வாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த மிகப்பெரிய கஷ்டம் என்றால் எதைச் சொல்வீர்கள்?
வாழ்க்கையில் கஷ்டமா இருந்த நேரம் என்று சொன்னால்,, நான் திருமணம் ஆகி வேலை வெட்டி இல்லாமல் இருந்தது,, கிட்டதட்ட 4 மாத காலம் அது.. நரக வேதனை…
வேலைக்கு போகும் போது இருந்த மரியாதை வேலை இல்லாத இரண்டு மூன்று நாட்களில் முற்றிலும் போய் விட்டது.. அப்போது என் மனைவி ஒரு நல்ல கம்பெனியில் இருந்தார்.. ஆகையால் வாடகை, மளிகை மற்றும் வீட்டு செலவுக்கு பிரச்சனை இல்லை, எனக்கு அப்போது குழந்தை இல்லை என்பதால் கொஞ்சம் சமாளித்தோம். நாங்கள் தனி குடித்தனம்..எனது சம்பளத்தை எனக்கு என்று கொஞ்சம் வைத்து கொண்டு மீதி மனைவி இடம் கொடுத்து விடுவேன்… அப்பா அம்மா உடுமலையில் இருந்தார்கள்.
சுருக்கமா சொல்ல போனால் ஒரு House Husband போல நான்கு மாதங்கள் நரக வேதனை,, பைக் petrol, நியூஸ் பேப்பர், browsing center, resume print, இவை எல்லாத்துக்கும் மனைவியை எதிர்பார்த்து கொண்டிருப்பேன். Resume printouts எடுத்தே பாதி காசு போய்டும்,, ஆகையால் சில சமயம் மனைவியிடம் office இருந்து பல்க்காக resume printouts எடுத்து வர சொல்வேன்…. வீட்டில் உள்ளவர்களை விட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தொல்லை தாங்க முடிய வில்லை,, வேலைக்கு போகலையா வேலைக்கு போகலையானு ஒரே தொந்தரவு… இதுக்காகவே என் மனைவியை ஆபீஸ் ட்ராப் செய்த பிறகு வீட்டுக்கு வந்து கதவை அடைத்து கொள்ளுவேன்.. 10 - 5 pm கதவை திறக்க மாட்டேன்… பிறகு டூட்டி முடிந்ததை போல மனைவியை ஆபீஸ் ல் pick up,, இப்படியே 4 மாதங்கள் நரக வேதனை,,,, என்னால் இங்கு விவரிக்க முடிய வில்லை… கோவிலுக்கு எப்போதாவது போகும் நான் தினமும் போக ஆரம்பித்தேன்,, தினமும் ராசி பலன் பார்க்க ஆரம்பித்தேன், ராகு காலம் யம கண்டம் எல்லாம் அத்துபடி…இப்படி நிறைய சொல்லலாம்…
வேலைக்கு போகும் போது மனைவி மற்றும் குடும்பத்தோட இருந்த பேச்சு தைரியம் வேலை இல்லாத போது முற்றிலும் கோழை ஆகி விட்டேன்,,, நிறைய பொய் பேச வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள பட்டேன்.. யாரிடமாவது பேசினால் முதல் கேள்வி எங்க வேலை செயிரிங்க,,, இத கேட்டு கேட்டு என்னோட காதுல ரத்தம் தா வரல.. மாமியார் மாமனார் உடன் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வந்தேன்.. மொத்தத்தில் மற்றவர்கள் பார்வையில் ஒரு தீவிரவாதியாக இருந்தேன்..
நான்கு மாதங்கள் பிறகு எனக்கு ஜெயிலில் இருந்து விடுதலை கிடைத்தது,, ஒரு மிக பெரிய கம்பெனியில் சேல்ஸ் மேனேஜர் வேலை கிடைத்தது..
ஆகையால் நண்பர்களே வேலை இல்லாமல் எப்போதும் இருந்து விடாதீர்கள்,, அதே போல சட்டென்று வேலைய விட்டு விடாதீங்க,, வேற வேலை சீக்கிரம் கிடைக்கும் என்ற நினைப்பு முற்றிலும் வேண்டாம்,, கிடைத்த பிறகு முடிவு செய்யுங்கள்.. இல்ல என்றால் ஒரு House Husband, தீவிரவாதி, தண்ட சோறு, இப்படி இருக்க தயார் ஆகுங்கள்…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக