இலக்கிய நினைவேந்தல் இனிமையாய் நடந்தது. “
அந்நிலை மருங்கின் அறமுத லாகிய
மும்முதற் பொருட்கு முரிய வென்ப
என்று தொல்காப்பியமும்
அறமும் பொருளும் இன்பமு மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம்
உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்
உடுமலைப்பேட்டை கிளை நூலகம் எண் 2 ல் எழுத்துலகின் பிரபஞ்சன், தமிழவேள் அறவாணன் ஆகியோர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு
தமிழர் கலை இலக்கியப் பேரவை மற்றும் கிளை எண் 2 நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய நினைவேந்தல் நிகழ்வு நூலக வாசகர் வட்டத்தின் ஆலோசகர் திரு.எம்.பி. அய்யப்பன் அவர்கள் தலைமையில் இனிதாய் நடந்தது.
நிகழ்விற்கு வந்த அனைவரையும் பேராசிரியர் கண்டிமுத்து வரவேற்றுப்பேசினார்.
இலக்கியவாதிகள் பிரபஞ்சனும் அறவாணனும் எனும் தலைப்பில் பிரபஞ்சனின் புனைவு இலக்கியங்கள் பற்றியும் தன் முனைவர் பட்டத்திற்காக பிரபஞ்சனுடன் நேர்காணல் எடுத்த அனுபவங்களையும் நிஜமனிதர்களில் நிஜமான மனிதர் பிரபஞ்சன் தவிர்க்கமுடியாத இலக்கியவாதி என்றும், தமிழ் ஆய்வுலகில் தவிர்க்க முடியாத ஆய்வறிஞர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியப்பல்கலைக் கழகத் தமிழாசிரியர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் ஆய்வுக்கோவையாக வெளியிட்டதையும் நினைவு கூர்ந்தார்.
பிரபஞ்சனின் வானம் வசப்படும் அறவாணனின் பண்பாட்டுப்படையெடுப்பு எனும் தலைப்பில் முனைவர் மதியழகன் தம் மாணவர் பருவத்தில் ஜீனியர் விகடன் இதழில் வெளிவந்த வானம் வசப்படும், நாவலில் புதுச்சேரியின் உண்மை மக்கள் நிலையையும் மக்களின் உண்மை வரலாற்றையும் பதிவு செய்தார். அறவாணனுடன் தாம் கலந்து கொண்ட கருத்தரங்கு அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
முனைவர் ஜெயசிங் பிரபஞ்சன் அறவாணன் எழுத்துகள் எனும் தலைப்பில் பிரபஞ்சன் ஒப்பனைவு இல்லாத மனிதர். நிஜத்தில் இருப்பதை தாம் எழுத்தாக்கினார். எழுத்தைத்தான் வாழ்வாக்கினார் சமரசம் இல்லாத சாதனையாளர், உள்ளதை உள்ளபடியே எழுத்திய உண்மைத்தன்மையாளர், தன் எழுத்திலும் செயலிலும் வாழ்ந்து காட்டிய புதுச்சேரியின் எழுத்தாளர் பிரபஞ்சன். அறுவைசிகிச்சை செய்த போதிலும் ஓய்வில்லாமல் எழுதிய எழுத்தாளர். இதயங்களைவருடிய கல்வியாளர். புதுச்சேரி அரசு 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டதை நினைவு கூர்;ந்தார்.
அடுத்து உடுமலையின் மூத்த எழுத்தாளர் அய்யாகுமாரராசா அவர்களுக்கு நூலக வாசகர் வட்டத்தின் சார்பிலும்,நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. முனைவர் ஜெ.மஞ்சுளாதேவி எழுதிய கவிதை நூல்கள் வழங்கப்பட்டது.
தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் புத்தகத்தை தளி பாளையப்பட்டு மண்ணின் மைந்தர் பூபதி அவர்கள் நிகழ்விற்கு வருகை தந்து அய்யா குமாரராசாவின் கரங்களால் பெற்றுக்கொண்டார்.
அய்யா குமாரராசா எளிமையான பேச்சாளர், அமைதியான பேச்சால் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தது மட்டுமின்றி உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்திற்கும், உடுமலை நூறுக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதாக உறுதி கூறினார்.
இறுதியில் நூலகர் கு.மகேந்திரன் நன்றி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக