ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

கேள்வி : உங்கள் வேலையில் இயல்பாக இருக்கக்கூடிய, ஆனால் பிறருக்கு விசித்திரமாக தெரியக்கூடிய ஒன்று என்ன?

கேள்வி : உங்கள் வேலையில் இயல்பாக இருக்கக்கூடிய, ஆனால் பிறருக்கு விசித்திரமாக தெரியக்கூடிய ஒன்று என்ன?


என் பதில் :..இதற்கு என் மதிப்புமிக்க Gulf வெளிநாட்டு வாழ் இனிய நண்பர் கோவை பரத்குமார் அவர்களிடம் கேட்டபோது பகிர்ந்த தகவல்கள் அருமை ..உங்களுக்குகாக ..


ஹும் என் வேலையே பலருக்கு விசித்திரமாக தெரியக்கூடியது தான் !!சிவா ..


1) நான் வேலைப்பார்க்கும் துறையில், 365 x 24 x 7 என தொடர்ச்சியாக பணி நடந்துகொண்டே தான் இருக்கும். ஒரு நாளைக்கு, இரண்டு ஷிப்ட்களில் பணி நடக்கும்.ஆக,நாளொன்றுக்கு நாங்கள் பன்னிரெண்டு மணி நேர வேலை செய்யவேண்டும்.காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு ஷிப்ட் ,அதே போல் மாலை 6 மணி முதல்,அடுத்த நாள் காலை 6 மணி வரை இரண்டாவது ஷிப்ட்.


நாளொன்றுக்கு பன்னிரெண்டு மணி நேர வேலையாக இருந்தாலும்,காலையில் 4 மணிக்கு எழுந்தால் தான், எங்களின் அடிப்படை வேலைகளை செய்து முடித்து,பணிக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியும்.


எனக்கு பணி செய்யும் இடத்திலேயே தங்கும் வசதி உண்டு.ஆனால்,சிலருக்கு நெடுந்தூரம் பாலைவனப் பயணம் செய்ய வேண்டும்.


ஆக ,அவர்கள் தங்கும் இடத்திற்கு செல்ல 2 மணி நேரங்கள் ஆகும்.ஒரு நாளைக்கு 4 மணி நேரம் பயணத்திலேயே கழித்து,12 மணி நேரம் வேலை பார்த்து, மீதம் உள்ள 8 மணி நேரத்தில் தங்களது அன்றாட பார்த்து, மிக முக்கியமான , உறக்கம், அவர்களுக்கு 4 முதல் 5 மணி நேரமே கிடைக்கும்.


2) எங்கள் துறையில்,எங்களுக்கு சுழற்சி முறையிலேயே வேலை இருக்கும். அதாவது ,தொடர்ச்சியாக 6 வாரம் வேலை செய்ய வேண்டும்(Hitch) அடுத்த மூன்று வாரம் விடுப்பு (Days Off) கிடைக்கும்.


இந்த சுழற்சி முறை ஒவ்வொருவருக்கும் அவர்களின் வேலைத்தகுதியை பொறுத்து மாறுபடும்.சிலர் 4 வாரம் வேலை 4 வாரம்விடுப்பு என்ற முறையில் செய்வர். சிலர் 35 நாள் வேலை 35 நாள் விடுப்பு என்ற முறையில் பணி செய்வர்.இன்னும் சிலர் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக வேலை செய்வர்.


நாங்கள் வேலை செய்யும் நாட்களில் சனி,ஞாயிறு,பண்டிகை நாட்கள் என எதற்குமே விடுப்பு கொடுக்க மாட்டாது.


3) நட்டநடு பாலைவனம்,ஆழ் கடலின் நடுவில்,மழை/மலை பிரதேசங்கள் , தீவிரவாதிகள் பதுங்கும் பகுதி என உலகில் உள்ள அனைத்து Landscapes களிலும் எங்கள் Oil and Gas பணி நடக்கும்.


4) அதே போல் மைனஸ் டிகிரி குளிரில் இருந்து ,60 டிகிரி கொளுத்தும் வெப்பத்திலும் எங்கள் பணி நடக்கும்.


5) வேலை பார்க்கும் 12 மணி நேரமும் நாங்கள் Coverall,Safety Shoes,Safety Glass என அனைத்து பாதுகாப்பு உபகாரணங்களோடு இருப்போம்


6) நாங்கள் வேலை பார்க்கும் அலுவலகம் ,தங்கும் இடம் எல்லாமே Bunk house தான். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.ஒரு இடத்தில வேலை முடிந்துவிட்டால் , இந்த Bunk Houseகளை எளிதில் தூக்கி , Lorry Truck -- இல் ,வைத்து அடுத்த இடத்திற்கு சென்றுவிடலாம்.


பார்ப்பதற்கு சாதரணமாக தெரிந்தாலும் , உள்ளே அனைத்து வசதிகளும் அற்புதமாக தரமாக இருக்கும்.


7) நாங்கள் வேலை பார்க்கும் இடத்தில், உலகில் உள்ள பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் வேலை பார்பர்.பல மொழிகள்,பல கலாச்சாரங்கள் என பலவற்றை அறிந்துகொள்ளலாம்.


8) வேலை பளு அதிகமாக இருந்தாலும், எங்கள் Oil and Gas துறையில்,எங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் எங்கள் நிறுவனமே செய்து கொடுத்து விடும்.


எங்களின் விமான டிக்கெட்ஸ்,தங்கும் இடம்,உணவு,தினசரி தேவையான பொருட்கள் தினமும் நாங்கள் தங்கும் இடத்தை சுத்தம் செய்து கொடுப்பது, துணிகளை துவைத்து கொடுப்பது என எல்லாம் எல்லாமே நிறுவனமே பார்த்துக்கொள்ளும்.


அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும்.நமக்கு எது விருப்பமோ அதை சாப்பிடலாம்.அதே போல் உணவின் தரம் தினமும் பரிசோதித்த பின்பே எங்களுக்கு வழங்கப்படும்.


9) நாங்கள் வேலை பார்க்கும் இடத்திலேயே ஆம்புலன்ஸ் வசதியுடன் சின்ன மருத்துவமனை(Clinic) இருக்கும். மருத்துவம்,மருந்து என அனைத்துமே இலவசம் தான்.


ஆக அனைத்து வசதிகளும் இருந்தாலும், எங்கள் வாழ்க்கை தங்கக் கூண்டில் உள்ள கிளியின் வாழ்க்கையை போன்றது தான்.


கதவை திறந்தால் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நான்கு புறமும் பாலைவனம்,பாலைவனம்,பாலைவனம் தான் !!


ஆரம்பத்தில் சற்று விசித்திரமாக தெரிந்தாலும்,நாளடைவில் எங்களுக்கு அது பழகி, நார்மல் ஆகிவிட்டது :)


நன்றி !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக