செவ்வாய், 1 செப்டம்பர், 2020

 கேள்வி : 

'ஏதோ வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது, ஏனோ நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்' என்று என்றாவது எண்ணியதுண்டா?


என் பதில் :.


'ஏதோ வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது, ஏனோ நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்' என்ற எண்ணத்துடன் வாழ்க்கையை வாழ்வது ஒரு பிடிப்பில்லாத ஏனோதானோ வழிதான். சரியான இலக்கு இல்லாதவர்களுக்கு அதுபோன்ற எண்ணம் ஏற்படலாம். வயதானகாலத்தில் கூட அந்த எண்ணம் வருவது சரியில்லை என்பது என் அபிப்பிராயம். இளைஞர்களுக்கு ஏற்படவே கூடாது. வாழ்வை ஒரு பிடிப்புடன் வாழ்ந்தால் தான் அதன் சுவை அதிகரிக்கும்.


இதுபோன்ற எண்ணங்கள் ஒரு நம்பிக்கை இன்மை, தாழ்வு மனப்பான்மை, குறைந்த சுயமதிப்பீடு போன்றவற்றால் ஏற்படலாம். இந்த குறியீடுகளை உணர்ந்து அவற்றை உயர்த்த வழி காண்பதே அவர்கள் முதல் இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும். இலக்கில்லாமல் அம்பு எய்துவதும் அப்படிப்பட்ட எண்ணத்துடன் வாழ்வதும் பயனில்லை.


அந்த எண்ணமே வராமல் வாழ்வை ஒரு குறிக்கோளுடன் வாழ்பவர்கள் நல்ல ஆரோக்கியமான வாழ்வை வாழுகின்றனர். என் வாழ்வு அதற்கு ஒரு சாட்சி. தம் தம் வயதுக்கேற்ற குறிக்கோளை அமைத்து கொள்வது அவசியம்.


நன்றி ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக