ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

மருங்காபுரி ஜமீன் லட்சுமி அம்மாள் மருங்காபுரி ஜமீன்தாரனி கி.சு.வ.இலட்சுமி அம்மணி (1894 – 1971)

 மருங்காபுரி ஜமீன் லட்சுமி


அம்மாள் மருங்காபுரி ஜமீன்தாரனி கி.சு..இலட்சுமி அம்மணி (1894 – 1971)

திருச்சி மாவட்டம்மணப்பாறை அருகேயுள்ளது மருங்காபுரிஇது முன்னொரு காலத்தில் மருங்கிநாடு என்றும் அழைக்கப்பட்டதுஇத்தகைய மருங்காபுரி ஜமீனாக இருந்தவர் கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கர்இவர் ஒருமுறை புலியோடு சண்டை செய்துஅந்தப் புலியைக் குத்திக் கொன்றதால்புலிக்குத்து நாயக்கர் பரம்பரை என்றும் பெருமையோடு அழைத்துவருகின்றனர்மக்கள் நலன்குளம் வெட்டுதல் உள்ளிட்ட பொதுப் பணிகளை நீதி வழுவாத நிர்வாகத் திறமையுடன் நிர்வகித்து வந்ததால் இன்றளவும் மருங்காபுரி ஜமீன் மீது மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு நன்மதிப்பு உள்ளதுஇந்தப் பெருமைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல ஜமீன்தார் கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கரின் மனைவியரில் ஒருவரும் ஜமீன்தாரிணியுமான கி.சு.வி.லட்சுமி அம்மணியின் தமிழ்த் தொண்டு காலம் கடந்தும் போற்றப்படுகிறது.

இவர் 1894-ல் பிறந்து 1971 வரை வாழ்ந்துள்ளார்தமிழ்ஆங்கிலம் இரு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்புபெண்கள் எழுத வருவதே அரிதாக இருந்ததுஆனால் மருங்காபுரி ஜமீன்தாரிணியான கி.சு.வி.லட்சுமி அம்மணி, 1929-ம் ஆண்டு திருக்குறள் தீபாலங்காரம்” என்னும் பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.

திருக்குறள் உரை நூலில் அறத்துப்பால்பொருட்பால் என இரு பால்களுக்கும் முழு உரை விளக்கம் தந்துள்ளார்காமத்துப் பாலில் உள்ள குறள்களுக்கு மட்டும் சுருக்கமாக உரை எழுதியுள்ளார்.


tmvkv சிவ சண்முக பூச்சிய நாயக்கர் ,trk குமார விஜய பூச்சிய நாயக்கர்

குளவாய் பட்டி வடக்கு தெரு ,மருங்காபுரி 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக