உணர்ச்சிகள் ஊடாடும் பிரிட்டிஷாரின் கடிதங்கள்
பாஞ்சாலங்குறிச்சி யுத்தம் நடைபெற்ற காலத்திலே போர் முனையிலிருந்து எழுதப்பட்ட கடிதங்கள் உணர்ச்சிகள் மிகுந்தவையாக இருக்கிறது, போரை நிகழ்த்துகிற பொழுது எழுதப்படும் சொற்களில் இருக்கிற உயிர் இன்றும் பட்டுப்போகாமல் மின்னிக் கொண்டு இருக்கிறது.
பிரிட்டிஷாரின் கோர முகங்களை அவர்களது எழுத்துக்களே ஊர்ஜிதப்படுத்துகிறது. நமது முன்னோர்கள் பட்ட இன்னல்கள் சொல்லொணா துயரங்களை, பிரிட்டிஷாரின் கடிதங்கள் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதே நேரத்தில் நமது பாளையக்காரர்களின் துணிச்சலை கண்டு பிரிட்டிஷ்காரன் நடு நடுங்கி போனதையும் அவனது கடிதங்களே நமக்கு விளக்குகிறது.
பாஞ்சாலங்குறிச்சி வரலாறு சம்மந்தமாக
இதுவரைக்கும் வெளிவந்த புத்தகங்களுக்கும், கட்டபொம்மன் பதிப்பகம் வெளியிடும் ஆவண புத்தகத்திற்கும் உள்ள வேறுபாடு என்பது படிப்பவர்களின் மனசாட்சிக்கு உண்மையையும் அதன் சூழ்நிலை, நிஜப் பின்னனியையும் விளக்குவது மட்டும்தான்.
பாஞ்சாலங்குறிச்சி படை வீரர்களின் முரட்டுத்தனமான போர்க்கள காட்சிகளை கண்ணால் பார்த்த அதிகாரிகள், பயந்து போய் மேலதிகாரிகளுக்கு எழுதிய கடிதங்களை படிப்பவர்கள் திடுக்கிட்டுப் போவார்கள்,
அதுமட்டுமல்ல நண்பர்களே.,சொந்தங்களே ....
இதுநாள்வரை பாஞ்சாலங்குறிச்சி யுத்தத்தை மட்டுமே பெருமையாக பேசிக் கொண்டிருந்த நமக்கு, போருக்கான காரணங்களையும், அதன் அடிப்படை வேரையும் தெரியாமல், எழுத்தாளர்களின் சொற்களை மட்டுமே நம்பினோம், இனிமேல் நமக்கு அந்தக் கவலை தேவையில்லை.
இந்தப் புத்தகத்தை படிக்கிற ஒவ்வொருவரும் பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றோடு நெருக்கமாக பயணிப்பார்கள்.
அதுமட்டுமல்ல இந்தப் போரின் மய்யமாக பாஞ்சாலங்குறிச்சியாரின் நியாயங்களையும் புரிந்து கொள்ள முடியும் என்பதே இந்த புத்தகத்தின் சிறப்பு.
நன்றி
கட்டபொம்மன் பதிப்பகம்.👍🏹🤺🤺
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக