உடுமலை ..தன்னம்பிக்கை ....தங்க ஆசிரியை ...
உடுமலை ஆசிரியர் திருமதி .வை .விஜயலக்ஷ்மி -பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளி .
ஒரு தாய் பறவை எப்படி தன்குழந்தைகளை எப்படி கனிவு நிறைந்த கண்டிப்புடன் அரவணைத்து செல்கிறது என்பது விஜி மிஸிடம் கற்று கொள்ளலாம் ..
பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்குள் வந்தவுடன் இவரை தான் முதலில் தேடும் ..
விளையாட்டு ஆனாலும் சரி ...சுற்று சூழல் ஆனாலும் ..சமூக அறிவியல் ஆனாலும் சரி ..வரலாறு ஆனாலும் சரி ...பன்முக தன்மையோடு ..குழந்தை களுக்கு பாடம் கற்றல் வழி குழந்தைகள் இவரின் வகுப்புகளில் ஒன்றிவிடுவார்கள் ...
பெண் குழந்தைகள் சோர்ந்து இருக்கும் நேரங்களில் அவர்களை உற்சாக படுத்தி பள்ளி நிகழ்ச்சிகள் ..நாடக நிகழ்ச்சிகள் ...நடன நிகழ்ச்சிகள் ...அனைத்து நிகழ்வுகளும் பங்கேற்க வைத்து தங்கமுலாம் போல மின்ன செய்துவிடுவார்கள் ..
15 வருடங்களுக்கு முன்னால் எலையமுத்தூர் பள்ளி யை வெறும் பொட்டல் காடாக இருந்த பள்ளியில் தன்முழு முயற்சியால் இன்று அந்த பள்ளி பசுமை நிறைந்த மரங்களும் கொடிகளும் பள்ளி குழந்தைகளின் பறவைகள் கூடும் சரணாலயமாக கல்விசாலையாக மகிழ்ச்சி கடலாக திகழ்கிறது ..
பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் இன்று விளையாட்டு துறை யில் தங்கமங்கைகளாக திகழ விஜி மிஸ்ஸின் அர்ப்பணிப்புடன் கற்றுக்கொடுக்கும் முறையே காரணம் ..
உடுமலையில் ஒவ்வொரு நடைபெறும் புத்தக திருவிழா என்றால் குழந்தைகளின் நிகழ்ச்சிகளுடன் எப்பொழுதும் தொடங்கும் ..15 நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழாவில் குழந்தைகளின் பன்முக தன்மையை வெளிப்படுத்தி குழந்தைகளை உற்சாகப்படுத்துவார்கள் ..குழந்தைகள் புத்தக வாசிப்பை அதிகப்படுத்தும் நிகழ்வாகவே மாற்றி விடுவார்கள் ..
உடுமலை கிளை நூலகம் -2 நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் குழந்தைகளையும் ,பொது மக்களையும் ,,இணைத்து புத்தக வாசிப்யும் நேசிக்க வைத்துவிடுவார்கள் ..தற்பொழுது மருத்துவம் சார்ந்து விழிப்புணர்வு நிகழ்களில் ..அனைத்திலும் தன் பங்களிப்பை அளித்து உற்சாகப்படுத்துவார்கள் ..
பெண்குழந்தை செல்வங்களை ..எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் ,வானொலி நிகழ்வு ,சுற்று சூழல் காடு சார்ந்த நிகழ்வு ,விளையாட்டு நிகழ்வுகளுக்கு பாதுகாப்பக அழைத்து சென்று பங்குபெற வைத்து குழந்தைகளாகவே மாறிவிடுவார்கள் .
எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் தன்னார்வத்துடன் தன் அரசு சார்ந்த பள்ளிக்குழந்தைகளை வாழ்கை கல்வியுடன் அவர்களை முன்னேற வைக்கும் அன்புடன் சிறப்பு வாய்ந்தது ..இன்றும் தன்னால் பயிற்றுவித்த மாணவச்செல்வங்கள் உலகமெங்கும் தன்னம்பிக்கையுடன் தங்கமங்கைகளாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்கள் ..
தன்னார்வ மிக்க வை .விஜயலக்ஷ்மி ஆசிரியர்க்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் ..நல்லாசிரியர் விருது வழங்கிய தமிழக அரசுக்கு நன்றிகள் பல .....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...
9944066681...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக