வியாழன், 5 ஏப்ரல், 2018

நம்ம ஊர்ப் பண்டிகை ....(உடுமலை மாரியம்மன் -2018)
---------------------------------------------------
கடந்த ஒரு வாரமாகவே வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும்    உடுமலைச் சார்ந்த நட்புகளில் ஒருவரேனும் தினமும் உடுமலை   மாரியம்மன் குறித்து விசாரித்து விடுகிறார்கள். ”பண்டிகை எப்படிப் போகுது” எனக் கேட்கும்போது நல்லாப்போகுதுங்க என பொதுவாகச் சொல்லிவிட வேண்டியதாகிறது.

ஊரைவிட்டு எவ்வளது தூரம் விலகியிருந்தாலும் உள்ளுர் பண்டிகைமீது அவரவருக்கு ஒரு பிரியம் ஒட்டிக்கொண்டேதான் இருக்கின்றது. உள்ளூர் பண்டிகைமேல் கொண்டிருக்கும் பிரியம் சற்று சோபையான அழகுகொண்டது. ஒவ்வொரு ஆண்டு பண்டிகையும் ஒவ்வொருவித நினைவுகளை மீட்டித்தரும் சாத்தியங்களுண்டு

கல்லூரி காலத்தில் NSS-ல் இருந்ததால் மூன்று வருடங்கள் உடுமலை   மாரியம்மன் கோவிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுதெல்லாம் கோவில் வளாகத்திற்குள் ஆண் காவலர்கள் வருவதில்லை. கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெண் காவலர்களும், NSS மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனாலோ என்னவோ வரும் கூட்டத்திடம் எங்களுக்கு கொஞ்சம் கூடுதல் மரியாதை கிடைக்கும். மூங்கில் தடுப்புகள் வைத்து நிறுத்தி நிறுத்தி விட்டாலும் கட்டுக்கடங்காமல் பொங்கிப்பொங்கி கம்பத்தில் தண்ணீர் ஊற்ற வரும் கூட்டத்தின் வேகத்தைப் பார்க்கையில் மிரட்சியாக இருக்கும். இத்தனை பேர் ஊரில் இருக்கிறார்களா என அப்பொழுதெல்லாம் தோன்றும். தலையில் தீர்த்தக்குடம் வைத்து மணிக்கணக்கில் கால் கடுக்க நின்று பக்தியை வெளிப்படுத்த நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கும். இருபது வருடங்கள் கழித்து இப்பொழுதும் அப்படியே இரவு பகல் காத்திருந்து தங்கள் பக்தியை வெளிப்படுத்திட கூட்டம் அம்முகிறதா எனத் தெரியவில்லை.

ஆளரவமற்ற திருப்பூர்  சாலையில் மூன்று மணியளவில் மின்வாரிய அலுவலக வாயிலருகில் காலை இருவர் நெருப்பிட்டு ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். மார்கழி, தை மாதமாக இருந்திருந்தால் குளிர் காய்கிறார்களோ என நினைத்துக்கொள்ளலாம். இந்தக் கோடையில் என்ன செய்வார்களாக இருக்கும் என யோசிக்கும்போதே, மின்வாரிய அலுவலக கேட் முன்பக்கத்தில் கும்பலாக கெடாக்கறி அரிந்து கொண்டிருந்தார்கள். பழனி  ரோட்டில்  சூப்பர் மார்கெட் தாண்டுகையில் ஒரு ஆட்டை வெட்டி ரத்தத்தை ரோட்டில் சிந்தவிட்டுக்கொண்டிருந்தார்கள். எல்லாம் மாரியம்மன் பண்டிகை மகிமை எனத் தோன்றியது.

      உடுமலை .... நகரைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கும், பிழைப்பின் பொருட்டு இங்கு நகர்ந்து குடியேறியவர்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசமுண்டு. எவர் வீட்டின் முன்பு வாகனங்கள் நிற்கிறதோ, வீடுகளுக்குள் உறவுகள் இருக்கிறதோ, எங்கே கறிக்குழம்பு வாசனை வருகிறதோ அவர்களுக்கெல்லாம் இது பண்டிகை தினம். அப்படிப்பட்ட வீடுகளிலிருந்து அழைப்பும் வராமல், பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்ட ஒரு தினத்தை வீடுகளுக்குள் முடங்கி டிவியோடு மல்லுக்கட்டுபவர்களுக்கு போர் அடிக்கும் அதிகாரப்பூர்வமில்லா ஒரு விடுமுறை தினம்.

ஆனாலும் இங்கு குடியேறியிருக்கும் வெளியூர் சனம் பெண்டு பிள்ளைகளோடு கோவில் கடைகளை வலம் வந்து,குட்டை திடலில் ... டெல்லி அப்பளம் சாப்பிட்டு ஓரளவு திருப்தியடைந்து விடுகிறார்கள். முன்பெல்லாம் பெரும்பான்மையான வீதி முனைகளில் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சியிருக்கும். இப்பொழுதெல்லாம் அவை குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. அதுவும் தேர்தல் நேரம் என்பதால் கெடுபிடிகளும் அதிகமாக இருக்கும்.

இன்றைக்கு நான் ஆச்சரியமாக உணர்ந்தது, திருவிழா தினமான இன்று  பழனி சாலையின் ஒரு வழியில் பேருந்தை அனுமதித்திருந்ததுதான். அந்தளவுக்கு கூட்டம் குறைந்துவிட்டதா அல்லது போக்குவரத்தை சீராக பராமறிக்கும் அளவிற்கு திறனடைந்துவிட்டார்களா எனத் தெரியவில்லை.

  மாதக்கணக்கில் கோலாகலாமாய் கொண்டாடப்பட்டாலும், விதவிதமான கடைகள் என சாலையோரம் நிரம்பியிருந்தாலும் கூட, இதைவிட ஒரே ஒரு நாள் நடக்கும் சொந்த ஊரின் மாரியம்மன் பண்டிகைமேல் சற்று கூடுதல் பிரியமும் உரிமையும் இருக்கின்றது. என்னைப்போல் ஊரைவிட்டு  குடியேறியவர்களின் நிலை இருதலைக்கொள்ளி எறும்புதான். இங்கிருக்கும் திருவிழாவிலும் ஆத்மார்த்தமாய் ஒன்ற முடியாது. ஊரில் நடக்கும் திருவிழாவிலும் அந்த ஒரே ஒரு நாளுக்கு மட்டும் போய் முழுமையாக ஒட்டமுடியாது. காலம் எல்லாவற்றையும் மாற்றியமைக்கிறது. மாற்றியமைக்கப்படுவதில் சில சிதைந்தும் போவதை மறுக்க முடியாது.

போன வருடம் என் மகன் உடன் குட்டை திடலில்  ராடினும் சுத்தியும் ,சர்கஸ் பார்த்து இருந்த மகிளுச்சி ....இந்த வருடம் எதையோ இளுந்தவிட்ட உண்ர்வூ .....இனிமேல திரும்ப கெடைக்காத இந்த ஜென்ம மகிளுச்சிகள். இருந்தாலும் உடுமலை   மர்ரியம்மன் கைவிடாது என்ற நம்பிகையுடன் ......

வங்கிப் பரிமாற்றங்கள், கட்டணங்கள் செலுத்துதல், எழுதுதல், வரைதல், பயணச்சீட்டு பதிதல் இப்படி எல்லாவற்றையும் கனிணியில், இணையத்தில் செய்து முடித்துக்கொள்ள நினைக்கும் இந்த தலைமுறைக்கு கடவுளின் அருளும் எதாவது ஒரு இணையப்பக்கத்தில் கிடைத்துவிட்டால் போதுமே என்ற மனோபாவத்திற்கு ஆட்படப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை......

தேரை தள்ள கேரளா மாநிலம் செர்புலசெரி சேகரன் யானையை கண்டு  என் ஷியாம் சுதிருடன்  பார்த்து மகிழந்தது மிக்க மகிழ்ச்சி ..ஷியமுடன் தேரை பார்ப்பதற்கு ஒரு வருடம் காத்துஇருக்கவேண்டும் ...மாரியம்மன் தேர் திருவிழா முடிந்தது ..இனி தேவராட்ட பெருவிழா ஏப்ரல் 22 ஞாயிறு ..குட்டை திடலில் அடுத்த வரும் பெருவிழாவில் சந்திப்போம் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..வாட்ஸாப்ப் எண் 994466681....

புதன், 4 ஏப்ரல், 2018






Sivakumar Kumar is feeling happy in Udumalaippettai.
6 mins
உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் ..
மாவிளக்கு வழிபாடு
மாவிளக்கு வழிபாடு என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து சமயத்தில் அம்மன் வழிபாடு முறைகளில் ஒன்று.பண்டிகை காலத்தில் மாக்கோலம் இடுதல்,மாவிளக்கு ஏற்றுதல் போன்ற வழக்கங்கள் வழிபாட்டில் இருந்து வந்ததுள்ளது..ஆனால் தற்பொழுது மாக்கோலம் இடும் பழக்கம் குறைந்து கொண்டு வருவது வருந்தத்தக்க விஷயமாகும்.இன்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி தங்கள் கோரிக்கைகளை அம்பாளிடம் முறையிடுகின்றன.அம்பாளும் தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு சகல செல்வங்களையும் தந்து அருள்பாவிக்கிறாள்.
நோய்கள் தீர மாரியம்மன்,காளி போன்ற தெய்வங்களுக்கு மாவிளக்கு ஏற்றி நோத்திக் கடன் செய்வர்.ஆறு,குளம் உள்ள ஊர்களில் இருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இரட்டிப்பு பலனைத் தரும்.
இடித்தெடுத்த பச்சரிசி,வெல்லம்,ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம் ஏற்றுவதே மாவிளக்கு ஆகும்.
மாவிளக்கு தத்துவம்
காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது.
அரிசி[அன்னம்] பிராணமயம்.அன்னம் பிரம்ம ஸ்வரூபமேயாகும்.உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது அன்னமே.
வெல்லத்தின் குணம் மதுரம்.அதாவது இனிமை.மதுரமான அம்பிகை மதுரமானவள்.ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.
அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.நெய்யை வார்தே ஹோமங்கள் வளர்க்கிறோம்.ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார்.
அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது.மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவே மாவிளக்கு ஏற்றுகிறோம்.
நம்மையே விளக்காகவும்,மனதை நெய்யாகவும்,அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வவழிபாடு இது.அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு 1முறையாவது செய்ய வேண்டும்.என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...பகிரளி எண் ..9944066681🌸
























செவ்வாய், 3 ஏப்ரல், 2018

உடுமலைப்பேட்டை மக்களின் மனம் கவரும் திருவிழா
ஆண்டாண்டு காலமாக நடக்கும்
ஆண்டுக்கொரு  நாள் திருவிழா
ஆண்டு முழுவதும் மழலைகள் ஆர்ப்பரித்து
ஆரவாரிக்கும் மாரியம்மன் தேர்த் திருவிழா
தேர் திருவிழா ...
லட்சக் கணக்கில் மனித மனங்கள் ஒன்று கூடும்
இதில் சாதியில்லை ,பேதமில்லை ,மதமில்லை
கள்ளமில்லா உள்ளங்கள் கொண்டாடும் திருவிழா
இது மாரியம்மன் திருவிழா
திருவிழா நாட்கள் முழுவதும் ஒவ்வொரு திருவிழா
முளைப்பாரி திருவிழா ,தேவராட்ட பெருவிழா
கரகாட்டத திருவிழா ,காவடியாட்டப் பெருவிழா
பறவைக்கு காவடி ,பால் காவடி ,
புலியாட்டம் ,சிலம்பாட்டம் ,
எத்தனையோ ஆட்டங்கள்
அத்தனையும் காணக்
கண் கோடி வேண்டும்
இவை அனைத்தையும்  குழந்தைகளோடும் ,
உற்றார் உறவினர்களோடும் ,
துள்ளும் மனங்களோடு
கடைக்கண் பார்வையிலே
காணாமல் போன காதலிகளை
கண் முன் நிறுத்தும் குடை ராட்டினங்கள்
கர்ச்சீப் வைத்தெடுத்த கட்டை ராட்டினங்கள்
மனங்கள் நினைக்காமல் இருக்குமோ
நாற்பது வயதுக்குமேல் இருக்கும்
அனைவருக்கும் மனம் ஆர்ப்பரிக்கும்
இப்பொழுதோ கையிலே ..விரல் நுனியிலே
ஆண்டராயிடு போனிலும் ,ஆப்பிள் போனிலும் "சைகையிலே சரிசெய்வதை "
என்னென்று சொல்வது ....
தேர் த் திருவிழாவை  மகிழ்வுடன்
வரவேற்போம் ...வாருங்கள் ..
தேரை நகர்த்துவோம்
ஓடுவது தேரல்ல ....
அனைத்து சமூக மக்களின் வாழ்நிலையும் தான் ......

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...பகிரளி எண் 9944066681......





திங்கள், 2 ஏப்ரல், 2018


நீங்கள் வீட்டுக் கடன் வாங்க வங்கியை அணுகும் போது . . .
நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ இருபது வயதிலேயே வீடு வாங்குவது சகஜ மாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர் த்து வைத்து வீடு கட்டினார்கள். இன் று வீட்டை கடனில் வாங்கி விட்டு, கடைசிக் காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார் கள்!
எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறு ப்புடன் பயன் படுத்த வேண்டாமா?
தனிநபர் ஒருவர் வாங்கும் பெரிய கடன் என்றால், அது வீட்டுக் கடன் தான். ஆகவே, வீட்டுக் கடனை வாங்குவதில் மட்டும் ஒருவர் பெரிய தவறேதும் செய்யவில்லை எனில், மற்ற கடன்களை எல் லாம் ஊதித் தள்ளி விடலாம்.
வீட்டுக் கடன் வாங்க ஒரு வங்கி யை நீங்கள் அணுகும் போது, அந்த வங்கியின் மேலாளர் உங்கள் கடன் விண்ணப்பப் படிவத்தை எந்தக் கோணத்தில் பார்ப்பார் என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.
வங்கி மேலாளர் முதலில் உங்களின் மாத / ஆண்டு வருமானம், கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் உங்களின் வருமானம், வீட்டிற்கு எடுத்துவரும் சம்பளம் எவ்வளவு என்கிற விஷயங்களை அலசி ஆராய்வார். நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் எந்தத் தொழிலில் உள்ளது என்றும் பார்ப்பார்.
சினிமா, அரசியல் துறைகளில் இருப் பவர்களுக்கு வருமானம் நிலையாக இருக்காது என்பதால் வீட்டுக்கடன் தர யோசிப்பார்கள். சுய தொழிலில் ஈடுபட்டு, வரு மான வரித் தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கும் கடன் கிடைப்பது கடினமே. வேறு ஏதும் லோன் வாங்கி அதற்காக இ.எம்.ஐ. கட்டி வருகிறீர் களா என்றும் பார்ப்பார்கள்.
கடன் வாங்குபவரைப் பற்றிய அலசல்தான் ஆரம்பத்தில் பெரிதாக இருக்கும். இதற்காக உங் களிடமிருந்து பல டாக்குமென்டுகளைக் கேட்பார்கள். இதனால் நீங்கள் பொறுமை இழந்து, கோபம்கூட அடையலாம். நான் வீட் டை அடமானமாக வாங்கித்தானே கடன் தரப்போகிறீர்கள்? பிறகு ஏன் இத்தனை விசாரிப் பு? என்றுகூட நீங்கள் கேட்பீர்கள்.
ஆனால், வங்கிகள் உங்கள் வீட்டை விற்று தங்கள் கடனை செட்டில் செய்துகொள்ள விரும்புவதே இல் லை. அதனால் அவர்களுக்கு நஷ் டம்தான். எனவேதான், கடன் தரும் முன்பே உங்களைப் பற்றி முழுவது மாக அலசி ஆராய்கிறார்கள். வங்கி மேனேஜர் அடுத்து பார்க்கும் முக்கிய விஷயம், உங்கள் வயதைத் தான்! 55 வயதிற்கு மேல் உள்ளவர் களுக்கு பொதுவாக கடன் தரமாட்டார்கள் – அரசு பென்ஷன் வாங் குபவராக இருந்தால் தவிர!
இதற்குப் பிறகு உங்களது சிபில் ஸ்கோரை நிச்சயம் பார்ப்பார்கள்! நீங்கள் கடந்த காலத்தில் வங்கிக ளிடம் கடன் வாங்கி ஒழுங்காகச் செலுத்தாமல் இருந்திருந்தால், உங்க ளின் சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும். அது போன் ற சமயத்தில் வங்கிகள் உங்களு க்கு வீட்டுக் கடன் தராது.
மாதச்சம்பளத்தில் கழிவுகள்போக மீதி எவ்வளவு உங்களுக்கு கிடைக்கிறது என்று அலசுவார்கள். உதாரணமாக, உங்கள் மாதச் சம்பளம் ரூ.45,000 என்று வைத்துக் கொள் வோம். கழிவுபோக, உங்களுக்கு கையில் கிடைக்கும் தொகை ரூ.40,000 எனில், இன் றைய வட்டி நிலவரத்தில் 30, 40 வயதிற்குள் இருக்கும் நபருக்கு, முறையே 16-18 லட்சம் வீட்டுக் கடன் கிடைக்கும் (20-30 வருடங் கள் கடன் காலம் என்று எடுத்துக் கொள்ளும் பட்சத்தில்!). அதாவது, உங்கள் வயது மற்றும் கடன் காலத்தைப் பொறுத்து உங்களது வீட்டி ற்கு எடுத்துச் செல்லும் மாதச் சம்பளத்தைப்போல் 40 – 45 மடங்கு கடன் கிடைக்கும்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், நீங்கள் வீட்டிற்கு எடுத்து வரும் பணத்தில் அதிகபட்சமாக 40 சதவிகிதம் தொகையை இ.எம் .ஐ-ஆக கட்டுமளவிற்கு வங்கிகள் வீட்டுக் கடன் தரும். மீதி 60 சத விகித சம்பளம் உங்கள து அன்றாட வாழ்க்கைக்குத் தேவை யாக இருக்கும். எனவே, கணவன் – மனைவி என இருவரும் சம்பாதிக்கும் போது அதிக கடன் கிடைக்க வாய்ப்புண் டு.
இதுபற்றி எல்லாம் இவ்வளவு விரிவாக எடுத்துச்சொல்லக் காரணம், வங்கிகளின் பொதுவான வரை யறைக்கு உட்பட்டு நாம் கடன் வாங்கினால், நம் வாழ்க்கை யில் பெரிய சிரமங்கள் ஏற்படாது. நமது திருப்பிச் செலுத்தும் திறனை மீறி கடன் வாங்கும் போதுதான், பெரும் பாலானோர் பிரச்னையில் மாட்டிக் கொள்கிறார்கள்.
இளம் வயதில் கடன் வாங்கி வீடு வாங்கு வதில் தவறே இல்லை! ஆனால், வீட்டுக் கடன் வாங்கியபிறகு, நம் சம்பாத்தியத் தில் ஏதேனும் தடை ஏற்பட்டால் என்ன செய்வோம் என்பதை தீர்க்க மாக யோசித்துவிட்டு, கடன் தொகையை நிர்ணயம் செய்வது நல் லது.
இன்றைக்கு கைநிறைய சம்பளம் வருகிறது என்று கடன் வாங்கி விட்டு, நாளைக்கு திடீரென அந்த வேலையை இழக்க நேர்ந்தால், இ.எம்.ஐ. கட்டுவது பாதிப் படையும். இதனால் வாங்கிய வீட்டை குறை ந்த விலைக்கு விற்கவேண்டிய கட்டாயம்கூட ஏற்படலாம். இதனைத் தவிர்க்க ஒரே வழி, ஆறு மாதத்திற்கு தேவையான இ.எம்.ஐ. மற் றும் வீட்டுச் செலவுக்கான பணத்தை எப்போதும் வங்கியில் வைத் திருப்பதே.
வீட்டுக்கடன் வாங்கும்போது அதிகமான பணத்தை வட்டியாகச் செலுத்த விரும்பாதவர்கள், வழக்கமாகச் செலுத்தும் டவுன் பேம ன்ட் தொகையைவிட அதிகமாகச் செலுத்துவது நல்லது. உதாரணமா க, ரூ.30 லட்சத்திற்கு ஒரு வீட்டை நீங்கள் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
வங்கி விதிகளின்படி, குறைந்தது ரூ.6 லட்சம் (20%) நீங்கள் டவுன் பேமன்டாகச் செலுத்தவேண்டும். மீதி 80சதவிகிதத்தை (ரூ.24 லட்ச ம்) வங்கிக் கடனாக தரும். 20 வருட கடன் மற்றும் 10% வட்டி என்கிற பட்சத்தில், மாத இ.எம்.ஐ. ரூ.23,161-ஆக இருக்கும்.
உங்கள் கையில் ரூ.6 லட்சம் இரு க்கும் பட்சத்தில், உங்களுக்கு இர ண்டு சாய்ஸ் இருக்கிறது. ஒன்று, நீங்கள் உடனே வீட்டை வாங்கி விட்டு இ.எம்.ஐ-யைத் துவக்கி விட லாம்; அல்லது வீடு வாங்குவ தை சற்று ஒத்திப் போடலாம். உதார ணத்திற்கு, நீங்கள் 3 ஆண்டு காலம் ஒத்திப்போடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அந்த 3 ஆண்டுகாலத்தில்,கையில் இருக்கும் 6 லட்சத்தை ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிடுங்கள். அதேபோல், நீங்கள் லோன் எடுத்திருந்தால் மாதத்திற்கு கட்ட வேண்டிய ரூ.23,161-ஐ ஒரு ஆர்.டி-யில் அல்லது லிக்விட் ஃபண்டில் போட்டு விடு ங்கள். மூன்று வருடம் கழித்துப் பார்க்கும் போது, ஆண்டிற்கு 8.5% வட்டி கிடைக்கும் என்ற பட்சத்தில், உங்கள் கையில் 17 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்.
அதே 30 லட்சம் ரூபாய் வீட்டிற்கு நீங்கள் இப்போது வெறும் 13 லட்சம் கடன் வாங்கினால் போதும். இதனால் நீங்கள் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ. வெறும் ரூ.12,545-ஆக மட்டுமே இருக்கும்!
ஆனால், இந்த மூன்றாண்டு காலத்துக்குள் வீட்டின் மதிப்பு உயர்ந்தி ருக்குமே! என நீங்கள் கேட்கலாம்! இனிவரும் காலத்தில் வீட்டு விலை அவ்வளவு வேகமாக உயரா து. அப்படியே உயரும் என்றாலும் உங்கள் வட்டி வருமானம் ஓரளவுக்கு அதை ஈடுகட்டிவிடும். இப்படி செய் வதால், உங்கள் ரிஸ்க் வெகுவாக குறைவதுடன், உங்களுக்கு நீங் களே ஒரு வெள்ளோட்டம் பார்த்துக்கொண்டதுபோல் இருக்கும்.
என்னங்க ..கனவு இல்லத்தை ..நிறைவேற்றி விடலாமா .....என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681 வாட்ஸாப்ப் எண் 

சிவக்குமார் V .K
(வீட்டுகடன் )
உடுமலை சிவக்குமார் ...9944066681 வாட்ஸாப்ப் எண் 
உடுமலைப்பேட்டை ..பொள்ளாச்சி ...கோவை ....

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

கீர்த்தி வீரர் எதுலப்ப மன்னரின் நூல் வெளியீடு மற்றும் தேவராட்ட பெருவிழா ...

அருமையான சந்திப்பு நீதிஅரசரிடம் ..

நேற்று காலையில் ..மாநில செயல் தலைவர் முருகவேல் அய்யா அவர்களுடன் ...உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் வரலாற்று பேராசிரியர் .மதியழகன் ,தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து அவர்கள் ..ஆய்வாளர் அருட்செல்வம் ..ஆகியோர் தேனீ யில் நமது நீதி அரசர் தங்கராஜ் அய்யா அவர்களிடம் அணிந்துரை ...தேவராட்ட நிகழ்வுக்கு அழைப்பிதழ் அளித்து விட்டு ..வரலாற்று நூலை பற்றி கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது ..அவர்களின் வழிகாட்டுதலோடு வீறு நடை தொடர்கிறது ...என்றும் அன்புடன் உடுமலை சிவகுமார் ..பகிரளி எண் ..9944066681...
சமுதாய பணிக்கு ஏது ஓய்வு ....

ஓராயிரம் கலைஞர்கள் ஓரணியாய் ஒருங்கினைந்து எத்திசையும் புகழ்மணக்கும் எத்தலப்பர் புகழ்பரப்பும்  போர்ப்பரணி  நாளான ஏப்ரல் 22 ல் 2018....தேவராட்ட திருவிழாவுக்கு கலந்துகொள்ள அழைக்கும் விதமாக நமது தேவராட்ட கலைஞர்களுக்கு அழைப்பிதழ் ,,,

நமது மாப்பிள்ளைகள் ..தம்பிகளுடன் ...வலசை கார்த்தி SR ...கொடுங்கியம் செந்தில் ...ராஜாவூர் தமிழரசன் ...ராஜாவூர் பாலமுருகன்..கொடிங்கியம்  jms ட்ராவல்ஸ் ..சேகர் என்கின்ற அயோத்தி ராமன் .. அவர்களுடன் ...பெரியகோட்டை .கருணாநிதி அண்ணனை முதலில் சந்தித்து முதல் அழைப்பு ...ஆரம்பம் ..ராஜாவூர் ஊர் நாயக்கரிடம் ...நமது பொன்னேரி ராயல் புல்லட் க்ரிஷ் மாப்பிளைக்கு ...அம்மாபட்டி  நமது மாப்பிளை ராமு அவர்களுக்கும் ,எரியோடு பாளையக்காரர் திரு TS ராமசாமி அய்யா அவர்களுக்கும் ,நினைத்தவுடன் மனதை அள்ளும் கரப்பாடி திரு .குருசாமி அவர்களுக்கும்,கொண்டேகவுண்டம்பாளையம் அண்ணன் வாசுதேவன் அவர்களுக்கு  ,ரமேஷ்  அவர்களுக்கும் ...லிங்கம்மாவூர்  மாப்பிள நித்தியானந்தம் ,அம்மாபட்டி தம்பிக்கும் ..பொட்டையம்பாளையம் தினேஷ் அவர்களுக்கும் ,வென்சப்பட்டி விஜயகுமார் அவர்களுக்கும் ...

.விழாவிற்கு வருகை தருமாறு பணிவுன்புடன் கேட்டுக்கொண்டபோது ....

அழைப்பிதழ் வழங்கும் பணி தொடரும் .....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...பகிரளி எண் 9944066681


போட்டி இல்லை .....கீரதிவீரர் எதுலப்பர் மன்னரின் வீரச்செயலுக்கு தரும் மரியாதை ...ஒட்டு மொத தமிழகம் திரும்பி பார்க்கும்  ஊடக செய்தி ...தேவராட்டம்  மூலம் ஒரு கவன ஈர்ப்பு அவளுவுதான் ..நமது நோக்கம் ..வரலாற்று நூல் வெளியிடு ..காவல்துறை அதிகாரிகள் ..மாவட்ட ஆட்சியர் ..மூன்று அமைச்சர்கள் ...பொதுமக்கள் ..கலந்துகொள்ளும் நிகழ்வு ..


சனி, 31 மார்ச், 2018

எனது உலகம் ...

உடுமலைப்பேட்டை மாரியம்மன் தேர் திருவிழா -ஏப்ரல் 5..2018

அக்னி சட்டியில் ...!!!!!

தீ ஒன்று கண்டேன் ...!!!!!

சத்யத்தயின் துணையோடு கடக்க கற்றுக் கொள்ளுங்கள் என்பதன் அர்த்தம் அது. 

தங்க மஞ்சள் போல ஒளிவிடுகிறது அக்கினிச் சட்டி.

கோவில் திருவிழாக்களில்..அக்னி சட்டி எடுப்பதன் அர்த்தம் ..

இறைவா எதுவரை இந்த மண் சட்டி என்ற உடலில் வசிக்கின்றேனோ அதுவரை ஆன்ம தீபத்தை ஏற்றிக்கொண்டே இருப்பேன்..

எவ்வளவு நெருப்பு சுடும் அளவு இன்னல்கள் வந்தாலும் உன் வழியிலிருந்து மாறாமல் தாங்கிகொள்வேன்.. 

என் ஆன்ம தீபம் நிலையாய் எரிவதற்கு ஞானம் என்ற நெய்யை உன்னிடம் வந்தடையும் வரை ஊற்றிக்கொண்டே இருப்பேன்..

இதுவே அக்னி சட்டியின் ரகசியம்..!!!!!!!

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...வாட்ஸாப்ப்  இல் தொடர ..9944066681..
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் கலந்தாலோசனை கூட்டம் ..

இடம் :
குமரன் தட்டச்சு பயிலகம் ,
எண் 1,வக்கீல் நாகராசன் வீதி ,
தளி சாலை ..
உடுமலைப்பேட்டை ..

 நாள் :01-04-2018...நேரம் : மாலை 4 மணி அளவில் ..நடைபெற உள்ளது ...

முன்னவர் ,முனைவர் க .இந்திரசித் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் வரலாற்று ஆய்வு நடுவப்  பணிகளின்  தொடர்ச்சியில் தளி எதுலப்ப   மன்னர் ,ஈகச்  செயலை நினைவு கூறும் வகையில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது .அந்த வகையில்

எதிர்வரும் 22/04/2018 அன்று உடுமலை குட்டை திடலில் ஓராயிரம் கலைஞர்கள் ஒருங்கிணைந்து புகழ் பாடும் மாபெரும் தேவராட்ட பெருவிழா

 வரலாற்று ஆய்வாளர்கள் ,வரலாற்று பேராளர் கள் ,பேராசிரியர்கள் ,நண்பர்கள் ,ஆகியோரின் ஒத்துழைப்போடு ,வழிகாட்டுதலோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அனைவரும் வருகை தந்து வரலாற்று பணிகளை தொடர அன்புடன் அழைக்கின்றோம் ..

அழைப்பு எண் ....98420 91244...9171801212





வெள்ளி, 30 மார்ச், 2018

எனது உலகம் ....

உடுமலை மாரியம்மன் தேர் திருவிழா .ஏப்ரல் 2018.....
உடுமலைப்பேட்டை ..
தீர்த்தம் .....
மாரியம்மன் தேர் திருவிழா என்றாலே உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ..கொண்டாட்டம் ...தேர் விழா பள்ளி தேர்வுகள் வரும்பொழுது வருவதால் ..குழந்தைகளுக்கு அதிக கவனம் ..கொஞ்சம் கொண்டாட்டம் ..கல்லூரி இளையசொந்தங்களுக்கு கேட்கவேண்டாம் ..எப்பொழுதும் கொண்டாட்டம் தான் ..இன்று பங்குனி உத்திரம் பொன் நாள் ...அதிகாலை அம்மாவுடன் மாரியம்மன் கோவிலில் இருக்கும் கம்பத்துக்கு வீட்டிலிருந்து வேப்பம் தழைகள் குடத்துடன் மாரியம்மன் அருளை எல்லா மக்களும் நலம்  வேண்டி பிராத்தனை செய்வது கோடி புண்ணியம் ..30 வருடங்களுக்கு பின் அம்மாவுடன் சென்று வருவது ஆனந்தம் ..ஆனந்தம் .....அமைதியான தளிசாலையில் நடந்து வந்து முதலில் இரண்டு ஏசு புனித ஆலயம் ஜெபத்தை காதில் கேட்டுக்கொண்டும் ,இறை அல்லாவின் அதிகாலை பாங்கை காதில் இன்புற கேட்டுக்கொண்டு கடந்து வருவது மனதிற்கு புத்துணர்ச்சி  ....நூலகம் அருகில் இருக்கும் பிள்ளையாரை சுற்றி வரும்போது மனதிற்கு ஒரு இனம்புரியாத தெய்வ பக்தி மனதில் தொற்றி கொள்கிறது ..மகிழ்ச்சியுடன் உடுமலை காவல்நிலையம் நிலையத்தை கடந்து பெரியகடைவீதியில் இரண்டு பக்கம் முன்னிரவு சிறு கடை உழைப்பாளர்கள் உழைத்த களைப்பில் அயர்ந்து உறங்கி கொண்டிருக்கும் அழகு பார்க்கும் போது நம் மனதுக்கு கடின உழைப்பு வீண்போகாது என்பதை உணர்த்துகிறது.. கோவிலின் படியேறும்போதே அதிகாலை கூட்டம் அமைதியாக...மனதில் எத்தனையோ பிராத்தனைகளை வேண்டி ..போன்வருடம் பிராத்தனைகள் நிறைவேறி அம்மனுக்கு அங்கபிரதச்சனம் செய்து வழிபாடும் அழகு பிராத்தனைகள் வீண்போகவில்லை அவர்களுக்கு ..கோவிலின் முதல் அடி  எடுத்து வைக்கும் போது நம் முகத்துவாரம் முழுவதும் வேப்பம் தழைகள் ,அதன் சிறிய வெள்ளை வேப்பம் பூக்களின் வாசம் ..நம் உடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது ..நம் பெரியோர்கள் நமக்கு அளித்த இயற்கை வைத்தியம்...கோவிலின் தரையில் தடம் பதித்து நடக்கும் பொழுது அந்த வேப்பம் தழைகளுடன் இருக்கும் நீரின் ஈரம் உடல் மற்றும் ,காலின்  வெப்பத்தை  தணிக்கிறது ..அதுவும் அதிகாலை வேலையில் எழுந்து பெற்றோர்களுடன் வந்திருக்கும் குழந்தை செல்வங்கள் ஆரவாரமாக ..ஈரத்துடன் நனைந்து அருள் வேண்டி கொண்டிக்கொண்டிருக்கும் அழகோ அழகு ....அம்மா கொண்டு வந்த தீர்த்தநீரை கம்பத்துக்கு ஊற்றும் போது தெறிக்கும் நீர்த்துளிகள் நம் உடம்பில் ..முகத்தில் படும்பொழுது முகத்தில் இருக்கும் நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி பெறுவது அப்படி ஒரு ஆனந்தம் ..பொது தரிசன வரிசையில்.கொஞ்ச நேரம் மெதுவாக   அடி மேல் அடிவைத்து மாரியம்மனை பிராத்தனை செய்தது மிக்க மகிழ்ச்சி ...கோவிலின் பெரிய ஆலமர தெய்வங்களை சுற்றி வரும்பொழுது ஆலமர காற்றை அதிகாலைவேளையில் சுவாசிப்பது நமது நுரையீரலை சுத்திகரிக்கிறது .இவை அனைத்தும் நம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த பாடங்கள் விடாமல் கற்றுக்கொள்ளவேண்டியது இன்றியமையாதது ..மெதுவாக ஈரம் கலந்த தரையில் சில மணித்துளிகள் அமர்ந்து எழுவது ஊடலுக்கு ஆரோக்கியம் .....அதிகாலை வழிபாடுகள் என்றும் மனதில் ஒரு உற்சாகத்தை நாள் முழுவதும் வைத்துக்கொள்ள உதவுகிறது ....உடுமலை மாரியம்மன் தேர் திருவிழா ...மாலை நேர கொண்டாட்டங்களுடன் சந்திப்போம் ...அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681....வாட்ஸாப்ப் எண் ....கொண்டாட்டங்கள் தொடரும் ...





வியாழன், 29 மார்ச், 2018

நம்ம குஜ்ஜ பொம்மு தம்பி ...

நம்ம குஜ்ஜ பொம்மு தம்பிக்கு ..ஒரு சின்ன புள்ளிதான் வைத்துக்கொடுத்தேன் ..நானும் கடந்த சிலமாதங்கள் கடுமையான பணிசுழலில் மறந்துவிட்டேன் ...இன்னைக்கு பேச்சுவாக்கில் தம்பி என்ன பண்ணறாரு னு ..நம்ம மாப்பிளைகளிடம் விசாரித்தேன் ..தம்பி ...புள்ளிவைத்த இடத்தில கட்டபொம்மன் மாவட்டத்தில் ஆரம்பித்து ..100 அடி ஆக்கி ..அப்பறம் .NH  ரோடு ஆக்கி fourtrack ஆக்கி ...ஏராவ நாயக்கர் ஆண்ட ஆனைமலை முடிய ..அழகாக தங்கு தடையில்லாமல் வாழ்ககைக்கு வழி ஏற்படுத்தியுள்ளார் ..ஜவுளி எடுத்தாச்சு ..பத்திரிகை அடிச்சாச்சு ...நெல்லை பாளையக்காரர்கள் ,கடவூர் பாளையக்காரர்கள் ...எல்லாம் வருவார்கள் ..எதுலப்பர் ஆண்ட மண்ணில் சஞ்சீவராயன் மலைக்கோயில் இடத்தில் திருமணம் ....கேட்டதும் எனக்கு மிக்க மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ..பெரிய black பெர்ரி கேக்கு வெட்டி ..வெகு சிறப்பாக கொண்டாடலாம் ...என் அருமை தம்பிக்கு வாழ்த்துக்கள்...


இது விளம்பரம் இல்லை தம்பி ...நம் உயிர்மூச்சு ..நம் ரத்தத்தில் கலந்த கலை ...விளம்பரம் என்று சொல்லவேண்டாம் ..

எனது உலகம் .....

எழுதுவதற்கு அடிப்படையில் என்ன தேவை என நினைக்கிறீர்கள்?..என்று நம்ம மாப்பிளை தம்பி ஒருவர் கேட்டார் ..எப்படி இந்த அளவுக்கு எழுதி பழகினீர்கள் ...சொல்லுங்களேன் என்றார் ..

உங்களுக்கு தெரியாத, நீங்கள் இது வரை சந்திக்காத புது மனிதர்களை சந்தியுங்கள். அப்போது தான் உங்கள் அறிவும் உலகமும் விரிவடையும். அவர்கள் உங்கள் தொழில் சார்ந்தவர்களாக இருக்க கூடாது. முற்றிலும் புதியவர்களாக பயணத்தில் சந்திப்பவர்கள் போல் இருக்க வேண்டும். இப்படி புது மனிதர்கள் ஐந்து பேரையாவது மாதா மாதம் சந்தித்தால், வாழ்வில் நிறைய விஷயங்கள் தெரிய வரும். உங்கள் Perception விரிவடையும்.
ஆனால் உண்மையில் நம்மில் பலர் என்ன செய்கிறோம்? நம் துறையை சேர்ந்த பலரை நமக்கு முக நூலிலும் ,வாட்ஸாப்பிலும் ..மற்ற விதமாகவும் நண்பர்களாக்கி கொள்கிறோம். அவர்களில் யாராவது நமக்கு தேவை படும் போது உதவுவார்கள் என நினைக்கிறோம். அவர்களும் இப்படியே தான் நினைக்கிறார்கள்.

உண்மையில் வாழ்க்கையில் ஐந்து பேர் தான் உங்கள் நெருக்கதிற்குரியவர்களாக இருக்க முடியும் என மனவியல் அறிஞர்கள் கூறி உள்ளனர். இந்த ஐந்து பேருடன் நீங்கள் நல்ல உறவும், நெருக்கமும் maintain செய்தால் அதுவே போதுமானது...நான் அடிக்கடி சந்திக்கும் மாப்பிள்ளைகள் ..நண்பர்கள் என்னுடன் பயணிப்பவர்கள் ...உங்களுக்கே தெரியும் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..வாட்ஸாப்ப் எண்






புதன், 28 மார்ச், 2018

உடுமலைப்பேட்டை ....என்றலே தனி அழகு தான் ...

வரலாறு சொல்லும் பழங்கால கோவில்; அழகு மிளிரும் சிலைகளின் ஆச்சரியம் ! பரம்பை...பூக்கள்...அழகு .

உடுமலை அருகே, பழங்கால வரலாற்றையும், தொன்மை வழிபாட்டையும், தாங்கி நிற்கும், கோவிலை தொல்லியல் துறை வழிகாட்டுதலுடன், புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில் பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. அரிய வகை மரங்களை, சுற்றுச்சுவராக கொண்டு, வளாகத்தில், கிணற்றுடன் காணப்படும் இக்கோவில், பல்வேறு வரலாற்று தகவல்களை இன்றும் இளைய தலைமுறையினருக்கு வெளிப்படுத்தி வருகிறது.இதன் பழமையை வெளிப்படுத்த, கருவறை நேராக உள்ள நுழைவாயிலில், பெரிய கற்கள் நடப்பட்டு, அதன் வழியாக பக்தர்கள் உள்ளே வருவது போன்ற பல்வேறு கட்டமைப்புகளை கூறலாம்.சிலிர்க்க வைக்கும் சிலைகள்கோவிலில் உள்ள செல்லாண்டியம்மன் சிலை தொன்மை வாய்ந்ததாகும். அஷ்ட துர்க்கை எனப்படும் வடிவமைப்பில், கருவறையில் அம்மன் சிலை உள்ளது. முன்கோபுரத்தின் மேற்பகுதி முழுவதும் பெரிய கற்களை அடுக்கி, சுண்ணாம்பு காரையால், பூசப்பட்டுள்ளது. கோபுரமும், இத்தகைய கட்டுமான பொருட்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்குள் எப்போதும், ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலையே நிலவும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.அம்மனுக்கு எதிரில், நந்தியும், அதிக உயரம் கொண்ட, வேலும் காணப்படுகிறது. அம்மன் சிலை வடிவமைப்பை வைத்தே, அது, 600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதே போல், அம்மன் சன்னதிக்கு இருபுறமும், அப்போதைய ஆட்சியாளர்களின் சிலைகள் உள்ளன. அந்த சிலைகளின் வடிவமைப்பு பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.ஆபரணங்களும் அழகும் !அங்குள்ள ஆட்சியாளர்கள் சிலை குறித்து விசாரித்த போது, உடுமலை அருகே, பல்வேறு சிறப்புகளுடன், ஆட்சி புரிந்த தளி பாளையக்காரர்கள் குறித்த தகவல்கள் வெளிப்பட்டன. இதில், கிழக்கு நோக்கி, அமைந்துள்ள பாளையக்காரர் எத்தலப்பரின் சிலையில், வாளும், அதை உடலோடு, சேர்த்து பிடிக்கும், கச்சையும், அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அதே போல், அப்போது ஆண்கள் அணியும், ஆபரணங்களும், தற்போது பார்த்தாலும், பொலிவு மாறாமல், காட்சியளிக்கிறது. கிழக்கு பகுதியிலும், பாளையக்காரர்கள், குடுவை மற்றும் ஆயுதம் தாங்கிய உதவியாளர்களுடன் இருக்கும் சிலை உள்ளது.இந்த கோவில் பராமரிப்புக்கு, சுற்றுப்பகுதியிலுள்ள பல கிராமங்களில், நிலங்களை மானியமாக பாளையக்காரர்கள் வழங்கியுள்ளனர். மானியத்துக்கு நிலங்கள் வழங்கப்பட்ட ஆவணங்களை கொண்டே, இந்த கோவிலின் வரலாறு வெளிப்படுகிறது.செழித்து நிற்கும் மரங்கள்குறிஞ்சேரியிலுள்ள குறிஞ்சேரியம்மன் கோவில், எலையமுத்துார் ஏழூராம்மன் கோவில் உட்பட உடுமலை பகுதியிலுள்ள சில கோவில்கள், தனித்து தெரியும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, அரிய வகை மரங்கள் வளர்ப்பும், அதற்கான கிணறும் இக்கோவில்களை தனித்து காட்டுகின்றன. இலுப்பை மரமும், பரம்பை மரமும் இக்கோவில்களில், தவறாமல் இடம் பெற்றிருக்கும். இதில், பரம்பை எனப்படும் மரத்தில், பூக்கும் பூக்களை, அப்போதிருந்த ஆட்சியாளர்கள் விரும்பி சூடுவார்கள் என்ற தகவலும் ஆச்சரியமளிக்கிறது. கற்கள் அடுக்கி வைக்கப்பட்ட சுற்றுசுவர் மட்டும் இருந்தாலும், செழித்து வளர்ந்துள்ள மரங்களே கோவிலுக்கான அழகை மெருகூட்டுகின்றன.புதுப்பிக்க வேண்டும் பழமை வாய்ந்த கொங்கலக்குறிச்சி செல்லாண்டியம்மன் கோவிலை, தொல்லியல் துறை வழிகாட்டுதலுடன் புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போதுள்ள, கற்களை கீழே இறக்கி, மீண்டும், அவற்றை அடுக்கி, பழமையான முறையில், பூச்சு செய்ய வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் நடக்கும் சிறப்பு பூஜையும், பரம்பரை பூசாரிகளின் பராமரிப்பும் கோவிலை பாதுகாத்து வருகிறது. இக்கோவிலை தற்போதுள்ள கட்டமைப்பு மாறாமல் புதுப்பித்தால், அழியும் வரலாற்று தகவல்களை பாதுகாத்து, இளைய தலைமுறையினருக்கு சமர்ப்பிக்கலாம்.

பரம்பை...பூக்கள்....

;உடுமலை அருகே பழமையான கோவிலில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு, பூத்துள்ள அரிய வகை மலரை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச்செல்கின்றனர்.
உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில், பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவிலில், சில அரிய வகை மரங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அதில், பரம்பை எனப்படும் மரத்தில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு தற்போது பூக்கள் மலர்ந்துள்ளன. நாகலிங்க பூ போன்ற வடிவில், காணப்படும் இந்தப்பூ, கடந்த, 15 ஆண்டுகளுக்கும் முன்பு வேறோரு நிறத்திலும், தற்போது, நிறம் மாறி, பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில், பூத்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோவில் பரம்பரை பூசாரியினர் கூறியதாவது: கொங்கலக்குறிச்சி செல்லாண்டியம்மன் கோவில், தளி பாளையக்காரர்களால் கட்டப்பட்டு, சிறப்பாக வழிபடப்பட்டு வந்துள்ளது. கோவிலில் உள்ள, பரம்பை மரத்தில், பூக்கும் மலர்களை பாளையக்காரர்கள் தங்கள், கிரீடத்தில், சூடிக்கொண்டிருந்ததாக, செவிவழி தகவல்கள் உள்ளன.

இதை உறுதி செய்யும் வகையில், கோவில் வளாகத்தில், பாளையக்காரர்கள் சிலையும், பிற பகுதிகளில் அவர்கள் கட்டிய கோவில்களில், இவ்வகை மரங்கள் நடப்பட்டு, தற்போதும் பராமரிப்பில் உள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.இந்த மரத்தைக் கட்டிப் பிடித்தாலோ, இதன் நிழலில் அமர்ந்தாலோ, மரம் சேமித்து வைத்திருக்கும் மின்காந்த அலைகள், அவர்களின் உடலில் மாபெரும் சக்தியை ஏற்படுத்தும் என்கின்றன வானவியல் மற்றும் மூலிகை சாஸ்திரங்கள்.
வேல மரத்தை வெள்வேலம், கருவேலம், குடைவேலம் என்று வகை பிரித்துள்ளனர். இதில் 'பரம்பை’ என்றும் சிறப்பிக்கப்படும் வெள்வேல மரம், பல ஆலயங்களின் ஸ்தல விருட்சமாகவும் திகழ்கிறது.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு கோவில் வளாகத்தில், பூத்துள்ள அரிய வகை பூக்களை, அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச்செல்கின்றனர்.

பதிவு செய்த நாள்..27 March..2018 நன்றி :தினமலர் ...💐🌷🌷🌷🙏🙏🙏🙏

என்றும் அன்புடன் சிவகுமார் ....9944066681...வாட்ஸாப்ப் எண்




திங்கள், 26 மார்ச், 2018


இந்த படத்துல இருக்கிறான் பாருங்க ..இந்த சிவக்குமார் ...இவனுக்கு வேற வேலையே இல்லையாங்க ...எப்ப பார்த்தாலும் ...எதுலப்பன் வரலாறு ..கதை பாடல் ..ஆவணப்படுத்துனம் சொல்லிட்டு வேல வெட்டி இல்லாம ...எங்கயோ பொழைக்க தெரியாதுங்க ஆளுங்க ...வேலையை மட்டும் பார்த்துட்டு ..நாலு காசு சம்பாரிச்சி ..சுயநலமா முன்னேறாம ...ஏதோ சமுதாயத்தை தூக்கி நிறுத்துறானாமா ...இவங்க இதையெல்லாம் பண்ணினாதான் சமுதாயம் வளருமா ..வளர்த்தி என்னத்தை சாதிக்க போராங்களோ ...இவங்களுக்கு வேற வேலையே இல்லங்க....

தளி எத்தலப்பன் -ஆவணப்படம்..

ஒரு மன்னரின் வரலாறு

சான்றாதாரங்கள்
முதன்மைசான்றதாரம்
துணைமைச்சான்றதாரம்
புளியமரத்தோட்டம்
சஞ்சீவராயன் மலை
ஜக்கம்மாகோவில்
புலி வீரன் கோவில்
நல்லவநாய்க்கன் சமாதி
கோட்டைக்காடு
கதை பாடல்கள் ...
1.ஒப்பனை
2.பாடல் பரிசீலனை
3.கதைப்பாடல் பண்  இசை
4.பாடல் மறுபதிவு
5.கதைப்பாடல் வகை .

பாடுபவர் பெயர்
வயது
அப்பா பெயர்
அம்மா பெயர்
சொந்த ஊரு
வந்த ஊரு
இந்த பாடல்  எப்படி தெரிந்தது
எங்கிருந்து தெரிந்தது
எதுலப்பன் கதை பாடல் கேட்டதுண்டா ?
எதுலப்பன் கர்ண பரம்பரைக்கதைகள்

படுசாமகருப்பன் என்று ஏதற்கு சொல்லுவார்கள்

வேலாண்டி எதுலப்பன் மனைவி ..உடன்பிறந்தவர்கள் பெயர்

எதுலப்பன் கட்டபொம்மன் உறவு
எதுலப்பன் மந்திரவாதி
எதுலப்பன் நீர்மேலாண்மை
எதுலப்பன் ஆட்சி
எதுலப்பன் அரசியல்
எதுலப்பன் சமூகம்
எதுலப்பன் மூத்தவர் உறவு
எதுலப்பன் வேளாண்மை
எதுலப்பன் ஆன்மிகம் வழிபாடு கோவில்கள்

எதுலப்பன் ஏராம நாய்க்கன்
எதுலப்பன் ஆங்கிலேயர்
எதுலப்பன் ஆன்ரோகேத்சு
எதுலப்பன் கால்நடை
வேலாண்டிகுடும்பன்  -வெண்கலமடையாள்
ஜல்லிபட்டி பாளையம் ...
தளிபாளையம்

எதுலப்பன் கட்டிய கோயில்கள் -கரட்டு பெருமாள்கோவில்
சல்லிமுத்துவீராயன் கோவில் ,திருமால் வழிபாட்டு கோவில்கள்
ஜக்கம்மா கோவில்கள்

எதுலப்பன் -விஜயநகர பேரரசு-வரி கட்டுதல்
எதுலப்பன் -வெண்கலக்குதிரையில் டெல்லி சென்றுவருதல்
எதுலப்பன் -திருமூர்த்தி மலை
திருமூர்த்தி மலையில் ஆயிரங்கால் மண்டபம்
திருமூர்த்தி மலை கற்மண்டபம்
திருமூர்த்தி மலையில் முன்புற நந்தி மண்டபம்
எதுலப்பன் -திருமூர்த்தி அணை
எதுலப்பன் -ஏழு குளப்பாசனங்கள்
எதுலப்பன் -ஊர்கள்
சர்க்கார் புதூர் -குதிரை மற்றும் ஆயுதங்களுடன் தங்கியிருத்தல்
தளி ஜமின் ..துங்காவி ஜமின் ..கழுதை பொதி கட்டி பொன் வைரங்களை படுசாம கருப்பன் ,மெய்காப்பாளனும் உடுமலை பகுதிக்கும் .கணியூர் பகுதிக்கும் அனுப்புதல்
உடுக்கம்பாளையம் ...எதுலப்பன் தங்கையை உடுக்க நாயக்கருக்கு திருமணம் செய்து தருதல் ..

லிங்கம்மாவூர் -எதுலப்பன் -எரமநாயக்கன் தங்கை நினைவாக லிங்கம்மா நினைவாக லிங்கம்மாவூர்

வெங்கிட்டாபுரம் -எதுலப்பன் மனைவி வெங்கிட்டம்மாள் நினைவாக வெங்கிட்டாபுரம்

எதுலப்பன் -கோட்டை மாரியம்மன் கோவில்
எதுலப்பன் -கோட்டைக்கரடு

இந்த தகவல்கள் எல்லாம் குறும்படத்தில் ஆவணமாக ஒளி ஒலி பதிவு செய்யப்படுகிறது ...

இத்தனை வேலை இருக்கு ......ஒரு ஆவணப்படம் எடுக்கிறதுக்கு ...

நீங்களே சொல்லுங்க இவங்க பண்ற வேலைபாரங்க ...இது எல்லாம் நல்லவா இருக்கு ..இவங்க பண்ணறது சரியா ...? தவறா ?

ஞாயிறு, 25 மார்ச், 2018


Devaraj Appanasamy .....
5 hrs
#DEVARATTAM
நிலவும் ஒளி எடுக்க தவறவில்லை மின்னொளியில் ஆடும் தேவராட்டக்கலைஞர்களின் ஆடைகளிலிருந்து...
#indian #kodangipatti #urumi #tradition #folk #sketchbook...

அருமை ..அருமை ..தேவராஜ் அப்பணசாமி அவர்களுக்கு ...நன்றி  நம் தேவராட்ட கலை ஓவியத்தை உலகமெல்லாம் பரவச்செய்யும் ...தளி எதுலப்ப மன்னரின் ....மண்ணிலிருந்து கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள்..... 

இன்று அருமையான மாலை நேர தங்க சூரிய ஒளியில் மின்னும் பொன்நாள் ...
உடுமலை முதற்கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் ஸ்டீபன் ஹாக்கிங் நினைவு கருத்தரங்கம் மற்றும் ஸ்கேட்டிங் மற்றும்     டி என் .பி. எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பேராசிரியர்.பொ. தங்கராசன் தலைமை வகித்தார்.
நூலக வாசகர் வட்ட நிர்வாகி கே.விஜயகுமார் வரவேற்று பேசினார்.
லெமூரியன் கார்த்தி, தினேஷ் ராகவன்,கண்டிமுத்து,சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகாலிங்கம் கல்லூரி நூலகர் சுப்பிரமணியன் அவர்கள் வெற்றி பெற்றவர்களை பாராட்டி பேசினார். சிறார்களுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற உடுமலை மாணவர் சி.என்.நித்தின் ஆதித்யா மற்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் II  தேர்வில் வெற்றி பெற்ற உடுமலை மாணவர் மு.கௌதம் ஆகியோருக்கு பாராட்டு சான்று, கேடயம் நூலக வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்பட்டது .
பின்னர்,மறைந்த பிரபஞ்சவியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.      
 "சக்கர நாற்காலியின் பிரபஞ்ச நாயகன் " எனும் தலைப்பில் நூலக வாசகர் வட்ட தலைவர் க.லெனின்பாரதி நினைவேந்தல் உரை ஆற்றினார்.
முடிவில் நூலகர் அபிராம சுந்தரி நன்றி கூறினார்.
இன்றைய ஞாயிறு அருமை...மிக்க மகிழ்ச்சி ...


Sivakumar Kumar  — celebrating a birthday with Priya Sajeev and Ramesh Sukumar in Coimbatore, Tamil Nadu.

என்  இனிய நண்பர் வழக்கறிஞர் திருமதி .பிரியா சஜீவ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


Sivakumar Kumar added 6 new photos — celebrating a birthday with Bvb Nandhagopal Rajakambala Rock and 13 others in Coimbatore, Tamil Nadu.
March 26, 2018· 
எந்த சமுதாயத்தில் பெண்கள் கல்வி உயர்வாக இருக்கிறதோ அந்த சமுதாயம் கண்டிப்பாக வளரும் .நம் சமுதாயத்தில் பெண்கள் கல்வி வெகு குறைவான காலகட்டத்தில் விழுப்புணர்ச்சி இல்லாத காலத்தில் பெண்களை படிக்கவைத்து ,அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து அவர்களை வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையில் பார்க்கும்போது அவர்க்ளின் பெற்றோர்கள் படும் சந்தோசம் கணக்கிலடங்காது..அதுவும் பெண்களை வழக்கறிஞர் தொழிலுக்கு படிக்கவைப்பது ஒரு மனோதிடம் வேண்டும் ...அதுவும் நம் சமுதாயத்தில் வழக்கறிஞர்க்கு படிக்கவைத்த உங்களின் பெற்றோருக்கு கோடான கோடி நன்றிகள்,வழிகாட்டிய உங்களின் நண்பர்களுக்கும் ...உங்களை சுற்றி இருக்கும் வளரும் நம் தலைமுறையினர்க்கு ஒரு வழிகாட்டியாக உங்களின் ஆர்வம் ,நம் கம்பள சமுதாய மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கி ,
நம் முப்பாட்டன்கள் வீரபாண்டிய கட்டபொம்மன்,விருப்பாச்சி கோபால்நாய்க்கர் ,தளி எதுலப்ப மன்னன் ஆகியோர் ..அனைத்து சமுதாய மக்களுக்கும் நீதியில் சமஉரிமை அளித்து ஆட்சி செய்து வழிகாட்டிய வழியில் உங்களின் வழக்கறிஞர் தொழிலும் வெற்றி பெறவாழ்த்துக்கள் 

நம் அறக்கட்டளையின் பணிகளுக்கு உங்களின் சேவை அளித்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக வழக்கறிஞர் சிவரஞ்சனி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

தம்பி ..எதுலப்ப மன்னரின் நூல் வெளியிட்டு விழா ..ஏப்ரல் 22....நேற்று பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களிடம் ...விழாவிற்கான கடிதம் வழங்கப்பட்டது ....முடிய அளவான தூக்கம் போதும்  


தம்பி ..நெட் ல ஆன் ல இருந்தாலும் ...கிரீன் லைட் எரியும் ...அவர் ..அவர்களின் கண்ணோட்டத்தை பொறுத்தது ....நீங்கள் கேட்கும் கேள்விகள் ஒரு நாள் விரிவாக கட்டுரை வரைகிறேன் ....வேலை சூழ்நிலை ..பகல் ..இரவு என்று பாராது ...நிறுவனங்களின் தணிக்கை ..வருட கடைசி ...பணிச்சுமை ...மிகுந்த காலம் ...