புதன், 12 மே, 2021

 இன்று ஒரு துக்க நிகழ்வு ...


நம் சமுதாய கீர்த்திவீரர் எத்தலப்பர் தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் எனும் வெளியிட்டு வருடங்கள் 3 ஆகிறது .. அதில் ஒரு சமுதாயம் சார்ந்த நபர்கள் .நாங்கள் தெலுங்கு மொழி பேசுவதில்லை  என்று .வழக்கறிஞர்கள் மூலம் காவல் துறையில் புகார் செய்து  ..செய்தியை நீக்கவேண்டும் ..போராடினார்கள் ....அப்போது இருந்த காவல் துறை அதிகாரி நம் சமுதாயத்தை பற்றி அதிகம் தெரிந்தவர் ..நம் சொந்தங்களுடன் படித்தவர் .அதில் இருக்கும் செய்தி உண்மையாக உள்ளது ..அதுவும் கெஜிட்டில் ..சரியாகவும் ..ஆவணக்காப்பகங்களில் உள்ள செய்தியும் சரியாக உள்ளது ..புகாராக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் உறுதியக தெரிவித்துவிட்டார் ...வேறுபக்கங்களில் எல்லாம் முயன்றார்கள் ..போனபக்கம் எல்லாம் தோல்வி .

புகார் தெரிவித்த ஒருவர் ..கடந்தவருடம் ..பிளெக்ஸில் கண்ணீர் அஞ்சலி ..இந்த வருடம் ...இந்நாளில் .புகார் அளித்த இன்னொருவர் .பிளெக்ஸில்..கண்ணீர் அஞ்சலி ...புகைப்படம் ..


கீர்த்திவீரர் தளி எத்தலப்பர் ....மண்ணு ...திருமூர்த்தி மண்ணு ...நின்று பேசும் ..தவறாக பேசினால் ..நின்று கொல்லும் . ...


திங்கள், 10 மே, 2021

 கேள்வி : இக்காலத்தில் படித்தவர்களிலும் முட்டாள்தனமாக சிந்திக்கும் மக்கள் இருக்கிறார்களா?



என் பதில் : 



நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறேன். அந்நிறுவனமானது குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களுடையது, அங்கே வேலை செய்பவர்களும் பெரும்பாலும் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான். பெயர் குறிப்பிட விரும்பவில்லை. ஏனெனில் நான் கூறப்போகும் விடயங்கள் அவ் இனத்தின் கருத்துக்களா அல்லது அந்த நபர்களின் கருத்துக்களா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.


அவர்களின் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தது.


நாங்கள் எங்கள் இனப் பெண்களை வேலைக்கு அனுப்புவதை விரும்பவில்லை. காரணம் அவ்வாறு வேலைக்கு செல்லும் போது அங்கு யாரையாவது காதலித்து சுற்றி திரிகிறார்கள். காதலித்தவன் விட்டுச்சென்றால் பிறகு மாப்பிள்ளை தேடுவது கடினம். ஒரு பெண்ணை வீட்டில் வந்து 100 வரன் பார்த்து சென்றாலும் பரவாயில்லை. வேலைக்கு அனுப்பக்கூடாது.

ஒரு பெண் பூப்படைந்துவிட்டால் என்றால் அந்த பெண் திருமணம் மற்றும் குழந்தை பிரசவிக்க தயாராகிவிட்டாள் என்று அர்த்தம். அந்த சிறுமிக்கு 12, 13, 14, 15 எந்த வயதாக இருந்தாலும் சரி. 9 வயதாக இருந்தாலும் சரியே. அந்த காலத்தில் பெண்களுக்கு 12, 13 வயதாக இருக்கும் போதே திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் இப்பொழுது அப்படியில்லை. அதனால்தான் கற்பழிப்பு அதிகரிக்கிறது. அத்துடன் அந்த வயதில் திருமணம் செய்து வைப்பதால் அவள் கணவனே உலகம் என இருப்பாள். தவறான வழியில் செல்லமாட்டாள்.

அவள் திருமணம் முடித்து சுழற்சி முறையில் குழந்தை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அப்பெண் ஆரோக்கியமாக இருப்பாள்.

எல்லா பெண்களும் ஆண்களும் உணர்ச்சிக்கு மட்டுமே முதலில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

பெண்களை எப்போதும் தங்களுக்கு கீழேயே வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தலைக்கு மேல் ஏறிக்கொள்வார்கள்.

பெண்கள் இருப்பது அவர்களின் தேவைக்கு மட்டும்தான்.

பெண் பலவீனமானவள்.

ஆண்களுக்கு எல்லா அதிகாரமும் இருக்கின்றது. ஆண்கள் எத்தனை பெண்களோடு வேண்டுமென்றாலும் செல்வோம். ஆனால் பெண் கணவருக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

எல்லா பெண்களையும் போகப் பொருளாகவே பார்ப்பது.

இவற்றையெல்லாம் கேட்டு நொந்து போய் இருக்கின்றேன். 




சனி, 8 மே, 2021

மாண்புமிகு  மாவட்ட அமைச்சர் பெருமக்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் 


தமிழக அமைச்சரவையில்    திருப்பூர் மாவட்ட  மக்களின் மனமறிந்து  பணியாற்ற  இரண்டு அமைச்சர்களை ஒதுக்கிய தமிழக அரசிற்கு நன்றி தெரிவிப்போம்.


மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறையாக இருந்த   துறையினை  மக்களுக்கான  செய்தித் துறையாக மாற்றி   அதனை நமது  மாவட்டத்தின்  காங்கேயம் தொகுதியில்  வெற்றி பெற்ற  மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய  மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இவர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த காலத்தில்தான் திருப்பூர் முதல் உடுமலை தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டது. அது போன்று  மிகச் சிறப்பான  மக்கள் பணிகள் செய்ய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பதிவு செய்வோம்.


அதே போல்   ஆதிதிராவிடர ;நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும்  திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்கள் இப்போதுதான் முதன் முறையாகச் சட்டமன்றம் செல்கிறார். 


அவருக்கும் இந்த நல் வாய்ப்பினை வழங்கிய  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் வாழ்த்துகளையும் பதிவு செய்வோம்.

திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்களின்  பணி சிறக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்குவோம்.


திருப்பூர் மாவட்டத்திற்கு அமைச்சர் பொறுப்பு ஏற்று இருக்கும் அமைச்சர் பெருமக்களுக்கு கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 


இங்ஙனம் 

கீர்த்திவீரர் வீரர் எத்தலப்பர் வாட்ஸாப்ப் குழு 

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் ..

உடுமலைப்பேட்டை .


வெள்ளி, 7 மே, 2021

 கேள்வி : கோழிப்பண்ணை தொடங்க விருப்பமா? 


என் பதில் : 


கடன் வழங்கும் வங்கிகள்! 


குறைந்த முதலீட்டில் ஒரு தொழிலை தொடங்கி அதன் எதிர்கால திட்டமிடல் சிறப்பாக இருந்தால் மட்டுமே அந்த தொழில் வெற்றியடையும். ஆம், இதில் கோழி வளர்ப்பு தொழில் மிகச் சிறந்த தொழிலாக பார்க்கப்படுகிறது. கோழி இறைச்சி தேவையும், அதன் முட்டை தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கோழி வளர்ப்பு அல்லது கோழிப் பண்ணைத் தொழில் முக்கிய தொழிலாக மாறி வருகிறது.


எந்தவொரு தொழிலுக்கும் முதலீடு என்பது அவசியமான ஒன்று. தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அரசு என்றும் கைவிட்டதில்லை. நல்ல பல திட்டங்களையும், மானியங்களையும் வழங்கி வருகிறது. குறைந்த முதலீட்டில் நீங்களும் கோழிப் பண்ணை அமைக்க விரும்பினால் நபார்டு வங்கி (NABARD BANK) 25% மானியம் வழங்குகிறது. அதுவே வறுமை கோட்டுக்கு கீழே வாழ்பவர்களுக்கும், எஸ்சி-எஸ்டி பிரிவினர்களுக்கு 33.33% வரை மானியம் வழங்கப்படுகிறது.


தேவையான வசதிகளை ஏற்பாடு செய்தல்

கோழி வளர்ப்பு அல்லது கோழிப் பண்ணை அமைக்க, முதலில் நீங்கள் ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த இடம் கோழிகளை பாதிக்கும் வகையில் இருக்கக்க கூடாது. காற்று மாசுபாடு இல்லாத இடமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.


இது தவிர, தண்ணீர், சூரிய ஒளி மற்றும் சுத்தமான காற்று கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்திலிருந்து போக்குவரது வசதிகளும் இருக்க வேண்டும். இதற்கு பின்னர், நீங்கள் முதலீட்டிற்கான பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு எஸ்பிஐ (SBI), பிஎன்பி (PNB), எச்டிஎப்சி வங்கி (HDFC BANK), ஐடிபிஐ வங்கி (IDBI BANK) உள்ளிட்ட பல பொது மற்றும் தனியார் வங்கிகள் கடன் வழங்க காத்திருக்கின்றன.


எஸ்.பி.ஐ (SBI) வங்கியில் கடன் பெறுவது எளிது

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி, பிராய்லர் திட்டத்தின் கீழ் கோழிப் பண்ணை அமைக்க கடன் வழங்குகிறது. இதில், கோழிக்குஞ்சுகளை பராமரித்தல், தீவனம் வாங்குதல், கொட்டகை அமைத்தல் என அனைத்திற்கும் கடன் வழங்கப்படுகிறது. எஸ்பிஐ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, நீங்கள் கோழிப் பண்ணை அமைக்கக்கூடிய நிலத்தை அடகு வைத்து வங்கிகள் உங்களுக்கு கடன்களை வழங்க முடியும். இந்த நிலத்தின் மதிப்பு குறைந்தது 50 சதவீத கடனுக்கு ஈடாக இருக்க வேண்டும்.

 

கடனை திருப்பிச் செலுவத்துவது எப்படி?

கோழிப் பண்ணைக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த எஸ்.பி.ஐ வங்கி ஐந்து ஆண்டுகள் அவகாசம் அளிக்கிறது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் முழு கடனையும் நீங்கள் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், உங்களுக்கு ஆறு மாதங்களுக்கு கூடுதல் அவகாசமும் வழங்கப்படும். அதில் மீதமுள்ள தொகை ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் செலுத்தப்பட வேண்டும்.


வங்கிக் கடன் பெற தேவையான ஆவணங்கள்

எஸ்.பி.ஐ. வங்கியிடமிருந்து கோழி கடன் பெற மூன்று முக்கிய ஆவணங்கள் தேவை.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் .


அடையாளச் சான்றுக்காக : வாக்காளர் அடையாள அட்டை / பான் அட்டை / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம்


முகவரிச் சான்றுக்காக : வாக்காளர் அடையாள அட்டை / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் போன்றவை தேவைப்படும்


75% வரை கடன் பெறலாம்

கோழிப்பண்ணையை பொறுத்தவரை, பயிற்சி அல்லது போதுமான அனுபவம் உள்ளவர்களுக்கு அல்லது கோழிப் பண்ணைக்கான கொட்டகை கட்ட போதுமான நிலம் உள்ளவர்களுக்கு வங்கி கடன் வழங்குகிறது. எஸ்.பி.ஐ தற்போது ஆண்டுக்கு 10.60 சதவீத விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. உங்களுடைய மொத்த முதலீட்டிலிருந்து 75 சதவீதம் வரை வங்கிகள் கடன் வழங்கும்.

நன்றி ..


குறிப்பு:..வங்கிகளில் தற்பொழுது நிலவரம் கடன் வாங்குவது கொஞ்சம் தாமதமாகலாம் ..உங்களின் பொறுமையை பொறுத்தது ...

 

கேள்வி : எலக்ட்ரிக்கல் கடை துவங்க எவ்வளவு முதலீடு வேண்டும்? எங்கே எப்படி கொள்முதல் செய்வது?



என் பதில் : 


எலெக்ட்ரிக்கல் கடை துவங்கி மாதம் 55,000 சம்பாதிக்கலம்...


லாந்தர் விளக்குகளையும், விறகு அடுப்பு களையும் இன்றைய தலைமுறையினரில் பலர் பார்த்திருக்ககூட வாய்ப்பு இல்லை. காரணம், பகல் வேளைகளில் கூட பல வீடுகளிலும் அலுவலகங்களிலும் மின்சார விளக்குகள் ஒளிர்ந்துகொண்டு இருப்பதை நாம் பார்த்திருப்போம். மேலும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி பழக்கப்பட்டுவிட்டோம். எனவே, மின்சாதனங்கள் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தநிலையில், எலெக்ட்ரிக்கல் கடை என்பது லாபம் தரும் தொழில்தான்.


’’எலெக்ட்ரிக்கல் கடை வைப்பதில் மூன்று வகை உள்ளது. ஏதாவது ஒரு மின்சார சாதனத்தை மட்டுமே விற்கும் கடைகள். உதாரணம், ஃபேன்களை விற்கும் நிறுவனங்கள். இரண்டாவது வகை, ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களின் எலெக்ட்ரிக்கல் பொருட்களை மட்டும் விற்கும் டீலர்கள். இவைகூட கொஞ்சம் பெரிய அளவிலேயே செய்வார்கள். மூன்றாவது, எல்லாவிதமான மின்பொருட்களையும் விற்கும் சிறிய கடைகள்’’


ஒரு மெடிக்கல் ஷாப் தொடங்க பி.பார்ம் (B.Pharm) என்னும் கல்வித்தகுதி வேண்டும். அரசு மருத்துவத் துறையிலிருந்து லைசன்ஸ் வாங்க வேண்டும். எலெக்ட்ரிக்கல் ஷாப்பிற்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. நேரடியாகவே ஒருவர் தொடங்கலாம். மார்க்கெட் பகுதியில் கடை போட்டிருப்பவர்கள் பதிவு செய்வதுபோல் ஒரு டிரேடராகப் பதிவு செய்துகொண்டால் போதும்.


எஸ்.டி. இல்லாவிட்டாலும் ஒரு வியாபாரியாகப் பதிவு செய்துகொள்வது அவசியம்.கடை தொடங்க நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படும். கடைக்கு அட்வான்ஸ் சுமார் 1 லட்சம் வரை ஆகும். இது கடை இருக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடலாம். அடுத்தது ஸ்டாக். பொருட்களை ஸ்டாக் வைத்துக்கொள்ள குறைந்தது ரூ.1 லட்சம், இரண்டு லட்சம் இருந்தால் நல்லது. மின் பொருட்கள் கொஞ்சம் விலை அதிகம். அதனால் இவ்வளவு தேவைப்படுகிறது. மிக முக்கியமானது ஸ்டாக்கை வைக்கும் அலமாரிகள்.


பெரும்பாலும் கண்ணாடிப் பொருட்கள். ஒரு ஹார்டுவேர் ஷாப்பில் இரும்புச் சாமான்களைக் கொட்டி வைப்பதுபோல் இவற்றை வைக்க முடியாது. அந்தந்தப் பொருட்களை எளிதாக வைக்கவும் எடுக்கவும் வசதியான அலமாரிகளில் வகைப்படுத்தி வைக்க வேண்டும். முன்கடையில் இருக்கும் அலமாரி பிறகு உள்ளே மீதியுள்ள ஸ்டாக்கை வைக்க அலமாரி. இந்த உட் ஒர்க் மற்றும் கணினி சேர்ந்து ரூ.1 லட்சம். ஆக மொத்தம் ரூ.4 லட்சம்.


செலவுகள்: செலவுகள் என்று பார்த்தால், பெரும்பாலும் மற்ற கடைகளைப்போல் வாடகை, மின்சாரம் போன்றவைதான். தொடர்ந்து விளம்பரம் செய்வதற்குக் கூடுதல் செலவுகள் உண்டு. புதியதாக உருவாகும் நகர்ப்பகுதிகளில் ஒரு கடை இருந்தாலும் இன்னொன்றைத் தாங்கும். ஆனால் அருகருகே இரண்டு கடைகளைத் தவிர்க்கலாம்.


நன்றி ...



 கேள்வி : நீங்கள் கற்றுக்கொண்ட சமீபத்திய வாழ்க்கை பாடம் எது?



என் பதில் : 


ஆயிரம் சொந்தமிருந்தாலும் மரணத்தை தனியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும் ..


ஆம் இதுவே நான் கற்ற வாழ்க்கை பாடம் ..காரணத்தை கூறுகிறேன் கேழுங்கள் ..


நேற்று  முன்தினம்  எனது அண்ணியின் தாயார்  இறந்து போனார் ..அவருக்கு ஒரு 76 வயதுதான் இருக்கும் ..திடீரென யாரும் எதிர்பார்மல்வயது முதிர்வு காரணமாக  இறந்து விட்டார் ,நாங்களெல்லாம் அதிரிச்சி யாகி விட்டோம் ..சரிஎன்று அவரர்களது வீட்டிற்கு சென்றோம் ..அன்று பொது முடக்கம் ஆதலால் நெருங்கிய உறவின்முறைகள் மட்டுமே வந்துஇருந்தனர் ..எமது அண்ணியார் தாய் வழி சொந்தமும் ,தந்தை வழி சொந்தமும் மிகப்பெரியது ,கூடவே எங்களது சொந்தபந்தமும் ..அவர் வயது முதிர்வு காரணமாக  மரணித்ததால் உடலை கொரன  காலம் என்பதால்  நீண்ட நேரம் வைத்து இருக்க முடியவில்லை ....கடைசியில் ஆம்புலன்ஸ் வந்தவுடன்  ...4 மணிநேரம் வீட்டில் வைத்திருந்து ,உடனே ஆம்புலன்சில்   மயானத்திற்கு கொண்டு சென்றோம் ..


...எங்கள் ஊர்களில் ஒருவர் மரணித்தால் செய்யப்படும் சடங்குகல் அதிகம் ..மேலும் அனைத்து உறவினர்களும் வந்தபின்தான் இறுதி யாத்திரை தொடங்கும் ...அனால் அங்கு அது எதுவுமே நடைபெற முடியாமல் போய்விட்டது....அங்கிருந்தபோது எனக்கு இதுதான் தோன்றியது.." இத்தனை உறவுகள் இருந்து என்ன புண்ணியம் .. " என்று . என்ன செய்ய விதி....இது அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இப்படித்தானோ என தோன்றியது ...

ஆம் ஆயிரம் சொந்தமிருந்தாலும் மரணத்தை நாம் தனிமையியேயே எதிர்கொள்ள வேண்டும் ....


இதுவே நான் கற்ற சமீபத்திய வாழ்க்கை பாடம் ..

வியாழன், 6 மே, 2021

 கேள்வி : திடீரென நிறைய TMT கம்பி தயாரிப்பு நிறுவனங்கள் உருவாகிறதே, இதன் பின்னணி என்ன? தொலை காட்சிகளில் ப்ரைம் டைம் விளம்பரங்களில் ஐந்தில் ஒன்று முறுக்கு கம்பி விளம்பரம் ஒளி பரப்பாகிறது. இது அவ்வளவு லாபம் தரும் தொழிலா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா?


என் பதில் : 


கண்டிப்பாக லாபம் கொழிக்கும் தொழில் தான் இருப்பினும் அதிகமான கஷ்டங்களும் துன்பங்களும் சவால்களும் நிறைந்த தொழில் இருந்தாலும் உற்பத்தியாளர்களுக்கு இடையே அதிகமான போட்டி உள்ளது


மக்களிடம் தேவையும் அதிகமாக உள்ளது இருப்பினும் மக்களிடம் இருக்கும் விழிப்புணர்வு உள்ளதால் அவரவர்கள் பொருள்களை விளம்பரப் படுத்துவது என்பது அவசியமாகிறது


விளம்பரத்தின் மூலமே நிறுவனங்கள் விற்பனையை உயர்த்த முடிகிறது


உற்பத்தி பொருள் தேங்கினால் அவர்களுக்கு அதிகப்படியான நஷ்டம் ஏற்படும் உற்பத்தி பொருள் வெளியேறும் பட்சத்தில் விற்பனையும் அடையவேண்டும்


அந்த சுழற்சி கரெக்டாக நடந்தால் மட்டுமே லாபம் கொடுக்கும் தொழிலாகவும் தவறினால் கரணம் தப்பினால் கஷ்டம் தான் ..,ரிஸ்க் கொஞ்சம் அதிகம் தான் ..


 நாளை மே 07 ந் தேதி காலை 9.00 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் திமுக தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கிறார் அவருக்கு மேதகு தமிழக கவர்னர் அவர்கள் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து  வைக்கிறார்  அவருடன் 33 அமைச்சர் பெருமக்களும் பல்வேறு துறைகள்  சார்ந்த அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொள்கிறார்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும்,கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக சார்பாகவும் எனது சார்பாகவும் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன்


என்றும் அன்புடன் சிவக்குமார் 

9944066681


செவ்வாய், 4 மே, 2021

 கேள்வி : புதுமணத் தம்பதியருக்கு நீங்கள் வழங்கக்கூடிய சிறந்த நிதி ஆலோசனை என்ன?


என் பதில் : 


'ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழையலாம். ஆனால் ஒரு பணக்காரனால் இறைமையை உணர முயாது' ,


'எல்லாக் கெட்டதுகளின் பின்புலமும், மோசமானப் பணம்தான்',


'பணக்காரர்களால் நல்லவராக இருக்கவே முடியாது',


'Behind every great fortune. there is a crime'. -இப்படி பணத்தைப் பற்றி நாம் தப்பும், தவறுமாகப் புரிந்துக் கொண்டு, பணம் பற்றிப் பேசுவதில் தயக்கம் கொண்டிருந்த காலங்கள் உண்டு!


அன்று, நானும் அந்த 'சம்பிரதாயக் கருத்து' கும்பலில் ஒருத்தனே !


சில 'நல்லவர்கள்', மற்றும் புத்தகங்கள் மூலமே விவேகத்தைப் பெற்றேன். என் வாழ்க்கையைக் கூறு போட்டுப் பார்த்து, என் எண்ணங்களைச் சீரமைத்துக் கொண்டேன்.


ஒருவரின் சுயமதிப்பு, வெற்றி, வளமை, சமூக நிலை, மன நிம்மதி, செல்வாக்கு, மகிழ்ச்சி இவற்றின் மீது பணம் ஒரு வசீகர ஆளுமையைக் கொண்டுள்ளது என இன்று நான் உணர்கிறேன்.


பணம் இல்லாத நிலை ஒரு இழுபறி வாழ்க்கையையும், கவலை, குற்றவுணர்வு, பயம், மன இறுக்கம், விரக்தியையும் தரும். உடல் நலனும் கெடும். பணம் நமக்கு 7 வது அறிவு போலாகிவிட்டது!


இனி,


நான் பெற்றதிலிருந்து, சில அறிவுரைகள் அல்ல பரிந்துரைகள்!


நீங்கள் சம்பாதிப்பது இருவர் என்றாலும், ஒருவரே என்றாலும் சரி, உங்கள் வருமானத்தின் முதல் செலவு, 15% சேமிப்பாக இருக்கட்டும். 10% பொழுது போக்குச் செலவுகள். 5% எளியோர்க்கு உதவ, (நம் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் வேண்டாமா?) அடுத்தவரை மகிழ்ச்சியாக்க என எடுத்து வையுங்கள்.


உங்கள் ஊதியம், முதலீடுகள், கடன் , காப்பீடு, பங்கு பத்திரங்கள், மாதத்தவணைகள் குறித்து உங்கள் இருவருக்குள் வெளிப்படைத் தன்மை (transparency) இன்றியமையாதது. பேசுங்கள், இருவரும் மனம் விட்டுப் பேசுங்கள்.


100 ரூபாய் வருவாயாக வீட்டிற்குள் வந்தாலும் சரி, செலவாகப் போனாலும் சரி அது உங்கள் இருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.


பெற்றோருக்குப் பண உதவி செய்வது, கடன் அடைப்பது சார்பாக நிறையப் பிரச்சனைகள் உங்கள் இருவரிடையே வரலாம். திருமணத்திற்கு முன்பே அதைத் தீர்மானித்துவிடுங்கள்.


உங்கள் தேவைகளை அனுசரித்து (budget) வரவு செலவு பட்டியலிடுங்கள். அது பற்றாக்குறைப் பட்டியலாக (deficit budget) இராமலிருக்கட்டும்.


தினமும் இரவு வரவு, செலவு கணக்கு எழுதுங்கள். அது தேவையற்றச் செலவுகளைக் குறைக்க உதவும்.


உடையது விளம்பேல் - உங்கள் நிதி நிலைமையைப் பற்றி வெளியாட்களிடம் தேவை இன்றிப் பேச வேண்டாம்.


என்னை போன்று ,நிதி ஆலோசகர்களை நாடுங்கள். பணம், எப்படி பணம் பண்ணும் என்றுச் சொல்லித்தருவார்கள்.


சமூகத்தில் நீங்கள் நல்லவராக இருக்கவேண்டியது உங்கள் பொறுப்பும், கடமையும் அல்லவா? அது போன்றே பணக்காரர் ஆவதற்கான உரிமையும், தகுதியும் உங்களுக்கு இருக்கிறது என நினைத்துச் செயல்படுங்கள்.


அதற்காக, பணத்தையே பூஜித்துக்கொண்டு இருக்காதீர்கள். அதனிலும் மேன்மையான, விலைக் கொடுத்தும் வாங்க முடியாத விஷயங்கள் நிறைய இருக்கு!


பணத்துக்காக அற்ப விஷயங்களில் சமரசம் கூடாது.


பணம் பெருக்கும் முயற்சியில் 'வாழ' மறந்துவிடாதீர்கள்.


பணத்தைத் தேடும் முயற்சியில் நீங்கள் 'காணாமல்' போய்விடாதீர்கள். குடும்பமும், உறவுகளும் அவசியம்!


என்றும் நம் நினைவில் இருக்க வேண்டியவை :


பணம், நமது விருப்பங்களுக்காக வேலை செய்யும் பணியாள், அவ்வளவே!


MONEY IS NOT EVERYTHING! IT'S ONLY A MEANS TO ACHIEVE OUR ENDS / GOALS!


நன்றி!

 கேள்வி : எதுபோன்ற நபர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதே நல்லது?


என் பதில் : 


முத‌லில் சில‌ ந‌டைமுறை உதார‌ண‌ங்க‌ளை பார்த்துவிட்டு தொட‌ர‌லாம்.


1. திரு. ராகுல்காந்தி அவ‌ர்க‌ளுக்கு வ‌ய‌து சுமார் 45 வ‌ருட‌ங்க‌ள் இருக்க‌க்கூடும். த‌மிழ‌க‌ தேர்த‌ல் சுற்றுப் ப‌ய‌ண‌த்தின்போது ஒரே கையில் த‌ண்டால், க‌ட‌ல் நீச்ச‌ல் . . . அந்த‌ள‌வு உட‌ல் த‌குதி, ஆரோக்கிய‌ம் உள்ள‌வ‌ர். அந்த‌ஸ்துக்கோ, செல்வ‌ செழிப்பிற்கோ, அறிவிற்கோ, க‌வ‌ர்ச்சிக்கோ, பெண்க‌ள் விரும்பும் நிற‌த்திற்கோ ஒரு குறைவும் இல்லை. ஆனால் அவ‌ர் சிங்கிளாக‌த்தான் இருக்கின்றார். அவ‌ர‌து தாயார் ஐரோப்பிய‌ நாட்டில் வ‌ள‌ர்ந்த‌வ‌ராத‌லால் ம‌க‌னின் சொந்த‌ விச‌ய‌ங்க‌ளில் மூக்கை நுழைக்காம‌ல் நாக‌ரிக‌ம் பேணுகிறார். (இந்திய‌ தாய்மார்க‌ள், ச‌கோத‌ரிக‌ள் சும்மா எரிச்ச‌லூட்டாம‌ல் சோனியா, பிரிய‌ங்கா போன்று அமைதி காக்க‌வும்).


2. ச‌ல்மான்கான் தோற்ற‌தில் அழ‌கான‌ வ‌டிவ‌மைப்புட‌ன் க‌ட்டும‌ஸ்தான‌ ஆண‌ழ‌க‌ன். ஒரு ப‌ட‌த்துக்கு 100 கோடிக்கும் மேல் வாங்குகின்றார். சிங்கிளாக‌த்தான் உள்ளார். அது அவ‌ர‌து விருப்ப‌ம்.


என‌வே


வ‌ட்ட‌ம் போட்டு வாழ்வ‌த‌ற்கு வாழ்க்கை என்ன‌ க‌ணித‌மா?


க‌ணித‌ம் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் அத‌ற்கான‌ விலையை கொடுத்துவிட்டு வாழ‌ப் பழ‌க‌வும்.


இல்லையென்று நினைப்ப‌வ‌ர்க‌ள் அவ‌ர‌வ‌ர் வ‌ழியில் ப‌ய‌ணிக்க‌வும்.


நிற்க‌!


உட‌ல் ஆரோக்கிய‌ம் அற்ற‌ ஆண்க‌ள் திரும‌ண‌ம் செய்யாதிருப்ப‌து க‌ட்டாய‌ம். க‌ருப்பை இன்றியே சில‌ பெண்க‌ள் பிற‌ப்ப‌தாக‌வும், அதை மறைத்து திரும‌ண‌ம் செய்வ‌தாக‌வும், வெகு நாளாகியும் குழ‌ந்தை பிற‌க்காம‌ல் போகும் போதுதான் தெரிய‌ வ‌ந்த‌தாக‌வும் ஒரு ப‌த்திரிகைச் செய்தி ப‌டித்த‌துண்டு. இவ‌ர்க‌ள் செய்வ‌தும் ந‌ல்ல‌த‌ல்ல‌.


க‌ட‌ந்த‌ வருடம்  நீல‌கிரி தோட‌ர் ப‌ழ‌ங்குடி வ‌குப்பின‌ருள் ந‌ட‌ந்த‌ திரும‌ண‌த்தின்போது தாலி க‌ட்டும் நேர‌த்தில் என் காத‌ல‌ர் வ‌ந்து கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு ம‌ணி நேர‌த்தில் வ‌ந்துவிடுவார் என்று ம‌ண‌மேடையில் இருந்து எழுந்த‌ ம‌ண‌ம‌க‌ளைப் போல‌ அக்க‌ப்போர், அப‌த்த‌ம் ந‌ட‌க்காதிருப்ப‌து ந‌ல‌ம்.


நிர‌ந்த‌ர‌ வேலையில் இல்லாத‌வ‌ர்க‌ள் சிங்கிளாக‌ இருக்கும்போதே ஜான் ஏறினால் முழ‌ம் ச‌றுக்கும் வாழ்க்கைக்குச் சொந்த‌க்கார‌ர்க‌ள், சொற்ப வ‌ருமான‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் அக‌ல‌க் கால் வைக்க வேண்டாம். எங்கோயோ போகிற‌ 'பிர‌ச்ச‌னை' யில் வ‌லிய‌ சென்று 2 மீட்ட‌ர் துணி வாங்கி ச‌ட்டை தைத்து போட்டுக்கொள்ள‌ வேண்டாம். வாழ்க்கை ந‌ர‌க‌மாகிவிடும்.


பூனாவில் கொரானாவினால் சுமார் 4000 நிறுவ‌ன‌ங்க‌ள் P.F. ப‌ங்குத் தொகை செலுத்த‌ முடிய‌வில்லை. வேலையே இல்லை. ஊழிய‌ர்க‌ளும் இல்லை என்று ஏதேதோ சொல்வ‌தாக‌ ப‌த்திரிகை செய்தி சொல்கின்ற‌து. இந்தியா முழுதும் டீ க‌டை கார‌ன் அப்ப‌டித்தான் வைத்துள்ளார். 8 ஆயிர‌ம் கோடியில் நாடாளும‌ன்ற‌ க‌ட்ட‌ட‌ம் எப்ப‌டித்தான் க‌ட்டுவானோ! மாநில‌ அர‌சுக‌ளிட‌மிருந்து ச‌க‌ல‌ வ‌ருமான‌த்தையும் பிடுங்கிக் கொண்டு . . .


த‌மிழ‌க‌த்தில் ஆட்சி மாறி இருக்கின்ற‌து. காட்சியும் மாறும், ஒர‌ள‌வாவ‌து அனைவ‌ருக்கும் விடியும் என்று உள‌மாற‌ ந‌ம்புவோம்.



இப்போது இல்ல‌த்த‌ர‌சிக‌ள் குறைவு. அனைவ‌ரும் வேலைக்குச் செல்கின்றார்க‌ள். ஆண்க‌ள் ச‌மைக்க‌ தெரியாவிடில் பாத்திர‌மாவ‌து க‌ழுவி வைக்க‌ வேண்டும். ச‌மைப்ப‌து, வீட்டை பெறுக்குவ‌து, துவைப்ப‌து . . . பெண்க‌ள் வேலை என்று அவ‌ர்க‌ளை ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த‌ காம‌டி பீசுங்க‌ளும் அதையே ந‌ம்பிக்கொண்டு முக‌ஞ்சுழிக்காம‌ல் இது ந‌ம்முடைய‌ வேலைதான், பாட்டி செய்தார்க‌ள், அம்மா செய்தார்க‌ள், நாமும் செய்ய‌வேண்டும் என்று . . . ப‌ட‌ம் ரொம்ப‌ நாளைக்கு ஓடாது.


குடிப்ப‌ழ‌க்க‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் என்றாவ‌து ஒருநாள் நிச்ச‌ய‌ம் குடிநோயாளியாக‌ மாறுவார்க‌ள். ப‌ண்டிகை நாட்க‌ளில், வார‌ இறுதி நாட்க‌ளில் டாஸ்மாக் வியாபார‌ம் அப்ப‌டித்தான் சொல்கின்ற‌து. இல்லையென்றாலும் ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ம‌ருத்துவ‌ச் செல‌வு வெகுசீக்கிர‌ம் வைக்கும்.


அவ‌ர்க‌ள் சிங்கிளாக‌வே இருத்த‌லே ந‌ல‌ம்.


இந்த‌ Pre Flight செக் லிஸ்ட் டிக்க‌டித்துவிட்டால் தாராள‌மாக‌ குடும்ப‌ஸ்த‌ராக‌ . . .


நெஞ்சார்ந்த‌ வாழ்த்துக்க‌ள்!!!

ஞாயிறு, 2 மே, 2021

 மருத்துவக்காப்பீட்டின் அவசியம் ...

📚📚✍️✍️✍️
நான் எனக்கும் என் குடும்பத்திற்கும் மருத்துவ காப்பீடு (health Insurance) எடுக்கலாம் என்று நினைக்கிறேன். எப்படிப்பட்ட காப்பீடு எடுப்பது நல்லது? எந்த நிறுவனத்தில் காப்பீடு செய்வது நல்லது? மருத்துவ காப்பீட்டின் மூலம் ஒரு நாள் மருத்துவம் செய்ய முடியுமா?
மருத்துவகாப்பீடு அவசியம்.
குடும்பத்தில் இருக்கும் அங்கத்தினர்களின் வயதுக்கு ஏற்றபடி சரியான திட்டங்களை தேர்வு செய்யலாம்.
உதாரணமாக ஒருவர் தனக்கும் தனது மனைவிக்கும் மற்றும் இரு குழந்தைகள், பெரியவர்கள் கொண்ட குடும்பத்திற்கும் சேர்த்து floater policy எடுப்பது நல்லது. இதில் பிரீமியம் குறைவு.
ஒரே காப்பீட்டுதொகைக்கு அனைவருக்கும் சேர்த்து பாலிசி தரப்படும்.
ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பாலிசி எடுக்கலாம்.
ஒவ்வொருவருக்கும் தனிதனியாக 5 லட்சம் வரை தனிநபர் பாலிசி எடுக்கலாம் . குடும்பமாக செய்து கொண்டால் அதற்கான தள்ளுபடி உண்டு. மற்றபடி இதில் பிரிமியம் கொஞ்சம் அதிகம்.
உங்களுடைய வயது மற்றும் செலவழிக்கக் கூடிய தொகையைப் பொறுத்து நீங்களே உங்களுக்கான பாலிசியைத் தேர்வு செய்யலாம்.
வரிச் சலுகைகள் உண்டு. தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனது மற்ற பதில்களில் ஏற்கனவே கூறியுள்ளபடி IRDA அங்கீகாரம் பெற்ற எந்த ஒரு காப்பீட்டு நிறுவனத்திலும் காப்புறுதி செய்து கொள்ளலாம்.
ஒருநாள் மருத்துவம் என்பதைப் பொறுத்தவரை சில குறிப்பிட்ட மருத்துவத்திற்கு மட்டும் அனுமதி உண்டு.
பொதுவாக 24 மணி நேரத்திற்கும் மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து , மருத்துவம் செய்து கொண்டால் மட்டுமே அதற்கான இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம்.
அதைவிடக் குறைந்த நேரத்தில் பெறப்பட்ட மருத்துவ சிகிச்சையையும் காப்பீட்டு பத்திரம் அனுமதிக்கும். உதாரணமாக, கண் அறுவை சிகிச்சை, பல் சம்பந்தமான அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ ரீதியான கருச்சிதைவு (உயிரை காப்பாற்ற செய்யக்கூடியது)எதிர்பாராத விபத்துக்கள் ,கருச்சிதைவு போன்றவற்றிற்கு ஒரு நாளை விடக் குறைவான நேரமே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட வேண்டியிருக்கும். அவற்றிற்குக் காப்பீடு உண்டு.
Day care treatment இதில் அடங்கும்.
இதன் விவரங்களை நீங்கள் காப்பீட்டுப் படிவத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com
முக்கிய குறிப்பு.:🥰
முதன்முறையாக் காப்பீடு செய்வதற்கு முன்பு ,ஏற்கனவே ஏதாவது உடல்நலக் கோளாறு இருப்பின் ,முதல் இரண்டு வருடங்களுக்கும்,சில கோளாறுகளுக்கு முதல் நான்கு வருடங்களுக்கும் செலவை தாங்களே ஏற்க வேண்டியிருக்கும். நான்கு வருடங்களுக்குப் பின்னரே காப்பீட்டு நிறுவனம் உங்கள் செலவை ஏற்றுக்கொள்ளும். இவற்றை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டும், அறிந்து கொண்டும் காப்பீடு செய்துகொள்வது நல்லது.📚📚✍️✍️✍️✍️💑

 

கேள்வி : மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாத வாழ்க்கையின் சில யதார்த்தமான விடயங்கள் என்ன?


என் பதில் : 


இன்று சமூகத்தில் பெரும்பாலான பெண்களுக்கு தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதில்லை. பெரும்பாலான பெற்றோர்கள் தன் பெண் பிள்ளைகளுக்கு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை கொடுப்பதில்லை.


காதல் திருமணத்தை மட்டும் சொல்லவில்லை.பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் மாப்பிள்ளையாக இருந்தாலும் அது பெண்ணின் விருப்பமின்றி நடைபெறுகிறது.


இன்று ஓரளவுக்கு மாறினாலும். இன்னும் பெருவாரியான பெற்றோர்களுக்கு அந்த ஏற்றுக்கொள்ளும் தன்மை வரவில்லை. சாதி, மதம், பொருளாதார பிண்ணி அவர்கள் கண்களை மறைத்து விடுகிறது.


பல பெண்கள் கட்டாய திருமணத்தை ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். அதற்காக பெற்றோர்கள் செய்வதை சரி என்று கூறமுடியாது.


விருப்பமில்லாத திருமண வாழ்க்கையில் நுழைவது நரகத்தை விட கொடுமையானது. அதை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும்.


அப்படியென்றால் எல்லோரும் காதல் திருமணம் செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. எந்த முறை திருமணமானாலும் அது பெண்ணின் முழு சம்மதத்துடன் நடக்க வேண்டும்.


இன்று தினம் தினம் எண்ணற்ற காதல் ஜோடிகள் காவல் நிலையங்களில் தஞ்சம் புகுகின்றன. அந்தளவுக்கு பெற்றவர்கள் மனதில் வன்மும் வன்முறையும் புதைந்து கிடக்கிறது.ஆனால் பெற்றவர்களே கண்கண்ட தெய்வம் என்று இந்த சமூகம் சொல்லும்.


ஒரு காலத்தில் சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. அதை இன்று நினைத்துப் பார்த்தால் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனமாக தெரியும். அதைப் போல பின்னாள் வரும் சந்ததியினர் இப்பொழுது நடக்கும் கெளரவக் கொலைகளை பார்த்து ஏளனம் செய்வார்கள்.


ஒருவரை உயிருக்கு உயிராக நேசித்து விட்டு இன்னொருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது மிகுந்த மனத்துயரத்தை ஒரு பெண்ணிற்கு கொடுக்கும்.


பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைகளிடம் சாதகபாதகங்களை சொல்லி புரிய வைக்கலாம்.ஆனால் நிர்பந்திக்க வேண்டியதில்லை. ஆனால், ஆணுக்கு மிகப்பெரிய கட்டுப்பாடுகள் இருப்பதில்லை.


ஆணுக்கும் பெண்ணுக்கு வாழ்க்கைத்துணை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் மிகுந்த பாகுபாடு இருப்பது ஒரு வேதனைக்குரிய விடயமாகும்.


தன் பெண்பிள்ளைகளின் உறவை முறித்துக்கொண்டு எந்த ஒரு ஒட்டு உறவின்றி எண்ணற்ற பெற்றோர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.


அப்படி என்றால் அயோக்கியனை தேர்ந்தெடுத்தால் என்ன செய்வது.? எல்லா பெண்களும் சினிமாவில் காண்பிப்பது போன்று பரதேசிகளையே விரும்புவதில்லை. அது போன்ற சூழ்நிலையை பற்றி இங்கு பேசவரவில்லை. நல்ல மாப்பிள்ளையாக இருந்தும் நிராகரிப்பவர்களைப்பற்றி பேசுகிறேன்.


தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் எல்லா பெற்றோரும் நினைக்கிறார்கள். நீங்கள் சொற்கத்திற்கே சென்றாலும் அங்கு சுதந்திரம் இல்லை என்றால் ஒரு பயனும் இல்லை. அதைப் போலத்தான் நீங்கள் எவ்வளவு அழகான வாழ்க்கை அமைத்துக்கொடுத்தாலும் அதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்றால் எல்லாம் வீண்தான்‌.


காதல் தெய்வீகமானது, புனிதமானது, அழகானது என்று துதிபாட இங்கு வரவில்லை. பெண்ணின் சம்மதமும் விருப்பமும் தான் இந்த பதிவின் மையக்கருத்து.


ஆண்களும் பெண்களும் எத்தனையோ கனவுகளுடன் திருமண பந்தத்தை தொடங்குகிறார்கள். ஆனால் தம் வாழ்க்கைத்துணை வேறுவழியின்றி நம்மை மணக்கிறார்கள் என்று பல பேருக்கு தெரிவதில்லை. உண்மை எப்பொழுதும் ஒளிந்துகொண்டு தான் இருக்கும்‌.


ஒரு பெண் தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதை பல பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.


நன்றி ....வாழ்க்கை வாழ்வதற்கே ...


சனி, 1 மே, 2021

 கேள்வி: சொந்த வீடு வாங்க வாழ்க்கையை தொலைப்பது முட்டாள்தனமா இல்லையா?


என் பதில் : 


சொந்த வீடு வேண்டும் என்பதும் , வேண்டாம் என்பதும் அவரவர் விருப்பம்தான்.


என் அனுபவத்தில் நடந்ததைச் சொல்கிறேன்.


முதலில், நாங்கள் வாடகை வீட்டில் தான் இருந்தோம். வருமானம் நன்றாக இருந்தது. அப்போது எல்லாம் ,சொந்த வீடு வேண்டும் என்ற நினைப்பு இருந்தாலும், தீவிரமாக இல்லை.


வந்தது ஏழரை. வாடகை கொடுக்க முடியாமல் சொந்த ஊருக்கே  சென்று விட்டோம். தினமும் பிரச்சினைகள்.


ஒருவழியாக, மறுபடியும் நகரத்திற்கு வந்து , மறுபடியும் வாடகை வீடு.


ஆனால்,வாடகை வீட்டில் வசிக்கும் பொழுது மிகவும் பொறுமை வேண்டும். இல்லையெனில் பட்டியலைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதுதான்.


ஒருவழியாக, லோன் அரேஞ்ச் செய்து கொடுத்து, வீட்டையும் கட்டித் தரும் ஃபில்டர்ஸ் மூலமாக சொந்த வீட்டில் குடியேறி விட்டோம் வெற்றிகரமாக!!


ஆனால்,முதல் ஒரு வருடத்திற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதை நாங்கள் எதிர்பார்த்ததுதான்.


ஏனெனில், வீடு கட்ட ஆரம்பிக்கும் போதே, பட்ஜெட் போட்டு பார்த்தோம். ஒருவரின் சம்பளம் முழுவதும் லோனுக்கு போய்விடும். இன்னொருவரின் சம்பளத்தில் தான் மளிகை, விசேஷம், ஸ்கூல் ஃபீஸ்,காலேஜ் ஃபீஸ், மாதாந்திர சீட்டு பணம் சமாளிக்க வேண்டும்.


குழந்தைகள் கொஞ்சம் பெரியவர்கள் ஆனதால் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, எங்களுக்கு உதவினார்கள், மனரீதியாக.


முதல் ஆறு மாதங்கள்,மிகக் கடுமையாக இருந்தது ‌‌. அவசரத்திற்கு 15,20 நாள் அல்லது ஒருமாதத் தவணைக்கு ( முடிந்த வரையில் வட்டிக்கு வாங்காமல்) கைமாற்று வாங்கி சமாளித்தோம்.


ஒவ்வொரு சீட்டும் முடிய,முடிய( ஏற்கனவே அவைகள் முடிவதற்கு சில மாதங்கள் மட்டுமே இருந்தது. அதை மட்டும் கொஞ்சம் கவனித்து வீட்டு வேலையை ஆரம்பித்தோம்) எங்களைச் சுற்றி இறுக்கியிருந்த கயிறு, இலேசாக இளக ஆரம்பித்தது.


கடைசி சீட்டும் முடிந்ததும் , முற்றிலும் விடுதலையான உணர்வு!! பரவசம்!!


இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்,இந்த ஆறு மாதங்களில் " திட்டமிடல்" என்னவென்று மேலும் நன்றாகப் புரிந்து கொண்டோம்.


எந்த விஷயம் எதுவென்றாலும், முதலில் ஹவுசிங் லோனுக்கு எடுத்து தனியே வைத்து விட்டுத்தான் மற்ற செலவெல்லாம்.


ஆனால்,ஒரு இரகசியம் தெரியுமா? முதலில் ஏதாவது கைமாற்றாகப் பணம் கேட்டால்,சிறிது தயக்கத்துடன் தருவார்கள்.


ஆனால், இப்பொழுதெல்லாம், கேட்டவுடன் உதவி செய்ய முன்வருகிறார்கள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.


சம்பளம் முழுவதும் கையில் வாங்கியபோது யோசித்தார்கள், இப்பொழுது," பாவம், உங்கள் சம்பளமே லோனுக்குப் போய் விடுகிறது,என்ற செய்வீர்கள்? " என்று இரக்கப்பட்டு உதவுகிறார்கள். ( ஏனெனில்,சொந்த வீட்டை விட்டு எங்கேயும் ஓடிப் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை தான்)


ஆனால்,ஒன்று மட்டும் நிச்சயம். எதுவாக இருந்தாலும் ( வீடோ அல்லது வேறு ஏதாவதோ) விரலுக்கு ஏற்ற வீக்கமாக இருக்க வேண்டும் ‌‌


நான் ஜாதகத்தை நம்புகிறேன். உங்களுக்கு விரய காலம் என்றால் ‌‌‌‌‌‌‌‌அதை சுப விரயமாக மாற்றிக் கொள்ளலாம்.தேவையற்றவிரயங்கள் வந்து, உடலும் மனமும் கெட்டு பணமும் விரயமாவதைவிட , பூமியில் அந்த பணத்தை முதலீடு செய்தால், ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கும். பின்னர் அதன்மூலமே நாம் பல பயன்களை அடையும் போது தான்,அதன் பலனை அனுபவிக்கும் போதுதான் தெரியும்.


உண்மையில்,சொந்த வீட்டில் இருக்கும் போது ( அது ஃபேங்கில் அடமானத்தில் இருந்தாலும். அடமானத்தில் இருப்பது நமக்குத்தானே தெரியும். இன்று அதுதானே ஃபேஷன்) அதன் மரியாதையும், கௌரவமும் தனி!!


வீண் ஆடம்பரமான பொருட்களை ( மறு முறை விற்க முடியாது) கஷ்டப் பட்டு தவணையில் வாங்குகிறோம். அதன் தவணை முடிந்தவுடன் கொஞ்ச வருடங்களில் , அப்பொருளின் ஆயுள் முடிந்து பழைய பேப்பர்காரனிடம் ஒழித்து விட்டு மீண்டும் புதிதாக ,புதிய விலையில் வாங்க வேண்டும்.


ஆனால் வீடு அப்படிப்பட்டது அல்ல,50 /60 வருடங்கள் ஆனாலும்,கட்டிடத்தை ஆல்டர் செய்யலாம். இல்லை இடித்து விட்டு புதிதாக "காம்ப்ளெக்ஸ்" கட்டி வாடகைக்கு விடலாம்.


இன்னும் யோசித்தால், நிறைய ஐடியா கிடைக்கும். கையில் வெண்ணெய்( நிலம்) இருந்தால் நெய்யிற்கு ( போனுக்கு) அலைய வேண்டியதில்லை அல்லவா?


ஆதலால்,சொந்த வீடு கட்டி, தற்காலிக சுகங்களை இழந்தாலும், நிரந்தரமான "மன நிம்மதியை " தருவது " சொந்தவீடு தான்" என்பது என் கருத்து.


( உண்மையில்,ரிடையர்ட்டு லைஃப் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எல்லோர் மனதிலும் ஒரு ஆசை இருக்கும். நமக்கு மட்டும் இருக்காதா? எத்தனை நாள் ஓடியிருப்போம். அறுபது ,எழுபது வயதில் " அக்கடாவென்று" கால் நீட்டி உட்கார நமக்கும் ஒரு இடம் வேண்டுமே.)


இல்லாவிட்டால்,நாளை மருமகள் வந்து," உங்கள் தகப்பனார் இவ்வளவு காலம் சம்பாதித்து என்னத்தை மீதம் வைத்தார்?" என்று கேட்பார்கள். இன்று நாம் செய்யும் நம்முடைய அன்றாட தியாகங்கள்(குழந்தைகளுக்காக) அவர்களுக்கு மறந்துவிடும். நமக்கும் தான். ஒன்றா இரண்டா ஞாபகத்தில் வைத்துக் கொள்ள!!!


என் கருத்து பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளவும். பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள்., அவ்வளவுதான்.


நன்றி ..


சிவக்குமார் .

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com