புதன், 6 மே, 2020


#ஜென்சி (பின்னணி பாடகி)
திருவிளையாடல் திரைப்படத்தில் பாலையா நடிகர் திலகத்தை பார்த்து, " உன் பாடலுக்கு இந்த பாண்டிய நாடே அடிமையப்பா " என்பார்.
அதுபோல 1980களில் தன் குரலால் தமிழகத்தையே கட்டிப்போட்டிருந்தது இந்த கேரளத்துக்குயில். இந்த குரலை நனகு பயன்படுத்தியவர் இசைஞானி. ஆனால் இவர் சுமார் 80-90 பாடல்கள் மட்டுமே பாடியிருப்பார்...அத்தனையுமே சூப்பர் ஹிட்...இவரது சில பாடல்கள்:
அடி பெண்ணே பொன்னூஞ்சலாடும் இளமை (முள்ளும் மலரும்)
ஆட சொன்னாரே (வட்டத்துக்குள் சதுரம்)
இதயம் போகுதே ;
தம் தன னம் தாளம் வரும்.
(புதிய வார்ப்புகள்)
ஆயிரம் மலர்களே மலருங்கள் ;
இரு பறவைகள் மலை முழுவதும்.
(நிறம் மாறாத பூக்கள்)
என்னுயிர் நீதானே ..உன்னுயிர் நான்தானே. (ப்ரியா)
கீதா ...சங்கீதா (அன்பே சங்கீதா)
மயிலே மயிலே உன் தோகை எங்கே (கடவுள் அமைத்த மேடை)
ஞான்..ஞான் பாடணம் (பூந்தளிர்)
தோட்டம் கொண்ட ராசாவே
(பகலில் ஒரு இரவு)
என் வானிலே, ஒரே வெண்ணிலா (ஜானி)
மீன் கொடி தேரில் மன்மத ராசன் (கரும்பு வில்)
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் ( உல்லாச பறவைகள்)
காதல் ஓவியம் ;
வாடி ஏ கப்பகெழங்கே (அலைகள் ஓய்வதில்லை)
பூ மலர்ந்திட (டிக்..டிக்..டிக்)
ஆத்தோரம் காத்தாட ஒரு ஆச தோணுது (எங்கேயோ கேட்ட குரல்)
இது தவிர மலையாள படங்களிலும் சில பாடல்களை பாடியுள்ளார்.
இவர் பாடிய அத்தனை பாடல்களும் இன்று வரை டாப் சார்ட்டில் இருக்கின்றன. 1983 ம் ஆண்டில் இவர் திருமணத்திற்கு பிறகு ஏனோ பாடுவதையே நிறுத்தி விட்டார். தற்போது இசை நிகழ்ச்சிகளில் நடுவாராக அவ்வப்போது வருகிறார்.
நல்லாண்டவர் கோவில் ..

அதிசய கோயில் மணப்பாறை அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில்

உங்களின் எத்தகைய பிரச்சனைகளும் 7 நாட்களில் தீர இங்கு சென்று வழிபடுங்கள்

முற்லங்களில் கிராம தெய்வங்களின் வழிபாடு என்பது ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கின்ற மக்களின் ஒற்றுமையை மேலோங்கச் செய்து, அனைவருக்கும் நன்மை ஏற்பட வழிவகுத்தது. இன்றும் பல கிராமங்களில் தங்களின் குடும்பத்தில் ஏற்படும் எத்தகைய பிரச்சினைகளையும் தீர்க்க தங்களின் குலதெய்வமாக இருக்கும் கிராம தெய்வங்களையே மக்கள் வழிபடுகின்றனர். அப்படி தங்களை உண்மையாக வழிபடும் பக்தர்களின் குறையை ஏழு நாட்களில் தீர்க்கும் தெய்வம் இருக்கும் அதிசய கோயில் மணப்பாறை அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில் ஆகும்.

அக்கோயிலை பற்றிய மேலும் பல சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம். அருள்மிகு நல்லாண்டவர் கோயில் வரலாறு சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த நல்லாண்டவர் கோவில்.

இக்கோயிலின் பிரதான தெய்வமாக நல்லாண்டவர் இருக்கிறார். கோயிலின் தல விருட்சமாக காட்டு மின்னை மரம் இருக்கிறது. - மாய மானை ராமர் பூண்டிய தலம் இது. இதனால் தான் இப்பகுதி மான்பூண்டி தலம் எனப்படுகிறது. இப்பெயர் காலப்போக்கில் மருவி மாமுண்டி ஆண்டவர் கோயிலாக விளங்குகிறது என வரலாறு கூறினாலும், இப்பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்த மான்பூண்டி வள்ளல் என்கிற ஒருவரின் வரலாற்றோடு இக்கோயிலின் வரலாறும் தொடர்பு கொண்டுள்ளது எனக் கூறுகிறார்கள்.

வலிமையும், மந்திர ஆற்றல் சித்துக்களும் கொண்ட வீரராக விளங்கியவர் இப்பகுதியை ஆண்ட மான்பூண்டி அரசர். சிறப்பாக ஆட்சி புரிந்த இவர் இப்பகுதி மக்களை கள்வர்களிடமிருந்தும், காட்டு விலங்குகளிடமிருந்தும் காப்பாற்றி வந்தார். ஒருமுறை இத்தலத்திற்கு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு சப்த கன்னிமார்கள் நீராட வந்தனர். அப்போது கள்வர்கள் கூட்டம் ஒன்று அந்த சப்தகன்னியர்களுக்கும் தொல்லை கொடுத்தது. இதனால் வேதனை அடைந்த சப்த கன்னியரும் தங்களை யாராவது காக்குமாறு கூக்குரல் இட்டபோது, சத்தத்தை கேட்டு குதிரையில் ஏறி விரைவாக அவ்விடத்திற்கு வந்து, கள்வர்கள் அனைவரையும் விரட்டி அடித்தார் மாமுண்டி அரசர். - Advertisement - சரியான நேரத்தில் எங்கள் உடன் பிறந்த அண்ணன் போல் வந்து காப்பாற்றியதால் உங்களை அனைவரும் நல்லண்ணன் என அழைப்பார்கள் என்று கூறி மாமுண்டி அரசருக்கு சப்த கன்னியர்களும் அருள் புரிந்தனர். அன்றிலிருந்து இக்கோயிலின் தெய்வம் நல்லண்ணன், நல்லாண்டவர், மாமுண்டி ஆகிய பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். ராமாயண காலத்தில் மாயமானின் அழகில் மயங்கி அதை பிடிக்குமாறு ராமனிடம் சீதை கூறிய போது, ஸ்ரீராமன் அந்த மானை அம்புவிட்டு சாயத்த இடமே இந்த மான்பூண்டி தலம் என கூறப்படுகிறது.

 பூண்டுதல் என்றால் சாய்த்தல் என்று பொருள். மான்பூண்டி சீமை என்று இப்பகுதியை பழங்கால மக்கள் அழைத்துள்ளனர். மாமுண்டி ஆறு ஓடி வரும் இப்பகுதிக்கு இருபுறமும் மணம் மிக்க மலர் சோலைகள் இருந்ததாகவும், அதன் காரணமாகவே இவ்வூருக்கு அருகில் உள்ள மணப்பாறை எனும் ஊருக்கு அப்பெயர் உண்டானது என கூறுகிறார்கள்.

இப்பகுதியின் தலைவராக விளங்கிய மாவீரர் மாமுண்டி நீதிநெறியோடு ஆட்சி புரிந்து, ஆன்மீகத்திலும் மிகவும் சிறந்து விளங்கினார். பில்லி பிணிகள் அகற்றுவதில் சிறந்த சித்தனாக விளங்கிய மாமுண்டி சித்தர் உறையும் கோயிலாக இது இருக்கிறது. இக்கோயில் கட்டப்படுவதற்கு முன்பாக பொந்துபுளி கருப்பண்ணாசுவாமி இங்கே இருந்துள்ளார். இவர் மாமுண்டி சித்தரின் இதயம் நிறைந்த தெய்வம் ஆவார். மாதவபட்டியில் இருந்த ஒரு புளிய மரத்தில் இருந்த அதிக பொந்துகள் அங்கிருந்த மக்களை அச்சத்தில் ஆழ்த்தின. இதனால் அப்புளியமரத்தை அவ்வூர் மக்கள் வெட்ட முயன்றபோது, இங்கே எனக்கு ஒரு கோவில் கட்டினால் மக்களின் அச்சத்தை நான் போக்குகிறேன் என அசரீரி ஒலித்தது. அதன் படியே மக்களும் சேர்ந்து இங்கே இருக்கும் இக்கோவிலை கட்டி முடித்தனர்.

 சைவ – வைணவ கோவில் சிறப்புக்களை தாங்கிய தலமாக இக்கோவில் இருக்கிறது. திருநீறு, துளசி தீர்த்தம் திருப்பாதம் இங்கே பிரசாதமாக பக்தர்களுக்கு தரப்படுகின்றன அருள்மிகு நல்லாண்டவர் கோயில் சிறப்புக்கள் மிகப்பெரிய பிரகாரத்துடன் அமைக்கப்பட்ட கோவிலில் விநாயகர், ஆஞ்சநேயர், பரிக்காரர், மதுரைவீரன், ஏழு கருப்பண்ண சுவாமி, ஓங்கார விநாயகர், பட்டத்து யானை, பேச்சியம்மன், நல்லாண்டவர் யானை தெப்பக்குளம் முருகன் ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் இருக்கின்றன.

நல்லாண்டவருக்கு நல்லையா, ராஜகோபாலன், இலக்கையன், நல்லேந்திரன் ஆகிய திருநாமங்கள் இருக்கின்றன. இக்கோயிலில் காலில் விலங்கு பூட்டப்பட்டு, கையில் கமண்டலத்துடன், ஆணி தைத்த செருப்பை அணிந்து கொண்டு இருக்கும் பிரம்மச்சரிய தெய்வமான லாட சன்யாசி பக்தர்களின் சகல நோய்களையும் தீர்க்கும் வைத்தியராக இருக்கிறார். சிறந்த சித்தரான இவர். யானைகள் மலைக்குச் செல்லும் பாதையில் இருக்கும்

இக்கோயிலில் ஏழு கருப்பு பேச்சியாத்தாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களின் ஆற்றலை கண்டு வியந்து, அந்த தெய்வங்களின் சக்திகளை ஒரு கலயத்திற்குள் திரட்டி எடுத்துச் செல்ல முயன்ற போது, முத்துக்கருப்பன் சாமி லாட சாமியின் முயற்சியை முறியடித்தார். இதன் பின்னர் தனது தவறை உணர்ந்த மாடசாமி இத்தலத்திலேயே முத்துக்கருப்பனின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் அருகில் அமர்ந்து விடுகிறார்.

கோயிலின் சிறிய ராஜ கோபுரம் மதுரை மாநகரை நோக்கி செல்லும் வழியில் தனது துணைவியார்கள் வெள்ளையம்மாள் மற்றும் பொம்மியம்மாள் சமேதமாக மதுரை வீரன் களைப்பாரிய இடத்தில் மதுரை வீரனுக்கு ஒரு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இங்கே ஒரே கல்லில் ஏழு தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த ஏழு கருப்பர்களின் ஏவலர்களான கம்பீர தோற்றத்தோடு மகா முனீஸ்வரரின் சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இக்கோயிலில் சப்த கன்னிமார்களும் நல்லாண்டவரின் சகோதரிகளாக அறிவிக்கப்பட்டு மூலவருக்கு அருகில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்கள். இக்கோயிலில் இந்த சப்த கன்னியருக்கு தான் முதல் பூஜை. லாட சன்யாசி எனப்படும் வடநாட்டு சித்தருக்கு இரண்டாவது பூஜை செய்யப்படுகிறது. மூன்றாவது பூஜையையே இக்கோயிலின் பிரதான தெய்வமான நல்லாண்டவர் ஏற்கிறார். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், உடன்பிறந்தவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள், கணவன்-மனைவிக்குள் ளாக எழும் பிரச்சனைகள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் தொந்தரவுகள், பெண்களுக்கு மனம் சம்பந்தமாக ஏற்படும் பாதிப்புகள் போன்ற பிரச்சனைகள் தீர இங்கு வந்து நல்லாண்டவரை வழிபட்டால் நமக்கு அண்ணனாக இருந்து நமது அத்தனை பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம். எத்தகைய பிரச்சினைகளையும் நல்லாண்டவர் ஏழு நாட்களில் தீர்த்து வைப்பார் என நம்பிக்கையுடன் கூறுகின்றனர் இங்கு வரும் பக்தர்கள்.

இங்குள்ள ஏழு கருப்பு சுவாமியை வழிபட்டால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கும். வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமிக்கு பக்தர்கள் வேஷ்டி துண்டு மற்றும் பரிவட்டம் சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்




கோயில் அமைவிடம் அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் மணப்பாறை பகுதியில் அமைந்துள்ளது.

குறிப்பு :.பொய்கைப்பட்டி அரண்மனையில்  பிறந்தவர் இந்த நல்லாண்டவர் சாமி ..அரண்மனையாரின் குலதெய்வ கோவில் ..

கோயில் நடை திறப்பு காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். கோயில் முகவரி அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில் மணப்பாறை திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 621306
கேள்வி : நான் ஏன் புத்தகங்களை வாசிக்க வேண்டும்?

என் பதில் :..


வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த பாடங்களை நம் தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்வதை விட பிறரின் தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்வது தான் அதி புத்திசாலித்தனம்.

ஒரு புத்தகம் உங்களை உலகின் மிகவும் புத்திசாலி மூளைகளோடு இணைக்கவல்ல ஒரு கருவி. உயிருடன் இருப்பவர்கள் மட்டுமல்லாது நம் காலத்திற்கு முன்பாக இருந்த நபர்களோடும் நம்மை இணைக்க உதவும் ஒரே கருவி புத்தகம்.

அதன் மூலம் ஒரு சவாலான சூழ்நிலையை அல்லது தோல்விகள் வந்த பொழுது அவர்கள் அதை எவ்வாறு கையாண்டார்கள் என்னும் ரகசியத்தை உங்களுக்கு தெரிவிக்கும் ஒரு கருவி புத்தகம்.

புத்தகங்கள் எப்படி நம் வாழ்வில் தாக்கத்தை உண்டாக்குகிறது?

ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகத்தை எழுதும் பொழுது, அவர் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள், அவர் பெற்ற ஞானம், தான் உபயோகித்த யுக்திகள், சந்தித்த தோல்விகள், ஒரு சவாலான சூழ்நிலையை எப்படி கையாண்டு வெற்றிகண்டார்கள், வெற்றிகண்டதோடு மட்டுமல்லாமல் அதிலிருந்து வெளிவந்து எவ்வாறு ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள் போன்ற விடயங்களை நம்மோடு பகிர்ந்துகொள்வார்.

இதில் சிறப்பான விடயம் என்னவென்றால், அவர் 10, 20 அல்லது 30 வருடங்களில் பெற்ற அனுபவங்களை 100, 200 அல்லது 300 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தில் எழுதிவிடுகிறார்.

சில மணி நேரங்களில் நாம் படித்து விட கூடிய ஒரு புத்தகத்தில் பல வருடங்களின் அனுபவங்களை பெற்றுக்கொள்ளலாம். வாசிப்பின் ஆற்றலை ஜார்ஜ் ஆர் ஆர் மார்ட்டின் மிகவும் அழகாக கூறியுள்ளார்

ஒரு வாசகர் இறப்பதற்கு முன் ஆயிரம் முறை வாழ்கிறார். ஒரு முறை கூட வாசிக்காத நபர் ஒரு முறை மட்டுமே வாழ்கிறான் (A reader lives a thousand lives before he dies. The man who never reads lives only one).

மேல் சொன்ன புத்தகத்தை ஒருவர் வாசிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரால் அந்த எழுத்தாளரின் வாழ்க்கையை சில மணி நேரங்களில் வாழ்ந்து விட முடியும்.

இதன் மூலம் அந்த எழுத்தாளர் பெற்ற அனுபவங்களை நாமும் பெறலாம், அவர் பயன்படுத்திய யுக்தியை நாமும் உபயோகிக்கலாம், தன் கஷ்ட காலங்களிலிருந்து எவ்வாறு வெளிவந்தார் என்று அறிந்துகொண்டு நம் சவாலான சூழ்நிலைகளில் அதை பயன்படுத்தலாம், மேலும் பல தவறுகளிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.

வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் தவறுகள் செய்ய மாட்டார்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் வாசிக்க வாசிக்க உங்கள் தவறுகளின் விகிதம் குறைந்து விடும்.

ஒரு தலைமை நிர்வாக அதிகாரி சராசரியாக ஒரு வருடத்திற்கு 52 புத்தகங்களை வாசிக்கிறாராம். அதாவது வாரம் ஒரு புத்தகம். நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த உலகத்தின் ஏதோ ஒரு புத்தகத்தில் தீர்வு ஒளிந்திருக்கும்.

ஜெப் பீசோஸ் புத்தகங்களை விற்பதன் மூலம் பெரும் பணக்காரரானார்.

ஜே கே ரௌலிங் புத்தகங்கள் எழுதுவதன் மூலம் பெரும் பணக்காரரானார்.

வாரன் பபே புத்தகங்களை வாசித்ததன் மூலம் பெரும் பணக்காரரானார்.

எல்லா வகையிலும் புத்தகம் உங்களை கோடிஸ்வரனாக்க காத்துக் கொண்டிருக்கிறது.

நன்றி ..வாசிப்பை நேசிப்போம் ...

செவ்வாய், 5 மே, 2020

கேள்வி :தங்கள் துறையில் வெற்றியின் உச்சத்தை தொட்ட மனிதர்களிடம் நீங்கள் ஏதேனும் ஒற்றுமையை கண்டுள்ளீர்களா? அப்படியெனில் அது என்ன?

என் பதில் :.

பில் கேட்ஸ்
சச்சின்
வாரன் பபட்
மொசார்ட்
ரபேல் நடால்
கமல்ஹாசன்
எலோன் மஸ்க்

இவர்கள் அனைவரிடமும் ஒரு ஒற்றுமை உள்ளது. அந்த குணம் தான் அவர்களின் வெற்றிக்கு காரணம் என்று சொன்னால் மிகையாகாது. அது என்னவென்று சில துப்புகள் கொடுக்கின்றேன். கண்டு பிடிக்க முடியாவிட்டால் கவலை வேண்டாம் பதிலின் இறுதியில் அதை சொல்லி விடுகிறேன்.

பில் கேட்ஸ்

சிறு வயதிலிருந்தே புத்தகப்புழு.
13-வது வயதில் முதல் முறை கணினி முன் அறிமுகப்படுத்தப் படுகிறார்.
நாள் ஒன்றிற்கு 8–10 மணி நேரம் கோடிங் செய்வதில் ஈடுபடுத்திக் கொள்கிறார்.
தனது 20-வது வயதில் மைக்ரோசாப்ட் எனும் நிறுவனத்தை தன் நண்பன் பால் ஆலன் உடன் நிறுவுகிறார்.
அதற்கு பின் நடந்தது சரித்திரம்.

சச்சின்

சிறு வயதிலிருந்தே படிப்பை விட விளையாட்டில் ஆர்வம் அதிகம்.
11-வது வயதில் கிரிக்கெட்டிற்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்.
நாள் ஒன்றிற்கு 12 மணி நேர பயிற்சி.
16-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைக்கிறார்.
பின்பு என்ன நடந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

வாரன் பபட்

சிறு வயதிலேயே பணம் ஈட்டுவதின் மீது ஆர்வம்.
6 வயதில் முதல் சம்பாத்தியம்.
11-வது வயதில் முதல் முதலீடு.
தனது சராசரி நாளில் 80 % நேரத்தை வாசிப்பதில் செலவளிக்கிறார்.
அதன் பிறகு செய்த அனைத்து முதலீடும் இவரை முதலீட்டின் கடவுள் என்று அழைக்குமளவிற்கு திறமையான முதலீடு.

மொசார்ட்

3-வது வயதில் இசைப்பயணம் தொடுங்குகிறது.
5-வது வயதில் முதல் சுயமாக இசையை இயற்ற தொடங்குகிறார்.
6 - 20-வது வயது வரை தன் தந்தையால் கடுமையான பயிற்சிக்கு உட்படுத்தப்படுகிறார்.
20-வது வயதில் தனது தலை சிறந்த படைப்பை படைக்கிறார்.
அதன் பிறகு படைத்த ஒவ்வொரு படைப்பும் இன்றளவும் தலை சிறந்த இசையாக கருதப்பட்டு வருகிறது.

ரபேல் நடால்

3-வது வயதில் டென்னிஸ் மட்டையை கையில் எடுக்கிறார்.
16-வது வயதில் டென்னிஸ் வீரர்கள் மிக பெரும் விடயமாக கருதும் விம்பிள்டன் இறுதி சுற்று வரை செல்கிறார்.
19 வயதில் இளமையான ஃபிரென்சு ஓப்பன் பட்டம் பெரும் வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.
தனது மாமா(பயிற்சியாளரும் கூட) டோனியால் மிகவும் தீவிரமான பயிற்சியில் அதுவும் தன்னை விட வயது அதிகமுள்ள வீரர்களுடன் பயிற்சி செய்கிறார்.
அதன் பின் தன் திறமையால் "கிங் ஆப் க்லே" என்று ரசிர்களால் அன்பாக அழைக்கும் அளவிற்கு அபார திறமையை வெளிப்படுத்தி டென்னிஸ் ஜாம்பவான்கள் எனும் இடத்தை பிடித்தார்.

கமல்ஹாசன்

5-வது வயதில் முதல் திரைப்படம். அதுவும் விருது பெற்ற திரைப்படம்.
பின்னர் தன்னை முழுவதுமாக சினிமாவிற்கு அர்பணித்துக்கொள்கிரார்.
நடிப்பு, இயக்கம், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர், பாடகர், ஸ்டண்ட் மாஸ்டர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என தான் செய்யாத வேலைகளே கிடையாது என்று சொல்லலாம்.
உள்ளூர் விருதுகள், உள்நாட்டு விருதுகள், வெளிநாட்டு விருதுகள் என வாங்கிய விருதுகள் ஏராளம்.
இன்று உலக நாயகனாக நம்மை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்.

எலோன் மஸ்க்

சிறுவயதிலிருந்தே தீவிரமான வாசகர்.
தங்கள் ஊரில் இருக்கும் அனைத்து நூல்களையும் படித்து விட்டு வேறு புத்தகங்களை கேட்டவர்.
12-வது வயதில் ஒரு கணினி விளையாட்டை ப்ரோக்ராம் செய்து முதல் விற்பனையை செய்கிறார்.
பின்னர் தன் சகோதரருடன் சேர்ந்து இரவு பகலாக உழைத்து முதல் கம்பெனியை நிறுவுகிறார்.
அதன் பின் அவர் நிறுவிய அனைத்து நிறுவனங்களும் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
இன்று தன் ரசிர்களால் நிஜ வாழ்க்கை ஐயன் மேன் என்று செல்லமாக கூப்பிடும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.
அனேகமாக அந்த ஒற்றுமை என்ன என்பதை பெரும்பாலனோர் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கண்டுபிடிக்கவில்லையா கவலை வேண்டாம். இதோ

வெற்றியின் உச்சத்தை அடைந்த நபர்கள் கொண்டிருக்கும் ஒற்றுமையான குணம் என்னவென்றால் அவர்கள் அனைவரும்

சிறு வயதிலே துவங்கி விட்டார்கள்.
பிடித்த துறையை தேர்ந்தெடுத்தார்கள்.
கடின உழைப்பை போட்டார்கள்.
பின்னர் நம் லட்சிய மனிதர்களாக மாறினார்கள்.

நன்றி ...வாசித்தமைக்கு 

HOUSING LOANS:
Loans for purchase or construction of houses. Loans available under fixed rate and adjustable rate options.
HOME IMPROVEMENT LOANS:
Loans for internal and external repairs and structural improvement like painting, water proofing, roofing, tiling and flooring, etc.
HOME EXTENSION LOANS:
Loans for extension of existing house, an additional room or floor.
HOME LOANS TO AGRICULTURISTS / PLANTERS:
Housing Loans to Agriculturists and Planters who own agricultural land of at least 3 acres..
LOANS TO NRIs:
Housing Loans extended to NRIs for purchase / construction / extension or renovation of a dwelling unit in India.
BALANCE TRANSFER:
Refinance of home loans availed at higher interest rates from other institutions.
HOME EQUITY LOANS:
Any purpose loans against security of owned & self occupied dwelling unit. Use it for higher education, medical expenses, marriage, etc.
TOP-UP LOANS:
Any purpose loans for existing housing loan customers at special rates.
NON-RESIDENTIAL PREMISES LOANS:
Loans to professionals for construction, purchase, extension or renovation of office or clinic.
RENTAL DISCOUNTING LOANS:
Loans against the assignment of existing rentals.
YOUR DREAM HOME
Regards
Sivakumar.V.K

திங்கள், 4 மே, 2020

கேள்வி :ஒரு குழந்தையிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்ட விஷயம் என்ன?


என் பதில் :..

கள்ளம் கபடம் இல்லாத மனம். வெள்ளந்தி குணம் என்று கூறுவார்கள். நாம் வளர வளர இதன் நிறம் மாறிவிடும். ஆனால் குழந்தையிடம் இதை காணலாம்.

எதையுமே மனதில் வைத்து கொள்ளாதது. சண்டை, கோபம் அனைத்தையும் அடுத்த நொடியே மறந்துவிடுவது.

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது. அந்த பொக்கை பல் தெரிய சிரிக்கும் சிரிப்பு எதையோ உணர்த்துகிறது. வாழ்க்கை ரொம்ப சின்னது பல் இருக்கும் போதே சிரிச்சிடுங்க.

யார் என்னனு பார்க்காமல் பழகுவது. இந்த ஜாதி, இந்த மதம் இதெல்லாம் குழந்தைகளிடம் செல்லுபடியாகாது.

தனக்குன்னு எடுத்து வைத்துக்கொள்ளும் செல்பிஷ் குணம் குழந்தைகளுக்கு கிடையாது. கையில எது வைத்திருந்தாலும் மற்றவர்க்கும் பாகம் பிரித்து கொடுத்துவிடும்.

தவழுவது, பின்பு எதையாவது பிடித்து நடக்க முயற்சிப்பது, பின்பு யார் உதவியும் இல்லாமல் நடப்பது -- விடாமுயற்சி.

அழுது கொண்டிருக்கும் பொழுதே தூங்கிவிடுவது. எதாவது பிரச்சனை வந்தா படுத்து தூங்கிடு.

துய்மையான அன்பு காட்டுவது. நம்மை பார்த்தவுடன் ஓடிவந்து கட்டிப்பிடித்து கொள்வது.

அதனால் தான் வளர்ந்த பிறகு, அச்சோ! நம்ப குழந்தையாவே இருந்திருந்தா நல்லாருக்கும்லன்னு தோணுது.

நன்றி ....

கேள்வி :.வாழ்க்கையில் முக்கியமான ஒருவர் எதுக்கெடுத்தாலும் உங்களைத் திட்டிக்கொண்டே இருக்கிறார் என்றால், அதற்கு காரணம் என்ன?

பதில் :...

அவரை நீங்கள் ஏதோ ஒரு காலத்தில் சட்டை செய்யவில்லை என்றும் அதனால் அவர் மனமுடைந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாம்பு போல் கொட்டுகிறார் என்றும் அர்த்தம்.

சிலருக்கு உருவத்தை கலாய்த்தால் பிடிக்காது. குறிப்பாக பெண்கள் அதை சொல்லும்போது இ என்று இளித்துவிட்டு பின்னால் கொட்டு வாங்குவார்கள். ஆண்களுக்கோ சீக்கிரம் முடி கொட்டிவிட 'தள்ளிவாங்க.. ஏன் எப்போ வந்தாலும் அப்பாவோடயே வாராய் னு கேக்கறாங்க என்பார்

மாமியார் படுத்தல்களின் போது ஆதரவு கிடைக்குமா எனப்பார்த்து விலகி நின்றால் கோபம் பதிந்துவிடும்

பிறந்தவீட்டைப் பற்றி அவதூறு கூறினால் வெடிப்பார்கள். திரும்ப திரும்ப சொன்னால் ஸ்டோர் பண்ணிவைத்து 30 வருடம் கழித்து சொல்வார்கள்
பொறுப்பில்லாத காரியங்களால் தேவையில்லாத பல உளைச்சல்களுக்கு ஆளாகியிருந்தாலும் அதே போல் தான்

பத்து தடவை சொன்னாலும் மறந்துவிட்டு வந்தால் அர்ச்சனை நிச்சயம். அவர்கள் ஒருமுறை கூட சொல்லுமுன் செய்துவைப்பவர்களாக இருப்பார்கள்.

என்ன சொன்னாலும் புரிதல் இல்லை என்றால் திட்டித்தான் தீர்ப்பார்கள். லேசாக பாத்திர சத்தம் கேட்கும்போதே உஷார் ஆகி அட்டென்ட் பண்ணாவிட்டால் கரண்டி பறந்து வருவதை தவிர்ப்பது கடினம் தான்

நன்றி ..

ஞாயிறு, 3 மே, 2020

கேள்வி : எந்த மாநிலம் கொரோனாவை சிறப்பாக கையாள்வதாக நினைக்கிறீர்கள்?

என் பதில் :..

ஒரிசா

ஒரிசாவின் முதலமைச்சர் திரு.நவீன் பட்நாயக், கேரளாவில் போலவே தனது மாநிலத்திலும் கொரோனாவை கட்டுப்படுத்த உண்மையாகப் போராடும் இன்றைய ஹீரோ.

இவர் தொடர்ந்து 20 வருடங்களாக ஒரிசாவின் முதல்வர்.

அவரது அப்பா திருவாளர். பிஜு பட்நாயக் ஒரு மூத்த அரசியல்வாதி.

பிஜு பட்நாயக் படிப்பை பாதியில் விட்டுவிட்டு தனது மனத்துக்குப் பிடித்ததை செய்த தனித்தன்மை படைத்தவர். இந்திராகாந்தியோடு கோபித்துக்கொண்டு தனி கட்சி ஆரம்பித்தார். பல கூட்டணிகளை அமைத்தார். ஆட்சியை பிடித்தார்.

சமீபத்தில் அவரை நமது பிரதமர்கூட வெகுவாக பாரட்டிப் பேசினார். இவர் ஒருமுறை தலைமறைவாக இருந்த டாக்டர் ராம் மனோகர் லோஹியாவை டெல்லியில் இருந்து விமானத்தைத் தனியாளாக ஓட்டி கொல்கத்தாவில் ரகசியமாக கொண்டு போய் விட்டதாக செய்திகள் உள்ளன.

இவர் 1997 ஆம் ஆண்டு காலமானார்.

அப்போது நவீன், உலகப்புகழ் பெற்ற பள்ளி, கல்லூரிகளில் படித்துவிட்டு பல்வேறு நாடுகளுக்கு பயணம், வேலை என்று ஊர் சுற்றிக்கொண்டிருந்தார். நல்ல கவிஞர். அவருக்கு ஒரு சகோதிரி இருந்தார். அவரும் கவிதாயினி தான்.

ஒரிசா என்பது நவீனுக்கு 'ஒரு நடை வந்து பார்த்துட்டு போப்பா' என்று அப்பா கூப்பிட்டால் வந்து செல்லும் இடம். அட, ஒரிய மொழி கூட சரியாக பேசத்தெரியாது. அப்பாவின் மரணத்துக்காக ஊர் திரும்பியவர் நவீன்.

அடுத்த முதல்வர் யார் என்று உள்ளூர் அரசியல்வாதிகள் அவர்கள் ஊர் கூவாகத்தில் ஒன்று கூடி தங்களது அடுத்த முதல்வர், பிஜு பட்நாயக் மகன் நவீன் பட்நாயக் தான் என்று சொல்லி தீக்குளிக்கத் தயாரானார்கள்.

அவர்களும் தங்கள் தலைவனின் பெண் குழந்தையை மதிக்கவில்லை பாருங்கள். கவிதாயினி என்பதற்காகவாவது கூப்பிட்டிருக்கலாம்.

இப்படியாகத்தான் சூழ்நிலை காரணமாக நவீன் அரசியலுக்கு வர வேண்டிய கட்டாயம்.

வாரிசு அரசியலில் மாட்டி நம்மைப்போல ஒரிசாவும் சிக்கி சீரழியும் என்று உற்சாகமாக எழுந்து உட்கார்ந்தால். எல்லாம் தலைகீழாய் போய் விட்டது. நவீன் நமது எண்ணத்தில் மண்ணள்ளி போட்டுவிட்டார்.

அரசியலில் குதித்த பின்பு நவீனுக்கு சிந்தனை மக்களுக்கு என்ன செய்வது என்பதில் மட்டுமே இருந்தது. அரசியல் சுத்தமாக தெரியாதல்லவா?

இவர் ஆட்சிக்கு வருவதற்கு முந்திய வருடம் தான் (1999) இயற்கையின் கோரப்பிடியில் ஒடிசா சின்னா பின்னம் ஆனது. பேயாய் சீரிய புயல் பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கியது.

பல லட்சம் மக்கள் வீடற்ற அகதிகள் ஆகினர். நாட்டின் எந்த மாநிலமும் சந்தித்திடாத கொடூரம். (அன்பே சிவம் படத்தில் புயலில் கமல் சிக்குவது ஒரிசா மாநிலத்தில்தான்)

வருடம் 2000. முதல்வராக பொறுப்பேற்கிறார் நவீன்.

இனி ஒரு புயல் வரட்டும், 'செவுலை திருப்பி விடுகிறேன்' என சபதம் ஏற்கிறார்.

ஒன்றல்ல, இரண்டல்ல... 2014, 2017, 2018, கடைசியாக 2019ல் பானி புயல் என பண்டிகை விருந்தாளி போல தொடர்ந்து ஒரிசாவைத் தாக்குகிறது புயல். ஒவ்வொன்றிலும் உயிரிழப்புகள் எவ்வளவு தெரியுமா?

10க்கும் கீழே.

உலக நாடுகள் அசந்து போயின. பேரிடர் மேலாண்மையில் மிகச் சிறந்த தென்கிழக்கு ஆசிய மாநில விருதை நவீனுக்கு தந்து பாராட்டியது ஐ.நா.சபை. இந்த விருதை வென்ற ஒரே இந்திய மாநிலம் ஒடிசா மட்டுமே.

கஜாப் புயலில் இந்த விருது நமது துணை முதல்வருக்கு கிடைக்க வேண்டியது. நவீனால்தான் கெட்டுப்போனது என்று கழக செயல் புயல்கள் சொல்லுகிறார்கள்.


மக்களின் அபிமான நாயகன் ஆகிப்போனார் நவீன். 2000 முதல் 2024 வரை தங்களை 24 வருடங்கள் தொடர்ந்து ஆளும் அதிகாரத்தை தந்திருக்கிறார்கள் ஒடிசா வாசிகள்.

தொடர்ந்து ஐந்துமுறை முதல்வர். இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் செய்யாத பல தேர்தல் சாதனைகள்.

'இந்த 2020 வருசம் புயல் எந்த மாசம் வருதாம்?' என்று கேட்டு அதன் ஜோலியை முடிக்க நவீன் காத்திருக்க, அதற்கு முன்பாக மாநில எல்லையில் நம்பியார் மாதிரி 'நவீன் சாப்... மே ஐ கம் இன்' என கைகளை தேய்த்துக் கொண்டு நின்றது கொரோனா.

நவீன் மெதுவாக தனது செயலாளரை அழைத்தார். முதல்வரின் தனிச் செயலாளர் வி.கே. பாண்டியன், தமிழர்.

தமிழர்களில் செயல்பாடானவர்கள் தமிழகத்துக்கு வெளியேதான் இருக்கிறார்கள். நமது ராசி அப்படி.

மந்திரிசபையை கூட்டினார்கள். செயல்பட ஆரம்பித்தார்கள். எப்படி?

மார்ச் இறுதியில் இந்தியா 'விழித்து'க்கொண்டு லாக் டவுன் போட்டது அல்லவா?

ஆனால் மார்ச் முதல் வாரத்திலேயே நவீனுக்கு செய்தி எப்படியோ 'லீக்அவுட்' ஆகிவிட்டது.

ஒரிசா உடனே அலர்ட் ஆகிவிட்டது. ஆங்காங்கே வார்டு அளவுக்கு லாக் டவுன் போடப்படுகிறது.

உடனடியாக ஹெல்ப் லைன் எண்கள் அறிவிக்கப்படுகின்றன. அடுத்த மூன்று வாரத்தில் மட்டும் 72,000 கால்கள். போன் கால்கள் அடிப்படையில் எங்கே யாருக்கு என்ன பிரச்னை என்பது ஆய்வு செய்யப்படுகிறது.

இங்கே தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஒரு லைனுக்கு இரண்டு லட்சம் கால்கள் வந்ததெப்படி என்று இன்னும் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது

மார்ச் 3 ஆம் தேதி கோவிட்டுக்கு என்று தனியாக ஒரு வெப்சைட் தயார். வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஒடிசா வரும் அனைவரும் இதில் தங்கள் விவரங்களை பதிவு செய்யவேண்டும்.

நோய் அறிகுறி இருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் ஒரு பெரிய பரிசுத் தொகையை அரசு வழங்கும். ஆயிரக்கணக்கான மக்கள் அரசு சொன்னதை செய்தார்கள். முதல் கட்ட வெற்றி.

அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை சார்ந்த இதர ஊழியர்கள் அனைவருக்கும் மாத சம்பளத்தை முன்பணமாக மாதத் துவக்கத்திலேயே அவர்களது வங்கிக்கணக்கில் போட்டு விடுகிறார் நவீன்.

பொருளாதார மன அழுத்தம் இன்றி அவர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக வேலை பார்க்கிறார்கள்.

நமக்கோ, 2021 ஏப்ரலில் தேர்தல் சமயத்தில்தான் பணமுடிப்பு கிடைக்கும் என்பதால் கொஞ்சம் சோர்வாக இருக்கிறது.

உள்ளூரில் இப்படி வேலை நடந்து கொண்டிருக்கும்போதே 'வெளி மாநிலங்களில் தவிக்கும் ஒரிசா தொழிலார்களுக்கு என்ன செய்யலாம்?' என யோசிக்கிறார்.

உடனடியாக இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களையும் தொடர்பு கொண்டு 'ஒடிசாவை சேர்ந்த ஒரு தொழிலாளி கூட பாதிக்கப்படக்கூடாது. அவர்களுக்கான உணவு, தங்குமிடம், மருத்துவம் அனைத்தையும் சிறப்பாக செய்யுங்கள். மொத்த செலவையும் எனது அரசாங்கம் தந்து விடும்' என உறுதி அளிக்கிறார்.

நவீனின் அடுத்த முக்கிய குறி தனது மாநிலத்தின் சிறுநகரங்களும், கிராமங்களும்.

புயல் வந்த ஆண்டுகளில் குக்கிராமம் வரை எப்படி உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்கிற அனுபவம் பக்காவாக இருந்ததால் நேர்த்தியாக செயல்பட தொடங்குகிறது அரசு எந்திரம்.

84,000 பேர் தனிமைப் படுத்தப்படுகிறார்கள். அனைத்து பஞ்சாயத்து வார்டுகளிலும் போதுமான மருத்துவ வசதிகள் ரெடி.

கீழே உள்ள பட்டியல் நாமெல்லாம் பார்த்து பரவசமடைய..

இந்திய வரலாற்றில் மார்ச் 22 முதல் 40% க்கும் மேற்பட்ட இடங்களை லாக் டவுன் அமல்படுத்திய முதல் மாநிலம் ஒரிசா

ஏப்ரல் 14ல் லாக் டவுன் 2.0 ஐ ஆரம்பித்த முதல் மாநிலம் ஒரிசா
தொழில்முறை மருத்துவமனைகளால் நடத்தப்படும் கோவிட் மருத்துவமனைகளைத் தொடங்கிய முதல் மாநிலம் ஒரிசா.

தனது அனைத்து மாவட்டங்களிலும் COVID மருத்துவமனைகளை உருவாக்கிய முதல் மாநிலம் ஒரிசா

மாநிலத்திற்கு வெளியில் இருந்து திரும்பியவர்களின் ஆன்லைன் பதிவைத் தொடங்கிய முதல் மாநிலம் ஒரிசா

அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு வீட்டிலிருந்து வெளியே வர ஆன்லைன் பாஸ் வழங்கும் முதல் மாநிலம் ஒரிசா

மாநிலத்தில் முதல் நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்னாலேயே, ரயில் நிலையங்கள், விமான நிலையம் மற்றும் கடல் துறைமுகங்களில் திறமையான, தேவையான கட்டுப்பாடுகள் கொண்டுவந்த மாநிலம் ஒரிசா.

வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை சமூக கண்காணிப்பில் கொண்டு வந்த முதல் மாநிலம் ஒரிசா

பயண வரலாற்றை அறிவிக்க ரூ.15,000 ரொக்க ஊக்கத்தொகை வழங்கி, சுய அறிவிப்பை மிகப்பெரிய வெற்றியாக மாற்றிய ஒரே மாநிலம் ஒரிசா.

வெளியில் இருந்து வரும் மக்களுக்காக பிரத்யேக ஹெல்ப்லைன் மற்றும் வாட்ஸ்அப்பைத் தொடங்கிய முதல் மாநிலம் ஒரிசா

டெலிமெடிசின் ஹெல்ப்லைனைத் தொடங்கிய ஒரே மாநிலம் ஒரிசா
தெருவில் உணவின்றி தவிக்கும் விலங்குகளுக்கு உணவளிக்க சிறப்பு நிதி ஒதுக்கிய ஒரே மாநிலம் ஒரிசா. உலகில் வேறெங்கும் இந்த முயற்சி இல்லை என்கிறார்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் ஆரம்பித்த ஒரே மாநிலம் ஒரிசா


சமூக ஊடகங்களில் வதந்திகள் மற்றும் போலி செய்திகளை பரப்பியவர்கள் மீது உடனடியாக போலீஸ் நடவடிக்கை எடுத்த முதல் மாநிலம் ஒரிசா.


சில சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு செய்திகளை ஒடுக்கி, கொரோனோவின் மத்தியில் வகுப்புவாத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய மாநிலம் ஒரிசா
அனைத்து பஞ்சாயத்துகளிலும் வறியவர்களுக்கு சமைத்த உணவை வழங்கிய முதல் மாநிலம் ஒரிசா

மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் அடுத்த மாநிலத் தொழிலாளர்களுக்கு சிறப்பு ஹெல்ப்லைனைத் தொடங்கிய முதல் மாநிலம் ஒரிசா

அவர்களுக்கு போதுமான உணவு, நீர், தங்குமிடம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் முதல் மாநிலம் ஒரிசா

மூன்று மாதங்களுக்கு தேவையான ரேஷன் உணவுகள் ஒரே நாளில் முன்கூட்டியே வழங்கிய ஒரே மாநிலம் ஒரிசா

மகளிர் சுய உதவிக்குழுக்களை நேரடியாக தொற்றுநோய் நிர்வாகத்தில் ஈடுபடுத்தும் முதல் மாநிலம் ஒரிசா

COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் நின்று போராடும் ஒரே மாநிலம் ஒரிசா

விளைவு...

இன்றைக்கு, இந்த மே தினத்தில், 01.05.2020 நிலவரப்படி ஒரிசாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 128.

இறந்தவர் 1. இதில் 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்குப் போய் விட்டார்கள்.

கேரளாவிற்கு மேலாக, உலகத்தரத்தில் கொரோனாவை வீழ்த்திய மாநிலம் ஒரிசா.

காரணம் என்ன?

தலைவன் சிறந்த கல்வியாளர். படித்தவர். பக்கத்தில் உள்ளவர் படித்துப் பார்த்து, மொழி பெயர்த்துச் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

சேவை மனப்பான்மை கொண்டவர். ஒப்பற்ற நிர்வாகி.

ஒரு நாள் இவர் இந்தியாவின் பிரதமராக வந்தால் எப்படியிருக்கும் என்று தோன்றுகிறதா?

ஒரு நாளும் வர மாட்டார்.......

நன்றி ....வாசித்தமைக்கு ....


எனது நண்பர் கல்லூரி பேராசிரியர் ...ஒருமுறை ..பல்கலைக்கழக விழாவிற்கு சென்று வந்து என்னிடம் இந்த நிகழ்வை பகிர்ந்தார்  மகிழ்ச்சியாக இருந்தது ..இப்படியும் ஒரு முதல்வர் இருக்கிறார் என்று ....

உத்கல் பல்கலை கழகத்தில் உலகளாவிய அறிஞர் கூட்ட மொன்றுக்கு சென்றிருந்தேன்.முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன்.மதிப்பிற்குரிய நவீன் பட்நாய்க் அவர்கள் துவக்கவுரை. நம்ம ஊர் கூட்ட அரங்கு( auditorum) போல் அல்லாமல் பெரிய வகுப்பறை போன்ற இடத்தில் கூட்டம். மிக எளிமையாக வந்து என் எதிர் நாற்காலியில் அமர்ந்தார். அவருடன் ஒரே ஒரு காவல் அதிகாரி மட்டும் வந்தார்.மிக சிறப்பாக பேசினார். வேற்று நாட்டவர்களும் அவரரது பேச்சால் கவரபட்டனர். அவரளவு படிக்காத நம்ம ஊர் அரசியல் வாதிகள் சாலையில் சென்றாலே போக்குவரத்து நிறுத்தும் வெட்டி பந்தா என் மனதில் நிழலாடியது. என் மனதில் இடம் பிடித்த இந்தியாவின் ஒப்பற்ற அரசியல்வாதி. அன்றிலிருந்து அவர் பற்றிய செய்திகளை ஆர்வமுடன் கவனித்து வருகிறேன்.அவர் ஒருநாள் பிரதமராக வரவேண்டும். இந்த ஆட்டு மந்தை போல் ஓட்டளிக்கும் கூட்டம் அவரை போன்ற சிந்தனை திறமும் நாட்டுபற்றும் உள்ள ஒருவரை தேர்ந்தெடுக்குமா என்பது கேள்விக்குறியே.







மேடை பேச்சு ....

அலுவுலகம் என்றால் பேசி தான் ஆகவேண்டும் ..பேச்சு தானாக வந்துவிடும் .

பொதுவெளியில் ...விழாக்கள் .சமுதாய கூட்டங்கள் ..மனது கொஞ்சம் ஜெர்க் ஆகிவிடுகிறது ..என்ன மாயமோ ..மந்திரமோ தெரியவில்லை ...

எழுதுவது என்றால் பக்கம் பக்கமாக எழுதி விடலாம் ...

இன்று நண்பர்கள் அழைத்து போல் வீடியோகால் ...பேசுவது முதல் முறை ..

எனக்கே தெரியாம எழுபது நிமிஷம் பேசிருக்கேன். அதுக்கு மொதல்ல ஒரு மன்னிப்பு. பேசும் ஆர்வத்தில நேரம் போனது தெரியல 😷
மொதல்ல முருகேஷ் என்கிட்ட சொன்னப்போ ஒரு ஐஞ்சு பத்து நிமிஷம் இருக்கும்ன்னு நினைச்சு, அதுக்கே முடியாதுன்னு சொன்னேம். மனசாட்சியே இல்லாம முப்பது நிமிஷம்ன்னு சொன்னார். எனக்கு ஒரு பயம் பொதுவெளியில பேசுவதற்கு. டீம் மீட்டிங்ன்னு நினைச்சிகோங்க தலைவரேன்னு சொன்னார்.
நானும் அப்டிதான் ஒரு பிரசண்டேஷன்லாம் பிரிபேர் பண்ணி உக்காந்தா, உள்ளுக்குள்ள இருக்கிற படபடப்புல எப்டி அத பார்த்து பேசுறதுன்னு தெரியல. ஒரேயொரு நல்ல விஷயம், என்னால எளிதில் மறக்க முடியாத டாபிக்.
ரொம்ப தயக்கத்தோடதான் ஆரம்பிச்சேன். அப்றம் என்ன சுத்தி இருக்க நண்பர்கள் உறவினர்களுக்குதான் நன்றி சொல்லனும்.
நான் நல்லா எழுதுவேன்னு தெரியறதுக்கு முன்னாடியே, நீ நல்லா பேசுற அதையே எழுதிப்பாருன்னு சொன்ன நண்பர்கள் அவங்க. எப்போதும் அவங்களுக்கு கதை சொல்லியே பழக்கப்பட்டவன். ஆனா எப்போ கல்லூரி முடிஞ்சதோ அப்போவே பேச்ச கொறைச்சிச்டேன்.அதுவும் கோவையில் தம்பி பிரபாகரன் அவங்க மேலாண்மை துறைக்கு ஒருமுறையும் ....பள்ளிகளில் ..நான்கு முறையும் பேசி பழக்கம் ..
ஆனாலும் அந்த பழைய தைரியத்தில பேசவே ஆரம்பிச்சேன். அங்கங்க பதட்டம் இருந்தாலும் ஓரளவுக்கு இழுத்துட்டேன் (நல்லாவே 😷)

நன்றி ..நமக்கம் 

சனி, 2 மே, 2020


மருத்துவக்காப்பீட்டின் அவசியம் ...


நான் எனக்கும் என் குடும்பத்திற்கும் மருத்துவ காப்பீடு (health Insurance) எடுக்கலாம் என்று நினைக்கிறேன். எப்படிப்பட்ட காப்பீடு எடுப்பது நல்லது? எந்த நிறுவனத்தில் காப்பீடு செய்வது நல்லது? மருத்துவ காப்பீட்டின் மூலம் ஒரு நாள் மருத்துவம் செய்ய முடியுமா?

மருத்துவகாப்பீடு அவசியம்.

குடும்பத்தில் இருக்கும் அங்கத்தினர்களின் வயதுக்கு ஏற்றபடி சரியான திட்டங்களை தேர்வு செய்யலாம்.

உதாரணமாக ஒருவர் தனக்கும் தனது மனைவிக்கும் மற்றும் இரு குழந்தைகள், பெரியவர்கள் கொண்ட குடும்பத்திற்கும் சேர்த்து floater policy எடுப்பது நல்லது. இதில் பிரீமியம் குறைவு.

ஒரே காப்பீட்டுதொகைக்கு அனைவருக்கும் சேர்த்து பாலிசி தரப்படும்.

ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பாலிசி எடுக்கலாம்.

ஒவ்வொருவருக்கும் தனிதனியாக 5 லட்சம் வரை தனிநபர் பாலிசி எடுக்கலாம் . குடும்பமாக செய்து கொண்டால் அதற்கான தள்ளுபடி உண்டு. மற்றபடி இதில் பிரிமியம் கொஞ்சம் அதிகம்.

உங்களுடைய வயது மற்றும் செலவழிக்கக் கூடிய தொகையைப் பொறுத்து நீங்களே உங்களுக்கான பாலிசியைத் தேர்வு செய்யலாம்.

வரிச் சலுகைகள் உண்டு. தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனது மற்ற பதில்களில் ஏற்கனவே கூறியுள்ளபடி IRDA அங்கீகாரம் பெற்ற எந்த ஒரு காப்பீட்டு நிறுவனத்திலும் காப்புறுதி செய்து கொள்ளலாம்.

ஒருநாள் மருத்துவம் என்பதைப் பொறுத்தவரை சில குறிப்பிட்ட மருத்துவத்திற்கு மட்டும் அனுமதி உண்டு.

பொதுவாக 24 மணி நேரத்திற்கும் மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து , மருத்துவம் செய்து கொண்டால் மட்டுமே அதற்கான இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம்.

அதைவிடக் குறைந்த நேரத்தில் பெறப்பட்ட மருத்துவ சிகிச்சையையும் காப்பீட்டு பத்திரம் அனுமதிக்கும். உதாரணமாக, கண் அறுவை சிகிச்சை, பல் சம்பந்தமான அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ ரீதியான கருச்சிதைவு (உயிரை காப்பாற்ற செய்யக்கூடியது)எதிர்பாராத விபத்துக்கள் ,கருச்சிதைவு போன்றவற்றிற்கு ஒரு நாளை விடக் குறைவான நேரமே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட வேண்டியிருக்கும். அவற்றிற்குக் காப்பீடு உண்டு.

Day care treatment இதில் அடங்கும்.
இதன் விவரங்களை நீங்கள் காப்பீட்டுப் படிவத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்

சுந்தரம் பைனான்ஸ் லிமிட்
ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ்

மொபைல் -9944066681...

முக்கிய குறிப்பு.:
முதன்முறையாக் காப்பீடு செய்வதற்கு முன்பு ,ஏற்கனவே ஏதாவது உடல்நலக் கோளாறு இருப்பின் ,முதல் இரண்டு வருடங்களுக்கும்,சில கோளாறுகளுக்கு முதல் நான்கு வருடங்களுக்கும் செலவை தாங்களே ஏற்க வேண்டியிருக்கும். நான்கு வருடங்களுக்குப் பின்னரே காப்பீட்டு நிறுவனம் உங்கள் செலவை ஏற்றுக்கொள்ளும். இவற்றை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டும், அறிந்து கொண்டும் காப்பீடு செய்துகொள்வது நல்லது.
என் எழுத்து .....


என் எழுத்து என்பது 25 வயதிற்குள் இருப்பவர்களைச் சென்று சேர வேண்டும் என்றே அதிகம் விரும்புவேன். 40 ப்ளஸ் எல்லாம் இருக்கிற எதார்த்த அவஸ்தைகளிலிருந்து விடுதலை பெறவே ஃபேஸ்புக், வாட்ஸாப்ப்,டெலிகிராம் ,இன்ஸ்டாகிராம்  பயன்படுத்துகிறார்கள் என்பதனை ஆழமாக நம்புகிறேன். 

இது தான் உண்மையும் கூட. நட்புக்கோரிக்கையில் கதவைத் தட்டும் 25 வயதிற்குக் கீழே உள்ளவர்களைப் பற்றி எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்வதுண்டு. எழுதாமல் இருந்தாலும் அவர்கள் நிச்சயம் படிக்க வாய்ப்புண்டு. இளைய தலைமுறையினர்  சிறு கேள்வி பதில் கேட்பார்கள் ...அதும் நான் பதிவிடும் கேள்வி பதில்கள் அதிகம் விரும்பி படிக்கிறேன் என்பார்கள் ..மகிழ்ச்சி ..

கடந்த சில தினங்களாகக் கல்லூரி மாணவர்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றார்கள்.

நன்றி ..தொடரும் நட்புகள் .சொந்தங்கள் ...
உடுமலை பஞ்சாலை மேற்பார்வையாளர் ....


பஞ்சு பறக்கும் தொழிலில் இருப்பதால் கடந்த பத்தாண்டுகளாக ஒரு நாள் கூட முகமூடி அணியாமல் தொழிற்சாலைக்குள் இருந்ததே இல்லை. தொழிற்சாலையைச் சுற்றி வரும் போது கட்டாயம் முக கவசம் என் முகத்தில் இருக்கும். பெரும்பாலும் தொழிலாளர்கள் முதல் மற்றவர்கள் வரை ஆடிட் நடக்கும் சமயங்களில் தான் அணிந்திருப்பார்கள். அணியச் சொன்னாலும் மறுப்பார்கள். பறந்து கொண்டேயிருக்கும் பஞ்சு துகள்களை அருகே நின்று வேடிக்கை பார்க்க முடியும். சுவாசத்தில் ஒன்றாகக் கலந்து உள்ளே வெளியே என்று விளையாட்டு காட்டி பறந்து கொண்டிருக்கும். ஆனால் மக்களைத் திருத்த முடியாது. நான் திருத்த முற்படுவதில்லை. ஆனால் கட்டாயம் நான் உள்ளே நுழைந்தவுடன் அணிந்து விடுவேன். காரணம் காலையில் முழுமையாக ஒரு ரவுண்டு வர வேண்டும். மதியத்திற்கு முன்பு ஒரு முறை என்று குறிப்பிட்ட நேர இடைவெளியில் சுற்றி வர வேண்டும் என்பதால் அணிந்து கொள்வதுண்டு.


ஆனால் ஒரு நாளைக்கு மூன்று கவசங்களை மாற்றி விடுவதுண்டு. பயன்படுத்திய முக கவசங்களை நானே குப்பைத் தொட்டியில் கிழித்துப் போட்டு விடுவதுண்டு. அதாவது குப்பை எடுக்கும் அம்மா கூட அதனைத் தொடாமல் காகித்தில் சுற்றிப் பாதுகாப்பாக என் அறையில் உள்ள கூடையில் போட்டு அந்த அம்மாவிடம் கொடுப்பேன். "ஏன் சார் குப்பையைத் தங்கம் மாதிரி தர்றீங்க" என்று சிரிப்பார். அவருக்குத் தெரியாது. என் நோய் நொடி எல்லாம் வயதான அந்த அம்மாவுக்கு வந்து விடக்கூடாது என்ற அக்கறை. ஆனால் சொன்னாலும் அவருக்குப் புரியாது. நான் சொல்வதும் இல்லை. நான் என்னளவில் சரியாக இருந்து கொள்வதுண்டு.

நன்றி .....

தகவலுக்கு நன்றி என் நீண்டகால நண்பர் பஞ்சாலை மேற்பார்வையாளர்க்கு 

வெள்ளி, 1 மே, 2020

குஜ்ஜபொம்மு  எப்படி பிறந்தார் என்ற தகவல்  ஒரு பாடல் வழியாக கூறும் செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். 
 காடேரி பொம்மு குரி பொம்மு வீரசின்னம்மா இவர்கள் மூன்று பேர் உடன் பிறந்தோர் என்றும்  வீர சின்னம்மா  கன்னியாக கருவுற்ற செய்தி அறிந்த காடார பொம்மு சகோதரி நீதி தவறியதாய் 
 சந்தன கட்டைகளை கொண்டு  அடக்கி தீ மூட்டி அந்த தீயில்  வீரசின்னம்மாவை இறக்கி விடுகிறார்கள்   அம்மக்கள்  அப்பொழுது வயிற்றில் இருந்த குழந்தை வெடித்து கத்தி ராயிலு  எனும் பெயர் கொண்ட   பாறைகளின் இடுக்குகளில்  போய் விழுந்த அக்குழந்தை  தானாக காடுகளில் காட்டெருமை பால் பருகி வளந்து வெறிக்கெட்டி முத்து  என்ற நாயக்கர்   (ஆவலு தொட்டி) மலையில் போட்ட பட்டிகளில் அலைந்த அக்குழந்தையை விசாரித்து  அப்பொழுது அங்கு வரும் மீனுலிங்கம் நடந்தவற்றை கூற பின்னர் எடுத்து வளர்த்து ஆளாக்கி  காடர  பொம்மு  மக்கள் கூடும்  கூட்டங்களில்  நிறுத்தி நடந்தவற்றை கூறி மக்கள் ஏற்று கொண்டு  வளர்த்ததாகவும்  அவர்கள் அக்கனி குதிரையில் ஆகாயத்தில் பறக்க தெய்வ சக்தி படைத்தவர் என்றும் கூறுகிறது.
 ஆனால் இவை நம்பும் படியாக இருக்கிறதோ இல்லையோ இது போன்ற கதைப்பாடல் இன்றும் கோவில் திருவிழாக்களில் பாடுவதை கேக்க முடிகிறது.