திங்கள், 1 நவம்பர், 2021

 ஏன்? எதற்கு? 

தொழில்/ வியாபாரம்/ பணம்/ சம்பாதித்தல். 

கல்வி மிக அவசியம். அதை விட பொருளாதார முன்னேற்றம் மட்டுமே பல விஷயங்களை நமக்கு தரும்.

ஒரு பெண் பொருளாதார தன்னிறைவு அடையாமல் பெண் முன்னேற்றம் பேச முடியாது.

ஒரு வீடும், சமூகம் ஏன் நாடும் பொருளாதார முன்னேற்றத்தில் மேல் வருவது மிக மிக அவசியம்.

அதும் கோவிட்டுக்கு பிறகான இந்திய பொருளாதாரம் அத்தனை சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

இதற்கு ஷேர் மார்க்கெட் மட்டும் அளவுக்கோல் இல்லை.

ஒட்டு மொத்த சமூகமும் மேல் வர வேண்டும்.

அதற்கு கூடி உழைப்பது அவசியம்.

இணையத்தில் வியாபாரம் செய்வது தவறா? அதை நக்கல்  செய்கிறார்கள் என.   .

மார்க்கே வியாபார நோக்கத்தில்தான் ஃபேஸ்புக் ஆரம்பித்துள்ளார். இங்கு எதுவும் இலவசமில்லை..எல்லாவற்றுக்கும் விலை உண்டு. அதனால் நமக்கு தெரிந்த அளவில் நம் ப்ராடக்ட்ஸ் பத்தி பேச வேண்டும். நாமே நம் சர்வீஸ்/ ப்ராடக்டுக்கு மதிப்பு தந்து இடம் தராவிடில் யார் தருவார்?

இக்காலத்தில் செல்ஃ பிராண்டிங், இமெஜ் பில்டிங் எல்லாம் அளவோடு அவசியம். அது நம் வியாபரத்துக்கு என்றுமே உதவும். இல்லாவிடில் தனி மனிதராய் சமூகத்திற்கும் உதவும். 

நல்லது செய்தாலும் அதை இங்கே எழுதி விளம்பரப்படுத்தினால் மட்டுமே தொடர்ந்து நெட்வொர்க்கிங் மூலம் நல்லதுகளை தொடர முடியும்.

அதே சமயம் உங்கள் பொது பக்கத்தை வெறும் வியாபாரம் மட்டும் செய்ய பயன்படுத்தினால் யாரும் படிக்க மாட்டார்கள்.

நம் பக்கம்  எல்லாருக்குமானதாக  இருக்கும் பொழுது நம் செய்திகளும் எழுதும் பொழுதுதான் அதற்கு வீயூஸ் இருக்கும்.

அதிகமாய் பகிர வேண்டுமெனில் முழு வியாபார பக்கங்கள் தொடங்கி  அதை அவ்வப்பொழுது பகிரலாம்.

நாம் வியாபாரப்படுத்தும் ஒரு விஷயம்  சமூகத்தை மாற்றக்கூடும் எனில் அதிகம் பகிரலாம்.

பணம் சம்பாதிப்பது தவறு, பணக்காரனாக ஆசைப்படுவது பேராசை, வியாபாரம் ,விளம்பரம் சரியில்லை என யாராவது சொன்னால் ..

கபாலி வசனம்தான்.. அதும் கால் மேல் கால் போட்டு..

சொல்லனும் .

" நான் அப்படிதாண்டா சம்பாதிப்பேன்"

ஏன் எனில் டேக்ஸ் கட்டுவதுதான் மிகப்பெரும் தேச சேவை.

அதை துணிவாக செய்வோம்.

நாமே சம்பாதித்து.

#ஏன்_எதற்கு......


நன்றி ...

பவித்ரா வேலுமணி ...

Bavithra Velumani 

E-Commerce Buisness Entrepreneur 

Karapadi, Pollachi

 95002 69348.....


 இன்று கோவையில் வீடு கட்டுவதற்கு இடம் விலை எப்படி உள்ளது ? ..

நிலம் வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன ?


என் பதில் : 


முதலில் வாங்கும் நிலம் பட்டாவா அல்லது புறம்போக்கா என தெளிவாக தெரிந்து கொள்ளவும்.


தற்போது அனைத்து பட்டா நிலங்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.எனவே நீங்களே கணினி மூலம் சரிபார்த்து கொள்ளவும்.


நிலம் எந்த வகைப்பாட்டில் உள்ளது என்பதை பட்டாவில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது நன்செய்,புன்செய் அல்லது மானாவாரி என சுருக்கமாக குறிப்பிடபட்டிருக்கும்.


அதன்பின் அளவீடுகள் சரியாக உள்ளதா என புல வறைபடத்துடன் சரி பார்க்கவும்.


மேற்படி நிலம் நீர்பிடிப்பு பகுதியாக இருக்கக்கூடாது.


நில உச்ச வரம்பில் கவரப்பட்டு இருக்க கூடாது.


நில எடுப்பு நடவடிக்கை ஏதும் நிலுவையில் உள்ளதா.


அதன்பின் விற்பவருக்கு உரிமை உள்ளதா,சிக்கல் ஏதும் உள்ளதா என ஒரு வக்கீலிடம் கேட்டு தெளிவு பெறலாம்.


தாய் பத்திரத்தில் இருந்து தொடர்பு உள்ளதா என பார்க்க வேண்டும்.


மனை வாங்கும் போது அது உரிய அங்கிகாரம் பெறப்பட்டுள்ளதா என பார்க்கவும்.


நிலம் வாங்கும் முன் நன்கு விசாரித்து வாங்கவும்.


நன்றி ...

சிவக்குமார்  V .K 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com


 கேள்வி : பேங்க் சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் எத்தனை பணத்திற்கு மேல் இருந்தால் வரி கட்ட வேண்டும்?


என் பதில் :


வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு அதிகபட்ச எல்லை என ஒன்று கிடையாது.


ஆனால் அதில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தொகைகளை கணக்கில் போட்டால் அதற்கு தக்க விளக்கம் கோர வருமான வரித்துறை கேள்வி கேட்க முடியும்.

மற்றப்படி, சேமிப்பு கணக்குகள் மூலமாக வரும் வட்டிப் பணத்திற்கு பத்தாயிரம் வரை விலக்கு இருந்தது. ஆனால் இப்போது எவரெல்லாம் வைப்புக் கணக்குகள் வட்டிக்கு ஆண்டிற்கு ஐம்பதாயிரம் வரை வரிச் சலுகை கேட்பார்களோ அவர்கள் சேமிப்பு வங்கி வட்டிக்கு வரி உண்டு. இரண்டு இடங்களில் சலுகை கோர முடியாது.


நன்றி ...

சிவக்குமார்  VK 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com🥰📚📚✍️✍️🌈🌈🏡🏡🏡

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

 கேள்வி : உங்கள் மனதை கவர்ந்த ஒன்றை கூறமுடியுமா?


என் பதில் :


நிறைய பேர் இந்த படத்தை கடந்து வந்திருப்பீர்கள் என்று நெனைக்கிறேன்…

இந்த புகை படத்துல உங்க கண்ணுக்கு என்ன தெரிகிறது..?


ஆனால் எனக்கு அந்த மிதிவண்டியை ஓட்டும் ஆண்மகனின் வியர்வை படிந்த சட்டை தான் தெரிகிறது..


இன்று நடைமுறை வாழ்க்கையில் எவ்வளவு பேர் மோட்டார் சைக்கிள், கார்,ஏரோபிளேன் ,நகை, வீடு, அமெரிக்கா,ஐரோப்பா குடியுரிமை வேணும் என்று கேட்கும் பலரை நான் பார்த்து இருக்கிறேன், காதால் கேட்டு இருக்கேன்.அந்த பெண்களை விட இவள் உயர்ந்தவளா..?உண்மையானவளா..?இல்லையா?என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை.ஆனால் ஒரு ஒரு விடயம் மட்டும் சொல்கிறேன்.. அம்பானி,பில் கேட்ஸ்க்கு மகளாய் பிறந்தவளை விட இவள் பாக்கியசாலி..


இயந்திரம் இழுத்து செல்லுகையில் இருக்கும் காதல் உயிரோட்டத்தை விட,இவர்கள் செல்லும் மிதிவண்டியில்,போகும் காதல் பயணம் உயிரோட்டமானது..


அவன் வேர்த்து இருக்கிறான், அவளுக்கு வியர்க்காத படி.


அவன் உடலில் இருந்து வேர்வை நாற்றம் வர போகிறது…ஆனால் அவள் உடலில் வாசனை குறையவில்லை.


அவனுடைய வேர்வை நாற்றத்தை பார்த்து முகம் சுழிக்கமாட்டாள், ஏனென்றால் அவளுக்காக அவன் பட்டு இருக்கும் பாட்டை பார்த்து வந்த வேர்வை அவளுக்கு நறுமணம் தான்…


கடைசியா அவன் அவளை இறக்கி விடும் தருவாயில் அவள் அவனுக்கு கொடுக்க போகும் முத்தம் இந்த உலகத்தில் தன்னுடைய காதலிக்காக தாஜ்மஹால் கட்டினானே அந்த ஷாஜகான், அவனை காட்டிலும் இவன் வாங்க போகும் அந்த முத்தம் 1000 தாஜ்மஹாலை விட சிறந்தது..


காதலி கிடைப்பது வரமல்ல ஆனாலும் உன் ஏழ்மையிலும் இன்பமாய் வாழத் தெரிந்தவளே காதலியாக கிடைப்பது வரம்..


நன்றி ...


 தளி எத்தலப்பர் புகழ் ..அவரின் ஆசிர்வாதங்களோடு ...


கம்பளத்தார் இனத்தின் கலாச்சார இயக்கமாக செயல்பட்டு வந்த தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் புதிய பரிணாமம் பெறுகிறது. காலம் எமக்களித்த கொடை புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்க வைத்திருக்கிறது. 

பொதுச்செயலாளராக திருப்பூர் தொழிலதிபர் அண்ணன் திரு.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் ..மற்றும் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தலைவர்களுக்கும் 


உடுமலைப்பேட்டை கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் சார்பாக 

வாழ்த்துக்கள் ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

இன்று உடுமலையில் அருமையான சந்திப்பு 


இன்று அருமை மாப்பிள்ளை கேப்டன் நித்தியுடன் ...மதிப்புமிக்க சொந்தம் பொறியாளர் பெருமாள்சாமி (Squad Wing -TNEB ) 20 நிமிட சந்திப்பு ..கலந்துரையாடலில் அருமையான தகவல்களை பரிமாறிக்கொண்டோம் ..

நித்தி மாப்பிள்ளையின்  குடும்ப உறவில் புதிய குழந்தைச்செல்வம் ..அதற்கு தித்திக்கும் இனிய சுவைமிகுந்த காபியுடன் உபசரித்து சந்தித்து உரையாடியது இன்றய ஞாயிறு மகிழ்ச்சியுடன் அமைந்தது ..


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681..

புதன், 27 அக்டோபர், 2021

 “ஜவுளி வாங்குவது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு..2🌹🌹  

(நேற்றையத் தொடர்ச்சியாக இன்று.....வாசிக்க)

“ பெண்களுக்கு கைரேகை பார்க்கத் தெரியாவிட்டாலும், ஆண்களின் முகரேகை வாசிக்கத்

தெரியும்.” என்ன தான் கணவனை நம்பி ஒரு களத்தில்

இறங்குமுன் தன்கையிலும் தனியே காசுபணம் வைத்துக் கொண்டு தான்  துணிவாக இறங்குவார்கள்.

ஆண்களும் தன் பர்ஸுக்கு வேட்டு வச்சிருவாங்களோ.?

என நினைத்தவாறு தான் முகத்தை ‘ஐயோ பாவமாக’

வைத்திருப்பார்கள். ஒரு பிரசவ வார்டில் நடப்பதைப்

போல மனசு திக் திக் என இருக்கும் என்பதை பலர்

நகைச்சுவையாகக் கூறுவதைக் கேட்டு இருக்கிறேன்.

“ இம்புட்டு நேரமாவா  புடவையை செலக்ட் பண்ணுவாங்க...காலையில அவசரத்தில கம்மியா இட்லி சாப்பிட்டது  இப்ப வயிறு வேற பசிக்கு..இவங்களுக்கெல்லாம் பசிக்கவே பசிக்காதா..? என தன்னுடன் வந்தவர்களுடன் ஆதங்கப்பட்டுக் கொள்ளும் ஆண்கள் ஒரு வகை .(இதுக்காகத்தான் இப்ப காஃபி,கூல்டிரிங்ஸ் கொடுக்க ஆரம்பிச்சிருப்பாங்களோ..?)ஆனாலும் நல்லதாகப் புடவை அமையும்போது  மனதளவில்

பெண்கள் காசைப் பார்ப்பதில்லை.மனநிறைவையே

முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மருமகளுக்கு

முகூர்த்தப் புடவை எடுப்பார்கள். சிலர்’ஒருநாள்

கூத்துக்கு மீசை எதுக்கு..?’ என்பது மாதிரி  பேசுவார்கள். ஆனால் அந்த ஒருநாளின் பிரதிபலிப்பு

எந்தக் கல்யாணத்திற்குச் சென்றாலும்  நம் மருமகள்

உடுத்தப்போகும் புடவை  மனசைவிட்டு நீங்காது

இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் பலர்.முதலில்

எந்த வீட்டுக் கல்யாணம் என்றாலும், அவரவர்களின்

முகூர்த்தச் சேலையை கட்டுவது வழக்கமாக இருந்தது.

இப்பல்லாம் ‘செக்கு கனம் கனக்கே.. இதையா ஒருநாள் முழுவதும் சுமந்துகிட்டு நடக்கிறது..? என

அப்போதைய தலைமுறையினரே ஓரங்கட்டி விட்டனர்.

இப்ப விதவிதமாக நேரத்திற்கு ஒரு மாடலாக மணப்பெண் சிங்காரிக்கப்படுகிறாள்.

வீட்டுப்பெண்கள் இப்படி என்றால் வேலைக்குச் செல்லும் பெண்கள் வேறுவிதமாக இருப்பர்.அவர்கள்

கோ-ஆப்டெக்ஸ்,காதி பவன் போன்ற கடைகளில்

ஜவுளி எடுப்பார்கள்.தங்களின் நெருக்கமான தோழிகளுடன் குறைந்தது சுமார் ஐந்துபேர் ஒரு

கூட்டமாகச் செல்வதுண்டு.அங்கமர்ந்து எதைச்

செலக்ட் பண்றது என எதையோ எடுத்துக் கையில்

வைத்து  யோசனைசெய்து கொண்டு இருப்பார்கள்.

“ ஏய்..! என்னப்பா இது..? இந்த க்ரீன் கலர் ஏற்கனவே

உங்கிட்ட இருக்கே.. வேற கலர் எடுப்பா..?எனச் சொல்லும்போது ,பெண்களின் ஆழ்மனது புரியும்.

‘நாம் தினம் பீரோவில் சேலை பார்க்கிறோம்..நமக்குக்

கூட ஞாபகம் வரலே..இவங்க எப்படி ஞாபகம் வச்சிருக்காங்க பாரேன் ‘என வியந்து போவதுண்டு.

இந்தக் கலர்ல அந்த டிசைன் வருமா..? என்று சிலர்

புதுசாக செலக்‌ஷன் அம்பு விடுவார்கள்.அது ஆர்டர்

கொடுத்தால் இரண்டு,மூணு வாரத்தில வரும் என

கஸ்டமரைச் சமாளிப்பார்கள்.அதுக்காகவே நடையாய்

நடந்து  எப்படியும் வாங்கி விடுவார்கள் சிலர்.

‘இருக்கிறதுல ஒண்ணை எடேன்..ஏன் இப்படி அலையுற..? எனச் சிலர்  பட்னு கேட்ருவாங்க.

அப்ப  அவங்க வாய்க்குள்ள நாக்கு ‘கதகளி’ ஆடும்.

‘நம்ம என்ன சும்மாவா தூக்கிட்டு வரப்போறோம்..

நாம கஷ்டப்பட்டு உழைச்ச காசு..நாலு கடை ஏறி

இறங்கி நல்லதாகப் பார்த்து வாங்கணும்ல ‘ என்று

சொல்லும்போது அங்கே நியாயம் இருப்பது புரியும்.

ஆனால் எல்லாம் எடுத்துப்போட்டு,கலைச்சு வச்சிட்டு

அடுத்த கடைக்குச் செல்லும் நிலை எளிது. அது ஒரு சிலருக்குச்  ஜாலியாக இருந்தாலும்,அதற்குப் பின்புறம்

அதை அழகாக மடித்து அட்டியில் ஏத்தும்  பணியாளர்களின் நிலைமையையும் யோசிக்கணும்ல..!

ஒரு புடவை ஐந்தாறு பேர்கள் கலந்தாலோசித்து

எடுத்துக் கட்டும்போது,அதன் பின்புற நிகழ்வுகள்

மனத்திரையில் ஓடத்தானே செய்கிறது..! முன்பு

பேத்திகளுக்குப் பாவாடையாக  பாட்டிகள் தன் பட்டுச்சேலைகளைத் தருவதுண்டு.இப்ப யாரு பாவாடை

கட்றாங்க..? அதிலும் ரெடிமேடு வந்தவுடன் விதவிதமாக  டிசைனில் வாங்கி  தரைதூர்க்க உபயோகப்படுத்தமுடிகிறது.

அப்போ கிராமங்களில் கைமிஷின் (தையல் இயந்திரம்)ஒருத்தர் தோளில்  கைவைத்தநிலையில்

சுமந்து செல்வார். பழைய பட்டுப்புடவையோ,புது

சீட்டித் துணியோ வைத்து இருப்பவர்கள் கைதட்டி

அழைப்பார்கள். “பாவாடை தைக்கணும்..நல்லா சுருக்கு வச்சு தைக்கணும்..டக்கு பிடிச்சு தைக்கணும்..” என்ற குரலை மனதில் உள்வாங்கி

தைக்க  முன்அறையில் அமர்வார்.அவர் வீட்டில் வந்தமர்ந்து ,முதலில் அளவெடுத்து ,பின் துணிகளை கத்திரிக்கோலால் வெட்டி, சுருக்குகள் வைத்து பின்

இரண்டு பகுதிகளையும் இணைத்து,இறுதியில்

பாவாடை நாடாவை அடிக்கும்போது ஒரு பாவாடை

கண்முன் உருவாகுவதை பார்த்த சந்தோஷம்

எல்லோர் முகத்திலும் எழும்.திறமைசாலியான ஒவ்வொரு கலைஞனும் பிரம்மாவிற்கு இணையாக நினைக்க வைக்கும். இடையே  வெயிலுக்காகஅவருக்கு

மோர்,தண்ணீர் எனக் கொடுத்து உபசரிப்பு நடத்துவார்கள்.அப்படியே பக்கத்து வீட்டுக்காரர்கள்

வந்து பார்த்து ‘அங்க முடிச்சுட்டு இங்க வாப்பா’ எனச்

சொல்லி  அவர் முகத்தில் சந்தோஷரேகை தோன்றச்

செய்வதுண்டு.கடைசியில் ரூபாயைக் கண்ணில் ஒற்றி,

தையல்காரர்  பையில் எடுத்துச் செல்வதுண்டு.

அதற்கப்புறம் காலால் மிதித்து தைக்கும் இயந்திரம்

வந்தது.அதற்கு முன்னால்  கிழிந்து போனவைகளை

கையில் ஊசியால் தைத்துக் கொண்டிருந்தவர்கள்

மிஷினுக்கு மாறிட்டாங்கன்னே சொல்லலாம்.

‘வீட்டுவீட்டுக்கு ஒரு தையல் மிஷின் ‘மூடி போட்டு

வைத்திருப்பார்கள். ஆண்களுக்கு இணையாகத்

தைப்பதற்கு பெண்களும் வெளிவந்தார்கள்.

ப்ளவுஸ் சரியாகத் தைத்துவிட்டால் போதும்.

எல்லோரும் அளவுப்ளவுஸ் சுற்றி எடுத்து வந்துவிடுவார்கள். பெண்களும் சரியாக ப்ளவுஸ்

அமையும் வரை டெய்லர்களை விடுவது இல்லை.

தீபாவளியன்று கிடைக்கும்வரை கஜினிமுகமதாக

படையெடுத்து  நடந்து ஜெயித்தவர்கள் உண்டு. 

இப்ப ஆன்லைன் கலாச்சாரம் வந்தாச்சு.அவர்களே

தோளில் வைத்துக் காட்டுகிறார்கள்.முந்தானை,

ப்ளவுஸ் துணியெல்லாம் விரித்துக் காட்டுகிறார்கள்.

வீட்டில் இருந்தே ‘செலக்ட்’ பண்ணி ஆர்டர்

கொடுக்கிறாங்க.ஆனால் தொட்டுப் பார்த்து உணரும்

நிலை தான் இல்லை.சிங்கிளாகவே  தேர்வு

செய்வதில் அந்த பழைய ‘த்ரில்’ இல்லை என அறிகிறோம்..!

இந்த தீபாவளியில் இதை வாசிக்கும் அனைவர்க்கும்

நல்ல புத்தாடைகள் கிடைக்கட்டும்.வாழ்த்துகள்.

இப்பதிவிற்காக புகைப்படம் அனுப்பிய முகநூல்

நட்பு திரு.கோ.ரா. ரவி பட்டு நெசவாளர் அவர்களுக்கு

என் அன்பின் நன்றி. தொ.பேசி.எண் 94448 45044

93821 16111🥰📚📚✍️✍️✍️🌈🌈

“ ஜவுளி வாங்குவது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு..”🌹
தீபாவளிக்கு ஜவுளி வாங்குவது என்றால் இரண்டு
மாதத்திற்கு முன்னாலே முடிவெடுக்கும் விசயம்.
இப்ப உள்ளது போல ‘ரெடிமேடு’ எல்லாம் வராத
காலநிலை அது. அப்போ ஊரில் ஒன்றிரண்டு
டெய்லர்களே உண்டு.அவர்கள் குடும்ப டாக்டர் போலத் தான் அப்போ இருந்தார்கள்.டாக்டருக்கு நோயாளிக்குத் தக்க மருந்து கொடுக்கத் தெரிந்திருப்பது போல ,இவருக்கு நம் அளவு,ஸ்டைல்,
எல்லாம் தெரிந்திருக்கும்.அந்த தீபாவளி மாதம் புது
சினிமாவுக்கு இணையான மவுசு இவர்களுக்கு உண்டு.
‘இன்னிக்கு சாயங்காலம் தாரேன்..’என்பதே எல்லோருக்கும் பாரபட்சமற்ற சொல்லாக இருக்கும்.
வருடத்திற்கு ஒரு முறை எடுப்பதே அப்போதெல்லாம்
வாடிக்கை.சில சமயம் சைக்கிளில் ஜவுளி மூட்டை
சுமந்து வரும் சிலரிடம் எடுப்பவர்கள் உண்டு.
அதற்கெனவே ஊரில் உள்ள பிரபலமான பெரிய வீடு
ஒன்றில் தான் கடை விரிப்பார். “ உங்க முகராசி அப்படி ..” என்று அடிக்கடிஅவர் ஆச்சியிடம் சொல்லிச் சொல்லியே ஆச்சி அதற்கு தகுந்த அந்தஸ்து
பெற்றிருந்தார்.ஆச்சி குறைந்தது இரண்டு சேலைகளாவது எடுப்பார். ஆச்சியும் பதிலுக்கு ‘அவர் கைராசியான கை ‘ என்று சிலாகித்துச் சொல்வதால் எல்லோரும் எடுக்க முன் வருவார்கள். ஆச்சியின் பேச்சு எடுக்காதவரைக் கூட எடுக்க வைத்து விடும்.
அந்த வீட்டுக்கார ஆச்சி தெருவில் பக்கத்து வீடுகளுக்கு ‘ ஜவுளி மூட்டைக்காரர் வந்திருக்கிறார்’எனச் சொல்லி விட்டு வரும்படி
குட்டிப் பசங்களைத் தூதுவராக்கி விடுவார்.உடனே
ஐந்து நிமிடங்களில் வீட்டில் போட்டது போட்டபடி
இருக்க ,உடனே ஆஜராகி விடுவார்கள்.பெரியவங்க
கூப்பிட்டால் அவ்வளவு மரியாதை அப்போது..!
எல்லோரும் வருவதற்கு முன் இரண்டு பாய்கள்
விரிக்கப்பட்டு,அதில் ஒரு வெள்ளைத்துணி விரித்திருக்கும். எல்லோரும் அதைச் சுற்றி வட்டமாக
அமர்வார்கள். அவர்களுக்கு வாயால் உத்தரவு
பிறப்பித்து ஆச்சி இடம் இல்லாதவர்க்கு தகுந்த இடத்தை அமைத்து தந்து விடுவார்.
அவர் வெள்ளைநிற மூட்டையை சைக்கிளில் இருந்து
எடுத்து தோளுக்கு மாற்றி தரையில் வந்து இறக்குவார்.
அவர் நடுநாயகமாக அமர்ந்து கொண்டு ,முதலில் அதன்
நான்கான மடிப்பில் உள்ள முடிச்சுகளை அவிழ்த்து,
தன் கைகளால் தொட்டுக் கும்பிட்டபடி முதல் சேலையை எடுத்து பூப்போல வைப்பார்.எல்லோர்
கண்களும் அதில் லயித்து இருக்கும். அப்புறம் அடுத்தது
என்ன..? என்றவாறு நெற்றியில் ஒரு சுருக்கம் விழ
பார்ப்பார்கள்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக
இருக்கும். அவர் அனைத்தையும் எடுத்துப் போடுவதற்குள் சிலர் கைகளால் ஸ்பரிசித்துப் பார்ப்பார்கள்.சிலர் தனக்கு அந்தக் கலர் பிடித்துள்ளது
என யாருக்கும் தராமல் கைக்குள் பாதுகாப்பாக
வைத்துக் கொள்வர்.கீழே போட்டால் திரும்பக்
கிடைக்காது என்ற உளவியல் தெரிந்தவர்கள் அவர்கள்.
“ இன்னும் இருக்கிற இரண்டையும் எடுத்துப் போடு...”
என ஆச்சி தான் அவரை உரிமையோடு சொல்லி
விரித்து காட்டச் சொல்வார்.எல்லாத்தையும் நல்லாப்
பாருங்க.. என கண்களைச் சுழலவிட்டு ,கண்சிமிட்டி
ஒரு ‘சிக்னல்’ தருவார். அவர் கலைச்சுப்போட்ட பிறகு
நல்லா இருக்கதை எடுங்க..மடிப்பு கலையாமயா
பார்ப்பே..? என்ற சொன்ன பிறகு தான் ‘ இப்படியும்
பார்க்கணுமோ..?’ என்று புதுசாக வாங்குபவர்களுக்குத்
தெரியும். அப்புறம் ஆச்சியிடம் கீழே விழுந்து
கும்பிட்டு ,ஆசி பெறுவது தனிக்கதை.
‘என்ன உனக்கு பிடிச்சிருக்கா ?இல்லையா..?
பணம் இல்லைன்னு மருகுதையா..? அதெல்லாம்
நான் தாரேன்..அப்புறம் கொடு எனச் சொல்லும்போது
அந்தக் கண்களில் தோன்றும் அதிக பிரகாசத்திற்கு
ஆச்சி மகிழ்ந்து (மகுண்டு) போவார். அப்போதெல்லாம்
பெண்கள் வேலைக்குச் செல்லாத காலம். ஆச்சி
எடுக்கச் சொன்னதால் எடுத்தோம் என்றால் வீட்டில்
அப்பீலே இல்லை என்பதால் தைரியமாக எடுப்பார்கள்.
அப்படி ஒண்ணும்,மண்ணுமாகப் பழகிய காலம்..!
அந்தச் சேலையின் வாசத்தையும்,மடமடப்பையும்
உணர்கையில்,ஆச்சியின் பேச்சு வார்த்தை
நடைபெறும்.எப்படியோ சொன்ன விலையில் சற்றே
குறைத்துக் கேட்டு, உனக்குச் சரியா..? என்பது போல
ஒரு ஏற்றப் பார்வை பார்த்து உறுதி செய்வார்.இந்த
கண்ணசைவுகள் அவர் வேறு ஒருவர்க்கு சேலை
விரித்துக் காட்டும்போது நடைபெறும் .
பெண்கள் வெயிலில் வைத்துப் பார்ப்பதும், தோளில்
போட்டு கண்ணாடியில் பார்த்து மகிழும் இன்பம்
அலாதியானது. அந்த இன்பம் இப்போ இருக்கா..?
தெரியல.தீபாவளி எப்போ வரும்..? என்று நாட்காட்டியைப் பார்த்து அந்த நாளை மடித்து
வைப்பதுண்டு.
பெண்களுக்கு முகூர்த்தப்பட்டு எடுக்கும்போது குடும்பம்
சுற்றி இருக்கையில் ,பாயில் விரித்துக் காட்டும்
அழகே தனி..! இப்படித் திருப்பி புடவைத் தலைப்பைக்
(முந்தானை) காட்டும்போது அதிலுள்ள ஓவியங்கள்
கண்ணைக் கவர்ந்து விடுகின்றன. சேலை எடுத்துக் காட்டுபவர்கள் கூட ‘இது லேட்டஸ்ட்டாக வந்திருக்கு..இந்தக் கலர் நல்லாயிருக்கும் எனச் சொல்லி ஆசை காட்டுவது உண்டு.பெண்கள் கவனம் முதலில் விலைப் பட்டியலைத் தான் பார்க்கும். தன் மனதில் நினைச்சு வச்சிருக்கும் ரேட்டுக்கு
ஒத்து வருதா..? என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கும் வரை ஓய்வதில்லை கடல் அலைகளைப் போல..!
சேலை எடுத்தாலும் அதிலுள்ள ப்ளவுஸ் பிடிக்காது.அதை அட்டியில் இருந்து எடுத்துப் போடச் சொல்லி ,கரைக்ட் மேட்சிங் என கடைக்காரர் சொல்லி ,லைட் வெளிச்சம் பொய் சொல்லும் என
வெளியில் சென்று வச்சுப் பார்த்து திருப்தியாகி
பார்த்து எடுப்பதற்குள் ஒரு ஆறுமணி நேரமாவது
ஆகும். சில பேர் அலுக்காமல் எல்லாத்தையும்
எடுத்துப் போடச் சொல்லி வேலை வாங்குவார்கள்.
ஆண்கள் முகம் போகும் போக்கைப் பார்க்கணுமே..?

செவ்வாய், 26 அக்டோபர், 2021

 பெரியகடைவீதி-ஒப்பணக்காரவீதி

ஜவுளிக்கடைகளில் ஜனங்களின் நெரிசலில் குடும்பத்துக்கு புத்தாடைகள், இனிப்புகள் வாங்க கூடிய மக்களின் உள்ளம் நிரம்பிய பாசம் . . .

நாள்முழுதும் அன்ன ஆகாரம் அருந்தாமல் கால்நோக வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றும் பணியாளர்களின் உபசரிப்பு...

கூட்டத்தில் கையேந்தி யாசகம் கேட்கும் ஏழையின் விழிகள்,
காகித எண் பதித்த ரூபாய் நோட்டுகள் கைவசம் இல்லாமல் பண்டிகை கனவுகளை தியாகம் செய்த சக ஜீவன்கள், லாபம் இவிக்கும் பெரிய நிறுவன முதலாலிகள் சிலருக்கு அருகே சிறு வியாபாரிகளின் அவள நிலை...

தேர்ந்தெடுத்த ஆடை மானம் மறைக்க தான் என உணர்ந்தவன் மனிதன்- ஆடம்பரம் செய்ய ஒஸ்தி வீண் கவுரவ செலவு செய்பவன் இயல்புகளுக்கு பொருந்தாதவன் ஆகிறான்..

காவல் காக்கும் காவியுடை காவலனுக்கு புத்தாடை அணிய காலம் ஏது?
போர்க்கால தரைவழி வான்வழி தாக்குதல் போல விழாக்கால பட்டாசு சப்தத்தில் கடைவீதியில் சைக்கிளில் உலா வரும் இவனின்...
மாநகரத்துச் சாலைகளில் என் பயணங்கள் ...

 உடுமலை தொழிலதிபர் கிரிகண்ணன்  அவர்களுக்கு உடுமலை வரலாறு பரிசளிப்பு..


உடுமலையில்  கிரி கிளாத் ஸ்டோர்ஸ், விஜயதீப் எனும் இரு பெரிய துணி வணிக நிறுவனத்தை நடத்தி வந்தவர், உடுமலை லயன்ஸ் கிளப் திருமணமண்டபத்தை கட்டும்போது லயன்ஸ் சங்கத்தின்  பொறுப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர்.


உடுமலை வியாபாரிகள் சங்கத்திலும், ஜவுளி வியாபாரிகள் சங்கத்திலும் பல ஆண்டு காலம் பொறுப்பில்  இருந்தவர்.


உடுமலை விளையாட்டுக் கழகத்திலும் பொறுப்பாளராகப் பல்வேறு உதவிகள் செய்தவர். 


உடுமலையின் சுற்று வட்டார மக்களின் கோவில் திருவிழாக்களுக்கு  அதிகளவு உதவி செய்தவர். 


அகவை நிறைந்தாலும் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் 

உடுமலை கிரிகண்ணன் அவர்களுக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது. 


உடுமலை கனகராசன் குறித்தான தரவுகளையும், முத்துசாமி கவிராயர் குறித்தான தகவல்களையும், மாம்பழக் கவிராயர் குறித்தான தரவுகளையும் தந்தவர்.


உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நீண்ட நாட்கள் யாரையும் சந்திக்காமல் இருந்தார்.


இன்று அவரது  வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில்  உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.


உடுமலைக்கான சிறப்பானதொரு நல்ல அடையாளத்தை, அடுத்த தலைமுறைக்கு நல்லதொரு பணியை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் செய்தமைக்காக அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.


 அய்யா கிரிகண்ணன் அவர்களுக்கு உடுமலை மக்களின் சார்பிலும், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பிலும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் நன்றிகளையும் பதிவு செய்வோம். 


திங்கள், 25 அக்டோபர், 2021

 நமது கம்பளத்தார் இன தலைவர் திருப்பூர்  இராமகிருஷ்ணன் அண்ணன் தலைமையில் 

திருப்பூரில் இன்று ,3,000 -த்ற்கும் மேற்பட்ட  கம்பளத்தார்கள் பெருந்திரளாக சென்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்


திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் அதிகளவில் கிரைண்டர்  தயாரிக்கின்ற தொழிற்கூடங்களும், அதற்க்கு தேவையான கற் குவாரிகளும் நம்மவர்கள் வசம் அதிகளவிலே தொழிலாக திகழ்கிறது.

அந்த தொழிலை நம்பி நம்மவர்கள் சுமார் 3,000, குடும்பங்களின் வாழ்வாதாரம் நடந்து கொண்டுள்ளது..

தற்ப்போது அந்த தொழிற்கூடங்களை முடக்கி சீழ் வைத்து 3,000,குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை சீர்குழைக்கின்ற விதமாக நடந்து கொண்ட அதிகாரிளை கண்டித்தும், உடணடியாக தொழிற்கூடங்களை திறக்க உடனடி தீர்வு காண வேண்டியும்,

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டியும் ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

கம்பளத்தார் அரசியல் நம்பிக்கை நட்சத்திரம் ....வளர்க சமுதாய பணி ..நன்றி வாழ்த்துக்கள் ....


ஞாயிறு, 24 அக்டோபர், 2021

எட்டு வருட பயணம் ...

 கடந்த ஒருமாத காலமாக ..ஜனவரி 2022..தென்கொங்கு நாட்டின் ...நூல் வெளியீட்டுக்கான பணிகள் ...முக்கியமான தொல்லியல் துறை அறிஞர்களின் சந்திப்புகள் ..விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களின் தேதி வாங்குதல் ,நூலுக்கான அணிந்துரைகள் ...வாங்குவதற்கான பணி பயணங்கள் ..புதிய புதிய நட்புவட்டங்கள் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியான உடுமலை வரலாற்று குடும்பத்துடன் பயணங்கள் வாழ்க்கையில் எவ்வளவு அருமையான மனிதர்களை சந்திக்காமல் இருந்திருக்கிறோம் மனதில் சிறு குறையாக இருந்தது ...எனது அலுவுலக பணியையையும் தடைபடாமல்  பார்த்துக்கொண்டு,  அதையெல்லாம் கடந்த 8 வருடங்கள் மலரும் நினைவுகளாக எண்ணி பார்க்கிறேன் ...ஒரு சிறிய வட்டத்திற்குள் அடைபடாமல் இருப்பது எவ்வளவு ஆனந்தம் ..மகிழ்ச்சி ...


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..


வெள்ளி, 22 அக்டோபர், 2021

கேள்வி : உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சியில் , கோயம்புத்தூரில் வீடு கட்ட ஒரு சதுர அடிக்கு என்ன செலவாகும ?


பதில் : 


 நீங்கள் கேட்ட கேள்விக்கான நேரடி பதில், தற்போதைய சந்தை விலையில் தனி வீடு கட்ட Civil work க்கு மட்டும் தோராயமாக சதுரடிக்கு ரூ. 1750/= ஆகும். இது உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி,கோயம்புத்தூருக்கும் பொருந்தும்.


இந்த ஒரு வருட காலத்தில் ( Aug 2020 - Aug 2021) - யில் மணல், சிமெண்ட், wire cut செங்கல், ஸ்டீல் TMT கம்பிகள் போன்றவை விலை கூடியதால் கம்பெனிக்கு கட்டுப்படியாகலைனு கட்டிட பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.


செங்கல் / மணல் / சிமெண்ட் கொள்முதல் செய்திட தற்போது நிறைய செலவாகிவிட்டது. வீட்டு முன் கார் பார்க்கிங் செய்ய car porch உடனே கட்ட முடியவில்லையா என்ற வருத்தமா ? கவலையே வேண்டாம். இடத்தை மட்டும் விட்டு வையுங்கள். பிறகு கட்டலாம்.


அது வரை, இந்த சிறிய வகை TN  99 W 007 மாருதி ஜென் நிறுத்திட இவரை போலவே உங்கள் காரை முன்புறத்திலிருந்து மாடிக்கு செல்லும் படிக்கட்டு அடியில் இரவில் நிறுத்திட ஆவண செய்யுங்கள் ..நன்றி 


என்றும் அன்புடன் சிவக்குமார் 


Sivakumar.V.K




Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com.....