.உடுமலையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி
இன்று 26-1-2019 ...குடியரசு தினம் ...அவரவர் பள்ளிகளில் கொடி ஏற்றி வைத்துவிட்டு ..காலையில் 10 மணி அளவில் ..பள்ளிக்குழந்தைகள் ...உடுமலையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி குதூகலத்துடன் கலந்துகொண்டு இந்தியாவின் வருங்கால கனவை நிறைவேற்ற கனவுகண்டு ..அதை பள்ளிக்குழந்தைகளை உற்சாகப்படுத்திய மறைந்த முன்னாள் ஜனாதிபதி விஞ்ஞானி அப்துல் கலாம் அய்யா வின் கனவுகளை நிறைவேற்றி கொண்டிருக்கும் இளம் விஞ்ஞானிகள் உருவாகி கொண்டிருப்பது மிக்க மகிழ்ச்சி ....... பழனி ஸ்ரீ சுப்ரமண்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் பல்வேறு துறைகளின் செயல்விளக்க கண்காட்சி ராமய்யர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அறிவியல் கண்காட்சியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இஸ்ரோ பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி நெல்லை.சு.முத்து அவர்கள் துவக்கி வைத்தார். ஸ்ரீ சுப்ரமண்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி செயலர் வி.பி.சரவணன் மற்றும் முதல்வர் நந்தகுமார் முன்னிலை வகித்தனர்.
அறிவியல் கண்காட்சியில் மக்கும் பொருட்களில் இருந்து எரி வாயு தயாரித்தல், கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரித்தல்., சுற்றுச்சூழலை பாதுகாக்க கையாளபட வேண்டிய தொழில்நுட்பங்கள்,கார்பன் டை ஆக்சைடு வாயுவில் இருந்து இங்க் தயாரித்தல், விவசாயத்தில் தண்ணீரை சேமித்தல், வனவிலங்குகளை பாதுகாத்தல்,மலைப்பகுதிகளில் கொண்டை ஊசி வளைவுகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுத்தல், வெள்ளம் வரும் போது அதை எவ்வாறு எதிர்கொள்வது அந்த தண்ணீரை எவ்வாறு சேமிப்பது என்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் 120 க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது.

கல்லூரி முதல்வர் நந்தகுமார் வரவேற்றுப்பேசினார். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் ஜோதி ராமலிங்கம், உடுமலை சுற்றுச்சூழல் சங்க நிர்வாகி சசிக்குமார் ,சக்திவேல் ,உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சிவக்குமார், கண்டிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த அறிவியல் கண்காட்சியில் குழந்தைகளின் அறிவியல் அறிவை கண்டு ..அவர்களை உற்சாகப்படுத்தும் பணியை ..உடுமலையின் மண்ணின் மைந்தர் ..வெளிநாட்டுவாழ் இந்தியர் திரு .அசோகன் அவர்கள் ..கலந்துகொண்ட குழந்தைகளுக்கு அன்பு பரிசாக ..மனோரமா இயர் புத்தகம் ..பள்ளி குழந்தைகளுக்கு அளித்தது பெரும் மகிழ்ச்சி ..இன்று இந்த கண்காட்சியில் ..கலந்து கொண்ட அமராவதி இராணுவப்பள்ளி ஆசிரியர் திரு .இளமுருகு அவர்கள் ,கிளை நூலகம் -2 அய்யா .கணேசன் அவர்கள் ,மற்றும் ஊடகத்துறை நண்பர்கள் .பரணி அவர்கள் ,.மகாதேவன் அவர்கள் ,செல்வராஜ் அவர்கள் ,செந்தில்ராம் அவர்கள் ,முனிசாமி அவர்கள் ,ஸ்டீபன் அவர்கள் , குழந்தைகளின் அறிவியல் கண்காட்சியை அழகாக படம் பிடித்துச்சென்றார்கள் ...குழந்தைகளுக்கு மிக உற்சாகமாக அமைந்தது ..
இன்று புதிய நண்பர்களை அதிகம் சந்தித்த நாளாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி ..
ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து அவர்கள், மாணாக்கர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்க்கும் விதமாக அப்துல்கலாமின் சிந்தனைகள் என்ற தலைப்பில் மாணாக்கர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் நிகழ்வை ஒருங்கிணைத்தார்...
இன்று உடுமலையின் அன்பு பரிசாக ...உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் வெளியிட்ட உடுமலையின் வளர்ச்சிக்கு பாடுபட்ட நல் உள்ளங்களின் பெரியவர்களின் வரலாறுகளை தொகுப்பு நூலை ..அறிவியல் விஞ்ஞானி திரு .நெல்லை முத்து அவர்களுக்கு வழங்கியது மிக்க மகிழ்ச்சி ...
இன்றைய குடியரசு தினம் அருமையான நாளாக அமைந்தது ...வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக