புதன், 2 செப்டம்பர், 2020

நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் வரமா சாபமா?

 கேள்வி : நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் வரமா சாபமா?


என் பதில் :..


Story 1


என் நெருங்கிய சொந்தம் எங்க உறவில் மருமகள் எப்படி வாழ்கிறார் என்பதை சொல்கிறேன்


மாமியார் வீட்டில் வாங்கும் பூ ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் மூணு முழம் பூ வெச்சுட்டு வருவாங்க :)


கணவர் கார் ல விட்டுட்டு கூட்டிட்டு போவார்


அவங்க திருமணம் ஆகி பையன் பிறந்த பின்னர் 1.5 வருடம் வீட்டில் இருந்து வேலை செய்தார்கள்!


அலுவலகத்திலும் வர்ட் (word doc) டாகுமெண்ட் பார்க்கணும் அது தான் வேலை ஆனால் மிக அதிக சம்பளம்


மாமனார் திரும்பினால் கூட என்னம்மா வேணும் என்று அவரே செய்து விடுவார்


மாமியார் இன்னும் இன்னும் அழகு செஞ்சுக்க - கீ போர்ட் அடிக்கும் கையில் நக பூச்சு பளிச்சுனு இருக்கனும்


எல்லா சேலை அவங்க செலெக்ட் பண்ணுவது தான் free ஆ இருக்கலாம்


புடவை ப்ளௌஸ் எவ்வளவு லோ கட் கூட போடலாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க, கணவர் மெயின் சப்போர்ட்


காலையில் சாப்பிட்ட பிறகு 3 அடுக்கு டிபன் பாக்சில் வைத்து அனுப்புவாங்க வித விதமா செஞ்சு சின்ன மாமியார்


அவங்க குளிச்சு முடிக்கற நேரம் அலுவலகம் கிளம்பும் நேரம் இப்படி பல நேரம் யாரும் அந்த பாத் ரூம் கூடஉபயோகம் செய்ய மாட்டாங்க


இவங்க - மருமகள் வீட்டு சொந்தங்களுக்கு பிரசவம் போன்ற சேவைகளும் மற்ற பெரியவர்கள் செஞ்சு வைப்பாங்க


இரவு வேளை வேண்டும் என்றால் தனக்கும் குழந்தைக்கும் சமைக்கலாம் - நோ கம்பல்சன்


கணவர் ஒன்றுமே சொல்ல மாட்டாங்க தாங்குவாங்க


திருமணம் முடிஞ்ச அன்றிலிருந்து இன்றுவரை மஹா ராணி மாதிரி இருக்காங்க


பேரனை போட்டி போட்டு கொண்டு வளர்க்கிறார்கள்


நிச்சயிக்க பட்ட திருமணம்! கண் கூடா பார்த்து உள்ளோம் - இப்படியும் அமைகிறது நிச்சயம் பண்ண திருமணங்கள்


Story 2


இன்னோர் உறவினர் நெருங்கிய சொந்தம் தான்


மாமியார் இந்த மருமகளை ஏழு ஜென்மம் தாய் போல தாங்கறாங்க


என்ன உடை வேணாலும் போடலாம்


என்ன மேக் அப் வேணாலும் செஞ்சுக்கலாம் - மாமியாரும் கூடவே செஞ்சுப்பாங்க அவ்ளோ friends


அந்த பொண்ணுக்கு tiffin என்றால் எல்லோருக்கும் அது தான் அந்த பெண்ணுக்கு சாப்பாடு என்றால் எல்லோருக்கும் அது தான்


அந்த மாமியார் வீடு முழுக்க மருமகள் புகைப்படம் ஒட்டி மியூசியம் போல் செய்துள்ளார்கள்


தன் மகன்களை விட பிரியமா இருக்காங்க


என்ன கோபம் திட்டு ஆளுமை செஞ்சாலும் அந்த மருமகள் வைத்தது தான் சட்டம்


அவள் சம்பாதித்தும் இல்லை ஆனால் fake செர்டிபிகேட் வாங்கி வேண்டும் என்ற நேரத்தில் 6 மாதம் ஒரு வருஷம் பிடித்தால் வேலை செய்ய மாமனார் உதவுவார்


மேலே கூறிய இரு இடங்களிலும் பெண்ணின் பெயர் ஒன்று படித்த படிப்பு கணிதம்!


கணிதம் படிச்ச மருமகள்கள் சிலர் கரெக்ட் ஆக formula வைத்து காயை நகர்த்துகிறார்கள்! இது இரண்டு இடத்தில் பார்த்தேன்


குறிப்பு - கணிதம் அறிவியல் க்கும் இந்த பதிலுக்கும் சம்மந்தம் இல்லை ! அந்த இரண்டு பேர் அதிர்ஷ்டசாலி மருமகள்களுக்கும் பெயர் ஒன்று ! மற்றும் படிப்பு ஒன்று :) அவ்வளவே...


நன்றி ..மருமகள் வாய்ப்பது வரம் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக