மண்ணும் பொன்னும் என்றும் லாபம்!
(வீ .மாதவன் நாணயம் விகடன் டீம்-நன்றி )
‘காலணாவா இருந்தாலும் மண்ணுலயும் பொன்னுலயும் (தங்கம்) போடுற பணம் வீண்போகாது’ என்று நம் பெரியவர்கள் சொல்வதுண்டு. அந்தக் காலத்திலிருந்த சூழல், வாய்ப்புக்கேற்ப பெரியவர்கள் ‘டைவர்சிஃபிகேஷனை’ இப்படிச் சொல்லிவைத்தார்கள். ஆனால், இன்றைக்கு முதலீட்டு வாய்ப்புகள் மண்ணையும் தங்கத்தையும் மீறி ஃபிக்ஸட் டெபாசிட், பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் எனப் பலவாகப் பெருகிவிட்டன; நமக்கு ஆச்சர்யமூட்டும் வகையில் பல பலன்களையும் வழங்குகின்றன.
முதலீட்டில் இரு முக்கிய அம்சங்கள்!
முதலீட்டைப் பொறுத்தவரை, இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஒன்று, குறிப்பிட்ட காலஅவகாசத்தில் முதலீட்டுத் தொகை பணவீக்கத்தைவிட உயர்ந்திருக்க வேண்டும். மற்றொன்று, எளிதில் பணமாக்கிக் கொள்ளும்படி நம் முதலீடு இருக்க வேண்டும். நிலத்தில் செய்யும் முதலீடு ஓரளவுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தருவதாக இருக்கிறது. ஆனாலும், நிலத்தை அவ்வளவு எளிதாகப் பணமாக்க முடிவதில்லை. மேலும், பட்டா, மனை அங்கீகாரம், பாதுகாத்தல் எனச் சில சிக்கல்கள் இருக்கின்றன.
மண்ணும் பொன்னும் என்றும் லாபம்!
தங்கத்தை எளிதில் பணமாக்க முடியும். ஆனால், அதன் முதலீட்டு வருமானம் சொற்பமாகவே இருந்துவந்திருக்கிறது. தவிர, தங்கத்தைப் பாதுகாப்பதும், அதன் தரத்தை ஆராய்ந்து வாங்குவதும் அதிலிருக்கும் பாதகமான அம்சங்கள்.
அதற்காக மண்ணிலும் பொன்னிலும் பணத்தை முதலீடு செய்யவே கூடாது என்று சொல்ல வரவில்லை. வழக்கம்போல் இல்லாமல் கொஞ்சம் மாற்றி யோசித்தால், இந்த இரண்டிலும் அருமையான வருமான வாய்ப்பு இருப்பதை நாம் அறிய முடியும்.
எப்போதும் முதலீட்டில் பணவீக்கத்தைவிட வருமானம் அதிகமாகக் கிடைக்க வேண்டும்!
ரெய்ட்ஸ் (REITS) - நவீன ரியல் எஸ்டேட் முதலீடு
ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் (Real Estate Investment Trust - REITS) என்பதன் சுருக்கம்தான் `ரெய்ட்ஸ்.’ இது ஒரு நவீன ரியல் எஸ்டேட் முதலீடு. இந்தத் முதலீட்டுத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.85,000 முதல் ரூ.1,00,000-க்குள் 200 சதுரடிக்கு முதலீடு செய்ய முடியும். இதில், குறைந்தபட்சமாக 200 சதுரடி வாங்க வேண்டும். வாங்கும் நிலத்தின் மதிப்பு உயரும்; ஆண்டுக்கு 5-7% வாடகையும் ஈட்டித் தரும்; அனைத்துக்கும் மேலாக நினைத்த நேரத்தில் விற்றுப் பணமாக்கிக் கொள்ளவும் முடியும்.
ரெய்ட்ஸ் எப்படிச் செயல்படுகிறது?
ரியல் எஸ்டேட்துறையில் பலவிதமான (வணிக வளாகங்கள், அலுவலக வளாகங்கள், குடோன்கள் போன்ற வருவாய் ஈட்டித்தரும்) சொத்துகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் இந்த வகைச் சொத்துகளை ஒரு டிரஸ்டாக அமைத்து, அதைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுகின்றன. இந்தச் சொத்துகளின் விலை மாறிக்கொண்டே இருக்கும். இவற்றிலிருந்து வரும் வாடகை வருமானத்தில் 90 சதவிகிதத்தை முதலீட்டாளர்களுக்குக் கட்டாயம் டிவிடெண்டாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பது செபியின் நிபந்தனை. தனிநபர்கள் குறைந்தபட்சமாக 200 பங்குகள் வாங்க வேண்டும் (ஒரு பங்கு என்பது ஒரு சதுரடி எனத் தோராயமாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம்).
உதாரணமாக, எம்பஸி ரெய்ட்ஸ் (Embassy REITS) ரியல் எஸ்டேட் டிரஸ்ட் தன் பங்குகளை சென்ற ஆண்டு, மார்ச் மாதம் ஒரு பங்கின் விலை ரூ.300 என்ற அளவில் வெளியிட்டது. பட்டியலிடப்பட்டு சுமார் ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையில், தற்போது அந்தப் பங்கின் விலை ரூ.422 என்ற அளவில் வர்த்தகமாகிறது.
இது வெளியீட்டு விலையைவிட 40% அதிகம். மேலும், கடந்த ஆறு மாதங்களில் இதுவரை ரூ.11.40 டிவிடெண்ட் அறிவிக்கப் பட்டுள்ளது. எதிர்வரும் ஆறு மாதகால டிவிடெண்டைக் கணக்கில்கொண்டால் சுமார் 7.5-8% (11.4x2=22.8 - 100x22.8/300=7.6%) வரை டிவிடெண்டாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால், இந்தச் சொத்தைப் பங்குச் சந்தையில் வாங்கும்போது குறைந்தபட்சமாக 200 பங்குகள் வாங்க வேண்டும். அதேபோல 200 யூனிட்களாக விற்றுக்கொள்ளலாம். ரியல் எஸ்டேட் முதலீட்டில் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும்; அதோடு பங்குச் சந்தையின் வெளிப்படைத் தன்மையுடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் பகுதியாகக்கூட விற்றுப் பணமாக்கிக்கொள்ளலாம். பட்டா பற்றிய கவலை இல்லை; வாடகைக்கேற்ற இடமா, நிலம் ஆக்கிரமிக்கப்படுமோ என்ற பயம் தேவையில்லை.
தற்போது, இந்தியாவில் எம்பஸி ரியல் எஸ்டேட் டிரஸ்ட் மட்டுமே பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஆனாலும் கோத்ரெஜ், ரஹேஜா, டி.எல்.எஃப் போன்ற பெரிய குழுமங்களும் தங்கள் ரெய்ட்ஸ் திட்டங்களைப் பங்குச் சந்தையில் பட்டியலிட உத்தேசித்துள்ளன.
கோல்டு பாண்ட் ஃபண்ட் என்பது அரசாங்கமே பொறுப்பேற்று நடத்தும் திட்டம் என்பதால் நம்பகத்தன்மையும், தரமும், வட்டியும் நிச்சயம்!
ஜொலிக்கும் தங்கம்!
தங்க நகைகள் நமக்கு அழகு தரும். அவசரத்துக்கு அடகு வைத்து அல்லது விற்று நிலைமையைச் சமாளிக்கலாம். அதையும் தாண்டி அதிலிருந்து வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. ஆசைக்குக் கொஞ்சம் தங்க நகைகளை வாங்கி வைத்துக்கொள்வதில் தவறே இல்லை. ஆனால், கைக்குக் கிடைக்கும் பணத்தையெல்லாம் நகை வாங்கப் பயன்படுத்துவது தவறு.
gold
தங்க நகையாக வாங்காமல், சவரன் கோல்டு பாண்டு (Sovereign Gold Bonds) திட்டத்தில் தங்கத்தை பாண்டாக (டீமேட் கணக்கில் பங்குகள் இருப்பதுபோல) வாங்கி முதலீடாக வைத்துக்கொண்டால், பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் நாம் வாங்கும் தங்கத்துக்கு நமது அரசே 2.5% வட்டி அளிக்கிறது. எட்டு வருடங்கள் முதிர்வுகொண்ட இந்த பாண்டுகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகிவருகின்றன. எட்டு வருட முடிவில், அரசு அன்றைய தேதியின் தங்க விலையைக் கொடுத்து, உங்களிடமிருந்து பாண்டுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும். வட்டி வருமானத்தை வரிப் பிடித்தம் செய்யாமல் வழங்கும்.
நம்பகத் தன்மை, தரம், வட்டி!
அரசே பொறுப்பேற்று நடத்தும் திட்டம் இது என்பதால், நம்பகத்தன்மையும், தரமும், வட்டியும் நிச்சயம் உண்டு. மேலும், இந்த பாண்டுகள் 24 கேரட் தங்கத்தின் தரத்துக்கு ஒப்பானது. ஒரு யூனிட்கூட வாங்கலாம் (ஒரு யூனிட் என்பது சுமார் ஒரு கிராம்).
உதாரணமாக, செப்டம்பர் 2016 சீரிஸ் பாண்டை ஒருவர் ரூ.3,150 கொடுத்து வாங்கியிருந்தால், தற்போது அது ரூ.3,874-ஆக உயர்ந்திருக்கும். தவிர, 2.75% வட்டியும் கிடைக்கும். (இந்த வட்டி விகிதம் எதிர்காலத்தில் மாற வாய்ப்புண்டு.)
இது பங்குச் சந்தையில் வர்த்தகமாவதால், தங்கம் விலை குறையும்போதெல்லாம், வாங்கினால் இன்னும் அதிக லாபம் பார்க்கலாம். உதாரணமாக, ரூ.3,150 முகமதிப்பு கொண்ட பாண்டு சீரிஸ் ரூ.2,700 வரை கீழே சென்றது. இந்த இறக்கத்தைப் பயன்படுத்தி வாங்கியிருந்தால், ரூ.2,700 பாண்டுக்கும் ரூ.3,150 முகமதிப்பின் அடிப்படையிலேயே வட்டி கிடைக்கும். தவிர, செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை. திருடு போய்விடுமோ என்ற பயம் தேவையே இல்லை.
முதலீட்டு நோக்கில் மண்ணிலும் பொன்னிலும் பணத்தைப் போட நினைப்பவர்கள் இந்த இரு திட்டங்களை தாராளமாகப் பரிசீலிக்கலாம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக