கேள்வி : பொறாமைப்படும் நபர்கள் முகேஷ் அம்பானியையோ ரத்தன் டாடாவையோ பார்த்து பொறாமைப் படுவதில்லை, பக்கத்து வீட்டுக்காரனையும் சொந்தக்காரனையும் பார்த்து தான் பொறாமைப் படுகிறார்கள். இது ஏன்?
என் பதில் :
பொறாமை என்பதற்கு ஆங்கிலத்தில் சரியான பதம் Envy.
Envy என்ற வார்த்தை Invidia என்ற லத்தின் வார்த்தையில் இருந்து மருவியது
Invidia என்றால் நாம் பார்க்காதது ‘Non sight’
Envy என்பதற்கு உளவியல் ரீதியான விளக்கம்
ஒருவர் ஆழ்மனதில் ஒரு குறிப்பிட்ட ஆசை இருக்க வேண்டும்
அவர் பொறாமைப்படுபவர் கூட ஏதாவது பழக்கம் இருக்க வேண்டும் (interface with that person)
அந்த ஆசை இந்த பழக்கப்பட்ட நபரைப் பார்க்கும்போது தூண்டப்பட்டு மன வலியைக் கொடுக்க வேண்டும்.
அம்பானி நம்ம பக்கத்தில இல்ல, அதனால மனசு வலிக்கல, பக்கத்து வீட்டுகாரர பார்க்க முடியும், அதனால வலிக்குது. இதான் லாஜிக்.
இதனோடு ‘Fear of Beauty( அழகின் மேல் பயம்)’ என்ற விளைவையும் தொடர்பு படுத்தலாம். ரயிலில் ஒரு அழகானவர் அமர்ந்து இருக்கிறார், (உங்களோட பாலினம்) நிறைய பேர் அவருக்கு அருகில் உட்காரமாட்டார்களாம். ஏன்?
அந்த நபருடன் நம்மை ஒப்பிட, கேலிசெய்ய வாய்ப்பு உள்ளதால். சுமாரான ஆளோட உட்கார்ந்தால் நம்ம விமர்சிக்கப்பட மாட்டோம்.
Envy க்கும் அதே லாஜிக் தான். ‘ஏங்க அம்பானிய பாருங்க எவ்வளவு சம்பாதிக்கறார், நீங்களும் இருக்கீங்களே’ என உங்க வீட்ல திட்ட வாய்ப்பில்லை. பக்கத்து வீட்டுக்காரருடன் ஒப்பிட்டுத் திட்ட வாய்ப்புண்டு. அந்த வாய்ப்பு உங்களுக்கு பயத்தை தருகிறது. அதான் பொறாமை!!
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக