வியாழன், 10 செப்டம்பர், 2020

கேள்வி : அன்புக்காக ஏங்கும் மனிதர்கள் எளிதில் உறவுகளினால் ஏமாற்றப்படுவது ஏன்?

 கேள்வி : அன்புக்காக ஏங்கும் மனிதர்கள் எளிதில் உறவுகளினால் ஏமாற்றப்படுவது ஏன்?


என் பதில் :.


பழகும் உறவுகள் அனைத்தும் உண்மையான அன்பைப் பொழிகிறார்கள், என்று நினைப்பதால் தான், எளிதில் ஏமாறுகிறார்கள்.


உண்மை என்னவெனில், சில உறவுகள் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, உண்மையான அன்பை வெளிப்படுத்துவதில்லை.


அன்புக்காக ஏங்கும் மனிதர்களின், பலவீனமே அந்த "அன்பு" தான் என்று அறிந்த பின்னர், அதை மற்றவர்கள் "ஆயுதமாக" பயன்படுத்தவே நினைப்பார்கள்.


வாழ்க்கையில் நடந்த ஏதோ ஓர் நிகழ்வால் / சூழ்நிலையால் உருவான, அந்த அன்புக்கான வெற்றிடம், நாம் பழகுபவர்களிடம் இருந்து கிடைக்குமா என்று ஏங்கும் மனம். அதனால், நாம் பழகுபவர்கள் அனைவருமே அந்த வெற்றிடத்தை நிரப்பும், உண்மையான அன்பு என்று நினைத்துக் கொள்வோம். 


அந்த உறவு, சிறிய கடும் சொற்களைப் பேசினாலோ அல்லது ஏதேனும் மனக்கசப்பால், பேசாமல் சென்றாலோ, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் போது தான், அவர்கள் ஏமாற்றிவிட்டதாக நினைப்போம். ஆனால், அவர்களின் அளவீடுகளில் நம்முடன், அளவுடனே காரணத்துடனே பழகியிருப்பார்கள். நாம் தான் அதை தெரியாமல் உண்மையாக பாசத்தை வாரிக் கொட்டிருப்போம். இதனாலேயே, பிரிந்து செல்கையில் ஏமாற்றப்பட்டதாக உணருகிறோம்.


மீண்டும், அதே போல் அன்பு கிடைக்குமா என்று மனம் ஏங்க ஆரம்பிக்கும். தவறான உறவுகளைத் தேர்ந்தெடுப்பதினால் தான் இப்படி நடக்கும்.


எந்தவொரு உறவாக இருந்தாலும், "இவர்கள் கடைசி காலம் வரை நம்மோடு பயணிக்க மாட்டார்கள்" என்று உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். உடனேயே அன்பு செலுத்தாமல், சிறிது காலம் பழகி குணநலன்களை அறிந்த பிறகு, அன்பு செலுத்துங்கள்.


இருப்பினும், சில உறவுகள் உங்களை விட்டுச் சென்றால், உங்கள் அன்பைப் பெற, அவர்களுக்குத் தகுதியில்லை, உங்கள் அன்பை அவர்கள் உணரவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது தான், உண்மை.


அன்புக்காக ஏங்கும் மனிதர்களிடம் உண்மையான அன்பு இருக்கும். அந்த உண்மையான அன்பைப் பெற, தகுதியுள்ளவர்களிடம் மட்டும் பழகுங்கள். காயப்பட மாட்டீர்கள், ஏமாற மாட்டீர்கள்.


உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது, அன்புக்காக ஏங்கும் மனிதர்கள் எளிதில் ஏமாற காரணம், "அன்பு"


நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக