கேள்வி : மனைவியை 'பொண்டாட்டி' என ஏன் அழைக்கிறோம்?
பதில் :.
பொண்டாட்டி - என்பது கொச்சையான வழக்கு. பெண்டாட்டி - என்ற தூய தமிழ்ச் சொல்லே பொண்டாட்டி எனத் திரிந்தது.
பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி.
பெண்டாட்டி - என்பது அவளின் பேணும் தன்மை குறித்து அமைந்த அழகான பெயராகும்.
விருப்பத்திற்குரிய , ஆசைக்குரிய ஆட்டி , விரும்பிப் பாதுகாக்கப்பட வேண்டியவள் - என்றும் பொருளுண்டு.
✔பெள் = என்ற மூலம் ஆசை, விருப்பம் குறித்தது.
* பெள் + தல் = பெட்டல் > பெட்டை.
* பெண் > பேண். விரும்பு, விரும்பிப் பாதுகாத்தல். பேணுதல் = விரும்புதல், போற்றல்.
* பெட்பு : பெருமை ; விருப்பம் ; அன்பு ; தன்மை ; பேணுகை ; பாதுகாப்பு.
பெள் > பெண் = பெள்ளப்படுபவள் /பேணப்படுபவள் பெண் ஆனாள்.
பெள் > பெண் > பெண்டு (ஒருமை).
பெள் > பெண் > பெண்டிர் (பன்மை).
பெளுவு = பெள்ளுதல் , பேணுதல்
(beloved).
துக்கடா :
ஆள் - என்ற மூலத்திலிருந்து வந்த சொல் ஆண் ஆகும்.
ஆட்டி என்பதே …. ஆண் - என்ற வழக்கிற்கு சமமான பெண்பால் சொல்லாகும்.
ஆள்+தி - ஆட்டி.
ஆட்டி - என்ற பின்னொட்டு கொண்டு அமைந்த சொற்களில் சில...
* சீமாட்டி - ( சீமை+ஆட்டி).
* மூதாட்டி (மூத்த + ஆட்டி).
* ராசாட்டி ( அரச + ஆட்டி ) - இராசாத்தி (ராணி)
* வண்ணாட்டி (வண்ணாத்தி).
* கைம்பெண்ணாட்டி (கம்னாட்டி).
* வைப்பாட்டி (வைப்பு + ஆட்டி).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக