .நேற்றுடன் அதன் வாழ்நாளை நிறுத்திக்கொண்டது ..புது எரிவாயு அடுப்பு வாங்கிய போது ..அதன் முறை படித்து தெரிந்துகொண்டது ...மகிழ்ச்சி ..

பிசாசு படத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இது வேறு மாதிரியான பிசாசு.. இவை கண்ணுக்கு புலப்படுவதில்லை! ஆனால் நிமிடத்தில் நம்மை சாய்த்து கொல்லும் திறனுடையது! அது என்ன வகை பிசாசு என்று தெரிந்து கொள்ள கொஞ்சம் பொறுமையா  படியுங்கள்…


நம் வீடுகளில் நாம் சமையல் செய்ய உபயோகிக்கும் எரிவாயு அடுப்பு (Gas Stove ) யாவரும் அறிவர். திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டரை(LPG ) அடுப்புடன் இணைத்து நாம் நமக்கு வேண்டிய உணவு வகைகளை சமைத்து உண்கிறோம்.


எரிவாயு அடுப்பு எப்படி வேலை செய்கின்றது என்று முதலில் பார்க்கலாம். நாம் அடுப்பை ஆன் செய்தவுடன் சிலிண்டரிண் உள்ளே அழுத்த நிலையில் அடைத்து வைக்க பட்டிருக்கும் சமையல் எரிவாயு ரப்பர் குழாய் வழியாக அடுப்பை அடைந்து பர்னரை நோக்கி செல்கின்றன. அவ்வாறே பயணப்படும் எரிவாயு ஒரு கட்டத்தில் காற்றுடன் கலக்க ஆரம்பிக்கும். அவ்வாறு காற்றுடன் கலப்பதனாலே தான் வத்திகுச்சி அல்லது எரிவாயு விளக்கேற்றி(Gas Lighter) மூலம் அடுப்பை பற்ற வைக்கும் போது நீல (Blue Flame ) நிறத்தில் எரிகிறது!


இவ்வாறு நீல நிறத்தில் அடுப்பு சுடர் விட்டு எரிவதே சிறந்தது. ஒரு வேளை அடுப்பில் எரியும் சுடரானது மஞ்சள் நிறத்தில் எரிந்தால் அல்லது பர்னர் பற்ற வைத்ததும் சத்தம் போடுவது இவ்வாரெல்லாம் நடந்தால் எரிவாயு சுடர்(gas flame) குழாய்களுக்குள் மாட்டி கொண்டு விட்டது என்று அர்த்தம்! அப்பிரச்சனையை தீர்க்க ஒரு முறை அடுப்பை ஆப் செய்து விட்டு திரும்ப ஒரு தடவை அடுப்பை பற்ற வைப்பது பிரச்னையை தீர்க்க உதவும் சரியான அளவு காற்று எரிவாயுவுடன் கலக்கும் போது நாம் விருப்பப்பட்டது போலே சுடரானது நீல நிறத்தில் சுடர் விட்டு எரிகிறது.


சரியான அளவு காற்று எரிவாயுவுடன் கலக்காத பட்சத்தில் சுடரானது மஞ்சள் நிறத்தில் எரிகிறது! இவ்வாறு மஞ்சள் நிறத்தில் எரிவது அவ்வளவு நல்லது இல்லை.. சுடர் மஞ்சள் நிறத்தில் எரிவதற்கு இன்னொரு காரணமும் சொல்ல படுவதுண்டு. அது என்னவெனில் அடுப்பின் பர்னரின் உள்ளே சேர்ந்திருக்கும் புகைக்கரியினால்!! அவ்வப்பொழுது இந்த பர்னர்களை கொதிக்கும் கடுங்கார நீரில் (Lye ) கழுவி அடைந்திருக்கும் ஓட்டைகளை சுத்தம் செய்து பின் அடுப்பினில் பொருத்துவது நலம் பயக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு சுத்தமாக அடுப்பு பேணி பாதுகாக்க படுகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது…


சரி சரி நிறுத்து! என்ன பேய், பிசாசு ஒன்றையும் காணவில்லை! எப்பதான் அவற்றை பற்றி சொல்ல போகிறாய் என்று நீங்கள் பரபரக்கும் அவசரம் புரிகிறது! இதோ வந்து விட்டது நான் சொன்ன பிசாசு! அதன் பெயர் கார்பன் மோனாக்சைட் (CO ) இது ஒரு விஷவாயு.. இந்த விஷ வாயு பிசாசானது எப்பொழுது எல்லாம் வெளியே வரும் , எப்படி வரும் என்பதை தெரிந்து கொள்ளுவது நல்லது. இந்த விஷவாயு கண்ணுக்கு புலப்படாது, வாசனை அறிய முடியாது. இது எரிவாயுவை எரிக்கும் போது வெளிவரும் ஒரு வாயு! இந்த விஷ வாயு வெளிவரும் அளவு நாம் எரிக்கின்ற எரிவாயுவின் எரியும் திறனை பொருத்தது. நாம் நம் வீட்டு அடுப்பை ஒழுங்காக பராமரிக்கும் வரை, அதாவது அடுப்பில் எரியும் சுடர் நீல நிறத்தில் காணப்படும் பொழுது நம் அடுப்பு எரிவாயுவை நல்ல திறனோடு எரிக்கும் , விஷவாயு வெளிவரும் அளவும் கம்மியாக இருக்கும்.. அதனால் பெரிய பாதிப்பு ஒன்றும் வராது! ஆனால் அடுப்பின் பராமரிப்பு சரி இல்லாமல் போகும் பொழுது அதாவது அடுப்பில் எரியும் சுடர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பொழுது இந்த விஷ வாயு வெளி வரும் அளவு கூடி , அடுப்பின் அருகே நின்று கொண்டிருக்கும் மனிதர்களை நிமிடங்களில் தாக்கி கொன்று விடும்.


இந்த விஷவாயு (CO ) தாக்கியதற்கான அறிகுறிகளை இப்பொழுது பார்க்கலாம். ஆரம்ப அறிகுறிகள் சளி காய்ச்சல்(flu ) போல இருக்கும் ஆனால் காய்ச்சல் எதுவும் வெளியே தெரியாது. மேலும் தீராத தலைவலி, சோர்வு, மூச்சு திணறல் , குமட்டல் ,தலைச்சுற்று , வாந்தி ,தன்னிலையிழத்தல் , உணர்வு இழப்பு போன்றவை ஏற்படும் . மருத்துவ ரீதியாக சொல்வதென்றால் இந்த விஷவாயுவானது(CO ) நம் இரத்தத்தில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுளோபினுடன் அட்டை போல ஒட்டி கொண்டு, பிராண வாயுவை நம் உடம்பில் உள்ள எல்லா பாகங்களுக்கு வழங்க முடியாதபடி செய்து விடுகிறது! இதற்கு நமக்கு நாமே செய்து கொள்ளும் முதலுதவி அவ்விடத்தை விட்டு காலி செய்து நல்ல தூய்மையான காற்று நம் முகத்தில் படுமாறு செய்வது.. அதன் பிறகு ஒரு நல்ல மருத்துவரை அணுகி இந்த நச்சு அறிகுறிகளை எடுத்துரைத்து தகுந்த சிகிச்சை பெற்று கொள்வது நல்லது!!


நன்றி ..


வெள்ளி, 2 அக்டோபர், 2020

What is crowdfunding and how does it work?

What is crowdfunding and how does it work?

Crowdfunding is a way for people, businesses and charities to raise money. It works through individuals or organisations who invest in (or donate to) crowdfunding projects in return for a potential profit or reward. Investing this way can be risky, so make sure you know what you're doing.

Is Crowdfunding free money?

The short answer is no. There are not free fundraising websites. When a platform says its free, it typically means it is free to start, as in there is no signup or subscription fee. Crowdfunding platforms have to make money, and in order to do so, they build in a percentage-based fee structure.

Is Crowdfunding a good idea?

Perhaps the biggest advantage crowdfunding has over VC is the speed at which an enterprise can be funded. While funding from VC investors tends to take years to secure a deal, a crowdfunding campaign can raise substantial sums of money in just a a couple months.

Steps to Launching a Successful Crowdfunding Campaign

Share your story. Let your potential funders know how your product or business idea can benefit them. ...

Offer great rewards. ...

Set a funding goal. ...

Promote your campaign. ...

Update your backers as your project progresses. ...

Fulfill your promise. ...

Find a viable means to monetize your pain point. ...

Find a manufacturer you can work with.

கூட்டு நிதி பெறுதல் (crowdfunding) 


 சமூக வலைத்தளங்கள் மூலம் செய்திகள் எளிதாக மக்களை சென்றடைகின்றன. இதை தொழில், வர்த்தக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் முறையாக பயன்படுத்துவதன் மூலம்  முதலீட்டுக்கான நிதி /நன்கொடையை எளிதாக பெறலாம் .


இதன் மூலம், நிறுவனங்களின் வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்ள இயலும். 'ஆன்லைன்' வர்த்தகத்தை பொறுத்தவரை, இந்தியாவில் 'ரிவார்டு' முறை செயல்பாட்டில் உள்ளது. கூட்டு நிதி திட்டம் செயல்படுத்தும் பட்சத்தில், இணையத்தை பயன்படுத்துபவர்கள், இளைஞர்கள் மூலம் வர்த்தகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்த இயலும்....


தொழில் அபிவிருத்தி செய்ய நினைப்போர் மருத்துவம் ,கல்வி ,பெண்கள் மேம்பாடு ,மற்றும் இதர தனிநபர் தேவைகளை நிதி ஆதாரத்தை கூட்டு நிதி திட்டத்தின் மூலம் பெறலாம் .அதையும் மேலும் எளிதாக இப்பொழுது நிதி சந்தையில் இந்த ரெய்ச்சேர் எனும் நிறுவன இணைதளம் மூலம் Reward (அன்பளிப்பு ) மற்றும் நன்கொடையை எளிதாக பெற இயலும் ,மேலும் நிதி மற்றும் நன்கொடை அளிப்போர் இவ்விணையத்தளம் வாயிலாக தங்களின் நிதித்தேவையை பூர்த்தி செய்ய இயலும் .மேலும் விவரங்களுக்கு ..


இந்த காணொளி கண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் ..


https://www.youtube.com/watch?v=gjTzTmeeA00


இதில் இணைய விரும்புவோர் ..இந்த லிங்க் பயன்படுத்தி கொள்ளலாம் 


Signup ...

https://app.reicher.in/signup?refer_id=47312192



''நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், சமூக வலைதளங்கள் மூலம் கூட்டு நிதி பெறும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது,'' என்று, மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சுதா ராவ் தெரிவித்தார்.

கோவை குனியமுத் துார், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் வணிகவியல் துறை, அமெரிக்காவின் கிளேட்டான் பல்கலை, ஸ்டேட் ஸ்டீரீட் ஹெச்.சி.எல்., நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, கூட்டு நிதி பெறுதல் (crowdfunding) குறித்த சர்வதேச கருத்தரங்கு நேற்று துவங்கியது. இதில், மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சுதா ராவ் பேசியதாவது: சமூக வலைத்தளங்கள் மூலம் செய்திகள் எளிதாக மக்களை சென்றடைகின்றன. இதை தொழில், வர்த்தக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் முறையாக பயன்படுத்துவதன் மூலம் முதலீட்டிற்கான நிதியை எளிதாக பெறலாம்.

இதன் மூலம், நிறுவனங்களின் வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்ள இயலும். 'ஆன்லைன்' வர்த்தகத்தை பொறுத்தவரை, இந்தியாவில் 'ரிவார்டு' முறை செயல்பாட்டில் உள்ளது. கூட்டு நிதி திட்டம் செயல்படுத்தும் பட்சத்தில், இணையத்தை பயன்படுத்துபவர்கள், இளைஞர்கள் மூலம் வர்த்தகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்த இயலும்.

மத்திய அரசு, 'செபி' மூலம், நாராயணமூர்த்தி தலைமையில் சிறப்பு குழு அமைத்து, இந்தியாவில் கூட்டு நிதி திட்டம் செயல்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது. ரிசர்வ் வங்கியும் இந்த புதிய முறை செயலாக்கம் குறித்து ஆலோசித்து வருகிறது. திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சவால்களும் உள்ளன. செயல்படுத்தும் பட்சத்தில், அதற்கு முழுமையான வழிகாட்டு விதிமுறைகள், கண்காணிப்புக்குழு, சட்டதிட்டங்களை வகுக்கவேண்டியது கட்டாயம். இதன் மூலம், கருப்பு பணத்தை கட்டுப்படுத்த இயலும். இவ்வாறு, சுதா ராவ் பேசினார்.

முன்னதாக, ஸ்ரீ கிருஷ்ணா கல்விக்குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார்.கிளேட்டான் பல்கலை தலைவர் தாமஸ் டிம் ஹெயின்ஸ், துணைத்தலைவர் கெவின் டெமிட், கிருஷ்ணா கல்விக்குழும முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தர்ராமன், கல்லுாரி முதல்வர் பாபா ஞானக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், கூட்டு நிதி சார்ந்த, 187 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.📚📚📚✍️✍️✍️✍️



கேள்வி : உங்களுடைய அறிவுக்கண் திறந்து விட்டதாக நீங்கள் உணர்ந்த தருணங்கள் எவை?

 கேள்வி : உங்களுடைய அறிவுக்கண் திறந்து விட்டதாக நீங்கள் உணர்ந்த தருணங்கள் எவை?

என் பதில் :என் கூட பள்ளியில் படித்த என் வகுப்பு நண்பர் ..உணவகம் வைத்து நடத்துபவர் என்னிடம்  பகிர்ந்தது ....


படிச்ச ஆளு இப்படி அடுப்படில நின்னு பாக்குற வேலை செய்லாமா?


என்ன! டீம் லீடர் வேலைய விட்டுட்டு சாப்பாடு கடை வெச்சிருக்கானா?


பரவால்லயே! படிச்சுட்டு இந்தமாதிரி வேலை கூட பாக்குறாங்களே?


இப்படி பலர் என்னை கேட்கும் போதெல்லாம் ஒருவித குற்ற உணர்வு தான் மனதில் வரும். அவ்வளவாக தன்னம்பிக்கையும் உத்வேகமும் இந்த புதிய தொழிலின் மீது வரவில்லை.


சில மாதங்களுக்கு பின் ஒரு முதியவரின் ஒற்றை கேள்வியில் அது வந்தது.


என்னப்பா? சிறுசுல படிப்பு ஏறலயா, ஹோட்டல் வேலை செய்கிறாயே?


என்றார்.


அதற்கு முன் வரை அனைவரும் என்னை ஒரு படித்த இளைஞனாக பார்த்தார்கள், இவர் ஒரு ஹோட்டல் கடைக்காரனாக என்னை பார்த்த அந்த தருணம் தான் எனக்கு தன்னம்பிக்கை வந்தது.


இப்போது நான் ஒரு ஹோட்டல் காரர் என முழுமையாக என்னை ஏற்றுகொள்ள வைத்தது.


முழுசா சந்திரமுகியா மாறின கங்காவை போன்ற உணர்வு என்றார்.


பிறகுதான் எனக்கு தோன்றியது.


எல்லோரும் படிக்கிறோம், படித்து முடித்தவுடன் உடனடியாக ஒரு வேலைக்கு சென்று அப்போதைய குடும்ப சூழ்நிலைக்காக உழைக்க ஆரம்பித்துவிடுகிறோம்.


பார்க்கும் அனைவரும் இதையே தொடரும் படி நம் மனதில் Inception செய்துவிடுகின்றனர்.


இப்படியாக என் அடையாளம் இதுதான் என்று சமுதாயத்துக்கு காட்டியும் விடுகிறோம். ஆனால் உண்மையில் என் அடையாளம் இதுமட்டுமல்ல.


இதை தாண்டி நான் யார் என முத்திரை பதிக்க வேண்டும் என்ற எண்ணம் முப்பது வயதை நெருங்கும் போது துளிர்விடுகிறது.


அப்போது என் பழைய அடையாளத்தை முழுவதுமாக மாற்றி புதிய அடையாளம் ஒன்றை உருவாக்குவதென்பது மிக மிக சவாலான ஒன்று.


எல்லா கோட்டையும் அழித்துவிட்டு முதல்ல இருந்து எளிதாக ஆரம்பிக்க நாம ஒன்னும் பரோட்டா சூரி கிடையாதே!


அதனால் எனக்கான அடையாளத்தை நானே உருவாக்குவதற்கான காலம் இதுதான்


என உணர்ந்து அறிவுக்கண் திறந்தது.


நன்றி!




கேள்வி : டெபிட், கிரெடிட் கார்டுகளில் வந்துள்ள புதிய 10 மாற்றங்கள் என்ன?

கேள்வி : டெபிட், கிரெடிட் கார்டுகளில் வந்துள்ள புதிய 10 மாற்றங்கள் என்ன?


பதில் :


டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிமாற்றங்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி பல புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்தும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.


வங்கிக்கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் டெபிட் கார்டு பெரும்பாலும் இருக்கும். கிரெடிட் கார்டுகள் ஒவ்வொருவரின் ஊதியத்துக்கு ஏற்பட வங்கிகள் வழங்குகின்றன, தேவைப்படுபவர்கள் ஏற்றுக்கொண்டு பயன்படுத்தி வருகின்றன.


ஆனால், டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போதும், ஆன்-லைனில் பொருட்களை வாங்கும்போது பல்வேறு இடர்பாடுகள், திருட்டுகள், மோசடிகள் நடக்கின்றன. இந்த மின்னணு திருட்டுகள், மோசடி மூலம் ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.


அனைத்து டெபிட், கிரெடிட் கார்டுகளும் இந்தியாவில் உள்ள ஏடிஎம் மையங்கள், பாயின்ட் ஆஃப் சேல் எந்திரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்தியாவுக்கு வெளியே அதாவது வெளிநாடுகளிலும் தங்களின் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும் எனும் வசதியை வாடிக்கையாளர்கள் பெற விரும்பினால், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிள், கிரெடிட் கார்டுகள் வழங்கியுள்ள வங்கியிடம் வேண்டுகோள் விடுத்து வசதியைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த அறிவிக்கைக்கு முன் பெரும்பாலான வங்கிகள் வெளிநாடுகளிலும் தங்களின் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வகையில் வசதி செய்திருந்தன.

ஏற்கெனவே டெபிட் ,கிரெடிட் கார்டுகளை இந்த வசதியுடன் வைத்திருப்பவர்கள் குறித்து கார்டு வழங்கும் வங்கிகள் முடிவு எடுக்கும். வெளிநாடுகளில் பயன்படுத்தக்கூடிய வசதி இருந்தால் முடக்கி வைத்து,வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்குப்பின் மீண்டும் வழங்கலாம். இது வங்கியின் முடிவாகும்.

டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஆன்-ைலன் பரிவர்த்தனை அல்லது “கான்டாக்ட்லெஸ்” பரிவர்த்தனையை உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ செய்யாமல் இருந்தால், அந்த கார்டுகளின் ஆன்-லைன் பேமெண்ட் வசதியை நிறுத்திவைக்க வங்கிகளுக்கும், கார்டு வழங்கிய நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அது நடைமுறைக்கு வந்துள்ளது.

புதிய விதியின்படி, கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் “ஆப்ட் இன்” அல்லது “ஆப்ட் அவுட்” சேவையைப் பெறலாம், ஆன்லைனிலும், சர்வதேச பரிவர்த்தனைகளிலும், கான்டாக்ட்லெஸ் பரிவர்த்தனையிலும் குறிப்பிட்ட அளவுவரை செலவு செய்ய அனுமதிக்கும் வசதியைப் பெறலாம்.

மொபைல், இன்டர்நெட் சேவை, ஏடிஎம், வாய்ஸ் சேவை ஆகியவற்றின் மூலம் பரிமாற்றங்கள் குறித்த சேவையை 24 மணிநேரமும் பெறும் வசதியை தேவைப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் அல்லது நிறுத்திக்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கிரெடிட், டெபிட் கார்டுகளில் என்எப்சி வசதி அதாவது கான்டாக்ட் லெஸ் வசதி இருந்தால், அதை பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது அந்த சேவையை நிறுத்திக் கொள்ள முடியும்.

டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் கார்டுகளில் மூலம் பரிவர்த்தனை செய்யக்கூடிய அளவை நிர்ணயம் செய்யும் வசதியைப் பெற முடியும். அவசரச் செலவுக்கு பணம் தேவை, பில் பேமெண்ட், வீட்டுச் செலவு போன்றவற்றுக்கு பணம் தேவைப்படும்போது கார்டுகளில் செலவு செய்யும் அளவை குறைத்துக்கொள்ள முடியும்.

இந்த செலவு செய்யும், பரிவர்த்தனை செய்யும் அளவை நிர்ணயிக்கும் வசதி என்பது கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். ப்ரீபெய்ட் கிஃப்ட் கார்டுகள், மெட்ரோ கார்டுகளுக்கு பொருந்தாது.

செலுத்துதல் மற்றும் தீர்வு முறைச்சட்டம் 2007-ன் கீழ் இந்த புதிய விதிமறைகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.


நன்றி ...

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE