புதன், 21 அக்டோபர், 2026

நேர்காணல் மாஸ்டர் கெளதம் மாரிமுத்து -தளி ....

 நேர்காணல் மாஸ்டர் கெளதம் மாரிமுத்து -தளி ....

மாப்பிளை கெளதம் மாரிமுத்து கொடுங்கியம் பள்ளியில் பதினென்றா ம் வகுப்பு படித்துக்கொண்டு உள்ளார் .தனது சிறு வயது முதலே நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளை நிகழ்வுகளுக்கு தனது  தந்தை ஆசிரியர் மாரிமுத்து மாப்பிள்ளையுடன் வந்து கலந்துகொள்வார் ..நாங்கள் பேசும் அறக்கட்டளை குழுவில் கல்விக்கான உதவிகள் ...வேலைவாய்ப்பு பற்றி தகவல்கள் கலந்துரையாடல் பேசும் செய்திகளை உள்வாங்கி கொள்வார் ..சிறுவயதில் குழந்தைகளை இது மாதிரி கூட்டங்களுக்கு வரும்போது விளையாட்டு ,பேசும்பொழுது இடையூறு செய்பவர்கள் ..அதற்கான புரிதல் இல்லாமல் இருக்கும் குழந்தைப்பருவம் என்பதால் ..கெளதம் மாப்பிள கவனமாக நாங்கள் பேசும் தகவல்களை கேட்டுக்கொண்டு இருப்பார் ...அதன் பலன் தான் இன்று அவரின் தோட்டம் தீபாலப்பட்டி யில் என்னை அழைத்து வருவதற்கு தோட்டம் முன் வாயிலில் வந்து அழைத்து சென்றார் ..அவரின் தோட்டத்தில் வளர்ந்து இருக்கும் தென்னை ..மாமரம் ...மற்றும் வரும் மாதங்களில் பயிரிட போகும் வேளாண்மை பயிரிகளை பற்றி விரிவாக கூறினார் ..என்னென்ன பருவத்தில் என்னென்ன பயிரிடவேண்டும் ...என்று தெளிவாக விளக்கி கூறினார் ..இந்த வயதில் விடுமுறை நாட்களில் எல்லோரும் தனது நண்பர்களுடன் சினிமா ..வேட்டை நாய்களுடன் தோட்டங்களில் சுற்றிக்கொண்டு நேரத்தை கழித்து கொண்டும் ...மாட்டுவண்டி ரேக்ளா ரேஸ் என்று கலந்துகொண்டு நேரத்தை கடத்திக்கொண்டு இல்லாமல் ..பொறுப்பாக விடுமுறை நாட்களில் தனது தோட்டத்தில் கிணறு வெட்டும் பணியை பார்வை இட்டு அவர்களுக்கு உதவிகள் செய்து கொண்டு அடுத்தடுத்து பணிகளை செய்துகொண்டு இருந்தார் ..தோட்ட வேலை முடிந்தவுடன் தனது படிப்பை மாலை தொடர்ந்து கொண்டு இருந்தார் ..இப்போதோ இந்த வயதில் தனது பெற்றோர்களுக்கு உதவிகள் செய்து வாழ்வின் அடுத்த கட்ட பணிகளை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது ..

மாஸ்டர் கெளதம் மாப்பிள்ளையிடம் உன் எதிர்கால திட்டம் பற்றி கேட்டேன் தற்பொழுது படிப்பு தோட்டம் ...முதல் பணி என்றும் ...கல்லூரி செல்லும் முன் தற்பொழுது என்னென்ன படிப்பு இருக்கிறது என்று தனது நண்பர்கள் ..தனது அப்பாவிடம் .பள்ளி ஆசிரியர் களுடன் கேட்டு வைத்து உள்ளேன் ..எனக்கு பிடித்த ஆர்வம் உள்ள துறை சார்ந்த படிப்பை முடித்து ...தனது வேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்களுக்கு சென்று பணியாற்றுவேன் என்றும் ...கூறினார் ..நிறுவனத்தில் பணியாற்றினாலும் சனி ..ஞாயிறு என்றால் கண்டிப்பாக தோட்டம் வந்து விவசாய பணியை மேற்கொள்வேன் என்று கூறினார் ...எப்படி ஆர்வம் வந்தது என்று கேட்டேன் ..தனது தந்தை தாய் தான் ரோல் மாடல் என்று கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது ..ஏன் என்றால் சினிமா நடிகர்கள் ..விளையாட்டு வீரர்கள் ரோல் மாடல் என்பார்கள் ...ஆனால் கெளதம் மாப்பிளை கூறியது ஆச்சிரியமாக இருந்தது எனக்கு ...கடைசியாக ஒரு செய்தி சொன்னது தான் எனக்கு என்னால் இன்னும் மனதை நம்ப முடியவில்லை ...கூறிய செய்தி ..உங்கள் மொபைலில் வரும் உங்கள் வாட்ஸ் அப் பதிவுகள் என் தந்தை ..தாய் வைத்து இருக்கும் மொபைலில் நீங்கள் பகிரும் செய்திகளை தகவல்களை படித்து விடுவேன் என்றார் ...எனக்கு மற்றட்ட மகிழ்ச்சி ..ஏதோ ஒரு விதத்தில் நம் செய்திகள் இந்த பருவத்தில் இருக்கும் குழந்தைகளும் படிக்கிறார்கள் எனக்கு மகிழ்ச்சியே ...ஆசிரியர் மாரிமுத்து முத்து மாப்பிளை எனது சகோதரிக்கும் ,குட்டி தம்பி பிறையன்பு தம்பிக்கும் எனது வாழ்த்துக்கள் ...

தொடரும் சொந்தங்களின் சந்திப்பு ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -நிதி ஆலோசகர் -9944066681...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக