அன்பா - பணமா ?
-----------------------------------
பொருளாதாரமே அனைத்து உறவுகளையும் தீர்மானிக்கிறது என்கிறார்களே, அதெப்படி அன்புதானே அனைத்து உறவுகளையும் தீர்மானிக்கும் .
அப்படி ஒரு அவல நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே மாமேதை காரல் மார்க்ஸ் அப்படிச் சொன்னார்.
நம் அன்புக்குரியவர்கள் இறந்துபோனால், அவர்கள் பயன்படுத்திய தலையணை, பாய் போன்றவற்றை தூக்கி தெருவில் வீசிவிடுகிறோம். ஆனால் 24 மணிநேரமும் அவர்கள் உடலோடு ஒட்டியிருக்கிற மோதிரம், செயின் போன்றவற்றை கழட்டிக் கொள்கிறோமே எதனால் ?
பணமதிப்பை கழித்துவிட்டு, பயன்பாடு என்கிற அடிப்படையில் பார்த்தால் - படுக்க , உட்கார, சாய்ந்து கொள்ள, ஓய்வெடுக்க, உறங்க என்று நமக்கு அனுசரணையாக இருப்பது பாயும் , தலையணையும்தான்.
தங்கத்தால் என்ன பயன்?
ஆனால், தங்கத்திற்கு இருக்கும் பண மதிப்புதானே, அதன் மீதான மதிப்பையும் உயர்த்தி இருக்கிறது.
ஒவ்வொரு திருமண நிகழ்ச்சிகளிலும் இந்த அன்பு அல்லோகலப் படுவதைக் கவனிக்கலாம்.
கல்யாண வீட்டுக்காரர்கள், கல்யாணத்திற்கு வந்திருக்கிற வசதி குறைந்த உறவினரை வரவேற்று பேசிக் கொண்டிருக்கும்போதே, தூரத்தில் வருகிற வசதியானவர் முகம் Close-up பில் தெரிவதும், அருகில் இருக்கிறவரின் முகம் Fade Out ஆகி மறைவதையும் எது தீர்மானிக்கிறது ?
அன்பா ? இல்லை பணமா ? நடைமுறையில் பணம்தான் அதைத் தீர்மானிக்கின்றது. சமுக மாற்றத்தில் பணத்திற்குக் கிடைக்கும் மதிப்பு பல நேரங்களில் நல் மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது வருத்தமான உண்மை.
பணத்தை வைத்து எடை போடும் மனிதர்களுக்கு எங்கே தெரிய போகிறது
உறவுகளின் அருமை ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக