என் சென்னை பயணம் ....பிரவீன் ட்ராவில்ஸ் ..
பிரவீன் தம்பியை கடந்த நான்கு வருடங்களுக்கு முன் என் நண்பரை பார்க்க தாம்பரம் டு ஈஞ்சம்பாக்கம் சென்றபொழுது ஒரு மணி நேரம் பயணத்தில் உரையாடினேன் குடும்ப விவரம் பற்றி கேட்டுக்கொண்டே பயணம் செய்தியின் தம்பி 26 வயது ஆட்டோ ஓட்டிக்கொண்டு உள்ளேன் .கூடப்பிறந்த அக்காவிற்கு திருமணம் முடிந்துவிட்டது ..தந்தை தனியார் நிறுவனத்தில் வேலை இருப்பதாக தெரிவித்தார் ...தம்பி பிரவீன் தம்பி டெய்லி ஆட்டோ ஒட்டி டெய்லி வருமானம் வருகிறது ..மாதம்வருமானம் நாற்பதாயிரம் மேல் என்றார் ...தம்பி என்னை பற்றி விசாரித்தார் நான் வங்கியில் வீட்டுக்கடன் பிரிவில் அதிகாரியாக உள்ளேன் தம்பி என்றேன் ..சார் நானும் வீடு வாங்க வேண்டும் என்ன நடைமுறை என்றார் ...தம்பி இந்த ஆட்டோவிற்கு பெயர் வைக்கவேண்டும் என்றேன் ..உதயம் என்ற தொழில் சான்றதழ் பெறவேண்டும் ..வருடம் வருமானம் என்று வருமானத்திற்கு வருமானம் வரி கட்டவேண்டும் வருடம் 5000 ஆகும் ..இதை முறையாக செய்தால் ..உங்கள் வீடு வாங்கும் கனவு நிறைவேறும் என்று கூறினேன் ..
சரிங்க சார் ...அடுத்த நாள் சென்னையில் நான் அறிமுகப்படுத்திய ஆடிட்டர் அவர்களை பார்த்து உதயம் பிரவீன் ட்ராவில்ஸ் பதிவு செய்தார் ..உடனே என்னை அழைத்து நீங்கள் சொன்ன மாதிரி ரிஜிஸ்டர் பண்ணிட்டேன் ..முதல் வருடம் வருமானவரி தாக்கல் செய்துவிட்டேன் என்றார் ..நானும் பணியின் காரணமாக மறந்துவிட்டேன் ..அவொப்பொழுது அழைத்து பேசுவார் ..நானும் நலம் விசாரித்து விட்டு வருடம் ஒருமுறை சென்னை செல்லும்பொழுது பேசுவேன் ..அருகில் இருந்தால் பிரவீன் ட்ராவில்ஸ் மூலம் நண்பர்கள் ,சொந்தங்கள் இருக்கும் வீடுகளுக்கு சென்று வருவேன் ..நல்ல நண்பராக அவொப்பொழுது பேசிக்கொண்டோம் ..மூன்று வருடம் இப்படியே சென்றுவிட்டது ..கடந்த ஜனவரி மாதம் அழைத்தார் ..மூன்று வருடம் கட்டிவிட்டேன் ..இப்பொழுது இடம் பார்த்துக்கொண்டு உள்ளேன் ..நங்கநல்லூர் பக்கம் பார்த்துவிட்டேன் வீடு கட்டிக்கொண்டு இருப்பதாக கூறினார் ..வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு என் பணிய பார்த்துக்கொண்டு இருந்தேன் .. கடந்த வாரம் சென்னை சென்றபொழுது இவரை அழைத்தேன் ..அழைத்தவுடன் இருகாங்க சார் பயணியுடன் சவாரியில் இருப்பதாக கூறினார் ..முடிந்தவுடன் சார் எங்க இருக்கீங்க என்றார் ..தம்பி நான் தாம்பரத்தில் என் சொந்தக்காரர் வீட்டில் இருக்கிறேன் ..அங்கு இருந்து நண்பர் வீட்டுக்கு செல்லவேண்டும் என்று கூறினேன் ..5 நிமிடத்தில் வந்து அழைத்து சென்றார் ..
நண்பரின் வீட்டில் பேசிவிட்டு கிளம்பும்பொழுது சார் எங்கள் வீட்டுக்கு செல்லவேண்டும் வாருங்கள் என்று அவர் கட்டிய புது வீட்டுக்கு அழைத்து சென்று அவர்களின் பெற்றோர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் ..மகிழ்ச்சி யாக இருந்தது ..சார் நான்கு வருடங்களுக்கு முன் நீங்கள் சொன்னது போல் உதயம் ,வருமானவரி எல்லாம் சரியாக கட்டி அதில் நீங்கள் சொன்னது போல் எங்கள் அம்மா ,அப்பாவின் கனவை நிறைவேற்றி விட்டேன் சார் என்றார் ..மகிழ்ச்சி ..எனக்காக எடுத்து வைத்த இருந்த புதுத்துணிகளை எனக்கு பரிசளித்தார் இது என்னுடன் உடன் பிறந்த சகோதரர் போல் இதை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றார் என்னால் மறுப்பு சொல்லமுடியாமல் வாங்கிக்கொண்டேன் ..ஏன் என்றால் நான் நான்கு வருடங்களுக்கு முன் வழிபயணித்தில் நான் கூறிய தன்னம்பிக்கை வார்த்தையை வேதவாக்காக எடுத்து வருடம் தவறாமல் வருமானவரி கட்டி அதன் மூலம் தானே சொந்த சம்பாத்தியத்தில் வீட்டுக்கனவை நிறைவேற்றி இருக்கிறார் அவருக்கு நான் நன்றி சொல்லும்விதமாக எடுத்துக்கொண்டேன் ..
தற்பொழுது மூன்று ஆட்டோ ,ஒரு கார் என்று நான்கு வாகனங்கள் வெற்றிகரமாக இயக்கி கொண்டு உள்ளார் ..இதையும் அவர்கள் சொந்தங்களுக்கு வேலை வாய்ப்பாக பயன்படுத்தி பிரவீன் ட்ராவில்ஸ் என்று வெற்றிகரமாக இயக்கி கொண்டு உள்ளார் ..தற்பொழுது அவருக்கு திருமணத்திற்கு பொண்ணு பார்த்து நிச்சியம் செய்துவிட்டார்கள் ..வரும் தைமாதம் திருமணம் என்று பத்திரிகை அனுப்புவதாகவும் கண்டிப்பாக வரவேண்டும் கூறியுள்ளார் ...இதோடு நிற்கவில்லை அவரின் அக்கா கணவர் கார் பாலிஷ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் அவர்களுக்கும்இரண்டு வருடமாக வருமானவரி கட்டிக்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார் ..அடுத்தவருடம் முடிந்தவுடன் அவர்களுக்கும் இதே போன்ற பணியை செய்துகொண்டுள்ளார் என்று தெரிவித்தார் ..எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது ..
நானும் நம் சொந்தக்களிடம் நண்பர்களுடன் இதையே தெரிவிப்பேன் ..ஒரு முறை செய்யவார்கள் அடுத்த வருடம் செய்ய மாட்டார்கள் ..நானும் விடாமல் நினைவு படுத்தி அவர்களை வருமானவரி கட்டி குடும்ப வருமானத்தை பெருக்க முயற்சி செய்வேன் ..அதில் வெற்றி பெற்றவர்கள் என்னோடு பயணித்திக்கொண்டுள்ளார்கள் ..இடையில் நின்றவர்கள் வேடிக்கை மனிதர்களாக என்னை பார்ப்பார்கள் ..அதை நானும் கண்டு கொள்வதில்லை கடந்துவிடுவேன் ..வேறு என்ன செய்ய ...தற்பொழுது அடுத்த வருடம் மட்டும் ஆறு சொந்தங்கள் வருமானவரி தாக்கல் செய்த சொந்தங்கள் கனவு இல்லம் ...அவர்களின் வியாபாரத்தாய் முன்னேற்ற பாதையில் வழிநடத்தி கொண்டுள்ளேன் ...இப்படி இந்த சென்னை பயணம் மகிழ்ச்சியாக இருந்தது ...என் வாழ்வின் வெற்றியாக இதை கருதுகிறேன் ...நன்றி ..தொடரும் என் நிதி ஆலோசகர் பணி ....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -நிதி ஆலோசகர் -9944066681....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக