வெள்ளி, 31 ஜனவரி, 2020

ஒரு குழந்தை இதுவரைக் கூறிய மிகவும் அப்பாவியான விஷயம் என்ன?

என் மகனுக்கு மூன்று வயதில் இருந்தே செல்ல பிராணிகள் வளர்க்க வேண்டுமென்று ஆசை. எங்கள் வீட்டில் அதற்கு அனுமதி கிடையாது. எதை பார்த்தாலும் அதை வாங்கி கேட்டு கொண்டு இருந்தான்...

அம்மாவும் மகனும் அப்பாவியான உரையாடல் ...

சில நாட்கள் பூனை...

சில நாட்கள் நாய்…

சில நாட்கள் பறவைகள்…

இப்படியே நாட்கள் சென்றன… சில நாட்களுக்கு முன் (  நான்கு வயது ) ஜுராசிக் பார்க் முதல் பாகம் படம் பார்த்து கொண்டு இருந்தான்…

அன்று இரவு என்னிடம் வந்து ,அம்மா உன்கிட்ட ஒன்னு கேட்பேன், நோ சொல்ல கூடாது சரியா என்றான். சரி பயபுள்ள ஏதோ வில்லங்கமா கேக்க போகுதுனு ஒரு உள்ளுணர்வு… சொல்லுமா என்றேன்.pleaseமா எனக்கு ஒரே ஒரு டைனோசர் குட்டி வாங்கி தா மா ,பத்திரமா பார்த்துக்குவேன் என்றான் . அவனது அப்பாவித்தனமாக முகத்தை பார்த்து என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் நின்று…. பிறகு , அம்மா (அவனை அப்படித்தான் அழைப்பேன் ) அது நிறைய சானி போடுமே , அம்மா-க்கு சுத்தம் பண்ண முடியாதும்மா சொன்னேன் .


அதுக்கு வந்த பதில் , நம்ம சித்தப்பா வீட்ல ( ஆவாரம்பாளையம்  ) கட்டி போட்ருவோம் மா.. அப்போ அவங்களே சுத்தம் பண்ணிருவாங்க உனக்கு தொந்தரவு இருக்காது please வாங்கி தா மா…. (Mind voice எப்படி பேசினாலும் லாக் பன்றானே,) அப்பறம் நிறைய சமாளிச்சேன். ஆனாலும் இந்த topic ஒரு மாசம் நடந்தது . இதுதான் என் வாழ்வில் நடந்த கொஞ்சம் வில்லத்தனம் கலந்த அப்பாவித்தனமான விஷயம் ….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக