திங்கள், 1 ஜனவரி, 2018

இன்று உலக கொண்டிடகொண்டு இருக்கும் ...ஆங்கில புத்தாண்டு அன்று ...தன் பிறந்தநாள் ...என்று உலகமே கொண்டாடி கொண்டு இருக்கிறது ..இன்று  பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவர்களை சரியாக சென்று அடைவதில்லை...புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் இந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..இவர்களை வாழ்த்தும் செய்திகள் மறைந்துவிடுகிறது ...இருந்தாலும் ...புத்தாண்டு அலை முடிந்தவுடன் ...தெரிவித்துக்கொள்ளலாம் ..என்று இன்று பிறந்த நாள் கொண்டாடிய இரு சமுதாய சொந்தங்களை வாழ்த்திவிடலாம் ...

முதலில் ...நம்ம ..பிரேமா(குஜ்ஜபொம்மு ) அவர்களை வாழ்த்திவிடலாம் ..சாதாரணமாக இளைய சொந்தங்களை கொண்டு ஆரம்பித்த வாட்ஸாப்ப் குழு ..என்று பெரிய கம்பள விருச்சமாக ...இன்று பரந்த விரிந்து இன்று ஒரு அறக்கட்டளை யாக உருவாகியிருக்கிறது  நம் கீர்த்திவீரர் எதுலப்பர் என்னும் இந்த பகிரளி (whatsapp group )..இதை முதலில் ஆரம்பித்தபொழுது ஹாய் ..mesg ,,என்று ஆரம்பித்து goodmorning ..goodnight ..என்று ...அப்பறம் ..உங்கள் சொந்தம் ..எங்கள் சொந்தம் ..கேட்டு ..இன்று உறவுமுறைகளை ...தம்பி ..தங்கை ,மாமன் ,மச்சான் ..நம் அருமை மாப்பிளைகள் என்று  நம் சமுதாய முன்னேற்றக்கருத்துகள் ...கம்பள பண்பாடு ,கலை ,வேலைவாய்ப்பு ,கல்வி ,..நம் சமுதாய கூட்டங்கள் எங்கு நடந்தாலும் ..அந்த நிகழ்வுகள் உடனுக்குடன் பகிரப்படுகிறது ..பிறந்த நாள் விழாக்கள் ..கல்யாணம் ,காதுகுத்து ,ஆன்மீக பயணம் ...என்று நம்ம மாப்பிளைகள் ..தெறிக்கவிட்டுக்கொண்டு உள்ளார்கள் ..
இதற்கு முதல்காரணம் ..நம்ம பிரேமா அவர்கள் .அதுவும் ஒரு பெண்பிள்ளை ஆரம்பித்து வைத்து என்றும் சோடைபோனதில்லை .....குஜ்ஜ பொம்மு குலம் என்றாலே பொறுமை ,சகிப்புத்தன்மை ..இருந்ததால்தான் ...நல்ல முறையில் ..இந்த குழு இயங்கிக்கொண்டு இருக்கிறது ..இந்த பகிரலையை ஒழுங்கு படுத்தி ..நம் தம்பி ,மாப்பிள்ளைகள் ...அழகாக இந்த குழுவை வழிநடத்திக்கொண்டுள்ளார்கள் ..செல்வி .பிரேமா அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

2.இரண்டாம் சொந்தம் இன்று பிறந்த நாள் கொண்டாடியவர் ...திரு .விஜயகுமார் அவர்கள் ...இவர் பிறந்த ஊரு உடுமலைப்பேட்டை ...பூர்விகம் தளி ஜல்லிபட்டி ...பள்ளிப்படிப்பு உடுமலையில் ..கல்லூரி படிப்பு ..வணிகவியல் படித்து ..சுமார் 20 வருடங்கள் ..சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு வருடம் ..ICICI..நிறுவனத்தில் விற்பனையாளராகவும் ...BBL ..தொலைத்தொடர்பு இருந்த காலத்தில் இருந்து ..வோடபோன் ..விற்பனை மேலாளராக இருந்து  உயர்வு பெற்று ..ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏரியா விற்பனை மேலராக கோவையில் பணிபுரிந்தார்.பெரும்பாலும் வேறு எந்தஊருக்கும் செல்லாமல் கோவையை தன் வசம் தக்கவைத்துக்கொண்டார் ..என்னதான் இருந்தாலும் ...நிறுவனம் என்பது ..நீண்ட வருடம் ஒரு விற்பனைத்துறை இருப்பதற்கு மனம் ஒப்புவிதில்லை ...தன் குடும்ப சூழ்நிலை கருத்தில்கொண்டு .தான் பிறந்த ஊரான உடுமலையில் சொந்தமாக ஒரு மத்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட HP சமையல் எரிவாயு .நிறுவனத்தை ஜெய்வந்த் காஸ் ஏஜென்சிஸ் ..தன் மகன் பெயரில் வக்கீல் நாகராஜன் வீதியில் அலுவுலகம் அமைத்து ..உடுமலை சுற்றி இருக்கும் கிராமங்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்...இவரிடம் சிறு வயது முதல் பழகிவருகிறேன் ..நல்ல நண்பர் ..எந்த ஒரு செயலை சொன்னாலும் ...பழம் வேண்டும் என்றுதான் கேட்பேன் ..இவரோ அந்த மரத்தையே பரிசாக கொண்டுவந்து தருவார் ..அந்த அளவுக்கு துடிப்பான நண்பர் ...எனக்கும் ஏதாவது உதவி என்றால் இவரிடம் கேட்பேன் ..தயங்காமல் செய்வார் ...திருமதி .செல்வி விஜயகுமார் ..இவரின் மனைவியுடம் கூட சிறந்த கலவியாளர் ..பண்பாளர் ..தன்கணவருக்கு ..விற்பனை தொழில் முறை நுணுக்கங்களை நன்கு அறிந்து தன அழகான குடும்பத்தை வழிநடந்துகொண்டுள்ளார் ..இவருக்கு ஒரு மகள் .ஒரு மகன் ,தங்க பொக்கிஷங்களை பாதுகாத்து வருகிறார் ..இவரின் தந்தை பெயர் .பரமசிவம் . உடுமலை ,பொள்ளாச்சி ,திருப்பூர் ,பகுதிகளில் அரசு வணிகவரித்துறையில் பணிபுரிந்து .ஓய்வுபெற்றவர் ..இவரின் தாயார் பெயர் ..குட்டி என்கிற ..சின்னதாய் ..(புங்கமுத்தூர் ).இவருக்கு ஒரு தங்கையும் உண்டு ..அவரின் பெயர் .சத்யா அவர்கள் ..நல்ல கல்வியாளர் ,தொழில் முனைவோர் ,வழக்கறிஞர் தொழிலுக்கு பயின்று ..கோவையில் பணிபுரிந்து வருகிறார் .. இவர்க்கு கூடுதல் சிறப்பு ...என் செல்ல மகன்  ஷியாம் சுதிர் சிவகுமார் ...சொந்த தாய்மாமன் என்ற பெருமையை அடைகிறார்..இவர் நம் சமுதாயத்தில் வளர்ந்து வரும் சிறு வயது தொழிலதிபர் ...திரு .விஜயகுமார் அவர்களுக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ...



ஞாயிறு, 31 டிசம்பர், 2017

நந்தகுமார் ..bvb நந்தா ..என்று செல்லமாக நான் அழைக்கும் அழைக்கும் மாப்பிள ...அருமையான பதிவு ..சொன்னவுடன் பசுமரத்து ஆணிபோல் ..கற்பூரம் மாதிரி பிடித்துக்கொள்ளும் திறமையை வாய்ந்த ...மாபிள்ளகைள் பெற்றுஇருப்பது ...வெறும் களிமண்ணை கொடுத்து ...இப்படி தான் வேண்டும் என்று கொடுத்துவிட்டு மனதில் ஒரு பிம்பத்தைவைத்து கொண்டு இருப்போம் ..எப்படி வருமோ இந்த உருவம் ..திக் திக் என்று ..நினைத்ததுக்கு மாறாக அருமையாக வடிவம் பெற்று கடவுள் சிலைமாதிரி நம் முன்னே நிறுத்துகின்ற பாங்கு நம்ம மாப்பிளைகளிடம் இருக்கிறது..நம் சமுதாய நிகழ்வுகள் ,பிறந்த நாள் விழாக்கள் ..என்று எந்த ஒரு நிகழ்வுக்கும் ..மாப்பிளை அமைக்கும் வீடியோ பதிவு ..புகைப்பட பதிவு ...சமுதாய முன்னேற்ற கருத்துக்கள் ..இளையசமுதாயதற்கு ஒரு வழிகாட்டியாக ..திகழ்கிறார் ... ... இப்படி மாப்பிள்ளைகள் எனக்கு கிடைத்த வரம் .நன்றி மாப்பிள ...புத்தாண்டு வாழ்த்துக்கள் 

BVB நந்தகுமார் (தேனீ -கோயம்புத்தூர் )...

2017 ல் புலனம்(வாட்ச்அப்) வாழ்க்கை  ஒரு சிறப்புப்பார்வை.

2017 என்ற ஒரு வருட சகாப்தம் இன்றுடன் நிறைவடைகிறது.இந்த வருடம் புலனத்தில்(வாட்ச்அப்பில்) அறிமுகமாகி தாங்கள் நட்புநிழலில் இடமளித்த ஒரு சில ராஜகம்பள மேன்மக்கள் நண்பர்களுடன் நந்தா.

இத்தகைய இணைய நட்பூக்களுடன் இணைய வழிவகுத்தவர் முகநூல் சகோதரர் திரு.கார்த்திக் SR மற்றும்  கம்பள விருட்சம் குடும்பத்தையே சாரும்.

கம்பள விருட்ச அறக்கட்டளை குடும்பத்தில் இணைவதற்கு ஒரு கேள்வியும் கேட்கவில்லை.இணைந்த பின் கேட்காத கேள்விகளே இல்லை என்ற சொல்லலாம்.வளர்ச்சிக்கான கேள்விகள் கேட்பதன் மூலம் தான் அதிவேகமான வளர்ச்சிக்கான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்பது எனது தனிப்பட்ட கூற்று.

கம்பள விருட்ச குடும்பதலைவர் மாமா திரு.சிவக்குமார் அவர்கள்  தாய்மாமா என்ற தன்னை அறிமுகப்படுத்தி கொண்டதில் பெருமகிழ்ச்சி. என்னதான் 2015லிருந்து புலனத்தில் இருந்தாலும் நண்பர்களுடன் தனிபட்ட உரையாடலுடன் நின்றுவிடுவது எனது வழக்கம்.
நானிணைந்த முதல் புலனம்குழு கம்பளவிருட்சம் அதன்பின் ஒவ்வொரு குழுவிலும் என்னை அறிமுகப்படுத்திய பெருமை மாமா திரு. சிவக்குமார் மற்றும் சகோ திரு.செந்தில் அப்பையன் அவர்களையே சாரும்.

புலனம்குழுவால் அறிமுகமான சொந்தங்கள் திரு.முருகராஜ் அட்வகேட் அண்ணா,திரு.ஆனந்த் மாமா,
திரு.சரவணக்குமார் மாமா,
திரு.பெருமாள்சாமி சகோ,
திரு.பாலகிருஷ்ணன் மாமா
திரு.காளிமுத்து மாமாசகோ,திரு.செந்தில் சகோ, திரு.திருப்பதி சகோ,திரு.ராஜேஷ் சகோ. திரு.தவசெல்வன் சகோ.மற்றபடி அனைத்து சொந்தங்களும் ஏற்கனவே முகநூல் அறிமுகங்களே திரு.கார்த்திகேயன் சகாே,திரு.தமிழரசன் மாம்ஸ்.

மற்றபடி 
முகநூல் நட்பூக்கள் நான் சுவாசிக்கும் 
தென்றலை போன்றவர்கள் உங்களால் நான்.உங்களுடன் நான் முப்பொழுதும்.

சனி, 30 டிசம்பர், 2017

அடடா ...நம்ம மாப்பிளை ..திரு .ராஜேந்திரன் அவர்களின் பிறந்த நாளை மறந்துவிட்டேன் ..வியாபார .மாத கடைசி வருட கடைசி ...மன அளத்தத்தில் இருந்ததால் ...மறந்து விட்டேன் ...ராஜேந்திரன் அவர்களை முதன் முதலில் சந்தித்தது அவரின் ஊரில் பொட்டையம்பாளையம் அழகான கிராமத்தில் ..அந்த அழகிய கிராமம் ..பல கோவை ,உடுமலை தொழில் முனைவோர்களை உருவாக்கிய கிராமம் ...பண்பாட்டு கழக பேரணியில் முதன் முதலில் ..சென்ற  வருடம் என்று நினைக்கிறன் ..பருத்தி பஞ்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்துகொண்டு ...அரசு காப்பீடு கழகத்தில் பகுதி நேரமாக கடும் உழைப்பின் மூலம் வளர்ந்து வருவது மகிழ்ச்சி ..அதுவும் போட்டி மிகுந்த தொழில் நம் கம்பள சமுதாயத்தில் வளரந்துவருவது அவரின் மனதிடத்தை காட்டுகிறது ..நம் கம்பள சமுதாயத்தில் தன் முன்னேற்ற கருத்துக்களையும் ,வழிகாட்டல்களையும் ..பங்களிப்புகளையும் பகிர்வது மகிழ்ச்சி ..அவர்க்கு நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளை ,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் சார்பாக ..பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ..
பெற்றோரிடம் ஆசீர்வாதம் .....பெண்கல்வி

வாழ்க்கையில் முன்னேற ...தன் பெற்றோர்களிடம் ஆசிர்வாதம்  வாங்குவதும் ,அவர்களை பிறந்த நாள் அன்று வாழ்த்துவதும் ..திருமண நாள் .அன்று வாழ்த்துவதும் .தன் குழந்தைகளுக்கு ஒரு முன்னேற ஒரு முன்னோடியாக வழிகாட்டியாக இருப்பது ..இப்போது இருக்கும் காலகட்டத்தில் ...சமுதாயத்தில் ..பெரியவர்களை மதிப்பதும் ..நண்பர்களின் சிறந்த நட்புகளை பெறுவதும் ..வாழ்வியலுக்கு சரியான புரிதல்கள் இருக்கும் ..அதனால் தான் ..தன் குழந்தைச்செல்வங்கள் ..வழக்கறிஞர் முருகராஜ் அவர்கள்  ,தன் மனைவி ..அலுவுலகம் ..வீட்டுப்பொறுப்புகள் கவனித்து கொள்கிறார்  ,ஒரு மகள் பல் மருத்துவர் ,இரண்டாவது மகள் பள்ளிப்படிப்பு முடித்து தன் தொழில் வாரிசாக வழக்கறிஞர் தொழில் படிப்பு ,தன தங்கையின் மகள் .என்ஜினீயர் ..கல்வி தகுதியின் மூலம் ..நம் கம்பள சமுதாயத்தில் ஒரு முன்னோடியாக வலம் வரமுடிகிறது ...நம் பெற்றோர்கள் ,முப்பாட்டன்கள் எல்லோரும் கூலி வேலை செய்து ..கல்வி என்ற சொத்தை கற்றுக்கொடுத்து ,தான் சேர்க்கும் சொத்து கூட ஒரு கட்டத்தில் அழிந்து போகலாம் ..கல்வி எந்த சூழ்நிலையிலும் தான் இருக்கும் வரை அழிக்க முடியாது .. ..வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிறார்கள் .. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ..நம் சமுதாயத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது ...வழக்கறிஞரின் அம்மாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...


வெள்ளி, 29 டிசம்பர், 2017

ஷியாம் ...சைக்கிள் ...2011..டிசம்பர் 29..நாள் ..

சைக்கிள் என்பது எனக்கு நினைவு தெரிந்து 13 வயதுக்கு மேல்தான் சைக்கிள் பற்றியே நினைவு வரும் ..அந்தவயதில் பெரியவர்கள் ..அண்ணன்கள் ஓட்டும் சைக்கிள் பார்த்து வேடிக்கை மற்றும் பார்ப்போம் .,.எனக்கு விவரம் தெரிந்தவுடன் ஆறாவது வகுப்பு மேல் ஓட்டவும் கற்றுக்கொண்டோம் ..ஷ்யாமுக்கு நான்கு வயதில் சைக்கிள் வாங்கவதற்கு போவதற்கு ..ஆடி கார் வாங்க சொல்லுவது போவதுபோல் போனது இன்னும் நினைவில் உள்ளது .ஒரு வாரத்துக்கு முன்னரே ..நண்பர் வீட்டுக்கு   சென்று இருக்கும் பொழுது  ஷியாம் அவர்கள் வீட்டில் இருந்த சிறிய சைக்கிளை பார்த்து ..அதன் மேல் ஏறி உட்கார்ந்து பாலன்ஸ்சுடன் விழுக்காமல் ஒரு ரவுண்டு சுற்றும்போது ...அடடா ..பயம் இல்லை ..தாராளமாக வாங்கி கொடுக்கலாம் என்று தோன்றியது  ..மாலை காரில் சென்று ...கோவை ராஜவீதியில் தடிக்கி விழுந்தால் சைக்கிள் கடையில் விழவேண்டும் சுற்றி 15 கடைகள் ...விதவிதமான வண்ணங்களில் ..விளையும் அதேமாதிரிதான் ..ஷ்யாமுக்கு பார்த்தவுடன் மகிழ்ச்சி ஆர்வம் ..அப்பவே எடுத்தவுடன் ராஜவீதில் பெரியாவாகனங்களின் நெரிசல் பகுதியில் ஓட்டவேண்டும் என்று கொஞ்சம் அவர்கள் அம்மா மாதிரி வேகம் ...பொறுமையாக ..அன்பாக சொல்லி ...காரில் பின்சீட்டில் வைத்து ...சைக்கிளின் மேல் உட்கார்ந்து வடவள்ளி வீடு முடிய கெட்டியாக பிடித்து உட்கார்ந்து வந்தார் ..பற்றை என்னவென்று சொல்லுவது ...வீட்டில் வந்தவுடன் வீட்டிற்குள் உட்கார்ந்து முன் பின் நகருத்துவது ..பயிற்சி ...அப்பா நாளை காலை நேரமே எழுந்து தார் ரோட்டில் ..தனியாக ஓட்டவேண்டும் என்று கட்டளை வேறு ..காலை விரைவாக எழுந்துவிட்டார் ஷியாம் ..அப்பா சைக்கிள் பழகலாம் என்று ..பின்னாளில் ஸீட் ஹாண்ட் பிடித்துக்கொண்டு வடவள்ளி இடையார்பாளையம் ரோடு .....காலப்பநாயக்கன் பாளையம் ரோடு ....வானப்ரஸாத முதியோர் இல்லம் வழியாக வந்து ..எப்படியும் 5 கிலோமீட்டர் தூரம் ..பயற்சி ..அவருக்கும் பயற்சி ..எனக்கும் நல்ல மூச்சு பயிற்சி ..அதைவிட சின்ன சின்ன ஆசை ..எனக்கு இந்த சிறுவயதில் கிடைக்காத ஆசைகள் எல்லாம் ஷ்யாமின் மூலம் கிடைத்தது ...வருடங்கள் எட்டு ஆனாலும் நினைவுகள் என்றும் மறப்பதில்லை ...இன்று டிசம்பர் 29..2011..என்றும் பசுமரத்து ஆணிபோல் பதிந்துள்ளது ...








வியாழன், 28 டிசம்பர், 2017

மகிழ்ச்சி ....2017
இன்று நமது சமுதாய சொந்தம் சென்னை ,நத்தம் ...விளாத்திகுளம் ...திரு செந்தில் அப்பையன் -அனு ராதா -குழந்தைச்செல்வங்களுடன்  குடும்பத்தாரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..இன்று காலை செந்தில் அவர்கள் அலைபேசியில் அழைத்தபோது மாதம் ஒரு முறை .நம் சமுதாய .முன்னேற்ற கருத்துக்கள்  ..அதை எப்படி செயல்படுத்தலாம் ..தகவல் பரிமாற்றத்துக்கு  அழைப்பார்  என்று நினைத்தேன் ..பணியில் இருந்தபோது அழைத்ததால் சரியாக பதில் அளிக்கமுடியவில்லை  ...நேரம் எப்படி ஒதுக்குவது என்று கொஞ்சம் திணறிப்போனேன் ..ஏனென்றால் ...தொலைதூரத்தில் இருந்து வருவதால் ...சந்திக்க முடியாமல் போய்விடுமோ ...என்று சிறிது ஐயம் கூட ..பழனிசென்று எம்பெருமான் முருகனை தரிசித்து விட்டு வருகிறோம் என்று சொன்னதால் ..கொஞ்சம் மனது நிம்மதி ..இன்று சரியாக என் வாடிக்கையாளர்  பத்திரப்பதிவு பணி வேறு ..மாலை பத்திர பதிவு முடிவதற்கும் ..செந்தில் அவர்கள் அழைப்பதற்கும் சரியாக இருந்தது ...போகும் போதே ..நம்ம மாப்பிளை காளிமுத்து அழைப்பதுக்கும் சரியாக இருந்தது...நம்ம மாப்பிளை பெருமாள்சாமி அவர்களின் வீட்டுக்கு சென்று செந்தில் அவர்களை முதன் முதலாக சந்திக்கும் பொழுது நினைப்பரிசு ஒன்று நம் தளி பாளையப்பட்டு எதுலப்பர் மன்னரின் சிறு புத்தகத்தை அளித்தது எனக்கு கொஞ்சம் மிகுந்த மனநிறைவு .பெருமாள்சாமி மாப்பிள வீட்டில் அன்பாக குடுத்த தேநீர் அருந்திவிட்டு கிடைத்த 20 நிமிடங்கள் பொதுவான நம் சமுதாய முன்னேற்றம் பற்றி பேசி வழி அனுப்பி வைத்தோம் ..அடுத்து முறை வரும்போது ..நம் சொந்தங்கள் இருக்கும் ஊர்கள் ..நம் இளைய சமுதாய சொந்தங்களுடன் விவாதிப்போம் ...அதுவும் பண்டிகை நாளாக இருந்தால் ..சென்னை சொந்தங்களோடு ...ஒரு சிறிய நம் சமுதாய வளரச்சி காண கூட்டம் ஏற்பாடு செய்து நிகழ்வை நடத்தலாம்.  வீட்டில் வேறு பெற்றோரிடம் வேறு சொல்லிவிட்டேன் ..நான் வீட்டை அடைந்தவுடன் அம்மா எங்க கண்ணு சுட்டாலு வருவார்கள் என்று சொன்னாய்  வரவில்லையா என்று கேட்டார்கள் .நேரம் அதிகம் ஆகிவிட்டதால் கிளம்பிவிட்டார்கள் ..அடுத்தமுறை வரும்போது வீட்டுக்கு வருவார்கள் என்று கூறியுள்ளேன் ..செந்தில் குடும்பத்தாரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி...யாரை சந்தித்தாலும் ..புகைப்படம் எடுத்துக்கொள்வேன் ...சில சொந்தங்கள் சந்திக்கும் பொழுது ...நீண்டகாலா  நட்பு  தொடர்வதற்கு தான் ஏனோ புகைப்படம் எடுக்க இயலவில்லை ..என மனது நினைக்க தோன்றுகிறது ..







புதன், 27 டிசம்பர், 2017

கடந்த சில நாட்களுக்கு முன் ...தம்பி தவச்செல்வன் ...வேலை இழப்பு பற்றி ஒரு பதிவிட்டிருந்தார் ...நானும் கூட இதை பற்றி யோசித்துக்கொண்டு இருப்பேன் ...என்னதான் இருந்தாலும் ...மாத சம்பள வாழ்க்கை ...பெரிய நிறுவனங்கள் பணிபுரிந்தாலும் ...ஒரு காலகட்டத்திற்கு பின் யோசிக்க வைக்கிறது ...இதை நான் ஒரு 11 வருடங்களுக்கு முன்னேற யோசித்து ..என் செல்ல மகன் ஷியாம் பிறக்கும் சமயம் ...மகனை வீட்டோடு பார்த்துக்கொண்டு மனைவி சுயதொழில் கால்பதித்து .அதை நல்ல முறையில் யான் வேஸ்ட் (இண்டஸ்ட்ரியல் கிளீனிங் )வியாபாரம் தொடங்கி...என் பணிக்காலத்தில் என் நிறுவன வியாபாரம் பார்த்துக்கொண்டு ..சொந்த நிறுவனத்தியும் வளர்த்துக்கொண்டு ...நல்ல நிலையில் வளர்ந்தும் வந்தது ...ஒரு கட்டத்தில் ...நம் சொந்த நிறுவனத்தையும் பார்த்துக்கொண்டு  வேலைவாய்ப்பு பறிபோகும் என்று கவலையில்லாமல் ...அதற்கான பணிகளை செவ்வனே செய்து வந்தேன் ...பின் சில குடும்ப சூழ்நிலையில் தவறிப்போய்விட்டது ...ஆனால் ஏதோ நான் நம்பிக்கையுடன் ,விசுவாசத்தால் பணிபுரிந்த நிறுவனம் ..வாழ்க்கையின் விளிம்பில் இருந்து என்னை காப்பாற்றியது ...இப்போதும் தொடராக பணிபுரிகிறேன் ...இருக்கும் கொஞ்ச காலத்தில் ...இன்னும் நம்பிக்கையுடன் பணிபுரிந்துகொண்டு ..நம் சொந்தங்களுக்கும் ,என் கூட பணிபுரியும் பணியாளர்களுக்கு ,நண்பர்களுக்கும் .நமது அறக்கட்டளையின்மூலமும் ,பண்பாட்டுக்கழகத்தின்  மூலம் நல்ல கருத்துக்களையும் ,முன்னேற்ற நடவடிக்கை எடுத்துக்கொண்டு ..நம் செல்ல மாப்பிள்ளைகள் ,தம்பிகளுடன் சேர்ந்து பணிபுரிவது எனக்கு மற்றட்ட மகிழ்ச்சி...வேலை இழப்பு பற்றி ...பன்முக நிறுவனத்தில் பணிபுரியும்  ...  தான் நடத்தும் அறக்கட்டளை மூலம் ...அதிகம் ..பல்வேறு பிரச்னைகளை ஆராயுந்து கட்டுரைகள் ,ஆலோசனை வழங்கும் என் மதிப்புக்குரிய நண்பர் .மணிகண்டன் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தேன் ...அதை ஒரு கட்டுரை யாக பதிவிட்டு பகிர்ந்து உள்ளார் ...அதை உங்களிடம் பகிர்கிறேன் ..கருத்துக்களை விவாதியுங்கள் ...வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் மன தைரியத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும் ...
வாழ்த்துக்கள் ...







இன்று நமது சமுதாய சொந்தம் ..தம்பி திரு .ராஜேந்திரன் ...பதிவியேற்பு விழா அருமையாக இருந்தது ...நம் சமுதாய சொந்தத்தில் .இன்றய இளைய சொந்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தொழில்முனைவராக வளர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி ..தம்பி காலையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சி சென்றதும் ..பம்பரம் போன்று ..எப்போதும் போல் ..கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் ..தன் இயல்பான புன்னகையுடன் தன் சங்க உறுப்பினர்களை வரவேற்று உபசரித்துக்கொண்டிருந்தார் ...நானும் நம்ம மாப்பிள்ளைகள் ..செந்தில்ராம் ,கார்த்தி SR ..சென்று வாழ்த்துக்களையும் தெரிவித்தோம் ..என்ன ஒரு செய்தி என்றால் எங்களை பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியுடன் மேடையில் பேசிக்கொண்டிருந்தவர் ...பார்த்த சந்தோசத்தில் இறங்காவிட்டார் ..நம் சொந்தங்களை எப்படி கவனித்துக்கொள்ளுகிறார் ..எங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ..பொது தளத்தில் சொந்தங்கள் எல்லாரும் வளர்ச்சுடன் ,நம் சமுதாய பற்றோடு ..பணியாற்றுவது ...மதிப்பும் ,மரியாதையும் நன்றக வளர்கிறது ...பொருளாதாரத்தில் கீழ் இருந்தாலும் ..மனதளவில் எல்லோரும் மேன்மக்களே ...இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டேன் ...மேடையில் வரவேட்புரை நிகழ்த்தி முடிக்கும் போது ..பண்பாட்டு கழக சார்பாக வரவேட்கிறேன் என்று சொல்லிமுடித்திவிட்டார் ..எல்லோரும் ஒரு நிமிடம் திரும்பி பார்க்கவைத்துவிட்டார் ...நம் சமுதாயத்தின் மேல் உள்ளபற்றை அவர்களுக்கு தெரியவைத்துவிட்டார் ...இது தான் நம் கம்பள சமுதாயம் ...திருப்பூர் சங்கத்தலைவர் பேசும்போது கூட ..பொருளாளர் பதவி ..நல்ல நம்பிக்கையுடன் இருப்பவரிடம் தான் ஒப்படைப்பார்கள் ...இது நம் கம்பள சமுதாயத்தின் மேல் பாளையக்காரர்கள் முதல் இந்நாள் வரை நம்பிக்கை வைத்துள்ளார்கள் ....இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் ..போட்டோக்ராபர் தலைவர் ..திரு .மஜித் ...பலமுறை தொழில் முறை சம்பந்தமாக சந்தித்துள்ளேன் ..அவருக்கும் மகிழ்ச்சி ...செயலாளர் பற்றி மிக முக்கியமாக சொல்லவேண்டும் திரு .ரமேஷ் தம்பி ...நம் சமுதாய இந்திய விடுதலைக்கு பாடுபட்ட ..கீர்த்தி வீரர் தளி  எதுலப்பர் நாயக்கர் குறும்படம் அவர்தான் இயக்குனர் ..குறும்படம் ..70% பணிகள் முடிந்துவிட்டது ...30% பணிகள் ..நம் நிதிநிலைமை கொஞ்சம் குறைவாக உள்ளதால் ...திணறிக்கொண்டு உள்ளோம் ...இதற்கு ..நம் அண்ணன் திருப்பூர் ராமகிருஷ்ணன் ..நிதியும் கொடுத்துள்ளார் ..மீதி என் சொந்த நிதியை கொண்டு முடித்துள்ளேன் ...இப்போது உள்ள காலகட்டத்தில் யாரையும் நிதி கேக்க வாய்ப்பு இல்லை ...நம் சொந்தங்கள் எல்லோரும் படம் என்னாச்சு என்று தானே கேக்கிறார்கள் ...நாம் ஏதாவது உதவி செய்தோமா யாரும் நினைப்பதில்லை ...மறைந்த பாவலர் பழனிசாமி மாமா அவர்கள் கூட தான் இறக்கும் தருவாயில் கூட ...படப்பிடிப்பு குழுவினருக்கு உதவி செய்தார் .
திரு ரமேஷ் அவர்கள் கூட இந்த குறும்படம் எடுப்பதற்கு எந்த ஒரு பிரதிபலன் பாராமல் நமது வரலாற்று வீரரை முடித்து தருகிறேன் என்று கூறியுள்ளார் ...இந்த பதவி கூட ...நம் சமுதாயத்திற்கு செய்த பணியால் கிடைத்தது என்று கூறியுள்ளார் ...உடுமலைப்பேட்டை வீடியோ மற்றும் போட்டோ சங்கத்தின் புதிய பொறுப்புகளை பதவி ஏற்று உள்ள அனைவர்க்கும் ..தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக -உடுமலைப்பேட்டை ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ....



















திங்கள், 25 டிசம்பர், 2017

பொன் கிடைத்தாலும் ...புதன் கிடைக்காது ...வரும் புதனன்று ..நம் சமுதாய சொந்தம் ...உடுமலைப்பேட்டை தொழில்முறை போட்டோக்ராபர்ஸ் ...வீடியோக்ராபர்ஸ் சங்கத்தின் ....பதவியேற்பு விழா ...தம்பி ..டிஜிட்டல் ராஜேந்திரன் ....சங்கத்தில் பொருளாளர் பதவியேற்பு விழா ...நடைபெறுகிறது ...ஐஸ்வர்யா நகரில் ..உள்ள மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெறுகிறது .தம்பி அவர் தொழில்முறை வியாபாரத்தில் இருந்தாலும் ...நம் சமுதாயத்தில் நல்ல வளர்ச்சியும் ...அவருடைய கருத்துக்களையும் ..நம் சமுதாய வளர்ச்சிக்கான ...செயல்களை தவறாமல் செய்துகொண்டு உள்ளார் ......தம்பிக்கு ...தமிழநாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் ,கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது ....

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

இன்று நீங்கள் இயக்குனர் சிகரம் ...KB  சாரை ...இண்டர்வீயூ பண்ணிய நினைவு என்று நினைக்கிறன் ..வாழ்த்துக்கள்...மேடம் ......

vallakondamman history

வல்லகொண்டம்மன் வரலாறு வழிபாடும் ..


வரலாறு என்பது நம் முன்னோர்களின் வாழ்வியலை பற்றியும் ,அவர்தம் வாழ்க்கை முறைகள் பற்றியும் ,அவர்கள் தம் கடைபிடித்த பண்பாடு ,பாரம்பரியம் ஆகியவற்றை படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடிகளாக திகழ்கின்றன .

தொன்று தொட்டு இன்று வரை வாழந்து வரும் பல்வேறு இனக்குழுக்கும் .தன்  குடி பெருமைகளை அடுத்துவரும் சந்ததியினருக்கு தெரியப்படுத்தும் பொருட்டு ஏதேனும் ஓர் வகையில் வரலாறு வாயிலாகவோ ,அல்லது தனது பூர்விக பெருமைகளை பறைசாற்றும் கதைப்பாடல்கள் வாயிலாகவோ ,அல்லது படிக்கவழக்கம் ,பண்பாடு நடைமுறைகள் இவற்றில் கோலோச்சும் குலா தெய்வ வழிபாடுகள் மூலமாகவோ வெளிப்படுத்த விரும்புகின்றன .ஆக தனது பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும் காரணிகளில் ஒன்றக குலதெய்வ வழிபாடும் உள்ளது .
இன்று வரை இந்துமதம் சிறப்புற்று விளங்கவும் இந்திய தேசம் அந்நிய சக்திகளிடமிருந்து ,சுதேச காற்றை சுவாசிக்கவும் ,ஆணிவேராகவும் ,ஆலமரமாகவும் விளங்கிய வரலாற்றில் தனக்கென தவிர்க்கமுடிய இடம் பெற்ற இனக்குழு ஒன்றின் வழிவந்த ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுக்கு காலத்துக்கும் மேற்பட்ட ,பத்து ஜமீன்களாக ,பாளையக்காரர்களும் ,பத்துப் ஜமீன்தாரர்களும்  வழிபட்டு வந்து தற்போது காலத்தின் செதில்களால் செல்லரிக்கப்பட்டு மாசு படிந்த மாணிக்கமாக காட்சியளிக்கும் .நம் கம்பள ஆதிகுல தெய்வமாகிய "வல்லகொண்டம்மாள் " கோவில் பற்றியும் அதன் பூர்விக வரலாறு  மற்றும் வழிபாட்டு முறைகளை உலகுக்கு  அடிதோறும் எண்ணத்தில் சிறு முயற்சியாக தொகுக்கப்பட்டதே வல்லக் கொண்டம்மன் வரலாறும் வழிபாடும் எனும் நூல் ...

இத்தகைய குலதெயவ வழிபாடுகள் (அ )வழிபாட்டு முறைகள் அது சார்ந்த இனக்குழுவை நெறிப்படுத்துவ தோடில்லாமல்  அவர்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டும் காரணிகளில் ஒன்றகவும் அமைகிறது .

மேலும் நம் இந்திய தேசம் மட்டுமில்லாது பல அந்நிய தேசங்களிலும் இத்தகைய குல தெய்வ வழிபாட்டு முறைகள் நடைமுறையில் உள்ளது .

பெரும்பாலும் மறைந்த முன்னோர்கள் அல்லது வீரத்தோடு வாழ்ந்து வீரமரணம் அடைந்தவர்கள் ஆகியோரின் வழிபாடே குலதெய்வ வழியாக மாறியதாக சங்க இலக்கிய குறிப்புகளும் தெரியப்படுகின்றன .

தற்பொழுது நாம் கொண்டிருக்கும் வரலாறுகளில் பெரும்பான்மை யானவை பல அந்நிய தேசத்தவரால் தொகுக்கப்பட்ட குறிப்புகளாக மட்டுமே கிடைக்கின்றன அதன் காரணமாகவே அவர்கள் பதிவுசெய்யத் தவறிய பல வரலாறுகளும் அச்சூலில் உண்மைத்தன்மைகளும் தற்பொழுது கல்வெட்டுகள் வழியாகவும் அவர்கள் இனம் சார்ந்த (அ )இடம் சார்ந்த கதைப்பாடல்கள் மூலமாகவும் அறியமுடிகிறது ,அந்நியன் போற்றவில்லை என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே நாம் எந்தவொரு விஷயத்தையும் ஒதுக்கிவைப்பது அறிவுடைமையாகாது .

ஸ்ரீ மஹாகணமும் மேன்மையும் பொருந்திய ஒன்பது கம்பளத்துக்கும் கட்டுப்பட்ட சத்தியந்  தவிரதவர்களான ,சன்ன மாடு ,சலியெருது  ஆயர்குழல் ,இரத்தினகம்பளி ,பிடிசெம்புக்கும் உடையவரும் ,புலிமீசையில் ஊசலாடுகின்ற பெரியோர்களும் ,பாலவார் குலா பன்னிரெண்டு தண்டிக்காரருமான
1.மல்ல பாலம்
2.கெங்கிசி பாலம்
3.குரி  பாலம் 
4.மூட பாலம்
5.உண்டாடி பாலம்
6.தூணிக்கால் பாலம்
7.சாகல  பாலம்
8.சல்லூறு  பாலம்
9.அலம பாலம் .
10.நலகானி பாலம்
11.எகநாகி பாலம்
12.திகநாகி   பாலம்

ஆகிய 12 குல தண்டிகை காரர்கருக்கும் அவர்களுக்கு முரசாக விளங்கிய
1.மெட்ராத்தி ஜமீன்
2.துங்காவி  ஜமீன்
3.நெகமம் ஜமீன்
4.பெரியப்பட்டி ஜமீன்

அகியோர்களுக்கும் ,அவர்களின் உறவின் முறையாக விளங்கிய
5.தளி ஜமீன்
6.ஆவில்பட்டி ஜமீன்
7.தொண்டாமுத்தூர் ஜமீன்
8.சிஞ்சுவாடி ஜமீன்
9.தாளக்கரை ஜமீன்

ஆகியோர்களுக்கு தாய் கோவிலாக விளங்கிய முந்தைய கோயம்பத்தூர் ஜில்லா ,உடுமலைப்பேட்டை தாலுகா ,கோட்டமங்கலத்தில் ஆதியில் குடிகொண்டு அருள்பாலிக்கும் தெய்வம் .வல்லகொண்டம்மன் என்றும் அழைக்கபடும்  கோவிலைப்பற்றிய சிறு தொகுப்பே இந்நூல் பாளையக்காரர்களாலும் ,மேற்கண்ட ஜமீன்தார்களாகும் ,சீரோடும் ,சிறப்போடும் வழிவழியாகவும் ,வாழையடி வாழையாகவும் ,வம்ச தவறாமாலும் வழிபட்டு வந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவில் ,இன்று இந்து அறநிலையைத்துறையின்  கீழ் இருந்தும் ,பராமரிப்பின்றி சிதிலங்களாய் சிதைந்து எச்சங்களாய் மிஞ்சும் கடைநிலைக்கு இலக்காகி மீள முடியா ,சுற்றிஅறிக்கையாகவும் ,மீட்டுயெடுக்கவும் ,புனரமைக்கவும் ,ஆளில்லா சுற்றிக்கையாகவும் காட்சியளிக்கிறது .

கோவில் தோன்றிய வாரலாறு ...:














































சனி, 23 டிசம்பர், 2017

தமிழநாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் -உடுமலைப்பேட்டை

நமது இந்திய விடுதலைக்கு பாடுபட்ட மாவீரர் .வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா ...ஜனவரி 3 ம் தேதியும் ,ஜனவரி 26 ம் தேதி இரண்டு ,நான்கு சக்கர வாகன பேரணியும் நடைபெற  இன்று ஆலோசனை கூட்டம் வெகு சிறப்பாக ,அருமையாக நடந்தது ...இந்த கூட்டம் 55 கிளைகள் கொண்ட உடுமலைப்பேட்டை சுற்றி இருக்கும் கிராமங்களில் இருந்து  ...மாவட்ட ,நகர ,ஒன்றிய கிளை நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களின் நமது சமுதாய கூட்டத்தில் தங்களின் கருத்துக்களை விவாதித்தது நல்ல முன்னேற்றம் ...இனி வரும் காலங்களில் மாதம் ஒருமுறை சமுதாய முன்னேற்ற கருத்துக்கள் விவாதிக்கப்படும் ...வாகன பேரணி நடைபெறும் ஊர்களின் விவரம் ..சமுதாய பொதுக்கூட்டம்  நடைபெறும் இடம் பற்றி விவாதிக்கப்பட்டது ...மாதம் கிராமங்களில் கிளை கூட்டங்கள் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது ...கிளை நிர்வாகிகள் தங்களின் மனம் திறந்து சமுதாய முன்னேற்றக்கருத்துகள் விவாதித்து மிக்க மகிழ்ச்சி ..மாநில செயல் தலைவர் இந்த கூட்டம் சிறப்பான முறையில்  நடைபெற்றதுக்கு நன்றி தெரிவித்தார் ..
இங்ஙனம் ..
கோவை திருப்பூர் மாவட்ட தமிழநாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் -உடுமலைப்பேட்டை

வெள்ளி, 22 டிசம்பர், 2017

முதல் முறையாக ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யப் போறீங்களா?
இத படிச்சிட்டு வாங்க  பாஸ்.....
முக்கியமான முடிவுகள் பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை ஒரு பெரிய விஷயத்தில் முதலீடு செய்யப் போகிறீர்கள். எனவே வாழ்க்கையில் நீங்கள் எடுத்திருக்கும் முக்கிய முடிவு இது. வீடு அல்லது மனை வாங்குவதற்கு முன் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும். சின்ன சந்தேகம் வந்தாலும், படு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இப்போதெல்லாம் மக்கள் தங்கள் சேமிப்புகளை பெரும்பாலும் வீடு அல்லது மனை வாங்குவதில்தான் முதலீடு செய்கிறார்கள். மற்ற எல்லாவற்றையும் விட ரியல் எஸ்டேட் மார்க்கெட் மட்டுமே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே போகிறது.
'வீடு வாங்குங்கோ, மனை வாங்குங்கோ' என்று ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரும் தற்போது நிறையவே கூவிக் கூவி விற்பனை செய்து வருகின்றனர். டி.வி.க்களில் பெருகி வரும் விளம்பரங்களே இதற்கு சாட்சி. மக்களும் இடம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பான வழி என்பது மட்டுமல்ல, அதன் மதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருவதாக அவர்கள் முழுவதும் நம்பி, லட்சம் அல்லது கோடிக்கணக்கில் அதில் பணத்தைக் கொட்டி வருகின்றனர்.
சரியான இடம், விலை எந்த இடத்தில் வீடு அல்லது மனை வாங்குகிறீர்கள், அதன் விலை எவ்வளவு என்பவை உள்ளிட்ட விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
முதலீடு இடம் வாங்குவது என்பது பொதுவாகவே ஒரு நீண்ட கால முதலீடாகவே கருதப்படுகிறது. எனவே உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்பதைத் தெளிவாக முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை, உங்கள் முதலீட்டில் ஒரு பகுதி வங்கிக் கடனாக இருந்தால், அதை நீங்கள் மாதந்தோறும் சமாளித்துக் கட்ட முடியுமா என்பதையும் ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
லாப நோக்கத்துடன் செயல்பட வேண்டும் வாங்கிய இடத்தை குறுகிய காலத்தில் விற்க நேர்ந்தாலும், அதில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வேண்டுமே தவிர, எள்ளளவும் நஷ்டமாகி விடக் கூடாது.
ஒரு நல்ல உதவியாளர் இடம் வாங்குவதற்கென்று ஒரு நல்ல மேனேஜர் அல்லது உதவியாளரை நியமித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், இடம் வாங்குவதற்காக நிறைய நேரம் செலவாவதால், உங்களுடைய ரெகுலர் வேலை அல்லது பிசினஸ் பாதித்து விடக் கூடாது. இடம் வாங்குவதில் மற்றும் விற்பதில் அவர் ஒரு நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். அதில் உள்ள அனைத்து விஷயங்களும் அவருக்கு அத்துப்படியாக இருக்க வேண்டியது அவசியம்.
மார்க்கெட் நிலவரம் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டின் அன்றாட நிலவரம் முழுவதையும் நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். எந்த இடம், அதன் விலை, எவ்வளவு பேரம் பேசலாம், இடத்தின் மதிப்பு அடுத்த சில மாதங்களில் அல்லது வருடங்களில் எவ்வளவு உயரும், வரிகளெல்லாம் எவ்வளவு, இன்சூரன்ஸ் விஷயங்கள் என்று அனைத்து விவரங்களும் உங்கள் விரல் நுனியில் இருக்க வேண்டும்.
வீட்டுக் கடன் இடம் வாங்குவதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கடனாக வாங்குகிறீர்களா? அந்த லோன் தொடர்பான அனைத்து விவரங்களையும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். எந்த வகை லோனை எடுக்கலாம், கடனுக்கான வட்டித் தொகை எவ்வளவு, வரி விலக்கு உள்ளதா என்று பல அம்சங்களையும் அறிந்து, மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
ரீஃபைனான்ஸ் நீங்கள் ஏற்கனவே ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரராக இருந்தால், அதைக் காட்டியே ரீஃபைனான்ஸ் செய்து ஒரு புதிய இடத்தை எளிதாக வாங்க முடியும். எந்தவிதமான இழுபறியும் இருக்காது. வரி விலக்கும் அதிகம் பெற முடியும்.

ஏங்க பாஸ் ...சொத்து வாங்க ஆலோசனை  நல்ல இருக்குதுங்களா  ...வர ..வார ..மூனு நாளும் லீவேதானே ...அப்படியே நல்ல இடமா ..பாருங்க ..கண்டிப்பா dtcp approved சைட்ட பாருஙக ...பார்த்துட்டு ...மறக்காம என்னைய கூப்புடுங்க 9944066681..இல்லீன்னா வாட்ஸாப்ப் mesg பண்ணுங்க ...வழிகாட்டுகிறேன்  ...வர்ற வருடம் 2018...தைமாதம் இடமோ ..வீடோ ...கிரயம் பண்ணீரலாம்ங்கோ...இப்பவே ..வீட்டுக்காரம்மா கிட்ட சொல்லராதீங்க ...நாளை காலையில் ..காபி சாப்பிட்டுட்டே சொல்லுங்க ...இன்னும் தகவல் வேணுமுன்னா சொல்லுங்க

சிவக்குமார் ...வீடு மற்றும் இடம் வாங்க நிதி ஆலோசனை தருகிறேன் .அழைப்பு எண் -9944066681...whatsapp number ..9944066681 கோவை ..பொள்ளாச்சி ..உடுமலைப்பேட்டை ..