எல்லாருக்கும் எல்லா வளமும் நலமும் அருளும் வத்தலகுண்டு கோட்டைப்பட்டி அருள்மிகு ஸ்ரீ சென்றாயபெருமாளின் நாமம் போற்றுவோம்.🤝📚✍️🙏🙏 சென்றாயப் பெருமாளின் சிறப்பு இதுவே...
புள்ளியியல் துறை இணை இயக்குநர் (பணி ஓய்வு )
M வீர சின்னம்மாள் புரம் 
மரிகுண்டு 
வைஷ்ணவம் மிக துடிப்போடு வாழும் கிராமங்களில் கம்பள கிராமங்கள் முக்கியமானவை.எங்கு பார்த்தாலும் திரு நாமமும்.. கோவிந்தா கோசமும்..
மாமா அவர்களின் வைஷணவ பாடல்களையும் ஆவணப்படுத்தி வைக்கவேண்டும் ..
சென்றாய பெருமாள் கோவிலில் பாடியது இன்று உலகம் முழுக்க முக நூலிலும் ..வாட்ஸப்பிலும் ..யூடூப்பிலும் ...தொழில்நுட்பம் மூலம் பயணிப்பது மிக்க மகிழ்ச்சி ..
எனக்கு அறிமுகப்படுத்திய அன்பழகன் சாமிக்கண்ணு அண்ணாருக்கு நன்றிகள்
.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681



திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தாலுக்கா கோட்டைப்பட்டி ...
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் மிகவும் சிறப்பான முறையில் சாமி அழைப்பு, தேவராட்டங்கள், சொந்த பந்த உறவுகளின் அன்பு, பாசம் கலந்த பகிர்வுகள்.
அடடா.
காவல்துறையே தேவையில்லை.
அவர்களே காவலர்கள்.
எல்லாருக்கும் எல்லா வளமும் நலமும் அருளும் அருள்மிகு ஸ்ரீ சென்றாயபெருமாளின் நாமம் போற்றுவோம்.




சென்றாயப் பெருமாளின் சிறப்பு இதுவே...
தேவராட்டலு,கும்மி, சேவாட்டலு இதுபோன்று நமக்கான கலைகள் பெரிதும் கொண்டாடப்படுகின்றது.
பூப்பல்லக்கில் கடவுள் வரும்போது கூட கூடியிருக்கும் அனைவரும் இறைவனின் ஆட்டத்தை மிகவும் பக்தியோடு பார்க்கின்றார்கள் எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல்.
நீண்ட நாள் கழித்து சந்திக்கும் உறவுகளின் அதீத ஆனந்தம்
காதருகே எப்போதும் ஒலிக்கும் நம்முடைய தெலுங்கு மொழி
கூட்டத்தில் யாரென்று தெரியாதவராக இருந்தாலும் முன்னே செல்பவர் மீது தோளில் கை வைத்து நடக்கும் அரவணைப்பான அனுபவம்
கூட்டத்திற்குள் சென்று கொண்டிருக்கும் போதே தெரிந்த முகத்தை கண்டவுடன் மேலும் பிரகாசமடையும் முகமலர்ச்சி
ஊருக்கு ஒச்சேதிக்கி தெருவு தெலேதா நிக்கு என்று கண்டிப்புடன் வரவேற்கும் உறவுகள்
மா மாம கூத்துரு தா ஊடு கொச்ச நாளா தைய்யாலு மாட்லாடாப்புமு என்று தன்னுடைய மாமா மகள்களை சண்டை இருந்தாலும் சிலரிடம் அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் அறிமுகப்படுத்தி வைப்பது
ஒரே அந்தரு மனி மாச்சுலு எதினு மனி மாட்லுன கேலி சேசேத்துரா என்று புதிதாக கோயிலுக்கு வரும் நம் இளைஞர்களிடம் பெரியவர்கள் எச்சரிக்கை கொடுப்பது
எண்ணா இங்க கொச்சம் கூடு தீசிக்க என்றவுடன் சாலு பொண்ணு என்று கூறிவிட்டு பக்கத்திலிருக்கும் மைத்துனர்களிடம் அதி ஓட்டி லேது பாவா மரதாளம்மா ஈ ஊருன தா உண்டினி அந்து போயி கூடு தாவலட்ட நெஸ்ஸா உண்டது அதிதா சாலுட்ட செப்பேத்தி என்று உண்மையைக் கூறுவது

மொத்தத்தில் உறவுகளின் சங்கமமாய்,
உணர்வுகளின் வெளிப்பாடாய் இந்த திருவிழா இருப்பது அதையெல்லாம் நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது என எல்லாமே இறைவன் கொடுத்த வரம்
.
சாமிநாதன் நாதன் ...


ஒரு திருவிழா.

திருவிழா முழுவதும் ஒரே சாதி
பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய நிகழ்ச்சி
யாருமே மது அருந்தவில்லை,
செயின் பறிப்பு, திருட்டு சம்பவமே நடக்காது..
நூற்றுக்கணக்கான போலீஸ் தேவைப்படும் இது போன்ற திருவிழா க்களில் வெகு சில காவலர்கள் அதுவும் formality க்கு
ஆயிரக்கணக்கான வேன் பஸ்கள்.. சின்ன இடையூறு பொது சொத்து சேதம் இல்லை..
இவ்வளவு ஆயிரம் மக்கள் கூடினால் பக்கத்தில் இருக்கும் எதாவது சாதி யை வம்பு செய்ய தோன்றும், நம்ம கெத்த காட்ட நினைப்பது சாதிய மனநிலை ஆனால் அது போல சின்ன சம்பவம் கூட இல்லை..
நாயக்கமாருங்க திருவிழா ப்பா.
அவங்களுக்குள்ளயே அவங்களே கட்டுப்பாடா இருப்பாங்க என்று போலீஸ் கள் கூறும் நிகழ்ச்சி
பிற சமூகம் இவ்வளவு திரளாக கூடும் போது அச்சம் கொள்ளும்.. இங்கோ அவர்களே வரவேற்று மகிழ்கிறார்கள்.
அப்படி இப்படி எதாவது இளைஞர்கள் செய்ய நினைத்தாலும்..
பெரியவர்கள் நம்ம சனமே கட்டுப்பாடு தான் மெயின்.. என்று அடக்குவது.
பழைய பாரம்பரியம், சமூக கலைகள் என ஊர் வித்தியாசம் இல்லாமல் கூடி ஆடுவது..
பெண் கொடுப்பது, எடுப்பது என பேச்சுக்கள் ஒரு பக்கம்..
கோவிந்தா கோவிந்தா என்ற கோசமும்.. உண்மையான பக்தியும்..
சுய ஒழுக்கமும்.. சமூக கட்டுப்பாடும்..
ரத்தத்திலேயே ஊறிய இனம் ராஜகம்பளம் இனம்..




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக