மாட்டுப்பொங்கல் ...2019
தளி ஜல்லிபட்டி -உடுமலைப்பேட்டை
இன்று மாட்டு பொங்கல் ...உழவுக்கு ஆணிவேராக இருக்கும் குலதெய்வங்களுக்கு ...பாரம்பரியமிக்க திருநாள் ..25 வருடங்களுக்கு முன் சிறு வயதில் சொந்தங்களுடன் சென்று ஆடு ,மாடு ,கண்ணுகுட்டிகளுடன் சென்று திருமூர்த்தி அணையில் குளிப்பாட்டி ,அவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்து விளையாடியது நினைவில் வந்த மனதுடன் உற்சாகத்தோடு... இன்று மாலை மதிமயங்கும் நேரம் தளிஜல்லிபட்டி கிராமம் மேற்குத்தொடர்ச்சி மலை சாரலில் அமைந்திருக்கும் ..அண்ணனின் ஆட்டு பட்டிக்கு சென்று குழந்தை செல்வங்களுடன் மாட்டுப்பொங்கல் அமைதியான சூழலில் ஆட்டுக்குட்டிகளும் ...பசுமாடுகளுடன் ..தோழனாக இருக்கும் நாய்குட்டிகளுடன் ..சொந்த பந்தங்களுடன் கொண்டாடியது மகிழ்ச்சி ..இன்று தெய்வ வழிபாடு வழிபடுவதற்கு முன் ..புதியவராவாக தாய் ஆடு தன் குட்டி குழந்தைச்செல்வத்தை ஈன்றது அழகான காட்சியாக எல்லோருக்கும் மகிழ்ச்சியாக அமைந்த்து ....வழிபடுவது ஆரம்பிக்கும் முன்னரே குளிர் பனி பல் சில்லிடும் அளவிற்கு குளிர் ஆரம்பத்துவிட்டது ..ஆட்டுப்பண்ணை பட்டியில் இருந்ததால் வெப்ப சீதோஷண நிலவியது...ஆடு ,மாடு கொம்புகளுக்கு வண்ணம் பூசியும்,குங்குமப் பொட்டிட்டு குழந்தைச்செல்வங்களுடன் இன்றைய நாள் அருமையானது .வழிபாடு தொடங்கவதற்கு முன் இருந்து ..இரண்டு குச்சிகள் எடுத்துக்கொண்டு தகர டப்பா ஒன்று எடுத்து கொண்டு .மேளமாக .இசைக்கருவியாக பயன்படுத்திக்கொண்டு ... மாட்டுத் தொழுவத்துடன் விவசாயத்திற்கு பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் சுத்தம் செய்து அலங்கரித்த விவசாயிகள் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் படைத்து மாட்டுத் தொழுவத்தில் பொங்கலிட்டும் . பசு, காளை, ஆடுகள் என அனைத்து கால்நடைகளுக்கும் தீபாராதனை காட்டி பொங்கல், பழம் கொடுத்து பூஜைகளை நிறைவு செய்து மகிழ்ச்சி ..புறப்படும் பொழுது தோட்டங்களினோடு பயணத்தில் சில்லிடும் குளிர் ...உடுமலைநகரத்தை தொடும் வரை ...குளிர் முகத்தில் பன்னீர்த்துளிகளாக சில்லிட்டது ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக