புதன், 31 ஜனவரி, 2018




My Dear Shyam...
கண்ணு தூங்கிட்டியாம்மா
இன்னும் இல்லம்மா தூக்கம் கண்ணை அசத்துது..
.
அப்பா .தூங்குனப்புறம் என்ன பா நடக்கும்..''
நீ கண்ணை மூடுவே..வெளியிலே நடக்குற எதுவும் தெரியாது..கொஞ்ச நேரத்திலே நல்லா தூங்கிடுவே.
ஆனா நீ காலையிலே இருந்து பார்த்தது நெனச்சது, பேசினது. விளையாடினது, சண்டை போட்டது எல்லாம் தூக்கத்திலே .உனக்குள்ளே கனவிலே வந்து போகும்..
அப்ப கண்ணுக்குள்ளே பட்டாம் பூச்சி பறக்குமா?
அப்புடித்தான்
அது எப்புடி.. ஒரு நாள் பூரா நடந்தது முழுசும் ஒரு ராத்திரி கனவுல வருமா?
ஆமாம் கண்ணு வரும்... அதான் மூளை பகல்லே சிந்திக்கிற தைவிட ராத்திரிலேஎதான் அதிகமா வேலை செய்யுதாம்..
எதுக்கு அந்த வேலை ராத்திரிலே
அப்பத்தான் நீ நிம்மதியா பழச தேவையில்லாததை மறக்க முடியும்..
எதுக்கு பழச மறக்கணும்
பழச மறந்தா தான் புதுசு புதுசா நெறைய விஷயம் உள்ளே போகும்.
சரி சரி இப்ப தூங்கு..
, அப்பா...அப்பா இன்னும் ஒரேஒரு விஷயம்.
என்ன சொல்லு சாமி..
இப்படி தெனம் கனவு காணுறோம் ..ஆனா மனசிலே ஒண்ணுமே நிக்கலியே..
ஆமாம் சாமி.. எல்லா கனவும் 95% கனவு கண்ணு முழ்ச்சி 30 நிமிடத்திலே மறந்துடும்.
ஏ அப்பா அப்புடி..
அதையே நெனச்சுகிட்டு இருந்தா உடலுக்கு குழப்பம் வந்துடும்லே..அதான்..
சரி கண்ணு தூங்குடா.

திங்கள், 29 ஜனவரி, 2018


உடுமலை மண்ணிலிருந்து மிளிரும் தேசிய சாம்பியன் ....

உடுமலை மண் எப்போதும் வீரத்திற்கும் ,விளையாட்டுக்கும் பெயர் பெற்றதை நிரூபித்துக்கொண்டே உள்ளது ..உடுமலைப்பேட்டை எப்பொழுதும் சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பெயர் பெற்றது .

உடுமலைப்பேட்டை ஆர் .கே .ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவர் சி .என் .நித்தின் ஆதித்யா .வயது  ஒன்பது ஸ்கேட்டிங் விளையாட்டுவீரர் ,கடந்த 5 ம் தேதி முதல் 7 ம் தேதிவரை கோவா மாநிலத்தில் அகில இந்திய அளவிலான skating experts council committe நடத்திய கோவா ஸ்கேட்டிங் திருவிழாவில் பங்கேற்று ,500 மீட்டர் பிரிவில் 3 ம் இடம் வென்று வெண்கல பதக்கமும் ,ரிலே பிரிவில் முதலிடம் பெற்று தங்க பதக்கமும் வென்றுள்ளார் .இதன் மூலம் சர்வேதேச விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார் .
இதே மாணவர் கடந்த ஆண்டு நவம்பரில் பீகார் மாநிலத்தில் ஸ்கூல் கேம்ஸ் அண்ட் ஆக்ட்டிவிட்டி அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில் நடந்த 2 வது அகில இந்திய சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் முதல் முறையாக பங்கேற்று 500 மீட்டர் ,1000 மீட்டர் பிரிவுகளில் முறையே 3 ம் இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது .

மூன்று மாதங்கள் மட்டுமே பயிற்சி பெற்ற இம் மாணவர் விடா முயற்சியும் ,தன்னம்பிக்கையுடன் தொடர் வெற்றிகளை பெற்றுள்ளார் ..உடுமலை மண் எப்போதும் வீரத்திற்கும் ,விளையாட்டுக்கும் பெயர் பெற்றதை நிரூபித்துக்கொண்டே உள்ளது ..உடுமலைப்பேட்டை எப்பொழுதும் சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பெயர் பெற்றது .மேலும் அவர் வெற்றிகளை குவிக்க ,பயிற்சி அளித்த ..சி .என் .நித்தின் ஆதித்யா அவர்களுக்கு துணை நிற்கும் ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாடமி -கும் ..உடுமலைப்பேட்டை ஆர் .கே .ஆர்  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கும்.,சி .என் .நித்தின் ஆதித்யா,பெற்றோர்க்கும்   மனமார்ந்த வாழ்த்துக்கள் ...





ஞாயிறு, 28 ஜனவரி, 2018

நமது சொந்தம் ...ஆசிரியர் ...திரு .தளி மாரிமுத்து அவர்களின் பிறந்த நாள் இன்று ..என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.வாளவாடி பள்ளியில் பணிபுரிந்து வருகிறார் ..இவரும் என்னைப்போன்று ..கடந்த நான்கு வருடங்களாக நம் சமுதாய நிகழ்வுகள் எது நடந்தாலும் அதில் கலந்துகொண்டு சிறப்பு செய்து வருகிறார் ,கம்பள விருட்சம்


அறக்கட்டளையின் -உறுப்பினர் ..செயல்குழு உறுப்பினர் ... அறக்கட்டளைக்கு ஆக்கமும் ,ஊக்கமும் தந்து ..அறக்கட்டளைக்கு அருமையான செயல்திட்டங்களை வகுத்து ..அதை நடைமுறைப்படுத்த தன்னால் ஆனா அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார் ..தற்பொழுதும் கூட கட்டபொம்மன் பேரணி விழாவிற்கு காலைஉணவு அளித்து நம் சொந்தங்களுக்கு தன் மனநிறைவை வெளிப்படுத்தினார்..கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு வருமானம் வருவதற்கான சீட்டு எண்ணிக்கையை அதிகப்படுத்தி ..வரும் கசர் தொகை அறக்கட்டளை நிதிக்கு சேருமாறு ஆலோசனை வழங்கினார்..வரும் காலங்களில் அறக்கட்டளையின் மூலம் திட்டங்களை தயாரித்து ...அரசு துறைக்கு செல்வதற்கான குரூப் 4 ..பயிற்சி அளிக்கும் முறைகளை வரும் ஆண்டுமுதல் நடத்த ஏற்பாடுகள் செய்துகொண்டு உள்ளார் .கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ...  
திருப்பூர் கதை சொல்லி சதீஷ்குமார் ......

இன்றைய ஞாயிறு அழகான ,பனிபடர்ந்த காலை தளி ஜல்லிபட்டி வீரம் விளைந்த மண்ணில் ...சிறுவயதில் நமக்கு எல்லாம் பாட்டிகள் ,தாதாக்கள் ,கதை சொல்லி நம்மை வளர்த்தார்கள் ..இப்போது இருக்கும் சூழ்நிலைகள் ,,கதை சொல்வதற்கு பெற்றோர்களுக்கு நேரம் ..காலம் வாய்ப்பதில்லை ..அல்லது ..குடும்ப உறவுகளை முறிக்கும் காலகட்டத்தில் ..சிறு குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை ,சிந்திக்கும் திறமை வளர்க்க,குழந்தைகளோடு மகிழ்ச்சியாக ஆரவாரம் செய்து உற்சாகத்துடன் இருந்தது மனதுக்கு மகிழ்ச்சி ... தளி ஜல்லிபட்டி நூலகர் திரு .லட்சுமணசாமி அவர்களின் ஏற்பாடு செய்த நிகழ்வு அருமை ..இன்றைய காலை திரு. “கதை சொல்லி” சதீஷ்குமார் அவர்கள்  படைப்பாற்றல் வளர்த்தல், தன்னம்பிக்கைக் கட்டமைத்தல், கவனித்தல் & கூர்மைத்திறன் மேம்படுத்துதல், நட்பு & உறவு வளர்த்தல் போன்ற சிறுவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மேடை விளையாட்டு, கண்ணாடி-பயிற்சி, உடல் ஒத்திசைவுச் செயல்பாடு, கதை சொல்லும் பயிற்சி, ஆகியன கற்பிக்கப்பட்டன ...இந்த கதை சொல்லி சதீஷ்குமார் அவர்களின் உற்சாக துள்ளலுடன் ..குழந்தைகளுக்கு மூன்று மணிநேரம் போனதே தெரியவில்லை ...இயற்கை வளத்தை காப்பாற்ற ,வளர்ப்பதற்கான விழ்ப்புணர்வு நாடகங்கள் ,பாடல்கள் ,அருமையான நிகழ்வாக இன்றய ஞாயிறு அமைந்தது ..வாழ்த்துக்கள் 

திங்கள், 22 ஜனவரி, 2018

உழைப்பால் உயர்நதவர்..திரு .தி .சின்னசாமி ..

தன்னம்பிக்கை ...திரு .தி .சின்னசாமி ...பிறந்த ஊர் தளி ஜல்லிபட்டி ..பாளையக்காரர்கள் வசித்த ஊர் ...அதனால் தானோ ...எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை தளரவிடாமல் ..வாழ்க்கையில் யாருடைய வழிகாட்டல்கள்  இல்லாமல் ..தன் சுய சிந்தனையில் பள்ளிப்படிப்பு படிக்கும் போதே ..தந்தையின் மறைவு..பேரிழப்பு ..தாய் மற்றும் கூட பிறந்த இரண்டு சகோதரிக்ளிக்கு,,,தந்தை செய்யவேண்டிய கடமைகளை ..ஒரு சிறு குறையும் இல்லாமல்  .திருப்பூர் மண்ணில் காலடி எடுத்துவைத்து ..பனியன் நிட்டிங் நிறுவனத்தில் சேர்ந்து... தன் கடுமையான உழைப்பால் ...30வருடகால தன் கடமை தவறாமல் ..ஒரு கூட்டு குடும்பமாக எந்த ஒரு சிறு குறையும் இல்லாமல் ..தன் வாழக்கையையும் அமைத்துக்கொண்டு ..தன் மனைவியின் ஒத்துழைப்போடு ..இரண்டு அழகான குழந்தைச்செல்வங்களுடன்...சரியான திட்டமிட்ட சேமிப்பு மூலம் ...கனவு இல்லத்தை ...கட்டயமைத்து இன்று பல்லடம் நகரத்தில் புதுமனை புகுவிழா நடத்தி நம் சொந்தங்களையும் ..நண்பர்களையும் அழைத்து ஆசிபெற்றது மிக்க மகிழ்ச்சி ...தன்னம்பிக்கை மனிதர்களின் விழாவுக்கு சென்று வந்தது எனக்கு மாற்றட்ட மகிழ்ச்சி ..சின்னசாமி அவர்கள் நமது கம்பள விருட்ச அறக்கட்டளையின் உறுப்பினரும் ..நன்கொடையாளரும் கூட ,நம் கம்பள சமுதாய இனப்பற்றாளரும் கூட .....இவரின் தன்னம்பிக்கை வார்த்தைகள் ..வழிகாட்டல்கள் ..இன்னும் எங்களுக்கு தேவைப்படுகிறது ...என் சார்பாகவும் ...கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாகவும் ..வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பாகவும் ..வாழ்த்துக்கள் ... 

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

நம் கம்பள சமுதாயத்தில் ....ஒரு மைல்கல் ....
THE TAMIL NADU COMMERCE INSTITUTES ASSOCIATION..)
Coimbatore ...Tripur ..district .
தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் கோவை -திருப்பூர் மாவட்ட சங்க கிளையில் பொன்விழா ஆண்டு கூட்டம் கோவை குஜராத் சமாஜம் உள் அரங்கில் 21-01-2018 -ம் நாள் ஞாயிற்று கிழமை காலை 9.00 மணியளவில் துவங்கியது .
கூட்டத்திற்கு கோவை திருப்பூர் மாவட்டங்களின் தலைவர் திரு .முருகவேலு தலைமை வகித்தார் ..பொன்விழா ஆண்டு சங்க கூட்டத்திற்கு நீதியரசர் திரு வீ .தங்கராஜ்  M .A .M .L .,அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஒரு எழுச்சி உரையாற்றினார் .நீதியரசரின்  பேச்சு  அனைவரின் கவனைத்தயும் ஈர்த்தது .தட்டச்சு கல்வி கல்வித்துறையிலும் வேலைவாய்ப்பு துறையிலும் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பேசினார் ..
நீதி துறையிலும் ,கல்வி துறையிலும்  மற்றும் வேலைவாய்ப்புத்துறையிலும்
தட்டச்சர் ,மற்றும் சுருக்கெழுத்தாளர் பணியின் முக்கியத்துவத்தையும் பயிலாக உரிமையாளர்கள் மாணவ ,மாணவிகளுக்கு எவ்வாறு இந்த பாடங்களை கற்பிக்கவேண்டும் என்றும் ,தன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் சுருக்கெழுத்தாளர் பணி எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து அதனால் அவருக்கு தேடி வந்த பதவி உயர்வுக்கும் பற்றி பேசியது கூட்டத்தினர் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது .குறுகிய நேரமே பேச ஒதுக்கப்பட்டதால் ஒரு சில முக்கிய நிகழ்வுகளை மட்டும் பேசிவிட்டு தன உரையை முடிக்கும் தருவாயில் நீதியரசர் திரு .வீ .தங்கராஜ் அவர்கள் தன் கூட்டு குடும்பத்தில் சுமார் 150 பேர்இன்னமும் ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர் .அனைவர்க்கும் ஒரே சமையல்தான் என்று கூறியதும் கூட்டம் நெகிழ்ச்சியில் ,மகிழ்ச்சியில் ,வியப்பில் ஆழ்ந்தது கூட்டத்தில் அனைவரும் பாராட்டி வியந்தனர் ...ஒரு சிறிய செய்தியை பேசி நீதி யரசர் தன் உரையை முடித்தார் ...

கூட்டத்தின் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் தலைவர் திரு .T .ரவிச்சந்திரன் கலந்துகொண்டார் .மற்றும் ஒரு சிறப்பு விருந்தினராக கோவை பண்டிட் நேரு வித்யாலத்தின் தாளாளர் .திரு .மாரியப்பன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார் .
பொன்விழா ஆண்டு மலரை வணிகவியல் பள்ளிகளின் மாநில தலைவர் வெளியிட சிறப்பு விருந்தினர் நீதியரசர் திரு .வீ .தங்கராஜ் அவர்கள் ,பண்டிட் நேரு வித்தியாலயத்தின் தாளாளர் .திரு .மாரியப்பன் அவர்கள் பெற்றுக்கொண்டனர் .

இந்த பொன்விழா ஆண்டு கூட்டத்தில் உடுமலைப்பேட்டை திரு .K .முருகவேல் அவர்கள் ,கோவை திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களின்  தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார் .பொள்ளாச்சி திரு .கே.ஸ் .ராமன்  நன்றிகூற கூட்டம் இனிதே முடிவுற்றது ..

இன்று நடந்தவணிகவியல் பள்ளிகளின் விழாவில்  நமதுகம்பள பண்பாட்டு கழக  சமுதாய இரு பெரும் தலைவர்கள்..கலந்துகொண்டு சிறப்பித்தது ..நம் சமுதாய வளர்ச்சிக்கு ..முன்னேற்றத்திற்கும் ..ஒரு மைல்கல் ...நம் வருங்கால எதிர்கால கம்பளக்குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெருதும் உதவும் ..நம் சமுதாய சொந்தங்கள் ..இது மாதிரி முன்னோடி நிகழ்வுகள் கலந்துகொண்டால் ..நம் குழுவுக்கு பகிருங்கள் ..வாழ்த்துக்களுடன் .உங்களின் .சிவக்குமார் உடுமலைப்பேட்டையிலிருந்து ....

மன்னிக்கவும் ...இனி வரும் காலங்களில் ...இது மாதிரி விழாக்கள் என்றால் முன்னரே அறிவித்து விடுகிறேன் சார் ...நமது நீதியரசர் கேட்டார் ..நம் சொந்தங்கள் யாரவது உள்ளார்களா ..என்று கேட்டார் ..உங்களின் பெயரைத்தான் சொன்னேன் ..நீங்கள் இருப்பது காளப்பட்டி அருகில் ..விழா சிறப்புரை உரை முடிந்து ..அவருடன் மருதமலை அழைத்துச்சென்று முருக கடவுளின் தரிசனம் செய்துவிட்டு ...மதியம் சிறப்பு விருந்தினருக்கு விழக்கமிட்டியினர் அன்பு கட்டளை செய்து இருந்தனர் ..மதியவிருந்து எங்களுடன் தான் என்று ...நேரம் குறைவாக இருந்ததால் ..preplan செய்யமுடியவில்லை சர்ர் ...












வெள்ளி, 19 ஜனவரி, 2018

அருமையான சந்திப்பு ...

இன்று மாலை அருமையான சந்திப்பு ...நம் சமுதாய சொந்தம் திரு .தங்கவேல் நாயக்கர் ...பெரியகோட்டை ...அய்யாவிடம் பேசியதில் ..நம் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் ..மதிப்பில் அடங்காதது ...சமுதாய நிகழ்வுகள் ...ஆழந்த சிந்தனையோடு பேசியது ..நம் வருங்கால தலைமுறை எப்படி இருக்கவேண்டும் ..எப்படி இருந்தது ..தற்பொழுது நம் இளையசொந்தக்களின் வளர்ச்சி ..கல்வி ..பொருளாதாரம் ..கூரிய சிந்தனையோடு உரையாடியது .நம்மையும் ஊக்கப்படுத்தி ..நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் செயல்பாடுகளை கேட்டு அறிந்தார் ..ஊக்கம் ..ஆக்கம் அளிப்பதாக கூறியுள்ளார் ..அதுவும் நம்ம மாப்பிளை செந்தில்ராம் அவர்களின் உரையாடல் மூலம்  ..30 வருடகால நிகழ்வுகளை தங்கவேல் அய்யா நம்மிடம் பகிர்ந்து நம் சமுதாய  இளைஞர்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ..தொடரும் சந்திப்புகள் ..நாளை நம் சமுதாய இளைய தலைமுறை உடுமலையில் 23 வருடங்களுக்கு முன் இங்கு வந்து தன் அயராத ..கடுமையான உழைப்பின் வளர்ந்த புதிய தொழில்முனைவோரின் சந்திப்பு நிகழ்வை பகிர்கிறேன்..நன்றி




திரு .திருமூர்த்தி ....கல்வித்தகுதி பள்ளிப்படிப்பு ...விவசாயத்தொழில் ..சத்தியமங்கலம் ...விவசாயம் தன் தந்தையிடம் கற்றுக்கொண்டது ... கடந்த 5 வருடங்களுக்கு முன் இவரை ..முகநூல் மூலம் சந்திப்பு ...திருமூர்த்தி அவர்களின் நட்பு ..65 வயது இளைஞர் சுபாஷ் கிருஷ்ணசாமி அய்யாவின் மூலம் நட்பு கிடைத்தது ...இவரின் தோட்டத்தில் ..50 பேர் கொண்ட விவசாய சந்திப்பு ..மூன்று நான்கு வருடங்கள் முன் இவரின் நட்பு தற்பொழுது வரை தொடர்கிறது ..நம்மாழ்வார் அவர்களின் நட்பு மூலம் ..இவரின் தோட்டத்தில் விவசாய முறைகளை  பயிற்சி அளித்துள்ளார் ...நம்மாழ்வார் பவானி நீரின் அருமையை ..தன்போராட்டம் மூலம் ஈர்க்கப்பட்டு ...இயற்கை விவசாயம் செய்து கொண்டு .எதிர்கால இளைஞர்களுக்கு விழிப்புணர்வு அளித்து பதிவிட்டு ...செய்தித்தாள்கள் ..டிவி ஊடகங்கள் மூலம் வெளியுலகத்திற்கு வெளிவந்துள்ளார் ..மிகவும் அருமையான நண்பர் ...இவரின் மூலம் ..கடலூர் ...தருமபுரி coop forest ..பியாஸ் மனுஷ் ...பொள்ளாச்சி ...கடவூர் ...வானகம் ...இந்த விவசாய நண்பர் மூலம் பயணித்து வாழ்க்கையில் மலரும் நினைவுகள் ....இவரின் நட்பு கிடைத்தது பெரும் பாக்கியம் ...உங்களிடம் பகிர்வதில் பெருமைகொள்கிறேன் ...

வியாழன், 18 ஜனவரி, 2018



வீடு வாங்கியவுடன் நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலை இதுதான்..!
வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தைச் செய்து பார் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இந்த இரண்டுமே நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் நடைமுறையில் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சரி கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கிவிட்டோம். அதன் பின்னர்ச் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் என்ன என்பது குறித்துப் பலருக்குத் தெரிந்திருக்காது. எனவே வீட்டை வாங்கியவுடன் உடனே என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் தற்போது பார்ப்போமா!!
பத்திரத்தைப் பத்திரமாக வைக்க வேண்டும்:
ஒரு வீட்டின் பத்திரம் என்பது மிகவும் முக்கியமானது. அதனால்தான் அதற்குப் பத்திரம் என்றே நம் முன்னோர்கள் பெயர் வைத்துள்ளனர். மேலும் பத்திரத்தின் ஒரிஜினலை தேவைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று ஜெராக்ஸ் காப்பிகள் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒருவேளை நீங்கள் வீட்டின் மேல் வங்கி லோன் வாங்குகிறீர்கள் என்றால் வங்கிக்கு ஒரிஜினலை சமர்ப்பிக்கும் முன்னர்த் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது.
டிஜிட்டல் மயத்திற்கு மாற்றுங்கள்:
இப்போது உலகமே டிஜிட்டல் மயத்திற்கு மாறிய பின் உங்கள் டாக்குமெண்ட் மட்டும் டிஜிட்டலில் மாறாமல் இருக்கலாமா? முதல் காரியமாகப் பத்திரத்தை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு காப்பியை வங்கி லாக்கரில் வைத்துக் கொள்ளலாம். ஜெராக்ஸ் காப்பி நாளடைவில் மங்கிவிடும். ஆனால் டிஜிட்டல் காப்பி உங்கள் தலைமுறைக்கும் ஃப்ரஷ் ஆக இருக்கும்.
வீட்டு லோன் வாங்கும் முன் என்ன செய்ய வேண்டும்:
வீட்டு லோன் வாங்க முடிவு செய்துவிட்டால் வங்கி கேட்டிருக்கும் அனைத்து டாக்குமெண்ட்களையும் தவறாமல் சமர்ப்பிக்கவும், ஒவ்வொன்றாகச் சமர்ப்பிக்க வேண்டாம். மொத்த டாக்குமெண்ட்களும் தயாரானதும் சமர்ப்பியுங்கள். ஆனால் அதற்கு முன்னர் அனைத்து முக்கியமான டாக்குமெண்ட்களையும் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். வங்கியிடம் நீங்கள் லோன் ஒப்பந்தம் போடும் முன் இவைகளைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்டர்மார்க் மிகவும் அவசியம்:
ஒரு வீட்டை வாங்கி முடித்தவுடன் உடனே நாம் செய்ய வேண்டிய அடுத்த வேலை வீட்டின் சொத்துவரியில் உள்ள பெயர் மாற்றம், மின்சாரக் கனெக்ஷனில் உள்ள பெயர் மாற்றம் ஆகியவற்றைச் செய்யவேண்டும். இதற்கெனச் சில ஏஜண்டுகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களை அணுகும்போது அடோப் ரைட்டரில் வாட்டர் மார்க் செய்யப்பட்ட காப்பிகளை மட்டும் கொடுக்கவும். ஒரிஜினலை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஏஜண்டுகளிடம் கொடுத்தால் அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே சுதாரிப்பாக இருந்து கொள்ளுங்கள்
இதையும் நீங்கள் கண்டிப்பாகச் செய்யணும்:
ஒரு வீட்டை வாங்கி முடித்ததும் டயர்டு ஆகி ஓய்வு எடுக்கத் தொடங்கிவிடக்கூடாது. வீட்டுப் பத்திரம் கைக்கு வந்தவுடன் நீங்கள் அந்த வீட்டின் முக்கியமான டாக்குமெண்டுகளை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும் குறிப்பாகத் தண்ணீர் கனெக்ஷன், எலக்ட்ரிக் கனெக்ஷன், சொத்து வரி பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம் மற்றும் என்.ஓ.சி ஆகியவற்றைப் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.
வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்:
வீடு வாங்கியவுடன் பத்திரம் உங்கள் பெயருக்கு மாறியவுடன் புதிய வீட்டின் முகவரியை உங்கள் அனைத்துச் சான்றிதழ்களிலும் மாற்றிவிட வேண்டும். குறிப்பாகச் சொத்துவரி, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, மற்றும் உங்களிடம் உள்ள அனைத்து முக்கிய ஆவணங்களிலும் புதிய முகவரி இருக்கும்படி மாற்றம் செய்யுங்கள். இது சின்ன வேலைதானே என்று அசால்ட்டாக இருந்துவிட வேண்டாம். இது மிகவும் அவசியமானது என்பதை நீங்கள் பின்னால் உணர்வீர்கள்
குடியிருப்பாளர்கள் சங்கத்திலும் பெயர் மாற்றம்:
நீங்கள் வீடு வாங்கிய பகுதியில் குடியிருப்பாளர்கள் சங்கம் இருந்தால் உடனே அதில் உங்கள் வீட்டின் ஜெராக்ஸ் காப்பியை கொடுத்து இணைந்துவிடுங்கள். சங்கத்தின் நிர்வாகிகளிடம் இதுகுறித்த மேல்விபரங்களைக் கேட்டு இதையும் செய்துவிட்டால் அவ்வளவுதான் உங்கள் வேலை முடிந்தது. அப்பாடா!!! இப்போது புரிகிறதா முதல் லைனில் உள்ள வீட்டை கட்டிப்பார்! என்ற பழமொழியின் அர்த்தம்.
சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com

புதன், 17 ஜனவரி, 2018



இன்று மரியாதை நிமித்தமாக ...நம்ம மாப்பிள்ளை நித்தி யை சந்தித்து விட்டு வந்தேன் ..நம்ம மாப்பிள்ளையை சந்திக்க சென்றபொழுது .இன்று A .வாடிப்பட்டி ..திரு .ராமசாமி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ..70 வயது இளையஞரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ..சில நிமிடங்கள் பேசினாலும் ..பேசுவதற்கு இனிமையானவர் .திரு .ராமசாமி (அலைபேசி எண் .9786336938) அவர்கள் ..கார் ,கனரக வாகனங்கள் ..விற்பனை செய்து வருபவர் என்று அறிந்ததும் எனக்கு மற்றட்ட மகிழ்ச்சி ..அவருடன் புகைப்படம் எடுக்க இயலவில்லை ...மற்றொரு நாள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது ...புகைப்படம் பதிவிடுகிறேன் ...கேப்டன் நித்தியானந்தம் மாப்பிளை அறிமுகம் செய்து வைத்தார் ..நித்தி மாப்பிளைக்கு நன்றி ....எ.வாடிபட்டியில் இருந்து ..இந்த இளைஞர் இரு சக்கரவாகனத்தில் காற்றில் மிதந்து வருகிறார் என்றபோது எனக்கு ஆச்சரியம் ..இவரை பார்க்கும் போது ..தன்னம்பிக்கை கூடுகிறது ..அவரின் வியாபார தொடர்புகள் வேண்டுவோர் ..70 வயது இளைஞரை தன்னம்பிக்கை சொந்தத்தை தொடர்புகொள்ளலாம் ...வாழ்த்துக்கள் ..

நன்றிகள் :கார்த்தி SR ..தமிழரசன் ...கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம்


செவ்வாய், 16 ஜனவரி, 2018

கரப்பாடி ராக்ஸ் .....

இன்று ஆல்கொண்டம்மன் கோவிலுக்கு ....சீரும் காளையுடன் ..அடிவள்ளி ஜக்கம்மாள் கோவிலில் இருந்து ...எங்க வீட்டு மகாலட்சுமிகளுடன் தொடங்கி வைத்த தேவராட்டதுடன் ...ஆட்டம் ...பாட்டம் ...கொண்டாட்டம் ..நம்ம மாப்பிள்ளைகள் ..தம்பிகளுடன் ...மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த திருவிழா ...ஆல்கொண்டம்மன் மக்கள் வெள்ளத்தில் நீந்தி ..அடிமேல் அடிவைத்து ..தேவராட்டம் ...சலிகெருது ..சீரும் காளையுடன் .நம் சொந்தங்களுடன் ..கலந்துகொண்டு வந்தது மகிழ்ச்சி .நேரம் சென்றது கூட தெரியவில்லை ...அந்தளவுக்கு ..பக்தி பரவசத்துடன் ..வணங்கி வந்தது மனதுக்கு மகிழ்ச்சி ...இந்தஆண்டு இயற்கை சோதிக்காமல் ..விவசாயம் செழிக்க ...கால்நடைகள் அபிவிருத்தி பன்மடங்கு பெருகி செல்வம் செழிக்க  ஆல்கொண்டம்மன் ..அனைவர்க்கும் அருள்புரிவாராக .... பொங்கல் விழா 2018...
\
இன்று ...என் வாழ்நாளில் மறக்க முடியாத ...நாள் ...43 வயதில்  தேவராட்டம் ஆடியது ...எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ...உடுமலைப்பேட்டை தேவராட்டத்தை எங்கள் வீட்டுக்கு வந்த சொந்தங்களுடன் ...தளி ஜல்லிபட்டியில் சிறுவயதில் பார்த்து ..இருக்கிறேன் ..தேவராட்டம் ஆடுவதுக்கு கொஞ்சம் கூச்சம் ..அச்சம் ..எங்கே தப்பாக ஆடிவிடுமே என்ற பயம் காரணமாக ...விளையாட ஆர்வம் கொள்ளவில்லை ...இன்று ..அடவள்ளி ஜக்கம்மாள். யை .. வேண்டி ஆடி பார்த்துவிடுவோமே என்ற ஆர்வத்தில் ..ஆல்கொண்டம்மன் கோவிலில் ...எனக்கு தெரிந்த பயிற்சி இல்லாமல்  2 நிமிடங்கள் ஆடியது மற்றட்ட  மகிழ்ச்சி ...எனக்கு ஊக்கம் கொடுத்த நம்ம மாப்பிள ..கார்த்தி திருப்பூர் மாப்பிள்ளைக்கு நன்றி ...

திங்கள், 15 ஜனவரி, 2018

குழந்தை செல்வங்களுடன் ...மனம் நிறைந்த பொங்கல் ..

நேற்றும் இன்றும் ...குழந்தை செல்வங்களுடன் கொண்டாடிய பொங்கல் அருமையான மனதிற்கு மிக்க மகிழ்ச்சி ..எதிர்பாராவிதமாக சந்தித்த ஷியாம்சுதிருடன்  இருந்த ஒரு மணிநேர துளிகள் ...இந்த வருடம் முழுவதும் மனதுக்கு தாங்கும் வல்லமை படைத்தது.
குழந்தை செல்வங்களுடன் ..சலிகெருது ஆட்டம் ...தேவராட்டம் ..பொங்கலன்று வெளியூர் இருந்து வந்த ... தம்பி ..அக்கா ,மச்சான் ..அவர்களின் குழந்தைகளுடன் ...நம்ம மாப்பிள்ளைகள் ..தம்பிகள் .நம் சொந்தங்களுடன் சேர்ந்து .. ...பொங்கல் திருவிழாவை கொண்டாடியது ..புதுவிதமான மகிழ்ச்சியும் ..இன்னும் வாழ்வில் கடக்கவேண்டிய பொறுப்பும் ..சமுதாய சிந்தனைகளுடன் ..முன்னேற்றங்கள் ...கல்வி ,வேலைவாய்ப்பு ..வரலாற்று நிகழ்வுகள் ..அதிகம் உள்ளது ...நம் இளைய சொந்தங்களுடனும் ..நம் சமுதாய தலைவர்கள் ,பெரியவர்களுடன் ..ஒருங்கிணைந்து செயல்பட இந்த தைத்திருநாள் வழிவகுக்கும் .இன்று மறைந்து வரும் திருவிழாக்கள் பற்றி நம் எதிர்கால குழந்தைச்செல்வங்களுக்கு ...கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு  உள்ளது .....வாழ்த்துக்கள் ...ஆசிர்வாதங்களுடன் ...வரவேற்போம் ...


ஞாயிறு, 14 ஜனவரி, 2018

மாட்டு பொங்கல்

மாட்டு பொங்கல் -15th Jan 2018
இது உழவர்கான நாள், சூரியனுக்கான நாள், எல்லா மகிழ்ச்சியும் கொண்டு நீங்கள் வாழ எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

என் செல்ல ஷியாம் சுதிர் சிவகுமார் .......ன்  இனிய குலதெய்வமான மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் ...உடுமலைப்பேட்டை .....மாட்டுப்பொங்கல் ..2018...
தை பிறந்தால் வழி பிறக்கும்.....