ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

திருமணமே செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து விடலாம் என்று இந்த தலைமுறையினர் பலர் எண்ணுவதற்கு என்ன காரணம்?

 

திருமணமே செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து விடலாம் என்று இந்த தலைமுறையினர் பலர் எண்ணுவதற்கு என்ன காரணம்?

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குறைந்து விட்டது அல்லது மாறிவிட்டது

திருமணம் என்றால் நிறைய விட்டுக் கொடுக்க வேண்டும் ஒருவருக்கொருவர் அனுசரிக்க வேண்டும் அதெல்லாம் முடியாமல் போனதற்கு காரணம் என்னவென்றால் குழந்தைகள் ஒருவராக அல்லது அதிகம் போனால் இருவராக மட்டும் வாழ்வதுதான்.

நிறைய குழந்தைகள் ஒரு வீட்டில் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தே வளர்ந்திருப்பார்கள்.

அடிக்கடி சண்டை போட்டு சமாதானம் ஆகி இருப்பார்கள். சகோதர உறவுகள் மிகப் பெரிய மிக நீண்ட தொடர்கதை.

பிறந்ததிலிருந்து இறப்பு வரை அவர்களுடைய தொடர்பு இருக்கும்.

மற்ற உறவுகள் அப்படி இல்லை. அதனால் இந்த நிலைமை வந்திருக்கலாம்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதும் அனுசரித்துப் போவதும் இல்லாமல் போய்விட்டதால் இன்றைய குழந்தைகளுக்கு நான் ஏன் ஒருவருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் நான் ஏன் ஒருவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சற்றே சுயநலம் கலந்த பிடிவாதம் கூடி விட்டதால் இந்த நிலைமை என்று தான் கூற முடியும்.

அதற்காக எல்லோரையும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறவா முடியும்? காலத்தின் கட்டாயம். இனி கல்யாணம் என்பது ஒருவருடைய விருப்பத்தேர்வாக தான் இருக்கும்.

தவறு ஏதும் இல்லை என்று முற்போக்கு சிந்தனையாளர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணம் செய்து கொள் என்று வற்புறுத்த மாட்டார்கள்.

Non- emotional sex மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். 40லிருந்து 50 55 வயதில் உள்ளவர்களும் அவ்வாறே நினைக்கிறார்கள்.

இது நான் அண்மையில் தெரிந்து கொண்ட சற்று அதிர்ச்சி தரக்கூடிய தகவலாகவே இருக்கிறது. ஏனென்றால் நானும் நூறு விழுக்காடு முற்போக்கு சிந்தனை கொண்ட நபர் என்று கூறிக் கொள்ள முடியாது.

ஆனால் அவர்களுடைய நிலைமையில் இருந்து பார்க்கும்போது தவறு ஏதுமில்லை ஏனென்றால் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். நன்றாக சிந்திக்கிறார்கள் பாதுகாப்பான பாலியல் உறவுகள் பற்றி அறிந்திருக்கிறார்கள்..

இதற்கு மேல் நாம் என்ன சொல்வதற்கு இருக்கிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக