வியாழன், 5 மார்ச், 2020

செல்வராகவனின் யாமினி!
செல்வராகவன் உருவாக்கிய கதாநாயகிகளில் 'யாமினி' தனித்துவமானவள். "அடிடா அவளை! வெட்றா அவளை! தேவையே இல்லை !"என்கிற பெண் வெறுப்பு மட்டுமே செல்வராகவன் இல்லை. மயக்கம் என்ன ? யாமினியை கூர்ந்து கவனித்தால், கார்த்திக்கையும் அவன் மீதான காதலையும் தவிர வேறு எதுவும் தெரியாது பராபரமேயென்று தீக்குள் விரல் வைப்பவள்.
எனக்கு வேற எதுவுமே தெரியாது என்று தன்னைச் சரணடைபவனை அவன் இயல்புகள் சீர்குலையாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் யாமினி ஒரு ஆழ்ந்த காதலின் அடையாளம். தான் நேசித்தவன் வாழ்வின் விரக்தியான சூழலுக்கு தள்ளப்பட்டு, போதைக்கும் மனபிறழ்விற்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் போது அவனைத் தாங்கிக்கொள்வதற்கு காதலை தாண்டிய ஒரு தாயுள்ளம் தேவை.மெளனங்களால் வெளிப்படுத்தப்படும் கோவங்கள் காதலிப்பவன் மீதிருக்கும் இன்னொரு நேசமென்று யாமினி உணர்த்தும் காதல் 'அக்மார்க்' செல்வராகவத்தனம்.

கார்த்திக் போன்ற இளைஞர்கள் லட்சியத்தில் தோல்வியுற்று தெருவிற்கு நாலுபேர் குப்புற கவிழ்ந்து கிடக்கிறார்கள். சமூகத்தில் கார்த்திக் போன்றவர்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால், அவர்களை தொட்டு தூக்கி தலையை தடவிக்கொடுத்து மடியில் போட்டு மருத்துவம் பார்க்கும் யாமினி போன்றோர் அத்தி பூத்தாற் போல் அபூர்வமாகத்தான் தென்படுகிறார்கள். ஒரு தோல்விக்கே துவண்டு, காதலித்தவள் மீது ப்ரியத்தை காட்டுவதற்கு கூட மனமில்லாமல், காதலிக்கு யாருமற்ற தனிமை உலகத்தை உருவாக்கும் கார்த்திக் மன்னிக்க முடியாதவன். அவனை எத்தருணத்திலும் கைவிடாத யாமினி தான் சிறப்புமிக்கவளாக உருவாகிறாள்! இறுதியாக ஒரு ஆண் வாழ்க்கையில் முதலாவதாக நுழைந்து முதலாவதாக வெளியேறுபவள் எவளும் யாமினி இல்லை. இறுதியாக நுழைந்து இறுதிவரையில் இருப்பவளே செல்வராகவனின் யாமினி.
என் யாமினியும் கூட..!

https://youtu.be/dX3G18CYibc

சேவையாட்டம்


சேவையாட்டம் - கம்பளத்துநாயக்கரால் ஆடப்படும் ஆட்டம் சேவையாட்டம் ஆகும்.சேவை என்றால் சேவித்தல், வணங்குதல் என்று பொருள்படும்.இறைவனை ஆட்டத்தின் மூலமாக வணங்குவதால் இது சேவையாட்டம்எனப்பட்டது. இராமாயணக் கதையைப் பாடலாகப் பாடிக்கொண்டுவிடியவிடிய இவ்ஆட்டம் ஆடப்படும். தேவதுந்தமி, சேவைப் பலகை,சேமக்கலம் ஆகிய இசைக்கருவிகள் ஆட்டத்தின் போதுபயன்படுத்தப் படும். சேவையாட்டக் கோமாளி பாடலைப்பாடி ஆட்டத்தைத் தொடங்க, ஏனைய ஆட்டக்காரர்கள் பின்பாட்டுப்பாடிவட்டமாக ஆடி வருவர். திருமால், பெருமாள், ரெங்கநாதர்ஆகிய தெய்வங்களின் வழிபாட்டில் சேவையாட்டம் தவறாது இடம்பெறுகிறது.
பெருமாள் கோவில்
தென் தமிழகம் மற்றும் கொங்கு நாடு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் இவ்வாட்டம் நடைபெறும் . சங்ககால நூல்களில் குறிப்பிடும் பிந்தேறு குருவை எனப்படும் ஆட்டதுக்கு சமமானதாக கருதபடுகிறது . தேவராட்டம் ஆடும் மக்கள் கடைசியாக இந்த சேவையாட்டம் ஆடுவார்கள் .இந்த ஆட்டத்தை ஆடுவதன் மூலம் தேவராட்டம் முழுமை பெறுகிறது என்பதை அறியலாம் .
வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் சேவையாட்டம் புகழ் பெற்றது . தெலுங்கு மொழியில் , தமிழ் மொழியில் பாட்டுகளை பாடி கொண்டு ஒருவர் இருப்பார் , உறுமி மேளம் இசைக்கும் , ராகத்தோடு பாடல் பாடும் பொழுது நையாண்டி வேஷம் போட்ட ஒருவர் சுற்றி சுற்றி வந்து ஆடுவார் . ராஜகம்பளம் மக்கள் நடத்தும் சடங்கு , திருவிழா , திருமணம் போன்ற நிகழ்சிகளில் தவறாமல் இவ்வாட்டம் நடைபெறும் . வீரபாண்டிய கட்டபொம்மன் குரு பூஜையில் சேவையாட்டம், தேவராட்டம் முக்கிய நிகழ்வாக ஆடபடுகிறது


திண்டுக்கல் பகுதியில் கம்பளத்து நாயக்கர்களின் பழமை மாறாத நாட்டுப்புற கலையாக "சேவையாட்டம்' உள்ளது. மண்ணின் மரபையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்துவது நாட்டுப்புற கலைகள். இவை பொழுதுபோக்கு, சடங்கியல் நிகழ்வாக ஆடப்படுகின்றன. இவற்றை சிலர் தொழில்முறை ஆட்டமாக ஆடி வருகின்றனர். இந்த வகை ஆட்டங்களுக்கு குறிப்பிட்ட களமோ, அரங்கமோ தேவையில்லை. எந்த இடத்திலும், சூழ்நிலையிலும் சுதந்திரமாக ஆட முடியும். இதில் கம்பளத்து நாயக்கர்கள் தங்களது இனத்திற்கே உரிய "சேவையாட்டம்' ஆடுகின்றனர். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் கோலார்பட்டி, விருதலைப்பட்டி, கொம்பேரிபட்டி, கெஜ்ஜிலியம்பட்டி, புது எட்டமநாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, புதுப்பட்டி, பாபிநாயக்கன்பட்டி பகுதிகளில் வசிக்கின்றனர். சேவையாட்டத்தை கோயில் திருவிழாக்களில் ஆடுகின்றனர். இந்த ஆட்டத்திற்காக அவர்கள் விரதமிருக்கின்றனர். கோமாளி போல் வேடமணிந்த ஒருவரும், அவருடன் 7 பேரும் சேர்ந்து ஆடுவர். ஏழு பேரும் இடுப்புக்கு கீழே வண்ணப் பாவாடையும், மேல்பகுதியில் சட்டையும் அணிவர். தலையில் ஜரிகைபோட்ட "உருமா' கட்டுகின்றனர். புல்லாங்குழல், சேவைத்தப்பு, ஜெயகண்டி ஆகிய இசைக்கருவிகளை பயன்படுத்துகின்றனர். இந்த இசைக்கருவிகள் இசைத்து கொண்டே கலைஞர்கள் வட்டமாகவும், சுழன்றும் ஆடுகின்றனர். துவக்கத்தில் சிறிது நேரம் உருமி "தேவதுந்துமி' இசைக்கு ஏற்ப ஆட்டம் ஆடுகின்றனர். இசைக்கருவிகளின் இசைப்பும், அதற்கேற்ற ஆட்டங்களும் காண்போரை தன்வயப்படுத்துகிறது. இந்த சேவையாட்டம் பழமைமாறாத நாட்டுப்புற கலையாக இன்றும் திகழ்கிறது.வேடசந்தூர் பாபிநாயக்கன்பட்டி பொம்மணசாமி கூறியதாவது: சேவையாட்டம் ஆடும்போது முதலில் நேர் கோட்டில் நிற்போம். சிறிது நேரத்தில் வட்ட வடிவத்திற்கு மாறி ஆடுவோம். கோமாளி வேடமிட்டு ஆடுபவரை கிருஷ்ணராக மதித்து மக்கள் வழிபடுவர். அவரே பாடல்களை பாடி ஒவ்வொரு ஆட்டத்தையும் துவங்கி வைப்பார். ஏனைய ஆட்டக்காரர்கள் அதனையே பின்பாட்டாக பாடுவர். ராமாயண பாடல்களை அதிகளவில் பாடுவோம். வழிபாட்டின்போது இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வோம், என்றார்.

புதன், 4 மார்ச், 2020

வேலை தேடும்போது வாழ்க்கையினைப் பற்றி நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் எவை?


மலரும் நினைவுகள் ...1996.....கோவை ....

கற்றுக் கொண்ட விஷயமுனு சொல்ல முடியாது. அவமானம் பட்டதுனு சொல்லாம் நானும் என் நண்பனும் வேலை தேடி கோயம்புத்தூர் சென்றோம் ஒரு நான்கு ஐந்து கம்பெனிகள் சென்று வேலையில்லாம சோர்ந்து போய் மதிய உணவை பணம் குறைவா இருந்த காரணத்தால் ஒரு தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டு விட்டு ஊர்க்கு செல்வோம் என்று காந்தி புரம் பஸ்டேண்டுக்கு சென்றோம் செல்லும் வழியில் சில பேர் நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருந்தார்கள் அதை வாங்கி படித்த போது வேலைவாய்ப்பு என்று போடப்பட்டு இருந்தது அதில் இருந்த நம்பர் க்கு கால் செய்தோம் அதில் பேசிய நபர் எங்களை கிராஸ் கட் ரோடு 3 வது வீதிக்கு வர சொன்னார் நாங்கள் இருவரும் சென்றோம்

அந்த ஆபீஸ் ஒரு மாடியில் இருந்தது உள்ளே சென்ற போது ஏரளாமன பெண்கள் இருந்தனர் . அங்கே இருந்த பெண் ஒருவர் எங்க ளை அமர வைத்து பேச தொடங்கினார் . அப்போது தான் என்ன வேலை என்று கேட்டேன் அதற்கு அந்த பெண் டெலி காலிங் என்று சொன்னார் .இதில் எப்படி பேசுவது என்பதற்கு உங்களுக்கு பயிற்சி தருவோம் அதற்கு நீங்கள் கட்டணமாக 2000ரூ கட்ட வேண்டும் வேண்டும் என்று அந்த பெண் சொன்னார் உடனே நாங்கள் சுதாரித்து கொண்டோம் இது ஒரு பிராடு கம்பெனி என்று .

எங்க கிட்ட அந்த அளவுக்கு பணம் இல்லைனு சொன்னோம் அதற்கு அந்த பெண் பரவாயில்லை 500 ரூ இருந்தா கூட கட்டி முன்பதிவு செய்ங்க அந்த பெண் சொன்னார் . எங்க கிட்ட பஸ்க்கு மட்டுமே பணம் இருக்குனு சொன்னோம். கடைசிக்கு ஒரு 100ரூ குடுங்கன்னு சொன்னார்.எங்க கிட்ட பஸ் காச தவிர வேறு எதுவும் இல்லைனு சொன்னதும் நீங்களாம் எதுக்கு டா 100 ரூ கூட இல்லாம வெளிய வரிங்கனு அந்த பொண்ணு எல்லாரும் முன்னாடியும் மரியாதை இல்லாம பேச ஆரம்பிச்சிடுச்சு உங்க கிட்ட இவ்வளோ நேரம் பேசினதே வேஸ்ட் வெளிய போங்கடனு சொல்லி வெளிய அனுப்பிருச்சு. எங்களுக்கு ஒரே அசிங்கமா இருந்துச்சு வெளியே வந்துட்டோம்


அப்போதுதான் புரிஞ்சுது பணம் சம்பாதிக்கவும் பணம் தேவை னு....


2020.......இன்று ...கோவை ..திருப்பூர் ...மாவட்ட ..பல நண்பர்களுக்கே ....வேலை வாய்ப்பு  வழங்கி வழிகாட்டியாக  .. உள்ளோம் ...

திங்கள், 2 மார்ச், 2020

இளையராஜாவும் அல்லாமல் ரகுமானும் அல்லாமல் இருவருக்குமிடையே எவரது சாயலுமின்றி இடைமீட்டரில் ஒரு குட்டி இசை சாம்ராஜ்யாத்தை நிகழ்த்தியவர் வித்யாசாகர்.
இவரது இசையால் மட்டுமே எனக்கு அர்ஜூன் நடித்த படங்களின் மீது அட்டென்ஷன் திரும்பிற்று. கிட்டத்தட்ட அர்ஜூன் தயாரித்த இயக்கிய நடித்த அனைத்துப்படங்களுக்கும் வித்யாசாகர்தான் இசையென்று நினைக்கிறேன்.
தொன்னூறுகளில் விஜய் அஜீத்தில் ஆரம்பித்து நடிக்கவந்த பல விடலை ஹீரோக்கள் வித்யாசாகருக்கு அவர்களது வளர்ச்சிக்கு அவர் இயம்பிய இசைக்கு இப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். மறந்துபோய் இருக்கலாம்.
ஒரு கட்டத்தில் தன் படத்திற்கு ராஜா ரகுமான் தேவா தவிர யாருக்கும் அசங்காத ரஜினி சந்திரமுகியில் வித்யாசாகருக்காக அசங்கினார்.
ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்...
பனிக்காற்றே பனிக்காற்றே...
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது..
நீ காற்று நான் மரம்..
பூங்காற்று வீசும்.. பொன்மாலை நேரம்..
ஒரே மணம் ஒரே குணம்..
பூவாசம் புறப்படும் பெண்ணே..
காற்றின் மொழி..
கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம்..
ஆராரோ ஆரிரரோ.. அம்புலிக்கு நேர் இவரோ..
and of course.. மலரே மௌனமா..
இதெல்லாம் 'யாரு சாமி இவரு..!! என் மனசுக்கு புடிச்சமாறியே ட்யூன் போடறார்' என்று வியந்து கேட்ட பாடல்கள். இன்ஃபேக்ட்... இவர் பாடல்களில் சிலவற்றுக்கு ட்யூன்களை ஏதோ நானோ மனதில் போட்டமாதிரியும் அவற்றை இவர் எனக்கே தெரியாமல் எடுத்தாண்டது மாதிரியும் எனக்குத் தோன்றும். ஒவ்வொரு பாடலிலும் ஏதாவதொரு wow factorஐ வைத்திருப்பார்.
மற்றதையெல்லாம் கூட விடுங்கள். 'யார் யார் சிவம்.. நீ நான் சிவம்' ஒன்றே ஒன்று போதும் வித்யாசாகரை ஜென்மத்திற்கும் நினைவில் கொள்ள. அந்தப்பாட்டில் அவர் ஏதோ உயிரின் ஓசையையே கேப்ச்சர் செய்து கம்போஸ் செய்ததைப்போல தோன்றுமெனக்கு. உலக அமைதி நிறுவனம் என்று ஏதாவது இருக்குமானால் அதற்கு இந்தப்பாடலை Anthemஆகவே வைக்கலாம்
மேற்சொன்ன பாடல்கள் சாம்பிள்கள்தான். ஏகப்பட்ட பாடல்கள், தீம் ம்யூஸிக், பின்னனி இசையென்று ஒரு ரவுண்டு வந்த வித்யாசாகர் என்னைப் பொருத்தவரையில் ஒரு பெரிய மெலடி டாக்டர்.
தமிழ் சினிமாவில் வித்யாசாகரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இருக்குமிடம் தெரியாமல் இருந்துகொண்டு பொலைட்டாக இசைப்புரட்சி செய்தவருக்கு வாழ்த்தும் அன்பும்
. 'யார் யார் சிவம்.. நீ நான் சிவம்' ஒன்றே ஒன்று போதும் வித்யாசாகரை ஜென்மத்திற்கும் நினைவில் கொள்ள. அந்தப்பாட்டில் அவர் ஏதோ உயிரின் ஓசையையே கேப்ச்சர் செய்து கம்போஸ் செய்ததைப்போல தோன்றுமெனக்கு. உலக அமைதி நிறுவனம் என்று ஏதாவது இருக்குமானால் அதற்கு இந்தப்பாடலை Anthemஆகவே வைக்கலாம்
https://youtu.be/v5UoMnhowMM





ஞாயிறு, 1 மார்ச், 2020

நாளை பிளஸ் 2 தேர்வு துவக்கம்; ஜெயித்து காட்டுங்கள் மாணவர்களே..


💐தமிழகம் முழுவதும், நாளை (மார்ச், 2), பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது.

 💐தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து, ஆயிரத்து 401 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.


💐மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வுகளை இந்த ஆண்டு மாணவர்கள் எழுதுகின்றனர்.

 💐அதன்படி, மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.

 தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.15 வரை நடைபெறும்.


💐வினாத்தாளை வாசிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 💐நாளை துவங்கி, மார்ச் 24ம் தேதி தேர்வுகள் முடிவடையும். ஏப்ரல் 24-ம் தேதி ரிசல்ட் வெளியாகும்.

💐இதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் உயர்படிப்புக்கு செல்ல முடியும்.



👍🏻தேர்வு எழுதும் மாணவர்களுக்கு...


💐தேர்வுக்கு முதல் நாள் நள்ளிரவு வரை படிக்க வேண்டாம்.

 💐அதிகாலையில் எழுந்து படியுங்கள். அப்போது தான் பாடம் மனதில் பதியும்.


💐இதுவரை படிக்காத பாடங்களை படித்து, நேரத்தை வீணாக்க வேண்டாம்.


💐உடல்நிலையை நன்றாகக் கவனித்து கொள்ளுங்கள். தேவையற்ற பிரச்னைகளை சிந்திக்க வேண்டாம்.


💐அரைமணி நேரத்திற்கு முன் தேர்வு மையத்திற்கு சென்றுவிடுங்கள்.


💐தேர்வுக்கு தேவையான பொருட்கள், ஹால் டிக்கெட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.


 💐ஏற்கனவே பயன்படுத்திய பேனாவை எடுத்து செல்லுங்கள்.


💐நன்கு தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள்.


💐ஆசிரியர், பெற்றோர் கூறிய அறிவுரைகளை மனதில் நினைத்து தேர்வு எழுதுங்கள்.


💐தேர்வு எழுதும் போது பதட்டம் வேண்டாம்


💐எழுதி முடிந்த பின் பிழை உள்ளதா, கேள்வி எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என பாருங்கள்.


வெற்றி உங்கள் வசமாகும்.💐 ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681



உடுமலைப்பேட்டை ..வெனசபட்டி ஆரம்பப்பள்ளி சுவேதா ராஜேந்திரன்  -விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை ..

5 -வகுப்பு குழந்தை செல்வம்  சுவேதா விஞ்ஞானியிடம் கேட்ட கேள்வி ...

முன்னேறிய நாடுகளில் இந்திய உலக அளவில் 6 வது இடத்தில் இருக்கிறது  என்று பேசினீர்கள் ..நமது நாட்டில் ஏழைகள் இன்னும் இருக்கிறார்களே என்று கேட்டார் ..

-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை  பதில் ...

ஏழைகள் இந்தியாவில் மட்டும் இல்லை அமெரிக்கா வாசிங்டன் லும் இருக்கிறார்கள் ..வளர்ந்த நாடுகளிலும் இருக்கிறார்கள் ..அங்கு ஏழைகள் இருப்பது தெரியாது ..நமது நாட்டில் வெளிப்படையாக தெரிகிறது பதில் அளித்தார்

கேள்வி 2...

5 -வகுப்பு குழந்தை செல்வம்  சுவேதா ..நமது நாட்டில் பிளாஸ்டிக் கலாச்சாரத்தை எப்படி மட்டுப்படுத்தவது ..அதற்கு ஏதாவது திட்டம் இருக்கிறதா ?


-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை  பதில் ...

அறிவியல் திட்டங்கள் இருக்கிறது ..இங்கே  என் மேடை முன்னே வாட்டர் பாட்டில் இருக்கிறது ..தவறுதான் ..நம் வசிக்கும் இடங்கள் ..பள்ளி ..கல்லூரி ..ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நாம் ஏற்படுத்தவேண்டும் ..உங்களை போன்ற கேள்விகள் ...நடைமுறை படத்த ஆவணசெய்வோம் என்றார் ..கேள்வி கேட்ட சுவேதா என் பாராட்டுக்கள் என்றார் ..

அறிவியலிலும் ..சுற்றுப்புற சூழலிலும் நல்வழி காட்டும் வென்சபட்டி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்க்கு நன்றிகள் ..கலிலேயோ அறிவியல் கழகத்திற்கும் நன்றிகள் ..



குறிப்பு : கம்பள விருட்சம் அறக்கட்டளை என்ன செய்கிறது என்று கேள்வி  கேட்ட மேன்மக்களுக்கு ...கம்பள சமுதாயம் தாண்டி பொருளாதாரத்திலும் ..கல்வியிலும் ..பொது தளத்தில் பயணிக்கிறது தற்பொழுது ...நம் கோவை திருப்பூர் மாவட்ட கம்பள சமுதாய மக்களை இப்படி பயணிக்க வைக்கிறது ...

குஜ்ஜ பொம்மு ராக்ஸ் சுவேதா ..............









வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

தொட்டி வாய்க்கால் கல்லாபுரம்

பண்டைய தமிழர்களின் கட்டுமானத்துக்கு 300 ஆண்டுகள் பழமையான கல்லாபுரம் ‘கல் வாய்க்கால்’ சான்று


திருப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் மேற்குத்தொடர்ச்சி மலையோரம் பாயும் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கல்லாபுரம். கி.பி. 13-ம் நூற்றாண்டில் கொங்கு மன்னன் விக்கிரமசோழன் பெயரைக் குறிக்கும் வகையில், ‘விக்கிரமசோழநல்லூர்’ என்றும் கல்லாபுரம் அழைக்கப்பட்டுள்ளது. 13-ம் நூற்றாண்டுக்கு முன்பே கல்லாபுரம் என்ற பெயரைக் கொண்ட இக்கிராமம், இன்று வரை அதே இயற்பெயரைக் கொண்டிருப்பது வியப்புக்குரியது. விக்கிரமசோழனின் ஆட்சிக்காலத்தில் ‘விக்கிரமசோழ நல்லூர்’ எனும் சிறப்புப் பெயர் பெற்றபோதும், இன்று வரை அதன் இயற்பெயரை இழக்கவில்லை.
கல்லாபுரத்தை ஒட்டி, 1957-ல் அமராவதி அணை கட்டப்பட்டது. 90 அடி ஆழம், சுமார் 10 கி.மீ. சுற்றளவு, 4 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், கணியூர், கடத்தூர், மடத்துக்குளம், சோழமாதேவி உள்ளிட்ட ராஜவாய்க்கால்கள் (பழைய வாய்க்கால்) மூலமாக நீர் பாசன வசதி நடைபெற்று வருகிறது. அமராவதி பாசனம் மூலமாக, ஆண்டுக்கு 2 முறை நெல் நடவு நடைபெற்றுவரும் கல்லாபுரம் பகுதி எப்போதும் பசுமையாக காணப்படும். இங்கு சுமார் 10 அடி உயரத்தில் தூண்களால் தாங்கியபடி செல்லும் நீண்ட பாலம் போன்ற கட்டுமானம் உள்ளது. ஆனால், அது பாலம் அல்ல, பாசனத்துக்கு நீரை எடுத்துச் செல்லும் வாய்க்கால். தரைமட்டத்தில் இருந்து புவிஈர்ப்பு விசைக்கேற்ப உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. கல்லாபுரத்தில் தரைவழிச் செல்லும் வாய்க்கால், தாழ்வான பகுதியைக் கடந்து செல்வதற்காக இவ்வாறு தரைமட்டத்தில் இருந்து உயரமாகவும், பின்னர் சமதளத்தில் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலின் கீழும், இடது மற்றும் வலது புறமும் கண்களுக்கு எட்டிய தூரம் வரை நெல் வயல்களும், வானுயர்ந்த மலைகளும் தென்படுகின்றன.
இதுகுறித்து திருப்பூர் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர் சு.ரவிக்குமார் கூறும்போது, ‘300 ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியை ஆண்ட நாயக்கர் மன்னர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற வாய்க்கால்கள், புகழ் பெற்ற ரோம் நகரிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. முழுவதும் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆயிரக்கணக்கான கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இடது, வலது கரைகள், வாய்க்காலின் கீழ் பாகம் என அனைத்தும் கற்களைக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், இன்றளவும் நீர் கசிவு இல்லை. பண்டைய தமிழர்களின் கட்டுமானத்துக்கு சான்றாக கல்லாபுரம் கல் வாய்க்கால் உள்ளது’ என்றார்.

வியாழன், 27 பிப்ரவரி, 2020

இந்த உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் இவன் ஏன் ஜெஸியை லவ் பண்ணான்? 
பத்து வருஷம் கழிச்சும் ஜெஸி ஏன் ஞாபகத்திற்கு வருகிறாள்? என்கிற கேள்விக்கு எல்லாம் எப்பவும் பதிலே இருக்காது. ஆயிரம் வருஷம் ஆனாலும் முதல் காதல் ஞாபகம் என்பது எல்லோருக்கும் ஸ்பெஷல் தானே? விண்ணைத்தாண்டி வருவாயா முதல் தடவை பார்க்கும் போதே நாம் கடந்த நினைவுகளை ஒரு மயில் இறகால் வருடியது போல் இருக்கும். எனக்கும் இருந்தது. VTV க்காக பத்தாண்டு பின்னோக்கி கூட வாழலாம். ஜெஸி போன்ற பெண்கள் எல்லாம் நாம் பார்க்கும் முதல் பார்வையில் காதலில் விழ வைக்கும் வம்சம். புது காட்டன் புடவை வாசத்தோட எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் பெண்கள் எந்நேரத்திலும் ஆண்களை காதலில் விழ வைக்க கூடிய ஆபத்தானவர்கள்.
கார்த்திக்கு ஜெஸி ஒரு அழகான ஆபத்து. நாம் நண்பர்களாக இருக்கலாம் இல்லை காதலர்களாக தொடரலாம் என்கிற குழப்பத்தை தோற்றுவிற்கும் ஒவ்வொரு பெண்ணும் ஜெஸிதான். "என்னை ஏன் பிடிக்கும்?" என்று கேட்கும் ஆண்களிடத்தில் "உன் கண் வழியா என்னை யாரும் பார்க்கலை"ன்னு சொல்லும் ஒவ்வொருத்தியும் பசங்களுக்கு ஜெஸி தான். ரெண்டு பேர் மீட் பண்ணாங்க, பழகினாங்க, சுத்தினாங்க, காதலிச்சாங்க, ஒண்ணு சேர முடியாமல் போனாங்க. இதுவொரு சாதாரண காதல் கதைதான். தன்னுடைய லட்சியத்திற்கும் தன் காதலுக்கும் இடையே அலைகழிந்த கார்த்திக் இங்கே ஏராளம். இது சாதாரணமில்லை. கடைசியா தான் சாதிச்ச பிறகு தன்னுடைய காதலியை கூட்டிட்டு வந்து காட்டி பெருமிதம் கொள்ளும் கார்த்தியை கொண்டாடியே ஆகணும். ஒரு காதலி குட்பை சொல்லிட்டு போகும் போது அவள் மறையும் வரையில் பார்த்து ரசிக்கும் கார்த்திக் எப்போதும் வாழ்வான்.
வாழ்வான் தானே?
https://youtu.be/YFYiTS46x-8
நம்ம ஊரு விஞ்ஞானி ...வாங்க பேசலாம்..



பிப்ரவரி 28 ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம். உடுமலை பகுதிகளில் கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் பல்வேறு அறிவியல் சார் நிகழ்வுகள் நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் வருகின்ற மார்ச் மாதம் 1 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கலிலியோ அறிவியல் கழகம்,. உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், ராயல்ஸ் அரிமா சங்கம் , மற்றும் உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் இணைந்து நம்ம ஊரு விஞ்ஞானி ...வாங்க பேசலாம்.. என்ற நிகழ்வு உடுமலை ஆர்.கே.ஆர். கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

நிகழ்வுக்கு நமது கொங்கு மண்டலத்தின் விஞ்ஞானி இஸ்ரோ நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி தற்போது தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் துணைத்தலைவராக உள்ளவரும் , பள்ளி மாணாக்கர்களிடையேயும், பொது மக்களிடையேயும் அறிவியல் சார் விஞ்ஞான வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளை கொண்டு சேர்த்து வருகின்ற டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உங்கள் அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.

இந்த நிகழ்வில் அறிவியல் துறையில் சிறப்பாக செயல்படும் மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. அறிவியல் கண்காட்சி , அறிவியலில் நீங்கள் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகள் , பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ள உங்களது கண்டுபிடிப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. தகுதியான மாணாக்கர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் தன்னார்வலர்கள் பதிவு செய்யலாம்.ஆகவே நிகழ்வில் பள்ளி மற்றும் கல்லூரி  மாணாக்கர்கள் , ஆசிரியர்கள் , அறிவியல் தன்னார்வலர்கள் கலந்து கொள்ளலாம்.கண்டிப்பாக கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்ய வேண்டும்.

. மேலும் தகவல்களுக்கு கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் 8778201926.

புதன், 26 பிப்ரவரி, 2020

திரைப்படம்:- நிழல்கள்,பாடல்: தூரத்தில் நான் கண்ட உன் முகம்


ஜானகி அம்மாவின் பாடல்களிலேயே மிக உன்னதமானது இந்த பாடல். கேட்கும் ஒவ்வொரு  முறையும் மனம் நிர்மலமான நிலையை அடைந்து விடுகிறது. சோக ரசத்தை இந்த அளவு அனுபவித்து பாடிய பிறிதொரு பாடல் தமிழில் இல்லை. ராஜாவின் மேன்மையை உணர்த்திக்கொண்டே இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

துரதிஷ்டத்தை அதிஷ்டமாக மாற்றும் வல்லமை கொண்ட இசை என்று இந்தப் பாடலை முன்னுதாரணப்படுத்தலாம். இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டிலும் வெளிவந்த நிலையிலும் படமாக்காமல் கைவிடப்பட்ட பாடல்.
"தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம்.

இந்தப் பாடலை எல்லாம் ஒரு காலத்தில் நள்ளிரவு கடந்து வானொலி ஒலிபரப்புச் செய்யும் போது அந்த ஏகாந்த இரவில் இதைக் கேட்கும் போது கிட்டும் சுகமே தனி.

எஸ்.ஜானகியிடம் இம்மாதிரிப் பாடல்களைக் கொடுக்கும் போது பங்கமில்லாது கொடுத்துவிடுவார்.

"தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலைக் கேட்டவுடன் அப்படியே இழுத்துப் போய் "கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்" (மனதில் உறுதி வேண்டும்) பாடலில் நிறுத்திவிடும். இந்த இரு பாடல்களும் ஒரே ராகம் .

பாடலின் ஆரம்பத்தில் மெலிதான இசையோடு ஜானகி கொடுக்கும் ஆலாபனையைத் தொடர்ந்து

"தூரத்தில் நான் கண்ட உன் முகம் ; நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்"
என்று பாடும் வரிகளை மிகவும் சன்னமாகக் கொடுத்துவிட்டு அதை வரிகளை மீண்டும் பாடும் போது கவனியுங்கள் இன்னும் கொஞ்சம் ஏற்றிப் பாடியிருப்பார். தொலைவின் நீளத்தைத் தன் குரல் வழியே தொனிக்கும் சிறப்பு அது.

பாடலின் மைய இசையில் ஒற்றை வயலின் இயலாமையின் பிரதிபலிப்பாகவும், ஒரு சேர ஒலிக்கும் வயலின்களின் கூட்டு மனதின் ஆர்ப்பரிப்பைப் பகிர்வது போல இருக்கும்.

"ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா"
என்று தன் மனதை ஓய்வெடுக்கச் சொல்லுமாற் போலக் களைத்து விழுகிறது ஜானகியின் குரல்.

இது போன்ற பாடல்களை இப்போது வரும் எந்த திரைப்படங்களிலும் காண முடியாது. இவை காலத்தை வென்ற பாடல்கள்


ஆனால் இது காலத்தால் அழிக்க முடியாத பாடல்..இந்தப பாடல் இந்தப் படத்தில் மற்றோர் கதாநாயகனான ராஜசேகரும் புதுமுக நடிகையையும் வைத்து எடுக்கப்பட்ட பாடல் பின்பு நீக்கப்பட்டது



தூரத்தில் நான் கண்ட உன் முகம் :ஒரு சோக கீதம் ;இதோ உங்களுக்காக
https://youtu.be/cxgzG2A9t8c

திங்கள், 24 பிப்ரவரி, 2020

கணவனை பிரிந்த பெண்
அல்லது மனைவியை பிரிந்த ஆண்..
இவர்களின் தரா தரத்தை..
இவர்கள் அடுத்த குடும்பத்தில் நுழைந்து..
நல்லா இருக்கும் குடும்பத்தை பிரிக்கிறார்களா...?
இல்லை சிறு சிறு உரசல்களுடன்
உள்ள குடும்பத்தை சேர்க்கிறார்களா ?
என்பதை பொறுத்து தெரிந்து கொள்ளலாம்..
இவர்கள் தம் துணையை..
விதி வசத்தாலோ..இல்லை சந்தர்ப்ப வசத்தாலோ
பிரிந்து இருப்பதால்..
அதன் விளைவை நன்கு தெரிந்து கொண்டிருக்கும் பட்சத்தில்..
இவர்களின் போக்கே அவர்களின் தரத்தை நமக்கு உணர்த்தி விடும்..
--
#TIPPUUU

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

வாழ்க்கையில் இனியும் எந்த ஊக்குவிப்பும் இல்லை என உணரும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்?

சிவக்குமார் குமார் ...

நான் ஒரு விற்பனை துறையில் இருக்கிறேன்  தினமும் வாடிக்கையாளரை சந்திக்க வேண்டும்

எனக்கு வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்.

உணவு, பயணங்கள் ,புது வாடிக்கையாளர் (அனைத்து துறைகளை சார்ந்தவர்கள் ), மற்றும் சிறு தூக்கம் இது மட்டுமே என் வாழ்க்கை.

வாரத்தில் 7 நாட்கள் மற்றும் 24 மணி நேரமும் வேலை செய்வது போல் இருக்கும்.

இப்படி நேரம் செலவதித்து மூளையை துருவி வேலை பார்த்தாலும் கடைசியில் பயன் இல்லாமல் போகும்.

இது அனைத்து விற்பனை துறையில் இருப்பவர்களுக்கு எல்லோருக்கும்  பொருந்தும்.


மனமுடைந்து சோர்வடைந்து போகும்போது எல்லாம் . அப்போது இந்த கடிதத்தை படிப்பேன்....அடுத்த பயணம் தொடங்கிவிடும் ...வாழ்க்கை வாழ்வதற்கு தானே ...

இனிமேல் தான் இளமை திரும்புதே ......

60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்...

60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்...

பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான்...!!!

வாழ்க்கையில் 60-ல் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும். இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம் நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்...

*60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:*

புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள்...

உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு செல்லுங்கள்...

எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள்...

70 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம் உருவாக்காதீர்கள்...

இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்...

அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 60 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகுதான்...

உலகின் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள், நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 60+ காரர்கள் தான் அதிகம்..!!!

பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடி பயணம் செல்லுங்கள்...

வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்..... திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக் குதிக்க வைக்கும்...

புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடி நிறைய படியுங்கள். உங்கள் மூளைக்கு தீனிபோட நிறைய, நிறைய புதிய விஷயங்களைத் தேடிப்படியுங்கள்...

நகைச்சுவைக் கதைகளை, நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பி காணுங்கள்...

சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் நிலையாகும்...

விரோதிகளை விலக்குங்கள், பெருமைக் காரர்களை, பொறாமைக் காரர்களை காலவிரயம் கருதி ஒதுக்குங்கள்...

மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் பேணுங்கள், நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி,
சிறு சிறு ஆசனங்கள் தவறாது செய்யுங்கள்...

வாரம் ஒரு முறையாவது உங்கள் இணை மனதினருடன் சிரித்து, மகிழ்ந்து, உண்டு, உறவாடுங்கள்...

மறந்தும் சாய்வு நாற்காலிவாசிகள் பக்கம் ஒதுங்கி விடாதீர்கள், உங்களை அவர்கள் பக்கத்திலேயே படுக்க வைத்து விடுவார்கள்...

பொதுச் சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை காத்தலில் ஆர்வம் கொள்ளுங்கள்...

முதலில் நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர் அடுத்தவர்களுக்கு, உதவி தேவைப் படுபவர்களுக்கு, உங்களால் இயன்ற வகையில் உதவுங்கள். அவர்கள் நன்றியில் உங்களை நீங்களே புதிதாக ரசித்து மகிழ்வீர்கள்...

எப்போதுமே முதல் இன்னிங்சை விட இரண்டாம் இன்னிங்கஸ்தான் நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது...

மேற்சொன்ன விஷயங்களை சரியாகச் செய்தால் 60+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை தோழர்களே...

மூளையும், மனசும், உடலும் சரியாக இயங்க ஏற்பாடு செய்துவிட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது...???


இது உங்களுக்கான ஆட்டம், அறுபதின்மரே இப்போதே துவங்குங்கள்...!!!