புதன், 23 ஏப்ரல், 2025

உலகப் புத்தக நாளில் உடுமலை வரலாறு வெளியிட்ட புத்தகங்களைப் பார்ப்போம்.

ஏப்ரல் 23 உலகப்புத்தக நாள்

உலகப் புத்தக நாளில் உடுமலை வரலாறு வெளியிட்ட புத்தகங்களைப் பார்ப்போம்.

இதுவரைக்கும் எட்டு புத்தகங்கள்.
எட்டு புத்தகங்களும் எட்டாத வரலாற்றைச் சொல்லுவது.
ஒன்று நமது மண்ணுக்கு மணி மண்டபத்தை (சமூக அரங்கையும்) தளி எத்தலப்பர் சிலையும் கொண்டு வந்தது.
தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர்.
இன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்விற்குத் தேர்வு செய்யப்பட்டு கல்வி நிதி உதவியோடு நடைபெற்று வருகிறது. குறித்த காலகட்டத்தைப் பதிவு செய்யும் வரலாற்று நூல்

உடுமலை வரலாறு
முகம் தெரிந்த முன்னூறு ஆண்டு கால மண்ணில் இதுவரைக்கும் யாரும் எழுதிடத் துணிந்திடாது ஒரு வரலாற்று நூல் , உடுமலையின் அடையாளம். , சமூக வரலாற்று நூல்

தென்கொங்கின் தொன்மங்கள்
நமது பகுதியில் இருக்கும் புராண, ஆயிரம் ஆண்டுகாலத்திற்கும் முற்பட்ட கற்றளிக் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளை ஆவணப்படுத்தி வெளியிடப்பட்ட தொல்லியல் சார்ந்த நூல்

கரைவழிநாடும் நாகரிகமும்
சங்க இலக்கியப்பாடல்களிலும் சரி, கல்வெட்டுகளிலும் சரி கரை வளி என்று சொன்னால் அது அமராவதி கரைவளிதான். அந்த வகையில் கரைவழி நாடுகள் என்று கொங்கு நாட்டு ஆவணங்களில் கூறப்படும் நாடு கரைவளி நாடு.

அந்த கரைவளி நாட்டின் நாகரிகத்தை, வளத்தை தனித்தனியாக கல்வெட்டுகள் தனியாகவும், இரண்டு பகுதிகளாக ஆவணப்படுத்தப்பட்ட நூலே கரைவளி நாடும் நாகரிகம். இதில் வேளாண்மை தனியாகவும், கல்வெட்டுகள் தனியாகவும் என இரண்டு நூல்களாக எழுதப்பட்டுள்ளது.

கடைசியாக இந்த ஆண்டில் அயிரை எனும் ஐவர் மலை , மேற்குத்தொடர்ச்சி மலையில் சாரல் சின்னங்கள்.
இதில் அயிரை எனும் ஐவர் மலையின் ஈராயிரம் ஆண்டு கால வரலாறு, குமணனுக்கான கல்வெட்டு, சேரன் செங்குட்டுவன் அயிரை தெய்வத்தை வழிபட்ட பதிற்றுப்பத்து பாடல்கள், சமணர்கள் தங்கியிருந்து மருத்துவம் , கல்வி ஆகியவற்றை மக்களுக்குப் போதித்தது ஆகியனவற்றை சுருக்கமாகக் கூறும் நூல்.

மேற்குத்தொடர்ச்சி மலை சாரல் சின்னங்கள், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கடந்த இருபது ஆண்டுகளாக களப்பணியில் கிடைத்த தரவுகளை, மக்கள் எளிதில் அறியும் வண்ணம் ஒரு கையடக்க நூலாக, வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் சின்னங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் என நமது பகுதியில் அனைத்து சின்னங்களையும் கையேடாக மிகச்சிறிய அளவில் தயாரிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக