கேள்வி : வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் உங்களை திட்டும் போது எப்படி உணர்வீர்கள்?
திங்கள், 26 ஜூலை, 2021
ஞாயிறு, 25 ஜூலை, 2021
கேள்வி : ரூபாய் 20,000 மாத வருமானம் வைத்து கோயம்புத்தூரில் குடும்பத்துடன் வசிப்பது போதுமானதா இருக்குமா சார் ?
என் பதில் :
எப்படி 20,000-இல் பட்ஜெட் போடலாம், வாழலாம் என்று கூறுகிறேன்.
முதலில் கோவையின் எந்தப் பகுதியில் நீங்கள் வசிக்கபோகிறீர்கள் என்பதைப் பொறுத்தே பட்ஜெட் முடிவெடுக்க முடியும்.
சாய்பாபாகாலனி, RS புரம், town hall, போன்ற நகர எல்லைக்கு உட்பட்ட பல இடங்களில் வீட்டு வாடகை அதிகம். நீங்கள் வாடகைக்கு வீடு தேடும் பட்சத்தில் இந்த இடங்களில் குடும்பத்துடன் வசிக்க 1 BHK வீடு Rs. 8,000 முதல் Rs. 12,000 வரை இருக்கும். 1 BHK என்றாலும் வீடு 800 square feet மேல் இருந்தால் அதிசயம்.
அதுவே நகருக்கு சற்று வெளியே வடவள்ளி, தொண்டாமுத்தூர்,சரவணம்பட்டி , நரசிம்மநாயக்கன்பாளையம், குரும்பபாளையம்,வடக்குப்பகுதி என்றால் சிங்காநல்லூர் , போன்ற இடங்களில் 5,000 முதல் 8,000 வரை உள்ள வீடுகள் சற்றே பெரியதாக கிடைக்கும். அட்வான்ஸ்-உம் கம்மியாக கேட்கும் வாய்ப்பு உண்டு.
கிட்டத்தட்ட மேற்கூறிய இடங்கள் நகரத்தை விட்டு 10 முதல் 15 கிலோமீட்டர்கள் தான் இருக்கும்.
நீங்கள் வேலைக்கு போகும் இடம் நகரத்தில் இருந்தால் சுமாராக ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டர் போய் வர வேண்டி இருக்கும். உங்கள் இரு சக்கர வாகனம் 55 முதல் 60 கிலோமீட்டர் மைலேஜ் தருமாயின் 1 நாட்களுக்கு 103 ரூபாய் பெட்ரோல். மாதம் Rs. 3090.
வாடகை 5,000, பெட்ரோல் 3090.
உள்ளூர் மளிகைக் கடையில் பொருள் தினசரி தேவைக்காக மட்டும் வாங்கிக்கொண்டு, கொஞ்சம் பெரிய மளிகை செலவுகளை,காந்திபுரம் ,ஒப்பணக்கார வீதி , டவுன் ஹால் , ரங்கே கவுடர் வீதியில் உள்ள மொத்த வியாபாரக் கடைகளில் வாங்கினால் கொஞ்சம் சேமிக்கலாம்.
அங்கேயே உள்ள குமரன் மார்க்கெட், அல்லது சாய்பாபா காலனி காய்கறி மார்க்கெட், RS புரம் உழவர் சந்தை,ஞாயிறு வடவள்ளி வார சந்தை ,சரவணம்பட்டி வார சந்தை போன்ற இடங்களில் காய்கறி வாங்கினால் மொத்த விலையில் சற்று கம்மியாக கிடைக்கும். சில்லறை வியாபாரிகள் பலர் இந்த மார்க்கெட்களில் இருந்துதான் பொருட்கள் கொண்டு வருகின்றனர்.
4 பேர், இரண்டு பெரியவர் இரண்டு குழந்தைகள் உள்ள வீட்டிற்கு மளிகை 3,000 முதல் 5,000 வரை ஆகும். காய்கறி வாரம் Rs. 500 என்று கணக்கு போட்டால் மாதம் 2,000.
9,500 + 7,000 = 16,500
இதில் உங்கள் மொபைல் recharge, கேபிள் TV, கரென்ட் பில், gas சிலிண்டர், இன்டர்நெட் பில் 4,000 ரூபாய் ஆகும்.
16,500 + 4,000 = 20,500
இவையெல்லாம் தேவைக்கு ஏற்ப கூடவோ குறையவோ கணக்கு போட்டு பட்ஜெட் போடுங்கள்.
பிள்ளைகளின் ஸ்கூல் பீஸ் சாதாரண தனியார் பள்ளிகளில் ஆண்டுக்கு 15,000 முதல் 20,000 வரை இருக்கும்.
பெரிய தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக சேர்க்க முடியாது. அரசு பள்ளி அல்லது aided பள்ளியாக இருப்பின் இன்னும் செலவு கம்மி.
குறைந்தது 2,500 சேமியுங்கள். RD அல்லது MF-இல் பணத்தை சேமியுங்கள்.
மீதம் இருக்கும் பணம், போனஸ், இன்சென்டிவ் வந்தால் Prozone, Brookefields, Fun Mall போய் window ஷாப்பிங் செய்யுங்கள்.
இல்லையேல் இருக்கவே இருக்கு நம்ம வ. உ. சி பூங்காவில் பட்டாணி சுண்டல், மாங்காய், அவிச்ச கடலை, அப்படியே சாயங்காலம் மைதானத்தில் அமர்ந்து குடும்பத்தோடு பீப்பி, பலூன், சோப்பு bubbles வாங்கி சற்று நேரம் உட்கார்ந்தால் beach-இல் சுற்றிய effect தரும்.
மருதமலை, ஈச்சநாரி, பேரூர், புலியகுளம் church, ஈஷா யோக மய்யம், வெள்ளியங்கிரி, RS புரம் Mr. சோடா, கல்கத்தா chat, சாய்பாபா காலனி ரமேஷ் மெஸ், சாய்பாபா கோவில், Codissia Iskon, race course வாக்கிங், RS புரம் உழவர் சந்தை இட்லி வடை (காலையில் மட்டும்), அன்னபூர்ணா மசால் தோசை, சாம்பார் இட்லி, துடியலூர் ராவுத்தர் பிரியாணி, ஏரியாவுக்கு ஏரியா தள்ளுவண்டி கடை காளான், cauliflower, மசால் பூரி, சோழா ஹோட்டல் பரோட்டா….கொஞ்சம் காசு இருந்தால் புரூக் பீல்ட் ,பன் மால் ,
இன்னும் நெறய இருக்கு. நம்ம கோவைல.
கொஞ்சம் பார்த்து சூட்டிப்பா (நம்ம கோயம்புத்தூர் பாஷைங்கோவ்) இருங்க.
கடனில்லாத வாழ்க்கை என்று நம்பி யாம் எழுதினோம். கடன் இருப்பின் கோவை கொஞ்சம் காஸ்டலி தானுங்க.
விலைவாசி வெஸ்ட் இண்டீஸ் மார்ஷல் பௌன்சர் போல எகிருவதால் கொஞ்சம் சிக்கனத்தில் சிக்கி தவிப்பதை தவிர வேறு வழியில்லை.
ஆனலும் என்றும் நம்ம கொங்கு கோயமுத்தூர் எப்பொழுதும் அனைத்து நண்பர்களையும் ,சொந்தங்களையும் அரவனைத்து செல்லும் என் உயிர் மூச்சு நம்ம கோவையுங்க ...நன்றி ...
என்றும் அன்புடன் சிவக்குமார் VK
சனி, 24 ஜூலை, 2021
கேள்வி : கடினமான காலம்... கஷ்டப்படாமல் கடந்துவரும் வழிகள் பற்றி கூற முடியுமா சார் ...?
என் பதில் : கொஞ்சம் நீண்ட பதிவு ...நேரம் இருக்கும் பொழுது படித்து பாருங்கள் ..அதற்கான புத்தகத்தை பற்றியும் இதில் கூறி இருக்கிறேன் ...📚📚✍️✍️✍️✍️
உங்கள் பிரச்னைக்கான தீர்வுகள்
வாழ்க்கை என்பது மிகவும் சுலபமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக் கின்றனர். ஆனால், நிஜத்தில் வாழ்க்கை என்பது கடினமான ஒன்று என்று நாம் எப்போது முழுமனதாக ஒப்புக்கொள்கிறோமோ அன்றைக்கு தான் நாம் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறோம். ஏனென்றால், அந்த மனநிலையை எட்டியவுடனேயே நாம் எதிர்கொள்ளும் எல்லா விதமான பிரச்னைகளும் நமக்கு கிடைக்கும் வாய்ப்புகள் என்பதை நாம் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். அப்படிப் புரிந்துகொண்ட பின் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம் என்று வரிந்து கட்டிக்கொண்டு காரியத்தில் இறங்குகிறோம். அதன் பிறகே, தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி முன்னேறப் பழகிக் கொள்கிறோம்” எனச் சொல்லி ஆரம்பிக்கிறார் ‘லீடிங் இன் டப் டைம்ஸ் (Leading in Tough Times)’ புத்தக ஆசிரியர். .
கஷ்டங்களே வாய்ப்புகள்...
“சிறந்த தலைவர்கள் (மேனேஜர்கள்) அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை களும் சவால்களுமே அவர்களுடைய தலைமைப் பண்பை உயர்த்திக் கொள்ள கிடைக்கும் அற்புதமான வாய்ப்பு என்பதை உணர்ந்துகொண்ட வர்களாகவே இருக்கின்றனர். ஏனென்றால், நமக்கு கஷ்டங்களைத் தருகிற விஷயங்களே நம்முடைய கவனத்தை அதிகமாகப் பெறுகிற விஷயங்களாக இருக்கின்றன.
ஆனால், கஷ்டம் என்பது நீங்கள் தயாராக இல்லாதபோது மட்டுமே வரும். அப்படித் தயாராக இல்லாத சூழலிலும் உடனடியாகத் தங்களுடைய மனநிலையை மாற்றிக்கொண்டு அதனிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்பவர்கள் முன்னேறவும், கற்றுக்கொள்ள மறுப்பவர்கள் தேங்கி நிற்கவோ, தொலைந்து போகவும் செய்கின்றனர்.
இந்தவித தெளிவான கோணத்தில் கஷ்டத்தைப் பார்க்காமல், ‘என்னடா இது சூழ்நிலை நம்மை இப்படி கஷ்டப்படுத்துகிறதே’ என்ற கோணத்தில் பார்க்க ஆரம்பித்தால் அந்த நிமிடமே நாம் தவறான பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுவோம். நம்மில் பலரும் அந்தக் கோணத்தில் கஷ்டத்தைப் பார்க்கவே பழகியிருக்கிறோம். நமக்கு கஷ்டங்கள் வரும்போது நாம் எந்தவிதமான எதிர்வினைகளை ஆற்றுகிறோமோ, அதைப் பொறுத்தே கஷ்டங்கள் நம்முடைய வரலாற்றுக்கான கதையை எழுதுகின்றன. சாதாரண மனிதர்களுக்கே இந்த நிலை என்றால் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் களின் நிலையைச் சொல்லவே வேண்டாம்.
தலைமைப் பொறுப்பில் இருக்கும் நபர்களே நிறுவனத்தைப் புதிய பல நிலைகளுக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில் முன்னால் நிற்கின்றனர். சிறந்த தலைவர்கள் எப்போதுமே கஷ்டங்களை வாய்ப்புகளாக மட்டுமே பார்ப்பார்கள். ஏனென்றால், தலைவர்களே நிறுவனத்தைத் தெரியாத புதிய பல இடங்களுக்குக் கொண்டு செல்வார்கள். தெரியாத இடங்களுக்குப் (புதிய உச்சங்கள்) பயணிக்கும் பாதை என்பது கஷ்டங்கள் நிறைந்ததாக இருப்பதற் கான வாய்ப்புகளே அதிகம். இந்த இடங்களை அடைய சாதாரணமாக அனைவரும் பயணிக்கும் பாதையில் பயணிக்கக் கூடாது. புதிய முயற்சி களையும், ரிஸ்க்குகளையும், இன்னோ வேஷன்களையும் செய்ய வேண்டும். இவை அனைத்துமே கஷ்டங்களைக் கொண்டு வருவதற் கான விஷயங்கள் தான் இல்லையா? இதனாலேயே தலைவர்கள் கஷ்டங்களை வாய்ப்புகளாகப் பார்க்கும் குணாதிசயத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்கிறார் ஆசிரியர்..
வழிநடத்தும் தலைவன்...
கஷ்டகாலங்களில் எப்படி ஒரு தலைவனாக நீங்கள் உங்கள் உடன் பணிபுரிபவர்களை வழிநடத்த வேண்டும் என்று கேட்கிறீர்களா? மேனேஜ்மென்ட் குருவான பீட்டர் ட்ரக்கர், ‘கொந்தளிப்பும் குழப்பமும் நிறைந்த கஷ்டகாலங்கள் மிகவும் பயங்கர மானவை. ஏனென்றால், இது போன்ற காலங்களில் நம்மால் உள்ளது உள்ளபடி பார்க்க முடியாமல் போய்விடும்’ என்கிறார். இருக்கும் சூழலைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போய் விடுவதால் தவறான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புகள் அதிகமாகிவிடுகிறது. இதில் நகைமுரண் என்னவென்றால், உங்களுடைய குழு நிஜமான சூழல் என்னவென்று தெரிந்தால் அதற்கேற்ப சுலபத்தில் தன்னை மாற்றிக்கொள்ளும் குணாதிசயத்தை முழுமையாகக் கொண் டிருக்கும். ஆனால், அந்தக் குழுவால் நிஜத்தை தாங்களாகவே முழுமையாக உணர்ந்துகொள்ள முடியாது. எனவே, தலைவர்களே சூழ்நிலையின் நிதர்சனத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு குழுவுக்கு விளக்கமாகப் புரியும்படி சொல்ல வேண்டும்” என்கிறார் ஆசிரியர்.
தொலைநோக்குப் பார்வை...
“இன்றைய சூழ்நிலையைப் புரிந்து கொள்வது எவ்வளவு தூரம் தலைவர்களுக்கு அவசியமோ, அதே அளவுக்கு எதிர்காலத்தில் எந்த மாதிரியான சூழ்நிலைகள் உருவாகும் என்பது குறித்த பெரிய அளவிலான தொலைநோக்கு பார்வையும் தலைவர் களுக்கு அவசியம் வேண்டும்.
கஷ்டகாலத்தில் குழுவின் அங்கத்தினர் களுக்கு அவர்கள் எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்வதால் எதிர்காலத்தில் என்ன விதமான பலன்கள் நிறுவனத் துக்கும் அவர்களுக்கும் கிடைக்கும் என்பதையும் தெளிவுபடுத்தும் திறமை தலைவர்களுக்கு அவசியம் வேண்டும்.
கஷ்ட காலங்களில் எல்லா கேள்விகளுக்கும் விடை தலைவர்களிடம் இருக்காது. ஆனால், அந்தக் கேள்விகளுக்கு விடையே இல்லை என்பது இல்லை. விடை இருக்கும். ஆனால், அதைத் தெரிந்துகொள் வதற்கான முயற்சியில் அதிக நேரத்தையும் உழைப்பையும் அதிகமாக செலவிட வேண்டி யிருக்கும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் திறனும் தகுதியும் தலைவர்களுக்கு வேண்டும். இதற்கான முயற்சியில் தலைவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பது புரிய ஆரம்பித்து விட்டாலே அவரின் கீழே இருக்கும் குழு நம்பிக்கையுடன் செயல்பட ஆரம்பித்துவிடும்.
தலைவருடன் இருக்கும் குழுவுக்கு ஏற்கெனவே சூழ்நிலையின் நிதர்சனத்தையும், எதிர்காலம் எவ்வாறு இருக்க வாய்ப்புள்ளது என்ற பெரிய அளவிலான தொலைநோக்குப் பார்வையையும் விளக்கிவிட்ட படியால், அவர்களையே என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து சிந்தித்துத் திட்டமிடச் சொல்லலாம். இது அவர்களுக்கு சுலபமான விஷயமாக இருக்காது என்றபோதிலும், அதற்கான உதவிகளை தலைமைப் பணியில் இருப்பவர்கள் வழங்குவதன் மூலம் அவர்களையே அந்த வழிகளைக் கண்டுபிடிக்கச் சொல்லலாம்.
இந்தவித திட்டமிடுதலின் போது எதிர்காலத்தில் நாம் செல்ல நினைக்கும் இடத்துக்குப் பயணிப்பதற்காகப் பல பாதை களை அவர்கள் கண்டு பிடிப்பார்கள். அந்தப் பாதைகளில் அதிக வெற்றிக்கு வாய்ப்புள்ள பாதைகளைத் தேர்ந்தெடுக்க ஒரு தலைவராக நீங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். ஏனென்றால், ஒரு தலைவனாக நீங்கள் உருவெடுக்க இதுபோன்ற பல சூழ்நிலைகளையும் அந்தச் சூழ்நிலைகளில் பல பாதை களையும் நிச்சயமாய் எதிர் கொண்டிருப்பீர்கள். அவற்றில் சரியானவற்றை பலமுறை தேர்வு செய்த காரணத்தால்தான் நீங்கள் இன்றைக்கு தலைமைப் பதவியில் இருக்கிறீர்கள் இல்லையா? அதனாலேயேதான் உங்களால் அவர்களுக்கு உதவ முடியும் எனச் சொல்கிறேன்” என்கிறார் ஆசிரியர்.
டீம் வொர்க்கின் அவசியம்...
“எந்த அளவுக்கு கஷ்டமான சூழ்நிலைகள் நிறைந்துள்ளதோ அந்த அளவுக்கு அதை எதிர்கொள்ள டீம் வொர்க் என்பது மிக அதிக அளவில் தேவைப்படும். எல்லோரும் ஒருமனதாய் ஒருங்கிணைந்து பணிபுரியாவி ட்டால் எந்த ஒரு டீமும் அற்புதமான வெற்றிகளை அடைய முடியாது. எனவேதான், டீம் வொர்க்கை ஊக்குவிக்கும் பொறுப்பு கஷ்ட மான காலகட்டத் தில் தலைமைப் பதவியில் இருப்ப வர்களுக்கு அதிக மாக இருக்கிறது என்று சொல் கிறேன்” என்கிறார் ஆசிரியர்.
இறுதியாக, ஒரு தலைவனின் தலையாய பணி என்பது தன்னுடைய குழுவில் நம்பிக்கை என்பது எப்போதும் நிலைத்திருக்கும் வண்ணமும், எப்போதுமே அது வாடிப்போகாமல் துளிர்த்திருக்கும் வண்ணமும் செயல் படுவதே. என்னதான் மலையளவு கஷ்டத்தில் இன்றைக்கு நாம் இருந்தாலும், அந்தக் கஷ்டத்தால் நம்முள்ளே தோன்றும் அழுத்தம் நம்மைத் தளர்வடையச் செய்தாலும், நம்மை முழுமூச்சுடன் செயல்படவிடாமல் பல முட்டுக்கட்டைகளைப் போட்டாலும், நம்முடைய மனம் என்ன நடக்கப் போகிறதோ என்று அலைபாய்ந்து கொண்டிருந்தாலும் நம்மால் இந்தச் சூழ்நிலையை வெற்றிகர மாகக் கடந்து எதிர்காலத்தில் சிறப்பான நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கை துளிரைத் தொடர்ந்து வாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
குழுவின் மன உறுதி என்பது நம்பிக்கை என்ற இந்த அடித்தளத்தில் இருந்தே உருவாகி செழித்து வளர்வது. மன உறுதியே கஷ்டகாலத்தில் அவர்களை நிலைநிறுத்தி செயல்படவைத்து இறுதியில் வெற்றியடையச் செய்வது. அதனாலேயேதான் நம்பிக்கை என்பது எப்போதும் குழுவின் மத்தியில் தழைத்திருக்கும்படி தலைமைப் பதவியில் இருப்பவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று சொல்கிறார் ஆசிரியர்.
சமகால சூழ்நிலையில் நம் அனைவருக்கும் அவசியம் தேவைப்படும் அறிவுரைகள் பலவற்றையும் ஆய்வுகள், உதாரணங்கள், மேற்கோள்கள் போன்ற வற்றின் மூலம் வெகு இலகுவான நடையில் சொல்கின்ற இந்தப் புத்தகத்தை அனைவரும் படித்துப் பயன்பெறலாம்.
நன்றி .🙏.வாசிப்பை 📚..நேசிப்போம் ..🥰.நடைமுறை வாழக்கையுடன் ..🥰🙏🤝📚📚✍️✍️✍️.
சிவக்குமார் |||VK
வியாழன், 22 ஜூலை, 2021
வெள்ளையனைத் தூக்கில்போட்ட பாளையம் .....
ஆம்!
வெள்ளையன்தான் எண்ணற்ற இந்தியர்களைத் தூக்கில் போட்டிருக்கிறான். சுட்டும் கொன்றிருக்கிறான்.
போரில் பல வெள்ளையர்கள் இறந்தும் இருக்கிறார்கள்.
ஆனால் வெள்ளையன் ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றிய குறுநில மன்னர் இருந்திருக்கிறார்!
அவர் தான் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள தளி பாளையப் பட்டு என்று சொல்லப்படும் சல்லிபட்டி பாளையகாரர் எத்தலப்ப நாயக்கர்!
அங்கு தூக்கிலிடப்பட்ட வெள்ளைக்காரனின் சமாதி இன்றும் நல்ல நிலையில் உள்ளது.
ஆதாவது மைசூர் மன்னராக இருந்த திப்பு சூல்த்தானை வீழ்த்திய ஆங்கிலேயர் வீரபாண்டிய கட்ட பொம்மனையும் வீழ்த்திய பின்னால் தங்களின் ஆதிக்கத்தில் அனைத்துப் பகுதிகளையும் கொண்டு வரும் நோக்கில் பாளையங்களுக்குத் தூதர்களை அனுப்புகிறார்கள்.
அப்படித் தளி பாளையப்பட்டுக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் ஆன்ரூ கெதிஸ்!
அப்போது தளிப் பாளையக்காரராக இருந்த எத்தலப்ப நாயக்கர் வெள்ளையர்களின் வருகையைக் கண்டு கொதித்துப் போனார்.
அவர்களைத் தூதர்களாக அங்கீகரிக்காமல் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதிக் கைது செய்து தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ஒருவனை மட்டும் இந்த இடத்தில் தூக்கில் போட்டனர்!
அந்த இடத்துக்கு இன்றும் தூக்குமரத் தோட்டம் என்று பெயர்.
அந்த வெள்ளையனுக்கு ஒரு சமாதியும் அதன்மேல் கல் சிலுவையும் உள்ளது.
சமாதியை மூடியுள்ள கல்வெட்டில் அங்கு வெள்ளையன் புதைக்கப்பட்ட விபரம் உள்ளது.
அந்த இடத்தை விரிவாக ஆராய்ந்தால் இன்னும் பல வரலாற்று விபரங்கள் கிடைக்கலாம்.
அந்த இடம் வெள்ளையனைத் தூக்கிலிட்டுக் கொன்று புதைத்த இடம் என்று நம்ப நல்ல ஆதாரங்கள் உள்ளன!
முதலாவது அங்குள்ள கல்வெட்டில் வெள்ளையன் புதைக்கப் பட்ட செய்தி உள்ளது.
இரண்டாவது அந்தக் கல்வெட்டில் ஆங்கிலேயனின் பெயர் உள்ளது.
மேலும் பலவலுவான காரணங்கள் :
அந்தக் காலகட்டம் திப்புசூல்தானை வீழ்த்தியபின்னால் ஆங்கிலேயர் அனைத்துப் பாளையங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த காலம்....(ஏறக்குறைய 1800 ம் ஆண்டு)
அந்தச் சமாதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிறு இரும்புத் தடுப்பு வேலை பழைய முறையில் அமைந்துள்ளது. ஆதாவது கொல்லுப் பட்டறையில் செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டும் பழைய ஏடுகளில் காணப் படுவதுபோன்ற எழுத்துக்களைக் கொண்டுள்ளது.
ஆதாவது எழுத்துக்களில் அதற்குக் கொஞ்ச காலம் முன்னதாக வீரமாமுனிவரால் கொண்டு வரப்பட்ட மாற்றம் அங்கு பின்பற்றப் படாமல் பழைய முறையில் அமைந்துள்ளது. மாற்றம் முழுமையாக அப்போது நடப்புக்கு வரவில்லை போலும்?....
எல்லாவற்றுக்கும் மேலாக தனியார் விவசாய நிலத்தில் அமைந்துள்ள அந்தச் சமாதி மட்டும் ஆங்கிலேயன் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது!..
வீரபாண்டிய கட்டபொம்மனின் மறைவுக்குப் பின்னால் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட பாளையங்களின் அணியில் முக்கியப் பங்கு வகித்தது இந்த இடம் அமைந்துள்ள தளி பாளையப்பட்டு ஆகும்!
வெள்ளையனுடன் நடந்த போரில்தான் எத்தலப்பநாயக்கரும் கொல்லப்பட்டார்!
அந்தச் சமாதியில் அமைந்துள்ள கல்வெட்டில் ஒரு தந்திரமான வாசகமும் உள்ளது.
ஆதாவது வெள்ளையனைத் தூக்கில்போட்ட இடம் என்று இருந்தால் வெள்ளைக்காரர்களால் சிக்கல் வரும் என்று தெய்விகமாகி அடங்கின சமாதி என்று கல்வெட்டு இருக்கிறது!...
அந்த இடத்துக்குச் சென்று வந்த நமக்கே இவ்வளவும் தோன்றுகிறது என்றால் வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்தால் இன்னும் பல வரலாற்றுச் செய்திகள் கிடைக்கும்.
அந்தக் கால வெள்ளையர் ஆவணங்கள் ஆராயப் பட்டால் அங்கு தூக்கிலடப்பட்ட வெள்ளைக்காரன் பற்றி இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம்!..
பலரும் வந்து பார்வையிட்டாலும் அந்த இடம் வரலாற்றில் முக்கிய இடம் பெறவில்லை என்ற வருத்தம் அந்தப் பகுதி மக்களிடம் ஆழமாக இருக்கிறது!....
சமாதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்பு துருப் பிடித்துப் போய் உள்ளது. இப்படியே விட்டால் விரைவில் அழியும் வாய்ப்பு உள்ளது.
அதனால் அதன் அடிப்படைத் தோற்றம் மாறாமல் எண்ணைப் பூச்சால் துருப் பிடித்தல் தடுக்கப் படவேண்டியது உடனடிக் கடமை ஆகும்.
அங்கு எடுக்கப்பட்ட படங்கள்.....📚📚✍️✍️
இந்த வரலாற்று சிறப்புமிக்க இடங்களை ஆவணப்படுத்தி கடந்த 2018 ஆண்டு மே 19 .உடுமலையில் நகராட்சி திருமண மண்டபத்தில் .உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் மூலம் .கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ,பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ,செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களின் தலைமையில் "தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர்" என்ற நூல் வெளியிட பட்டது ...
புதன், 21 ஜூலை, 2021
கேள்வி : வாழ்க்கையை ரசித்து வாழத் தெரியாதவர்கள் யார்?
என் பதில்
15 வருடங்களுக்கு முன்னாள் நடந்தது ,எனக்கு தெரிந்த நல்ல மனிதர் அவர். பொறியாளர். வெளிநாட்டில்பணிசெய்துவிட்டு வந்து சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனம் ஆரம்பித்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனம் முன்னேறியது. ஒரு நல்ல நிலைக்கு முன்னேறினார். ஆனாலும் தானே முன்னின்று எல்லா வேலையும் செய்தார். அவர் அலுவலகத்தை விரிவு படுத்தி பல நல்ல ஒப்பந்தங்களை கையக படுத்தினார். லாபம் பல மடங்கு வந்தது.
தன் லாபத்தில் கோவை மத்திய பகுதியில் ஒரு நல்ல இடம் வாங்கி அதில் தங்குமிடம் கட்டினார். செம்ம வாடகை. மாத வருமானம் 1 லட்சம். பின்பு இங்கே வரும் மாத வருமானம் 5 லட்சம். ஆனாலும் மனிதர் பயங்கர வேலைக்காரர். ஓய்வு சுத்தமாக இல்லை.
என்னிடம் கடைசியாக பேசிய போது, வீடு கட்டி விட்டதாகவும், அதில் தற்போது தான் பாரின் சோபா வாங்கி போட்டிருக்கேன் என்றார்.
ஒருநாள் என்னிடம் வந்து தனக்கு தலை சுத்துவது போல் இருக்கிறது என்றார்.
BP 170/110
இது மிக அதிகம் என்று நான் கூறி, வாழ்க்கை முறையை மாற்றுவது உடனடியாக செய்ய வேண்டும் என்றேன். உங்களுக்கு ஒரு உதவியாளர் தேவை எனவும், உணவு மாற்றம் முதல் வாழ்க்கை மாற்றம் வரை கூறினேன். சரியாக கேட்கவில்லை. அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.
இப்போது அவர் இல்லை. திடீரென்று அட்டாக். வயது 46 தான். இவ்வளவு நாள் கடுமையாக உழைத்தது எல்லாம் எதற்காக? அந்த பாரின் சோபா யார் இப்போது உபயோகிக்கிறார்கள்?
வாழ்க்கையை நாளைக்கு நாளைக்கு என்று ஒத்தி போடுபவர்கள் தான், ரசிக்க வாய்ப்பு இருந்தும், வாழ தெரியாதவர்கள்.
இந்த அடிப்படையில் கூடுதல் நேரம் உழைப்பவர்கள், அலுவலகத்தை கட்டி கொண்டு அழுபவர்கள், பாவபட்ட ஜென்மங்கள். எல்லாவற்றையும் நாளைக்கு என்று ஒத்தி வைத்து வாழ்கிறார்கள்.
ஒரு நல்ல நிகழ்ச்சியோ, மகிழ்ச்சி தரும் சம்பவங்களோ, ஒரு மனதிற்கு இனிய நேரமோ, யாருக்கும் காத்திருப்பதில்லை. அது கடந்து சென்று கொண்டுதான் இருக்கும்.
நீங்கள் ரசிக்க உங்களின் குழந்தை, குழந்தையாகவே இருக்க போவதில்லை. 5 வயதுக்கு மேல், "நான் என் வேலையை செய்து கொள்வேன்' என சொல்லிவிடும்.
நீங்கள் ரசிக்க உங்கள் அன்புக்குரிய நண்பர்கள் எப்பொழுதும் உங்களுடனே இருக்க போவதில்லை. ஒரு நாள் அவருடன் தேநீர் குடிப்பதில் தவறு இல்லை.
நீங்கள் ரசிக்க உங்கள் சகோதரர் எப்பொழுதும் உங்கள் வீட்டிலேயே இருக்க போவதில்லை.
உங்கள் வீட்டுக்கு இராகம் பாட வரும் குயில், காகம் மறுபடியும் வருமா?
விட்டுப்போன எந்த நிகழ்வும் மறுபடி வராது.
வாழ்க்கையை ரசிக்க தெரியாதவர்கள், வாழ சரிவர நேரம் ஒதுக்காதவர்கள் தான்.
வாழ்க்கை வாழ்வதற்கே ..நன்றி ....
நண்பேண்டா.....
நண்பேண்டா.....
செவ்வாய், 20 ஜூலை, 2021
கேள்வி : மன நிலையை சிறப்பாக வைத்திருப்பதற்கான தந்திரங்கள் என்னென்ன?
என் பதில் :
இந்த கேள்விக்கான பதிவில் ஒருவர் கழுதை படத்தை வைத்து எழுதியிருந்தார்..கழுதையை பார்த்ததும் கேள்வியை பார்த்ததும் எங்கோ கேள்விப்பட்ட சில நல்ல கருத்துக்கள் எனக்கு தோன்றியது.
மனநிலையை சரியாக வைத்திருப்பதற்கான தந்திரங்கள் என்ன என்பதே கேள்வி…
அதற்கான ஒரு தந்திரத்தை நாம் கழுதையிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.
அழுக்கு நிறைந்த துணிகளை, கழுதையின் முதுகில் ஏற்றிவிட்டு, துணிகளை துவைப்பதற்காக ஆற்றிற்கு அழைத்து செல்கிறான் முதலாளி.
கழுதையை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, துணிகளை எல்லாம் நன்றாக துவைத்துவிட்டு, மாலையில் சுத்தமான வெண்மையான துணியை கழுதையின் முதுகில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறான் முதலாளி.
என்னடா திரும்ப திரும்ப, முதலாளி என்கிறானே என்று பார்க்கிறீர்களா?…கழுதைக்கு அதை மேய்ப்பன் தானே முதலாளி…
உங்களை யார் மேய்க்கிறார்…உங்களுக்கு யார் முதலாளி…என்பதை எல்லாம் நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்..! குறிப்பு: நான் யாரையும் கழுதைனு சொல்லலிங்கோ..!
இப்படி காலையில் அழுக்குத்துணிகளை தூக்கி வரும்போது கழுதை அழுக்குத் துணிகளை தூக்குகிறோமே என்று விரக்தியும் அடையவில்லை.
மாலையில் வெண்மையான சுத்தப்படுத்தப் பட்ட துணிகளையும் தூக்கி வரும்போது, குதூகலமும் அடையவில்லை..!
மனிதர்களான நாமும், கழுதையை போல கஷ்டமான பல சூழ்நிலைகளை வாழ்க்கையில் கடந்து வரும்போது நமது மனநிலையை மிகவும் விரக்தியாகவும் வைத்துக் கொள்ளக்கூடாது…
அதே பல வெற்றி கனிகளை சுவைக்கும் போதும், நமது மனநிலையை வானளவு உயர்த்தியும் வைத்துக்கொள்ளக்கூடாது…
கழுதையை போல வாழ்வில் கஷ்டம் வந்தாலும் மகிழ்ச்சி வந்தாலும், அதை சுமக்கப்போகிற கழுதை நாம் தான் என்று நம் மனநிலையை பக்குவமாக அடக்கி வைத்துக்கொள்வது சிறந்தது…!
நமக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று எவரிடமும் எதிர்ப்பார்க்காமல் வாழலாம்.
எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாத வாழ்க்கையே எதார்த்தமான வாழ்க்கை..!
தற்பொழுது கழுதை அரிதான இனமாகவும் வெகுவிரைவாக அழிந்து வரும் இனமாகவும் உள்ளது ...
நன்றி.
இனிய நண்பர் சிவக்குமார்-க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
திங்கள், 19 ஜூலை, 2021
கேள்வி : ஜனாதிபதியே ஆனாலும் டாக்டர் வந்தால் எழுந்து நின்று வணக்கம் செலுத்துவார், மக்கள் அனைவரும் வணங்கும் ஒரே நபர் டாக்டர் மட்டுமே என்ற பேச்சு உண்டு, +2 மாணவர்கள் மருத்துவம் படிக்க ஆசைபட காரணம் டாக்டர்களுக்கு சமுதாயத்தில் கிடைக்கும் மரியாதையா அல்லது பணமா?
என் பதில் :
டாக்டர் என்ற சொல்லுக்கு a person who holds highest degree அதாவது மெத்தப் படித்தவர்கள் என்று பொருள்..
எந்த துறையிலும் பிஎச்டி என்ற ஆய்வுப் படிப்பை படித்தால்.. அவர்கள் பெறுவது டாக்ட்டரேட் என்ற அந்தஸ்தை தான்..
அது வைத்தியம் பார்க்கும் மருத்துவ தொழில் மட்டுமே அல்ல.. பொறியியல் துறை வணிகம் கலைத்துறை போன்ற அனைத்து துறைகளிலும் உபயோகப்படும்.
இதை விட படிக்கவே இல்லை என்றால் கூட அரசியல்வாதிகள்…நடிகர்கள் தொழிலதிபர்கள்.. கவுரவ டாக்டர் பட்டம் பெற்று கொள்கின்றனர்..
அது மட்டும் அல்ல.. பத்து நாள் ஆன்லைன் க்ளாஸில் சான்றிதழ் வாங்கி வைத்து கொண்டு அக்குபஞ்சர்.. அக்கு ப்ரஷர்.. ரெய்கி.. ப்ராணிக் ஹீலர் என்போரும் டாக்டர் பட்டம் போட்டு கொள்கின்றனர்..
அதனால்.. இந்த பட்டம்.. தற்காலத்தில் அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக கருத முடியாத நிலைமை தான் உள்ளது..
மருத்துவம் படிப்பது அவரவர் விருப்பம் மட்டுமே.. இந்தியா போன்ற நாடுகளில் மக்களின் வாழ்வியல் கஷ்டங்களை எவ்வளவு தூரம் தெரிந்து கொள்கிறாரோ அவர்களே மருத்துவர்களாக மக்கள் மத்தியில் வியாபித்து இருக்க முடியும்..
ஒரு மருத்துவர் சம்பாதிக்கும் பணம் என்பது மற்ற தொழிலில் உள்ளவர்கள் போல FIXED SALARY கிடையாது.. அவர் எவ்வளவு மணி நேரம் ப்ராக்டீஸ் செய்கிறார்களோ அவ்வளவு சம்பாதிக்க முடியும்.. அரசு வேலையில் வாங்கும் சம்பளம் போதவில்லை என்றால் வேலையை விட்டு விட்டு ப்ரைவேட் ப்ராக்டீஸ் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்வார்கள்.. கார்ப்பரேட் மருத்துவமனைகளில் எவ்வளவு சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் படித்து இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தே சம்பளம் நிர்ணயிக்க படும்..அதுவும் சீஃப் டாக்டர் அனுபவம் பெற்ற பிறகு தான் நல்ல சம்பளம் கிடைக்கும்…
எனது நண்பரின் குடும்பத்தினர் இரண்டு தலைமுறையாக மருத்துவ தொழிலில் இருப்பதால் சொல்கிறேன்.. சர்க்கரை நோய் மருத்துவரான குடும்ப நண்பரின் தந்தையை கம்பேர் செய்யும் போது.. பாதி அளவு கூட சம்பாதிக்க தெரியாத அறுவை சிகிச்சை நிபுணரை.. தந்தையின் நண்பர்களை அறிவேன்..அவரவர் அமைத்து கொள்ளும் வேலை முறைகள் தான் காரணம்..
இந்த படிப்பை படிப்பதற்கு போதிய உழைப்பு தான் முக்கியமாக தேவை..
மற்ற படி.. மரியாதை எல்லாம் இன்றைய காலத்தில் யாரும் எதிர்பார்ப்பது இல்லை.. வேலையை மருத்துவ சட்டதிட்டங்களை மதித்து செய்ய வேண்டும்.. நோயாளிக்கு எது நன்மையோ அவற்றை.. நோயரின் சம்மதத்துடன் proper medico legal consent உடன் சிகிச்சை செய்வது மட்டுமே நல்லது..
பல இடங்களில் மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடக்கும் போது. நினைப்பதெல்லாம் நம்மால் இந்த மக்களை மாற்ற முடியாது .. நாம் செய்யும் சிகிச்சையை சட்டப்படி செய்து எங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான்…
நீட் தேர்வு எழுதப்போகும் குழந்தைச்செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் ..
நன்றி ....
மாலிக் திரைப்படம் - மலையாளம்
https://www.pdisk.net/share-video?videoid=nv2gsh002mzr
மணிரத்தினத்தின் வேலுநாயக்கரை (நாயகன்) மலையாள அலியக்காவாக மாற்றியுள்ளார் இயக்குனர் மகேஷ் நாராயணன்.
ஒரு கதாநாயகன் இன்ட்ரோ இல்லை.5 பாடல்கள் இல்லை.100 ரவுடிகளை பறந்து அடிக்கும் ஹீரோயிசம் இல்லை.கமர்சியல் படத்திற்காக சாயல் துளியும் இல்லை. சரி நாயகியாச்சும் பளபளனு வடக்கில் இருந்து வந்த ஆளானா அதுவும் இல்லை.இவ்வளவு இல்லை களையும் தாண்டி என்னா நடிப்புய்யா..
ஞாயிறு, 18 ஜூலை, 2021
திருக்கோயில்களில் 'பரிவட்டம்' கட்டுதல்
.தமிழர் பாரம்பரியம் ...
திருக்கோயில்களில் 'பரிவட்டம்' கட்டுதல் இன்றும் காணும் பெருவழக்கு. உயர்ந்த பட்டாடையைத் தலையைச் சூழத் தொங்கலுடன் கட்டுதல் பரிவட்டம் எனப்படும். கோயில் வரவேற்பு மங்கல நிகழ்வாகப் பெருய தக்கார்க்குச் செய்வதாய் அமைகின்றது. முந்தை மன்னர்கள் காலத்தில் அலுவல் அடையாளமாக அரசன் வழங்கிய சின்னமாகவும் பரிவட்டம் திகழ்ந்துள்ளது🥰🥰🥰📚📚📚✍️✍️✍️✍️
ஆற்றல் நிறைந்தவனாக
இருப்பதைக் காட்டிலும்
நேர்மையானவனாக இருப்பது
மேலானது..........!
துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும்.
எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள்.
உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.
அப்போது தான் வாழ்க்கை பயணம் சிறக்கும்!...!...!!.!!
கேள்வி : உண்மையான மகிழ்ச்சி என்று நீங்கள் எதை கூறுவீர்கள் சிவா சார் ?
என் பதில் :
நாம் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம்? என்பதில் மகிழ்ச்சி இல்லை, அந்தப் பணத்தை எப்படி செலவு செய்கிறோம்? என்பதில்தான் மகிழ்ச்சியின் சூட்சுமம் அடங்கியுள்ளது.
நீங்கள் ஒரு லட்ச ரூபாய் அதிகமாக சம்பாதிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அந்த ஒரு லட்ச ரூபாய் சம்பாதிப்பது மகிழ்ச்சியில்லை! ஒரு லட்ச ரூபாயை என்ன செய்ய போகிறீர்கள்?
ஒரு இரண்டாவது கார் வாங்கப் போகிறேன், என்றால் அது சொத்து என்றாலும் உங்களுக்கு மட்டும் தான் மகிழ்ச்சி.
தன் குடும்பத் கூட்டிக்கொண்டு அல்லது குடும்ப நண்பர்களுடன் , இந்தியாவில் உள்ள கோவில்கள் சுற்றுலாத்தலங்கள் செல்வேன். அவர்கள் விரும்பும் இடம் உணவு ஏற்பாடு செய்து எல்லாருக்கும் பல ஊர்களை சுற்றி காட்டுவேன். இதுதான் ஒரு லட்ச ரூபாய்க்கு என் செலவு, என்று நீங்கள் சொன்னால், அதுதான் உண்மையான மகிழ்ச்சி.
காரணம் உங்கள் பணத்தை, சொத்து வாங்க பயன்படுத்தாமல், ஒரு புதிய அனுபவம் கிடைக்க, அதுவும் பிறருக்காக நாம் செலவுகள் செய்யும் போது, அது கடைசியில் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. என்னை பொருத்தவரை மிகவும் முக்கியமான உளவியல் உண்மை.
நாம் எதை நம்ப விரும்புகிறோமோ அதைத்தான், நாம் நம்புவோம்.
ஆங்கிலத்தில் இதை Confirmation Bias என்று சொல்லுவார்கள். எளிதில் புரிந்து கொள்ளலாம்.....
நன்றி ...
