பொருளாதாரம் சட்டென நிலைக்குள் வந்து விடுமா ?
அரசு படிபடியாக lockdown தளர்வுகளை குறைத்து ,குறைத்து கிட்டதட்ட 80% இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறோம் ..இது அரசின் பொருளாதார ரீதியான நிர்பந்தமே அன்றி , கொரானா கட்டுக்குள் வந்ததாக அர்த்தம் இல்லை..
சரி பொருளாதாரம் சட்டென நிலைக்குள் வந்து விடுமா ? கண்டிப்பாக இல்லை என்பதே கசப்பான உண்மை ..சின்ன உதாரணமாக எடுத்துகொள்ளுங்கள் , முன்பு லாரி ஸ்ட்ரைக் இரண்டு மாநிலங்களுக்கடையே என அடிக்கடி கேள்விபட்டிருக்கோம் .. அந்த ஸ்ட்ரைக்குகள் இரண்டு நாட்களுக்கு மிகுந்தாலே நூற்றுகணக்கான கோடி நஸ்டங்கள் பலதரப்புகளில் ஏற்பட்டு விடும் , அந்த நிலை இயல்புக்கு வரவே மாதமாகும் .. அப்படியிருக்கையில், கிட்டதட்ட 6 மாதங்கள் உலகளவில்
Lockdown இருக்கையில், எப்படி இருக்கபோகிறது என சிந்தித்து பாருங்கள்.உண்மையில் இதுவரை, அதன் பக்க விளைவுகள் மற்றும் அதன் அதகளஆட்டத்தை ஆரம்பிக்கவில்லை என்பதே நிதர்சனம் ..
நான் உணர்ந்ததும் , அறிந்ததும் உங்களுக்கு தெரியப் படுத்த முனைகிறேன்..ஒரு நண்பர் பை நிறைய ஆர்டர் வைத்து இருக்கிறார் அவருக்கு அந்த பொருட்களை இடம் மாற்ற போக்குவரத்து - logistic சிக்கல்கள் .அப்படியே கிடைப்பினும் அதன் சுமைகூலி முக்கால்காசு கதையாக இருக்கிறது..இன்னொரு நண்பர் , திடீரென import parts கள் கிடைக்காத நிலையில் , import substituteம் யானை விலை என்பதால் தொழிலை தொடர இயலாமல் சிக்கி தவிக்கிறார் .மற்றொரு நண்பரோ எல்லாம் இருந்தும் வங்கி மற்றும் தனியார் நிதி இன்றி ஸ்தம்பித்து இருக்கிறார் ..இதை போல நீண்டு கொண்டே போகும் உதாரணங்கள் ..இவை எல்லாம் சட்டென தலை நிமிருமா என்றால் , ஆகாது ..இயல்பு நிலை கொள்ள பலமாதங்கள் அல்லது இரண்டு வருடங்கள் பிடிக்கலாம் ..
இப்போது online business மற்றும் சில software services தடையின்றி செல்வதாக தோற்றம் அளித்தாலும், பணப்புழக்கமும் , தொழில்களும் முடங்கிகையில் அவற்றை நாளடைவில் நளிவடைய செய்யும்..கொரனா vaccination வந்தால் மருத்துவமனைகள் கூட காற்றடிக்க ஆரம்பித்து விடும்..
இப்படியாக வரும் அடுத்த வருடம் கூட ஏதும் மந்திரம் செய்யபோவதில்லை .. உங்கள் வெளிகடன்களை கட்ட திட்டமிடுங்கள் . வரவேண்டிய பணங்களை வசூலிக்க கால நிர்ணயம் செய்யுங்கள் . உங்கள் சக்திக்கு உட்பட்ட மாற்று வருமானத்தை பெருக்க யூகம் வகுங்கள்.
இவையெல்லாம் உங்களை பயமுறுத்துகிற நோக்கதில் இல்லை , உங்கள் பொருளாதார பாதுகாப்புயுத்திகளை கையிலெடுக்க வேண்டிய அத்தியாவசியத்தை உணர்த்துகிற என்னாலான ஒரு அபய சங்குதான் ..நானுமே அதைதான் செய்ய இருக்கிறேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக