வெள்ளி, 30 ஏப்ரல், 2021

 கேள்வி ; நம் நாட்டில் கான்கிரிட் பில்லர் முறை வருவதற்கு முன்பே கட்டிய பல கட்டிடங்கள் இன்னும் பலமாக இருக்கும்போது ஒரு மாடி கட்டிடத்துக்கும் கான்கிரிட் தூண் முறை ஏன் பயன்படுத்த படுகிறது?


என் பதில் : 


இன்றைய நில பற்றாக்குறையில் ஒரு மாடி கட்டிடம் என்பது இலாபமானது கிடையாது. அதுபோல இப்போது கட்டுவதும் கிடையாது. நகரங்களில் பல அடுக்கு வீடுகள் தான் கட்டகிறார்கள். ஆனால் கான்கிரீட் தூண் முறை அல்லாமல் அதே வலுவைத் தரக்கூடிய கட்டிடம் என்பது வீடு கட்ட வேண்டிய செலவுகளை அதிகரிக்கும். மேலும், எதிர்காலத்தில் விரிவு செய்ய முடியாது.


நன்றி ..

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com



செவ்வாய், 27 ஏப்ரல், 2021

 கேள்வி :  இளம் வயதில் தோன்றாத தொழில் முனைவோராக வேண்டும் என்ற உந்துதல், நாற்பது வயதிற்கு மேல் அதிகம் தோன்றுவது ஏன்?


என் பதில் : 


வாழ்க்கை நாற்பதில் ஆரம்பிக்கிறது என்ற கூற்றை பார்த்து இருப்பீர்கள்.


அது ஓரளவு உண்மை தான் என்று நினைக்கிறேன்.


20 இல் மன முதிர்ச்சி கொஞ்சம் கம்மி தான். பிற கவன சிதறல்கள் அந்த வயதுக்கு உரிய கோபம், காதல் சுழற்சிகள், வேலைக்கு போய் கொண்டு இருப்பினும் அதனை தாண்டிய நுண் கல்வி சிந்தனை இல்லாமல் சிதற கூடிய காலம் தான். தவறு இல்லை. 25 வயது என்று வைத்து கொள்வோம். நான் துருக்கி சென்றேன் டென்மார்க் சென்றேன் என்று ஒரு நண்பர் இன்ஸ்ட்டா போஸ்ட் போடும் போது வருடம் முடிவதற்கு முன்னர் நாமும் ஒரு லடாக் லே ஆவது விசா கிடைக்கலேன்னாலும் போக வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கும்.


ஆனால் இதே 20-30 வயதுக்குள் தான் மூன்று வேலை கூட சளைக்காமல் செய்ய, படிக்க வலு இருக்கும்


30 கள் பெரும்பாலும் குடும்பம் மற்றும் வேலை இரண்டை எப்படி சமாளிப்பது இதிலேயே சென்று விடுகிறது. வீடு கட்ட வாங்கிய கடன், குடும்பம் குழந்தை பற்றி தீவிர பிளானிங், ஒவ்வோர் செலவு அல்லது பெரியோர்களுக்கான பிரச்சனைகள் இவற்றை சமாளிப்பது. இந்த நேரத்தில் எனெர்ஜி ஆற்றல் உண்டு ஆனால் அளவுக்கு மீறி குடும்ப சுமையை அதிகமாக்கி யோசிக்கின்றது மனம். நண்பன் இரண்டு குழந்தை பெற்று கிறீன் கார்டு வாங்கி விட்டான்...நாம இன்னும் ரேஷன் கார்டு கூட வாங்கலையே என்று பல ஆண்களே கூட புலம்புவதை பார்த்து உள்ளேன். ஆண்களே என்று ஏன் சொன்னேன் என்றால் பெண்களை விட சற்று கம்மியா புலம்புவார்கள். ஆக இந்த 30-40 பெரும்பாலும் உறவுகள் குடும்ப கவன சிதறல் எண்ணிலடங்கா உள்ளது. 


தினுசு தினுசாக இதில் பிரச்சனை. அந்த பிரச்சனைகளை காசாக்கும் நீதி மன்றங்கள். இதில் தப்பான பெண்டாட்டியை தேர்வு செய்த ஆணின் கதி அளவுக்கு அதிகமான கோடிகளை வக்கீலுக்கும் எக்ஸ் க்கும் கொடுப்பது இதனால் வாழ்க்கை வெறுப்பது. கேட்கவே வேண்டாம் பெண்கள் என்றால் முத்திரை குத்தப்படும் இன்னும் ஏகப்பட்ட காயங்கள். ஒரு குழந்தை இல்லேனா கூட இவளை குற்றம் சொல்லும் சமூகம் அதற்கு அவள் பொறுப்பே இல்லேன்னாலும்..விடாது. ஆக உறவு பிரச்சனை மாபெரும் அளவு ஆகும் போது எங்க தான் மற்றதை பற்றி சிந்தனை.



40 இல் உலகம் என்றால் என்ன..வாழும் காலங்களின் முக்கியத்துவம் உண்மையை புரிந்து கொள்ள தொடங்குகிறது மனம். குடும்பம் அல்லது பிற நண்பர்களுக்கு மட்டும் கொடுத்த முக்கியத்துவம் தவிர உண்மையில் மனிதன் தன்னை நேசிக்க தொடங்குவதும் 40 கள் ...


பிறருக்கு மட்டும் கொடுத்து ஏழை ஆனேனே - திருமங்கை ஆழ்வார் பாசுரத்தில் வருவது போல யோசிக்காமல் ரோபோட் போல குடும்பம் இல்ல நட்பு இல்ல கவன சிதறல்கள் தாண்டி மீண்டு வந்து ..உண்மையில் தனக்கு என்ன வேணும்? என்பதை யோசித்துதெளிவு பிறக்கிறது.


நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சிறிய வயதில் மிக புகழ் பண உச்சிக்கு போகும் பலர் காணாமல் போய்'விடுவது அதிகம். ஏனெனில் அனுபவம் என்பது கம்மி.


அரவிந்து சாமி அவர்களே ரோஜா பம்பாய் போன்ற பல படங்கள் தனக்கு கொடுத்த புகழ் அங்கீகாரம் மகுடம் மிக அதிகம் என்றும் ஏற்க முடியாத நிலமை என்றும், குடும்பம் விரிசல் பட்டு கஷ்டப்பட்டு stroke வரை சென்ற அனுபவத்துக்கு பின்னர் தன் 40க்கு மேல் இன்னோர் புது வாழ்க்கை...பாதை மாற்றம் வெற்றி இதனை பற்றி ஓர் நேர்காணலில் சொல்லி இருந்தார்.


ஆகவே தான் 40 தாண்டிய பின்னரே பலர் உண்மை டெஸ்டினி பற்றி யோசிக்கின்றனர்.


ஜோதிட காரணங்கள் கூற முடியும் என்னால் ஆனால் வேண்டாம். அறிவியல் காரணங்களே யோசிப்போம்....என்ன தான் ஜோதிடம் மாற்ற முடியாத கர்மா பற்றி சொன்னாலும் இங்கு இருக்கும் பல நல்ல உள்ளங்கள் அந்த விளக்கங்களை ரொம்ப ஏற்பதில்லை. பிடிக்கவில்லை அதனை நான் மதிக்கிறேன். 

40 க்கு மேல் தெளிவு கிடைத்து டெஸ்டினி புரிந்து கவன சிதறல் இல்லமல்...இது ஒன்னு நாம செஞ்சால் போதும் என்ற அளவு அருமையான தீர்மானத்துக்கு வருகிறது மனது.


இந்த வயதில் மன்னித்தல், மறத்தல், இன்னும் பார்வைக்கு எப்படி இருக்கிறோம், எடை போடுதல் எல்லாத்தையும் மனிதன் ஓரளவு எளிதாக தாண்டுகிறான்.


ஆக 20-30 எனெர்ஜி சற்று குறைந்தாலும் அனுபவ ஞானமும், தெளிவும், நோக்கமும் புரிவதிலும், யாரும் எதுவும் கூட வரப்போவதில்லை என்று உணர்ந்தும் மனிதன் தன் குறிக்கோளை விரைவில் அடைகிறான் . 40 முதல் 60 ஒவ்வோர் மனிதனின் மிக மிக அற்புத காலம் என்றே எண்ணுகிறேன். இந்த வருடங்களில் ஏற்படும் வெற்றி, உயர்வு, சமூக பணி, செயல் திறன், focus பல கதவுகளை திறக்கிறது.


நன்றி...


என்றும் அன்புடன் சிவக்குமார் 

994406661


ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

 நன்றிகள் ....

🙏🙏🙏🌱🌱🌱🌷🌷
இன்று எனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எனது அருமை நண்பர்களுக்கும் .என் அருமை சொந்தங்களுக்கும் ,எனது சொத்துக்களுக்கும் (வாடிக்கையாளர்கள் ),என்னுடன் நிழல் போன்று என்னுடன் பயணிக்கும் எனது தம்பிகள் ,மாப்பிள்ளைகளுக்கும் எனது பணிவான நன்றிகள் ..வயது ஆகா ஆகா ...இளமையுடன் பொறுப்புகள் ..கூடிகொண்டேபோகிறது ..வருட வருடம் ..நட்புவட்டங்கள் ,சொந்தங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது .🌷🌷பொருளாதாரம் 🌷🌷,வாழ்வியல்🌱🌱.சமுதாயம் 🌱🌱வரலாறு🤺🤺🏹🏹🐎 நிதியியல் ...,சார்ந்த பணிகள் இன்னும் பொறுப்புடன் எனது தேடல்களை மேலும் கூட்டுகிறது ..
🙏என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681🌷
🥰தனித்திரு 🙏..விழித்திரு .🌳படித்திரு 🌳...சமூகத்தை காத்திடு .🌷🌱📚📚📚✍️✍️✍️✍️..நன்றி .. ....மிக்க நன்றி ...

சனி, 24 ஏப்ரல், 2021


கேள்வி : ஒரு புத்தகம் என்ன செய்யும்? ஒரு குழுவில் என்று கேட்டு இருந்தேன் ..

பதில் : ஐஸ்வர்யா என்ற வாசகி அருமையான தகவலை பதிவு செய்துள்ளார் ..நன்றி ...


ஒன்றும் செய்யாது….


//அனைத்து கருத்துக்களையும் தன்னுள் அடக்கி அமைதியாகவே இருக்கும்//


அப்படி பட்ட அமைதியை உங்கள் கையால் எடுத்து களைத்தீர்கள் எனில் அது (புத்தகம்) என்ன செய்யும் என்று சொல்கிறேன்…


உலகத்தை பற்றிய விசாலமான பார்வையை உங்களுள் கொண்டுவரும்..

உங்களைப் பற்றி உங்களை சிந்திக்க வைக்கும்..

நாம் பார்க்கும் அத்தனை ஜீவராசிகளின் மீதும் அன்பு காட்ட வைக்கும்…

மூடநம்பிக்கைகளை சிதைத்து அறிவுபூர்வமான சிந்தனைகளை உருவாக்கும்..

வரலாற்றையும் புராண இதிகாசங்களையும் அசைபோட வைக்கும்..

தேசத்திற்காக உழைக்க வலியுறுத்தும்..

காக்கை ,குருவி ,மழை என இயற்கையை ஆதரிக்க சொல்லும்..

சாதி ,மதத்தின் பின்னால் உள்ள சதி வலையை புரிந்து கொள்ள வைக்கும்..

சமத்துவமற்ற, ஏற்றத்தாழ்வு உள்ள இந்த சமூகத்தின் மீது கோபத்தை தூண்டும்..

உலகினை மாற்றவும் புரட்சி செய்யவும் ஊக்கப்படுத்தும்..

சிலரிடம் கேள்விகளைக் கேட்க வைக்கும் (சந்தேகம்)… பலரிடம் பதில்களைச் சொல்ல வைக்கும் (அறிவுரை)

நல்வழியில் உங்களைப் பயணிக்க வைக்கும்..

அறிவின் அளவை விசாலமாக்கும்.. அறியாமையின் அளவை சுருக்கி விடும்..

உணர்வுகளோடு உறவாட வைக்கும்..அதே உணர்வுகலுக்கு வலியை ஏற்படுத்தும்..

மனிதனாக வாழவும் வைக்கும் ..மிருகமாக மாறவும் வைக்கும்…

அதனுள் உங்களை மூழ்கடித்து கற்பனையில் மிதக்க விடும்..

பல மொழிகளை கற்றுத் தந்து உங்கள் மொழியை மறக்கவும் வைக்கும்.. பல மொழிகளோடு உங்கள் மொழியை ஒப்பிட்டு உயர்வாக பேசவும் வைக்கும்..

உங்கள் அறிவு பசியை அடக்கவும் செய்யும்.. ஆசை பசியை அதிகரிக்கவும் செய்யும்..

சிலநேரம் தாலாட்டு பாடி தூங்க வைக்கும்..

வாழ்க்கை என்ற பாதையில் எதிர்கால பயணத்தைப் பற்றி சிந்திக்க வைக்கும்.. வாழ்ந்து முடிந்த கடந்தகால பாதையை நினைவு படுத்தும்… நிகழ்கால பாதையில் எப்படி நகர்வது என்று புலம்ப வைக்கும்..

பணம் சம்பாதிக்கும் வழியை கற்றுத்தந்து சம்பாதித்த பணத்தில் தன்னையே (புத்தகம்)வாங்க வைக்கும்..

கவிஞனாக மாற்றும்..

கற்பனை திறனை அதிகரிக்கும்..

வெற்றியாளனாக மாற்றும்…

தன்னையே படிக்க வைத்து உங்களை பைத்தியமாகவும் மாற்றும்…

தன்னை பற்றியே சிந்திக்க வைத்து தன்னுடைய காதலன்/காதலியாக உங்களை மாற்றிவிடும்…

உலகத்தில் இருந்து தனித்து இருக்க உன்னிடம் வந்தேன் ஆனால் உலகமே இங்குதான் இருக்கு என புரிந்துகொண்டேன் புத்தகமே!!!

இப்படிக்கு…..

உலகத்தையே தன்னுள் அடக்கி தன்னடக்கமக இருக்கும்..

உன்னுள் மூழ்கி..

என்னை தொலைத்து…

உன்னை நினைத்து…

என்னை மறந்து..

உனக்காக…

உன்னை பற்றி…மற்றவர்களுக்காக..

எழுதும்.. உன் பிரியமுள்ள…

வா(சகி)…..☺️

புத்தகம் மனித குலத்தின் அறிவு சொத்து..

புத்தகத்தை வெறும் தாளில் கோர்க்கப்பட்ட எழுத்துக்கள் என்று மட்டும் பார்க்கக்கூடாது. நம் வாழ்க்கையை புரட்டிப்போடும் நெம்புகோல். ஒவ்வொரு நாளும் வாசிப்பதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும்..

ஒரு கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு ஒரு நூலகம் கட்டுவேன் என்றாராம் -மகாத்மா…

நாம் என்ன செய்வோம்?😅😅😅

இறுதியாக…

ஒரு மனிதன் புத்தகத்தை படித்து தன் வாழ்க்கையில் மேன்மை நிலையை அடைகிறான் எனில் அதற்கான பேர் , புகழ்,சிறப்பு அனைத்தும் அந்த வெற்றியாலனின் உழைப்பை தாண்டி அந்த புத்தகத்தை மட்டும் சேராது…

அந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் சொந்தக்காரரான எழுத்தாளரையே சாரும்…

அந்த எழுத்தாளரின் கர்ப்பனை திறனுக்கே அனைத்து புகழும் சொந்தமாகும்…

ஒவ்வொரு நாளும் ,ஒவ்வொரு வினாடியும் நம்மை புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் திறமை எழுத்தாளர்களுக்கு மட்டுமே உண்டு…

அவர்களுடைய சிந்தனை மற்றும் கற்பனைத் திறனின் குழந்தையே "புத்தகம்"..

நன்றி…ஐஸ்வர்யா வாசகி க்கு ...



 


இந்த வருடம் எனது பிறந்தநாள் பரிசாக ...

உடுமலை வரலாறு =தொல்லியல் துறை -வரலாறு துறை ..நூல்களின் மூலம் நமது சமுதாயம் சார்ந்த செய்திகள் ...கல்லூரியில் ..சிலப்ஸ் (பாடத்திட்டமாக கொண்டுவரவுள்ளது )..நம் எதிர்கால இளைய சமுதாயத்திற்கு என்னாலான ஒரு சிறு பணி ..எனக்கு உதவிய சொந்தங்கள் ..நண்பர்களுக்கும் ..நன்றி ..

எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல்லும் ..எனது இனிய சொந்தங்களுக்கும் ,நண்பர்களுக்கும் .. நன்றி ..கீர்த்திவீரர்   எத்தலப்பர் (KVE )அருளாசியோடு ..எட்டுவருட உழைப்பு .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681



வியாழன், 22 ஏப்ரல், 2021

Sivakumar Kumar is feeling hopeful in Udumalaippettai.🙏 அப்பாவின் அருமை ...மலரும் நினைவுகளுடன் (23.04.2018) 🥰🥰வேலுச்சாமி என்கிற கிருஷ்ணசாமி 🥰🥰🙏 தன் சிறு வயதிலே நடந்தே சென்று பள்ளிப் படிப்பை முடித்து பின்பு ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து மேலும் படிப்பை தொடர்ந்து நல்ல வேலையில் தன்னை உயர்த்திக்கொண்டு....தன் வாழ்நாளில் முதல் சன்மானத்தை அவர் அப்பாவிடம் கொடுத்த போது "வேண்டாம் உனக்கே செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்" பின்பு தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்து தர..... அப்பா செலவு செய்ய தொடங்குகிறார்.... கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தனக்கு தேவையான பொருளை வாங்கி வைக்கிறார். தனக்கு ஒரு மகளோ/மகனோ பிறந்த பிறகு ஒளி வீசத்தொடங்கியதாக ஓர் உணர்வு... மகிழ்ச்சியோடு அப்பா பிள்ளையின் மீது அலாதியான பாசம் வைக்க தொடங்கிறார். அவர்கள் படிப்பதற்கு செலவு செய்கிறார் பின்பு பார்த்து பார்த்து தன் குழந்தைகளுக்கு செய்யும் அப்பா தனக்காக ஒரு செலவையும் செய்வதில்லை..ஏனோ!!! வளர்ந்தவுடன் மேற்படிப்புக்கு செலவு செய்யும் அப்பா.. (வெளிக்காட்டாத கஷ்டம் தன்னுள் பூட்டி வைத்துக்கொள்ளும் ரகசியம்) மகனோ /மகளோ வேலைக்கு செல்வது /கல்யாணம் செய்து வைப்பது என மீண்டும் செலவு செய்யும் அப்பா...... பின்பு அவர்களின் குழந்தை , பெயர் வைப்பது என....எல்லாச் செலவையும் தனியாளாக சமாளித்து கொண்டும் சந்தோஷமாக சிரித்து கொண்டும் வாழும் அப்பா... பேரனோ.... பேத்தியோ..... வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி வைத்துக்கொண்டு இன்னும் வரவில்லை என்று காத்து கொண்டிருக்கும் அப்பா.... தாத்தாவாக,,, (அம்மாவிடம் போய் கேட்பார் பால் இருக்கிறதா? வாங்கி கொண்டு வரவா? பேரன் பேத்தி எதாச்சம் செய்து வைத்து இருக்கிறாயா....) இது தான் எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதே...என்று நினைக்கிறீர்களா..... அப்பாவின் செலவுக்கு எல்லையில்லை போல..... இப்படியே பார்த்து பார்த்து செய்யும் அப்பாவின் அருமை அவரின் வெளிக்காட்டாத கஷ்டம்... அவருடைய கோபத்தை வெளிக்காட்டுவது அம்மாவிடம் மட்டுமே... (ஏனென்றால் அவரின் பாதி) சமாளிக்கும் திறமை... தனக்கென வாழாதவர்.... இப்படி பலவற்றில் அப்பா என்றுமே உயர்ந்து தான் நிற்கிறார்... மகன் கொடுக்கும் போதும்.. அவர் அப்பா சொல்வதை போல் "வேண்டாம் உனக்கே செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்" அப்பா ஓர் அனுபவத்தின் பொக்கிஷம்... அக்கறை காட்டுவதில் அப்பாவிற்கு நிகர் எவருமில்லை.... அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும் இறைமையில் தன் பணி செய்து என்றுமே சுறுசுறுப்பாய் அப்பா....தாத்தாவாக பரிணமிக்கும் போதும் மாறாத அந்த தேடல்....நடந்தே...இன்றும் நடைப்பயிற்சி என்று .....அனைவரையும் புரிந்து தான் வைத்திருப்பார் அப்பா....அப்பா மறைந்து ..வருடங்கள் மூன்று ஆனாலும் ...அவரின்நினைவுகளுடன் ..அவர் கூடவே இருப்பது போன்றே இருக்கிறது ... அப்பாவின் அருமை அன்பிலே... அதை நாம் புரிதலே.... இத்திரியிலே..... அப்பாவின் பாதம் வணங்குவோம் என்றும் அவரை போற்றுவோம். அப்பாவின் ..பொறுமை ..சகிப்புத்தன்மை ..எந்த பிரதிபலன் பாராது பணிகள் உதவி என்று கேட்டால் தன்னாலான பணிகளை செய்துகொடுக்கும் பாங்கு ..இவரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் ..உலக புத்தக தினம் ...என் அப்பாவின் நினைவு தினமும் இதே நாளில் தான் ...நான் பிறந்தது முதல் பள்ளிப்படிப்பு ...வாழ்க்கை கல்வி ...என்று தினம் தோறும் ..45 வருடங்களாக சொல்லித்தந்த நடமாடிய புத்தகம் ...அவர் கற்றுக்கொடுத்த வாழ்க்கை கல்வியுடன் என்றும் மறவாது இருப்பது .. உடுமலையில் இருக்கும் கச்சேரி வீதி பள்ளியில் படிக்கும் போதே ..நூலகத்தை காட்டி ...விடுமுறை நாட்கள் ..பள்ளியின் மதிய உணவு நேரம் கொஞ்சம் கிடைத்தாலும் ...படிக்க வழிகாட்டிய தந்தை ...எந்த சூழ்நிலையிலும் ...மனம்

கோணாமல் புன்னைகையுடன் ..பணியாற்ற வேண்டிய கற்றுக்கொடுத்த புத்தகம் ...உலகம் முழுவதும் ஏப்ரல் 23ம் நாள் உலகப் புத்தக தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 1995ம் ஆண்டு முதல் இது தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாக இருந்து வருகிறது. உலகளாவிய அளவில் பல இலக்கியவாதிகள் இந்த நாளில் பிறந்தோ அல்லது இறந்தோ இருக்கிறார்கள். ஐரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதும்,... உலக புத்தக தினம் ..என் தந்தையின் நினைவுதினம் ...வாழ்வில் மறவாது ..என்றும் உணர்வுடன் கூடவே இருக்கும் தந்தையின் நினைவுகள் .. என்றும் நீங்கா நினைவுகளுடன் ..வணங்குகின்றேன் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681....📚📚📚✍️✍️✍️✍️🙏🙏🙏


கேள்வி :  ஒரு வங்கியில் நிரந்திர வைப்பு தொகையில் (Fixed deposit) முதலீடு செய்த பின்பு, அந்த வங்கி திவாலாகிவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்குமா?


என் பதில் : 



வைப்புத் தொகையோ, சேமிப்புக் கணக்கோ, எதுவாகினும் தனியார் வங்கிகளிலோ அ பொதுத் துறை வங்கிகளிலோ தாங்கள் வைத்திருக்கும் சேமிப்பு தொகை வட்டியையும் சேர்த்து ரூபாய் 5 லட்சம் வரை வைத்துக் கொள்வது நல்லது. இந்த உச்ச வரம்பை தாண்டும் பட்சத்தில், வங்கிகள் திவாலானால் , ரூபாய் 5 லட்சம் வரை DICGC என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பை தருகின்றன. இந்த உச்ச வரம்பை தாண்டும் பட்சத்தில் , இன்சுரன்ஸ் கம்பெனி ஏமாற்றம் தர வேண்டியதிருக்கும். 


இதற்கு மேல் போடுவதாக இருந்தால், தங்களது மனைவி பெயரில் ரூபாய் 5 லட்சம் வரையும், தங்கள் மனைவி மற்றும் தங்களையும் இணைத்து joint account மூலமாக மற்றொரு ரூபாய் 5 லட்சம் ஆக மொத்தம் ரூ 15 லட்சம் இருவரையும் சேர்த்து ஒரு வங்கியில் போடுவது நல்லது. குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் தலா ரூபாய் 5 லட்சம் வரை அவர்கள் பெயரில் போடலாம். வட்டியையும் சேர்த்து ரூபாய் 5 லட்சம் தான் இன்சூரன்ஸ் நிறுவனம் தரும்.


பொதுத்துறை வங்கிகளில் , எந்த உச்ச வரம்பும் இன்றி வைப்புத் தொகை வைத்திருப்பவர்களுக்கு, அரசாங்கம் கொடுத்து விடும் என பாராளுமன்றத்தில் சில காலத்திற்கு முன்பு, அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். இருப்பினும், தாங்கள் பல வங்கிகளில் இந்த லிமிட் தாண்டாது வைப்பது நல்லது.


பல அரசாங்க கொள்கை முடிவுகள், சமீப காலமாக மாறிக் கொண்டு வருவதால், மக்கள் கவனமாக நம் உழைப்பால் சேர்த்த பணத்தை இழந்து விடக் கூடாது என்பது எனது கருத்து. வட்டிக்கு ஆசை பட்டு உள்ளதையும் இழந்து விடக் கூடாதல்லவா ? வைப்புத் தொகை போடும் முன்பு DICGC இன்சூரன்ஸ் இருக்கிறதா என்று அந்த வங்கியிடம் கேட்டு போடவும். 


நன்றி. வணக்கம்.

V .K .சிவக்குமார் 

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

 கேள்வி : அமெரிக்க வங்கிகளில் வாராக்கடன் தொகைக்கு என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்?


என் பதில் : 


அமெரிக்க வங்கிகள் எடுக்கும் நடவடிக்கைகள்:


சமரச தீர்வு (Compromise settlement or One-time settlement): கடன் தொகையில் குறிப்பிட்ட கழிவைக் கொடுத்து மீதியைக் கட்டச் சொல்லி கடனாளியுடன் வங்கி சமரச தீர்வு செய்து கொள்ளலாம்.

கடனாளியின் பிணையச் சொத்து விற்பனை (Sale of collateral): பிணையச் சொத்தை விற்று முடிந்த அளவுக்கு கடனை வசூலிப்பார்கள். பெரும்பாலும் நீதிமன்ற வழக்கு (Litigation) மூலமாக செய்யலாம்.

கடன் மறுசீரமைப்பு (Loan restructuring): கடனாளியின் கடன் தொகையைக் குறைத்து அதைக் கட்ட வேண்டிய காலக்கெடுவை நீட்டுவார்கள். அந்தந்த கடனாளியின் வணிகச் செயல்பாடு மற்றும் அதன் மூலம் வரும் பணப் பாய்வைப் (Cashflows) பொறுத்து கடன் மறுசீரமைப்பு அமையும்.

கடனை விற்று விடுதல் (Sale of NPAs): வசூல் செய்யும் நிறுவனங்களுக்கு கடனை வந்த விலைக்கு விற்று விடலாம்.

(கடனாளி பெரிய நிறுவனமாக இருந்தால்) கடனாளி மீது திவால் அறிவிப்பு (Bankruptcy notice) கொடுத்தல்: அந்நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்கச் சொல்லி அதன் சொத்துக்களையும் பொறுப்புகளையும் நீதிமன்றம் நியமிக்கும் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கக் கேட்கலாம். சொத்துக்களை விற்று வரும் பணத்திலிருந்து நிர்வாகிகள் கொடுக்கும் தொகையை வங்கி ஏற்றுக் கொள்ளலாம்.


நன்றி ...


Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

சனி, 17 ஏப்ரல், 2021

கேள்வி : எப்படி உங்கள் தொழில், குடும்பம் கடந்து இவ்வளவு எழுத முடிகின்றது?

என் பதில் :


வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒவ்வொரு ஆணுக்கும் தேவைப்படுகின்ற முக்கியமான விசயம் அளவுக்கு அதிகமான பொறுமை. நிதானம். சகிப்புத்தன்மை.  இது ஏன் பெண்களுக்குத் தேவையில்லையா? என்று கேட்கத் தோன்றும். உண்மை. அதில் சில சட்டச் சிக்கல் உள்ளது.

பெண்கள் என்பவர்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் என்று எந்தப் பாத்திரமாக உங்களுடன் இருந்தாலும், வாழ்ந்தாலும் அவர்களின் எண்ணங்கள், நோக்கங்கள் எதுவும் கடைசி வரைக்கும் உங்களுடன், உங்கள் கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துப் போய்விடும் என்று எண்ணம் இருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள்.

திருமணம் ஆகும் வரையிலும் அவர்களின் எண்ணங்கள் வேறு. திருமணம் ஆனதும் அவர்கள் எண்ணங்கள் வேறு. குழந்தைகள் பிறந்ததும் அவர்கள் நோக்கம் மாறும். குழந்தைகள் வளரும் போது, வளர்ந்த பின்பு முற்றிலும் அவர்கள் வேறொரு ஜீவனாக மாறியிருப்பார்கள்.  உடல்வாகு முதல் உள்ள அமைப்பு வரைக்கும் எல்லாமே மாறி இருக்கும்.

நீங்கள் எத்தனை ஆராய்ச்சி செய்தாலும், எவ்வளவு நல்லவராக வாழ்ந்தாலும் அவர்கள் மாறவே மாட்டார்கள். அவர்கள் கடைசி வரைக்கும் அவர்களாகவே இருப்பார்கள்.  என் கணவன், என் குழந்தைகள் என்று அவர்கள் சொல்லலாம்.  ஆனால் அவர்களின் முழு உணர்வும் வெளியே வருவது அபூர்வம்.

மது, மாது இருந்தாலும் பரவாயில்லை. எனக்குத் தேவைப்பட்ட பணத்தை சம்பாரித்துக் கொண்டு வா? என் தேவைகளை நிறைவேற்று? என்று சொல்லும் காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கை வந்து நிற்கின்றது. தாய் என்ற வார்த்தைக்குள் இருந்த அனைத்தும் காலப் போக்கில் மாறிவிட்டது.

ஆனால்......

அளவான ஆசைகள், எதார்த்தம் புரிந்த மனைவி, இதயத் துடிப்பை எகிற வைக்காத ம மகன்  இருந்தால் உங்களின் தனிப்பட்ட திறமைகளுக்கு வாய்ப்பு உருவாகும்.

நன்றி ....

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

கேள்வி :  கனடாவில் வீட்டு வாடகை மிக அதிகமாக உள்ளது. வீடு வாங்கி மாத தவணை செலுத்துவதால், மாத தவணை என்னும் பெயரில் பணம் சேமிக்க வழி இருக்கின்றதா? 


இல்லை மாத வாடைகையில் தொடர்ந்து, வீடு வாங்க வேண்டிய பணத்தை FD அல்லது வேறு வகையில் இன்வெஸ்ட் செய்வது சரியா?


என் பதில் : 


யூஎஸ் கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தனிநபர் வருமானவரி அதிகம். வீடு வாங்கி தவணை கட்டினால் வரி குறையும். உங்கள் வீட்டு வாடகை மற்றும் வரி சேமிப்பில் வீட்டுக்கு தவணை கட்ட இயலுமானால் சொந்த வீடு வாங்குவது நல்லது.


நன்றி ..

சிவக்குமார் .V .K 

Sivakumar.V.K

(Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

புதன், 14 ஏப்ரல், 2021

கேள்வி :  தமிழ்ப்பெண்கள் தனது கணவர் இருக்கும் போது அவர் கட்டிய தாலியை கழற்றி வைக்க முடியுமா? பண்டைய நாட்களில் அது தவறு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எவ்வளவு தூரம் உண்மையானது?


என் பதில் : 


இது ஒவ்வொருத்தர் மனசுக்கு தோன்றும் விதம் நடந்து கொள்வது உத்தமம்! திருமாங்கல்யம் அணிவித்தல் நல்ல நாளில் தேவர்களும் மனிதர்களும் புடை சூழ நடக்கும் புனித தினத்திற்கு முக்கிய நிகழ்வு!


கூரை புடவையை முகூர்த்த நேரத்தில், சரியாக கட்டி விடவேண்டுமே, என்று சில பெரியோர்களுக்கு டென்சன் இருக்கும். மெட்டியை கழட்டும் பெண்களால் கூட மாங்கல்யத்தை எடுத்து வைக்க தோணாது சிலருக்கு.


சிலருக்கு முக்கிய நாட்களில் அணிய பிடிக்கும்! சிலருக்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் / செய்தி வாசிப்பாளர் போன்று இருந்தால் அணிய மாட்டார்கள்!


சிலர் விவாகரத்து ஆனாலும் தாலிக்கொடிக்கு கோவிலில் தரும் குங்குமமும் வைப்பார்கள்!


சிலர் கணவரின் ஆணை ”நீ பூ பொட்டு வெச்சுக்கணும் எப்போதும்” என்று சொன்னதை, எப்போதும் பின்பற்றுகின்றனர் பேராசிரியை சாரதா நம்பியாரூரான் போல. அவர்கள் சொற்பொழிவில் இதனை கேட்ட ஞாபகம்.


ஆக ஒவ்வோர் பெண்ணின் விருப்பம் மற்றும் உரிமை மற்றும் அன்பின் சின்னம் மாங்கல்யம்👍


பலர் பவளம் கருகு மணி சிறிய சின்னங்கள் சேர்த்து அணிவார்கள்!


பவளம் இன்றைய தினமான செவ்வாய் என்னும் மங்களனுக்கு உரியது! ஆகவே “மாங்கல்யம்” என்ற பெயர் வந்தது !


நன்றி ...


சிறுகுறிப்பு :தற்காலத்தில் பெண்செல்வங்கள் .. ஏதாவது விழாக்களுக்கு,வீட்டுக்கு நண்பர்கள் ,சொந்தங்கள் வரும்பொழுது , செல்லும்பொழுது ..எங்கடா ..என் தாலிக்கயிறு ..கொஞ்சம் தேடிக்கொடேன் ...எங்க வைச்சேன் தெரியல ...தேடிக்கொண்டு இருப்பார்கள் ..தேடியெடுப்பதற்கு கொஞ்சம் நேரம் ஆகும் ..அதனால் விழாக்களுக்கு வருவது ,செல்வது தாமதமாகும் ....


திங்கள், 12 ஏப்ரல், 2021

 கேள்வி : வீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் என்னென்ன என்று  தெளிவாக புரியும்படி கூறமுடியுமா ...?


என் பதில் : 


கல்யாணம் பண்ணிப்பார்... வீட்டை கட்டிப்பார்... என்று நம் பெரியோர்கள் சொன்னார்கள். திருமணம் நடத்துவதும், வீடு கட்டுவதும் மிகவும் சிரமமானது என்னும் அர்த்தத்தை இந்த சொற்றொடர் நமக்கு உணர்த்துகிறது. சிரமப்பட்டு வீடு கட்டுபவர்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விசயங்கள் இருக்கின்றன. அவை என்ன என்பது குறித்து  சிறிய தகவல்கள் ...

 

கஷ்டப்பட்டு பணம் சேர்த்து கனவு இல்லத்தை கட்ட தொடங்கும் முன், குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி திட்டமிடுங்கள்.

பொருளாதார நிலவரத்தை மனதில் கொண்டு வீட்டுக்கு தேவையான வசதிகளை நிறைவேற்றும் விதமாக அந்த திட்டமிடுதல் அமைய வேண்டும்.

முதலில் வீடு கட்டும் இடத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் சரிபார்த்து கொள்ள வேண்டும். அதில் வேறு ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்யுங்கள்.

நில வரைபடம் மூலம்  இடத்தின் அளவு, நீளம், அகலம், நான்குபுறங்களின் நிலவரம் போன்றவற்றை நன்கு கவனித்து அதில் எவ்வளவு இடத்தில் வீடு கட்ட போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.


அந்த இடத்திற்குள்ளேயே எல்லா வசதிகளையும் கொண்ட வீட்டை கட்ட முடியுமா என்பது குறித்து ஆலோசிப்பது அவசியம்.

ஏனெனில் கட்டிடத்தின் அளவு தேவையானதாகவும், போதுமானதாகவும் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொள்ளாமல் தேவைக்கு அதிகமாக கட்டிடங்களை கட்டினால் கட்டுவதற்கும், பராமரிப்பதற்கும் பெரும் தொகை செலவு செய்ய வேண்டியது இருக்கும்.


ஆகையால் முதலிலேயே கட்டிடத்தின் அளவை முடிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பணம் விரயமாவது  தடுக்கப்படுகிறது.

கட்டுமான பணியை தொடங்கிய பிறகு  கட்டிட வடிவமைப்பை (பிளான்) மாற்றக்கூடாது. சிலர் பிளானை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பார்கள்.

இவ்வாறு செய்வதால் பட்ஜெட் அதிகமாகி செலவு தொகை ஜெட்வேகத்தில் எகிறும். காலமும் விரயமாகும்.  


வீடு கட்டும் இடம் தாழ்வான பகுதியில் இருந்தால் அடித்தளத்தை தகுந்த உயரத்திற்கு உயர்த்திவிட வேண்டும்.

மண்ணின் தரத்தை பரிசோதித்து அதற்கேற்ப அடித்தளத்தை அமைத்து கொள்ள வேண்டும். கட்டுமான பணியை தொடங்கும் போதே தேவையான முன் ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.


கட்டுமான பொருட்கள் தேவைக்குகேற்ப  இருப்பு இருக்க வேண்டும். எந்த கட்டுமான பொருளை வாங்கினாலும் தரமான பொருளா என்பதை விசாரித்து வாங்கவேண்டும்.

சிமெண்டை பொறுத்தவரையில் உடனுக்குடன் உபயோகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால் சிமெண்டின் இறுக்கம் குறைந்துவிடும்.


கட்டுமான பணியின் போது ஒவ்வொரு கட்டத்திலும் தகுந்தவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

கட்டுமான பொருட்களின் தரம், வலிமை, தொழில்நுட்பம் இவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமெனில், ஏற்கனவே பயன்படுத்தியவர் களிடமும், வல்லுனர்களிடமும் கேட்கலாம்.


நன்றி ..

உங்கள் கனவு இல்லம் நனவாக ..

சிவக்குமார் .V .K 

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com


கேள்வி :  இன்றைக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் எங்கு பார்த்தாலும் வெளிநாட்டு உணவு கடைகளை பார்க்கிறோம். உலக அளவில் முன்னணி பிரைடு சிக்கன் பிராண்ட் நம்ம ஊரு கோவை ,திருச்சி ,உடுமலையிலும் ,மதுரையிலும் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமானது?


என் பதில் : 


இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு தங்களுக்கான நுகர்வோர்களை நமது நாட்டில் பிடிப்பது எப்படி?

ஒரு மளிகைக் கடை நடத்தும் அண்ணாச்சியை, இன்னொரு கடை திறக்க வேண்டியது தானே என்று கேட்டால், ‘ஐயோ.. ஒரு கடையை நடத்துவதற்கே பெரும் பாடாய் இருக்கிறது, இன்னொரு கடை எதற்கு?’ என்று கேட்பார்.

இந்த சிந்தனை முறை என்பது பழைய சிந்தனை போக்காகும். மாறி வரும் பொருளாதார உலகில் நமது பாரம்பரிய தொழில் அறிவு மட்டும் போதாது. புதிய தொழில் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு தொழில் செய்தால்தான் தொழிலில் முன்னேற்றம் காண முடியும்.

அந்நிறுவனங்கள் நவீன முறையில் சிந்தித்து பிரான்சைஸி முறையின் மூலம் தங்களது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவு படுத்துகின்றன.

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு குறிப்பாக முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு பிரான்சைஸி தொழில்கள் மிகவும் சிறந்தது. என்ன தொழில்... எப்படி தொடங்குவது போன்ற குழப்பம் எதுவும் இதில் இல்லை.

இதை இப்படித்தான் நடத்த வேண்டும் என்பதும், இவ்வளவு இலாபம் கண்டிப்பாக கிடைக்கும் என்பதும் இதில் தெளிவாக தெரிந்த விஷயம்.

தொழிலை ஏற்று நடத்தி, கிடைக்கும் இலாபத்தை பகிர்ந்து கொள்வதுதான் இத்தொழில் முறையில் உள்ள அடிப்படை அம்சமாகும். இதற்கு அடிப்படை தேவையானது முதலீடு மட்டுமே. ஏற்கெனவே பிரபலமாக திகழும் நிறுவனங்களின் பிரான்ஸைசாக ஆவது சிறந்தது.

அடிப்படை கல்வி, உயர் கல்வி, கார் சர்வீஸ், உணவகம், காபி கடை, அழகு நிலையம், கம்ப்யூட்டர் சர்வீஸ் என எல்லா தொழில்களிலும் பிரான்சைஸி வாய்ப்பு வந்து விட்டது. உங்களது முதலீட்டுக்கு ஏற்பவும், அனுபவத்திற்கு ஏற்பவும் தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கும் தொழிலையும், அதன் வியாபார வாய்ப்புகளையும் பொறுத்து முதலீட்டு தொகை அமையும். சில நிறுவனங்கள் டெபாசிட் தொகையை மட்டும் வாங்குகின்றன. இந்த தொகையை குறிப்பிட்ட வருடங்களில் திருப்பி எடுக்கலாம் என்ற உத்தரவாதமும் கொடுக்கப்படுகிறது.

குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பிரான்சைஸை வாங்கி விட்டால் அந்நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். அப்போது தான் அந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு சீராக இருக்கும். இதை மீறாமல் இருக்க ஒப்பந்தத்தில் குறிப்பிடபட்டு இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு, குறிப்பிட்ட அடையாளம் மக்கள் மனதில் பதிந்திருக்கும். அதுதான் அந்த நிறுவனத்திற்கு கிடைத்த பிராண்ட் வேல்யூ. இந்த சிறப்பு அம்சத்தை குலைக்கும் வகையில் பிரான்சைஸி எடுக்கும் நபர் செயல்படக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

அடிப்படை பயிற்சி, ஊழியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற உதவிகளை நிறுவனங்கள் வழங்கும்.

வாடிக்கையாளர்கள் சேவையை நிறுவனமே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். மூலப்பொருட்கள், விளம்பரம், அலங்காரம், தொழில் தொடர்பான பயிற்சி, தேவையான கருவிகள் உள்பட அனைத்தையும் நிறுவனமே வழங்கி விடும்.

பொதுவாக, புதிதாக ஒருவர் தொழில் தொடங்கினால் அந்த பிராண்டை மக்கள் மனதில் நிலைக்க வைக்க நீண்ட காலம் பிடிக்கும். அது வரை தொடர்ந்து செயல்பட வேண்டும்.

அவ்வாறு நீண்ட காலம் காத்திருக்க முடியாது என்று நினைப்பவர்களுக்கு பரிச்சயமான பிராண்டுகள் சார்ந்த நிறுவனங்களிடம் பிரான்சைஸ் வாய்ப்பு பெற்று தொழில் தொடங்குவது சிறந்தது.

இதன்மூலம் நேரடியாக, தொழிலில் முழு கவனத்தையும் செலுத்த முடியும் என்பது இதில் உள்ள முக்கியமான சிறப்பு அம்சம்.

பிரான்சைஸி தொழில்களைப் பொறுத்தவரையில் உங்கள் விருப்பத்திற்கு செயல்பட முடியாது என்பது அதில் உள்ள பலவீனமான அம்சம்.

தொழிலை விரிவாக்கம் செய்யவோ, விருப்பம்போல மாற்றங்களை செய்யவோ முடியாது. ஒப்பந்தங்கள், விதிமுறைகள் இவற்றின்படியே செயல்பட முடியும். வருமானத்தின் அடிப்படையில் லாபமும் வரையறுக்கப் பட்டிருக்கும்.

இந்த அடிப்படை உண்மைகளை எல்லாம் தெரிந்து கொண்டு பிரான்ஸைசி வாய்ப்பு பெற்று தொழில் தொடங்கி வெற்றி பெறுங்கள்.


நன்றி ...

 கபிலன் ராமசாமி தம்பிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 


கேள்வி : பெண் தொழில் முனைவோருக்கு வங்கிகள் அளிக்கும் கடன் திட்டங்கள் என்னனென்ன ..அதன் விவரங்கள் கூறமுடியுமா ..?


என் பதில் 


பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் படி இந்தியாவில் ,தமிழ் நாட்டில் ,கிராமப்புற பெண்களுக்கு  ,மத்திய அரசின் பல விதமான திட்டங்கள் உள்ளன. அதிலும் இந்தியாவில் தொழில் துவங்க வேண்டும் என்கின்ற பெண்களுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடனும் அளிக்கப்படுகிறது. தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் ஆர்வம் காட்டும் அதே நேரம் சிலர் என்ன வணிகம் துவங்க வேண்டும் என்ற எண்ண இல்லாமல் இருப்பதால் பின் வரும் திட்டங்கள் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு தெளிவாக முடிவை எடுங்கள்.


1. அன்னபூர்ணா திட்டம்

சிறிய அளவில் டிபன் சேவை, பேக்டு ஸ்னாக்ஸ் போன்று உணவுப் பொருட்கள் அல்லது கேட்டரிங் சேவையினைத் துவங்க அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் கடன் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 50,000 ரூபாய் வரை எஸ்பிஐ வங்கிக் கடன் அளிக்கிறது. இந்தக் கடனை 36 மாதத்தில் திருப்பி அளிக்க வெண்டும். கடன் பெறுபவர்கள் மூலதனமாகச் சமையலுக்குத் தேவையான சாதனங்களை வாங்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். அன்னபூர்னா திட்டம் கீழ் கடன் பெறும் போது ஒரு மாதம் தவனை மட்டும் இலவசம் ஆகும். கடன் பெற சொத்து ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். வட்டி விகிதம் என்பது சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு இருக்கும்.


2. உதயோகிணி திட்டம்

சிறுதொழில் வணிகம், சில்லறை விற்பனை மற்றும் விவசாயக் கடன் போன்றவற்றைப் பஞ்சாப் மற்றும் சிண்டிகேட் வங்கி அளிக்கிறது. விதிமுறைகள் நெகிழ்வானவை, மற்றும் வட்டி விகித சலுகைகளும் உள்ளன. 18 வயது முதல் 45 வயது உடையப் பெண்கள் 1 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். கடன் பெறும் போது உங்கள் குடும்ப வருவாய் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.


3. ஸ்ரீ சக்தி பேக்கேஜ்

எஸ்பிஐ வங்கி வழங்கும் இந்தக் கடன் பேக்கேஜ் ஆனது 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஒரு நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் கடன் அளிக்கும். 2 இலட்சம் ரூபாய்க்கும் கூடுதலாகக் கடன் பெறும் போது 0.5 சதவீதத்தை வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படும்.


4. தேனா சக்தி திட்டம்

தேனா வங்கி இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயம், சிறு நிறுவனங்கள், ரீடெய்ல் டிரேடு, மைக்ரோ கிரெட்ட், கல்வி மற்றும் ஹவுசிங் திட்டத்தின் கீழ் பெண்களுக்குக் கடன் அளித்து உதவுகிறது.

அதிகபட்ச கடனை பொருத்து வட்டி விகிதமும் மாற்றி அமைக்க வேண்டும். 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் போது 0.25 சதவீத வட்டி விகிதத்திலும் கடன் அளிக்கப்படுகிறது.



5. மகிளா உதையன் நிதி திட்டம்

பெண்களால் நிர்வகிக்கப்படும் சிறு நிறுவனங்களுக்குக் கடன் அளிக்கப் பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தத் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. புதிதாகத் துவங்கப்படும் நிறுவனங்கள் மட்டும் இல்லாமல் ஏற்கனவே நடத்தி வரும் வணிகத்திற்கும் கடன் அளிக்கப்படுகிறது.


6. செண்ட் கல்யாணி திட்டம்

சிறிய அளவில் உற்பத்தி மற்றும் சேவை துறையில் வணிகம் செய்ய விரும்பும் பெண்களுக்குச் செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கடன் அளித்து உதவுகிறது. கைவினை தயாரிப்பாளர்கள், தையல்காரர்கள், மருத்துவர்கள், ப்யூட்டி பார்லர்கள், ஆடை தயாரித்தல், போக்குவரத்துத் தொழில்கள், முதலிய வணிகங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அதிகபட்சம் 100 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கின்றனர். ரீடெய்ல் வணிகங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன் அளிக்கப்படாது. நிறுவனத்தினைத் துவங்க மூலதனம் மற்றும் சதங்களை வாங்க கடனை இந்தத் திட்டத்தின் கீழ் அளிக்கின்றனர்.


7. பெண்களுக்கான முத்ரா யோஜனா திட்டம்

மத்திய அரசால் பெண்கள் தனியாகப் பியூட்டி பார்லர், ஆடைகள் தைத்தல், டியூஷன் வகுப்புகள் எடுப்பது போன்ற காரணங்களுக்காக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் புற நகர் இல்லா பகுதிகளில் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இவர்களுக்கு முத்ரா கார்டும் வழங்கப்படும்.

குறிப்பு : இந்த கடன்களுக்கு செல்வதற்கு முன் ..அதற்கான தயாரிப்பு திட்டங்களுடன் (ஆடிட் ரிப்போர்ட் ) திட்டங்களுடன் சென்று வங்கிகளை அணுகவேண்டும் ..

நன்றி ..

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

 கேள்வி : அபார்ட்மெண்ட் மற்றும் பிளாட்களுக்கு தனியாக பட்டா வாங்குவது எப்படி?


என் பதில் : 


பட்டா எனப்படுவது அந்த நிலத்திற்கு உண்டான உரிமையைக் குறிப்பது.


அபார்ட்மெண்ட் எனப்படும் ஃபிளாட்டுகளில் உள்ள எந்த சுவருக்கும் தனிப்பட்ட உரிமை கிடையாது என்று தெரிந்தே வாங்குகிறோம்.


நம் பிளாட்டில் உள்ள தரை, கீழ் பிளாட்காரருக்கும் பொது.. பக்கவாட்டு சுவர்களும் அப்படியே பக்கத்து ஃபிளாட்காரருக்கும் சொந்தமானது. .இவற்றிற்கு இடையே உள்ள வெற்றிடத்தைத் தான் வாங்குகிறோம். இதில் கூட்டு உரிமை தான் உள்ளது. 


கட்டப்படாத நிலத்தில் உள்ள .பிரிக்கப்படாத பங்கின் உரிமை uds உண்டு தான்..ஆனால் எதுவுமே வரையறை செய்யக்கூடிய அளவில் நில அளவீடாக இல்லாத போது, பட்டா எப்படி வரும்?


முந்தைய மொத்த நில உரிமையாளரின் பெயரில் உள்ள பட்டா, ஃபிளாட் வாங்கும்போது போடப்பட்ட ஒப்பந்தம், பின்னர் நாம் அந்த இடத்தின் அனுபவத்தில் உள்ளோம் என்பதற்கான , வீட்டு வரி ரசீது ஆகியவையே நமக்கான ஆவணங்கள்…


நன்றி ..

சிவக்குமார் .V .K 

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 



Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

 இன்று செந்தில்குமார் -சாவித்திரி அவர்களின் குடும்ப விழா ...09.04-21


இன்று மதியம் தளி ஜல்லிபட்டி யில் பரிமளா மகாலில் செந்தில்குமார் -சாவித்திரி அவர்களின் புதல்வி சந்தியா பாப்பாவின் பூப்பு நன்னீராட்ட விழா நிகழ்வு ..அருமையான சொந்தங்களின் சந்திப்பு ,ஆரவாரம் ..நடப்பு அரசியல் ...சொந்தங்களின் நலம் விசாரிப்பு ..மனதிற்கு குதூகலகமாகவும் ..அருமையான கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ..


நம்ம மாப்பிள கரப்பாடி சிவா cva   மாப்பிள்ளையின் [புதிய வரவாக குட்டி இளம் தேவதை-க்கு  பெயர் வைத்துவிட்டீர்களா என கேட்டுவிட்டு ....நம் ஆசிரியர்  தளி  மாரிமுத்து  மாப்பிள்ளையிடம் இன்றைய நம் சமுதாய அரசியல் நிலவரம் பற்றி கேட்கும் செய்திகள் வேடசந்தூர் மோதிரம் சின்ன நம்ம கம்பராஜு காட்டுராஜா அண்ணாவின் உழைப்பு ..மற்றும் பண்பாட்டுக்கழகம் சொந்தங்களின் உழைப்பு ..நம் தலைவர்கள் கூட்டு உழைப்பு பற்றி மகிழ்ச்சியுடன் விவாதித்தோம் ..அதற்குள் நம் ராமு மாப்பிளை ,நவீன் தம்பி ,சிவா மாப்பிள ,கோபால் மாப்பிள்ளை ..அனைவரும் நம் சமுதாய அரசியல் நிலவரம் ஆக்கப்பூரமான ,எதிர்காலத்தில் அரசியல் களம் காணவேண்டும் .என்பதை மனதில் உறுதியோடு இருப்பதை காணமுடிந்தது ...



அதற்கான வழிமுறைகளை நம் தலைவர்கள் கொண்டுசெல்வர்கள் அனைவரிடமும் நம்பிக்கை விதைத்துவிட்டார்கள் ..இதுவே ஆரம்ப அருமையான அறிகுறி ..

அனைத்து சொந்தங்களையும் பார்த்து பேசிவிட்டு மதிய விருந்து அற்புதமான அறுசுவை உணவுடன் உண்டு ..உடுமலை திரும்பியது மனதில் நிழலாடும் நினைவுகளாக மலர்ந்தது .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681...

வியாழன், 8 ஏப்ரல், 2021

கேள்வி : புதிதாக கட்டும் வீட்டிற்கு  

மர சன்னல்கள் சிறந்ததா? 

யு.பி.வி.சி சன்னல்கள் சிறந்ததா?


என் பதில் : 



மர சன்னல்கள் பாரம்பரியமானவை. வீட்டின் தோற்றத்தில் மிக முக்கிய பங்கு மரத்திலான வேலைபாட்டில் தான் உள்ளது. மரத்தில் செய்யப்பட்டதற்கு தனி அழகு உண்டு. மர சன்னலை பொருத்தவரை காலநிலைக்கு ஏற்ப சுருங்கி விரியும் தன்மை கொண்டது. 


சில நேரங்களில் மழைநீரால் மரம் சற்று வளையலாம். அதனால்(தாழ்பாழ், கைப்பிடி)தேவைப்படும் சமயத்தில் பராமரிப்பு வேண்டும். மர சன்னல்கள் பல ஆண்டுகள் உழைக்கும், மரத்தினால் ஆன சன்னல்களால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது, 


மேலும் வேம்பு,தேக்கு மேலும் ஏனைய மரங்களால் நன்மைதான் உண்டாகும். வீட்டில் மாசு தடுக்கப்படுகிறது,பினி, நோய்களை முடிந்தவரை குறைக்கிறது.மர சன்னல்களில் வேலைப்பாடுகள் செய்ய வாய்ப்புகள் உண்டு. வர்ணம், செதுகுதல்,முதலியவை.


யுபிவிசி, சில விதமான ப்ளாஸ்டிக்,வேதி பொருட்களால்செய்யப்பட்டவை. எல்லா காலநிலையிலும் ஒரே போலவே இருக்கும். ஒரு முறை பொருத்திவிட்டால் பல ஆண்டுகள் வரை உழைக்கும். பராமரிப்பும் குறைவு. 


வெளிபுற ஒலியை பெரும்பாலும் தடுக்கும்.யுபிவிசி பல நிறத்திலும், பல மாடல்களிலும் உண்டு, பல விதமான தரத்திலும் உண்டு. அதைப்போல் வேலைப்பாடுகள் செய்ய வாய்ப்புகள் குறைவு, அது பெரிய அழகியிலும் தருவதில்லை மற்றும் மரத்தின் அழகையும் அது தருவதில்லை.


விலையை பொருத்தவரை இரண்டிற்க்கும் பெரிய வித்தியாசம் உண்டு. ஆதலால் எல்லா அம்சங்களையும் கொண்டு கருத்தில் கொண்டு எது சிறந்தது, எது வேண்டும் என்று தேர்வு செய்யலாம்.


நன்றி ...

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

 


கேள்வி : சமூக வலைத்தளங்களில் ,எப்படி இருக்கவேண்டும்  என்று பதில் தரமுடியுமா ?


என் பதில் : 


சமூக வலைத்தளங்களில் பலவருடமாக தொடர்ந்து பயன்படுத்தியும் அதிக பாலோயர்ஸ் இல்லையா? என்ன தான் அறிவுபூர்வமாக போஸ்ட்  போட்டாலும் அதிகபட்சம் 20 லைக்ஸ் கூட வரமாட்டீகுதா?


சமூகவலைத்தளங்களில்  உங்க ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ்ல சின்ன சின்ன மாற்றங்கள் செஞ்சீங்கன்னா போதும். எல்லோரும் விரும்பும் ஒருபிரபலாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.


எப்போதும் பாசிட்டிவாக பதிவிடுங்கள்

தினமும் பலகோடி பேர்கள் பயன்படுத்தும் இந்த டிஜிட்டல் தளங்களில் உங்களின் அந்தரங்கங்களை பகிரங்கமாக பகிராதீர்கள். அதுவும் பெண்கள் தங்கள் இயல்பான வாழ்க்கை முறை குடும்ப விவரங்களை அப்படியே அப்டேட் பன்னுவது நல்லதல்ல. இங்கே யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்வதற்காக வரமாட்டங்க. தன்னோட பிரச்சனைகளை சிறிது நேரம் மறந்து பொழுதுபோக்கத்தான் பெரும்பாலும் வருவாங்க. ஆக, இங்க நீங்க உங்க சொந்த கதை சோகக்கதைய போஸ்ட் பன்னிட்டு இருந்தா ஒருபயளும் பாலோ பன்ன மாட்டாங்க. 


மாறுதலா எப்போதும் பாசிட்டிவ் கன்டென்ட்களை மட்டுமே பதிவிடுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோசமான கருத்துக்களை, காணொளிகளை பதிவிடுகிறீர்களோ அவ்வளவு அதிக பாலோயர்கள் உங்களை பின்தொடர்வார்கள். இரக்கத்தையோ, ஆறுதலையோ தேடாமல் இயல்பான விசயங்களை பதிவிடுங்கள்.  


டிஜிட்டல் மீடியாவில் இருந்து உங்களை தூரமாக வைத்துக்கொள்ளுங்கள்|

ஒரு ஆரோக்கியமான பயனாளாராக இருக்கும்பட்சத்தில் பலமணிநேரமாக சோசியல் மீடியாக்களில் மூழ்கி இருப்பதை தவிருங்கள். ஏன் பார்க்கிறோம் எதை பார்க்கிறோம் என்றே தெரியாமல் அடிக்கடி மொபைல் எடுத்து பார்க்குறவங்களா இருந்த தயவு செஞ்சு அந்த பழக்கத்தை மாத்திக்கங்க. 


உடல், மனதளவில் இதனால் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதை காட்டிலும் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில்  மூழ்கி இருந்தால் எதை பதிவது என்கிற யோசனையே பெரும்பாலும் தோன்றாமல் போய்விடும். நீங்களும் இன்டலிஜென்ட்டா எதாச்சும் போஸ்ட் போடலாம்ன்னு நினைப்பீங்க. ஆயிரம் விசயங்களும் உங்களுக்கு தெரியலாம். ஆன ஒரு லைன் கூட உங்களால போஸ்ட் பன்ன முடியாது, சிந்தனை மழுங்கி விடும். எதிலும் ஒரு திருப்தி இல்லாமல் நேரத்தை கடத்தி வீணாக்குவீர்கள். தினமும்  எவ்வளவு குறைவான நேரம் உபயோகிக்க முடியுமோ அவ்வளவு  குறைவாக பயன்படுத்துங்கள்


சுதந்திரமாக பதிவிடுங்கள்


சமூகவலைத்தளங்களில்  முதலில் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே மறுபரிசீலனை இல்லாமல் பகிறும் மனநிலைக்கு வாருங்கள். அதுசரியோ தவறோ, யாராச்சும் கிண்டல் பன்னிடுவாங்களோ என்றெல்லாம் யோசிச்சுட்டு இருந்தா ஒன்னுமே பன்ன முடியாது. டான்ஸ் ஆடுவீங்களோ, பாட்டு பாடுவீங்களோ சமைப்பீங்களோ சாப்பிடுவீங்களோ எத  பன்னுறதா இருந்தாலும் தயங்காம பதிவிடுங்க. 


நெகட்டிவ் கமென்ட்களுக்கு பயப்படாதீர்கள். அப்படி யாரவது கமென்ட்ஸ் பன்னுனா அதிலிருக்கும் கருத்துகளை உள்வாங்கி சரிசெய்துகொள்ளுங்கள். மாறாக வம்பிலுத்து சண்டை போட்டு மன உளைச்சலை உண்டாக்கிக்கொள்ளாதீர்கள்


பாலோயர்ஸ்க்கு பதிலளியுங்கள்

உங்கள் பாலோயர்களுக்கு மதிப்பளியுங்கள். அவர்கள் இடும் பின்னூட்டங்களுக்கு பதிலளியுங்கள். அதே போல மற்றவர்களையும் பாரட்ட தயங்காதீர்கள். அவர்களுடைய பதிவுகளுகளுக்கு சென்று உங்கள் கருத்துகளை இடுங்கள். உங்களின் தேவைக்கு மட்டும் பதில் அளியுங்கள் .


நீங்கள் விரும்பும் நபர்களுடன் சேட்பன்னுங்க. அவர்களையும் வாழ்த்துங்க. ஆனாலும் முடிந்த அலவு 99 விழுக்காடு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை பற்றியேல்லாம் முன்பின் தெரியாத நபர்களிடம் பகிர்ந்துகொள்ளாதீர்கள்


இடைவெளி விடாதீர்கள்

சிலர் தொடர்ந்து ஒருநாளைக்கு 10-15 போஸ்ட் போடுவாங்க. திடீர்ன்னு பார்த்தா ஒருவாரத்துக்கு ஆன்லைனிலேயே வரமாட்டாங்க. ஒரு நல்ல பதிவாராக இருக்கும்பட்சத்தில் சீரான இடைவெளியில் உங்கள் பதிவுகளை இடுங்கள். 


அப்படி புதிய பதிவுகளை போஸ்ட் பன்ன முடியாத பட்சத்திலும் கவலை வேண்டாம் அடுத்தவர்களின் பதிவுகளுக்கு சென்று கமென்ட்ஸ் ஆச்சும் போட்டு விடுங்க. உங்களுடைய இருப்பை அடிக்கடி உறுதிசெய்துகொள்ளுங்கள்.


இன்னும் டெக்னிக்கலா நிறைய ட்ரிக்ஸ் இருக்கு . அப்படி என்னதான் ட்ரிக்ஸ் நாம யூஸ்பன்னினாலும் மேற்கண்ட இந்த விசயங்களை கடைபிடிக்காமல் ந்த ட்ரிக்ஸ்சும் பயனளிக்காது.


இப்ப நீங்க ரெடி தானே?


நன்றி ..என்றும் அன்புடன் சிவக்குமார் 

குறிப்பு :நான் கடந்த 15 வருடங்களுக்கு மேல் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறேன் ..பயன்களும் அதிகம் ,புது புது செய்திகள் ,வளரலாறுகள் ,அறிவியல் ,கல்வி ,கலை ,பண்பாடு ..அனைத்தும் துறைகளில் இருக்கும் நண்பர்களை பெற்று இருக்கிறேன் ..

எங்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 


 யார் சொன்னது குறிஞ்சி மலர் ஒரு முறை பூக்க பண்ணிரண்டு வருடம் ஆகும் என்று? 


வருடம் ஒரு முறை குறிஞ்சி மலராய் உங்கள்  பிறந்த நாளில் நீங்கள் பூக்றீர்களே  !!!


பிறந்த நாள்  உன்னை படைத்ததற்காக அந்த பிரம்மனே பெருமைப்படும் மகத்தான நாள்.

பூக்களெல்லாம் பெருமை கொள்ளும் நாள் இன்று. மலரொன்று புதிதாய் பூக்கும் நாள் இன்று. வான் நிலவு ஒன்று மண்ணில் தோன்றிய அதிசய நிகழ்வு இன்று

காண கிடைக்காத  மனித பிறவியில் பூமியில் பிறப்பது அழகானது. அந்த பிறந்த நாளை சிறப்பூட்டும் விதமாய் நாம் வாழ்ந்து காட்டுவது அதை விட அழகானது.

வருடத்தில் பல நாட்கள் வரும் போகும். ஆனால் உங்களுடைய  பிறந்த நாள்  போல எந்நாளும் எனக்கு சிறப்பு வாய்ந்ததாய் அமைந்தது இல்லை. தித்திக்கும் இந்நாள் போல் எந்நாளும் உங்களுக்கு   சிறப்பாய் அமையட்டும்.

ஏன் இன்று நிலவில் ஒளி இல்லை? உன் பிறந்த நாளை கொண்டாட ஒரு வேளை  நிலவு விடுமுறை எடுத்து கொண்டதோ?

கடவுள் கருணையினால் இன்று போல் என்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க, செல்வம் செழிக்க, நேசமான நண்பர்களுடனும் பிரியமான உறவுகளுடனும் என்றும் குதூகலுடத்துடன் உன் புன்முறுவலோடு நீடூடி வாழ இறைவனிடம் உனக்காக பிரார்த்திக்கிறேன்.

மீண்டும் ஒரு முறை இந்த பிறவியில் நீங்கள்  குழந்தையாக பிறக்க முடியாது நீங்கள்  பிறந்த திருநாளை உங்களின்  வாழ்க்கையிலும் மறக்க இயலாது.

அனைவரும் இங்கு பிறக்கிறோம் எதோ ஓர் நாள் இறக்க போகிறோம் இதில் இல்லை சிறப்பு. நீ பிறந்த நாளை இந்த வரலாறு சொன்னால் அதுவே உங்கள்  சிறப்பு

எத்தனை தோல்விகள் வந்தாலும் ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள் . நீங்கள்  பிறக்கும்  முன்னரே பத்து மாதம் போராடி இந்த அகிலத்தில் உதித்தவன் என்று.


எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய பிறந்த வாழ்த்துக்கள் 



புதன், 7 ஏப்ரல், 2021

 கேள்வி :  உறவுகளுக்கு நடுவே பஞ்சாயத்து வராமல் பார்த்துக் கொள்வது எப்படி?


என் பதில் : 


உறவினர்களிடம் கடன் வாங்காதீர்கள்..

அவர்களிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்…

ஒரு சின்ன சண்டை வந்தாலும் அதனை பேசிப் பேசிப் பெரிது ஆக்காதீர்கள்.

உறவினர்கள் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்ளுங்கள் .அது சரியா தவறா என்று வாதம் செய்யாதீர்கள்.


"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"


யார் எதை சொல்லும்போதும் பொறுமையாக கேட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் நீங்கள் அது சரியா ?தவறா ?..உங்களுக்கு ஏற்றதா என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள் .அந்த இடத்திலேயே வாக்கு வாதங்கள் வேண்டாம்..


ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்லி உள்ளேன்…


நன்றி ...


 கேள்வி : சென்னை,கோவை ,திருச்சி ,மதுரை ,சேலம் ,ரியல் எஸ்டேட் வணிகம் எப்படி இருக்கிறது? வரும் ஆண்டுகளில் வளர்ச்சி எப்படி இருக்கும்?


என் பதில் : 


சுமாரான சராசரி கதியில் இருக்கிறது.


வெளி மாநில முக்கிய இந்திய நகரங்களுடன் ஒப்பிட்டால் சென்னை ,கோவை ,திருச்சி ,மதுரை ,சேலம் ,சற்று அதிக ஊழல் மலிந்த நாட்டுப் புறம். ( ஊழல் இல்லாத இடம் கிடையாது. பல மாநிலங்களில் ஊழலிலும் ஒரு தர்மம- நியதி இருக்கிறது. இங்கு அது அறவே கிடையாது.) கொடுக்கும் விலைக்கு ஏற்ற மதிப்பு கிடையாது. சுறுசுறுப்பும் குறைவு.


அடிப்படை உற்பத்தி/ மூல கட்டமைப்புத் தொழில் சரியானத் திட்டமிடல் இன்றி ஒரு குருட்டாம் போக்கில் நடை பெறுகிறது. நில மேலாண்மை அரசின் கைக்குள் இல்லை. இந்நிலை விலைகளை செயற்கையான உச்சத்தில் வைத்துள்ளன.


பல மாநிலங்களில் மத்யதர வர்க்கத்தினர் சொந்த வீடுகள்/ ஃளாட்கள் தங்கள் வசதிக்கேற்ப வாங்க முடியும். இங்கு மாநில அரசுகள், காலம் காலமாய் ஓட்டு வங்கி அரசியலில் அடி மட்ட மக்களிடம் மட்டும் இயங்கி மற்ற தளங்களில் அக்கறை காட்டியதில்லை. 1950–60 களில் கட்டமைக்கப் பட்ட நகர நிலங்களே இன்னமும் சுழற்சிப் புழக்கத்தில் சந்தைப் படுத்தப் படுகின்றன.


21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த நகர வளர்ச்சித் திட்டம் பொது மக்கள் பார்வையில் இருக்கிறதா? மும்பை, தில்லி ஒப்பீட்டில் சாமானிய நடுத்தர மக்களுக்குப் பயனுள்ள ( ரூ 4 லட்சம்- ரூ 8 லட்சம் ஆண்டு வருமானமுள்ளவர்) திட்டம் பெரிய அளவில் இங்கு கிடையாது என்பது வருத்தமளிக்கிறது.


மேலும் நிலப் பயன்பாட்டு விகிதம் (FSI) இப்போது தான் 2 என்று வந்துள்ளது. பல நகரங்களில் இதன் புரிதல் பரவ வில்லை. மேலும் வரை முறைகள் ஆக்க பூர்வ முறையில் சீரமைக்கப் பட வேண்டும். சில கட்டுமான நிறுவனங்களுக்கே சாதகமாக விதிகள் இயங்குகின்றன. மத்திய தர வகுப்பினர் தனியாக/ கூட்டுறவுச் சங்கங்களாகவோ மும்பை, தில்லி போல இயல்பாக இங்கு இயங்க முடியாமல் சிவப்பு நாடாவின் ஆளுமை அதிகம்.


தலைமைத் தகுதியுள்ள பொறியியல் / கட்டிடவியல் நிபுணர்கள் கையில் இத்துறை இயங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.


ரியல் எஸ்டேட் வளர்ச்சி நம்பிக்கை சார்ந்தது. நம்பிக்கை வளர துடிப்புடன் செயல் படும் நிபுணர்கள் நிர்வாகம் தேவை.


நன்றி ..


சிவக்குமார் .V .K 

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com



திங்கள், 5 ஏப்ரல், 2021

ரெங்கமலை மல்லீஸ்வரன் கோவில்


பாப்பநாயக்கன்பட்டி மலையின் பெயர் ரெங்கமலை மல்லீஸ்வரன் கோவில் உச்சிக்கு கீழே உள்ளது  கோவிலுக்கு தென்புரம் வற்றாத பாறை கிணறு சிறியதாக உள்ளது அந்த தண்ணீரும் சிறுவாணி தண்ணீரும் ஒரேமாதிரியாண சுவை கொண்டது அங்கு தங்கிக்கொள்ளலாம் கோவில் முன் மண்டபம் உள்ளது கோவிலின் கிழக்குப்பகுதியில் சமமான பாறை ஐம்பது நபர்கள் தூங்கும் அளவுக்கு ☝️உள்ளது கீரணூர் கொண்டரிங்கிமலையும் பாப்பநாயக்கன்பட்டி ரெங்கமலையும் அண்ணன் தம்பி என்று பெரியவர்கள் கூற கேட்டிருக்கேன் ரெங்கமலை தொடர்ச்சியின் கிழக்குபகுதியில் கணவாய் என்று சொல்லக்கூடிய நேசனல் சாலை எண் 7 செல்கிறது அதேபோல கணவாய் ஒட்டியதுபோல வடபுரம் சக்திவாய்ந்த கணவாய் ஜக்கம்மாகோவில் உள்ளது.

 இந்த ரெங்கமலை மல்லீஸ்வரன் கோவிலுக்கு திங்கள் வெள்ளி.இரண்டுநாளைக்கு பூசாரி பூஜை செய்ய வருவார் ஒரு இரவு தங்குவார் இக்கோவிலுக்கு செல்ல விரும்புவோர் அரிசி ,சமையலுக்கு  தேவையான மளிகை  மட்டும் கொண்டு சென்றால் போதும் மேலை கோவிலில் பாத்திரங்கள் உள்ளது சமைத்து சாப்பிடலாம் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருநாள் அன்று ரெங்கமலை மலை உச்சியில் பெரிய கொப்பரை உள்ளது அதில்  விறகு நிறைய நிரப்பி எண்ணைய் ஊற்றி  தீபம் ஏற்றினால் வேடசந்தூர் வரை தெரியும் நாங்கள் அந்த தீபத்தை வணங்கிவிட்டு பிறகு சாப்பிடுவோம் அத்தகைய சக்தி வாய்ந்த மல்லீஸ்வரன்கோவில் இக்கோவிலில் நமது குறையை முழுமனதோடு மனதில் நிருத்தி பூ கேட்டால் என்ன பூ வருகிறதோ அதுவே நடக்கும்.


ரெங்கமலை கோவிலுக்கு செல்வதாக இருந்தால் தண்ணீர் பாட்டில் அவசியம்  ஆண்டிபட்டிகோட்டைக்கு முன்னரே ரெங்கமலௌக்கு செல்லும் சாலை பெயர் இருக்கும் சுமார் 400 படிக்கட்டுகள் இருக்கலாம் செங்குத்தாக பல படிக்கட்டுகளும் சமமாக சில படிக்கட்டுகளும் இருக்கும் புதுமையான இரவில் தங்கும்போது கிடைக்கும்.ஆணந்தம் சுகமாக இருக்கும் இரவு நேரத்தில் அங்கேயிருந்து சுற்றி பார்த்தால் ஊர்களில்.தெரியும் மின் விளக்குகள் நம்மை ஆகாயத்தில் கொண்டு சேர்த்த உணர்வு உண்டாகும்


தகவல் : தங்கராஜ் -உடுமலைப்பேட்டை .


ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

 பெண்கள் சொந்தமாக வணிக முயற்சியில் ஈடுபட உதவும் வணிக யோசனைகள்!


பெண்கள் தங்களது வீட்டிலிருந்தே வணிகத்தைத் துவங்க தொழில்நுட்பம் உதவுகிறது. ப்ளாக் எழுதுதல், பேக்கிங், ஃபேஷன் டிசைன் என ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

  

பெண்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பணிபுரிகின்றனர். எனினும் பெண்கள் வீட்டில் செய்யும் வேலை அங்கீகரிக்கப்படுகிறதா? இந்தியப் பெண்கள் நாள் ஒன்றிற்கு 352 நிமிடங்கள் வீட்டு வேலைகளுக்காகச் செலவிடுகின்றனர். அதேசமயம் வீட்டு வேலைகளுக்காக ஒரு நாளைக்கு 52 நிமிடங்கள் செலவிடும் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 577 சதவீதம் அதிகமாக செலவிடுகின்றனர் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) தரவுகள் சுட்டிக்காட்டுகிறது.


பெண்களின் இந்தப் பங்களிப்பு முறையாக அங்கீகரிக்கப்படுவதில்லை. ஆனால் இத்தகையச் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. வீட்டுப் பொறுப்புகளைப் பெண்களே அதிகம் சுமந்தாலும் அவர்களது உழைப்பிற்கான ஊதியமோ பாராட்டோ கிடைப்பதில்லை. வீட்டு வேலைகளில் உதவ யாரும் இல்லாத நிலை, அவர்கள் வாழும் பகுதிகளில் குறைவான வேலை வாய்ப்புகள் போன்ற பல்வேறு காரணிகளால் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பணிக்குச் செல்ல முடிவதில்லை.


எனினும் தொழில்நுட்பமும் இணையமும் நாட்டின் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடையும் நிலையில் பெண்கள் தங்களது வீட்டில் இருந்தே பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் அவர்கள் நிதிச் சுதந்திரம் அடையமுடியும்.


பெண்கள் சுயமாக முயற்சியைத் துவங்க 5 வணிக யோசனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


மின்வணிகம் / மொத்த விற்பனை

பெண்கள் ஆர்கானிக் பொருட்கள், ஆபரணங்கள், புடவைகள், ஆடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் என அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்ய ஆன்லைன் சந்தைப்பகுதிகளும் மின்வணிகமும் வாய்ப்பளிக்கிறது.


இவற்றை அவர்களாகவேத் தயாரிக்கலாம் அல்லது வெளியில் இருந்து வாங்கி வீட்டிலிருந்தே விற்பனை செய்யலாம்.


சண்முகப்பிரியா வாட்ஸ் அப்பைப் பயன்படுத்திப் புடவைகளை மறுவிற்பனை செய்துள்ளார். ரித்து கௌசிக் ஃப்ளிப்கார்ட் மூலம் வெற்றிகரமாக வணிகத்தை உருவாக்கியுள்ளார்.


’வாட்ஸ்-அப்’ மூலம் புடவைகள் விற்று லட்சங்களில் வருவாய் ஈட்டும் சென்னை சண்முக பிரியா!

நூற்றுக்கணக்கான பெண்கள் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். நீங்கள் வேறு நகரத்திற்கு மாற்றலாகி சென்றாலோ வெளிநாடுகளுக்கு மாற்றலாகிச் சென்றாலும்கூட உங்கள் வணிகத்தைத் தொடர்ந்து நடத்தலாம். ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களைப் பயன்படுத்தியோ அல்லது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியோ உங்களது பொருட்களை விற்பனை செய்யலாம்.


ப்ளாக் எழுதுதல்/கதை சொல்லுதல்

ப்ளாக் எழுதுபவர்களும் கதை சொல்பவர்களும் பணம் ஈட்டுவதில்லை என்கிற தவறான கருத்து மக்களிடையே காணப்படுகிறது. ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் தொடர்பாக ப்ளாக் எழுதும் மசூம் மினாவாலா மற்றும் ஆயூஷி பங்கூர் ஆரம்பத்தில் சிறியளவிலேயே துவங்கியுள்ளனர். ஃபேஷன் துறையில் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளிடையே பிரபலமாகியுள்ளனர்.


உங்களுக்கு எழுதும் திறன் இருக்குமானால் ஃப்ரீலான்ஸ் முறையில் உள்ளடக்கம் எழுதும் வாய்ப்பும் உள்ளது. ஏதேனும் ஒரு துறை அல்லது விரிவான மையக்கருத்தை தீர்மானித்ததும் டொமெயின் பெயரையும் ஹோஸ்டிங் ப்ரொவைடரையும் தேர்வு செய்து ப்ளாக் எழுதத் துவங்கலாம்.


வீட்டில் அமர்ந்தபடியே ஃப்ரீலான்சிங் மூலம் லட்சங்களை ஈட்டும் நந்திதா!

விருந்தோம்பல் சேவை

தற்போது உலகம் முழுவதும் இருந்து வரும் பயணிகளுக்கு மக்கள் தங்களது வீட்டை தங்குமிடமாக வழங்குவதற்கான வசதியை உலகளவில் செயல்படும் ஆன்லைன் சந்தைப்பகுதியான ஏர்பிஎன்பி வழங்குகிறது. பெண்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏர்பிஎன்பி உடன் கையெழுத்திட்டு நீங்கள் விருந்தோம்பல் செய்யலாம்.


உங்களுக்கும் உங்களது சொத்துகளுக்கும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதுடன் உங்களது விருந்தினரை நீங்களே தேர்வு செய்து கட்டுப்பாடுகள் விதிக்கலாம். மேக்மைட்ரிப் போன்ற பிற பயண ஏற்பாட்டு நிறுவனங்களும் ஹோம்ஸ்டே பட்டியலை வழங்குகிறது. எனவே உங்கள் வீட்டின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி நீங்கள் வருவாய் ஈட்டலாம்.


கேட்டரிங், சமையல், பேக்கிங்

வீட்டிலேயே பேக்கிங் செய்வது அல்லது கேட்டரிங் என உணவுத் துறை லாபகரமான பிரிவாக உள்ளது. உங்களது சமையல் திறனைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதுடன் சிறப்பாக வளர்ச்சியடையவும் முடியும். பலர் இவ்வாறு சிறியளவில் வீட்டிலேயே பேக்கிங் செய்யத் துவங்கி கேக் ஷாப், கஃபே, பேக்கிங் பள்ளிகள் என பெரியளவில் வளர்ச்சியடைந்துள்ளனர்.


உங்களது திறனையும் தயாரிப்பையும் பரிசோதனை செய்ய உள்ளூரில் இருக்கும் மலிவு விலை சந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டிலேயே பேக்கிங் செய்பவர்களை அவர்களுடைய வாடிக்கையாளர்களுடன் இணைக்க அனுராதா காம்பி, அஞ்சத் லத் ஆகிய தொழில்முனைவோர் உருவாக்கியுள்ள HomeBakers.co.in போன்ற சந்தைப்பகுதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.


கை தேர்ந்த வீட்டு உணவை வழங்கும் சென்னை நிறுவனம்!

உங்களால் தரமான சுத்தமான உணவைத் தயாரிக்கமுடியும் எனில் வீட்டிலிருந்து டிஃபன் செண்டரை நடத்தலாம். ஒரு சில ஆர்டர்களுடன் சிறியளவில் துவங்கி படிப்படியாக வளர்ச்சியடையலாம்.


ஆன்லைன் வகுப்புகள்

தனிப்பட்ட நிதி, சமைப்பது, சுய மேம்பாட்டு புத்தகங்கள் என யூட்யூபர் சலோனி ஸ்ரீவாஸ்தவாவிற்கு யூட்யூபில் ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர். அதிகளவிலான பெண்கள் தங்களது பணிவாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள யூட்யூபைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.


புடவை டிரேப்பிங், கணிதம் கற்றுக்கொடுத்தல், மேக்அப் பயிற்சி, அம்மாக்களுக்கும் குழந்தைகளுக்கும் வீடியோக்கள் என உங்களது மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்டு வருவாய் ஈட்டி பிரபலமாகலாம்.


பெண்கள் பயன்படுத்திக்கொள்ள ஆன்லைனில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. எனவே நீங்கள் மற்றவர்கள் செயல்படுவதை கவனித்து கற்றுக்கொண்டு உங்களது முயற்சியைத் துவங்கலாம்.


உங்களுக்கு ஆர்வம் அதிகமுள்ள துறையைக் கண்டறிந்து நீங்கள் களமிறங்கலாம். சரியான பாதையில் பயணிக்க சிறிது அவகாசம் தேவைப்படலாம். ஆனால் அதன் பின்னர் வளர்ச்சியும் வெற்றியும் சாத்தியப்படும்.


வெள்ளி, 2 ஏப்ரல், 2021

 இன்று புது கணக்கு வருடம் 2021-2022


அருமையான ஆரம்பம் ..


இன்று இந்தவருடம் ..வியாபாரம் ..நல்ல ஆட்சி அமைய ...நோய்த்தொற்று காலத்தில் இருந்து  நன் மக்கள் விடுபட .சொந்தங்கள் ,நண்பர்கள் அனைவரும் நலம் பெற ....புங்கமுத்தூர் துர்க்கை அம்மன் வழிபாடு ..ஆனைமலை மாசாணி அம்மன் ...பாலக்கரை ஆஞ்சிநேயர் கோவில் ...திருமூர்த்தி மலை ..சமணர் கோவில் ...என்று அருமையான தரிசனம் ...


மகிழ்ச்சி ..


Sivakumar.V.K



(Home Loans,Home Loans To NRIs) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com