வியாழன், 17 செப்டம்பர், 2020

என்னையும் ஒரு உயர்நத சிம்மாசனத்துக்கு அழைத்து சென்றவர்


ஷியாம் சுதிர் ...

என்னையும் ஒரு உயர்நத சிம்மாசனத்துக்கு அழைத்து சென்றவர்

என்னையும் ஒரு அன்புக்கு அடிமையாக்கியவர்

என் கவலைகளையெல்லாம் அவர் முகம் பார்த்தவுடன் பஞ்சாக காற்றினில் பறக்க செய்தவர் ..

எப்பொழுதும் என் கழுத்தை பற்றி தொங்கிக்கொண்டிருப்பவர்

அழகான ,அற்புதமான ,புன்சிரிப்பும்

சின்ன ,சின்ன ,குறும்புகள் செய்தாலும் ,அதில் ஒரு ஆனந்தம் இருக்குமாறு பார்த்துக்கொள்பவர் ...

அன்பில் விளைந்த
செல்ல மகனுக்கு
ஆயிரம் ஆயிரம்...
அன்பு முத்தங்கள்...

எத்தனை நிமிடங்கள்
உன்னுடன் இன்பமாய்
கழித்து இருக்கிறேன்..
என்னுடனே எப்போதும்
இருந்து கொண்டு..
எத்தனை சேட்டைகள்
அத்தனையும் எனக்கு
உன் அன்பின் அர்த்தங்கள்!

முத்தங்கள் ஆயிரம் கொடுக்க
உன் செல்ல கடிகளே..
ஆயிர ஆயிர ஆண்டுக்கு
அன்பை சொல்லும்...!

மலர்கள் பூத்து குலுங்கும்
உன் புன்னகையை பார்த்தது !
உன் குறும்பை பார்க்க
நேரத்திற்கே நேரம்
போதவில்லையாம்!!!!

கத்திக் கொண்டே
ஓடி வந்து என் கழுத்தைக்
கட்டிப்பிடித்து ஊஞ்சாலடும்
என் உற்சாக ஊற்றே...
என் சுவாசத்தின் காற்றே!

முன்னிரண்டு பற்களையும்
காட்டி நீ சிரிக்கையில்
எழுதிய என் எல்லா கவிதைகளும்
காகிதங்களை விட்டு
உன்னிடம் ஓடோடி வரும்
விளையாடிக் களிக்க...!

என் பத்து வயது குறும்பே
ஆயுள் முழுதும் எனக்கு
இனிக்கப் போகும் கரும்பே...
அப்பா என்று நீ
சொல்லும் போதெல்லாம்
நான் மீண்டும் மீண்டும்
பிறக்கிறேனடா.

வண்ணத்துப் பூச்சியின்
சிறகடிப்பினை யாரேனும்
வாழ்த்த முடியுமா என்ன?
உன் துறு துறு அன்பில்
திளைத்துக் கிடக்கிறேன்...
வாழ்த்துக்களை எப்போதும்
என்னுள் இறைத்தபடி...!

பிடிவாதக் குழந்தைகளை
எங்கேணும் காணநேரிட்டால்
பெருமிதம் கொள்கிறேன், தம்பீ,
உன் பொறுமையை எண்ணி!

அளவுகடந்த அன்பினாலே
அவ்வப்போது என்னருகில் நின்று
கன்னம் உரசிப் பெற்றுச்செல்லும்
அளவிலா முத்தங்களை
அநியாய வட்டியுடன்
அதிவிரைவில் திருப்பித்தருவாய்!

துறுதுறுப்பும், சுறுசுறுப்பும் நிறைந்திருக்க,
பாசமும் பண்பும் இணைந்திருக்க
பகலவன் போலே நீ ஒளிர்ந்திருக்க
வாழ்த்துகிறேன், என் கண்ணே,
பல்லாண்டு நீ வாழி என்று!

இன்று தன் 13 வது பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் வீட்டுக்
ஷியாம் -வுக்காக எழுதியது.👍🌿🌿🌿🌷🌷💐💐💐

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக