சனி, 19 செப்டம்பர், 2020

முன்னோர் வழிபாடு மூத்தோர் வழிபாடு

 நாட்டுப்புற வழிபாட்டு  வீர வரலாறு 📚📚✍️✍️

முன்னோர் வழிபாடு மூத்தோர் வழிபாடு  

உடுமலைப்பேட்டைக்கு பெயர் பெற்ற  சுற்றுலாத்தலமான  திருமூர்த்தி மலையில் காண்டூர் கால்வாய்க்கு அருகில்   சிலைகளாக வீற்றிருககும் விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு அவர்களது வம்சாவளியினர்  இன்று  புரட்டாசி  வெள்ளிக்கிழமை  தம் பண்பாட்டு விழாவாக நடத்தினர்.

இந்த நிகழ்வை பாரம்பரிய முறைப்படி  ஐநூறுக்கும் மேற்பட்ட  பெண்களும் ஆண்களும் தேவராட்டம் ஆடி   தங்களது   முன்னோருக்கு   தங்களது  வீர வணக்கத்தினை பதிவு செய்தனர்.

தேவராட்டத்தில்  இருக்கும் அத்தனை அசைவுகளையும் அபிநயத்துடனும், வீராவேசத்துடனும்,பண்புடனும், பாங்குடனும்   நடனமாடி தம்முடைய முன்னோர்களை வீரத்தின் விளைநிலைமாக விளங்கிய தளி எத்தலப்ப  மன்னரை நினைவு கூர்ந்தனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தேவராட்டம் மிகவும் சிறப்பாகவும் அற்புதமாகவும்  அதிகளவில் பொது மக்களை நின்று காணவும் செய்தது என்று சொன்னால் மிகையில்லை.👍👍🥰🥰📚📚✍️✍️

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக