சனி, 10 அக்டோபர், 2026

எங்கள் மதிப்புக்குரிய இனிய நண்பர் வனத்துறை அதிகாரி கணேஷ் ராம் அவர்கள் ..(வரையாடுகள் திட்ட இயக்குனர் )உடன் உடுமலை வரலாறு சந்திப்பு ...ஏழுமலையான் கோவில் -உடுமலை ..

எங்கள் மதிப்புக்குரிய இனிய நண்பர் வனத்துறை அதிகாரி கணேஷ் ராம் அவர்கள் ..(வரையாடுகள் திட்ட இயக்குனர் )உடன் உடுமலை வரலாறு சந்திப்பு ...ஏழுமலையான் கோவில் -உடுமலை ...

வனத்துறை வரையாடுகள் திட்ட இயக்குனர் கணேஷ் ராம் அவர்கள் எங்கள் தென்கொங்கு நாட்டு நாட்டு முதல் விடுதலை போர் (தளி எத்தலப்பர் )..உடுமலை வரலாறு ...கரை வழிநாட்டு நாகரீகம் ...வரப்போகும் குமண வள்ளல் நூலுக்கு மிகவும் உதவியாக ..கேட்ட தகவல்கள் ..மேற்கு தொடர்ச்சி மலை களப்பணிக்கு நாங்கள் கேட்டவுடன் அனுமதி அளித்து எங்களுடன் வனத்துறை பாதுகாப்பு நண்பர்களை அளித்து எங்களுக்கு தேவையான நேர்காணல் மிகவும் உதவி செய்பவர் ..நமது அனைத்து வெளியிட்ட நூல்களை படித்து எங்களின் பணிகளுக்கு உத்வேகம் அளிப்பவர் ...நேற்று உடுமலையில் ஏழுமலையான் கோவில் தரிசனம் செய்துவிட்டு அவரை சந்தித்து கலந்துரையாடினோம் ..தளி எத்தலப்பர் குறித்து ஏழுமலையான் கோவிலுக்கு மேல் சில வரலாற்று தகவல்களுக்கு உதவிகள் செய்து தருகிறேன் எப்போது செல்லவேண்டும் என்றாலும் முன்னரே சொல்லுங்கள் ..வரையாடுகள் பற்றி விழிப்புணர் தகவல்களை அளித்தார் ...மிக்க மகிழ்ச்சி ..நன்றியுடன் விடைபெற்றோம் அவரிடமிருந்து ....


 வரையாடுகள் ...பொள்ளாச்சி ,உடுமலை ,மூணார் ..வால்பாறை ..நீலகிரி மேற்குத்தொடர்ச்சி மலை 

நீலகிரி வரையாடு (Nilgiri Tahr) என்பது மேற்குத்தொடர்ச்சி மலையின் உயர் மலைப்பகுதிகளில் காணப்படும் ஒரு வகையான மலை ஆடு ஆகும். இது தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.

 

முக்கிய தகவல்கள்:

 

·         வேறு பெயர்கள்: தமிழில் 'வரையாடு' (வரையில் - மலையில் வாழும் ஆடு) என்றும், மலையாளத்தில் 'வரியாடு' என்றும் அழைக்கப்படுகிறது.

·         வாழ்விடம்: மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள செங்குத்தான பாறைகள், புல்வெளிகள் மற்றும் சோலைக்காடுகள் நிறைந்த பகுதிகளில் வாழ்கிறது.

·          

·         பாதுகாப்பு நிலை: இது அழியும் ஆபத்தில் உள்ள உயிரினமாக (Endangered) IUCN பட்டியலிலும், இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் முதல் அட்டவணையிலும் இடம் பெற்றுள்ளது.

·         குறிப்பிட்டுள்ள  இடங்கள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை:

·         பொள்ளாச்சி மற்றும் உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் கிராஸ் ஹில்ஸ் (Grass Hills) போன்ற உடுமலை, பொொள்ளாச்சியை ஒட்டிய மலைப்பகுதிகள் வரையாடுகளுக்கு மிக முக்கியமான வாழ்விடமாகும். வால்பாறை: பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் (9-வது வளைவு - லோம்ஸ் வியூ பாயிண்ட் மற்றும் தேயிலை தோட்டப் பகுதிகள்) வரையாடுகளைப் பார்க்க முடியும்.

·          

·         மூணார்: கேரளாவின் மூணாரில் உள்ள எரவிகுளம் தேசியப் பூங்கா உலகில் அதிக அளவிலான நீலகிரி வரையாடுகள் வாழும் இடமாக உள்ளது

 

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -நிதி ஆலோசகர் .9944066681....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக