சனி, 29 டிசம்பர், 2018

இலக்கிய நினைவேந்தல் இனிமையாய் நடந்தது. “ அந்நிலை மருங்கின் அறமுத லாகிய மும்முதற் பொருட்கு முரிய வென்ப என்று தொல்காப்பியமும் அறமும் பொருளும் இன்பமு மூன்றும் ஆற்றும் பெருமநின் செல்வம் உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண் பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான் உடுமலைப்பேட்டை கிளை நூலகம் எண் 2 ல் எழுத்துலகின் பிரபஞ்சன், தமிழவேள் அறவாணன் ஆகியோர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கலை இலக்கியப் பேரவை மற்றும் கிளை எண் 2 நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய நினைவேந்தல் நிகழ்வு நூலக வாசகர் வட்டத்தின் ஆலோசகர் திரு.எம்.பி. அய்யப்பன் அவர்கள் தலைமையில் இனிதாய் நடந்தது. நிகழ்விற்கு வந்த அனைவரையும் பேராசிரியர் கண்டிமுத்து வரவேற்றுப்பேசினார். இலக்கியவாதிகள் பிரபஞ்சனும் அறவாணனும் எனும் தலைப்பில் பிரபஞ்சனின் புனைவு இலக்கியங்கள் பற்றியும் தன் முனைவர் பட்டத்திற்காக பிரபஞ்சனுடன் நேர்காணல் எடுத்த அனுபவங்களையும் நிஜமனிதர்களில் நிஜமான மனிதர் பிரபஞ்சன் தவிர்க்கமுடியாத இலக்கியவாதி என்றும், தமிழ் ஆய்வுலகில் தவிர்க்க முடியாத ஆய்வறிஞர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியப்பல்கலைக் கழகத் தமிழாசிரியர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் ஆய்வுக்கோவையாக வெளியிட்டதையும் நினைவு கூர்ந்தார். பிரபஞ்சனின் வானம் வசப்படும் அறவாணனின் பண்பாட்டுப்படையெடுப்பு எனும் தலைப்பில் முனைவர் மதியழகன் தம் மாணவர் பருவத்தில் ஜீனியர் விகடன் இதழில் வெளிவந்த வானம் வசப்படும், நாவலில் புதுச்சேரியின் உண்மை மக்கள் நிலையையும் மக்களின் உண்மை வரலாற்றையும் பதிவு செய்தார். அறவாணனுடன் தாம் கலந்து கொண்ட கருத்தரங்கு அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். முனைவர் ஜெயசிங் பிரபஞ்சன் அறவாணன் எழுத்துகள் எனும் தலைப்பில் பிரபஞ்சன் ஒப்பனைவு இல்லாத மனிதர். நிஜத்தில் இருப்பதை தாம் எழுத்தாக்கினார். எழுத்தைத்தான் வாழ்வாக்கினார் சமரசம் இல்லாத சாதனையாளர், உள்ளதை உள்ளபடியே எழுத்திய உண்மைத்தன்மையாளர், தன் எழுத்திலும் செயலிலும் வாழ்ந்து காட்டிய புதுச்சேரியின் எழுத்தாளர் பிரபஞ்சன். அறுவைசிகிச்சை செய்த போதிலும் ஓய்வில்லாமல் எழுதிய எழுத்தாளர். இதயங்களைவருடிய கல்வியாளர். புதுச்சேரி அரசு 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டதை நினைவு கூர்;ந்தார். அடுத்து உடுமலையின் மூத்த எழுத்தாளர் அய்யாகுமாரராசா அவர்களுக்கு நூலக வாசகர் வட்டத்தின் சார்பிலும்,நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. முனைவர் ஜெ.மஞ்சுளாதேவி எழுதிய கவிதை நூல்கள் வழங்கப்பட்டது. தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் புத்தகத்தை தளி பாளையப்பட்டு மண்ணின் மைந்தர் பூபதி அவர்கள் நிகழ்விற்கு வருகை தந்து அய்யா குமாரராசாவின் கரங்களால் பெற்றுக்கொண்டார். அய்யா குமாரராசா எளிமையான பேச்சாளர், அமைதியான பேச்சால் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தது மட்டுமின்றி உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்திற்கும், உடுமலை நூறுக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதாக உறுதி கூறினார். இறுதியில் நூலகர் கு.மகேந்திரன் நன்றி கூறினார்


வியாழன், 27 டிசம்பர், 2018


எனது நீண்டகால நண்பர் அவர்களின் 

பதிவு 


நன்றி ..

முள் கிரீடம்...


பதினைந்து வருடங்களுக்கு முன்பாக அம்மாவும் அப்பாவும் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார்கள்.  இளங்கலைப் பொறியியல் படிப்பை முடிக்கும் போதே வேலைக்குச் சென்றுவிட முடியும் என நினைத்திருந்தேன். ஆனால் அவ்வளவாக நிறுவனங்கள் வளாகத் தேர்வுக்கு வரவில்லை. நான்காம் வருடத்தின் இறுதிப் பருவம் நெருங்க நெருங்க பதற்றம் தொற்றிக் கொண்டது.  சென்னை அல்லது பெங்களூருவில் தங்கி வேலை தேடுவதா என்று குழம்பி இறுதியில் ‘எம்.ஈ. படிக்கட்டுமா?’ என்று கேட்டதற்கு மறுப்பேதும் சொல்லாமல் வீட்டில் சம்மதித்தார்கள். அப்பொழுது வருடத்துக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. அது தவிர விடுதிக் கட்டணம். வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியின் நுழைவுத் தேர்வு எழுதியதில் எம்.டெக் படிப்பில் சென்ஸார் சிஸ்டம்ஸ் டெக்னாலஜியும், மெக்கட்ரானிக்ஸூம் கிடைத்தது. இரண்டாவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். 

‘வங்கியில் கடன் வாங்கிக்கலாம்’ என்றேன். ‘என்னால முடிஞ்ச வரைக்கும் கட்டறேன்..முடியலைன்னா பார்த்துக்கலாம்’ என்றார் அப்பா.

காட்பாடியில் இறங்கிய போதே அம்மாவுக்கு அழுகை வந்துவிட்டது. விடுதியறையில் பெட்டி படுக்கையெல்லாம் வைத்துவிட்டுக் கிளம்பும் போது அழுது கொண்டேயிருந்தார். பையன் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டான் என்ற வருத்தம் அவருக்கு. ஆனால் கல்லூரியின் வசதிகள் அவர்களுக்கு பிரமிப்பூட்டக் கூடியதாக இருந்தது. எனக்கும்தான். நூலகங்கள், ஆய்வகங்கள் அவற்றின் நவீனத்தன்மை என ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக இருந்தன. பேராசியர்கள் அதைவிட பிரமாதப்படுத்தினார்கள். பி.வி.ஏ.ராவ் என்ற ஐ.ஐ.டியின் பேராசிரியர் ஒருவரின் வகுப்பில் அமர்ந்திருந்தது எந்தக் காலத்திலும் மறக்காது. சுத்தியல் எடுத்துத் தட்டும் போதே அதிர்ச்சியினால் நம் கைகள் வலிக்கத் தொடங்குகிறது. ஆனால் மரங்கொத்தி மரத்தைக் கொத்திக் கொண்டேயிருக்கிறது. அதன் தலைக்கு ஏன் ஒரு பாதிப்புமில்லை? என்று கேட்டுவிட்டு அவரே பதிலையும் சொன்னார். அதன் தலையில் இருக்கும் கொண்டை உட்பட அதன் தலையின் அமைப்பு அதிர்ச்சியை கிரகித்துக் கொள்வதாகவும் சொல்லியதோடு நிறுத்தாமல் அதை நிறுவுவதற்கென ஒரு சமன்பாட்டை எழுதி இதுதான் காரணம் என்றார். 

வாய் பிளந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

விவேகானந்தன் சண்முகநாதன் என்கிற மெக்கட்ரானிக்ஸ் பேராசிரியர் ஐ.ஐ.டி மும்பையிலிருந்து வந்திருந்தார். அவரது ஆய்வகத்தில் ரோபோ ஒன்றிருந்தது. ‘நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதுல ப்ரோகிராம் செய்’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். உண்மையிலேயே அந்தக் கல்லூரியில்தான் பொறியியல் படிப்பின் உயரங்களை உணர்ந்து கொள்ள முடிந்தது. வெற்றுப் பெருமைக்காகச் சொல்லவில்லை- வி.ஐ.டி அப்படியானதொரு பல்கலைக்கழகம்தான். வருமானத்தைத் திரும்பத் திரும்ப கல்லூரியின் வளர்ச்சிக்கெனவே திருப்புகிறார்கள். கற்பனைக்குக்கே எட்டாத வளர்ச்சி அது. எந்தவிதமான அழுத்தமுமில்லாமல் படிப்பு முடியும் போது தொண்ணூறு சதவீதத்தைத் தாண்டியிருந்தேன். ஏகப்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் வளாகத் தேர்வுக்கு வந்தன. எனக்குத்தான் மென்பொருள் துறையில் விருப்பமில்லை. சிடிஎஸ், டிசிஎஸ்ஸெல்லாம் விட்டுவிட்டு விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தேன். 

அந்தக் கல்லூரியில் படித்த இரண்டு வருடங்களும் இன்னமும் கனவு போல இருக்கிறது. வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த வண்ணக் கனவு. இப்பொழுது எதற்காகக் கல்லூரி புராணம் என்றால் காரணமிருக்கிறது. சமூக மாற்றங்களைச் செய்ததற்காக சிறந்த முன்னாள் மாணவர் என்ற விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி முன்னாள் மாணவர் தினத்தைக் கொண்டாடுவார்கள். வரும் ஜனவரியில் நடைபெறும் விழாவில் விருது தரப் போவதாக மின்னஞ்சல் வந்திருந்தது. சில விருதுகள் நம்மை சலனப்படுத்திவிடும். இந்த விருது அப்படியானதுதான். கண்டிப்பான அப்பாவிடமிருந்து முதுகில் ஒரு செல்லத் தட்டு வாங்குவது போல. என்னவோ தெரியவில்லை- அப்பாவின் நினைவு வந்து வந்து போனது. அவர் இருந்திருந்து இந்தத் தகவலைச் சொல்லியிருந்தால் மெலிதாக ஒரு புன்முறுவல் பூத்துவிட்டு ‘எப்போ தர்றாங்க?’ என்று மட்டும் என்னிடம் கேட்டிருப்பார். தேதியைச் சொன்னவுடன் அடுத்த வேலையை அவர் பார்க்கத் தொடங்கிவிடுவார். ஆனால் தமக்குத் தெரிந்த அத்தனை பேரிடமும் பெருமையாகச் சொல்லியிருப்பார்.

நாம் படித்த கல்லூரி நம்மை உற்சாகப்படுத்துவது மிகப்பெரிய ஆசுவாசமாக இருக்கிறது. அதே சமயம் விருதுகள் நம்மை உற்சாகமூட்டக் கூடியவையாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. சற்று பதற்றமூட்டக்கூடியவையாகவும் இருக்கலாம். சமீபமாக நிறைய அழைப்புகள் வருகின்றன. புஷ்பவனம் கிராமத்திலிருந்து ஒரு பெண் அழைத்திருந்தார். ‘என் மகளுக்கு ஃபீஸ் கட்டுங்க..புயலில் எல்லாம் போய்விட்டது’ என்றார். அவரது மகள் தனியார் கல்லூரியில் படிக்கிறார். ‘தனியார் கல்லூரியில் படிப்பவர்களுக்கு உதவுவதில்லை’ என்று சொன்னால் ‘அப்ப எங்களை மாதிரியானவங்களுக்கு என்ன வழி’ என்று கேட்கிறார். பதில் சொல்லவே முடியாத தர்மசங்கடமான கேள்வி. இத்தகைய கோரிக்கைகளை நிராகரிக்கும் போது பயமாகவும் இருக்கிறது. பதற்றமாகவும் இருக்கிறது. அழைப்புகளைத் தவிர்க்கும் போது குற்றவுணர்ச்சியும் தொற்றிக் கொள்கிறது. விருது வாங்கும் போது இத்தகைய பதற்றமும் பயமும்தான் விரல்களில் சில்லிடும் எனத் தோன்றுகிறது.

அறக்கட்டளை என்பது தலையில் முள் கிரீடம் அணிந்திருப்பது போல. அதன் சுமையும் அதிகம். அழுத்தமும் அதிகம். ஆனால் அது வேகமாக இழுத்துச் சென்று கொண்டேயிருக்கிறது. குதிரையின் பின்னால் கட்டப்பட்ட ஒருவனைப் போல வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறேன். பாராட்டுகளுக்கும் புகழுக்கும் இணையாக வசையும் பேசுகிறார்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவினர்களின் பரிந்துரைகளை நிராகரிக்கும் போது அதன் விளைவுகள் அதிபயங்கரமானவையாக இருக்கின்றன. என்னால் இயன்றதெல்லாம் வெளிப்படையான கணக்கு வழக்கு மட்டும்தான். அதையும் மீறிய சொற்களின் கணைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அதையெல்லாம் தாங்கிக் கொள்ளும் மனவலிமையை இறைவன் அருளட்டும் என்று மட்டும் இந்தத் தருணத்தில் வேண்டிக் கொள்கிறேன்.
அருமையான ரசித்து ..ருசித்த  பயணக்கட்டுரை ..அருமை தம்பு ..பாரதி ..சசி ..உங்களின் புகைப்படங்கள் பொக்கிஷம் .....நானும் முகநூல் மூலம் உங்களுடன் பயணித்தது மகிழ்ச்சி ...

Jog அருவி | கோவா | பேலூர் | ஹெளிபேடு | பயண அனுபவத் தொகுப்பு - Part-1
எங்கள் வருடாந்தர சுற்றுலா பயணமானது இந்த டிசம்பரிலும் நான்கு நண்பர்களுடன் குழுவாக தொடர்ந்தது.
பொதுவாக எங்கள் பயணம் நாடோடிகளைப் போன்றுதான் அமைத்துக்கொள்வோம். சுற்றுலா பயணம் போன்று அமைத்துக் கொள்வதில்லை.
டிசம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 12 மணியளவில் எங்களது பயணம் உடுமலைப்பேட்டையிலிருந்து கோவா நோக்கித் துவங்கியது.
காலை பெங்களூரை தாண்டி பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது நேராக கோவா செல்லாமல் அருகில் உள்ள வேறு ஏதேனும் ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்று அதன் பிறகு பயணத்தை தொடரலாம் என்று பயணத் திட்டத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டது.
எனவே சித்திரதுர்காவை அடைந்ததும் அங்கிருந்து ஜாக் அருவியை நோக்கி செல்ல ஆரம்பித்தோம்.
செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை போன்ற பெரிய சாலைகளை தேர்ந்தெடுக்காமல், கிராமம் வழியாக செல்லும் சிறிய அளவிலான சாலையை தேர்ந்தெடுத்து மேற்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.
உண்மையில் நான்குவழிச்சாலை போன்ற பெரிய சாலைகளில் செல்லும்போது நாம் அந்த இடத்தின் கலாச்சாரம்,மக்கள், மொழி, விவசாய முறைகள், வீடுகளின் கட்டமைப்புகள் போன்ற எந்த ஒன்றையும் அனுபவபூர்வமாக உணராமல் சாலையில் பயணித்து செல்கிறோம் என்பதை மனப்பூர்வமாக உணர்ந்தோம்.
வழியில் மானாவாரி விவசாயம், அந்த இடத்தின் கால்நடை வர்க்கங்கள், விவசாய முறைகள், இன்றும் அவர்கள் உபயோகப்படுத்தும் மாட்டு வண்டி, இரண்டடுக்கு வீடுகள், குழந்தைகளின் பொழுதுபோக்கு விளையாட்டுகள், பள்ளியின் அமைவிடங்கள், பெட்டிக்கடைகள் என முப்பது வருடத்திற்கு முந்தைய கிராமத்து வாழ்க்கையை அந்த இடங்கள் பிரதிபலித்தன.
மதிய நேரத்தை தாண்டி பயணம் தொடர்ந்து கொண்டிருந்தபோது வழியில் ஒரு மிகச் சிறிய கோவில் ஒன்று தென்பட்டது.
சரி என்று காரில் இருந்து இறங்கி ஓய்வெடுக்க சிறிது காலாற நடந்து கோவிலை பார்க்க சென்றோம்.
உள்ளே எங்களுக்கு ஓர் மிகச் சிறந்த அனுபவத்தை அளிக்கும் சிற்பங்கள் இருக்கும் என்று நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
நால்வரும் திரும்ப காருக்கு சென்று புகைப்படக் கருவிகளை எடுத்து வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக படம்பிடித்து மகிழ்ந்தோம்.
அத்தகைய பழமையான கோவிலில் எளிதில் கையில் சுமந்து செல்லும் படியான சிற்பங்கள் தனித்தனியாக உள்ளே வைக்கப்பட்டிருந்தாலும் அருகிலுள்ள கிராம மக்களின் பாதுகாப்பு பணியில் அந்த சிற்பங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தன.
மதியம் தாண்டி நேரமாகிவிட்டதால் மாலையில் இருள் சூழும் முன்பாக ஜாக் அருவி அடைவது என முடிவு செய்து வழியில் எங்கும் நிற்காமல் விரைவாக செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பயணத்தை தொடர்ந்தோம்....!
இன்னும் தொடரும்....
இன்றைய நாள் ....2018...வருடம் முடிய சில தினங்களே உள்ளன ..எனது அலுவலக நேரம் முடிந்து மாலைநேரம் ...நமது சொந்தம் திரு .P .துரைசாமி (பாலமன்னா குலம் ).மாமா அவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ..இன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று அழைத்தார் ..எனது வியாபாரபத்திற்கும் எனக்கு உதவி புரிபவர் .. பஞ்சமுகி ரியல்எஸ்டேட் அதிபர் ..பல ஆண்டு காலமாக உடுமலை பகுதியில் வசிப்பவர் ..நமது சமுதாய சார்ந்த நிகழ்வுகள் நடந்தால் கலந்துகொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்பவர் ..நம் தம்பி போட்டோ ராஜேந்திரன் வாட்ஸாப்ப் குழுவில் நமது கம்பளவிருட்சம் 3 வருடங்களாக அறக்கட்டளையின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வந்துள்ளார் ..என்று சந்தித்து நமது அறக்கட்டளைக்கு ஒரு வருட சந்தாவை ரூபாய் .1200/- அளித்தது மகிழ்ச்சி ..கல்விக்கோ ..யாரவது உதவி கேட்டால் கூறுங்கள் என்னால் முடிந்த உதவி செய்கிறேன் என்று கூறியுள்ளார் ...வாழ்த்துக்கள் ..உங்களை போன்று அறக்கட்டளையின் செயல்பாடுகளை பார்த்து இதுபோன்று அறக்கட்டளையோடு பயணிக்கும் சொந்தங்களை பெற்றதற்கு மகிழ்ச்சி ..வரும் காலங்களில் மிக சிறப்புடன் செயல்பட ஊக்கம் அளிப்பதாக உள்ளது ...நன்றி ..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681...

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

சரியான நேரத்தில் அருமையான பதிவு ...மார்க்கெட்டிங் ..

Ravi Nagaraj ........

Sunday Thathupithu - இன்று சன்டே என்பதால் "தத்துபித்து" - இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது.............சோற்று சுரன்டலும்...........சோப்ளாங்கியாக தெரியும்கஸ்டமர்ஸும்....
கடந்த இரண்டு வாரங்களாக அனேகமாய் பேசபட்ட ஒரே விஷயம், ஜொமேட்டோ டெலிவிரி ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் சோற்று மூட்டையை கொஞ்சம் ஸ்பூனால் சுரன்டி எடுத்து தின்பதை வீடியோ பற்றிதான்......... இந்த இன்டஸ்ட்ரியில் நான் இருப்பதால் இதனை பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும்.............
இந்த சோற்று சுரண்டல் முன்பெல்லாம் இல்லை கடந்த சில மாதங்களாக அதிகரிப்பதை உணர்ந்த கஸ்டமர்ஸ் கம்பளையன்ட் செய்ய தொடங்கினர், சார் என் கார்னிஷிங் மிஸ்ஸிங், என் பிரியானியின் முட்டையை காணவில்லை, என் உணவு குறைவாக உள்ளது, என் உணவு ஒரிஜினல் பேக்கிங் போல் இல்லை என்று பலவாறு கம்பலையன் வந்த பிறகு சட்டென்று சுதாரித்து எழுந்த ஸ்விகி மற்றும் ஜொமேட்டோ, ஃபுட்பான்டா நிறுவனங்கள் உடனே ரெஸ்டாரன்ட்களுக்கு இனிமே நாங்க குடுக்கிற செலோடேப்பை உங்கள் உணவு டப்பாவை சுற்றி ஒட்டுங்கள் அதன் மூலம் டப்பாவை பிரிக்க முடியாது என்று கூறி கொஞ்ச நாட்களுக்கு கஸ்டமர்களின் உணவு பில்ஃபிரேஷன் இல்லாமல் கிடைக்கபெற்றது உண்மை........
திரும்பவும் போன மாதம் முதல் இது திரும்பவும் முளைக்க இந்த முறை கம்பெனியை கான்டக்ட் பண்ணி கேட்டால் உண்மை வராது என்று எண்ணி நம்ம தெரிஞ்ச ஒரு நாலஞ்சு டெலிவிரி பாய்ஸை தொடர்பு கொண்டபோது தான் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. முதன் முதலில் ஜொமேட்டோ நிறுவனம் வெறு ரெவ்யூ சைட்களாய் இருந்தன. டெலிவிரி மாடல் கிடையாது. பின்பு டெலிவிரி ஆரம்பித்த போது டெலிவிரி பாய்ஸ் புதுசா எடுத்து நெட்வொர்க்குள் கொண்டுவர அதிக நேரம் மற்றும் எம்ப்ளாய் பெனிஃபிட்ஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்து - "ரன்னர்" என்ற நிறுவனம் முன்பு பல டெலிவிரிக்களை செய்து வந்தது அனைவருக்கு தெரிந்ததே அந்த கம்பெனியுடன் டையப் பண்ணி 35 ரூவா ஒரு டெலிவிரிக்கு என்று விலை பேசி டெலிவிரி செய்ய ஆரம்பித்து பின்பு மார்கெட்டிங்க் மாடல்கள் மாறியது. மாறிய மார்கெட்டிங் மாடல்கள் என்னவென்றால் ஜொமோட்டோ வருகையினால் ஸ்விக்கி கொஞ்சம் படுத்துவிட்டது, ஃபுட்பான்டா காலியாகும் நிலை, யூபர் ஈட்ஸ் அவ்வளவாய் பிஸினஸ் இல்லாததால் அமைதியாய் இருந்தது.
இதனால் இரண்டாம் இடத்தில் இருந்த ஸ்விகி திரும்பவும் முதல் இடத்துக்கு வர முன்பு போல மினிமம் 250 - 300 ரூபாய் ஆர்டர் மாடலை மாற்றி இனிமேல் மினிமம் ஆர்டர் என்று ஒரு விலை ஏதும் இல்லை அதனால் 30 ரூவாய்க்கு கூட ஒரு பொருளை ஆர்டர் செய்ய முட்யும் என்று டமால்னு அறிவிக்க ஜொமோட்டோ ஆடிபோனது. ஸ்விகியின் டெலிவிரி ஆட்கள் அந்த கம்பெனியே நேரடியாக ஒப்பந்த செய்ததால் அவர்களுக்கு ஒன்று நஷ்டம் இல்லாமல் போனது. இதை உணர்ந்த ஜொமோட்டோ உடனே அவர்களின் கான்டிரக்ட் லேபர் கம்பெனியான ரன்னர் கம்பெனியை விகைக்கு வாங்கி அனைத்து டெலிவிரி ஆட்களையும் கையகபடுத்தி நானும் இனிமே மினிமம் ஆர்டர் வாங்க சொல்லி வருத்தபடமாட்டேன் என்று சொல்லி மார்க்கெட்டுக்குள் நுழைந்த போது டெலிவிரி ஆட்களுக்கு 35 ரூவாயை ஒரு டெலிவிரிக்கு கொடுத்தனால் அந்த ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் சோப்ளாங்கி கஸ்டமர்ஸிடம் 30 ரூவாட் இட்லிக்கு 35 ரூவாய் டெலிவரி சார்ஜ் என வசூலிக்க, கஸ்டமர்ஸ் ஐயே என உணரத்தொடங்க உடனே ஆர்டர்கள் குறைய ஆரம்பிக்க பின்பு இதை உணர்ந்த இந்த கம்பெனிகள் இனிமே டெலிவிரி சார்ஜ் ஃப்ரீ என கஸ்டமர்களுக்கு இலவசத்தை கொடுத்து அந்த பாரத்தை ரெஸ்டாரன்ட் ஓனர்கள் தலையில் கட்ட, ஏற்கனவே 25% கமிஷன் மற்றும் பாக்கிங் சார்ஜ் என அவர்கள் கொடுப்பதால் நான் டெலிவிரி சார்ஜ் தரமாட்டேன் என கூற பிரச்சினை தலைக்கு மேலே போனவுடன் ஜொமோட்டோ இனிமேல் டெலிவிரி ஆட்களுக்கு 35 ரூவாய்க்கு பதிலா 15 ரூவாதான்னு சொல்ல ஸ்டிரைக் நடக்க ஆரம்பிக்க பாதி பேர் இதை விட்டா வேற வேலை இல்லை என பாதி ஆட்கள் வேலை செய்ய பிரச்சினை இங்குதான் ஆரம்பித்தது. அரை குறை ஆட்களுடன் டெல்விரிகளை சமாளிக்க முடியாமல் தன் பிஸினஸை தற்காலிகமாக மூட பிரச்சினை இன்றும் பாதி நிலையிலே நிற்கிறது. இது ஒரு புறம்...............
டெலிவிரி ஆட்கள் மிக பாவமானவர்கள். இவர்கள் வேலைக்கு வரும் இடம் ஒரு குறிப்பிட்ட ஏரியாவின் புளியமரம் தான் ரிப்போர்ட்டிங். ரெஸ்டிங் பிளேஸ் கிடையாது. கழிவறை அங்கு அங்கு இருக்கும் ரெஸ்டாரன்ட்கள் தான் இவர்களுக்கு. சமயத்துக்கு சாப்பிட முடியாது, டிராஃபிக் மற்றும் டிராஃபிக் போலிஸ் தொல்லை, மழை வெயில் பனி எல்லாம் பார்ககமல் ஓட வேண்டும், ஒரு நாள் மினிமம் 20 டெலிவிரி செய்யலைனா மாசம் 20,000 கிடைக்காது, வண்டி பங்க்ச்சர், பராமரிப்பு செலவு, இன்ஸூரன்ஸ் பெட்ரோல் என எல்லாம் போக இவர்களுக்கு அதிகபட்சம் 12-15000 தான் கிடைக்கும் 12 மணி நேர வேலைக்கு அது போக இப்போது காலை 7 மணிக்கு வரனும் இரவு 3 மணி வரை வேலை செய்ய நும் மினிமம் 15 டெலிவிரி செய்யலைனா மூணு நாளைக்கு சஸ்பென்ட் என பல டார்ச்சர்களுக்கு நடுவே இவர்கள் காசு கொடுத்து சாப்பிட முடியாமல் செய்யும் இந்த சுரன்டல் வேலை பரிதாப்பத்துகுறியது. ரெஸ்டாரன்ட் 35% போனாலும் மிச்ச லாபம், வெறும் கொஞ்ச முதலீடு இனையத்தை வைத்து கொள்ளையடிக்கு ஓலா ஊபர் வரிசையில் இந்த ஃபிராடு டெலிவிரி கம்பெனிகள் 10% கமிஷன் என ஆரம்பித்து இன்று 35% கமிஷன் என இவர்கள் பாட்டுக்கு விலையேற்ற அதனால் பாண்டிசேரி போன்ற பல நகரங்களில் ஹோட்டல் ஓனர் அசோசியேஷன் இனிமேல் ஆன்லைன் ஆர்டர் அக்ஸ்ப்ட் செய்வதில்லை என முடிவெடுத்து இவர்களை முற்றிலும் புறக்கணிக்க தொடங்கியிருக்கு போது கஷ்டப்படூம் ஒரே ஜீவன் இந்த நோஆஃபிஸ். நோடைம், நோலேபர் லா இந்த டெலிவிர் அட்கள் தான். அடுத்த முறை ஒரு புண்ணைகை மற்றும் குடிக்க தண்ணீரி வேண்டுமானு கேட்டு கண்டிபபய் கொடுங்கள் அவர்களுக்கு......அது அவர்களை இன்னும் பல டெலிவிரிகளை செய்ய உற்சாகபடுத்தும்.
Now WOMAN started the same delivery JOB

சனி, 22 டிசம்பர், 2018

இன்று  MCC  குழு உறுப்பினர்கள் ,கடந்த ஒரு ஆண்டில் இரத்த தானம் வழங்கிய இரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு விழா அழைப்பிதழ்
வழங்க தங்களின் அன்றாட பணிகளை முடித்துக்கொண்டு .மாலையில் .கிடைக்கும் சில மணிநேரங்களில் ...சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தது மிக்க மகிழ்ச்சி ..மக்கள் பணியில் இருக்கும் இவர்களின் பொன்னான நேரத்தில் சந்தித்து அளித்தது மிக்க நன்றி ..
ஏரிப்பாளையம் வரதராஜ்
உடுமலை சுரேஷ்
பெரும்பள்ளம் சுரேஷ்
சுந்தரம் பைனான்ஸ் சிவக்குமார்
உடுமலை வரலாற்று ஆய்வு மையம் கண்டிமுத்து ஆகியோருடன்
Dr சுமந்த்
.Dr பாலசுப்பிமணியன்
Dr.விஜய்பாலகுமார்
Dr.முருகன்
Dr.அசோக்
Dr.ஜெயப்பிரகாஷ்
Dr. சிவசண்முகம்
வீ .ஜெயச்சந்திரன் ,அவர்கள்
காவல் துணைக் கண்காணிப்பாளர் ,
S.R ஓம் பிரகாஷ் ,அவர்கள் ,
காவல் ஆய்வாளர் ,
திரு மகேந்திரன்,MP ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது
உடன் வந்து ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி
அன்புடன்
போட்டோ ராஜேந்திரன்
உடுமலைப்பேட்டை


செவ்வாய், 18 டிசம்பர், 2018

மகனின் பாசம் ...

அப்பாக்களே—உங்கள் மகனுடைய பெஸ்ட் ஃபிரெண்டாக முடியுமா?

“அப்பா, உங்களுக்கு எவ்ளோ விஷயம் தெரிஞ்சிருக்கு!” உங்கள் மகன் எப்போதாவது இப்படிக் கேட்டு உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறானா? அப்போது, ஒரு அப்பாவாக உங்கள் முகத்தில் ஆயிரம் ‘வாட்ஸ்’ பெருமிதம் பளிச்சிட்டிருக்கும்! ஆனால், உங்கள் மகன் இன்னும் ஒரு படி மேலே போய், நீங்கள் கொடுத்த ஆலோசனைபடி நடந்து பயனடைந்திருந்தால்? சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றிருப்பீர்கள்தானே!*—நீதிமொழிகள் 23:15, 24.

ஆனால் வருடங்கள் உருண்டோடிய பிறகும், உங்கள் மகன் உங்கள்மீது மதிப்பு மரியாதை வைத்திருக்கிறானா? அல்லது வளர வளர அதெல்லாம் குறைந்துபோயிருக்கிறதா? பிஞ்சு பருவத்திலிருந்து பெரியவனாகும்வரை நீங்கள் அவனுடைய பெஸ்ட் ஃபிரெண்டாக இருப்பது எப்படி? சரி, அப்பாக்கள் பொதுவாகச் சந்திக்கிற சில சவால்களை இப்போது சிந்திக்கலாம்.

மூன்று சவால்கள்

1. நேரமே இல்லை: பல நாடுகளில், அப்பாவுடைய சம்பாத்தியத்தில்தான் முழு குடும்பமும் ஓடுகிறது. அதனால், ஒருநாளில் முக்கால்வாசி நேரத்தை அவர் வேலைக்கே செலவிட வேண்டியிருக்கிறது. சில நாடுகளில், அப்பாக்கள் தங்களுடைய பிள்ளைகளோடு செலவிடும் நேரம் ரொம்ப ரொம்பக் குறைவு. உதாரணமாக, சமீபத்தில் பிரான்சு நாட்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு காட்டுகிறபடி, அப்பாக்கள் பிள்ளைகளோடு ஒரு நாளில் 12 நிமிடங்கள்கூட செலவிடுவதில்லை.

யோசித்துப் பாருங்கள்: உங்கள் மகனோடு எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? அடுத்து வருகிற ஓரிரு வாரங்களில், அவனோடு தினமும் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்று எழுதி வைத்துப் பாருங்கள். அதைப் பார்த்து நீங்கள் ‘ஷாக்’ ஆகிவிடலாம்.
2. என் அப்பா அப்படி இல்லை: சில அப்பாக்களுக்கு தங்களுடைய அப்பாவோடு அந்தளவு பேசிப் பழக்கம் இருந்திருக்காது. பிரான்சைச் சேர்ந்த ஸான்-மாரி சொல்கிறார்: “என் அப்பாகிட்ட நான் அவ்வளவா பேசினதே இல்லை. இது என்னை பாதிக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல. ஏன்னா, இப்போ என் பசங்களோட உட்கார்ந்து நல்லா பேசறது எனக்கு கஷ்டமா இருக்குது.” இன்னும் சில அப்பாக்களோ, தங்கள் அப்பாவுடன் பேசியிருந்தாலும் அவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருந்திருக்காது. 43 வயது ஃபிலிப் இப்படிச் சொல்கிறார்: “நான் சின்ன வயசுல இருந்தப்போ என் அப்பாவுக்கு என் மேல இருக்கிற பாசத்த எப்படிக் காட்டணும்னு தெரியல. அதனால என் பையன் மேல இருக்கிற பாசத்த வெளிக்காட்றதுக்கு நானும் ரொம்பவே முயற்சி செய்ய வேண்டியிருக்கு.”

யோசித்துப் பாருங்கள்: உங்கள் அப்பாவோடு நெருங்கிப் பழகாததால்தான் உங்கள் மகனிடம் பாசம் காட்ட முடியவில்லையா? உங்கள் அப்பாவுடைய நல்ல பழக்கம்/கெட்ட பழக்கம் உங்களிடமும் இருக்கிறதா? எந்தெந்த விஷயங்களில் அவரைப் போல் இருக்கிறீர்கள்?
3. என் ஊரில் அந்தப் பழக்கம் இல்லை: சில ஊர்களில் அப்பாக்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் தலையிட மாட்டார்கள். மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த லூக்கா சொல்கிறார்: “எங்க ஊர்ல பிள்ளைகள பார்த்துக்கறது எல்லாம் அம்மாவோட வேலைனுதான் சொல்வாங்க.” இன்னும் சில நாடுகளில், பிள்ளைகளைக் கண்டிப்பது மட்டுமே அப்பாவின் வேலை என நினைக்கிறார்கள். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் சொல்கிறார்: “எங்க ஊர்ல எல்லாம் அப்பா பிள்ளைகளோட விளையாட மாட்டார். அப்படி விளையாடினா பிள்ளைகளுக்கு அவர் மேல இருக்கிற மதிப்பு மரியாதையெல்லாம் போயிடும்னு நினைப்பாங்க. அதனால என் பையனோடு விளையாடுறது எனக்கு எப்பவுமே கஷ்டமா இருந்துச்சு.”

யோசித்துப் பாருங்கள்: ஒரு அப்பா எப்படி இருக்க வேண்டுமென்று உங்களுடைய ஊரில் எதிர்பார்க்கிறார்கள்? பிள்ளைகளை வளர்ப்பது எல்லாம் பெண்களின் வேலை என்று சொல்கிறார்களா? அப்பாக்கள் தங்களுடைய மகன்களிடம் அன்பையும் பாசத்தையும் பொழிய வேண்டுமென்று சொல்கிறார்களா, அல்லது கறாராக இருக்க வேண்டுமென்று சொல்கிறார்களா?
ஒரு அப்பாவாக நீங்களும் இதுபோன்ற சவால்களைச் சந்தித்திருக்கலாம். அதை எப்படிச் சமாளிக்கலாம்? உங்களுக்காக இதோ சில டிப்ஸ்.

பிஞ்சிலேயே ஆரம்பித்துவிடுங்கள்

பொதுவாக, பையன்கள் பிஞ்சு வயதிலிருந்தே அப்பாவை அப்படியே காப்பியடிக்க ஆசைப்படுவார்கள். அதனால், சின்ன வயதிலேயே உங்கள் மகனுக்கு இருக்கும் அந்த ஆசைக்கு அஸ்திவாரம் போடுங்கள். அதை எப்படிச் செய்யலாம்? அதற்காக, அவனோடு எப்போதெல்லாம் நேரம் செலவிடலாம்?

முடிந்தபோதெல்லாம் உங்களுடைய அன்றாட வேலைகளில் அவனையும் சேர்த்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, வீட்டு வேலைகளில் அவனையும் கூடமாட உதவி செய்யும்படி சொல்லலாம். வீட்டைச் சுத்தம் செய்யும்போது அவனிடமும் ஒரு சின்ன துடைப்பத்தைக் கொடுக்கலாம்; அல்லது தோட்ட வேலை செய்யும்போது ஒரு சின்ன மண்வெட்டியைக் கொடுக்கலாம். அப்போது அவன் எவ்வளவு குஷியாகி விடுவான் தெரியுமா? இருக்காதா என்ன, அவனுக்குப் பிடித்த ஹூரோவோடு, ஆம் உங்களோடு, வேலை செய்ய அவனுக்குக் கசக்குமா? இப்படிச் சேர்ந்து செய்யும்போது வேலையை முடிப்பதற்கு அதிக நேரம் எடுக்கலாம், ஆனால் உங்களுக்கும் அவனுக்கும் இடையே நெருக்கம் அதிகமாகும். கஷ்டப்பட்டு உழைப்பது எப்படியென்று அவனுக்கு கற்றுக்கொடுக்கவும் முடியும். அன்றாட வேலைகளில் பிள்ளைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென பல காலத்திற்கு முன்பே அப்பாக்களுக்கு பைபிள் ஆலோசனை கொடுத்துள்ளது; பிள்ளைகளிடம் பேசுவதற்கும் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கும் அது நல்ல வாய்ப்பாக இருக்கும். (உபாகமம் 6:6-9) இந்த பைபிள் ஆலோசனை இன்றைய அப்பாக்களுக்கும் பொருந்தும்.

உங்கள் மகனோடு சேர்ந்து வேலை செய்வதோடு, அவனோடு விளையாடவும் நேரம் ஒதுக்குங்கள். அப்படி விளையாடும்போது மகனோடு ஜாலியாக இருக்க முடியும், அவனும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வான். ஒரு ஆய்வு சொல்கிறபடி, அப்பா-மகன் சேர்ந்து விளையாடும்போது சாதனையாளனாக, தைரியசாலியாக ஆவதற்கான ஊக்கத்தை மகன் பெற்றுக்கொள்கிறான்.

அப்பாவும் மகனும் சேர்ந்து விளையாடுவதால் மற்றொரு முக்கியமான பயனும் உண்டு. “விளையாடும்போதுதான் ஒரு பையன் தன் அப்பாவோடு ரொம்ப சகஜமாகப் பேசுகிறான்” என்று சொல்கிறார் ஆய்வாளர் மிஷல் ஃபிஸ். விளையாடும்போது, ஒரு அப்பாவால் தன் மகனிடம் சொல்லிலும் செயலிலும் பாசத்தைக் காட்ட முடியும். அப்படிச் செய்யும்போது பாசத்தை எப்படி வெளிக்காட்டுவதென தன் பையனுக்கு அவர் கற்றுக்கொடுக்கிறார். ஜெர்மனியைச் சேர்ந்த ஆன்ட்ரே சொல்கிறார்: “என் பையன் சின்னவனா இருந்தப்போ நாங்க அடிக்கடி ஒன்னா சேர்ந்து விளையாடுவோம். நான் அவனை கட்டி அணைப்பேன், அவனும் பதிலுக்கு பாசம் காட்ட பழகிகிட்டான்.”

மகனோடு உள்ள நட்பைப் பலப்படுத்துவதற்கு இன்னொரு வழி: தினமும் அவன் தூங்குவதற்கு முன் ஒரு கதையை வாசித்துக் காட்டுங்கள்; அவனுடைய சந்தோஷங்களை, சங்கடங்களை சொல்லும்போது காதுகொடுத்து கேளுங்கள். இப்படிச் செய்து வந்தால், அவன் பெரியவனானாலும் உங்களுக்கிடையே நல்ல பேச்சுத்தொடர்பு இருக்கும்.

வளைந்து கொடுங்கள்

டீனேஜ் பிள்ளைகள் சிலருக்கு அப்பா பேசும் விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்காது. நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கு உங்கள் மகன் பட்டும் படாமல் பதில் சொன்னால், அவனுக்கு உங்களோடு பேசவே இஷ்டமில்லை என்று முடிவுகட்டி விடாதீர்கள். நீங்கள் பேசும் விதத்தை கொஞ்சம் மாற்றினால் அவன் தாராளமாகப் பேசுவான்.

பிரான்சில் வசிக்கும் ஸாக் என்பவருக்குத் தன் மகன் ஸரோமுடன் பேசுவது கஷ்டமாக இருந்தது. அவனைக் கட்டாயப்படுத்தி பேச வைப்பதற்குப் பதிலாக, அவனுடைய நட்பைச் சம்பாதிக்க வேறு வழியில் முயற்சி செய்தார். அவனோடு கால்பந்து விளையாடினார். “விளையாடி முடிச்ச பிறகு, நாங்க புல் தரைல உட்கார்ந்து கொஞ்சம் ‘ரெஸ்ட்’ எடுப்போம். அப்போ அவன் மனசு திறந்து பேசுவான். அப்புறம்தான் புரிஞ்சுது, அவன் என்னோட தனியா நேரம் செலவிட விரும்புறான்னு. இப்படி செஞ்சதால நாங்க ரெண்டு பேரும் ரொம்ப ஃபிரெண்ட் ஆயிட்டோம்” என்கிறார் ஸாக்.

விளையாட்டில் உங்கள் மகனுக்கு ஆர்வம் இல்லையென்றால்? ஆன்ட்ரே தன் மகனுடன் உட்கார்ந்து நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்ததை ஆசை ஆசையாய் நினைத்துப் பார்க்கிறார். “ஜில்லுனு இருக்கும் ராத்திரி நேரத்துல நாங்க வெளில சேர்ல உட்கார்ந்து, நல்லா போர்த்திக்கிட்டு, அப்படியே டீ குடிச்சுகிட்டு வானத்த பார்த்து ரசிப்போம். நட்சத்திரங்கள கடவுள் படைச்சதைப் பற்றி பேசுவோம், சொந்த விஷயங்கள பேசுவோம். சொல்லப்போனா, உப்பு சப்பில்லாத விஷயத்திலிருந்து காரசாரமான விஷயம்வரை எல்லாத்தையுமே பேசுவோம்” என்கிறார் ஆன்ட்ரே.—ஏசாயா 40:25, 26.

உங்கள் மகனுக்குப் பிடித்த சில விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? உங்களுடைய ஆசைகள், விருப்பங்கள் எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி வைத்துவிட வேண்டியதுதான். (பிலிப்பியர் 2:4) தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் ஈயன் சொல்கிறார்: “ஸ்போர்ட்ஸ்னா எனக்கு அவ்ளோ பிடிக்கும்; ஆனா, என் பையன் வானுக்கு சுத்தமா பிடிக்காது. ஃப்ளைட், கம்ப்யூட்டர் எல்லாம்தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அவனுக்காக நானும் அந்த விஷயங்கள்ல ஆர்வம் காட்டினேன்; விமான சாகசங்கள பார்க்க அவனை கூட்டிட்டு போனேன், கம்ப்யூட்டர்ல ஃப்ளைட் ஓட்டுற மாதிரி அவனோட கேம்ஸ் விளையாடினேன். இப்படி அவனுக்குப் பிடிச்ச விஷயங்கள்ல நானும் கலந்துகிட்டதனாலதான் என்னோட அவன் ரொம்ப சகஜமா பேச ஆரம்பிச்சான்.”

தன்னம்பிக்கையை ஊட்டுங்கள்

“அப்பா, இத பாருங்களேன், எப்படி இருக்கு?” உங்கள் குட்டிப் பையன் புதிதாக எதையாவது செய்தபோது உங்களிடம் இப்படிக் கேட்டிருக்கிறானா? இப்போது, அவன் டீனேஜ் பையனாக வளர்ந்த பிறகும் இதே மாதிரி கேட்கிறானா? ஒருவேளை அப்படி வாயைத் திறந்து கேட்க மாட்டான். ஆனால் நீங்களாகவே அவனை பார்த்து மனதார பாராட்டினீர்கள் என்றால் எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கிற மனப்பக்குவம் உள்ள ஆளாக அவன் வளருவான்.

இந்த விஷயத்தில் யெகோவா தேவன் வைத்த மாதிரியைக் கவனியுங்கள். தம்முடைய மகன் இயேசு, பூமியில் ஒரு முக்கியமான வேலையைத் தொடங்கவிருந்த சமயத்தில் அவர்மீதிருந்த பாசத்தை கடவுள் வெளிப்படையாகக் காட்டினார். “இவர் என் அன்பு மகன், இவரைக் குறித்துப் பூரிப்படைகிறேன்” என்று சொன்னார். (மத்தேயு 3:17, அடிக்குறிப்பு; 5:48) உங்கள் மகனைக் கண்டிப்பதும் அவனுக்குக் கற்றுக்கொடுப்பதும் முக்கியம்தான். (எபேசியர் 6:4) அதே சமயத்தில், அவன் நல்ல விஷயங்களை பேசும்போது, செய்யும்போது சபாஷ் சொல்லி தட்டிக்கொடுப்பதும் முக்கியம்.

சில அப்பாக்களுக்கு அப்படிப் பாராட்டுவதும் பாசத்தைக் காட்டுவதும் இயல்பாக வருவதில்லை. அதற்குக் காரணம், அவர்களுடைய பெற்றோர் அவர்களது திறமைகளைப் பாராட்டாமல் எப்போதும் குறைகளையே குத்திக்காட்டியிருக்கலாம். நீங்கள் அப்படிப்பட்ட குடும்பத்தில் வளர்ந்தவர் என்றால் உங்களுடைய மகனின் தன்னம்பிக்கையை வளர்க்க நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். இதை எப்படிச் செய்யலாம்? முன்பு குறிப்பிடப்பட்ட லூக்கா, வீட்டு வேலைகளைச் செய்யும்போது எப்போதும் தன்னுடைய 15 வயது மகன் மான்வலுடன் சேர்ந்து செய்கிறார். “சில நேரங்கள்ல அவனுக்கு ஒரு வேலைய கொடுத்துட்டு அவனையே செய்யச் சொல்லிடுவேன், தேவைப்பட்டா மட்டும்தான் உதவி செய்வேன். நிறைய தடவை அவனே வேலைய முடிச்சுடுவான். அப்படி செய்யும்போது அவனுக்கு ஒரு திருப்தி கிடைக்குது, அவனோட தன்னம்பிக்கையும் அதிகமாகுது. நானும் அவனை தட்டிக்கொடுத்து பாராட்டுவேன். அவன் நினைச்ச அளவுக்கு செய்யலன்னாகூட அவனோட முயற்சிய பாராட்டுவேன்” என்கிறார் லூக்கா.

பெரிய பெரிய இலக்குகளை வைத்து அதை அடைய உங்கள் மகனுக்கு உதவலாம்; இதுவும்கூட தன்னம்பிக்கையை வளர்க்க அவனுக்கு உதவும். ஒருவேளை, நீங்கள் நினைக்கிற அளவுக்கு வேகமாக அந்த இலக்குகளை அவன் அடையவில்லை என்றால்? அல்லது நீங்கள் நினைப்பது போன்ற இலக்குகளை அவன் வைக்காமல் வேறு ஏதாவது நல்ல இலக்குகளை வைக்கிறான் என்றால்? அப்போது, உங்களுடைய எதிர்பார்ப்புகளை கொஞ்சம் மாற்ற வேண்டியிருக்கும். முன்பு குறிப்பிடப்பட்ட ஸாக் இப்படிச் சொல்கிறார்: “அடைய முடிஞ்ச இலக்குகள மட்டும் வைக்க என் மகனுக்கு உதவுறேன். அதே சமயத்துல, அந்த இலக்குகள் எல்லாம் அவனாகவே வைக்கணும், நான் அவனுக்காக வைக்கக்கூடாதுன்றதுல ஜாக்கிரதையா இருக்கிறேன். அந்த இலக்குகளை அவன் சீக்கிரமா அடையணுங்கறதுக்காக நான் வீணா அதுல மூக்க நுழைக்கிறதில்ல.” உங்கள் மகன் சொல்வதைக் காதுகொடுத்து கேட்டால்... அவன் அடைந்த வெற்றியைப் பாராட்டினால்... தோல்வி ஏற்பட்டாலும் அவனைத் தூக்கி நிறுத்தினால்... அவன் வைத்த இலக்குகளை அடைய நீங்கள் உதவுகிறீர்கள் என்று அர்த்தம்.

அப்பா-மகன் உறவில் சில விரிசல்களும் சிக்கல்களும் ஏற்படும்தான். ஆனால், போகப்போக அவன் உங்களோடு நெருக்கமாக இருக்கவே விரும்புவான். வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பும் அன்புள்ள அப்பாவோடு நண்பராக இருக்க எந்த பிள்ளைக்குத்தான் பிடிக்காது?


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

அருமையான வாடிக்கையாளர் கூட்டம் ..


இன்று மாலை ..அலுவுலக நேரம் முடிந்ததும் ...அருமையான வாடிக்கையாளர் கூட்டம் ..இந்திய அளவு பாரம்பரியமிக்க ராம்கோ சிமெண்ட் தயாரிப்பு நிறுவனம் நடத்திய சிமெண்ட் ,சூப்பர் பாண்ட் ,வீடு கட்டுவதற்கும் ,பயன்படுத்துவதற்கான பலன்கள் ஒருமணி நேர நிகழ்வு ..அருமையாகவும் ,அதிக தகவல்கள் அளித்து கட்டிட பொறியாளர்களுக்கும் ,என்னை போன்ற வங்கி கடன் அளிப்பவர்களுக்கும் ,கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் ,கொத்தனார்களுக்கும் மற்றும் தொழிலார்களுக்கும் மிகவும் பயனுள்ள கூட்டமாகவும் இருந்தது ..

வீடு கட்டுவதாற்கான சீலிங் பூச்சு ,சிமெண்ட் சாந்து கலவை சிந்துவதால் ,வேலைநேரம் ,வேலை பளுவும் அதிகரிக்கும் ,.இந்த நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்தும் போது வேலை நேரம் ,வேலைப்பளுவு பெருமளவு குறைவதை அழகாக விளக்கம் அளித்தது அருமை .கட்டிட மேற்பரப்பை கொத்தி புள்ளி போடும்போது வெளியேறும் சிமெண்ட் மற்றும் மணல் கலந்த தூசியை சுவாசித்தால் நாளைடைவில் நூரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் ..இவர்களின் நிறுவன தயாரிப்பு புதிய தொழில்நுற்பதால் பாதிப்பை தவிர்க்க முடிகிறது .பிணைப்பிக்கான கலவை ,பிடிமானம் ,பிணைப்பு வலிமை ,தர நிர்ணயம் ,மேற்பரப்பை சொரசொரபாக்குதல் ,பூசும்போது சிந்தும் சிமிண்டு சாந்து கலவை மிக குறைவாக இருக்கும் ,செலவு குறைவு ..

சிமெண்டை கட்டிட வேலைசெய்யும்போது எப்படி பாதுகாக்கவேண்டும் ..கையாளும் முறையை பற்றி நிறுவன அதிகாரிகள் எளிமையான விளக்கம் அளித்தனர் ..ஒரு சிறு குறும்படம் மூலம் சிறு குழந்தைகளுக்கு கூட புரியும் வகையில் வீடு கட்டுவதற்கான விளக்கம் அளித்தது அருமை ..

இன்று மாலை நடந்த ராம் கோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் கூட்டம் மிக பயனுள்ளதாக அமைந்தது ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..








திங்கள், 17 டிசம்பர், 2018


தந்தையின் பாசம் ..

பத்து மாதம் கருவைச் சுமந்து ஈன்றெடுப்பதால் பெண்ணொருத்தி தாய் என்ற பதவியை அடைகிறாள், அந்தத் தாயையும் சுமக்கும் தந்தையின் கண்ணீரை யாரேனும் கண்டீரோ!

அன்று கருவுற்ற நாளில் பிள்ளையிடம் தொடங்கும் அவளன்பு தான் கண்மூடும் நாள் வரை மாறாது. என் சிறு வயதில் பலரும் என்னிடம் அதிகம் கேட்ட கேள்வி – நீ அம்மா செல்லமா? அப்பா செல்லமா? இக்கேள்விக்கு நான் சொன்ன/சொல்லும் ஒரே பதில் `அம்மா செல்லம்` என்பது தான். பல காலம் நிலைக்கவில்லை அப்பதிலும், அப்பா என்ற தியாகியை நான் உணரும்வரை!

என்னைக் கேட்டால் அம்மாவின் பாசத்திற்கும் அப்பாவின் பாசத்திற்கும் ஆயிரக்கணக்கான வித்தியாசங்கள் உண்டு என்பேன். அம்மாவின் அன்பு எதையும் எதிர்பார்க்காது. பிள்ளையின் பிறப்பிலிருந்து அவர்கள் வளரும்வரை முப்பொழுதும் அம்மாக்கள் உடனிருப்பதால் அம்மாவே உலகம் என்ற நிலைப்பாடு இருக்கும், அதுவே நியதி, அதுவே உண்மை.

அப்பாக்களின் அன்பும் பாசமும் பிள்ளை வளரும் போது தேய்பிறை போல் மறைவதாகத் தோன்றும். அதுவே நியதி, ஆனால் அந்நியதி உண்மையல்ல என்பது பின்னொரு நாளில் அப்பிள்ளை தன் மகனை வளர்க்கும்போது தான் புரியும்!

அப்பா என்றாலே திட்டுவதற்கும் அடிப்பதற்கும்தான் என்று பிள்ளைகள் எண்ணுவதுண்டு. அப்பிள்ளைகள் தவறே செய்தாலும் கட்டியணைப்பது தாயுள்ளம், தவறைச் சுட்டிக்காட்டி அன்பையும் கண்டிப்பாய் காட்டுவது  தந்தையுள்ளம்.

ஒரு தாயின் அன்பு, பிள்ளை பிறந்த நாளில் எப்படி இருந்ததோ அதே நிலைதான் அவன் வளர்ந்து, பெரியவனாகி அவனுக்குத் திருமணமான பின்பும் மாறாது. அவனுக்கென்று பெண்ணொருந்தி வந்த பின்பும் அவள் கண்களுக்கு அவன் சிறுபிள்ளையாகவே காட்சி தருவான். எனவே அம்மாவின் அன்பிலும் பாசத்திலும் வேறுபாடு காண்பதறிது, அவ்வன்பு ஈடு இணையற்றது.

இத்தகு அன்னையரின் அன்பையும் பாசத்தையும் பற்றி பல்வேறான கவிதைகளும் கதைகளும் இங்குள்ளன. என்ன காரணத்தாலோ இவற்றிற்கெல்லாம் பின்புலமாக விளங்கும் நம் தந்தையரைப் பற்றிய பாடல்களும் கவிதைகளும் மிகக்குறைவே! அப்பாக்களின் அன்பும் பாசமும் காலச் சுழற்சியில் மறைந்துவிடுகின்றன.

பிறந்த குழந்தை தன் அம்மாவின் பாலை ருசிக்கும் போது அவள் முழுமையடைவதாகச் சொல்கிறது இவ்வுலகம். என்ன காரணத்தினாலோ அவ்விறைவன் தந்தையருக்கு கருவறையையும் பால் சுரக்கும் பேறையும் அளிக்காமல் தானும் ஒரு ஆணாதிக்கவாதியாக நிற்கிறான். இதுவும் ஆண்களுக்கெதிரான இறைவனின் ஓரவஞ்சனை அல்லவா?

குழந்தை தவழத் தொடங்கும் பொழுது தரையில் விழும் நொடியில் தாங்கிக் கொள்ள முனைபவள் அம்மா. அய்யோ என் செல்லத்திற்கு எங்காவது அடி பட்டுவிட்டதா என்று தேடி அழுவாள். ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் உடனே அப்பா சொல்வார் - `அவனைத் தூக்காதே, இரண்டு மூணுதடவ விழுந்தாதான் தவழ்ந்து பழகுவான்` என்று. அம்மா நினைப்பாள் `என்ன மனுஷன் இவர், புள்ள கீழ விழுந்திருச்சு கொஞ்சம் கூட பாசமே இல்லாம பேசராரு, நீ அம்மாகிட்ட வாடா செல்லம்` என்றழைத்துக் கட்டியணைத்துக் கொஞ்சுவது அம்மாக்களின் இயல்பு.

இதுபோன்ற அப்பாக்களின் செயல்களுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கும். வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் துன்பங்களும் இடர்களும் மாறி மாறி வரும், எனவே இதுபோன்ற நிலைகளில் மனதை தளரவிடாமல் வலிகளைத் தாங்கித் திரும்பத் திரும்ப முயற்சி செய்தால் மட்டுமே நம் இலக்கை அடைய முடியும் என்பதை உணர்த்துவதற்காக செய்யும் செயலாக இருக்கும். அனைவரும் உறங்கிய பிறகு யாருக்கும் தெரியாமல் பிள்ளை விழுந்த இடத்தில் தடவிப்பார்த்துவிட்டு வருத்தப்படும் அவன் தான் நம் அப்பா!

இதே நிலைதான் பின் மிதிவண்டி பயிலும் நாட்களில் கீழே விழுந்து கிடக்கும் பிள்ளையை பார்க்கும் அம்மா, அப்பாக்களின் செயல். அம்மாவின் அன்பு இது சரியா? தவறா? என்பதையெல்லாம் யோசிப்பதில்லை. பிள்ளைக்கு வலிக்குமே என்ற ஏக்கம் தான் இருக்கும். இப்படி ஒவ்வொரு நிலையிலும் அம்மாக்களுக்குத் தங்கள் பிள்ளையின் மேலிருக்கும் அன்பு மாறவே மாறாது. கீழே விழுந்தா பரவாயில்லை, இன்னும் கொஞ்சம் முயற்சி செய், நிச்சயம் வெற்றி பெறுவாய் என்பது தந்தையின் பாசம்.

அம்மாவிற்கு பிள்ளையிடம் ஒரே ஒரு முகம் மட்டுமே இருக்கும், ஆனால் அப்பாவிற்கு பல முகங்கள் இருக்கும். உள்ளேயிருக்கும் அன்பை வெளிக்காட்டாமல் துக்கப்படும் அப்பாக்களின் தியாகமே அப்பிள்ளைகளின் வளர்ச்சிக்குத் துணையாய் நிற்கும். நம் அப்பாக்கள் பலரும் உணர்ச்சியை அடக்கி அவற்றின் கலவையாய் இருப்பர் (Emotional mixture & non-expresssive).

இங்குள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் அவர்களின் அப்பாதான் கதாநாயகன். அவரிடமிருந்தே பலவற்றையும் கற்கத் தொடங்குகிறோம். அப்பாவின் முதல் எழுத்தை நம் பெயருடன் இணைத்தெழுதும் நாமனைவரும் பாக்கியசாலிகள். பிள்ளைகளின் வளர்ச்சியில் ஆனந்தமடையும் முதல் ஜீவனும் அவரே. ஒவ்வொரு அப்பாக்களின் உழைப்பும் அவர்களின் பொருளாதாரமும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை நன்கு அமைப்பதிலேயே இருக்கும்.

பிள்ளைகள் வாழ்வில் பயணிக்கும்போது அவர்களின் வழி நெடுக வரும் கற்களையும் முட்களையும் அகற்றுவதில் தான் அவர்களின் வாழ்க்கையையே செலவழிக்கிறார்கள். தனக்கென்று அவர்கள் எதுவும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை, பிள்ளைகளின் படிப்பு, வளர்ச்சி என்று அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய நோக்கிலே தங்கள் இளமையையும், இன்பத்தையும் விட்டுக் கொடுக்கின்றனர்.

பிள்ளைகளின் சுதந்திரத்திற்காகவும், அவர்களின் சுகத்திற்காகவும், கல்விக்காகவும் தன் நிம்மதியைத் தொலைத்து, அவமானங்களை ஏற்று உடல், மனச்சோர்வடையும் அப்பாக்கள் போற்றப் படவேண்டியவர்கள். அம்மாவின் அன்பை அவள் முத்தத்திலும், கண்ணீரும் காணலாம், ஆனால் அப்பாவின் அன்பை அவரின் கண்களிலும், அவரின் கை நம் தோல்மீது வைத்து அழுத்தும்போதும் உணரலாம்.

அணைத்துத் தூங்க வைப்பவள் அம்மா; தூங்கிய பிள்ளைக்குத் தெரியாமல் பிள்ளையின் பாதத்தில் முத்தமிட்டு தன் கண்ணீரை மனதில் சிந்துபவன் அப்பா! உள்ளத்து உணர்வுகளை மறைத்து அவற்றை வெளிக்காட்டாமல் நம்முன் கண்டிப்பாய் நடக்கும் ஒரு ஜீவன்தான் நம் அப்பா!

பிள்ளையின் ஆனந்தத்தில் தன் தூக்கத்தையும், வலிகளையும் தொலைத்து, காலைப் பேருந்தில் நிற்க இடமில்லாமல், நெடுதூரம் பயணித்து வேலை செய்துவிட்டு, பிள்ளை உறங்கும் நேரத்தில் சத்தமில்லாமல் வீட்டிற்கு வந்து, தூங்கும் மகனின் தலைமுடியை வருடும் தியாகிதான் நம் அப்பா!

அந்தப் பிள்ளைகள் வேலைக்குச் சேர்ந்து, நண்பர்களுடன் சந்தோசமாக சினிமாக்களிலும் பொழுதுபோக்குகளிலும் உறைந்து, பெற்றோரை மறந்திருக்கும் தருணங்களில்- `பாவம் ரொம்ப வேலை போலிருக்கு அதனாலதான் ஃபோன் பண்ணமுடியலைன்னு உங்கிட்ட சொல்லச் சொன்னான்` என்று மனைவியிடம் பொய்யுரைப்பவனே நம் அப்பா!

வலிகளையும், வேதனைகளையும் செய்வதறியாது கண்ணீராகக் கொட்டுபவள் அம்மா; அவ்வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு வயோதிகத்தில் அமைதியாய் பிள்ளைகள் முன் எதுவும் சொல்லாமல் பாசத்திற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கி நிற்கும் ஒரு குழந்தைபோல நிற்பவர்தான் நம் அப்பா!

இப்படி பிள்ளைகளின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து, ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வாரத்திற்கு ஒரு முறையாவது ஃபோன் பண்ணிப் பேசுவான் என்று வலிகளைத் தாங்கி விழி பார்த்து நிற்பவன் தான் நம் அப்பா!

வாழ்வின் பல நிலைகளில் அப்பாக்கள் தான் பிள்ளைகளுக்கு ஆசானாக இருக்கிறார்கள். பிள்ளைகளின் கற்றல் என்பது அவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே நம் வீட்டினுள்ளேயே ஆரம்பமாகிறது.

பிள்ளைகள் அப்பாக்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்களில் சில:
-  
நேர்மை
அமைதி
நியாகக் கோபம்
விடா முயற்சி
நேரம் தவறாமை
பிறரை துன்புறுத்தாதே
பயப்படாமல் தைரியமாக இருப்பது
பணத்திற்காக எதுவும் செய்யக்கூடாது
பணியை நிறைவுடன் செய்வது
சோர்வடையாமல் தன்னம்பிக்கையோடு இருப்பது
வலிகளைத் தாங்குவது
தோல்வியைக் கண்டு கலங்காமலிருப்பது
சகிப்புத்தன்மை
பழி பாவங்கள் செய்யக் கூடாது
தவறைத் தட்டிக் கேட்கவேண்டும்
இதனால் தான் நம் அப்பாக்கள் நமக்கு முதல் ஆசானாக இருக்கிறார்கள்.
அப்பாக்களின் மன அறையிலிருக்கும் பூட்டு என்றும் திறப்பதேயில்லை. அதனை திறந்து பார்ப்பதும் அவசியமற்றது – அவ்வறையினுள் இருப்பது கண்ணீரும் வலிகளுமே! அப்பாவின் அன்பும் தாயின் கருவறையைப் போன்றது தான்; ஆனால் ஒரே ஒரு வித்தியாசம், அக்கருவறையிலிருக்கும் அன்பு, பாசம் என்ற குழந்தை பிரசவிப்பதே இல்லை. அது தன் பிள்ளைகளின் ஆனந்தத்தைப் பார்த்துப் பார்த்து கருவறையினுள்ளே அழிந்துபோகும்.

இப்படி அப்பாவின் நிழலில் வளரும் பிள்ளைகள், பின்னாளில் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்பது எவ்வளவு கொடுமையானது! கல்வியையும், நற்பண்புகளையும் கற்றுக் கொடுத்து, நாமே கதி என்றிருந்தவர்களுக்கு இதுதான் நாம் செய்யும் கடமையா? என்னவொருக் கோழைத்தனம், இது மனிதத் தன்மையற்ற செயல். இக்காரியத்தைச் செய்யும் எவரும் வெட்கித்தலை குனியவேண்டும். அவர்களுக்கு இப்பிறவியில் மட்டுமல்ல எப்பிறவியிலும் நிம்மதி வராது.

அம்மாவின் கண்ணீரையும், தந்தையின் தியாகத்தையும் இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு பிள்ளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

சில நேரங்களில் என் மனைவி சொல்வது – நான் செய்யும் ஒவ்வொரு செயலும் என் அப்பாவை பிரதிபலிப்பதாகத் தோன்றுவதாகக் கூறுவார். என் பிள்ளையிடம் கண்டிப்பைக் காட்டும் பொழுதும், என்னுடைய நடை, பேச்சு என்று சொல்லும்போது ஆனந்தமாக இருக்கும். அவராக நான் மாறும் தருணங்கள் தரும் நிம்மதியும் சந்தோஷமும் எண்ணிலடங்கா! அதை என்னென்று சொல்வது!

என் அப்பா எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கவில்லை, மாறாக அப்படியே வாழ்ந்து காட்டினார். அவரது அலுவலக நண்பர்கள் பலரும் சொல்லிக் கேள்விப்பட்டதுண்டு - `என்னய்யா இப்படி அரசு வேலையிலிருந்துவிட்டு பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கிறே`. அதற்கு அப்பா சொல்லும் ஒரே பதில் `பிள்ளைகளுக்காகப் பெரிய சொத்துச் சேர்த்து வைக்காவிடிலும் பழி பாவங்களைச் சேர்த்து வைக்க மனமில்லை` என்பதுதான். இன்றும் அவரது வெள்ளைச் சட்டையில் பாக்கெட் வைத்துக் கொள்ளாமல், நேர்மையாக இருக்கிறார். அவருக்கு மகனாகப் பிறந்ததே நான் செய்த பாக்கியமாகக் கருதுகிறேன்.

அவரிடமிருந்த அனைத்தையும் எனக்காகக் கொடுத்துள்ளார்; பெரிதாக   ஆசையொன்றுமில்லை, என் அப்பாவிடம் கேட்கும் வரம் இதுவே - இப்பிறவியைப் போல் எப்பிறவியிலும் என் பெற்றோருக்கே நான் பிள்ளையாகப் பிறக்க வேண்டுமென்பதே!
   
என்னிடம் அவர் அடிக்கடிக் கூறும் வார்த்தைகள்;
எல்லாம் சரியாப் போகும்
நான் இருக்கேன்
நல்லதே நடக்கும்
உடம்பைப் பார்த்துக்கொள்
உன் மேலே நம்பிக்கை இருக்கு, நீ நல்லா வருவே
பிள்ளையையும் மனைவியையும் நல்லா பார்த்துக்கொள்
என் தந்தையைப் பற்றி எழுத எவ்வளவோ உள்ளது, பின்னொரு பதிவில்      அவற்றை எழுத முனைகிறேன்.

 என்னைப் பொறுத்தவரையில் அம்மாவின் பாசமும், அப்பாவின் தியாகமும் போற்றப்பட வேண்டியவை. அவர்களின் கண்ணீரும் தியாகமும் தான் நம்மை நன்னிலையில் வாழ உதவும். நம்மை வாழ்வின் ஒவ்வொரு சோகத்திலுமிருந்தும் காப்பது நம் பெற்றோர்கள் செய்த புண்ணியமும், நற்பலனுமேயாகும்.

  இதுபோன்ற அப்பாக்களின் தியாகங்களுக்கு எனது வணக்கத்தைச் சமர்பிக்கிறேன்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்படைப்பாளுமை கருத்தரங்கம் நடந்தது.

உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்  படைப்பாளுமை க கருத்தரங்கம்  கிளை நூலகம் எண் இரண்டில் நடந்தது. நூலக வாசகர் வட்டம் உடுமலை தமிழர் கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய கருத்தரங்கிங்கில்  உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் பொருப்பாளர் அருட்செல்வன் வரவேற்றார்.

நூலக வாசகர் வட்ட தலைவர் இ.இளமுருகு தலைமை வகித்தார்.
வாசகர் வட்ட ஆலோசகர் எம்பி அய்யப்பன்
துணைத்தலைவர் வி.கே சிவக்குமார்
பொருளாளர் சிவக்குமார்
ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

முனைவர் மஞ்சுளாதேவி சஞ்சாரம் நூல் குறித்து மதிப்புரை வழங்கினார்.

எஸ் இராம கிருஷ்ணன் நாவல்கள்பற்றி கணியூர்பருக்
.
இராமகிருஷ்ணன் எழுத்துஎன்ற தலைப்பில்அரசு கலைக்கல்லூரி வரலாற்றுதுறை உதவி பேராசிரியர்.முனைவர் மதியழகன்.

இராம கிருஷ்ணன் பேச்சு என்ற தலைப்பில்ஊட்டி அரசு கலைக்கல்லூரிதமிழ்த்துறை உதவிபேராசிரியமுனைவர் ஜெயசிங்

இராமகிருஷ்ணணன் இலக்கியம் என்ற தலைப்பில் அப்துல் சமது

ஆகியோர் கலந்துகொண்டு கருத்தரங்கம் நடத்தினர்.
எழுத்தாளர் சீனிமோகன் பேராசிரியர் கண்டிமுத்துஉட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக நூலகர் கணேசன் நன்றி கூறினார்.

கருத்தரங்க ஏற்பாடுகளை நூலகர்கள் மகேந்திரன்செல்வராணி
அருள்மொழிமற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள்தமிழர் கலை இலக்கியப் பேரவையினர்செய்திருந்தனர்.


சனி, 15 டிசம்பர், 2018


உடுமலை வரலாறு is with கார்த்திக் நாயக்கர்  in Udumalaippettai.

வரலாற்றுக்கு ஒரு வரலாற்றுப்பரிசு..

உடுமலையின் கல்வியாளர், கல்வி வள்ளல், தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களை உருவாக்கி கல்விக் கண் திறந்திட்ட காமராசரின் மருவுருவாய் வாழ்ந்திட்ட வள்ளல் கெங்குசாமி நாயுடுவை வாழும்போதிருந்தே ஆவணப்படுத்திட்ட எழுத்தாளர்,

தளிபாளையப்பட்டு ராஜ்யத்தின் குமாரர் மண்ணின் மைந்தர் ஜிலேபநாயக்கன்பாளையம் அய்யா குமாரராசாவிற்கு

இன்று உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தால் வெளியிடப்பட்ட தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் எனும் நூலை இன்று பரிசளிக்கப்பட்டது.

இத்துடன் அய்யா அவர்கள் விரும்பிக்கேட்ட ஆய்வு நடுவத்தால் வெளியிடப்பட்ட தளி எத்தலப்பரின் திருமூர்த்தி மலை மண்ணு பாடலின் குறுந்தகடையும் விரும்பிப் பெற்றுக் கொண்டார்.

உடுமலைப்பேட்டை வரலாற்றின் தேவையையும் திருமூர்த்தி மலை மண்ணின் மகத்துவத்தையும், கடந்த காலங்களில் உடுமலையைச் சுற்றி நடந்த சம்பவங்களையும் மிகவும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தலைமைச் செயலகத்தில் பத்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தையும், தி.மு.க தலைவர் கலைஞருடான தம் அனுபவத்தையும்,

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தலைமை அலுவலகத்தில் பணியாற்றியபோது திரு.ஆற்காடு வீராசாமியுடன் பணியாற்றிய அனுபவத்தையும்,

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் அலுவலகத்தில் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களையும் தம்முடன் பகிர்ந்து கொண்டார்.

செவ்வாய், 11 டிசம்பர், 2018



எதிர்வரும் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை 
உடுமலை உழவர் சந்தை எதிர் அருகில் உள்ள 
கிளை எண் 2 நூலகத்தில் 
சாகித்ய அகாடமி விருது பெற்ற 

‘சாதனை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்பாளுமை”

எனும் தலைப்பில் கருத்தரங்கம் பிற்பகல் 4. -6 மணி வரை நடைபெற உள்ளது.

இதற்கு நூலக வாசகர் வட்டத்தின் 
தலைவர் து.இளமுருகு தலைமை வகிக்கிறார்.
நூலக வாசகர் வட்டத்தின் ஆலோசகர் திரு.எம்.பி.அய்யப்பன், 
திரு.வி.கே.சிவகுமார், 
திரு.ராமதாஸ், 
திரு.சிவகுமார் மற்றும் 

நூலக வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

‘சாகித்ய அகாடமி விருது பெற்ற சஞ்சாரம்” நூல் குறித்து முனைவர் ஜெ.மஞ்சுளாதேவி அவர்களும்,

‘எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல்கள்” எனும் தலைப்பில் பத்திரிகையாளர் கணியூர் பருக் அவர்களும்

‘எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து” எனும் தலைப்பில் முனைவர் மதியழகன் அவர்களும்,

‘எஸ்.ராமகிருஷ்ணனின் பேச்சு”எனும் தலைப்பில் முனைவர் ஜெயசிங் அவர்களும்,

‘எஸ்.ராமகிருஷ்ணனின் கவிதை”எனும் தலைப்பில் கவிஞர் அப்துல் சமது அவர்களும்,
கருத்துரை வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்வின் இறுதியாக நூலகர் திரு.வீ.கணேசன் அவர்கள் நன்றி உரை கூறுகிறார்.

இந்த நிகழ்வை நூலக வாசகர் வட்டத்தோடு தமிழர் கலை இலக்கியப் பேரவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

உடுமலையின் இலக்கிய ஆர்வலர்கள் , வாசிப்பை நேசிக்கும் அன்புள்ளங்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.

திங்கள், 10 டிசம்பர், 2018


Sivakumar Kumar is celebrating a birthday with Srinivasan Asokan in South Korea.
ஸ்ரீனிவாசன் அசோகன் ...அண்ணனுக்கு என் இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்
கம்பளசமுதாய வளரும் சொந்தங்களின் வளர்ச்சியில் அதிகம் அக்கறைகொண்டு ..தன்னால் இயன்ற அளவு ...கல்வி ..வேலைவாய்ப்பு நேரம் ..காலம் சமுதாயப்பணியாற்றி வருவது மகிழ்ச்சி ..கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் வழிகாட்டி ...மிக சிறந்த ஆலோசகர் ...வளரும் தலைமுறை கம்பள சொந்தங்களின் மீது மிகவும் அக்கறை கொண்டவர் ..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681.
Sivakumar Kumar is in Ettaiyapuram.

December 10

எட்டயபுரத்து கவிராஜன் முண்டாசு கவி பாரதி பிறந்தநாள்

சிறுவயதிலேயே தாய்நாட்டின் விடுதலைக்காக தன் கவிதை முழக்கத்தால் முழங்கிய வீரக் கவிஞன் நம் பாரதியார். அப்படிப்பட்ட கவிஞனின் பிறந்தநாளை தமிழர்கள் கொண்டாட வேண்டாமா?

நம் தமிழ் நாட்டில் இப்பொழுது சினிமா நடிகர்களின் பிறந்த நாளும், அரசியல்வாதிகளின் பிறந்தநாள்களும் தான் கொண்டாடப் படுகிறது. எந்த தியோட்டர்களில் யார் படம் ஓடுகிறதோ அந்த நடிகர்களின் கட் அவுட்களும் பேனர்களும் தான் காண முடிகிறது. அதுமட்டுமல்லாமல் பால் அபிஷேகம் வேற. வீட்டில் தன் குழந்தைக்கு பால் வாங்க பணம் தரவில்லை என்றாலும் தனக்கு பிடித்த நடிகர்களின் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்ய வில்லை என்றால் தூக்கம் வராது போல. ஒரு தலைவருக்குகோ, ஒரு நடிகருக்கோ ரசிகனாக இருப்பதில் தவறில்லை அடிமையாக மாறிவிடக் கூடாது. ஆனால் இன்று அப்படித்தான் நடக்கிறது நம் தமிழ் நாட்டில். இந்த நிலை எப்போது மாறுகிறதோ அப்போது தமிழ் நாடும் தமிழ் மக்களும் முன்னேறுவார்கள்.

கவிதை எழுதுபவன் கவியன்று கவிதையே வாழ்க்கையாக உடையவன,;
வாழ்க்கையே கவிதையாக செய்தோன் அவனே கவி….

அவர்தான் சுப்பிரமணிய பாரதி….

1882 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ம் திகதி இந்தியாவின் எட்டயபுரத்தில்  சின்ன சுவாமி ஐயருக்கும் லக்ஸ்மி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார் சுப்பையா என அழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி சுப்பையா தனது 11ம் வயதில் பள்ளியில் படித்துவரும் போது கவிப்புயம் ஆற்றலை வெளிப்படுத்தினார். பிற்காலத்தில் ஒரு கவிஞராக எழுத்தாளராக பத்திரிகை ஆசிரியராக விடுதலை வீரராக சமூக சீர்திருத்தவாதியாக தனது பரிமாணங்களை வகுத்துகொண்டவர் சுப்பிரமணிய பாரதி. தமிழில் கவிதை மற்றும் உரைநடையில் தன்நிகரற்ற பேரறிவாளர் தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். அவர் மகாத்மா காந்தி பாலகங்காதர திலக உ.வே.சு ஐயர் சிதம்பரபிள்ளை மற்றும் மகான் அறவிந்தர் ஆகியோர் வாழ்ந்த இந்திய வரலாற்றில் திருப்பு முனையான காலப்பகுதியில் வாழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதி தமிழர் நலன் இந்திய விடுதலை பெண் விடுதலை சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து அவர் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் எனினும் அவரின் கவித்திறனை பாராட்டி எட்டயபுர அரச சபையால் அவருக்கு பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. சுப்பிரமணிய பாரதி சுப்பையா, பாரதியார், சக்திதாசன், மகாகவி, புதுக்கவிதை புலவன், கவிஞாயிறு என பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். பாரதி தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம், வங்காளம், ஹிந்தி, பிரன்ச் போன்ற மொழிகளில் தனிப்புலமை பெற்றவர் அம்மொழிகளில் தனிச்சிறப்பு மிக்க படைப்புக்களை தமிழ் மொழியாக்கம் செய்தவர் சுப்பிரமணியம் பாரதி. பலமொழிகளில் தனிபுலமை பெற்றிருந்தாலும் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என கவி புனைந்தார் கவி ஞாயிறு பாரதி. பழந்தமிழ் காவியங்களின் மீது தனிஈடுபாடு கொண்ட பாரதி அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் கொண்ட மாமேதையாவார். தேசிய கவி என்ற முறையிலும் உலகம் தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவித்திறனாலும் அவர் உலகில் தலை சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழ் தன்னிகரற்ற கவியேறு பாரதி, குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், போன்ற படைப்புக்கள் பாரதியின் தன்னிகரற்ற படைப்புக்களாகும். கவிஞராகயிருந்த பாரதி 1904 ம் ஆண்டு முதல் 1906 ம் ஆண்டு வரை பத்திரிகை ஆசிரியராக செயற்பட்டுள்ளார். பாரதி தாசனை முதன்மையாக கொண்டு கவி புனைந்த பாரதி பாடல்களின் இலக்கண கட்டுக்களை தகர்த்தெறிந்தார். இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல் பொருள்கொள் யாப்பு, அணி, என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதையே புனைந்தனர். இலக்கண சட்டங்களை தகர்த்தெறிந்த பாரதி புதுக்கவிதையென புகழப்படும் பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையையும் தமிழுக்கு தந்தவர் சுப்பிரமணியம் பாரதி மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என  பெண்கள் உரிமை தொடர்பிவ் குரல் கொடுத்த முதல் பெண் சுப்பிரமணிய பாரதியார்…. இந்திய நாட்டின் விடுதலைக்கென மக்களை தெளிவு படுத்தும் பல கவிதைகளை புனைந்துள்ள சுப்பிரமணிய பாரதி தேசிய கவியாக போற்றப்பட்டார். 1897 ம் ஆண்டு செல்லம்மா என்பவரை மணந்த சுப்பிரமணிய பாரதி 1898 ம் ஆண்டு தொழில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையை அடைந்தார். அதனைத் தொடர்ந்து எட்டயபுரம் அரண்மனையில் பணிபுரிந்த அவர் சில காலங்களில் எட்டயபுரத்தை விட்டு காசிக்கு சென்றார். பின்னர்; மீண்டும் எட்டயபுரத்து மன்னனால் பாரதி அழைக்கப்பட்டு 1898 ம் ஆண்டு முதல் 1902 ம் ஆண்டு வரை பாரதி அரண்மனையில் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளராக பணிபுரிந்த சுப்பிரமணிய பாரதி இந்தியாவில் ஆலயமொன்றிற்கு வழிபாட்டிற்காக சென்ற அவர் யானை தாக்கியதால் சுகயீனத்துக்குள்ளாகிய நிலையில் கடந்த 1921 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் திகதி தனது 39 ம் வயதில் இறையடிசேர்ந்தார். பாரதியின்; புதுமையை சொல்லும் வகையில் எடுக்கப்பட்டு கடந்த 2000 ம் ஆண்டு வெளிவந்த பாரதி திரைப்படம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினையும் பெற்றது. மேலும் இன்றும் சிறுவர் முதல் பெரியோர் வரை பாரதியின் கவிதைகளையும் பாடல்களையும் படித்து ரசிக்காதவர்கள் சிந்தையைத் தூண்டாதவர்கள் இருக்க முடியாதென்பது மகா கவி பாரதியின் பெருமையை எடுத்தியம்புகிறது, தமிழ் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் புதுமைகள் பலசெய்து பாமர மக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் தமது படைப்புக்களை வெளிக்கொணர்ந்து மக்கள் மனதில் சிந்தனை எண்ணத்தை தூற்றிவிட்;ட மகாகவி சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழியில் என்றும் அணையா விளக்கு…

"தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அளித்திடுவோம்" என்று பாடிய பாரதியார் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம். பாரதியார் போன்ற தேசத்திற்குகாகப் பாடுபட்ட தலைவர்களைப் பற்றி நமது தலைமுறைக்கு சொல்லி கொடுப்போம் . போற்றி வணங்குவோம்.

வாசகர் வட்டம் ..கிளை நூலகம் -2
உழவர் சந்தை எதிரில்
உடுமலைப்பேட்டை ..

ஞாயிறு, 9 டிசம்பர், 2018


MCC ...Blood Donors ..🌱🌱.மானுப்பட்டி ..👍👍👍🌷🌷🌷
தம்பி போட்டோ ராஜேந்திரன் 👏👏🤝🤝நேற்றுலிருந்தே ..என்னை நாளை மதியம் ஒரு கலந்தாய்வு கூட்டத்திற்கு செல்ல வேண்டும் .அண்ணா ....வாருங்கள் ..என்று சொல்லிக்கொண்டே இருந்தார் ..தம்பி தேவை இல்லாமல் யாரையும் தம்பி அழைக்கமாட்டார் ...ஏன் என்றால் ..அவர்களின் பணிக்கு தொந்தரவு தரக்கூடாது என்று விரும்புபவர் ..நேரத்தையும் ..காலத்தையும் வீணாக்க விரும்புவதில்லை ..தம்பி அழைத்தவுடன் ..இன்று நான் கலந்துகொள்ளும் குடும்ப நிகழ்ச்சிகள் ..நேர்காணல்கள் ..நான் சந்திக்கவேண்டிய நண்பர்களை ..இந்த கலந்தாய்வு கூட்டம் ரத்த தானம் ..MCC ...Blood Donors ...மானுப்பட்டி ..என்று இன்று மதியம் தான் சொன்னார்..இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு என்னுடைய நேரத்தை செலவழிப்பதில் தவறில்லை ..என்று இந்த கூட்டத்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சி ...இதற்கு முன்னர் ..இந்த ரத்த தான நண்பர்களை பற்றி அதிகம் முகநூலில்  அறிந்து உள்ளேன் ..இன்று இந்த கலந்தாய்வு கூட்டம் எனக்கு தேவையான கூட்டம் ...இந்த ரத்த கொடையாளர்கள் ..என்னிடம் கேட்டவர்களுக்கு இந்த குரூப்பில் உள்ள நண்பர்கள் மூலம் பயனடைந்து உள்ளனர் ..எத்தனையோ பணிகளுக்கிடையே ..மகத்தான பணிகளை செய்வது ..அதுவும் ..வளரும் இளைய சொந்தங்கள் இந்த சேவையை செய்வது கேட்டு ..பார்த்து  மகிழ்ச்சிக்கே அளவே இல்லை ..அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .. இந்த குழுவில் என்னையும் சேர்த்துக்கு மிக்க நன்றி ..வரும் நிகழ்வுகள் ..ரத்த தானம் கேட்க்கும் பயனர்களுக்கு மிக உதவியாக உள்ளோம் ...எனக்கு தெரிந்த ரத்த தானம் பற்றி சிறு தொகுப்பு தருகிறேன் ..

"ஆயுளைக்கூட்டும் இரத்ததானம் "
நாம் கொடுக்கும் ரத்த தானத்தால் பிறரது உயிர் காக்கப்படுவது மட்டுமல்லாமல் நமது உடலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது. ரத்த தானம் கொடுப்பதால் உடல் புத்துணர்ச்சியாகிறது. உடல் மட்டுமல்லாது ரத்த சிவப்பணுக்களும் புத்துணர்ச்சியடைகிறது. ரத்த தானம் கொடுப்பதால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கலாம் என்று ஆய்வில் உறுதியாக கூறப்படுகிறது.

மிகவும் எளிதில் கிடைக்கூடிய, அனைவராலும் கொடுக்ககூடிய ஒன்று "ரத்த தானம்". ஒருவர் ரத்த தானம் செய்தால் மீண்டும் புதிதாக ரத்த அணுக்கள் உடலில் உற்பத்தியாகும். ரத்த தானம் செய்தால் ஆயுள் கூடும் என்று ஆய்வில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் மறுசுழர்ச்சி செய்யப்படுகிறது, இதனால் உடல் புத்துணர்ச்சி பெறும். ரத்த தானம் செய்வதால் கார்பன் டை ஆக்ஸைடு நீங்கவும் உதவுகிறது. ஒருமுறை ரத்த தானம் செய்தால் 650 கலோரி செலவாகும். அதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கும்.
யாரெல்லாம் இரத்ததானம் செய்யலாம்?:
18 முதல் 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் இரத்ததானம் செய்யலாம்.நம் ஒவ்வொருவருடையை உடலிலும் சுமார் 5 லிட்டர் இரத்தம் உள்ளது.
இதில் இரத்த தானத்தின்போது எடுக்கப்படும் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் மட்டுமே.

நாம் தானம் செய்யும் இரத்தம் 350 மில்லி லிட்டர் இரத்தம் 24 மணி நேரத்திற்குள்ளாக நமது உடலில் மீண்டும் உற்பத்தியாகி விடும்.

இரத்ததானம் செய்பவரின் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு மேல் இருக்க வேண்டும்.

இரத்ததானம் செய்பவரின் எடை 45 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும்.

இரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம்.இரத்ததானம் செய்ய இருபது நிமிடங்களே ஆகும்.
இரத்ததானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம்..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681.
உடுமலைப்பேட்டை 👍👍👍🌷🌷🤝🤝

சனி, 8 டிசம்பர், 2018


Sivakumar Kumar is celebrating a birthday with கார்த்திக் நாயக்கர் in Udumalaippettai.
December 9,
உடுமலைப்பேட்டை நமது மாப்பிள்ளை ..C .மனோகருக்கு அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..மாப்பிள்ளை மனோகர் ..படித்தது உடுமலைப்பேட்டை ருத்திர வேணி பாலிடெக்னிக்கில் இயந்திரவியல் படித்து ..தன் சுயசார்புடன் தற்பொழுது
CM Engine service.... என்ற நிறுவனத்தை தொடங்கி ...நல்லமுறையில் தமிழ்நாடு ,கேரள ,கர்நாடக ஆகியபகுதிகளில் சென்று நல்லமுறையில் பணிசெய்து கொண்டுள்ளார் ...நம் கம்பள சமுதாயத்தில் தொழில்முனைவோரக இருப்பது நமக்கு பெருமையும் கூட ...நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையில் உறுப்பினர் ...நம் இளைய சொந்தங்களுக்கு தொழில் தொடங்கவோருக்கு ஒரு முன்னோடியாக வழிகாட்டுவார் ....
15 kva to 750 kva kirloskar engine top overhauling.
Full overhauling.complaint .break down .oilservice.+alternator .electrical work. +jcb engine service only .
Service Engineer...Mr.Manoharan
Contact Number-9865024743 ...என் இனிய மனோகர் மாப்பிள்ளைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
kambalavirucham.in,
manamangalyam.in,
https://sivashyamsassociates.com


வெள்ளி, 7 டிசம்பர், 2018

Ullaallaa Lyric Video – Petta | Superstar Rajinikanth | Sun Pictures | K...

உடுமலைப்பேட்டை ...நகரம் ..உடுமலை சுற்றி 57 கிராமங்களில் கம்பள சொந்தங்கள்

என் அருமை தம்பி...சேலம் பாறைப்பட்டி ..சக்திவேல்  தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

தம்பியை முதன் முதலில் சேலத்தில் பணிபுரிந்த பொழுது ...மேச்சேரி மாப்பிளை விஜய்யை சந்தித்துவிட்டு ...சக்தி தம்பியை அறிமுகம் செய்துவைத்தார் ..சேலத்தில் இருந்து பாறைப்பட்டி செல்லும் பொழுது ..வழிகேட்டு பாறைப்பட்டி சேர்ந்தவுடன் தம்பியின் உபசரிப்பு பிரமாதம் ...என்ன தம்பியின் தாத்தா தான் என்னை எந்த ஊர் ..என்ன குலம் ...உங்க ஊரின் மந்தை பற்றி கேட்டார் ..எனக்கு தெரிந்தது எல்லாம் ..தளி ஜல்லிபட்டி மந்தை தான் தெரியும் (புரியும் என்று நினைக்கிறன் )மந்தை என்ற வார்தை அப்பொழுது தான் நான் அறிகிறேன் ..எப்படியோ ..போட்டோ ராஜேந்திரன் தம்பி ..நம்ம ஊரு மந்தை தொப்பை நாயகன் மந்தை என்று சொன்னது நினைவுக்கு வந்தது ..நேனு .தொப்பை நாயக்கன் என்று சரியாக சொல்லி தப்பித்தேன் ..இல்லை என்றால் குடிக்க தண்ணீர் கிடைத்து இருக்காது ..குலமும் ..நான் குஜ்ஜ பொம்மு என்று தையறியமாக சொல்லி தப்பித்தேன் ..சகதிவேல் தம்பியின் தாத்தா அவர்கள்  நம் உடுமலை சொந்தங்களை கேட்டு தெரிந்துகொண்டார் ..தம்பியும் இன்னும் பல சொந்தங்களை அறிமுகம் செய்து வைத்தார் ..அப்படியான சேர்த்த சொந்தங்கள் அதிகரித்துக்கொண்டே உள்ளது ..உடுமலை டு பாறைப்பட்டி சொந்தங்களின் இணைப்பு ...பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி சகதிவேல் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681,,
குறிப்பு :.எப்பவும் ..நம்ம பாலமன்னா மாப்பிள்ளைகள் தான் கண்ணுக்கு குளிர்ச்சியா இருப்பார்கள் ..எப்படி ..குஜ்ஜ பொம்மு தம்பி மட்டும் விதிவிலக்கா இருக்கிறாரே ..

செவ்வாய், 4 டிசம்பர், 2018



இன்று நான் சந்தித்த தம்பி .....சக்தி பாலாஜி

தம்பி பெயர் சக்தி பாலாஜி ...பெயர் க்கு ஏற்றார் போல் உடலுக்கு தேவையான ஊட்டசக்தி ...பால் வியாபாரத்தில் உடுமலையில் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் ...தம்பியின் சொந்த ஊர் தேனீ ..மரிக்குண்டு..தாய்தந்தையர் பிறந்த ஊர் ..கடந்த 20 வருடங்களுக்கு முன் உடுமலை போடிபட்டியில் வசித்து வந்தனர் ..அங்கிருந்து பெரியகோட்டை பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேல் ..RVS பால்பண்ணை .தன தந்தையின் உழைப்பால் தொழிலை கற்றுக்கொண்டு இன்று ஒரு சிறிய பால்பண்ணை நிறுவனமாக மாற்றி ..அழகாக தொழில் வரி .வருமானவரி ..தாக்கல் செய்து ..தனது வியாபாரத்தை அடுத்தகட்ட  அழகா எடுத்துச்செல்கிறார் ..அதிகாலை 3 மணியளவில் தொடங்கி இவரது காலையில் 10 மணி வரையில் ..மாலை 4 மணிமுதல் இரவு 7மணிவரை காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு இந்த வியாபாரத்தின் அடிசுவடியை கற்றுக்கொண்டு வளர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி ..இன்று தம்பியை சந்தித்து பேசியது மகிழ்ச்சி .அடுத்தகட்ட வியபார திட்டங்களையும் ..அடுத்த கட்டத்திற்கு விரிவாக்கம் செய்வது குறித்து பேசியதும் ..அருமை ..தம்பியின் வியாபாரம் ..இல்லங்களில் நடைபெறும் விசேஷ நிகழ்வுகளுக்கும் ..கடைகள் ..உணவகங்கள் ..ஆர்டரின் பேரில் சரியான நேரத்திற்கும் விநியோகம் செய்து வாடிக்கையாளர்கள் தேவையை நிறைவேற்றுவது அருமை ..தம்பி..கொடையணி பொம்மு ...இன்று படித்து அரசு வேலைக்குத்தான் செல்வேன் ..தனியார் கம்பனிக்கு தான் செல்வேன் என்று முயலும் காலத்தில் ..தான் ஒரு தொழில்முனைவோராக ஆர்வத்துடன் ..புது புது திட்டங்களுடன் செயல்படுத்தி முன்னேறிவருவது ..நம் கம்பள சொந்தங்களுக்கு ஒரு முன்னூதாரணமாகவும் ..வழிகாட்டியாகவும்  திகழ்வது நமக்கு பெருமையும் கூட ..வாழ்த்துக்கள் தம்பி சக்தி பாலாஜி ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

www.sivashyamsassociate.com,

திங்கள், 3 டிசம்பர், 2018

கிறிஸ்துமஸ் டிசம்பர் மாதத்தின் சிறப்பு ...

டிசம்பர் மாதத்திற்கு இருக்கும் இந்த சிறப்புகள் வேறு எந்த மாதத்திற்கும் கிடையாது தெரியுமா?

ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் இருக்கிறோம். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிற்கே டிசம்பர் என்பது ராசியில்லாத மாதமாகும். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் இயற்கை சீற்றங்களாலும், பல அசம்பாவிதங்களாலும் டிசம்பர் மாதம் என்றாலே நமக்குள் ஒரு அச்சம் பிறக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக சுனாமி,  வெள்ளம், அதேசமயம் உலகம் முழுவதும் இது விழாவிற்கான காலமாக கருதப்படுகிறது. 

ஏனெனில் இந்த மாதத்தில்தான் புனித இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி டிசம்பர் மாதத்தை சிறப்பானதாக காட்ட பல விஷயங்கள் உள்ளது. மற்ற மாதங்களுக்கு இல்லாத பல தனிச்சிறப்புகள் டிசம்பர் மாதத்திற்கு உள்ளது. அந்த சிறப்புகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

டிசம்பர் மாத்தின் அற்புதமான சிறப்பு என்னவென்றால் இந்த வார்த்தை தோன்றிய விதம்தான். டிசம்பர் என்னும் வார்த்தை இலத்தீன் வார்த்தையான டிசம் என்பதில் இருந்து தோன்றியது. அதன் அர்த்தம் என்னவெனில் 10 ஆகும். பண்டைய ரோமானிய நாட்காட்டியில் 10வது மாதம் டிசம் என குறிப்பிடப்பட்டது. 

ஆஸ்கார் விருது 

வருடம்தோறும் பல படங்கள் ஆஸ்கார் விருதை பெறுகிறது. ஆனால் ஒட்டுமொத்த சினிமா வரலாற்றிலும் மாதங்களின் பெயரை கொண்ட படங்களில் ஆஸ்கார் விருது வாங்கிய ஒரே மாதம் டிசம்பர் மட்டும்தான். அந்தத் படத்தின் பெயர் டிசம்பர் 7. இது ஜான் போர்டு என்பவரால் 1943ஆம் ஆண்டு பேர்ல் ஹார்பர் பற்றி எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படமாகும். 

பணம் புரளும் மாதம் 

ஆய்வுகளின் படி ஆண்டிலேயே டிசம்பர் மாதத்தில்தான் ஏடிஎம்-களில் இருந்து அதிகமாக பணம் எடுக்கப்படுகிறது. மற்ற மாதங்களில் எடுக்கப்படும் பணத்தை காட்டிலும் டிசம்பர் மாதத்தில் 3 மடங்கு அதிக பணம் எடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு பிரிட்டனில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 11 பில்லியன் பணம் எடுக்கப்படுகிறது. இதன்மூலம் டிசம்பர் மாதம் வியாபாரங்கள் அதிகம் நடக்கிறது என்பது தெளிவாகிறது. பிரிட்டனில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதே நிலைதான். 

ஆப்பிள் கடிகாரம் 

ஆப்பிள் நிறுவனத்தின் கடிகாரம் என்பது உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஒன்று. அந்நிறுவனத்தின் அறிக்கையின்படி வருடம்தோறும் டிசம்பர் மாதத்தில் அவர்களின் கடிகாரங்களின் விற்பனை இருமடங்கு அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி மற்ற நிறுவனங்களும் டிசம்பர் மாதத்தில் தங்களின் விற்பனை அதிகரிப்பதாக கூறியுள்ளனர். மற்ற மாதங்களை காட்டிலும் டிசம்பர் மாதத்தில் மக்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும், புதிய பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுவதாகவும் உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். 

மனித உரிமைகள் நாள் உலகம் முழுவதும் ஒடுக்கப்படும் மக்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் மனித உரிமைகள் தினம். 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகளை பாதுகாக்கும் நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது. 

இதன் மூலம் உலகின் பல மூலைகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் காப்பாற்றப்பட்டனர்.  

காதலுக்கு ஏற்ற மாதம் 
இது உங்களுக்கு அதிர்ச்சியானதாக இருக்கலாம் ஆனால் புள்ளி விவரங்களின் படி உலகம் முழுவதும் டிசம்பர் மாதத்தில் காதலை சொன்னவர்களுக்கு அதில் வெற்றிதான் கிடைத்துள்ளது. உங்களுக்கு திருமணம் செய்யவோ அல்லது உங்கள் காதலன்/காதலியிடம் காதலை சொல்லவோ விரும்பினால் அதற்கு மிகச்சிறந்த மாதம் டிசம்பர்தான். இந்த மாதத்தில் காதலை கூறும்போது " YES" சொல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. பெரும்பாலான காதல் முன்மொழிதல்கள் கிறிஸ்துமஸ் வாரத்தில்தான் நடக்கிறது.