கிறிஸ்துமஸ் டிசம்பர் மாதத்தின் சிறப்பு ...
டிசம்பர் மாதத்திற்கு இருக்கும் இந்த சிறப்புகள் வேறு எந்த மாதத்திற்கும் கிடையாது தெரியுமா?
ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் இருக்கிறோம். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிற்கே டிசம்பர் என்பது ராசியில்லாத மாதமாகும். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் இயற்கை சீற்றங்களாலும், பல அசம்பாவிதங்களாலும் டிசம்பர் மாதம் என்றாலே நமக்குள் ஒரு அச்சம் பிறக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக சுனாமி, வெள்ளம், அதேசமயம் உலகம் முழுவதும் இது விழாவிற்கான காலமாக கருதப்படுகிறது.
ஏனெனில் இந்த மாதத்தில்தான் புனித இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி டிசம்பர் மாதத்தை சிறப்பானதாக காட்ட பல விஷயங்கள் உள்ளது. மற்ற மாதங்களுக்கு இல்லாத பல தனிச்சிறப்புகள் டிசம்பர் மாதத்திற்கு உள்ளது. அந்த சிறப்புகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
டிசம்பர் மாத்தின் அற்புதமான சிறப்பு என்னவென்றால் இந்த வார்த்தை தோன்றிய விதம்தான். டிசம்பர் என்னும் வார்த்தை இலத்தீன் வார்த்தையான டிசம் என்பதில் இருந்து தோன்றியது. அதன் அர்த்தம் என்னவெனில் 10 ஆகும். பண்டைய ரோமானிய நாட்காட்டியில் 10வது மாதம் டிசம் என குறிப்பிடப்பட்டது.
ஆஸ்கார் விருது
வருடம்தோறும் பல படங்கள் ஆஸ்கார் விருதை பெறுகிறது. ஆனால் ஒட்டுமொத்த சினிமா வரலாற்றிலும் மாதங்களின் பெயரை கொண்ட படங்களில் ஆஸ்கார் விருது வாங்கிய ஒரே மாதம் டிசம்பர் மட்டும்தான். அந்தத் படத்தின் பெயர் டிசம்பர் 7. இது ஜான் போர்டு என்பவரால் 1943ஆம் ஆண்டு பேர்ல் ஹார்பர் பற்றி எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படமாகும்.
பணம் புரளும் மாதம்
ஆய்வுகளின் படி ஆண்டிலேயே டிசம்பர் மாதத்தில்தான் ஏடிஎம்-களில் இருந்து அதிகமாக பணம் எடுக்கப்படுகிறது. மற்ற மாதங்களில் எடுக்கப்படும் பணத்தை காட்டிலும் டிசம்பர் மாதத்தில் 3 மடங்கு அதிக பணம் எடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு பிரிட்டனில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 11 பில்லியன் பணம் எடுக்கப்படுகிறது. இதன்மூலம் டிசம்பர் மாதம் வியாபாரங்கள் அதிகம் நடக்கிறது என்பது தெளிவாகிறது. பிரிட்டனில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதே நிலைதான்.
ஆப்பிள் கடிகாரம்
ஆப்பிள் நிறுவனத்தின் கடிகாரம் என்பது உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஒன்று. அந்நிறுவனத்தின் அறிக்கையின்படி வருடம்தோறும் டிசம்பர் மாதத்தில் அவர்களின் கடிகாரங்களின் விற்பனை இருமடங்கு அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி மற்ற நிறுவனங்களும் டிசம்பர் மாதத்தில் தங்களின் விற்பனை அதிகரிப்பதாக கூறியுள்ளனர். மற்ற மாதங்களை காட்டிலும் டிசம்பர் மாதத்தில் மக்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும், புதிய பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுவதாகவும் உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மனித உரிமைகள் நாள் உலகம் முழுவதும் ஒடுக்கப்படும் மக்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் மனித உரிமைகள் தினம். 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகளை பாதுகாக்கும் நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் உலகின் பல மூலைகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் காப்பாற்றப்பட்டனர்.
காதலுக்கு ஏற்ற மாதம்
இது உங்களுக்கு அதிர்ச்சியானதாக இருக்கலாம் ஆனால் புள்ளி விவரங்களின் படி உலகம் முழுவதும் டிசம்பர் மாதத்தில் காதலை சொன்னவர்களுக்கு அதில் வெற்றிதான் கிடைத்துள்ளது. உங்களுக்கு திருமணம் செய்யவோ அல்லது உங்கள் காதலன்/காதலியிடம் காதலை சொல்லவோ விரும்பினால் அதற்கு மிகச்சிறந்த மாதம் டிசம்பர்தான். இந்த மாதத்தில் காதலை கூறும்போது " YES" சொல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. பெரும்பாலான காதல் முன்மொழிதல்கள் கிறிஸ்துமஸ் வாரத்தில்தான் நடக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக