செவ்வாய், 6 அக்டோபர், 2026

இன்று சந்தித்த சொந்தம் ..என் மாப்பிள்ளை காளீஸ் ....மாப்பிள்ளையை நீங்கள் யாருடைய மகன் என்று கேட்டேன் ...

   கடந்த ஞாயிறு கொடிங்கியம் தம்பி அயோத்தி ராமன் -முத்துலட்சுமி ..மகள் சீர் நிகழ்வில் கலந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி ...

காலையில் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் எப்பொழுதும் எனது பணி வரலாற்று பணியுடன் ...தொழில் சார்ந்து ..நம் சொந்தங்களை சந்திக்கும் விடுமுறை நாளை கடந்த 20 வருடங்களாக மகிழ்ச்சியாக சந்திக்கும் தினமாக வைத்து கொண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வேன் ..

இன்று சந்தித்த சொந்தம் ..என் மாப்பிள்ளை காளீஸ் ....மாப்பிள்ளையை நீங்கள் யாருடைய மகன் என்று கேட்டேன் ...மாப்பிளை அவரின் அப்பா பெயரை சொன்னவுடன் ...ஒரு நிமிடம் மனதிலும் ..என் கண்களில் கண்ணீரையும் கட்டுப்படுத்திக்கொண்டு ..மாப்பிளையுடன் பேசினேன் ..முதலில் நன்றியை தெரிவித்து கொண்டேன் ...ஏன் என்றால் ...என் தந்தை 2018 இல் ...கடைசி நிமிட மூச்சு காற்று ...உடன் இயற்கையுடன் (இறப்பு )கலந்துகொள்ள தயாராக கொண்டு இருந்தார் ...முதலில் அழைத்தது  புகைப்பட கலைஞர் ராஜேந்திரன் தம்பியை ..மருத்துவரை பார்க்கவேண்டும் என்று கேட்டேன் .கேட்டவுடன் தம்பி ..நம் பெரிய பாப்பனூத்து மாப்பிளை ஜனனி மருத்துவமனை பழனிசாமி அவர்களை தான் கூறினார் ..மாப்பிள்ளையை சந்தித்து அவரை என் வீட்டுக்கு அழைத்து வந்து அப்பாவின் நாடி பிடித்து பார்த்து கூறினார் ..அப்பாவின் நாடி குறைந்து விட்டது ..மருத்துவமனையில்  மருத்துவரை வந்து  பார்த்தாலும்  இதையே தான் கூறுவார் ...அதற்குள் எங்கள் வீட்டு அருகிலேயே இருக்கும் செவிலியர் ராணி அக்கா வும் அதையே கூறினார் ...


அதற்கு பிறகு அன்று இரவு 11 மணி அளவில் இயற்கையோடு கலந்துவிட்டார் அப்பா ....வருடங்கள் 10 கடந்தாலும் இன்றும் பழனிசாமி மாப்பிளை நினைவில் வந்து சென்றார் ..தற்பொழுது உடுமலையில் ,பெரிய பாப்பனூத்து ஊரில் நேரில் பார்த்தாலும் ..நலம் விசாரித்து கொள்வேன் ..இன்றைய சீர் நிகழ்வில் மாப்பிளை காளீஸ் உடன் சந்தித்து இதையெல்லம் சொல்லி அவரின் அப்பாவின் மறக்க முடியா உதவிகளை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டேன் ..மாப்பிளையை சிறு வயது ..பள்ளி ..கல்லூரிக்கு செல்லும் பொழுது நலம் விசாரித்து கொள்வேன் ..இன்று கோவையில் முன்னணி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு உள்ளார் ..இன்று என் தோலுக்கு மேல் வளர்ந்து தோழனாக ...அருகில் நின்றது எனக்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ..என் மாப்பிளையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு சீர் நிகழ்வு மதிய விருந்து மகிழ்ச்சியோடு அன்போடு பரிமாறிய நம் சொந்தங்கள் உடன் உணவை முடித்திக்கொண்டு நிகழ்வு நடக்கும் அரங்கில் வந்து நம் சொந்தங்களோடு பேசிக்கொண்டும் ..விடைபெற்றேன் ...மகிழ்ச்சி என்பதைவிட பெரும் மகிழ்வு என்றே சொல்வேன் ..இந்த நிகழ்வை ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -நிதி ஆலோசகர் -9944066681....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக