வியாழன், 27 டிசம்பர், 2018

அருமையான ரசித்து ..ருசித்த  பயணக்கட்டுரை ..அருமை தம்பு ..பாரதி ..சசி ..உங்களின் புகைப்படங்கள் பொக்கிஷம் .....நானும் முகநூல் மூலம் உங்களுடன் பயணித்தது மகிழ்ச்சி ...

Jog அருவி | கோவா | பேலூர் | ஹெளிபேடு | பயண அனுபவத் தொகுப்பு - Part-1
எங்கள் வருடாந்தர சுற்றுலா பயணமானது இந்த டிசம்பரிலும் நான்கு நண்பர்களுடன் குழுவாக தொடர்ந்தது.
பொதுவாக எங்கள் பயணம் நாடோடிகளைப் போன்றுதான் அமைத்துக்கொள்வோம். சுற்றுலா பயணம் போன்று அமைத்துக் கொள்வதில்லை.
டிசம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 12 மணியளவில் எங்களது பயணம் உடுமலைப்பேட்டையிலிருந்து கோவா நோக்கித் துவங்கியது.
காலை பெங்களூரை தாண்டி பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது நேராக கோவா செல்லாமல் அருகில் உள்ள வேறு ஏதேனும் ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்று அதன் பிறகு பயணத்தை தொடரலாம் என்று பயணத் திட்டத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டது.
எனவே சித்திரதுர்காவை அடைந்ததும் அங்கிருந்து ஜாக் அருவியை நோக்கி செல்ல ஆரம்பித்தோம்.
செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை போன்ற பெரிய சாலைகளை தேர்ந்தெடுக்காமல், கிராமம் வழியாக செல்லும் சிறிய அளவிலான சாலையை தேர்ந்தெடுத்து மேற்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.
உண்மையில் நான்குவழிச்சாலை போன்ற பெரிய சாலைகளில் செல்லும்போது நாம் அந்த இடத்தின் கலாச்சாரம்,மக்கள், மொழி, விவசாய முறைகள், வீடுகளின் கட்டமைப்புகள் போன்ற எந்த ஒன்றையும் அனுபவபூர்வமாக உணராமல் சாலையில் பயணித்து செல்கிறோம் என்பதை மனப்பூர்வமாக உணர்ந்தோம்.
வழியில் மானாவாரி விவசாயம், அந்த இடத்தின் கால்நடை வர்க்கங்கள், விவசாய முறைகள், இன்றும் அவர்கள் உபயோகப்படுத்தும் மாட்டு வண்டி, இரண்டடுக்கு வீடுகள், குழந்தைகளின் பொழுதுபோக்கு விளையாட்டுகள், பள்ளியின் அமைவிடங்கள், பெட்டிக்கடைகள் என முப்பது வருடத்திற்கு முந்தைய கிராமத்து வாழ்க்கையை அந்த இடங்கள் பிரதிபலித்தன.
மதிய நேரத்தை தாண்டி பயணம் தொடர்ந்து கொண்டிருந்தபோது வழியில் ஒரு மிகச் சிறிய கோவில் ஒன்று தென்பட்டது.
சரி என்று காரில் இருந்து இறங்கி ஓய்வெடுக்க சிறிது காலாற நடந்து கோவிலை பார்க்க சென்றோம்.
உள்ளே எங்களுக்கு ஓர் மிகச் சிறந்த அனுபவத்தை அளிக்கும் சிற்பங்கள் இருக்கும் என்று நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
நால்வரும் திரும்ப காருக்கு சென்று புகைப்படக் கருவிகளை எடுத்து வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக படம்பிடித்து மகிழ்ந்தோம்.
அத்தகைய பழமையான கோவிலில் எளிதில் கையில் சுமந்து செல்லும் படியான சிற்பங்கள் தனித்தனியாக உள்ளே வைக்கப்பட்டிருந்தாலும் அருகிலுள்ள கிராம மக்களின் பாதுகாப்பு பணியில் அந்த சிற்பங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தன.
மதியம் தாண்டி நேரமாகிவிட்டதால் மாலையில் இருள் சூழும் முன்பாக ஜாக் அருவி அடைவது என முடிவு செய்து வழியில் எங்கும் நிற்காமல் விரைவாக செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பயணத்தை தொடர்ந்தோம்....!
இன்னும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக