புதன், 8 நவம்பர், 2017

திரு சிவகுமார் பற்றிய அறிமுகம்

இன்று உடுமலைப்பேட்டை என்றாலே நம் குழுவில் நினைவிற்கு வரும் திரு  சிவகுமார் அவர்கள் , பிறந்த ஊரும் அதே.

அவருடைய தந்தை பெயர் திரு கிருஷ்ணசாமி .
தாயார் பெயர் திருமதி கொண்டம்மாள் .

கோவையில் உள்ள வித்யா சாகர் கல்லூரியில் BBA படிப்பை 1996 ஆம் ஆண்டு படித்து முடித்த இவர் ,STERLING  TREE MAGNUM எனும் கம்பெனியில் தனது முதல் பணியில் சேர்ந்து 1  ஆண்டு நிர்வாக பணியில் இருந்து உள்ளார்.

பின்னர் கோவையில் உள்ள சௌடாம்பிகா கல்லூரியில் பணியில் சேர்ந்து 1  ஆண்டு நிர்வாக பணியில் இருந்து உள்ளார்.

இதற்கு பின்னரே அவர் சுந்தரம் பைனான்ஸ் கம்பெனியில் 1999  முதல் இன்று வரை பணி செய்து வருகிறார்.

இவர் உடன் பிறந்தவர்கள் ஒருமூத்த  சகோதிரியும்( பெயர் - திருமதி  கார்த்திகேயினி) மற்றும் இளைய சகோதரர் (திரு நாகராஜ் ). ஆவர்.

தன்னுடைய மாமன் மகளான சத்தியா ( கல்வி - M com  & LLB) அவர்களை  திருமணம் செய்து கொண்டு உள்ளார். இவர்களுக்கு ஷியாம் என்ற ஒரு மகன் உள்ளார் . இவர் 4 வகுப்பு படித்து கொண்டு உள்ளார்.

அவரிடம் பேசும் வரையில் அவரை பற்றிய பரிமாணம் வேறாக இருந்தது.
ஆனால் பேசிய பின் அவருடைய மொழி, இன ஆர்வம் மற்றும் சேவைகள் உண்மையில் ஒருவரை ஆச்சிரிய படுத்தும் வகையில் இருந்தது.

தமிழ் ஆர்வமும் மற்றும் நம்முடைய வரலாறுகளையும் அவற்றை  பாதுகாக்கவும், அடுத்த தலைமுறை மக்களுக்கு எடுத்து செல்லவும் இவர் செய்த செயல்கள் என்றென்றும் பாராட்டுக்குரியது.

இதை விட என்னை கவர்ந்த ஒரு விஷயம் என்ன வென்றால் , தன்னுடைய 80 வயதுள்ள தாய் தந்தையரை இன்றளவும் பேணி காத்து அவர்களின் வாழ்க்கையில் ஒரு வித நிறைவை கொடுத்து உள்ளார்.

அவர் தாயும் தந்தையும் கல்வி கற்காதவர்கள். சாதாரண பொருளாதார நிலையில் இருந்து தம் மக்களை சீர் மக்களாக மாற்றி உள்ளனர்.

இந்த சமுதாயத்திற்கு ஒரு நல்ல மக்கள் செல்வங்களை அளித்த பெருமை அவர்களை தொடரும்.

தொழில்ரீதியாக திரு சிவகுமார் அவர்களுக்கு பல வெளிநாட்டு நண்பர்கள் உள்ளனர். ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தானை தவிர்த்து மற்ற மேலை நாடுகள் மற்றும் ஆசியா நாடுகளில் இவர் நட்பு வட்டாரம் விரிந்து உள்ளது.

இந்த தொடர்புகள் நம் சமுதாய மக்கள் வெளி நாட்டிற்கு கல்வி கற்க அல்லது பணிக்கு செல்லும் போது பெரிதும் உதவ வாய்ப்பு உள்ளது.

இவருடைய அனுபவம்  அனைத்தும் வீட்டு கடன் மற்றும் முதலீடுகள் பற்றிய துறையில் இருப்பதால் , இவரது உதவி மற்றும் அனுபவத்தை நம் மக்கள் உபோயக படுத்தி கொள்ளலாம்.

நன்றி 

பெயரை மட்டும் சொல்லுகிறேன் ..நீங்கள் புகைப்படத்தை பார்த்து யார் மணிகண்டன் என்பதை தெரிந்துகொள்வீர்கள் ....இதில் யாராக இருக்கும் ..நெல்லைமணிகண்டன் ..?

பெயர் : நெல்லை மணிகண்டன்
வயது : 43
கல்வி : பட்டயப்படிப்பு நாட்டுப்புறக்கலைகள் - சென்னை இசைக்கல்லூரி
குழுவின் பெயர் : ஸ்ரீ சக்கதேவி கலைக்குழு
முதன்மை கலை வடிவம் : தேவராட்டம்
துணை கலை வடிவம் : ஒயிலாட்டம்,பறையாட்டம், ஒயிலிசை கும்மியாட்டம் மற்றும் சிலம்பம்
ஊர் : ஜமீன் கோடாங்கிப்பட்டி தூத்துக்குடி மாவட்டம்
தொடர்புக்கு : 9841917739
நிகழ்த்து அனுபவம் : 25,ஆண்டுகளாய் எண்ணிலடங்கா நிகழ்வுகள்.
பயிற்சி அனுபவம் : ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதாய் மகிழ்வோடு குறிப்பிடுகின்றார்.
தற்போது : 1996லிருந்து சென்னை மாம்பலத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா பள்ளியில் சிலம்பம் உள்ளிட்ட கிராமியக்கலை பயிற்றுனராக உள்ளார்.

ஆசான்கள் : கிராமியக்கலை மணி மு.கண்ணன் குமார் அவர்கள் (தந்தை)
கலைமாமணி குமாரராமன் அவர்கள் (பெரியப்பா)
கலை முதுமணி ரங்கராஜன் அவர்கள்

விருதுகள் : கிராமியக்கலைமணி - இசைக்கல்லூரி - சென்னை
இளம் கலைஞன் - சங்கீத நாடக அகாடமி - டில்லி
வௌிநாடு : பிரான்ஸ்

தேவராட்டக்கலைஞர் நெல்லை மணிகண்டன் அவர்கள் தமிழகம் அறிந்த சிறந்தக்கலைஞர். மனநிலை குன்றிய குழந்தைகளிடம் நாட்டுப்புற இசையின் - அடவுகளின் வழியே நல்ல மாறுதலை உடல் - மனரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொண்டு வர கடந்த பதினைந்து ஆண்டுகளாய் முயன்றும் வெற்றியும் அடைந்து வருவதாக பெறுமையோடு கூறுகின்றார். மத்திய அரசின் நிறுவனமான சங்கீத நாடக அகடாமி வழங்கிய இளம் கலைஞன் (யுவப்புரஸ்கார் விருது) தனக்கு முன்பும் பின்பும் நாட்டுப்புறக்கலைகளில் வேறு யாரும் பெற்றதில்லை என்றும் தகவல் பகிர்ந்தார். தமிழகத்தின் பல நாடக ஆளுமைகளின் படைப்பாக்கத்தில் உடன் பணியாற்றும் வாய்ப்பை பெற்றவர் என்பது கூடுதல் சிறப்பாகும்.

கலைகளை வளர்ப்போம்
கலைஞர்களை வாழ்விப்போம்.
பயிற்சி மற்றும் நிகழ்ச்சி வேண்டுவோர் இவரை அனுகவும் நன்றி
# புத்தர் கலைக்குழு


நம் சமுதாயத்தில் போற்றப்படவேண்டிய நல்ல மனிதர் ...எனக்கு முகநூலில் தான் அறிமுகம் ..4 வருடங்கள் இருக்கும் ...என் மதிப்பிற்கும் ,மரியாதைக்குரிய ..நேரில் பார்த்திடாத நம் நெருங்கிய சொந்தம் ...

நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளையில் இணைந்து இருப்பது நமக்கு பெருமை ....


செவ்வாய், 7 நவம்பர், 2017




நேற்று உடுமலைப்பேட்டை தளி சாலையில் அமைந்த முதன்மை நூலகத்தில் ...வாசகர் வட்டம் சார்பில் மேலாண்மை பொன்னுசாமி அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது ...


சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி

அன்றைய ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் உள்ளார்ந்த கிராமமான மேலாண்மறை நாட்டின், அன்னபாக்கியத்திற்கு மகனாய் பிறந்து தொடக்கக் கல்வி மட்டுமே முடித்து தன் வீர்யமிக்க எழுத்துகளால் செம்மலரின் மகனாக மாறி வாழ்வில் மேன்மையடைந்த பொன்னுசாமியின் சொற்கள் இவை.

1972 ல் ‘ பரிசு ‘ எனும் சிறுகதை செம்மலர் மாத இதழில் பிரசுரமாகி அவரின் எழுத்துப் பயணம் துவங்கியது. 22 சிறுகதை தொகுப்புகள், 6 நாவல்கள், 6 குறுநாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு என எழுதிக் குவித்தவர். விருதுகள் இவரால் பெருமை பெரும் அளவு ஆதித்தனார் விருது , வட அமெரிக்க தமிழ்சங்க பேரவையின் மாட்சிமை விருது, இலக்கிய சிந்தனை விருது என பல்வேறு விருதுகளைப் பெற்றதுடன் ‘ மின்சாரப்பூ’ சிறுகதை தொகுதிக்கு சாகித்ய அகாதமி விருதும் பெற்றார். அதனுடன் தொடக்கக் கல்வி படித்தவரின் எழுத்துகள் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெருமையும் பெற்றார்.

அவரின் படைப்புகளை வாசிக்கும் யாராயினும் அவரின் எழுத்துகள் கிராமிய மணம் கமழும் பேசுபொருளுடன் இருப்பதை உணர இயலும்.

உதாரணமாக ”மானுடப்பிரவாகம்” எனும் தொகுப்பின் முதல் சிறுகதையின் தலைப்பு மானுடப் பிரவாகம் ! மாமன் மச்சினன் உறவில் செய்முறை செய்வதில் உருவாகும் அதிருப்தி , வேறொரு பிரச்னையில் காவல்துறை வரை சென்று கதாநாயகன் அவமானப்படும் சூழலாய் மாறுகிறது. தங்கை குடும்பத்தினருடன் முகமுழி கூடாது என ஒதுங்கியிருப்பவனை மருமகனான சிறுவனின் சாவு தாய்மாமனாக கதாநாயகனை ஓடச் செய்வதும் அனிச்சையாய் ஒருவரோடொருவர் கலப்பதுமே கதை.

‘ ஊர்மண் ‘ எனும் நாவல். இதில் கிராம மனிதர்களின் காதல், காமம், விவசாயம், வியாபாரம், சாதிப்பிரிவினைகள், அதை தாண்டிய மனிதம், அரசியல் கலக்கும் சாதி விசம், அதன் விளைவுகள், மாற்று அரசியல் அந்த விசத்தை முறியடித்து மனிதம் காப்பது என பல்வேறு அம்சங்களை கொண்டு வந்திருப்பார்.

இவையிரண்டும் ஒரு சோற்று பதம். இவரின் எழுத்துகள் மனிதர்களை எந்தப் பூச்சும் இன்றி நம் முன் உலவ விடும். அவைகளில் இழையோடும் காதல் காமம் வன்மம் எதுவாயினும் கிராமத்து மண்ணுக்கேயுரிய யதார்த்தம் மிக்கவை. அதன் காரணமாகவே அவை அவரின் தனிச்சிறப்பாகவும் வீரியம் கொண்டதாகவும் உள்ளன. முதலாளித்துவ இதழ்கள் கூட நிராகரிக்க இயலாத அழகியலை பெற்றிருக்கின்றன.

இப்படிப்பட்ட தலைசிறந்த எழுத்தாளராக இருப்பினும் தோற்றத்தில் உள்ள எளிமை போலவே பழகும் தன்மையிலும் எளிமையானவர். சாய்நாத்தின் புத்தகத்தில் அவரைப் பற்றிய பேட்டி இருக்கிறது. அதை நான் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என குழந்தையின் குதூகலத்துடன் தொலைபேசியில் அவரிடம் கூறியபோது மிகவும் பொறுப்புடன் பல விசயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த அடக்கம் அவரிடம் கற்க வேண்டிய விசயமாய் என்னுள் பதிந்தது.

எழுத்தாளராக மட்டுமின்றி த மு எ க சங்கம் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.

” எழுதுவது பிறவியிலேயே வருகிறது என்கிறார்கள். அது உண்மை இல்லை என்று நமது அமைப்பு நிரூபித்து வருகிறது. அதன் நேரடி சாட்சி மேலாண்மை பொன்னுசாமி ” என மறைந்த தோழர் முத்தையா பேசியதாக எழுத்தாளர் தேனி சீருடையான் தன் அஞ்சலிக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
அது உண்மை என்பது தொடர் வாசிப்பு, மக்களை கூர்ந்து கவனித்தல், அரங்க செயல்பாட்டின் தீவிரம், விவாதங்கள், விமர்சனங்களுக்கு செவி சாய்த்தல் எனும் மேலாண்மையின் வாழ்வை உற்று நோக்கும் யாராயினும் உணர இயலும்

உடல்நலக் குறைவால் அவர் இயற்கை எய்திய போதும் அவரின் எழுத்துகளின் வழியே காலத்தை மீறி நம்முடன் வாழ்ந்து வருவார். சமூக மாற்றத்திற்கு வித்திடும் அவரின் படைப்புகளை வாசித்து உள்வாங்குவதும் படைப்புகளை உருவாக்க முயல்வதுமே அவருக்கு நம் அஞ்சலியாகும்.

திங்கள், 6 நவம்பர், 2017


தினமலர் முதல் பக்கம் Date....05-11-2017...பொது செய்தி தமிழ்நாடு


பாளையக்காரர்களின் சுதந்திர போராட்ட வரலாறு: தொல்லியல் துறை ஆய்வு

உடுமலை:உடுமலை அருகே, ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் அழிக்கப்பட்ட பாளையக்காரர்கள் வரலாற்றை கண்டறிய, தொல்லியல் துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ளது தளி பேரூராட்சி. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துக்கு முன், இப்பகுதி பாளையம், எனப்படும் ஆட்சி முறையின் கீழ் இருந்துள்ளது. எத்தலப்பர் எனப்படும் வம்சாவளியினர் இப்பகுதியை ஆட்சி செய்து, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் அழிக்கப்பட்டுள்ளனர்.பி.ஏ.பி., திட்டத்தில், திருமூர்த்தி அணை கட்டும்போது, அப்பகுதியில், புதைந்திருந்த எத்தலப்ப மன்னர்களின் சிலைகள், கண்டறியப்பட்டு, பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தளி பாளையம் குறித்து, பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டாலும், அதற்கான ஆதாரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. இது குறித்து, 'கம்பள விருட்சம்' எனும் அறக்கட்டளை சார்பில், முதல்வருக்கு, கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
இதையடுத்து, தொல்லியல் துறை சார்பில், ஆதாரங்களை கண்டறிந்து, சுதந்திர போராட்ட வரலாறு குறித்த, தகவல்களை சமர்ப்பிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொல்லியல்துறை கோவை மண்டல ஆய்வாளர்கள், நந்தகுமார், ஆறுமுகம் தலைமையிலான குழுவினர், தளி சுற்றுப்பகுதியில், ஆய்வு நடத்தினர்.காண்டூர் கால்வாய் அருகிலுள்ள சிலைகள், பாலாற்றின் கரையிலுள்ள கல்வெட்டு, ஆங்கிலேய வீரனை எத்தலப்பர் துாக்கிலிட்ட துாக்கு மரத்தோட்டம் உட்பட பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. கல்வெட்டுகளை படியெடுத்த, குழுவினர், பிற தகவல்களையும் சேகரித்து சென்றுள்ளனர்.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறுகையில், 'ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான போரில், தீபகற்ப கூட்டணி என்ற பெயரில், பழநி அருகே விருப்பாட்சி முதல் கேரளா வரையிலான பாளையக்காரர்கள் ஒருங்கிணைந்து போராடியுள்ளனர். இதில், தளி பாளையக்காரர்களும் பங்கேற்று, போரிட்டுள்ளனர். போருக்கு பிறகு, தளி பாளையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களுக்கான ஆதாரங்களை கண்டறியும் வகையில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தியுள்ளது, மகிழ்ச்சியளிக்கிறது' என்றனர்.

ஞாயிறு, 5 நவம்பர், 2017

குழந்தைகளின் நூலக பொன்விழா ஆண்டு -2017-உடுமலைப்பேட்டை

இன்றைய ஞாயிறு ...உடுமலையில் மழை இல்லாத காலை ...கொஞ்சம் மழையின் ஈரப்பதம் கலந்த காலைவேளை ...ஏன் என்றால் கிளை -2 நூலக பொன்விழா ஆண்டு ..தேசிய நூலக வாரவிழா ...
பேச்சு போட்டி :
நம் எதிர்கால குழந்தைகளின் பேச்சு மழை ...அருமையாக இருந்தது ...

ஓவிய போட்டி :
இன்றய குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி என்பது ..ஏதோ வேலை வெட்டி இல்லாமல் நோட்டில் கிறுக்கி கொண்டு இருப்பதை நம் பெற்றோர்கள் நினைத்துக்கொண்டு உள்ளார்கள் ..வீட்டில் இதை செய்துகொண்டிருந்தால் குழந்தைகளை திட்டிக்கொண்டு உள்ளோம் ..அப்படி அல்ல ...நாளை எதிர்கால இந்தியாவை மாற்றி காட்டுவார்கள் ...எந்த ஒரு பொருளுக்கும் வடிவம் வேண்டும் ..அதை தான் இந்த ஓவியப்பயிற்சி செய்துகொண்டுஉள்ளது ..ஒரு தொழில் துறைக்கும் ,விஞ்ஞான துறைக்கும் ,இந்த ஓவியப்பயிற்சி தான் மூலதனம் ...அதைத்தான் இன்று நூலக பொன்விழா ஆண்டில் போட்டி நடத்தி குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுத்து வழிநடத்திகொண்டுஉள்ளது..வரைந்த ஓவியங்கள் அருமையாக இருந்தது .

.கதைசொல்லும் போட்டி :
குழந்தைகள் தங்கள் நுண்ணறிவு மூலம் அருமையாக கதை சொல்லி எங்களை ஆச்சர்யப்படுத்தினார்கள் ..


திருப்பூர் மாவட்டம் உழவர் சந்தை எதிரே உள்ள உடுமலை கிளை எண்2  நூலகத்தில் பொன்விழா ஆண்டு தேசிய நூலக வார விழா முன்நிகழ்வாக05.11.2017 ஞாயிறு கட்டுரை பேச்சுப்போட்டி கவிதைப்போட்டி மற்றும் கதை சொல்லி நிகழ்ச்சியும் நடந்தது நிகழ்ச்சிக்கு உடுமலை அரசுகலைக்கல்லூரி வேதியியல் தறை உதவிபேராசிரியர்திருமாவளவன் தலைமைவகி த்தார்.இரண்டாம் நிலை நூலகர் கணேசன் வரவேற்றார்.  சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமயாசிரியர் பாலசுப்பிரமணியன், உடுமலை பாரதியார் மகளிர் நூற்றாண்டு பள்ளி பட்டதாரி தமிழாசிரியர் சின்னராசு, அமராவதி சைனிக்பள்ளி ஆங்கில ஆசிரியர்இளமுருகு, சுந்தரம்பைனான்ஸ்உடுமலைமேலாளர் சிவக்குமார், சமுக ஆர்வலர் சோமசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நான்விரும்பும் தேசத்தலைவர்என்றதல்பில் பேச்சுப்போட்டியும்  கலாம் கண்ட நூலகம் என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும் .வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் கவிதைப்போட்டியும் நடத்தப்பட்டது  கதை சொல்லி நிகழ்ச்சியில் இரணடாம்வகுப்பு மாணவி யாழினி கதை சொல்லி அனைவரையும் கவர்ந்தார். நிறைவாக நூலகர் மகேந்திரன் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுககளை நூலகர்கள் அருள்மொழி செலவராணி ஆகியோர் செய்திருந்தனர்....





சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி_ நினைவேந்தல் 




உடுமலை முதற்கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் 6.11.17 திங்கள் மாலை 5.45 மணிக்கு கரிசல் மண்ணின் மக்கள் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு உடுமலை தளிரோடு முதற்கிளை நூலகத்தில் நடைபெறும்.வாசகர்கள் ,,இலக்கிய ஆர்வலர்கள்,, அனைவரும் நிகழ்வில் பங்கேற்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி ..அவர்களை பற்றி சிறுகுறிப்பு ...


அண்மையில் மறைந்த திரு மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் ஓர் அருமையான எழுத்தாளர். அவர் பள்ளியில் படித்தது 5 ஆம் வகுப்பு வரைதான். சாகித்ய அகாடமி விருது பெற்ற அவரே சொல்வதைக் கேளுங்கள்.
"வாசிப்பது என்பது எழுத்தாளனுக்கு உணவு மட்டுமல்ல உயிரைப் போன்றதும் ஆகும்.ஐந்தாவது வரை மட்டும் படித்த எனக்கு நூல்களே ஆசிரியர்கள் ஆயின. நான் நூல்களால் கட்டமைக்கப் பட்டவன். படிப்பு என்பது சிலருக்குப் பள்ளியுடன் நின்று விடும் சிலருக்கு கல்லூரியுடன் முடிந்து விடும்.நூல்களுடன் எனது பரிச்சயம் தொடங்கியது எனது 18 ஆவது வயதில். எந்தக் கலவரையறையும் இன்றி வாசிப்பு மூச்சாகத் தொடர்கிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.வாசிப்பு உயிரை வளர்ப்பது.மனதை வளர்ப்பது ஞானத்தைச் செழுமைப்படுத்துவது.விடுதலைப் போராளி பகத் சிங் தூக்கிடப்படுவதற்கு முதல் நாள் வரை வாசித்துக்கொண்டிருந்தார். அதுதான் வாசிப்பின் வசீகரம்.
வறுமை என்பது பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால் வாசிப்பு வறுமையின் முற்றுகையைத் தகர்த்துப் பள்ளிப்படிப்பு தராத அனுபவங்களைத் தந்தது, அனுபவங்களை பகிரச் செய்தது."
இந்த மண்வாசனை வீசும் எழுத்துக்களின் சொந்தக்காரர் தனது சிறுகதைகளின் தொகுப்பைத் தனது வாழ்வாதாரமான வீட்டில் இருந்த தான் வளர்த்த ஆடுகளை விற்று அதில் வந்த காசில் வெளியிட்டிருக்கிறார்.
ஜெயகாந்தன் இதே போன்று புத்தகங்கள் உருவாக்கிய மேதை. அவர் வரிசையில் இன்னுமொரு மாணிக்கம். நான் இவரின் எழுத்துக்களை அதிகம் வாசித்ததில்லை அதிகம் போனால் ஒரு 10 -12 சிறுகதைகள் மட்டுமே வாசித்திருக்கிறேன்.
இவர்களையெல்லாம் பார்க்கும் போது நான் இன்னும் கொஞ்சம் Inspire ஆகிறேன்.
இவர்கள்தான் உண்மையான போராளிகள்.
இவர்களின் வாழ்க்கை வரலாறுகளை பள்ளியில் பாடமாக வையுங்கள்.
இல்லாத வீட்டுப் பிள்ளைகளின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இவர்கள்.
வீட்டுக் கடன் தெரியும்.. அது என்ன நிலக்கடன்....(DTCP-approved site மட்டும்) ..?
நம்ம கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியான நம்ம சிவா ..., தன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்குச் செல்ல தினமும் 40 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். இப்படி அன்றாடம் பயணிப்பதால், பெரிய செலவுகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, வேலையில் மந்தமாகவும் வினைத்திறனற்றவராகவும் செயல்படுகிறார். ஏன் அலுவலகத்தின் அருகிலேயே நான் சிறிய இடம் ஒன்றை வாங்கி அங்கே இரண்டாவது வீட்டை கட்டிக் கொள்ளக் கூடாது என நம்ம சிவா ... யோசித்தார். தன் அலுவலகம் அருகிலேயே ஒரு இடத்தை வாங்க நிலக்கடனை பெற ஒரு வங்கியை அணுகினார் அவர். ஆனால் அந்த நிலம் தொழில்துறை பகுதியில், நகராட்சி எல்லைக்கு வெளியே உள்ளதென்ற காரணத்தைக் காட்டி, நம்ம சிவா ...விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
ஆயிரம் கேள்விகள்:
தன் விண்ணப்பம் வங்கியால் நிராகரிக்கப்பட்ட பிறகு, நம்ம சிவா ...க்குப் பதில்களை விடக் கேள்விகள் தான் அதிகமாகத் தோன்றின. நம்ம சிவா ...போல் நிலக்கடன் வாங்குவதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்பாக நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய கேள்விகள் ஐந்து உள்ளது.
யார் நிலக்கடனை (DTCP-approved site மட்டும்) பெற முடியும்? 21 வயதைக் கடந்த அனைத்து இந்திய குடிமகன்களுக்கும் வங்கிகளும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களும் நிலக்கடன்களை அளிக்கிறது. வீடு கட்ட நிலம் வாங்கப்பட்டிருந்தால், சில வங்கிகள் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் கூட நிலக்கடனை வழங்குகிறது. இந்தியாவில் வசிப்பவர்கள் என்றால், கடனை நல்லபடியாகச் செலுத்தியுள்ள சம்பளம் வாங்கும் தனி நபர்கள் மற்றும் சுய தொழில் ஈடுபட்டுள்ள தனி நபர்களுக்கு நிலக்கடன் வழங்கப்படும்.
கட்டுப்பாடுகள் நிலக் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால், நீங்கள் வாங்கும் இடம் குடியிருப்பு இடமாக இருக்க வேண்டுமே தவிர விவசாய இடமாகவோ அல்லது வணிக ரீதியான நிலமாகவோ இருக்கக்கூடாது. அதே போல் அந்த நிலம் மாநகராட்சி / நகராட்சி எல்லைக்குள் இருந்தாக வேண்டும். இந்தியாவில் வசிப்பவர்கள் என்றால், ஒரு இடத்தை வீடு கட்டும் எண்ணத்தில் வாங்கினாலும் சரி, அல்லது வருங்கால முதலீட்டு எண்ணத்தில் வாங்கினாலும் சரி, அவர்களுக்கு நிலக்கடன் அளிக்கப்படும்.
நிலம் வாங்க அதிகப்படியான கடன் எவ்வளவு? கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது முழுவதுமாகக் கட்டப்பட்டிருக்கும் வீட்டிற்கு அளிக்கப்படும் மரபு ரீதியான வீட்டுக்கடன்களைப் போல் அல்லாமல், நிலக்கடனுக்கு அதிகப்படியாக நகர்ப்புறத்தில் உள்ள நிலத்தின் மதிப்பின் மீது 70% வரை கடன அளிக்கப்படும். சிறிய நகரங்கள் என்றால், நிலக்கடனுக்கான அதிகப்படியான எல்.டி.வி. வீதம், நிலத்தின் மொத்த மதிப்பில் 50%-60% எனப் பொதுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்பணம் நீங்கள் நிலக்கடன் மூலமாக ஒரு நிலத்தை வாங்க முடிவெடுத்தால், உங்கள் கையில் இருந்து நிலத்தில் மதிப்பில் இருந்து 30%-50% வரை கட்டியாக வேண்டும்.
நிலக்கடன் மூலமாக நான் வரிவிலக்கு நிலக்கடன் என்பது வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடனில் ஒரு அங்கமாக இருந்தாலும் கூட, நிலம் வாங்குவதற்காக வாங்கப்பட்டுள்ள வீட்டுக்கடனை அடைக்கும் தொகையின் மீது வரி விலக்கு அளிக்கப்பட மாட்டாது. இருப்பினும், நீங்கள் வாங்கிய நிலத்தில் வீடு கட்டும் பணியை நீங்கள் தொடங்கி விட்டால், அந்தக் கடனின் ஒரு பகுதிக்கு நீங்கள் வரி விலக்குகளைப் பெறுவீர்கள். இருப்பினும், கட்டுமான பணிகள் முடிவடைந்த வருடத்தில் தான் இந்த விலக்கு பொருந்தும்.
பிற ஆவணங்கள் மேலும் இடத்தை விற்பவரின் பெயரில் உள்ள நில உரிமை ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது வங்கியல்லாத நிதி நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். வில்லங்கம் இல்லையென்ற சான்றிதழ்,உடைமை சான்றிதழ், இடம் சான்றிதழ் மற்றும் கடந்த 15 வருடங்களுக்கான ஆவணங்கள் போன்றவை இதில் அடக்கம்.
சிவக்குமார்....நிலகடன்கள்(DTCP-approved site மட்டும் )
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
Coimbatore,Pollachi, Udamalpet
கைபேசி : 9944066681 whatsapp:...9944066681.....(கோயம்புத்தூர்,பொள்ளாச்சி ,உடுமலைபேட்டை )

சனி, 4 நவம்பர், 2017

கோவையில் ஓசையின் உயிர் நிழல்...கோவை தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில்  நடைபெற்ற கண்காட்சி ....

..அடாத மழையில் விடாது புகைப்பட கண்காட்சி நானும் என் ஷியாமுடன் பார்த்தும் ...கேட்டும் ....ரசித்தும் ..... வீடு திரும்பினோம் .....

இன்றைய குழந்தை செல்வங்களுக்கு தங்களின் ஊர்களில் நடக்கும் கண்காட்சிகளை காணசெய்யவேண்டும் ....
நம் இந்திய காடுகள் பற்றிய முக்கியத்துவத்தையும், அவற்றால் நாம் அடையும் பயன்கள் குறித்தும் தெரிந்து கொள்ளவும் இந்த கண்காட்சி பெரிதும் துணை புரிந்தது . காடுகள் அழிவது, அந்த அழிவில் நம் பங்கு, அவற்றை தடுக்கும் முறை, காடுகளையும், காட்டு விலங்கு களையும் பாதுகாக்கும் முறைகள் குறித்த புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் அடக்கம். ஷயமுடன்  கண்காட்சியை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்தோம் . நிகழ்ச்சியின் அங்கமாக நம் வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்கும் முறை குறித்த உரையாடலும் ,நாடகங்கள் அருமையாக இருந்தது . சா.கவியரசன் மற்றும் கோ.க.தினேஷ் ஆகியோரின் புகைப்படங்கள் அருமையாக இருந்தது....காட்டு விலங்குகள் நம் உயிர் நண்பர்கள்....

...






புதன், 1 நவம்பர், 2017

மழை ...வானிலை ...மகிழ்ச்சி


தொடங்கப்போகுது இடியுடன் கூடிய கனமழை...! .கையில் குடையுடனே இருங்கள்....


தமிழகத்தில் மீண்டும் மாலை, இரவு நேரத்தில் மட்டும் கொட்டோ கொட்டுனு கொட்டப்போகுது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,சென்னையை பொறுத்தவரையில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்


தொடங்கப்போகுது இடியுடன் கூடிய கனமழை...! .கையில் குடையுடனே இருங்கள்....
நமது சொந்தம் ஒருவர் நமது கம்பள விருட்சம் அறக்கட்டளை பற்றி என்னுடன் உரையாடிய...கேள்வி ..பதில் .

கேள்வி : Siva kumar. Long term sharemarket portfolio nam KV trust moolam pannalama? Discuss about this from auditors

பதில் : தற்பொழுது ...இந்தமாதிரி திட்டம் எல்லாம் இல்லை ...KV ...ஒரு பத்துவருடம் ...அறக்கட்டளை சொத்துக்கள் ..100 கோடி தாண்டியவுடன் ..இதை பற்றி யோசிக்கலாம் ...நீங்கள் நம் அறக்கட்டளை உறுப்பினரா ...உறுப்பினர் ஆகவில்லை என்றால் ..வரும் செயல்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு .உறுப்பினராக சேருங்கள் ...உங்களின் கருத்துக்கள் ..நம் சமுதாய முன்னேற்றம் ...வருங்கால  குழந்தைகளின் முன்னேற்றம் ..பற்றி உங்களின் சிந்தனைகளை தெரிவியுங்கள் ...உங்களின் வருகைக்காக காத்துஇருக்கிறோம் வாழ்த்துக்கள் ...

கேள்வி : Sir . Trust source 100cr akanumna atleast MF try pannalam illaya?

பதில் : தம்பி ...அதற்கான திட்டங்கள் ..வகுத்துவிட்டேன் ..அறக்கட்டளை க்கு,,,வருமானம் ..முதலில் முக்கியம் ..அதற்கான வழிகள் ,,மாதம் தோறும் சீட்டு தொகையில் வரும் ...கசர் தொகை தான் தற்பொழுது வருமானம் ... ...இப்பொழுது தான் ..கடந்த 3வருடங்களாக இந்த பணிகள் நடைபெற்று கொண்டு உள்ளது ..முறைப்படி அறக்கட்டளை பதிவு ..pan நம்பர் .....வங்கி கணககு ...உறுப்பினர்களிடம் ..மாத சந்தா ...உறுப்பினர்கள் நன்கொடை ..அடுத்தவருடம் அறக்கட்டளை வருமானவரி தாக்கல் ...எல்லாம் முறைப்படி நடந்து கொண்டு உள்ளது ...நம் தலைமுறை தான் ..படி படியாக செய்யவேண்டும் ..

என்னுடைய பணமாக இருந்தால் ...இதில் முதலீடு செய்யலாம் ...சிறு சிறு தொகை ...அறக்கட்டளை பதில் சொல்லவேண்டும் ...பரஸ்பர நிதியில் ..கடந்த 20 வருடமாக ...எனது நிறுவன வாடிக்கையாளர்க்கு சேவை செய்துவருகிறேன் ...இப்பொழுதுதான் அறக்கட்டளை குழந்தை பிறந்து இருக்கிறது ...படி படியாக வளர்வோம் ...
தம்பி ...அதற்கான திட்டங்கள் ..வகுத்துவிட்டேன் ..அறக்கட்டளை க்கு,,,வருமானம் ..முதலில் முக்கியம் ..அதற்கான வழிகள் ,,மாதம் தோறும் சீட்டு தொகையில் வரும் ...கசர் தொகை தான் தற்பொழுது வருமானம் ... ...இப்பொழுது தான் ..கடந்த 3வருடங்களாக இந்த பணிகள் நடைபெற்று கொண்டு உள்ளது ..முறைப்படி அறக்கட்டளை பதிவு ..pan நம்பர் .....வங்கி கணககு ...உறுப்பினர்களிடம் ..மாத சந்தா ...உறுப்பினர்கள் நன்கொடை ..அடுத்தவருடம் அறக்கட்டளை வருமானவரி தாக்கல் ...எல்லாம் முறைப்படி நடந்து கொண்டு உள்ளது ...நம் தலைமுறை தான் ..படி படியாக செய்யவேண்டும் ..

என்னுடைய பணமாக இருந்தால் ...இதில் முதலீடு செய்யலாம் ...சிறு சிறு தொகை ...அறக்கட்டளை பதில் சொல்லவேண்டும் ...பரஸ்பர நிதியில் ..கடந்த 20 வருடமாக ...எனது நிறுவன வாடிக்கையாளர்க்கு சேவை செய்துவருகிறேன் ...இப்பொழுதுதான் அறக்கட்டளை குழந்தை பிறந்து இருக்கிறது ...படி படியாக வளர்வோம் ...
கொண்டாடுவோம் ....இந்த முகநூல் மட்டும் இல்லையென்றால் ...இந்த கேள்விக்குறிக்கு இடம் இருக்காது ...எனக்கு அறிமுகம் ஆனதே ..நண்பர்களாக ...அப்புறம் தான் ..நம் சொந்தம் என்று தெரியும் ..தங்கவேல்சாமி மாமா ..ராஜ்குமார் அப்பணசாமி ...இவர்களால் தான் ..உங்களிடம் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பதற்கு ...இந்த முகநூல் தான்...கொண்டாடுவோம் .இந்த நான்கு வருட நட்பய் ...

நம் சொந்தம் அடுத்துவரும் திருமண நிகழ்வில் எங்காவது ...விரைவில் கண்டிப்பாக கொண்டாடுவோம் ...சென்னை யா...தூத்துக்குடியா ..உடுமலைப்பேட்டையா  ...கண்டிப்பாக ஒன்று சேர்ந்து கொண்டாடுவோம் ...கொண்டாடுவதற்கு சிறு அறிகுறி தென்படுகிறது ..நம்ம கார்த்தி ஸ்மார்ட் ...பார்க்கலாம் .. 
என் அருமை மாமா...சுக்காம்பட்டி ...ராஜபாண்டியன் ..அவர்களின் ஒரு நம் சமுதாய சிந்தனை பதிவு ....

Raja Pandian .....
ஒரு மனிதன் தன் முன்னேற்றத்தை தன்முயற்சிகொண்டே அடையமுடியும். அதுதான் அவனுக்கு சிறப்பு! அதேபோன்று ஒரு இனமும் தன் முன்னேற்றத்தை தன் முயற்சி கொண்டுதான் அடையமுடியும். நான் சொல்லவருவது, ஆண்டவரலாறு கொண்டு புத்தகங்கள் போட்டு புத்தி பேதலிக்க வைக்கும் முயற்சியை அல்ல! உழைப்பால் உயர, உங்கள் தியாகத்தால் உயர, இவ்விதம் உயர, உயர, சிறக்கும் உங்கள் இனம்.
நீங்கள் உங்கள் இனத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உணர்வுடையவரா?
நீங்கள் சில மணிகளை இந்த இனத்திற்கு செலவிட தயாராக இருக்கிறீர்களா?
நீங்கள் இந்த இனத்திற்கான முன்னேற்றத்திற்கு ஏதும் வழிமுறைகளைத் தெரிந்து வைத்திருக்கிறீர்களா?
- மேற்கண்ட உணர்வுடையோர் வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்! இந்த இனத்தின் நாளைய தலைவிதியை நாமே நிர்மாணிக்கும் சக்தியாக மாறுவோம்!!
"நாமே நமக்கு கேடயம்"