ஏன் ...பிறந்த நாள் ...திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கிறோம் ...?
திருமணம் ஆனதிற்கு பிறகு மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டுமா?
யாரேனும் கொண்டாடுபவர்கள் இருந்தால் எத்தனை வருடங்கள் கொண்டாடினீர்?
மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வில்லையெனில் தவறாகுமோ?
ஆண்கள் வேலைகளிலும், வீட்டு கஸ்டங்களிலும் மனைவிகளின் பிறந்த நாளை மரப்பதுண்டு.
திருமணம் ஆனதிற்கு பிறகு கணவர்களின் பிறந்தநாளை நினைவில் வைத்து கொண்டாடுபவர்கள் உண்டா?
ஆண்களின் பிறந்தநாளை மனைவி கொண்டாட வில்லை என ஆண்கள் கவலை பட்டதும் இல்லை.
பிறந்தநாள் கொண்டாடினால் தான் அன்பு உள்ளதென்று அர்த்தமா ?
ஆண்கள் சுபாவம் என்னவெனில் அவர்கள் தங்கள் பிறந்த நாள் கொண்டாடப்படவேண்டும் என்று செண்டிமெண்ட் வைத்துக் கொள்வதில்லை; அதனால் மனைவி கொண்டாடாவிட்டால் கவலைப் படுவதில்லை! ஆனால் பெண்களிடம் அந்த செண்டிமெண்ட் உண்டு! அதனால் எதிர்பார்க்கிறார்கள்! ஆனால் , பெரும்பாலான பெண்கள் தன்னுடைய பிறந்த நாளை போலவே தனது கணவரின் பிறந்த நாளையும் கொண்டாட வேண்டும் என்றே நல்லெண்ணத்துடன் நினைக்கிறார்கள்!"ஒரு நல்ல சட்டை பேண்ட் எடுத்துக்கோங்களேன் உங்க பிறந்த நாளுக்கு" என்று அன்புத் தொல்லை செய்கிறார்கள்! நமக்கு கடைக்கு சென்று வாங்கி கொள்ள பொறுமை இருப்பதில்லை! " நான் என்ன சின்னக் குழந்தையா!எனக்கு எதற்கு புது டிரெஸ்?" என்று கேட்கிறோம்! காரணம் நம்மிடம் அந்த செண்டிமெண்ட் இல்லை! அவர்கள் சந்தோஷத்திற்காக வாங்கி கொள்ளும்படி ஆகி விடுகிறது!
கொண்டாடுவது நல்ல பழக்கம்! அது மனைவிக்கு கணவன் மேல் காதலை அதிகரிக்க செய்யும்! ஆனால் எளிமையாக கொண்டாடினால் போதும்! பிறந்த நாள் வாழ்த்து சொல்லி ஆசிர்வதிப்பது, இனிப்பும் பூவும் வாங்கித் தருவது, பிடித்த புடவை வாங்கி தருவது, கோவிலுக்கு, முடிந்தால் சினிமாவுக்கு அழைத்து செல்வது என்ற அளவில் எளிமையாக கொண்டாடினால் போதும்! அன்று மனைவியுடன் அதிக நேரம் செலவழிப்பது சிறப்பாகும்!
கொண்டாடாவிட்டால் தவறு என்று அர்த்தமில்லை! கொண்டாடுவது மனைவிக்கு aaமகிழ்ச்சி தருமே!
பலர் நான் மேற்கூறிய அனைத்து வகைகளிலும் கல்யாணமான சில வருடங்கள் கொண்டாடுவர்! பின் வருடங்கள் போகப் போக பிறந்த நாள் வாழ்த்து மட்டும் சொல்லி ஆசிர்வதித்து அத்துடன் விட்டு விடுகின்றனர்! பழக்கம் குறைந்து விடுகிறது!
தாய்க்கோ தங்கைக்கோ பிறந்த நாள் கொண்டாடச் சொல்லி ஒருவரும் சொல்லிக் கொடுப்பதில்லை! மனைவிக்கு பிறந்த நாள் கொண்டாடு என்று உலகமே சொல்லிக் கொடுக்கிறது. இந்த மூன்று உறவுகளுக்கும், எளிமையான முறையில் பிறந்த நாள் கொண்டாடலாம். குறைந்தபட்சம் வாழ்த்தாவது தெரிவிக்கலாம்!
ஏன்? தாய் தங்கைக்கும் கொண்டாடலாமே! அவர்களும் செண்டிமெண்ட் உள்ள பெண்கள்தானே! தமையன் தனக்காக கொண்டாடினால் தங்கை ஆனந்தக்கண்ணீர் விட மாட்டாளா? தாய்க்காக மகன் கொண்டாடினால் தாய் பெருமிதம் அடைய மாட்டாளா? வாழ்த்து தெரிவித்து விட்டு ஆசீர்வாதம் கேட்கலாம் தாயிடம்! வாழ்த்து தெரிவித்து விட்டு ஆசீர்வாதம் செய்யலாம் தங்கையை! இன்றைய வாட்ஸாப் யுகத்தில் எல்லா உறவுகளுக்கும் அவரவர் பிறந்தநாள் அன்று வாழ்த்து தெரிவிப்பது சம்பிரதாயமாகி விட்டது! அலுவலக ஊழியர்களுக்கும் வாட்ஸாப் குரூப் மூலம் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்! இவையெல்லாம் வரவேற்கத் தக்க மாற்றங்களே !
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக