உலகப் புத்தக நாள்
அறிவை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்து விட்டுச் செல்லும் ஓர் உன்னதமான கருவி.
சங்க காலப்புலவர்களை நாம் கண்டதில்லை, ஆனால் அப்போதைய வாழ்க்கை முறையினை படித்தறிகிறோம்.
அறிவாளிகள் என்று சொல்லும் ஆசான்கள் இன்னமும் நமக்கு புத்தகம் வழியே அறிவைக் கொடுத்துக் கொண்டுதானிருக்கின்றனர். அவர்களின் புத்தகங்கள் வழியே.
திருவள்ளுவர், திருமூலர், சித்தர்கள், இவர்களை இன்னமும் இந்த சமூகம் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறது.
அம்பேத்கர், தந்தை பெரியார் கார்;ல் மார்க்ஸ் இவர்கள் எழுதியது மட்டுமல்லாமல் வாழ்வியலோடு சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள். அதனால் அவர்களின் எழுத்தும், பேச்சும் இன்னமும் சமூகத்தில் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அவர்களின் எழுத்துக்கள் காலம் கடந்தும் வாழ்கின்றது. வாழும் .
கொங்கு நாட்டில் பிறவாவிட்டாலும் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் ஏராளமான நூல்களை நமக்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார். கோவை கிழார், புலவர் ராசு போன்ற அறிஞர் பெருமக்களும் கொங்கு நாட்டு மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் எழுத்துக்களாக புத்தகங்களை வடித்துள்ளனர்.
அந்த வகையில் உடுமலை மற்றும் சுற்று வட்டார மக்களுக்காக, ஆயிரம் ஆண்டு காலத்திற்கும் மேற்பட்ட வரலாற்றுகளை உறுதிப்படுத்தும் வகையில் நமது பகுதியின் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தி கரைவழி நாடும் நாகரீகமும் எனும் நூலை இந்த ஆண்டு படைத்திட்டமைக்கு பெரும் உவகை அடைகிறோம்.
உடுமலையில் ஒரு மணி மண்டபம் எனும் சமூக அரங்கும். தளி எத்தலப்பருக்கு உடுமலை நகராட்சி வளாகத்தில் சிலையும் அமைக்கப்பட்டதெனில் அது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் வெளியிட்ட தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் நூலே.
இன்று உடுமலையின் பெரும் ஆளுமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்த நூலே உடுமலை வரலாறு.
கொங்கு நாடு மிகப்பெரியது அதில் தென்கொங்கு எனப் பிரித்து அதில் உள்ள கற்றளிக் கோயில்களுக்காக வெளியிடப்பெற்ற புத்தகமே தென்கொங்கின் தொன்மங்கள்.
அமராவதி கரைவளி, ஆயிரத்து ஐநூறு ஆண்டு காலத்திற்கும் முற்பட்டது. இதற்குச் சான்றுதான் கரைவழி நாடும் நாகரீகமும்.
கே. வில்லேஜஸ் எனும் கல்லாபுரம், கொழுமம், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், காரத்தொழுவு மற்றும் கடத்தூர் எனக் கல்வெட்டுகளோடு வேளாண்மை பற்றிய பதிவுகளையும் கூறும் நூலே கரைவழி நாடும் நாகரீகமும்.
இந்த உலகப் புத்தக நாளில் உடுமலை வரலாற்று நூல்களை உங்களுக்குப் படையலிடுவதில் இரும்பூதெய்துகிறோம்.
உடுமலை வரலாறு 23.04.2025

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக