ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

இன்றைய ஞாயிறு ..🥰27-09-2020

 இன்றைய ஞாயிறு ..🥰



நீண்ட மாதங்களுக்கு பிறகு அருமையான எங்கள் வீட்டு குட்டி செல்வங்களுடன் சாய் நந்த கிஷோர் நாகராஜ் ,ஜெய்வந்த் விஜயக்குமார் தளி ஜல்லிபட்டி முன்னோர் வழிபாடு பொம்மையன் கோவில் தரிசனம் , காலை நேர உணவோடு குட்டி சொந்தங்களின் குதூகுலம் தரிசனம் முடித்து ..அழகான தளி பாளையப்பட்டு வழியாக மும்மூர்த்தி வீற்றீறுக்கும்  திருமூர்த்தி மலை வழிபாடு ..




மதியநேர உச்சிகால பூஜை அருமையான தரிசனம்..மனதில் ஒரு மகிழ்ச்சி ...வழிபாடு முடித்துவிட்டு .வரும் வழியில் .குழந்தை செல்வங்களுக்கு இந்திய விடுதலைக்கு முதல் குரல் கொடுத்த தளி எத்தலப்பர் வம்சாவளி தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் அணைப்பகுதியில் இருக்கும் சுற்று கோவில் காண்பித்து வழிபாடு செய்து விட்டு அதன் வீரம் நிறைந்த விடுதலை செய்திகளை சொல்லி அதன் குதூகலத்தோடு அணைப்பகுதியில் பாறை குடைவு முறையில் வரும் காண்டூர் கால்வாய் வரும் ஜோ என்று சத்தத்துடன் ஆர்ப்பரித்து ஆழியாறு நீரை பார்த்து  குழந்தை செல்வங்கள் குதூகலிக்கும் சிரிப்பின் சத்தத்தோடு மகிழ்வுந்தில் தங்களுக்கு பிடித்த பாடலோடு பள்ளபாளையத்தில் இருக்கும் தென் திருப்பதி கோவிலின் எதிர்பாரா வழிபாடு செய்துவிட்டு உடுமலையின் நகரத்தை அடைந்தது இன்றைய ஞாயிறு தினம் ஒரு ஆன்மீக பயணமாக அமைந்தது  மிக்க மகிழ்ச்சி ....




என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 


9944066681...  📚📚✍️✍️✍️🌱🌱🌳🌳🌷🌷🥰🥰

 இன்றைய ஞாயிறு ..


நீண்ட மாதங்களுக்கு பிறகு அருமையான எங்கள் வீட்டு குட்டி செல்வங்களுடன் சாய் நந்த கிஷோர் நாகராஜ் ,ஜெய்வந்த் விஜயக்குமார் தளி ஜல்லிபட்டி முன்னோர் வழிபாடு பொம்மையன் கோவில் தரிசனம் , காலை நேர உணவோடு குட்டி சொந்தங்களின் குதூகுலம் தரிசனம் முடித்து ..அழகான தளி பாளையப்பட்டு வழியாக மும்மூர்த்தி வீற்றீறுக்கும்  திருமூர்த்தி மலை வழிபாடு ..


மதியநேர உச்சிகால பூஜை அருமையான தரிசனம்..மனதில் ஒரு மகிழ்ச்சி ...வழிபாடு முடித்துவிட்டு .வரும் வழியில் .குழந்தை செல்வங்களுக்கு இந்திய விடுதலைக்கு முதல் குரல் கொடுத்த தளி எத்தலப்பர் வம்சாவளி தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் அணைப்பகுதியில் இருக்கும் சுற்று கோவில் காண்பித்து வழிபாடு செய்து விட்டு அதன் வீரம் நிறைந்த விடுதலை செய்திகளை சொல்லி அதன் குதூகலத்தோடு அணைப்பகுதியில் பாறை குடைவு முறையில் வரும் காண்டூர் கால்வாய் வரும் ஜோ என்று சத்தத்துடன் குழந்தை செல்வங்கள் குதூகலிக்கும் சிரிப்பின் சத்தத்தோடு மகிழ்வுந்தில் தங்களுக்கு பிடித்த பாடலோடு பள்ளபாளையத்தில் இருக்கும் தென் திருப்பதி கோவிலின் எதிர்பாரா வழிபாடு செய்துவிட்டு உடுமலையின் நகரத்தை அடைந்தது இன்றைய ஞாயிறு தினம் ஒரு ஆன்மீக பயணமாக அமைந்தது  மிக்க மகிழ்ச்சி ....


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681...     

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

கேள்வி : பொறாமைப்படும் நபர்கள் முகேஷ் அம்பானியையோ ரத்தன் டாடாவையோ பார்த்து பொறாமைப் படுவதில்லை, பக்கத்து வீட்டுக்காரனையும் சொந்தக்காரனையும் பார்த்து தான் பொறாமைப் படுகிறார்கள். இது ஏன்?

கேள்வி :  பொறாமைப்படும் நபர்கள் முகேஷ் அம்பானியையோ ரத்தன் டாடாவையோ பார்த்து பொறாமைப் படுவதில்லை, பக்கத்து வீட்டுக்காரனையும் சொந்தக்காரனையும் பார்த்து தான் பொறாமைப் படுகிறார்கள். இது ஏன்?


என் பதில் : 


பொறாமை என்பதற்கு ஆங்கிலத்தில் சரியான பதம் Envy.


Envy என்ற வார்த்தை Invidia என்ற லத்தின் வார்த்தையில் இருந்து மருவியது

Invidia என்றால் நாம் பார்க்காதது ‘Non sight’

Envy என்பதற்கு உளவியல் ரீதியான விளக்கம்

ஒருவர் ஆழ்மனதில் ஒரு குறிப்பிட்ட ஆசை இருக்க வேண்டும்

அவர் பொறாமைப்படுபவர் கூட ஏதாவது பழக்கம் இருக்க வேண்டும் (interface with that person)

அந்த ஆசை இந்த பழக்கப்பட்ட நபரைப் பார்க்கும்போது தூண்டப்பட்டு மன வலியைக் கொடுக்க வேண்டும்.

அம்பானி நம்ம பக்கத்தில இல்ல, அதனால மனசு வலிக்கல, பக்கத்து வீட்டுகாரர பார்க்க முடியும், அதனால வலிக்குது. இதான் லாஜிக்.


இதனோடு ‘Fear of Beauty( அழகின் மேல் பயம்)’ என்ற விளைவையும் தொடர்பு படுத்தலாம். ரயிலில் ஒரு அழகானவர் அமர்ந்து இருக்கிறார், (உங்களோட பாலினம்) நிறைய பேர் அவருக்கு அருகில் உட்காரமாட்டார்களாம். ஏன்?


அந்த நபருடன் நம்மை ஒப்பிட, கேலிசெய்ய வாய்ப்பு உள்ளதால். சுமாரான ஆளோட உட்கார்ந்தால் நம்ம விமர்சிக்கப்பட மாட்டோம்.


Envy க்கும் அதே லாஜிக் தான். ‘ஏங்க அம்பானிய பாருங்க எவ்வளவு சம்பாதிக்கறார், நீங்களும் இருக்கீங்களே’ என உங்க வீட்ல திட்ட வாய்ப்பில்லை. பக்கத்து வீட்டுக்காரருடன் ஒப்பிட்டுத் திட்ட வாய்ப்புண்டு. அந்த வாய்ப்பு உங்களுக்கு பயத்தை தருகிறது. அதான் பொறாமை!!


நன்றி ...

சனி, 19 செப்டம்பர், 2020

முன்னோர் வழிபாடு மூத்தோர் வழிபாடு

 நாட்டுப்புற வழிபாட்டு  வீர வரலாறு 📚📚✍️✍️

முன்னோர் வழிபாடு மூத்தோர் வழிபாடு  

உடுமலைப்பேட்டைக்கு பெயர் பெற்ற  சுற்றுலாத்தலமான  திருமூர்த்தி மலையில் காண்டூர் கால்வாய்க்கு அருகில்   சிலைகளாக வீற்றிருககும் விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு அவர்களது வம்சாவளியினர்  இன்று  புரட்டாசி  வெள்ளிக்கிழமை  தம் பண்பாட்டு விழாவாக நடத்தினர்.

இந்த நிகழ்வை பாரம்பரிய முறைப்படி  ஐநூறுக்கும் மேற்பட்ட  பெண்களும் ஆண்களும் தேவராட்டம் ஆடி   தங்களது   முன்னோருக்கு   தங்களது  வீர வணக்கத்தினை பதிவு செய்தனர்.

தேவராட்டத்தில்  இருக்கும் அத்தனை அசைவுகளையும் அபிநயத்துடனும், வீராவேசத்துடனும்,பண்புடனும், பாங்குடனும்   நடனமாடி தம்முடைய முன்னோர்களை வீரத்தின் விளைநிலைமாக விளங்கிய தளி எத்தலப்ப  மன்னரை நினைவு கூர்ந்தனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தேவராட்டம் மிகவும் சிறப்பாகவும் அற்புதமாகவும்  அதிகளவில் பொது மக்களை நின்று காணவும் செய்தது என்று சொன்னால் மிகையில்லை.👍👍🥰🥰📚📚✍️✍️

 ஷியாம் சுதிர் சிவக்குமார் ...

🎂🎂🎂👍👍👍
என்னையும் ஒரு உயர்நத சிம்மாசனத்துக்கு அழைத்து சென்றவர்
என்னையும் ஒரு அன்புக்கு அடிமையாக்கியவர்
என் கவலைகளையெல்லாம் அவர் முகம் பார்த்தவுடன் பஞ்சாக காற்றினில் பறக்க செய்தவர் ..
எப்பொழுதும் என் கழுத்தை பற்றி தொங்கிக்கொண்டிருப்பவர்
அழகான ,அற்புதமான ,புன்சிரிப்பும்
சின்ன ,சின்ன ,குறும்புகள் செய்தாலும் ,அதில் ஒரு ஆனந்தம் இருக்குமாறு பார்த்துக்கொள்பவர் ...
இன்று தன் 13-வது பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் வீட்டுக்
🌿🌿🌿🌷🌷💐💐💐
.என் உயிர் மூச்சு ,காற்றுடன் இரண்டற கலந்தவனுக்கு .
முகநூல் ..
.வாட்ஸஅப்ப் .
.பின்டரஸ்ட் ...
ட்விட்டர் ...
இன்ஸ்டாகிராம்...தொலைதூர தொழில்நுட்பம் மூலம்
வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681

வியாழன், 17 செப்டம்பர், 2020

என்னையும் ஒரு உயர்நத சிம்மாசனத்துக்கு அழைத்து சென்றவர்


ஷியாம் சுதிர் ...

என்னையும் ஒரு உயர்நத சிம்மாசனத்துக்கு அழைத்து சென்றவர்

என்னையும் ஒரு அன்புக்கு அடிமையாக்கியவர்

என் கவலைகளையெல்லாம் அவர் முகம் பார்த்தவுடன் பஞ்சாக காற்றினில் பறக்க செய்தவர் ..

எப்பொழுதும் என் கழுத்தை பற்றி தொங்கிக்கொண்டிருப்பவர்

அழகான ,அற்புதமான ,புன்சிரிப்பும்

சின்ன ,சின்ன ,குறும்புகள் செய்தாலும் ,அதில் ஒரு ஆனந்தம் இருக்குமாறு பார்த்துக்கொள்பவர் ...

அன்பில் விளைந்த
செல்ல மகனுக்கு
ஆயிரம் ஆயிரம்...
அன்பு முத்தங்கள்...

எத்தனை நிமிடங்கள்
உன்னுடன் இன்பமாய்
கழித்து இருக்கிறேன்..
என்னுடனே எப்போதும்
இருந்து கொண்டு..
எத்தனை சேட்டைகள்
அத்தனையும் எனக்கு
உன் அன்பின் அர்த்தங்கள்!

முத்தங்கள் ஆயிரம் கொடுக்க
உன் செல்ல கடிகளே..
ஆயிர ஆயிர ஆண்டுக்கு
அன்பை சொல்லும்...!

மலர்கள் பூத்து குலுங்கும்
உன் புன்னகையை பார்த்தது !
உன் குறும்பை பார்க்க
நேரத்திற்கே நேரம்
போதவில்லையாம்!!!!

கத்திக் கொண்டே
ஓடி வந்து என் கழுத்தைக்
கட்டிப்பிடித்து ஊஞ்சாலடும்
என் உற்சாக ஊற்றே...
என் சுவாசத்தின் காற்றே!

முன்னிரண்டு பற்களையும்
காட்டி நீ சிரிக்கையில்
எழுதிய என் எல்லா கவிதைகளும்
காகிதங்களை விட்டு
உன்னிடம் ஓடோடி வரும்
விளையாடிக் களிக்க...!

என் பத்து வயது குறும்பே
ஆயுள் முழுதும் எனக்கு
இனிக்கப் போகும் கரும்பே...
அப்பா என்று நீ
சொல்லும் போதெல்லாம்
நான் மீண்டும் மீண்டும்
பிறக்கிறேனடா.

வண்ணத்துப் பூச்சியின்
சிறகடிப்பினை யாரேனும்
வாழ்த்த முடியுமா என்ன?
உன் துறு துறு அன்பில்
திளைத்துக் கிடக்கிறேன்...
வாழ்த்துக்களை எப்போதும்
என்னுள் இறைத்தபடி...!

பிடிவாதக் குழந்தைகளை
எங்கேணும் காணநேரிட்டால்
பெருமிதம் கொள்கிறேன், தம்பீ,
உன் பொறுமையை எண்ணி!

அளவுகடந்த அன்பினாலே
அவ்வப்போது என்னருகில் நின்று
கன்னம் உரசிப் பெற்றுச்செல்லும்
அளவிலா முத்தங்களை
அநியாய வட்டியுடன்
அதிவிரைவில் திருப்பித்தருவாய்!

துறுதுறுப்பும், சுறுசுறுப்பும் நிறைந்திருக்க,
பாசமும் பண்பும் இணைந்திருக்க
பகலவன் போலே நீ ஒளிர்ந்திருக்க
வாழ்த்துகிறேன், என் கண்ணே,
பல்லாண்டு நீ வாழி என்று!

இன்று தன் 13 வது பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் வீட்டுக்
ஷியாம் -வுக்காக எழுதியது.👍🌿🌿🌿🌷🌷💐💐💐

❤ஷ்யாமின் முகம் மலர்ந்த சத்தம்..,!!! ❤....

ஷ்யாமின் முகம் மலர்ந்த சத்தம்..,!!! ....

19.09.2008..(உடுமலைப்பேட்டை-லட்சுமி மருத்துவமனை )

இன்றைய நாள் ..எனக்கு தூங்கா மலரும் இரவு.,
ஆம்., என் ஷ்யாமின் .,
முகம் மலர்ந்த சத்தம்..,!!!


செப்டம்பர் மாதம் உலகை அறிவு தளத்தில் ஆண்ட பெரும் ஆளுமைகள் பிறந்த மாதம் ..


ஷ்யாமின் பிறந்த தினம் முதலே உற்சாகம் தொற்றி கொண்டது ...பிறந்த உடன் பிஞ்சு கரங்களை பிடித்து பார்க்கும் பொழுது பட்டாம்பூச்சியின் மெல்லிய இதழ்கள் போன்று மிருதுவாக இருக்கும் ..இரண்டு கைகளில் மெல்லிய வெல்வெட்டு துண்டுடன் மார்போடு அனைத்துக்கொண்டு ஒரு கையினால் ஷ்யாமின் தலையை கீழே சாயாமல் சிமிட்டும் கண்கோளடு பார்ப்பது ஒருமுறை தான் ..வாழக்கையில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் பறந்துவிடும் ..

குழந்தைகளிடம் அளவுக்கதிகமான அன்புகொண்ட தகப்பனின் சற்று நீண்ட வெளியூர் பணிசெய்வது மிகவும் கொடுமையானதே.....அன்பு மகனின் பாசம் மனதில் நினைத்துக்கொண்டு சிறுவயது விளையாட்டுகளை நினைக்கும்போது கண்கள் குளமாக்கி கொண்டே இருக்கும் ...

நான் வீட்டில் இருந்தால் நான் தான் அவன் உலகம் ...மாலைநேரம் வந்தால் எப்படியும் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டுருப்பான் ..இரண்டு சக்கர வாகனத்தில் கொஞ்ச தூரம் பட்டாம்பூச்சி சிறகுகள் விரித்து பயணம் செய்துவருவோம் ..வடவள்ளி ..சுற்றி இருக்கும் பைமெட்டல் பேரிங் வழியாக வடவள்ளி பேரூந்துநிலையம் வழியாக கஸ்தூரிநாயக்கன் பாளையம் சென்று வான ப்ரஸதா மற்றும் தியான ப்ரஸதா வழியாக இயற்கை கொஞ்சும் மரங்கள் ..அதை ஒட்டிய விவசாய தோட்டங்கள் வழியாக வீடுவந்து சேர்வோம் ..அப்பொழுதும் வீட்டிற்க்குள் போக மனம் வராது..உன்னுரு ரௌண்ட பா ..ப்ளீஸ் ..ப்ளீஸ் கொஞ்சும் கெஞ்சல்கள் நினைவுகள் மலருந்துகொண்டே இருக்கும் ..

காலையில் அப்பா ஆய் வருதுப்பாவில் ஆரம்பித்து இரவு சிறு சிறு கதைகள் பேசி தூங்கவைப்பது வரை அவனுக்கு எல்லாமே நான் தான்.....அதுவும் தொட்டில் குழந்தையாக இருக்கும்பொழுது இரண்டு மணிநேரம் ..மூன்று மணிநேரம் தொட்டில் ஆட்டிவிட்டு கைவலிக்கிறது என்று மெதுவாக தூக்கிட்டானா என்று பார்த்தால் கொட்ட கொட்ட முழித்து பொக்கைவாயால் சிரித்துக்கொண்டிருப்பான்...அதைப்பார்த்தவுடன் கைவலிக்க தொட்டிலாட்டியது எல்லாம் வலியும் மறந்துவிடும் ..

மொபைலில் டாக்கிகங் டாம் பொம்மையை காணும் பொழுதெல்லாம் மகனின் நினைவுகள் வந்து செல்லும் எனக்கு இப்படியிருக்க..எனது கணிணியில் விவரம் தெரியும் பொழுது அவனுக்கு பிடித்த கதை பாடல்கள் ..அதிகம் குழந்தை பாடல்கள் மலையாள மொழியில் அதிகம் இருந்தது ...சிரித்துக்கொண்டு இருப்பான் ..என்னுடைய இரவு நேர அலுவுலக பணியை கொஞ்சம் காலம் ஆக்கிரமித்துக்கொண்டான் ..

பணியின் காரணமாக மகனை பிரிந்திருக்கும் நாட்கள் மகனின் நினைவுகள் வரும் எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது...ஆனால் மகனுக்கு என் நினைவுகள் வரும் பொழுதெல்லாம் அவனுக்கு கஸ்டமாய் இருந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்.....
ஷ்யாமுக்கு நான் தான் அகிலமும் என்னை பிரிந்திருக்கும் காலங்கள் அது இன்னும் பெரும் துயரத்தை தந்திருக்கும்......

ஒரு தந்தையைப் பொருத்த வரை மகனின் இளவயது குறும்புகள் பேச்சுக்கள் என்பது நினைத்து நினைத்து குதூகலப்படும் விஷயம். எங்கேனும் அவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனே பெற்ற மகனும் அவனது குறும்புகளும் மனதில் தோன்றி ஒரு புன்சிரிப்பை தற்செயலாக செயலாய் வரவழைக்கும்.

எப்பொழுது சனி ..ஞாயிறு தினங்கள் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்போம் நானும் ,ஷ்யாமும் ..கோவையின் சனிக்கிழமை காலை துவங்கும் நேரு மைதானம் ..வ .உ .சி ,மைதானம் ..GE DE நாயுடு அருங்காட்சியகம் ,GE DE Car அருங்காட்சியகம் ..மதியம் கீதா கபே ..மதிய உணவு ..சிறுது நேரம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகள் படிக்கும் புத்தக அலமாரி ..மாலை நேரம் வா .உ சி சிறுவர்பூங்காவில் சுற்றி குதிரை சவாரி ...சிறுவர் பூங்காவில் சென்று ..தூரி விளையாட்டு ,சறுக்கு விளையாட்டு ..வீடு வந்து சேர்வதற்கு உற்சாகம் மிகுதியாக இருக்கும் ..ஆனால் ஷியாம் ..இன்னும் கொஞ்சம் விளையாடி விட்டு செல்லலாம் என்று அடம் ..பின் சமாதான படுத்தி அழைத்துவருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் ..இப்பொழுது வளர்ந்துவிட்டான்..நண்பர்கள் வட்டம் சேர்கிறது ..வாழ்க்கை சூழல் ..பிறந்தது முதல் ..10 வயது வரைதான் அப்பாவின் தேவை ...நாமும் அதற்கு தகுந்த முறையில் தூரத்தில் இருந்து நம் கண் அசைவில் மட்டும் பார்த்துக்கொள்ளவேண்டும் ..வளர்கிறான் என்று மனதை நாம் தான் கொஞ்சம் திடப்படுத்திக்கொள்ளவேண்டும் ..

என்னதான் இருந்தாலும் அந்த சிறுவயது நினைவுகள் மலர்ந்துகொண்டே இருக்கும் ..உள்ளே பொங்கி வரும் அன்பு பாசம் காதல் எல்லாவற்றையும் பெரும் போராட்டத்தோடு அடக்கிக் கொண்டு வெளியில் கடுமையும் கண்டிப்புமாக மகனை பெரிய ஆளாக்கத் துடிக்கும் ஒவ்வொரு தந்தையின் கஷ்டமும் அரை பிரசவத்திற்கு சமம்....தற்காலங்களில் நம்மை சுற்றி நடக்கும் சூழ்நிலைகள் ..பாசம் நேசம் ..சொந்தங்களின் உறவுமுறை ,நண்பர்கள் வட்டம் ..கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறதா ..இல்லை இன்னும் பாசப்பிணைப்புகள் கூடுமா ...

வாழக்கை பயணம் நகர்கிறது ..ஷியாம் பிறந்தது முதல் சுற்றுப்பயணங்கள் கோவை ..பெங்களுரு ..திருவனந்தபுரம் ..உடுமலை .சேலம் ....ஓட்டன்சத்திரம் ..தேனீ ..போடி ...என ..கார் பயணங்கள் .அதிகம் ஷியாம் மன தையரியத்துடன் வெளி உலக தொடர்பு வளர்வதற்கு மிக பயனுள்ளதாக இருந்தது ..

குழந்தை வளர்ப்பு சில வார்த்தைகள்..! குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள். உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம்.தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும்,

கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்! மனம் வளம் பெறும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம்.. நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதனங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்!

இன்றோடு 12 வயது முடிந்து 13 வயதை தொடும் ஷ்யாமுக்கு என் அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...👍👍🎂🎂🌱🌳
🌷என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..🌱

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

கேள்வி : அரசின் சூப்பரான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. எப்படி இணைவது.. தகுதி என்ன?

 கேள்வி : அரசின் சூப்பரான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. எப்படி இணைவது.. தகுதி என்ன? 

என் பதில் :

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் எழுந்திருக்கும். ஏனெனில் இது போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் நிச்சயம் சேமிப்பின் முக்கியத்துவத்தினை அறிந்திருப்போம். இன்று சேமித்தால் நம்முடைய முதுமை காலத்தினை நன்றாக கழிக்க முடியும் என்பதனையும் பலரும் உணர்திருப்போம்.


அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் சிறந்த சேமிப்பு திட்டமானது, பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி தான்.


அதுவும் குறைந்த ரிஸ்க், அரசாங்க பாதுகாப்பு, கணிசமான வருவாய் கொடுக்கும் பாதுகாப்பான முதலீடும் கூட.


பிபிஎஃப் திட்டத்தின் அம்சம்

ஆக நீண்டகால நோக்கங்களுக்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நிச்சயம் இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத சிறந்ததொரு முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.


நீங்கள் இதற்கு தகுதியானவரா?

அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைவதற்கு என்ன தகுதி? இந்தியாரான எந்தவொரு தனிப்பட்ட நபரும் இந்த கணக்கினை துவங்க தகுதியானவர் தான். என்ஆர்ஐ-களுக்கு இந்த கணக்கு தொடங்க அனுமதியில்லை. ஒரு வேளை இந்த கணக்கினை தொடங்கும்போது இந்தியாவில் இருந்து, பின்னர் வெளி நாடுகளூக்கு சென்றிருந்தால் அவர்கள் இந்த வைப்பு நிதி கணக்கு முதிர்வடையும் வரை தொடர்ந்து கொள்ள முடியும்.


இதே மைனர் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரோ இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தொடங்க முடியாது.


எவ்வளவு பங்களிப்பு செய்யலாம்? குறைந்தபட்சம் எவ்வளவு?

இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.500 செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 பங்களிப்புகள் இருக்கலாம். அதாவது 12 தவணைகளாக உங்களது பணத்தினை நீங்கள் செலுத்திக் கொள்ளலாம்.


சரி எப்படி இந்த கணக்கினை எப்படி தொடங்குவது?

அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகளும் தொடங்கிக் கொள்ள முடியும். குறிப்பாக தனியார் வங்கிகளில் ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகளில் தொடங்கி கொள்ள முடியும். இதனை உங்களது வங்கி நெட் பேங்கிங்கிலும் தொடங்கிக் கொள்ள முடியும்.


என்னென்ன ஆவணங்கள் தேவை?

பார்ம் ஏ (FORM A)வினை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (https://retail.onlinesbi.com/sbi/downloads/PPF/FORM-A_%20(PPF%20OPENING).pdf). பதிவிறக்கம் செய்யப்பட்ட பார்ம், இதனுடம் அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், போட்டோ மற்றும் நாமினேஷன் பார்ம் (FORM E) (https://retail.onlinesbi.com/sbi/downloads/PPF/FORM-E_(PPF%20NOMINATION).pdf) இதனையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளில் கொடுக்கலாம்.


உங்கள் பிபிஎஃப் கணக்கினை ரிஜிஸ்டர் செய்ய?

நீங்கள் பிபிஎஃப் கணக்கினை தொடங்க கட்டாயம் ஒரு வங்கிக் கணக்கு வேண்டும். உங்களது இணைய வங்கியினை லாகின் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள பிபிஎஃப் என்ற ஆப்சனை கிளிக் செய்யலாம். அதில் Relevant account மற்றும் minor account என்று காண்பிக்கும். அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களது விவரங்கள் நாமினி விவரங்கள், வங்கி விவரங்கள் அனைத்தும் கேட்கும்.


வித்தியாசப்படும்

அதில் உங்களது பான் எண்ணினையும் வெரிபை செய்து கொள்ளும். இதன் பிறகு நீங்கள் எவ்வளவு டெபாசிட் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்கும். அதனை பூர்த்தி செய்த பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். ஒரு முறை இந்த வெரிபிகேஷன் செய்யப்பட்ட பின்பு, உங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கப்படும். சில வங்கிகளில் இந்த கணக்கினை தொடங்க ஹாட் காஃபிகளை கேட்கின்றன. இங்கு நாம் கூறப்பட்ட வழிமுறைகள் பொதுவானவையே. இது வங்கிகளுக்கு வங்கி சிறு வித்தியாசப்படுகின்றன.


பிபிஎஃப் பாஸ்புக்

உங்களது பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்கப்பட்ட பின்னர், உங்களுக்கு வங்கிகள் பாஸ்புக் கொடுக்கின்றன. இதன் மூலம் நீங்கள் உங்களது கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.


ஆன்லைனில் கணக்கு தொடங்குபவர்கள் ஆன்லைனிலேயே உங்களது இருப்பு மற்றும் மற்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.


என்னென்ன வங்கிகள் இந்த சேவை வழங்குகின்றன?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி


ஐசிஐசிஐ வங்கி


ஆக்ஸிஸ் வங்கி


ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா


பேங்க் ஆப் பரோடா


ஐடிபிஐ பேங்க்


பஞ்சாப் நேஷனல் வங்கி


கார்ப்பரேஷன் வங்கி


ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்


பேங்க் ஆப் இந்தியா


அலகாபாத் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா


கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா


இந்திய வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா


தேனா வங்கி, விஜயா வங்கி


பேங்க் ஆப் மஹாராஷ்டிரா


ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா


ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர்


ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்


இன் ஆக்டிவ் அக்கவுண்ட்

உங்களது கணக்கினை செயல்படுத்தாமல் இருந்து பின்னர் செயல்படுத்த வேண்டுமெனில் செயல்படுத்திக் கொள்ளலாம். இதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகளிலோ அல்லது அஞ்சலகத்திலோ ஒரு எழுத்துபூர்வமான கோரிக்கையை கொடுக்க வேண்டும். அதோடு செயல்படாத ஒவ்வொரு ஆண்டிற்கும் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதோடு செயலற்ற நிலையில் இருந்த அனைத்து ஆண்டுகளுக்கும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.


கணக்கினை மற்றொரு வங்கிக்கு மாற்ற முடியுமா?

உங்களது பிபிஎஃப் கணக்கினை வங்கியில் இருந்து அஞ்சலகத்திற்கு மாற்றலாம். அல்லது ஒரு வங்கியின் கிளையிலிருந்து, அதே வங்கியின் மற்றொரு கிளைக்கு மாற்றிக் கொள்ள முடியும்.


அதோடு கணக்கினை தொடங்கி 5 ஆண்டுகளுக்குள் மூடுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் அதன் பிறகு சில காரணங்களினால் கணக்கினை மூடிக்கொள்ளலாம். அக்கவுண்ட் ஹோல்டருக்கு உயிருக்கு ஆபத்தான நோய் உள்ளிட்ட சில காரணங்களினால் மட்டுமே மூடிக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் சரியான ஆவணங்களை சமர்பிக்க வேண்டியிருக்கும்.


பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால்?


ஒரு வேளை துரதிஷ்டவசமாக பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால், அவரது மனைவியோ அல்லது சட்டபூர்வமாக யார் வாரிசுதாரரோ அவர்கள் க்ளைம் செய்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் பார்ம் ஜி (FORM G – https://retail.onlinesbi.com/sbi/downloads/PPF/FORM-G_(PPF%20DECEASED%20CLAIM).pdf) கொடுக்க வேண்டியிருக்கும்.


 

முதிர்வு காலம்

உங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கி முதிர்வு அடைந்துவிட்டால், 15 வருடத்தின் நிதியாண்டின் முடிவில் க்ளைம் செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஜூன் 1, 2005 அன்று கணக்கினை தொடங்கினீர்கள் எனில், மார்ச் 31, 2006லிருந்து தான் உங்களது 15 வருடம் தொடங்கும். உங்களது கணக்கு முதிர்வடையும் நாள் ஏப்ரல் 1, 2021 ஆக இருக்கும்.



இடையில் பணம் எடுக்க முடியாதா?

உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். உதாரணத்திற்கு ஜனவர் 1,2012ல் தொடங்கியிருந்தால் 2018 -19ம் நிதியாண்டில் இருந்து திரும்ப பெறலாம். எனினும் ஒரு பகுதி மட்டுமே திரும்ப பெற அனுமதிக்கப்படும். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. சில 7 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதிக்கின்றன. அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது.


அதுவும் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கின்றன.

நன்றி :..

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE
Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.

சிவக்குமார்........ 
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681

வியாழன், 10 செப்டம்பர், 2020

கேள்வி : அன்புக்காக ஏங்கும் மனிதர்கள் எளிதில் உறவுகளினால் ஏமாற்றப்படுவது ஏன்?

 கேள்வி : அன்புக்காக ஏங்கும் மனிதர்கள் எளிதில் உறவுகளினால் ஏமாற்றப்படுவது ஏன்?


என் பதில் :.


பழகும் உறவுகள் அனைத்தும் உண்மையான அன்பைப் பொழிகிறார்கள், என்று நினைப்பதால் தான், எளிதில் ஏமாறுகிறார்கள்.


உண்மை என்னவெனில், சில உறவுகள் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, உண்மையான அன்பை வெளிப்படுத்துவதில்லை.


அன்புக்காக ஏங்கும் மனிதர்களின், பலவீனமே அந்த "அன்பு" தான் என்று அறிந்த பின்னர், அதை மற்றவர்கள் "ஆயுதமாக" பயன்படுத்தவே நினைப்பார்கள்.


வாழ்க்கையில் நடந்த ஏதோ ஓர் நிகழ்வால் / சூழ்நிலையால் உருவான, அந்த அன்புக்கான வெற்றிடம், நாம் பழகுபவர்களிடம் இருந்து கிடைக்குமா என்று ஏங்கும் மனம். அதனால், நாம் பழகுபவர்கள் அனைவருமே அந்த வெற்றிடத்தை நிரப்பும், உண்மையான அன்பு என்று நினைத்துக் கொள்வோம். 


அந்த உறவு, சிறிய கடும் சொற்களைப் பேசினாலோ அல்லது ஏதேனும் மனக்கசப்பால், பேசாமல் சென்றாலோ, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் போது தான், அவர்கள் ஏமாற்றிவிட்டதாக நினைப்போம். ஆனால், அவர்களின் அளவீடுகளில் நம்முடன், அளவுடனே காரணத்துடனே பழகியிருப்பார்கள். நாம் தான் அதை தெரியாமல் உண்மையாக பாசத்தை வாரிக் கொட்டிருப்போம். இதனாலேயே, பிரிந்து செல்கையில் ஏமாற்றப்பட்டதாக உணருகிறோம்.


மீண்டும், அதே போல் அன்பு கிடைக்குமா என்று மனம் ஏங்க ஆரம்பிக்கும். தவறான உறவுகளைத் தேர்ந்தெடுப்பதினால் தான் இப்படி நடக்கும்.


எந்தவொரு உறவாக இருந்தாலும், "இவர்கள் கடைசி காலம் வரை நம்மோடு பயணிக்க மாட்டார்கள்" என்று உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். உடனேயே அன்பு செலுத்தாமல், சிறிது காலம் பழகி குணநலன்களை அறிந்த பிறகு, அன்பு செலுத்துங்கள்.


இருப்பினும், சில உறவுகள் உங்களை விட்டுச் சென்றால், உங்கள் அன்பைப் பெற, அவர்களுக்குத் தகுதியில்லை, உங்கள் அன்பை அவர்கள் உணரவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது தான், உண்மை.


அன்புக்காக ஏங்கும் மனிதர்களிடம் உண்மையான அன்பு இருக்கும். அந்த உண்மையான அன்பைப் பெற, தகுதியுள்ளவர்களிடம் மட்டும் பழகுங்கள். காயப்பட மாட்டீர்கள், ஏமாற மாட்டீர்கள்.


உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது, அன்புக்காக ஏங்கும் மனிதர்கள் எளிதில் ஏமாற காரணம், "அன்பு"


நன்றி!

புதன், 9 செப்டம்பர், 2020

வீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சம்.....



 வீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சம்.....

இன்றைக்குச் சொத்து வாங் குபவர்களில் பெரும்பாலா னோர், வீட்டுக்கடன் மூலமா கவே வாங்குகிறார்கள். வீட்டு க்கடனுக் குச் செல்லும்போது பல விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். வீட்டுக்கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய
10 முக்கிய அம்சம் .

1. மார்ஜின் மணி!

தனி வீடோ அல்லது அடுக் குமாடிக் குடியிருப்போ, எ தை வாங்குவதாக இருந் தாலும் மொத்த தொகைக் கும் கடன் தர மாட்டார்கள். சுமார் 20% தொகையை வீ டு வாங்குபவர் தன் கையி ல் இருந்துதான் போடவே ண்டி இருக்கும். சிலர் இந்த மார்ஜின் தொகைக்கு பெர்சனல் லோன் வாங்குகிறார்கள். இதனால், வீட்டுக்கடனுக்கான இ எம்ஐ, பெர்சனல் லோன் இ எம் ஐ என அதிகத் தொகை சம்ப ளத்தி லிருந்து போகும். அந்த வகையி ல் பணச் சிக்கலில் மாட்டிக்கொ ள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

இதைத் தவிர்க்க இந்த மார்ஜின் தொகையை முன்னரே ஏற் பாடு செய்துகொள்ள வேண்டும் அல்ல து கடன் தொகையை க் குறைத்து சிறிய வீட்டை வாங்கலாம். ம னை வாங்கி வீடு கட்டினால் இப் போது சிறியவீடாகக் கட்டிக்கொண்டு, பிற்பாடு அந்தவீட்டை விரிவாக்கம் செய்யலாம். வீ ட்டுக்கடன் மாத தவணைகை க்குக் கிடைக்கும் சம்பளத்தி ல் 40% – 45%தைத் தாண்டாத வாறு இருத்தல் அவசியம்.

2. கடன் வாங்கும் வங்கி / நிறுவனம் தேர்வு!

இன்றைக்குப் பொதுத்துறை வங்கிகள், பழைய தலைமுறை தனியார் வங்கிகள், புதி ய தலைமுறை தனியா ர் வங்கிகள், தனியார் வீ ட்டு வசதி நிறுவனங்க ள், பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்கள் எ னப் பல வங்கிகள் வீட்டு க் கடன்வழங்குகிறது .

அரசு சார்ந்த நிறுவனங்களில் கடன் வாங்க, நீங்கள் அவர்க ளைத் தேடி போகவேண்டி இருக்கும். தனியார் என்றா ல் உங்களின் வீடுதேடி வந் து கடனுக்கான எல்லா ஏற் பாடுகளையும் செய்து கொ டுத்து விடுவார்கள். பொது வாக, தனியார் வங்கிக ள் / தனியார் வீட்டு வசதி நிறு வனங்களை விடப் பொதுத் துறை வங்கிகள் / பொதுத் துறை வீட்டுவசதி நிறுவனங்களில் கடனுக்கான வட்டி சுமார் 1% குறைவாக இருக்கும்.

வீட்டுக் கடன் என்பது ஒரு மு றை செய்யப்படும் விஷயம் என்பதால் வங்கி அமைந்திரு க்கும் இடத்துக்கான தொ லைவை பார்க்க வேண்டிய தில்லை. வங்கி சேமிப்புக் க ணக்கு வைத்திருக்கும் வங்கிதான் நம் வீடு அல்லது அலுவ லகத்தின் அருகில் இருக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கு இது தேவை இல்லை.இ.சி.எஸ், முன்தேதியிட் ட காசோலைக ளைத் தருவதன்மூலம் தூரம் ஒரு சுமையாக இருக்காது. வச தி மற்றும் வட்டி விகிதத்தைக் கவனித்துத் தூ ரமாக இருக்கும் வங்கி / நிறுவனத்தையும் தேர்வு செய்து வீட்டுக் கடன் வாங் கலாம்.

3. வீட்டுக் கடனுக்கான ஒப்புதல்!

வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் அளிப்பது வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தின் கிளை யா அல்லது அதன் மத்திய ப ரிசீலனை மையமா (சென்ட்ர லைஸ்டு பிராசஸிங் சென்ட ர்) என்பதைக் கவனிப்பது முக் கியம். கிளை அலுவலகமே க டன் வழ ங்கிவிடும் என்றால் விரைவாகக் கடன் கிடைத்து விடும். வங் கிகளின் மத்திய பரிசீலனை மையத்தில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தவ ர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்தக் கூட்டத் தில் உங்களுக் குக் கடன் கிடை க்க அதிக நாள் ஆகக்கூடும். எ ன வே, வங்கிக் கிளைகளே கட னுக்கு ஒப்புதல் வழங்கும் விதமாக இருப்பதைத் தேர்ந்தெடுத்து கடன் வாங் குவது நல்லது.

4. கட்டணங்கள் முக்கியம் !

வீட்டுக்கடன் வாங்கும் போ து பரிசீலனைக் கட்டணம், ஆவ ணக் கட்டணம் என வங்கிகள்/வீட்டு வசதி நிறு வனங்கள் குறிப்பிட்ட சத விகிதக் கட்டணத்தை வசூ லிக்கும். இவை தவிர, பில்டிங் வேல்யூவேஷன், லீகல் ஒப்பீ னியன் எனத் தனியாகக் கட் டணம் வாங்கும் வங்கிகளு ம் இருக்கின்றன. சில வங்கி களில், முதலில் வாங்கப்படு ம் பரிசீலனைக் கட்டணத்தி லே இந்த வேலையும் அடங் கி விடும். அந்த வகையில், மொத்தமாகக் கட்டணங்கள் எல்லாவற்றையும் கூட்டி, எந்த வங்கியில் குறைவாக இருக் கிறதோ, அதில் கடன் வாங்கும் முயற்சியை மேற்கொள்ள லாம்.

5. கான்ட்ராக்டரின் தரம்!

நீங்கள் வீடு வாங்கப்போகும் புர மோட்டர்/ பிளான்/ கான்ட்ராக்டரி ன் தரம் மற்றும் நம்பகத்தன்மை யை அறிந்து அதன்பிறகு தேர்வு செய்வது நல்லது. இல்லை எனில் சொன்ன நேரத்தில் உங்களுக்கு வீட்டை முடித்துச் சாவியைத் தருவதில் சிக்கல் ஏற்பட வாய் ப்புள்ளது. எனவே, நீங்கள் வீடு வாங்கப் போகும் புரமோட்டர் அல் லது உங்களுக்கு வீடு கட்டித் தரப் போகிற பில்டரை பற்றி நன்றாக விசாரித்து அதன் பிறகு முடிவு செய்யுங்கள்.

6. கடனுக்கான காசோலை!
மிக முக்கியமாகக் கவனிக்க வே ண்டியது, வீட்டுக் கடனுக்கான கடன் காசோலை யை புரமோட் டர்/பில்டர்/கான்ட்ராக்டருக்கு வ ங்கி அல்லது வீட்டுவசதி நிறுவ னம் தரும்போது உங்களு க்குத் தகவல் தெரிவித்து விட்டுதான் தர வேண்டும் என்பதை ஆரம்பத்தி லே தெரிவித்து விட வேண்டும். இல்லையெனில் பில்டரோ/ கான்ட்ராக்டரோ வீட்டு வேலை யைச் சரிவர முடிக்காமல் உங் களுக்குத் தெரியாமலேயே ப ணத்தை வாங்கிச் சென்று விடு வார். எனவே, ஜாக்கிரதை!

7. வட்டி விகிதம்!

வீட்டுக் கடனை பொறுத்தவரை யில், நிலையான (ஃபிக்ஸட்) வட்டி, மாறுபடும் (ஃப்ளோட்) வட்டி என இருவிதமாக வட்டி விகிதம் இருக்கின்றது. நிலை யான வட்டி என்பது முதலில் வரும் 3 – 5 வருடங் களுக்கு மட்டும்தான். அதன்பிறகு அப் போதுள்ள நிலையான வட்டி அ ல்லது ஃப்ளோட்டிங் வட்டியை த் தேர்வு செய்துகொள்ளலாம்.

ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் என்பது கடன் சந்தை வட்டி விகி த மாற்றத்துக்கு ஏற்ப ஏறும், இறங்கும். நிலையான மற்றும் மாறுப டும் வட்டி விகிதத்துக்கு இடையே சு மார் 1.52% வித்தியாசம் இருப்பதால் தற் போதைய சூழ்நிலையில் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வது லா பகரமாக இருக்கும். பொதுவாக, கடனு க்கான வட்டி விகிதம் குறையும் சூழ்நி லை நிலவினால், ஃப்ளோ ட்டிங் வட்டியைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.

மேலும், நீங்கள் மு ன்னணி நிறுவனத் தில் வேலை பார்ப்ப வராக இருந்தால், சிபில் ரேட்டிங்கில் அதிக ஸ்கோர்கள் இருந்தால் வட்டியி ல் பேரம் பேசி குறைக்க முடியும். வட்டியை கவனிக்கும் அ தே நேரத்தில், 1 லட்சம் ரூபாய்க்கு எவ்வளவு இஎம்ஐ என்ப தையும் கவனியுங்கள். கடனுக்கான வட்டியை, கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடும் முறை, ஆண்டுக்கு ஒ ருமுறை வட்டி கணக்கிடும் முறை என இரண்டு முறை இ ருக்கின்றன. கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடு ம் முறையில் வட்டிக்குச் செல் லும் தொகை குறைவாக இருக் கும். அந்த வகையில் எந்த வங் கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தில் இஎம்ஐ குறைவாக இருக்கிறதோ, அதைத் தேர்வு செய்யுங்கள்.

8. கடனைத் திரும்பக் கட்டும் காலம்!

வாங்கிய கடனை குறைந்த ஆண்டுகளில் 5-10 ஆண்டுக ளில் கட்டினால், மாத தவ ணை அதிகமாக இருக்கும். இ துவே அதிக ஆண்டுகளில் 15-20 ஆண்டுகளில் கட்டினால் மா த தவணை குறைவாக இருக்கும். அதேநேரத்தில், குறைந்த ஆண்டுகளில் கட்டினால் வட்டிக்குச்செல்லும் தொ கை குறைவாக இருக்கு ம். ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க, வட்டிக்கு போகும் தொகை அதிக மாக இருக்கும். இவற் றை அலசி ஆராய் ந்து உங்களால் கட்டக்கூடிய தொகையை இஎம்ஐ-ஆகக்கேட்டுப் பெறுங்கள். பிற்பாடு சம் பளம் உயர்ந்தபிறகு அதிகத் தொகையைக் கட்டுவதன் மூல ம் வட்டியை மிச்சப்படுத்தலாம்.

9.கடன்தொகை வழங்கும் நிலை..
வீடு கட்டுவது என்றால் அஸ் திவாரம், பிளிந்த், நிலை, ரூப் எனப் பலவாறாகப் பிரித்து வீட் டைக் கட்ட கடன் தொகையை வழங்கும். சில வங்கிகளில் வங்கி மேலாளர்களே வீட்டைப் பார்த்து கடன் தொகையை வழங்கிவிடுவார்கள். இது போன் ற நிலையில் வீட்டு வேலை தடைபடாது.சில வங்கிகளில் இன்ஜினீயர்க ள் வந்து பார்த்து சர்ட்டிஃ பிகேட் தந்தால் தான் அடுத் தநிலைக் கடனைத் தருவா ர்கள். அப்போது காலதா மதம் ஏற்படக்கூடும். இது போன்ற வங்கிகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த விஷயத்தை வங்கி மேலாளரிடம் ஆரம்பத்திலேயே கேட்டுத் தெளிவு படுத் திக்கொள்வது நல்லது.

10. மாரடோரியம் பீரியடு!

வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டு வது எனில் கட்டுமானம் முடி ய எப்படியும் 18 மாதம் ஆகிவிடும். இந்தக் காலகட்டத்தில் மொத்த வீட்டுக் கடன், 3 அல்லது 4 பிரி வாகப் பிரித்து வழ ங்கப்பட்டிரு க்கும். இந்தக் காலத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி சேர்ந்திருக் கும். இதனை ‘ப்ரீ இஎம்ஐ’ என் பார்கள். இந்த வட்டியை மாதா மாதம் கட்டி வருவது நல்லது. இல் லையெனில் இந்த வட் டியையும் வீட்டுக் கடனாக மாற்றி விடுவார்கள். நீங்க ள் கூடுதல் இஎம்ஐ கட்ட வேண்டிவரும்”.

சிவக்குமார்..V .K 
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681




உணர்ச்சிகள் ஊடாடும் பிரிட்டிஷாரின் கடிதங்கள்

 உணர்ச்சிகள் ஊடாடும் பிரிட்டிஷாரின் கடிதங்கள்

பாஞ்சாலங்குறிச்சி யுத்தம் நடைபெற்ற காலத்திலே போர் முனையிலிருந்து எழுதப்பட்ட கடிதங்கள் உணர்ச்சிகள் மிகுந்தவையாக இருக்கிறது, போரை நிகழ்த்துகிற பொழுது எழுதப்படும் சொற்களில் இருக்கிற உயிர் இன்றும் பட்டுப்போகாமல் மின்னிக் கொண்டு இருக்கிறது.

பிரிட்டிஷாரின் கோர முகங்களை அவர்களது எழுத்துக்களே ஊர்ஜிதப்படுத்துகிறது. நமது முன்னோர்கள் பட்ட இன்னல்கள் சொல்லொணா துயரங்களை, பிரிட்டிஷாரின் கடிதங்கள் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

அதே நேரத்தில் நமது பாளையக்காரர்களின் துணிச்சலை கண்டு பிரிட்டிஷ்காரன் நடு நடுங்கி போனதையும் அவனது கடிதங்களே நமக்கு விளக்குகிறது.

பாஞ்சாலங்குறிச்சி வரலாறு சம்மந்தமாக
இதுவரைக்கும் வெளிவந்த புத்தகங்களுக்கும், கட்டபொம்மன் பதிப்பகம் வெளியிடும் ஆவண புத்தகத்திற்கும் உள்ள வேறுபாடு என்பது படிப்பவர்களின் மனசாட்சிக்கு உண்மையையும் அதன் சூழ்நிலை, நிஜப் பின்னனியையும் விளக்குவது மட்டும்தான்.

பாஞ்சாலங்குறிச்சி படை வீரர்களின் முரட்டுத்தனமான போர்க்கள காட்சிகளை கண்ணால் பார்த்த அதிகாரிகள், பயந்து போய் மேலதிகாரிகளுக்கு எழுதிய கடிதங்களை படிப்பவர்கள் திடுக்கிட்டுப் போவார்கள்,

அதுமட்டுமல்ல நண்பர்களே.,சொந்தங்களே ....

இதுநாள்வரை பாஞ்சாலங்குறிச்சி யுத்தத்தை மட்டுமே பெருமையாக பேசிக் கொண்டிருந்த நமக்கு, போருக்கான காரணங்களையும், அதன் அடிப்படை வேரையும் தெரியாமல், எழுத்தாளர்களின் சொற்களை மட்டுமே நம்பினோம், இனிமேல் நமக்கு அந்தக் கவலை தேவையில்லை.

இந்தப் புத்தகத்தை படிக்கிற ஒவ்வொருவரும் பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றோடு நெருக்கமாக பயணிப்பார்கள்.

அதுமட்டுமல்ல இந்தப் போரின் மய்யமாக பாஞ்சாலங்குறிச்சியாரின் நியாயங்களையும் புரிந்து கொள்ள முடியும் என்பதே இந்த புத்தகத்தின் சிறப்பு.

நன்றி

கட்டபொம்மன் பதிப்பகம்.👍🏹🤺🤺

திங்கள், 7 செப்டம்பர், 2020

உடுமலை ..தன்னம்பிக்கை ....தங்க ஆசிரியை ...

 உடுமலை ..தன்னம்பிக்கை ....தங்க ஆசிரியை ...

உடுமலை ஆசிரியர் திருமதி .வை .விஜயலக்ஷ்மி -பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளி .

ஒரு தாய் பறவை எப்படி தன்குழந்தைகளை எப்படி கனிவு நிறைந்த கண்டிப்புடன் அரவணைத்து செல்கிறது என்பது விஜி மிஸிடம் கற்று கொள்ளலாம் ..


பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்குள் வந்தவுடன் இவரை தான் முதலில் தேடும் ..


விளையாட்டு ஆனாலும் சரி ...சுற்று சூழல்  ஆனாலும் ..சமூக அறிவியல் ஆனாலும் சரி ..வரலாறு ஆனாலும் சரி ...பன்முக தன்மையோடு ..குழந்தை களுக்கு பாடம் கற்றல் வழி குழந்தைகள் இவரின் வகுப்புகளில் ஒன்றிவிடுவார்கள் ...


பெண் குழந்தைகள் சோர்ந்து இருக்கும் நேரங்களில் அவர்களை உற்சாக படுத்தி பள்ளி நிகழ்ச்சிகள் ..நாடக நிகழ்ச்சிகள் ...நடன நிகழ்ச்சிகள் ...அனைத்து நிகழ்வுகளும் பங்கேற்க வைத்து தங்கமுலாம் போல மின்ன செய்துவிடுவார்கள் ..


15 வருடங்களுக்கு முன்னால் எலையமுத்தூர் பள்ளி யை வெறும் பொட்டல் காடாக இருந்த பள்ளியில் தன்முழு முயற்சியால் இன்று அந்த பள்ளி பசுமை நிறைந்த மரங்களும் கொடிகளும் பள்ளி குழந்தைகளின் பறவைகள் கூடும் சரணாலயமாக கல்விசாலையாக மகிழ்ச்சி கடலாக திகழ்கிறது ..


பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் இன்று விளையாட்டு துறை யில் தங்கமங்கைகளாக திகழ விஜி மிஸ்ஸின் அர்ப்பணிப்புடன் கற்றுக்கொடுக்கும் முறையே காரணம் ..


உடுமலையில் ஒவ்வொரு நடைபெறும் புத்தக திருவிழா என்றால் குழந்தைகளின் நிகழ்ச்சிகளுடன் எப்பொழுதும் தொடங்கும் ..15 நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழாவில் குழந்தைகளின் பன்முக தன்மையை வெளிப்படுத்தி குழந்தைகளை உற்சாகப்படுத்துவார்கள் ..குழந்தைகள் புத்தக வாசிப்பை அதிகப்படுத்தும் நிகழ்வாகவே மாற்றி விடுவார்கள் ..


உடுமலை கிளை நூலகம் -2 நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் குழந்தைகளையும் ,பொது மக்களையும் ,,இணைத்து புத்தக வாசிப்யும்  நேசிக்க வைத்துவிடுவார்கள் ..தற்பொழுது மருத்துவம் சார்ந்து விழிப்புணர்வு நிகழ்களில் ..அனைத்திலும் தன் பங்களிப்பை அளித்து உற்சாகப்படுத்துவார்கள் ..

பெண்குழந்தை செல்வங்களை ..எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் ,வானொலி நிகழ்வு ,சுற்று சூழல் காடு சார்ந்த நிகழ்வு ,விளையாட்டு நிகழ்வுகளுக்கு பாதுகாப்பக அழைத்து சென்று பங்குபெற வைத்து குழந்தைகளாகவே மாறிவிடுவார்கள் .


எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் தன்னார்வத்துடன் தன் அரசு சார்ந்த பள்ளிக்குழந்தைகளை வாழ்கை கல்வியுடன் அவர்களை முன்னேற வைக்கும் அன்புடன் சிறப்பு வாய்ந்தது ..இன்றும் தன்னால் பயிற்றுவித்த மாணவச்செல்வங்கள் உலகமெங்கும் தன்னம்பிக்கையுடன் தங்கமங்கைகளாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்கள் ..


தன்னார்வ மிக்க வை .விஜயலக்ஷ்மி ஆசிரியர்க்கு டாக்டர் இராதாகிருஷ்ணன்  ..நல்லாசிரியர் விருது வழங்கிய   தமிழக அரசுக்கு நன்றிகள் பல .....


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...



9944066681...








ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

மல்லிகை மல்லசீலன் .....புங்கமுத்தூர் ..உடுமலைப்பேட்டை

 

மல்லிகை மல்லசீலன் .....புங்கமுத்தூர் ..உடுமலைப்பேட்டை 

மல்லிகை விவசாயத்தில் சாதிக்கும் உடுமலைப்பேட்டை விவசாயி...

படித்ததோ எட்டாம் வகுப்பு, சம்பாதிப்பதோ மாதம் ரூ.40 ஆயிரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற விவசாயி ஒருவர், தமிழகத்தில் புகழ் பெற்ற ராமேஸ்வரம் மல்லிகையை நடவு செய்து மாதம் ரூ.40 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார்.

ராமேஸ்வரம் மல்லி

குண்டு குண்டாக இதழ் தடிமனாக, எளிதில் உதிராமல், இரண்டு நாட்கள் இருந்தாலும் வாடி வதங்காமல் இருப்பது ராமேஸ்வரம் மல்லியின் தனிச்சிறப்பாகும். ராமேஸ்வரம் மல்லிகைச் செடி தங்கச்சி மடத்தில் உள்ள தாய்ச்செடியில் இருந்து பதியன்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த மல்லிகைப் பூக்கள், தமிழகத்தில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கின்றன. உடுமலைப்பேட்டை, திண்டிவனம், சேலம், கோவை, சத்தியமங்கலம், மதுரை, நெல்லை என எந்தப் பகுதிக்குச் சென்றாலும், ராமேஸ்வரம் மல்லிகைக்குத்தான் மணக்கும் குணம் அதிகம்.

நீர் சிக்கனம்

இத்தகைய சிறப்புகளுக்குரிய மல்லிகை கத்திரி வெய்யிலுக்கு கூட நல்ல விளைச்சல் தருகின்ற மானாவாரி இனம். 6 மாதங்களுக்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் கூட தாக்குபிடித்து வளரும். கோடை மழை, பூச்சி தாக்குதல், மொட்டு உதிர்தல் போன்ற சிக்கல்களை மட்டும் சமாளித்து விட்டால் மல்லிகையிலும் சாதிக்க முடியும் என்பதை உடுமலைப்பேட்டை விவசாயி நிரூபித்துள்ளார்.

உடுமலைப்பேட்டையில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ தொலையில் உள்ளது புங்க முத்தூர் கிராமம். அங்கு மானாவாரி பயிராக மல்லிகை சாகுபடி செய்துள்ள விவசாயி த. மலசீலன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது:

“நான் 15 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். முன்பு தக்காளி, கத்திரி விவசாயம் செய்தேன். அதில் அதிக லாபம் கிடைக்கவில்லை.

அதனால் பிற விவசாயிகளைப் போல் இல்லாமல் மாற்றி யோசித்தேன். மக்களிடம் ராமேஸ்வரம் மல்லிகைக்கு அதிக வரவேற்பு இருப்பதை அறிந்தேன். ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து மல்லிகை பதியன்கள் வாங்கி வந்து மல்லிகை சாகுபடியைத் தொடங்கினேன்.

குறைந்த பரமாரிப்பு நிறைவான லாபம்

தொடக்கத்தில் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடி நன்றாக வளர்ந்த பிறகு 6 மாதம் வரை தண்ணீர் இல்லாவிட்டாலும் கூட செடி தாக்குபிடிக்கும். மண் ணுக்கு ஏற்ற விளைச்சலை தரும் மல்லிகை 15 ஆண்டுகள் வரை வாழ்ந்து விவசாயிக்கு பலன் தருகிறது.

காய்கறி சாகுபடி மூலம் கிடைக்கும் வருவாயை காட்டிலும் அதிக வருவாய் மல்லிகை சாகுபடியில் கிடைக்கும். நல்ல விளைச்சலின்போது மாதம் ரூ.40 ஆயிரம் வரை இதில் சம்பாதிக்க முடிகிறது.

ஆண்டுக்கு இருமுறை கவாத்து செய்து முறையாக பராமரித் தால் நிலையான வருமானம் நிச்சயம்.

தமிழ் மாதங்களான மாசி, பங்குனி, சித்திரை, ஆவணி மாதங்களில் நல்ல விளைச்சல் இருக்கும். கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் விளைச்சல் குறைவாக இருக்கும். ஆனால் அந்த காலகட்டத்தில் மல்லிகைக்கு மார்கெட்டில் அதிக தேவை இருக்கும்.

அப்போது ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்கும். முறையான பராமரிப்பு இருந்தால் மல்லிகையை நம்பி யார் வேண்டுமானாலும் துணிச்சலுடன் சாகுபடியில் இறங்கலாம்” என்கிறார் தன்னம்பிக்கை விவசாயி மலசீலன்.

அவரது அனுபவங்கள் பற்றி மேலும் அறிய 80120 08400 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கேள்வி : மினிமலிசம் என்றால் என்ன?

 கேள்வி : மினிமலிசம் என்றால் என்ன?


என் பதில் :..


எப்படி தன்னம்பிக்கைக்கும் தலைக் கனத்துக்கும் ஒரு மெல்லிய நூலிழை தான் வேறுபாடோ


 மினிமலிசத்துக்கும், கஞ்சத்தனத்துக்கும் ஒரு நூலிழை தான் வேறுபாடு.


நம் தேவை என்பது எப்பொழுது விருப்பமாக மாறி, பின்பு ஆவலாக மாறி, கடைசியில் வெறியாக மாறி நம்மையே முழுங்கி விடும்.


ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்:


ஒரு வருடத்தில் குறைந்தது எத்தனை தடவை புதுக் துணிமணி எடுப்போம்?


பொங்கலுக்கு ஒன்று,

பிறந்த நாளுக்கு ஒன்று,

தீபாவளிக்கு ஒன்று,

எதுக்கும் சந்தேகத்துக்கு ஒன்று - ஆக நாலு செட் உறுதி.

இதுவே நீங்கள் மாதமொருமுறை ஏதாவது ஒரு மாலுக்கு செல்லும் பொழுதெல்லாம், அங்கிருக்கும் குளோபஸ், டிரண்ட்ஸ், நைக்கி போன்ற கடைகளில் ஒரு செட் விதம் எடுத்து வந்தால் வருடத்துக்கு 12 செட்.


மேலே சொன்ன நம்பர்கள் எல்லாம் ஆண்களுக்கு என்று பாவிக்கவும். பெண்களின் கணக்கெல்லாம் எகிறி விடும்.


திருமதி பீலா ராஜேஷ் அவர்கள் மினிமலாக புன்னகை செய்த மாதிரி, ஆனால் செய்யாமல், கொரோனா அறிக்கை வாசித்த பொழுது என்றைக்காவது ஒரு தடவை கட்டிய புடவை டிசைன் மறுபடி ரிப்பீட் ஆகி இருக்கா?


அதுவே இப்பொழுது ராதா கிருஷ்ணன் ஒரு மாதத்துக்கே மூணு சட்டை தான் மாத்தி மாத்தி அணிகிறார். மூணும் ஒரே டிசைன்(கட்டம் போட்டது) வேறு. அப்புறம் எப்படி தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை குறையும்?


இருக்கும் பொருட்களை செம்மையாக பயன்படுத்துவதே மினிமலிசம்.


2011 முதல் 2014 வரை ஒரே கார் வைத்து சமாளித்தோம்.  அலுவலகம் செல்ல பொது பேருந்து, மற்றும்  ரயில் இருந்தது. குளிர் காலங்களில் மட்டும் கொஞ்சம் சிரமம். அதனால் என்ன?


சமாளித்து விடக் கூடியது தான். அதன் பின் வேலையிடம் மாறியது, சரியான நேரத்துக்கு ஆபிஸ் செல்ல வேண்டும், பொது போக்குவரத்து இல்லை. இப்பொழுது இரண்டு கார்கள் அத்தியாவசிய தேவையாயிற்று.


அலுவலக உணவிடத்தில் எல்லா நாட்டு உணவும் கிடைக்கும் தான். அதுவும் அந்த இத்தாலிய லசானியா என்ற ஐட்டம் இருக்கே! ஆசைக்கு ஒரு நாள் சாப்பிடலாம். ஆனால் என்றுமே வீட்டு உணவு தான் நிரந்தரம்.


நீங்கள் மினிமலிஸ்டா? அல்லது மெட்டிரியலிஸ்டா? என்பதை சோதிக்க, வருட முடிவில்:


உங்கள் உடை அலமாரி அல்லது பீரோவை திறந்து பார்க்கவும்.

எத்தனை மின்னணு பொருட்கள் (Gadgets) புதிதாக வந்துள்ளது என்று செக் செய்யவும்.

எத்தனை வீட்டு உபயோக பொருட்கள் என்று முக்காடிட்டு வீட்டு பரணில் குந்தியுள்ளது என்று பார்க்கவும்.

சமூகம் கொஞ்சம் பெரிய இடமென்றால் எத்தனை நகைகள், வளையல்கள் புதிதாக?

வீட்டில் எந்த பொருளின் மீதும் தடுக்கி விழாமல் நடக்க முடிகிறதா? (இது எப்பொழுதும் பொருந்தும்)

மேலே சொன்னது எல்லாம் நம்மை அழுத்தி மூச்சடைக்க செய்யும் அதிகப்படியான எடைகள். நமக்கும் இறைக்கும் உள்ள தொலைவை அதிகப்படுத்தும் விஷயங்கள்.


எப்பொழுதெல்லாம் மினிமலிஸ்ட்டாக இருக்க கூடாது?


புதிய விஷயங்கள் படிப்பதில், தெரிந்து கொள்வதில்

விசய ஞானமுள்ள புத்தகம் சேகரிப்பதில் (புதிய புத்தகம் தான் என்றில்லாமல், பழைய புத்தகமும் மதி)

பிறருக்கு உதவி செய்யும் போது

உணவு தயாரிக்கும் பொழுது (கடுகில்லை என்றால் பரவாயில்லை, ரவையே இல்லாமல் எப்படி உப்மா?)

வாய் விட்டு சிரிப்பதில் (அதுக்காக இளிச்ச வாயனாக இருக்கக் கூடாது)

ஜப்பானில் மினிமலஸ்டிக் வாழ்வை டன்சரி(Danshari) என்ற ஜென் தத்துவத்தில் இருந்து உதித்தது என்று சொல்கிறார்கள்.


சமூகத்தில் மினிமலிஸ்ட்டுகளை தவறாக புரிந்து கொண்டு, போகும் போது "என்னத்த தலையில் கட்டி கொண்டு போக போகிறார் இவர்?" என்று எள்ளி நகையாடலாம்.


ஆனால் வாழும் காலத்தில், அவர் அனுபவிக்கும் மன நிம்மதி, ஜென் நிலை அவ்வளவு லேசில் அனைவருக்கும் கை கூடுவதில்லை.


நன்றி ...நாளை பொது போக்குவரத்து ஆரம்பமாகிவிடும் ..பாதுகாப்பான பயணம் இன்றியமையாது ..இதையும் சமாளிப்போம் ...


கேள்வி : உங்கள் வேலையில் இயல்பாக இருக்கக்கூடிய, ஆனால் பிறருக்கு விசித்திரமாக தெரியக்கூடிய ஒன்று என்ன?

கேள்வி : உங்கள் வேலையில் இயல்பாக இருக்கக்கூடிய, ஆனால் பிறருக்கு விசித்திரமாக தெரியக்கூடிய ஒன்று என்ன?


என் பதில் :..இதற்கு என் மதிப்புமிக்க Gulf வெளிநாட்டு வாழ் இனிய நண்பர் கோவை பரத்குமார் அவர்களிடம் கேட்டபோது பகிர்ந்த தகவல்கள் அருமை ..உங்களுக்குகாக ..


ஹும் என் வேலையே பலருக்கு விசித்திரமாக தெரியக்கூடியது தான் !!சிவா ..


1) நான் வேலைப்பார்க்கும் துறையில், 365 x 24 x 7 என தொடர்ச்சியாக பணி நடந்துகொண்டே தான் இருக்கும். ஒரு நாளைக்கு, இரண்டு ஷிப்ட்களில் பணி நடக்கும்.ஆக,நாளொன்றுக்கு நாங்கள் பன்னிரெண்டு மணி நேர வேலை செய்யவேண்டும்.காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு ஷிப்ட் ,அதே போல் மாலை 6 மணி முதல்,அடுத்த நாள் காலை 6 மணி வரை இரண்டாவது ஷிப்ட்.


நாளொன்றுக்கு பன்னிரெண்டு மணி நேர வேலையாக இருந்தாலும்,காலையில் 4 மணிக்கு எழுந்தால் தான், எங்களின் அடிப்படை வேலைகளை செய்து முடித்து,பணிக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியும்.


எனக்கு பணி செய்யும் இடத்திலேயே தங்கும் வசதி உண்டு.ஆனால்,சிலருக்கு நெடுந்தூரம் பாலைவனப் பயணம் செய்ய வேண்டும்.


ஆக ,அவர்கள் தங்கும் இடத்திற்கு செல்ல 2 மணி நேரங்கள் ஆகும்.ஒரு நாளைக்கு 4 மணி நேரம் பயணத்திலேயே கழித்து,12 மணி நேரம் வேலை பார்த்து, மீதம் உள்ள 8 மணி நேரத்தில் தங்களது அன்றாட பார்த்து, மிக முக்கியமான , உறக்கம், அவர்களுக்கு 4 முதல் 5 மணி நேரமே கிடைக்கும்.


2) எங்கள் துறையில்,எங்களுக்கு சுழற்சி முறையிலேயே வேலை இருக்கும். அதாவது ,தொடர்ச்சியாக 6 வாரம் வேலை செய்ய வேண்டும்(Hitch) அடுத்த மூன்று வாரம் விடுப்பு (Days Off) கிடைக்கும்.


இந்த சுழற்சி முறை ஒவ்வொருவருக்கும் அவர்களின் வேலைத்தகுதியை பொறுத்து மாறுபடும்.சிலர் 4 வாரம் வேலை 4 வாரம்விடுப்பு என்ற முறையில் செய்வர். சிலர் 35 நாள் வேலை 35 நாள் விடுப்பு என்ற முறையில் பணி செய்வர்.இன்னும் சிலர் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக வேலை செய்வர்.


நாங்கள் வேலை செய்யும் நாட்களில் சனி,ஞாயிறு,பண்டிகை நாட்கள் என எதற்குமே விடுப்பு கொடுக்க மாட்டாது.


3) நட்டநடு பாலைவனம்,ஆழ் கடலின் நடுவில்,மழை/மலை பிரதேசங்கள் , தீவிரவாதிகள் பதுங்கும் பகுதி என உலகில் உள்ள அனைத்து Landscapes களிலும் எங்கள் Oil and Gas பணி நடக்கும்.


4) அதே போல் மைனஸ் டிகிரி குளிரில் இருந்து ,60 டிகிரி கொளுத்தும் வெப்பத்திலும் எங்கள் பணி நடக்கும்.


5) வேலை பார்க்கும் 12 மணி நேரமும் நாங்கள் Coverall,Safety Shoes,Safety Glass என அனைத்து பாதுகாப்பு உபகாரணங்களோடு இருப்போம்


6) நாங்கள் வேலை பார்க்கும் அலுவலகம் ,தங்கும் இடம் எல்லாமே Bunk house தான். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.ஒரு இடத்தில வேலை முடிந்துவிட்டால் , இந்த Bunk Houseகளை எளிதில் தூக்கி , Lorry Truck -- இல் ,வைத்து அடுத்த இடத்திற்கு சென்றுவிடலாம்.


பார்ப்பதற்கு சாதரணமாக தெரிந்தாலும் , உள்ளே அனைத்து வசதிகளும் அற்புதமாக தரமாக இருக்கும்.


7) நாங்கள் வேலை பார்க்கும் இடத்தில், உலகில் உள்ள பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் வேலை பார்பர்.பல மொழிகள்,பல கலாச்சாரங்கள் என பலவற்றை அறிந்துகொள்ளலாம்.


8) வேலை பளு அதிகமாக இருந்தாலும், எங்கள் Oil and Gas துறையில்,எங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் எங்கள் நிறுவனமே செய்து கொடுத்து விடும்.


எங்களின் விமான டிக்கெட்ஸ்,தங்கும் இடம்,உணவு,தினசரி தேவையான பொருட்கள் தினமும் நாங்கள் தங்கும் இடத்தை சுத்தம் செய்து கொடுப்பது, துணிகளை துவைத்து கொடுப்பது என எல்லாம் எல்லாமே நிறுவனமே பார்த்துக்கொள்ளும்.


அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும்.நமக்கு எது விருப்பமோ அதை சாப்பிடலாம்.அதே போல் உணவின் தரம் தினமும் பரிசோதித்த பின்பே எங்களுக்கு வழங்கப்படும்.


9) நாங்கள் வேலை பார்க்கும் இடத்திலேயே ஆம்புலன்ஸ் வசதியுடன் சின்ன மருத்துவமனை(Clinic) இருக்கும். மருத்துவம்,மருந்து என அனைத்துமே இலவசம் தான்.


ஆக அனைத்து வசதிகளும் இருந்தாலும், எங்கள் வாழ்க்கை தங்கக் கூண்டில் உள்ள கிளியின் வாழ்க்கையை போன்றது தான்.


கதவை திறந்தால் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நான்கு புறமும் பாலைவனம்,பாலைவனம்,பாலைவனம் தான் !!


ஆரம்பத்தில் சற்று விசித்திரமாக தெரிந்தாலும்,நாளடைவில் எங்களுக்கு அது பழகி, நார்மல் ஆகிவிட்டது :)


நன்றி !!

சனி, 5 செப்டம்பர், 2020

தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் .. நூல் வெளியிட்டு விழா ..19-05-2018..

 தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..

நூல் வெளியிட்டு விழா ..19-05-2018..

உடுமலைப்பேட்டை இருபெரும் வரலாற்று திருவிழா .. 


உடுமலைப்பேட்டை தளி எத்தலப்பர் மன்னரின் மணிமண்டப கோரிக்கை ..


உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் ...

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் 

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் ..

உடுமலைப்பேட்டை .......

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

பொருளாதாரம் சட்டென நிலைக்குள் வந்து விடுமா ?

பொருளாதாரம் சட்டென நிலைக்குள் வந்து விடுமா ? 


அரசு படிபடியாக lockdown தளர்வுகளை குறைத்து ,குறைத்து கிட்டதட்ட 80% இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறோம் ..இது அரசின் பொருளாதார ரீதியான நிர்பந்தமே அன்றி , கொரானா கட்டுக்குள் வந்ததாக அர்த்தம் இல்லை..


சரி பொருளாதாரம் சட்டென நிலைக்குள் வந்து விடுமா ? கண்டிப்பாக இல்லை என்பதே கசப்பான உண்மை ..சின்ன உதாரணமாக எடுத்துகொள்ளுங்கள் , முன்பு லாரி ஸ்ட்ரைக் இரண்டு மாநிலங்களுக்கடையே என அடிக்கடி கேள்விபட்டிருக்கோம் .. அந்த ஸ்ட்ரைக்குகள் இரண்டு நாட்களுக்கு மிகுந்தாலே நூற்றுகணக்கான கோடி நஸ்டங்கள் பலதரப்புகளில் ஏற்பட்டு விடும் , அந்த நிலை இயல்புக்கு வரவே மாதமாகும் .. அப்படியிருக்கையில், கிட்டதட்ட 6 மாதங்கள் உலகளவில்
Lockdown இருக்கையில், எப்படி இருக்கபோகிறது என சிந்தித்து பாருங்கள்.உண்மையில் இதுவரை, அதன் பக்க விளைவுகள் மற்றும் அதன் அதகளஆட்டத்தை ஆரம்பிக்கவில்லை என்பதே நிதர்சனம் ..


நான் உணர்ந்ததும் , அறிந்ததும் உங்களுக்கு தெரியப் படுத்த முனைகிறேன்..ஒரு நண்பர் பை நிறைய ஆர்டர் வைத்து இருக்கிறார் அவருக்கு அந்த பொருட்களை இடம் மாற்ற போக்குவரத்து - logistic சிக்கல்கள் .அப்படியே கிடைப்பினும் அதன் சுமைகூலி முக்கால்காசு கதையாக இருக்கிறது..இன்னொரு நண்பர் , திடீரென import parts கள் கிடைக்காத நிலையில் , import substituteம் யானை விலை என்பதால் தொழிலை தொடர இயலாமல் சிக்கி தவிக்கிறார் .மற்றொரு நண்பரோ எல்லாம் இருந்தும் வங்கி மற்றும் தனியார் நிதி இன்றி ஸ்தம்பித்து இருக்கிறார் ..இதை போல நீண்டு கொண்டே போகும் உதாரணங்கள் ..இவை எல்லாம் சட்டென தலை நிமிருமா என்றால் , ஆகாது ..இயல்பு நிலை கொள்ள பலமாதங்கள் அல்லது இரண்டு வருடங்கள் பிடிக்கலாம் ..


இப்போது online business மற்றும் சில software services தடையின்றி செல்வதாக தோற்றம் அளித்தாலும், பணப்புழக்கமும் , தொழில்களும் முடங்கிகையில் அவற்றை நாளடைவில் நளிவடைய செய்யும்..கொரனா vaccination வந்தால் மருத்துவமனைகள் கூட காற்றடிக்க ஆரம்பித்து விடும்..


இப்படியாக வரும் அடுத்த வருடம் கூட ஏதும் மந்திரம் செய்யபோவதில்லை .. உங்கள் வெளிகடன்களை கட்ட திட்டமிடுங்கள் . வரவேண்டிய பணங்களை வசூலிக்க கால நிர்ணயம் செய்யுங்கள் . உங்கள் சக்திக்கு உட்பட்ட மாற்று வருமானத்தை பெருக்க யூகம் வகுங்கள்.


இவையெல்லாம் உங்களை பயமுறுத்துகிற நோக்கதில் இல்லை , உங்கள் பொருளாதார பாதுகாப்புயுத்திகளை கையிலெடுக்க வேண்டிய அத்தியாவசியத்தை உணர்த்துகிற என்னாலான ஒரு அபய சங்குதான் ..நானுமே அதைதான் செய்ய இருக்கிறேன் .

Checklist - Home Purchase

 Checklist - Home Purchase


KYC 

1. Pancard colour copy

2. Adhar colour copy

3. Photo 2


INCOME

1. Salary slip last 3 months copy 

2. Bank statement last 6 months

3. I'd card copy

4. Form 16 last year

5.appoinment order

6.cheque leaf 1

7. If other loans - sanction letter & full loan statement


TECHNICAL

1. Document copy

2.Plan approval + memo

3. Rera approval

4. Layout copy

5. Sale agreement copy



For Further details Please Contact :  


Sivakumar....🏡🤝


🏡A Quick Guide For First Time Loan Buyer's🏡

புதன், 2 செப்டம்பர், 2020

நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் வரமா சாபமா?

 கேள்வி : நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் வரமா சாபமா?


என் பதில் :..


Story 1


என் நெருங்கிய சொந்தம் எங்க உறவில் மருமகள் எப்படி வாழ்கிறார் என்பதை சொல்கிறேன்


மாமியார் வீட்டில் வாங்கும் பூ ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் மூணு முழம் பூ வெச்சுட்டு வருவாங்க :)


கணவர் கார் ல விட்டுட்டு கூட்டிட்டு போவார்


அவங்க திருமணம் ஆகி பையன் பிறந்த பின்னர் 1.5 வருடம் வீட்டில் இருந்து வேலை செய்தார்கள்!


அலுவலகத்திலும் வர்ட் (word doc) டாகுமெண்ட் பார்க்கணும் அது தான் வேலை ஆனால் மிக அதிக சம்பளம்


மாமனார் திரும்பினால் கூட என்னம்மா வேணும் என்று அவரே செய்து விடுவார்


மாமியார் இன்னும் இன்னும் அழகு செஞ்சுக்க - கீ போர்ட் அடிக்கும் கையில் நக பூச்சு பளிச்சுனு இருக்கனும்


எல்லா சேலை அவங்க செலெக்ட் பண்ணுவது தான் free ஆ இருக்கலாம்


புடவை ப்ளௌஸ் எவ்வளவு லோ கட் கூட போடலாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க, கணவர் மெயின் சப்போர்ட்


காலையில் சாப்பிட்ட பிறகு 3 அடுக்கு டிபன் பாக்சில் வைத்து அனுப்புவாங்க வித விதமா செஞ்சு சின்ன மாமியார்


அவங்க குளிச்சு முடிக்கற நேரம் அலுவலகம் கிளம்பும் நேரம் இப்படி பல நேரம் யாரும் அந்த பாத் ரூம் கூடஉபயோகம் செய்ய மாட்டாங்க


இவங்க - மருமகள் வீட்டு சொந்தங்களுக்கு பிரசவம் போன்ற சேவைகளும் மற்ற பெரியவர்கள் செஞ்சு வைப்பாங்க


இரவு வேளை வேண்டும் என்றால் தனக்கும் குழந்தைக்கும் சமைக்கலாம் - நோ கம்பல்சன்


கணவர் ஒன்றுமே சொல்ல மாட்டாங்க தாங்குவாங்க


திருமணம் முடிஞ்ச அன்றிலிருந்து இன்றுவரை மஹா ராணி மாதிரி இருக்காங்க


பேரனை போட்டி போட்டு கொண்டு வளர்க்கிறார்கள்


நிச்சயிக்க பட்ட திருமணம்! கண் கூடா பார்த்து உள்ளோம் - இப்படியும் அமைகிறது நிச்சயம் பண்ண திருமணங்கள்


Story 2


இன்னோர் உறவினர் நெருங்கிய சொந்தம் தான்


மாமியார் இந்த மருமகளை ஏழு ஜென்மம் தாய் போல தாங்கறாங்க


என்ன உடை வேணாலும் போடலாம்


என்ன மேக் அப் வேணாலும் செஞ்சுக்கலாம் - மாமியாரும் கூடவே செஞ்சுப்பாங்க அவ்ளோ friends


அந்த பொண்ணுக்கு tiffin என்றால் எல்லோருக்கும் அது தான் அந்த பெண்ணுக்கு சாப்பாடு என்றால் எல்லோருக்கும் அது தான்


அந்த மாமியார் வீடு முழுக்க மருமகள் புகைப்படம் ஒட்டி மியூசியம் போல் செய்துள்ளார்கள்


தன் மகன்களை விட பிரியமா இருக்காங்க


என்ன கோபம் திட்டு ஆளுமை செஞ்சாலும் அந்த மருமகள் வைத்தது தான் சட்டம்


அவள் சம்பாதித்தும் இல்லை ஆனால் fake செர்டிபிகேட் வாங்கி வேண்டும் என்ற நேரத்தில் 6 மாதம் ஒரு வருஷம் பிடித்தால் வேலை செய்ய மாமனார் உதவுவார்


மேலே கூறிய இரு இடங்களிலும் பெண்ணின் பெயர் ஒன்று படித்த படிப்பு கணிதம்!


கணிதம் படிச்ச மருமகள்கள் சிலர் கரெக்ட் ஆக formula வைத்து காயை நகர்த்துகிறார்கள்! இது இரண்டு இடத்தில் பார்த்தேன்


குறிப்பு - கணிதம் அறிவியல் க்கும் இந்த பதிலுக்கும் சம்மந்தம் இல்லை ! அந்த இரண்டு பேர் அதிர்ஷ்டசாலி மருமகள்களுக்கும் பெயர் ஒன்று ! மற்றும் படிப்பு ஒன்று :) அவ்வளவே...


நன்றி ..மருமகள் வாய்ப்பது வரம் ...

மனைவியை 'பொண்டாட்டி' என ஏன் அழைக்கிறோம்?

கேள்வி :  மனைவியை 'பொண்டாட்டி' என ஏன் அழைக்கிறோம்?


பதில் :.

பொண்டாட்டி - என்பது கொச்சையான வழக்கு. பெண்டாட்டி - என்ற தூய தமிழ்ச் சொல்லே பொண்டாட்டி எனத் திரிந்தது.

பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி.

பெண்டாட்டி - என்பது அவளின் பேணும் தன்மை குறித்து அமைந்த அழகான பெயராகும்.

விருப்பத்திற்குரிய , ஆசைக்குரிய ஆட்டி , விரும்பிப் பாதுகாக்கப்பட வேண்டியவள் - என்றும் பொருளுண்டு.

✔பெள் = என்ற மூலம் ஆசை, விருப்பம் குறித்தது.

* பெள் + தல் = பெட்டல் > பெட்டை.

* பெண் > பேண். விரும்பு, விரும்பிப் பாதுகாத்தல். பேணுதல் = விரும்புதல், போற்றல்.

* பெட்பு : பெருமை ; விருப்பம் ; அன்பு ; தன்மை ; பேணுகை ; பாதுகாப்பு.

பெள் > பெண் = பெள்ளப்படுபவள் /பேணப்படுபவள் பெண் ஆனாள்.

பெள் > பெண் > பெண்டு (ஒருமை).

பெள் > பெண் > பெண்டிர் (பன்மை).

பெளுவு = பெள்ளுதல் , பேணுதல்

(beloved).

துக்கடா :

ஆள் - என்ற மூலத்திலிருந்து வந்த சொல் ஆண் ஆகும்.

ஆட்டி என்பதே …. ஆண் - என்ற வழக்கிற்கு சமமான பெண்பால் சொல்லாகும்.

ஆள்+தி - ஆட்டி.

ஆட்டி - என்ற பின்னொட்டு கொண்டு அமைந்த சொற்களில் சில...

* சீமாட்டி - ( சீமை+ஆட்டி).

* மூதாட்டி (மூத்த + ஆட்டி).

* ராசாட்டி ( அரச + ஆட்டி ) - இராசாத்தி (ராணி)

* வண்ணாட்டி (வண்ணாத்தி).

* கைம்பெண்ணாட்டி (கம்னாட்டி).

* வைப்பாட்டி (வைப்பு + ஆட்டி).


நன்றி ...

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

90ஸ் கிட்ஸை உற்சாகப்படுத்த டாப் 3 யோசனை சொல்ல முடியுமா?

 கேள்வி : 

90ஸ் கிட்ஸை உற்சாகப்படுத்த டாப் 3 யோசனை சொல்ல முடியுமா?


என் பதில் :

தினமும் ஒரே நேரம் உறங்குங்கள்; விழித்திடுங்கள்.


வார இறுதி விடுமுறையா? அன்று அதிகநேரம் உறங்குவோம் என்று தூங்குவது ஆரோக்கியமான வழக்கம் அல்ல. வாரத்தில் சில நாள் மட்டும் அதிகமாக தூங்கினால்கூட உங்கள் உடல் கடிகாரம் தொந்தரவுக்குள்ளாகும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் உறங்கி, வெவ்வேறு நேரங்களில் எழுவதால் சரியான ஒத்திசைவு இன்றி உடல் கடிகாரம் திகைக்கும். ஆகவே, காலையில் எழுவது இரவில் படுக்கைக்குச் செல்வது ஆகியவற்றை ஒரே ஒழுங்கில் செய்யுங்கள். பிற்காலத்தில் உறக்கத்தில் பிரச்னைகள் வராமல் இருக்க இது உதவும்.


உடற்பயிற்சி செய்யுங்கள்🚴🚴


"முடிந்த அளவுக்கு நகர்ந்து கொண்டே இருங்கள்" என்று உடல்நல வல்லுநர்கள் கூறுகிறார்கள். நடைப்பயிற்சி, நீண்ட தூரம் நடத்தால், மிதிவண்டி ஓட்டுதல், ஓடுதல், எடை தூக்குதல், நீந்துதல் போன்றவற்றுள் ஏதாவது ஒரு பயிற்சியிலாவது தொடர்ந்து ஈடுபட வேண்டும். உடல் அசைந்து கொண்டே இருப்பது ஆரோக்கியமாக வாழ உதவும். முப்பதுகளின் இறுதி பாதியில் உடல் தசையின் நிறை குறைய ஆரம்பிக்கும். ஆகவே, உடற்பயிற்சி தவறாது செய்வது நல்லது. ஆனால், எந்தப் பயிற்சியில் ஈடுபட உங்களுக்குப் பிரியம் அல்லது வசதி என்று சிந்தித்து அதை செய்தால், இடைவிடாது தொடர்வது எளிது.


டைய்ரி எழுதுங்கள்✍️✍️✍️


'டைய்ரி எழுதும் அளவுக்கு நான் பெரிய ஆளா?' என்றெல்லாம் யோசிக்காமல், உங்கள் சிந்தனைகள், உணர்வுகள் ஆகியவற்றை எழுதி வைக்கலாம். இது பெரிய அளவில் மன உளைச்சல் ஏற்படாமல் காப்பதோடு, இக்கட்டான சூழல்களை எதிர்கொள்ள உங்கள் தயார்படுத்தும்.


சேமிக்க ஆரம்பியுங்கள்🎁🎁


வாழ்வில் எந்த வயதிலிருந்து சேமிக்க ஆரம்பிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு எதிர்காலம் சிக்கலில்லாமல் அமையும். இதுவரை பணத்தை சேமிக்கும் பழக்கம் இல்லாதிருந்தால், முப்பது வயதுக்குப் பிறகு கண்டிப்பாக அப்பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.


வாழ்நாள் கனவினை தொடங்குங்கள்🌈🌈🌈


ஒவ்வொருவரும் வாழ்நாள் கனவு என்று ஒன்றாவது கொண்டிருக்கவேண்டும். வீடு கட்டுவது, குழந்தைகள் பெற்றுக்கொள்வது, புத்தகம் எழுதுவது போன்று உங்கள் விருப்பத்திற்கேற்ப ஏதாவது ஒன்றை வாழ்நாள் கனவாக கொண்டு செயல்பட ஆரம்பியுங்கள். அது மனதில் உற்சாகத்தை பிறப்பிக்கும்.


இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்😀😀😀😀😛😛


'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்று ஒரு பழமொழி உண்டு. நமக்கு இருப்பவற்றை கொண்டு மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொண்டால் அது மிகப்பெரிய நன்மை. நமக்கென்று இருப்பவற்றை எண்ணி மகிழ்ச்சி கொண்டால், எதிர்மறை எண்ணங்கள் குறையும். ஆகவே, எனக்கு இது இருக்கிறது; அது இருக்கிறது என்று இருப்பதில் பெருமிதம் கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.


அனைவரையும் திருப்திபடுத்த வேண்டாம்😊😊


எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டும்; மற்றவர்கள் மனங்கோணாமல் நடந்து கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பினை விட்டுவிடுங்கள். முப்பது வயது தாண்டியதும் உங்கள் நண்பர்கள் மற்றும் தொடர்பு வட்டத்தில் இருப்பவர்களை கவனமாக தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். உங்களை புரிந்துகொண்டவர்களை நண்பர்களாக தேர்ந்தெடுங்கள்; நண்பர்களாக்கியவர்களை புரிந்துகொள்ளுங்கள். எல்லோரையும் திருப்திபடுத்த முயற்சித்தால் மனபாரம்தான் அதிகமாகும். ஆகவே, நட்பு மற்றும் தொடர்பு வட்டத்தை கருத்துடன் உருவாக்குங்கள்.


மற்றவரோடு ஒப்பிடுவதை நிறுத்துங்கள்😛😛


தம்பி, அண்ணன், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செய்யக்கூடியவற்றை உங்களால் செய்ய இயலாவிட்டால் மன வருத்தமடையாதீர்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தால் வாழ்வில் நிம்மதி இருக்காது. மற்றவர்கள் வாழ்வை கொண்டு நம் வாழ்வை அளவிடக்கூடாது. அது உங்கள் இலக்குகளை அடைவதற்கு எந்தவிதத்திலும் உதவாது. ஆகவே, மற்றவர்களோடு ஒப்பிடுவதை விட்டுவிடுங்கள்.


உங்களை நீங்களே மன்னியுங்கள்😻😻😻😻😋😋😋


கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறுகளை நீங்களே மன்னித்துவிடுங்கள். அப்போதுதான் குற்றவுணர்ச்சி மறையும். உங்கள் பலவீனங்களின் காரணமாக செய்த தவறுகளை மன்னித்து, இனிமேல் அதுபோன்ற தவற்றினை செய்யக்கூடாது என்று பாடம் படித்துக்கொள்ளுங்கள். அப்போது மனம் இலகுவாகும்.எப்பொழுதும் உதட்டில் சிறு புன்னகையுடன் மகிழ்ச்சியாக இருங்கள்😀😀


நன்றி ...